பக்கம் பேச்சு:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/175

திணைமொழி ஐம்பது : பாடல் 21 தொகு

தலைமகன் வரைவு மலிந்தது தோழி தலைமகட்குச் சொல்லியது

“அஞ்சனம் காயா மலர, குருகிலை
 ஒண் தொடி நல்லார் முறுவல் கவின் கொள,
 தண் கமழ் கோடல் துடுப்பு ஈன, காதலர்
 வந்தார்; திகழ்க, நின் தோள்!”

அருஞ்சொற்பொருள் : அஞ்சனம் - மை, கருமை; கோடல் - வெண் காந்தள் மலர்

உரை : “காயாச்செடிகள் மை போன்ற மலர்களைப் பூக்கவும், குருக்கத்திச் செடிகளின் இலைகள் பெண்களின் பற்கள் போன்று விளங்கவும், இவற்றைக் கடந்து பொருள் பெறச் சென்ற தலைவர் மணம் பேச வந்தார். பிரிந்த போது மெலிந்த உன் தோள்கள் முன் போல் வீங்கி விளங்குக” என்று தோழி தலைவியிடம் கூறல்.

காண்க : Mukil E Publishing And Solutions Private Limited,

- மு. தாஹா இப்ராஹிம் புஹாரி (பேச்சு). 12:20, 12 பிப்ரவரி 2023 (UTC)

திணைமொழி ஐம்பது : பாடல் 30 தொகு

தலைவி தன் ஆவலைத் தோழியிடம் வெளிப்படுத்துகிறாள்

“அருவி அதிரக் குருகிலை பூப்பத்
 தெரிஆ இனம்நிறை தீம்பால் பிலிற்ற
 வரிவளைத் தோளி! வருவார் நமர்கொல்
 பெரிய மலர்ந்த(து)இக் கார்.”

உரை : அருள் தந்து அதிரும்படிக் கார்காலம் பெரிதும் மலர்ந்திருக்கிறது. குருகிலை மலர்கள் மலர்ந்திருக்கின்றன. துள்ளி விளையாடும் பசு இனம் இனிய பாலைச் சொரிகின்றது. வரிந்து பிடித்துக் கொண்டிருக்கும் வளையல் அணிந்த தோளை உடையவளே! நம்முடையவர் வருவார் போலும்.

காண்க : தமிழ்த்துளி


உரை “வளையல்கள் பொருந்திய தோள்களை உடைய தலைவியே! இந்தக் கார் காலமானது அருவிகள் பெருகி ஒலிக்கவும், குருக்கத்தி இலைகள் பொலிவு பெற்று விளங்கவும், பசுக்கள் பாலைப் பொழியவும் செய்தன. நம் தலைவர் வருவார். வருந்தற்க” என்று தோழி கூறினாள்.

காண்க : திணைமொழி ஐம்பது 30

- மு. தாஹா இப்ராஹிம் புஹாரி (பேச்சு). 12:40, 12 பிப்ரவரி 2023 (UTC)

Return to "சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/175" page.