பக்கம் பேச்சு:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை-12.pdf/449

இயல்பில் மனிதர்களுக்கு அமைந்த-வாய்ந்த சமய அனுபவ உரிமைகளைப் பாதுகாக்க அப்பரடிகள் அரசையே எதிர்த்துப் போராடினார். சமயச் சண்டைகள் என்று கூறப்படுபவை சமயச் சண்டைகள் அல்ல. சமயத்தின் பெயரால் நடந்த ஆதிக்கச் சண்டைகளே! எந்தவொரு தத்துவமும் ஆதிக்கத்தை மையப்படுத்திய நிறுவனமாக மாறி விட்டால் இத்தகைய விபத்துக்கு ஆளாவதைத் தவிர வேறு வழியில்லை. ஆதலால்தான் சமயங்களில் மிகப் பிற்காலத்தில் தோன்றிய இசுலாமிய சமயம் மதத்தலைவர்களை, புரோகிதர்களை மேலதிகாரமுடையவர்களாக ஏற்றுக் கொள்ளாமல் இருக்கிறது என்பதை எண்ணிப் பார்க்க

Return to "குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை-12.pdf/449" page.