பக்கம் பேச்சு:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/90

ரேழி தொகு

ரேழி : (பழங்கால வீடுகளில்) முன் பக்கத்து வாசலுக்கும் முதல் கட்டுக்கும் இடையில் நடைபாதை போல அமைந்திருக்கும் பகுதி; narrow passage between the entrance and the living room (of old houses)

(1) ரேழி, தாவாரம்-இவற்றின் பொருள் என்ன? வீட்டின் உட் பகுதிக்கும் வாயிலுக்கும் இடையிலே செல்லும் வழியாக இருப்பது இடைகழி; அதுவே ரேழி என்று வழக்கில் சிதைந்தது. வீட்டின் பக்கத்தில் தாழ்வாகச் சார்ப்புடன் கூடிய பகுதிக்குத் தாழ்வாரம் என்று பெயர். அதுவே தாவாரம் ஆயிற்று. - விடையவன் விடைகள்

(2) நெல்லை வட்டாரத்தில், வீட்டின் வாசலில் திண்ணை என்பது இருக்கும். அடுத்தது நடை, ரேழி என்று செல்லும். இந்த ரேழி என்பது எதன் திரிபுச் சொல் என்று பார்த்தால், அழகான தமிழ்ச் சொல்லான இடைகழியில் இருந்து அதன் வேர் தொடங்குகிறது.
வராண்டா என்று இன்று நாம் புழங்கும் சொல்லின் தமிழ்ச் சொல் இடைகழி. இதனை முன்னறை, முற்றம், ரேழி என்று வித விதமாய்ச் சொல்லலாம். இடைகழியே ரேழியாகியிருக்கும். வெளி வாயிலை அடுத்த உள்ளிடப் பாதை, அல்லது உள்ளே புகும் பாதை இடைகழி. இதன் இன்னொரு திரிபு, தேகழி அல்லது தேகளி. - டெல்லியா? தில்லியா?

(3) இரண்டு மலைகளுக்கு இடைவெளி உண்டானால் கடக்கிறோமே, அதற்குப் பெயர் "இடை கழி'; இடை கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் சங்கச் சான்றோருள் ஒருவர் பெயர். நெடிய வீட்டின் முன்னும் பின்னும் போய் வர இடையே நடைவழி இருந்தால் இடைகழி! டேழி, ரேழி - கொச்சை வழக்கு.

- தமிழ்ச் செல்வங்கள்: உலகம் - 2

(4) “தப்பா.??.மனசுக்கு சின்ன வயசு -.உடம்பு அந்தக் கிழத்துக்கு.!!!.பிராணசங்கடம். சாமா நான் என்ன ரெட்டை ரேழி வீடா?”
“நீ ரெட்டை ரேழி வீடுதானே..கனகா .இல்லையா பின்னே..?” - காயும் ஈரம்...3 (21-ஆம் நூற்றாண்டின் புதுச்சேரியின் சிறந்த சிறுகதை


- மு. தாஹா இப்ராஹிம் புஹாரி (பேச்சு). 06:14, 20 ஆகத்து 2021 (UTC)Reply

Return to "நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/90" page.