பக்கம்:The Gypsy Girl And Vaikunta Vaithiyar.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குற மகள் 国@巨 முதல் அங்கம் ఇదిశ முதற் காட்சி. இடம்-யானைமலைக்கருகில் கலெக்டர் கூடாரம். காலம்-இாவு, கலெக்டர் திருவேங்கடம் ஐ. சி. எஸ். மேஜையருகில் ஒரு சாய்வு நாற்காலியில் உட்கார்ந்திருக்கிருர். அவர் எதிரில் சுந்தரேச முதலியார் கின்றுகொண்டிருக்கிரு.ர். தி. வாஸ்தவமாகவா ? ஒரே விசையில் அவ்வளவு தொகையும் கட்டிவிட்டார்களா இக்குறவர்கள் ? 岳· ஆமாம், நான் சிபார்சு செய்ததின்பேரில் நீங்கள் தயவு செய்து தள்ளிக்கொடுத்த தொகை போக, மிகுதியைக் கட்டிவிட்டார்கள். தி. எப்படிக் கட்டினர்கள் இதற்குள்ளாக அவ்வளவு தொகை யும் இந்தக் குறவர் முதலிய ஜாதியார்களுக்கெல்லாம் நாம் எவ்வளவு பட்சம் பாராட்டினுலும் பிரயோஜனமில்லை; அவர்கள் ஜாதித் தொழிலே அவர்கள் விடவே மாட்டார்கள். நான் சொல்வது உமக்குச் சம்மதமில்லேபோலும்? 蔷。 இல்லை. என்று கூறுவதற்காக என்னே மன்னிக்க வேண்டும். நாம் அவ்வளவு தள்ளிக் கொடுத்தும் மிகுந்த தொகையைச் சேகரிப்பதற்கு அவர்கள் எங்கேயாவது களவாடியிருக்க வேண்டுமென்று நீங்கள் நம்புவதகுல், எல்லாத் தொகையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Gypsy_Girl_And_Vaikunta_Vaithiyar.pdf/7&oldid=731874" இலிருந்து மீள்விக்கப்பட்டது