பக்கம் பேச்சு:Humorous Essays.pdf/26

இஸ்லாமியர்களும் கர்நாடக இசையும் தொகு

அதில் அல்லி அர்ஜூனா நாடகத்தை நடக்கப் போகிற விஷயம் கண்டிருந்தது. அதில் அப்துல் காகர் சாயபு அர்ஜுனனாக நடிப்பார் என்று பிரசுரித்திருந்தது. எவ்வளவு பிற்போக்கான எண்ணம்!?

இஸ்லாமியர்களுக்கும் கர்நாடக இசைக்கும் யாதொரு சம்பந்தமுமில்லை என்ற பொதுவான அபிப்பிராயம் நிலவுகிறது.

காண்க: நாகூர் தர்கா வித்வான் எஸ்.எம்.ஏ.காதர்

- மு. தாஹா இப்ராஹிம் புஹாரி

உறையூர் T. M. காதர் பாட்சா தொகு

அந்நாளில் மத வேறுபாடுகள் அவ்வளவாக தமிழக மக்களைப் பிரிக்கவில்லை. ஏன் சமீப காலம் வரை என்று கூடச் சொல்லலாம். உதாரணமாக, கம்பனது இலக்கிய ஆளுமையை தமிழர்களிடையே பரப்புவதற்காக உருவான சென்னை கம்பன் கழகத்தின் நிறுவுகைத் தலைவர்; முன்னாள் நீதிபதி மு மு இஸ்மாயில் ஆவார் இவா கம்ப இராமாயண ஆய்வாளரும் கூட. முன்னாள் குடியரசுத் தலைவர் APJ அப்துல் கலாம் மத வேறுபாடுகளைக் கடந்து மாணவர் மத்தியில் பிரபலமாக விளங்கினார்.

அந்நாளைய சிறந்த ஹார்மோனிய வித்வானும் பாடகருமான உறையூர் T. M. காதர் பாட்சா முருகனைப் பற்றிய பல பக்திப் பாடல்களைப் பாடியிருக்கிறார். அவற்றில் சில:

1: முருகா என உரைத்து நானும் முறையோடு சந்நிதி சேவை உணர்ந்தே வந்தேன்
2: பக்தர் பஜனை பாடுறார் பழனிமலையில்
3: நடராஜ சத்குரு நாதா சிவ நளின பூம்பாதா
4: திருநாராயணன் மகிமை அறிந்து கொள்ளத் திறமா
5: மதுராபுரி மிகப் பெரியதாம்
6: சுருளிமலை மீது மேவும் சீலா உன்னை தோத்தரிப்பேன்
7: அய்யா பழனிமலை வேலா.. எனக்கு யார் துணை சொல்
8: சரவணா குக பவனே வா
9: ஷண்முகா ஏழை என் மீது தயவில்லையா

- மு. தாஹா இப்ராஹிம் புஹாரி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்_பேச்சு:Humorous_Essays.pdf/26&oldid=1352005" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "Humorous Essays.pdf/26" page.