பக்கம் பேச்சு:Humorous Essays.pdf/38

சாரதா சட்டம் தொகு

சாரதா சட்டம் = பெண்களைச் சிறிய (8 அல்லது 9) வயதிலேயே திருமணம் [பால்ய விவாஹம்] முடிப்பதைத் தடை செய்யும் சட்டமே ஆகும்.

குழந்தைத் திருமணத் தடைச் சட்டம் தான் சாரதா சட்டம் என்பது பரவலாக அறியப்பட்டுள்ள செய்தியாகும். எனினும் அதற்குச் சாரதா சட்டம் என்னும் பெயர் எப்படி வந்தது என்பது ஒருபுறமிருக்க, அதனை நிறைவேற்றுவதற்கு வெள்ளையர் அரசு எடுத்த முயற்சிகள் மற்றும் அதற்குத் துணையாக நின்ற திராவிட இயக்கத்தின் செயல்பாடுகள், அதனைத் தடுத்து நிறுத்தப் பார்ப்பனர்கள் செய்த பல்வேறு முயற்சிகள் ஆகியன குறித்து, இன்றைய தலைமுறை, குறிப்பாகப் பெண்கள் அறிந்திடல் வேண்டும்.

- அது என்ன சாரதா சட்டம்?

- மு. தாஹா இப்ராஹிம் புஹாரி

சாஸ்திர யுக்தமாக தொகு

சாஸ்திர யுக்தமாக = சாஸ்திர முறைப்படி; சம்பிரதாயப்படி

சாஸ்திர யுக்தமாக நிறைவேற்றி வழிபாடு செய்து இன்ப. வலமாக வாழ்ந்து வந்தார்கள். -ஆலய விக்கிரக நிர்மாண ஆயாதி சிற்ப இரகசியம்

- மு. தாஹா இப்ராஹிம் புஹாரி

வியாஜ்யம் தொகு

வியாஜ்யம் = (நீதிமன்றத்தில் தொடுக்கப்படும்) வழக்கு.

வியாஜ்யம் நடத்த பீசு, வக்கீல் குமாஸ்தாவுக்கு செலவு, வக்கீல் ஆபீசு பையனுக்கு பத்யம்.இந்த செலவெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும் ;

- The Knavery Of Kalappa

- மு. தாஹா இப்ராஹிம் புஹாரி

ருதுவடைதல் தொகு

ருதுவடைதல் = பெண்கள் பருவம் எய்துதல்; பூப்பெய்துதல்; பெண்கள் வயதுக்கு வருதல்;

ருது என்பதற்குப் பூப்படைந்த பெண்ணைப் புனிதமாக்கும் நீராட்டு விழா எனப் பொருள்படும். அதாவது பருவ வயதை அடைந்த இது 12 வயது முதல் 15 வயது வரை அவரவர் உடல் வாகுபடிபால் முதிர்ச்சி அடைந்து, பருவமாற்ற பொழுது நடைபெறும் சமயச்சடங்கு ஆகும்,

-ஸமஸ்காரம் ருது

- மு. தாஹா இப்ராஹிம் புஹாரி

அரைக்கால் தொகு

அரைக்கால் = ½ x ¼ = எட்டில் ஒரு பகுதி
அரைக்கால் ரூபாய் = 12½ பைசா

- மு. தாஹா இப்ராஹிம் புஹாரி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்_பேச்சு:Humorous_Essays.pdf/38&oldid=1352495" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "Humorous Essays.pdf/38" page.