பக்கம் பேச்சு:திருவள்ளுவர் திருக்குறள் மணக்குடவருரை.pdf/116

உணவும் உடையும் தொகு

அக்காலத்தில் உணவும் உடையுமே மக்களின் முக்கியத் தேவைகளாக இருந்தன போலும். பிற்காலத்தில்தான் இத்தேவைகள் உணவு, உடை, உறையுள் [Roti, Kappada aur Makkan] என்று மாறின எனத் தோன்றுகிறது.

பொருண்மொழிக் காஞ்சியில் மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்:

தென்கடல் வளாகம் பொதுமை இன்றி
வெண்குடை நிழற்றிய ஒருமையோர்க்கும்
நடுநாள் யாமத்துப் பகலும் துஞ்சான்
கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்,
உண்பது நாழி, உடுப்பது இரண்டே
பிறவும் இல்லாம் ஓரொக்குமே,
செல்வத்துப் பயனே ஈதல்.

என்று கூறுவதும்

[இதன் பொருள் : உலகம் முழுவதையும் ஒரு குடையின் கீழ் ஆட்சி செய்யும் ஓர் அரசனுக்கும், இரவும் பகலும் கண்ணுறங்காமல் கொடிய விலங்குகளை வேட்டையாடி வாழும் கல்வியற்ற ஒரு வேடுவனுக்கும் உண்கிற உணவு ஒரு நாழிதான், மேலாடை, கீழாடை என்கிற இரண்டு ஆடைகள்தான். இது அனைவருக்குமே பொதுவானது. ஆகவே, ஒருவன் பெற்ற செல்வத்தின் பயன் என்பது பிறருக்குக் கொடுப்பதுதான். தான் மட்டும் அனுபவிக்க வேண்டும் என்று எண்ணினால் அவன் பல நன்மைகளை இழக்க நேரிடும்]

மேலும் ஒளவையாரும் தம் நல்வழி (28)யில்:

ண்பது நாழி உடுப்பது நான்கு முழம்
எண்பது கோடி நினைந்து எண்ணுவன-கண்புதைந்த
மாந்தர்குடி வாழ்க்கை மண்ணின் கலம்போலச்
சாந்துணையும் சஞ்சலமே தான்

[இதன் பொருள் : மனிதன் உண்பது ஒரு நாழி அளவு சோறு மட்டுமே. உடுப்பது நான்கு முழ அளவுள்ள துணி ஆனால் அவன் எண்ணம் மட்டும் எண்பது கோடியாக இருக்கிறது. அதனால் தன்னால் எதையும் தெளிவாக சிந்தித்துப் பார்க்கும் திறன் குறைந்து போகிறது. அப்படிப்பட்ட மாந்தர் வாழ்க்கை இனிமையாக இருப்பதில்லை. அவர்கள் வாழ்க்கை எளிதில் உடைந்து போகும் மண்கலம் போலச் சாகும்வரை துன்பம் நிறைந்ததாகவே இருக்கும்]

என்று கூறுவதும் ஈண்டு கவனிக்கற் பாலது.

இவை தவிர மேலும் பல பாக்கள் மூலம், அக்கால கட்டத்தில் உறையுள் முக்கியத் தேவையாக இருந்திராது என்றே தோன்றுகிறது.

நன்றி : விளக்கவுரை இணையத்தில் இருந்து

- மு. தாஹா இப்ராஹிம் புஹாரி (பேச்சு). 11:40, 18 செப்டம்பர் 2021 (UTC)

Return to "திருவள்ளுவர் திருக்குறள் மணக்குடவருரை.pdf/116" page.