பக்கம் பேச்சு:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை-11.pdf/405

இந்த உலகிலே எதையும் இழக்கலாம் - மறக்கலாம். ஆனால் தாய்மொழியை இழக்க இயலாது; மறக்க முடியாது. தன் சொந்த மொழியை இழந்து மறந்து பிறமொழிப் பற்றுக் கொண்டு வாழ்தல் பொய்க்காலில் நடப்பதற்குச் சமமாகும். எந்த இனமும் தத்தம் மொழியைப் பேச - பேண முன்வருவது போலவே தமிழர்களாகிய நாமும் முன் வரவேண்டும். தமிழ் உணர்வுகொண்டு, தமிழ்ச்சிந்தனையால் தமிழ் நாகரிகம் காக்க வேண்டும். எல்லாத் துறைகளிலும், எல்லாக் கட்டத்திலும் தமிழ் வாழ்வு வாழ விருப்பங்கொள்ளவேண்டும். அப்பொழுதுதான் தமிழ்வழி நல்லோர்களாய், தண்டமிழ்ச் சிறார்களாய்ச் சிறக்கமுடியும்.

Return to "குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை-11.pdf/405" page.