பக்கம்:Vetri Dictionary-English-English-Tamil.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உங்கள் சொல்வளத்தை எவ்வாறு பெருகச் செய்வது?

சொல்வளம் என்ற சொல்லுக்கு எந்த ஒரு மொழியிலும் சொல்வரிசை என்பதே பொருள். ஒருவர் தம் ஆதிக்கத்தில் இருக்கும் சொற்களின் எண்ணிக்கையை மேலும் பெருக்கமடையச் செய்வதே எல்லாக் கல்வியின் குறிக்கோளும் ஆகும். சொற்களே கருத்துக்களை வெளியிட உதவும், சாதனமாகும். பிறருக்கு நம் கருத்துக்களைத் தொடர்ந்து அறிவிக்கையில், அதற்காக நாம் முடிந்த அளவு பலப்பல சொற்களைப் பற்றிய அறிவில் புலமை அடைந்திருக்க வேண்டும்.

ஆங்கிலத்தில்.எடுத்துக் கொண்டால், நாம் அதில் கற்கவேண்டிய சொற்களின் எண்ணிக்கைக்கு ஒரு வரம்பே கிடையாது. ஆங்கிலம் வளர்ந்து வரும் ஒரு மொழி மற்ற மொழிகளிலிருந்து புதுப்புதுச் சொற்கள் அதில் சேர்க்கப்படுகின்றன. அல்ல்து அந்த மொழி வாழும் மொழியாக விளங்க முதல்தரமான மொழியாக விளங்க - புதுப்புதுச் சொற்கள் உருவாக்கப்படுகின்றன. அதன் காரணமாக அம்மொழியின் வளம் மேலும் விரிவடைகிறது.

இன்றைய எஸ்.எஸ்.எல்.சி. பொதுக் கல்வித் தேர்வுக்கு அல்லது இப்பொழுதுள்ள வழக்குப்படி XIஆவது வகுப்புப் பொதுத் தேர்வுக்குச் செல்லும் மாணவர் ஒருவருக்கு அடிப்படையாக 2000 சொற்கள் தேவை என்று கருதப்படுகிறது. ஆனால், ஆர்வமிக்க மாணவர்கள் இந்தச் சொற்பட்டியலோடு நின்றுவிடாமல், அதைப் பெருக்க மேலும் கல்வி அறிவை வளர்க்க வேண்டும். சொல்வளம் பெருகப் பெருக பேசும், எழுதும் மொழியைக் கையாளுந்திறனும் கூடுதலாக விளங்கும்.

சொல்லாட்சித் திறனைக் கூடுதலாக்க, சென்ற தலைமுறையினர் ஈடுபட்டு வந்த சொற்கூட்டுப் பயிற்சி மீண்டும் புதுப்பிக்கப்பட வேண்டும். அந்தக் காலத்தில் இதற்கு நல்ல பலன் ஏற்பட்டது. அது பழமையானது என்ற அடிப்படையில், அதை அக்கொள்கையைத் துறந்து விடக்கூடாது.

எந்த ஒரு சொல்லை எடுத்துக் கொண்டாலும், அதற்கான துணைச் சொற்களில் முழுப் பயிற்சி பெற முனைய வேண்டும். பல வகை எடுத்துக்காட்டுக்கள் இவற்றை விளக்குவனவாகும்.

collect என்ற சொல்லை நாம் எடுத்துக் கொள்வோம். அது ஒரு வினைச் சொல். அதன் பெயர்ச்சொல் உருவமான collection அதன் Quuui a if\ Q\&m«wevm cvr collective, aJlencrufl& Gwneiwevmterf

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Vetri_Dictionary-English-English-Tamil.pdf/7&oldid=531074" இலிருந்து மீள்விக்கப்பட்டது