பக்கம்:The Knavery Of Kalappa.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கம்-1) காளப்பன் கள்ளத்தனம் 7 செ. 35s. செ. ᏜᎡᎢ , வும் கோபம் பிறந்து, என்மனதை அம்மாது சிரோமணி கவர்ந்ததைப்பற்றி, அவனிடம் தெரிவிக்க எனக்கிஷ்டமில்லை. உங்கள் கதையை நீங்கள் சுருக்கிச் சொல்லாவிட்டால், நாளை வரையில் நாம் இங்கிருக்க வேண்டும். பத்துவார்த்தையில் முடித்து விடுகிருேன் இதை, அந்த கூடிணமுதல் இவர்காதல் அதிகரித்தது ; தன் காதலியின் அயரத்தை ஆற்றுவதற்காக அவளிடம் போகாமல் இவரால் உயிர் வாழ முடியவில்லை; அந்தப் பெண்ணின் தாயார் மடிந்துபோகவே, அப்பெண் லுக்கு சவரட்சணை கர்த்தாவாகிய அந்த வேலைக்காரி, இவர் அடிக்கடி அப்பெண்ணைக் காண்பதைத் தடுத்தாள் ; அதனல் எனது நண்பர் துக்கத்திலாழ்ந்தார், பார்க்கவேண்டுமென்று வற்புறுத்தினர், வேண்டி ஞர், கெஞ்சிஞர் ; ஒன்றும் பயன்பட வில்லை. அப்பெண்ணுக்கு பந்துக் களாவது ஐஸ்வர்யமாவது இல்லாவிட்டாலும், அவள் உயர் குலத்திலுதித்தவளென்றும், அவளை அவர் மணம்புரியாவிட்டால், அடிக்கடி பார்க்கமுடியா தென்றம்,அவருக்குத் தெரிவித்தனர்.இந்த இடையூறுகளால், அவருடைய காதலானது அதிகப்பட்டது. ஆலோசனே பண் னினுர், அப்படி இப்படி கலக்கப்பட்டார், துக்கித்தார், வாதித் தார், தீர்மானித்தார்; கல்யாணம் செய்து கொண்டார், மூன்று நாளைக்குமுன். உம், தெரிகிறது. போதாக்குறைக்கு, இன்னும் இரண்டு மாதம் வரையில் வரமாட் டார் என்றெண்ணி யிருந்த, இவருடைய தகப்பனர் திடீ. ரென்று வந்து சேர்ந்தார்; இவர் இரகசியமாக மணந்த விஷயம் இவருடைய சிற்றப்பாவுக்கு எட்டிவிட்டது ; தாரா நகரத்தில் கெளரிநாதர் இரண்டாம் கலியாணம் செய்து கொண்ட அந்த மனைவிக்குப் பிறந்த பெண்ணே இவருக்குக் கலியாணம் செய் யத் தீர்மானித்திருக்கிருர்களாம். - கஷ்டங்களுடன் கஷ்டமாக இந்த அழகிய பெண்மணி அநா தையாயிருக்கிருள் ; அவளைக் காப்பாற்ற எனக்குச் சக்தி இவ்வளவுதான ? இந்த அற்ப விஷயத்திற்காகவா நீங்கள் இரண்டு பெயரும் இவ்வளவு கஷ்டப்படுகிறதாகக் காண்கிறீர் கள் ? ஏண்டாப்பா, இந்த சொல்ப விஷயத்தினின்றும் தப்பி வைக்க வகையறியாது விழிக்கிருயே வெட்கமில்லையா ? தத்தி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Knavery_Of_Kalappa.pdf/13&oldid=732129" இலிருந்து மீள்விக்கப்பட்டது