பக்கம் பேச்சு:Humorous Essays.pdf/39

அபேட்சிப்பவர்களெல்லாம் தொகு

அபேட்சிப்பவர்களெல்லாம் = விண்ணப்பிப்பவர்களெல்லாம் அபேட்சகர் = வேட்பாளர்; தேர்தலில் போட்டியிடுபவர்

காங்கிரஸ் அபேட்சகரோ உள்ளான் குருவிகளைப் பிடிப்பது போல் ஓட்டுகளைப் பிடித்துக் கொண்டிருந்தார். - வனவாசம்

ஆரம்பத்தில் இப்படித் தேர்தலில் நிற்கிறவர்களை ‘அபேட்சகர்’ என்று வடமொழியில்தான் குறிப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். திராவிட இயக்கம் தேர்தலில் ஈடுபடத் தொடங்கிய நேரத்தில்தான் ‘வேட்பாளர்’ என்ற அழகிய தமிழ்ச் சொல் புழக்கத்துக்கு வந்தது. - தேர்தல் தமிழ்: வேட்பாளர்

- மு. தாஹா இப்ராஹிம் புஹாரி

அத்யந்த நண்பர் தொகு

அத்யந்த நண்பர் = நெருங்கிய நட்பாளர்; உயிர்த் தோழர்; உற்ற துணைவர்; dearest friends; close associates;

கோவையில் இருக்கிற என் அண்ணாவின் அத்யந்த நண்பன், இந்தக் கோலத்தில் என்னைக் கண்டு அவர் மிரட்சி அடைந்து விட, எனக்குத் தடுமாற்றமாக இருந்தது. - Avan, Aval, Avargal

எப்பேர்ப்பட்ட தியாகம். தனக்காக தன் உடலையே வைத்து அடைத்த அந்த நண்பன் சுதாமா, கிருஷ்ணரின் அத்யந்த நண்பனாக ஆகிப் போனான். - நண்பனால் நலம் பெற்ற சுதாமா

- மு. தாஹா இப்ராஹிம் புஹாரி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்_பேச்சு:Humorous_Essays.pdf/39&oldid=1352507" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "Humorous Essays.pdf/39" page.