பக்கம் பேச்சு:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை-12.pdf/346

ஆன்மிகச் சார்பில்லாத அறிவியல் நொண்டித் தனமானது. அறிவியற் சார்பில்லாத ஆன்மிகம் குருட்டுத்தனமானது. ஆன்மிகச் சார்பில்லாத அறிவியலால்தான் இன்று உலகத்தில் அணு ஆயுதப் போர்ப்பயம்! அருளியல் சார்பில்லாத அறிவியல், ஆக்கத்திற்குப் பதிலாக அழிவையே தரும். அறிவியல் சார்பில்லாத ஆன்மிகம், உலகியல் வாழ்வை வறட்சிக்கு ஆளாக்கி, நுகருமாறு நுகர்ந்து வாழ்வித்து வாழும் வாழ்வை இல்லாமல் பாழாக்கி விடும்.

Return to "குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை-12.pdf/346" page.