பக்கம் பேச்சு:Humorous Essays.pdf/32

உத்தரணி தொகு

உத்தரணி = தீர்த்தம் எடுத்தற்குரிய சிறு கரண்டி; பஞ்சபாத்திரக் கரண்டி

எடுத்துக்காட்டு:

உத்தரணி அல்ல, அதனை ருத்ரணி என்று சொல்லவேண்டும். பஞ்ச என்றால் ஐந்து என்று மட்டுமல்ல, அகலமான என்ற பொருளும் உண்டு. பஞ்ச பாத்திரம் என்றால் ‘வாய் அகன்ற பாத்திரம்’ என்று பொருள். நீங்கள் நினைப்பது போல் ஐந்து பாத்திரங்களோ அல்லது ஐந்து விதமான உலோகங்களின் கலவையோ அல்ல. அதேபோல அதனுடன் இணையாக இருக்கும் சின்னஞ்சிறு கரண்டிக்கு ருத்ரணி என்று பெயர். ருத்ரனின் அணிகலனான பாம்பின் உருவினைக் கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கும். பாற்கடலை பாம்பைக் கயிறாகக் கொண்டு கடைந்துதானே அமிர்தத்தை எடுத்தார்கள்!

அதுபோல பஞ்சபாத்திரத்தில் உள்ள தீர்த்தத்தை எடுக்கும்போது அது அமிர்தமாக வேண்டும் என்பதால் பாம்பின் உருவில் அதனை வடிவமைத்தார்கள். பஞ்சபாத்திரம்-ருத்ரணி என்பதே சரி. - பஞ்சபாத்திரம் - உத்தரணி என்ற பெயர் எப்படி வந்தது?

உத்தரணி: பூசையின் போது) நீர் எடுக்கப் பயன் படும் சிறு உலோகக் கரண்டி. small metal spoon (used in pooja and rituals. - உத்தரணி

மடத்தைச் சேர்ந்த ஒருவர், வேற ஒண்ணுமில்லே பெரியவா சந்திரமௌலீஸ்வர பூஜை பண்றச்சே அர்க்ய பாத்யம் விடறத்துக்காக கும்மோணத்தைச் சேர்ந்த பெரிய மனுஷர் ஒருத்தர் தங்கத்துல உத்தரணி ஒண்ணு பண்ணிக் குடுத்துருந்தார் - "தொலைந்துபோன தங்க உத்தரணி!"

- மு. தாஹா இப்ராஹிம் புஹாரி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்_பேச்சு:Humorous_Essays.pdf/32&oldid=1352446" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "Humorous Essays.pdf/32" page.