பக்கம் பேச்சு:Humorous Essays.pdf/40

கெடுதி தொகு

கெடுதி = இடுக்கண்; துன்பம்; ஊறு; கேடு; தீமை; தீங்கு.

உடல் ஊதலோ மிக மிகக் கெடுதி உலக வாழ்விற்கு அளவோடு கூடிய பொருட்:ெ தேவை; அதுவே ஊதிவிடும்போது, குவிந்துவிடும்' கெடுதி. உடையவனுக்கும் கெடுதி.
- வாழ்விக்க வந்த பாரதி

ஒரு பாட்டில் கூல்டிரிங்ஸைக் கொட்டி விட்டு ஐந்து நிமிடம் கழித்துச் சுத்தம் செய்தால் ஆசிட் ஊற்றிக் கழுவியது போல நன்றாகச் சுத்தமாகி விடும். இது மிகைப்படுத்திக் கூறப்படுவது அல்ல. எனவே பலரும் குடிப்பது போல வெயில் நேரத்தில் கூல்டிரிங்ஸ் குடிப்பதால் தாகம் தணியாது. மேலும் உடலுக்கும் கெடுதி.
-கூல்டிரிங்ஸ் குடித்தால் உடம்புக்குக் கெடுதி!

மெல்லிய இனிய மேவரக் கிளந்து, எம்
ஐம்பால் ஆய் கவின் ஏத்தி, "ஒண் தொடி,
அசை மென் சாயல், அவ் வாங்கு உந்தி
மட மதர் மழைக் கண், இளையீர்! இறந்த
கெடுதியும் உடையேன்' என்றனன் அதனெதிர்
சொல்லேம் ஆதலின், அல்லாந்து கலங்கிக்
கெடுதியும் விடீஇர் ஆயின், எம்மொடு
சொல்லலும் பழியோ, மெல் இயலீர்?

- கபிலரின் காதலும் கடமையும்

- மு. தாஹா இப்ராஹிம் புஹாரி

பிரயத்னம் தொகு

பிரயத்னம் = பிரயத்தனம்; முயற்சி

பல  முயற்சிகளுக்கு பிறகு வெற்றி பெறுவது, பல தோல்விகளுக்கு பிறகு வெற்றி பெறுவது, ஒரு இலக்கை குறி வைத்து பல போராட்டங்களை நிகழ்த்துவது ஆகியவை பற்றி குறிப்பிடும் போது பகீரத பிரயத்னம் என்று சொல்வார்கள்.
- பகீரத பிரயத்னம்

சித்தார்த்தரே, அப்படிப் பிரயத்னம் செய்வதை நான் தடுப்பது நியாயமன்று.
- Lord Buddha

ஊட்டியில், சுகாதாரத்தை பேணி காக்க, நகராட்சி நிர்வாகம் “பகீரத பிரயத்னம்” செய்து வருகிறது.
-கூவலில் மட்டும் தொடரும் விழிப்புணர்வு

- மு. தாஹா இப்ராஹிம் புஹாரி

கேஸ்ரஞ்சன் தைலங்கள் தொகு

கேஸ்ரஞ்சன் தைலங்கள் = கூந்தல் வளர்ச்சித் தைலங்கள்; முடி வளர உதவும் தைலங்கள்;
கேஸம் = கூந்தல்; முடி;

- மு. தாஹா இப்ராஹிம் புஹாரி

ஸ்திரீகள் தொகு

ஸ்திரீகள் = பெண்கள்; மாதர்; மடந்தையர்;

ஸ்திரீகள் எவ்வளவு படித்தாலும் புருஷர்களை வெல்ல மாட்டார்கள்; ஸ்திரீகள் சொற்ப காலத்தில் வளர்ந்து புஷ்பித்து சீக்கிரத்தில் கெட்டுப் போகிற சிறு செடிகளுக்குச் சமானமாய் இருக்கிறார்கள். புருஷர்களோ என்றால், வெகு நாள் தாமதப்பட்டு வளர்ந்து நெடுநாள் வரைக்கும் பலன் கொடுக்கிற விருக்‌ஷங்களுக்குச் சமானமாய் இருக்கிறார்கள். - ஞானாம்பாள், பிரதாப முதலியார் சரித்திரம்.
- பேதமை பெண்ணுக்கு அணிகலனா?

இச் சந்தர்ப்பத்தில் நமது தென் இந்திய நாடக மேடை மீது ஸ்திரீகள் நடிப்பதைப் பற்றி என் அபிப்பிராயத்தை எனது நண்பர்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன்.
- நாடக மேடை நினைவுகள்

உண்மையிலேயே ஆரியருள்ளும், திராவிடருள்ளும் முன் காலத்தில் ஸ்திரீகளுக்குச் சர்வ சுதந்தரங்களுமிருந்தன. ஸ்திரீகள் கல்வி கற்றார்கள். அவைக்களங்களில் வந்து பண்டிதர்களோடு தருக்கித்திருக்கிறார்கள். சாரத்தியம் செய்திருக்கிறார்கள்.
- பரத கண்டத்தில் ஸ்திரீகளின் ஸ்தானம்

- மு. தாஹா இப்ராஹிம் புஹாரி

பிரமாணத்தின் மீது சாட்சி தொகு

பிரமாணத்தின் மீது சாட்சி = வழக்காடு மன்றத்தில் சத்தியம் செய்து சாட்சியம் சொல்லுதல்; நீதிமன்றத்தில் உறுதியெடுத்து வாக்குமூலம் அளித்தல்;

நீதிமன்றத்தில் சத்தியப் பிரமாணத்தின் கீழ் அளிக்கும் வாக்குமூலங்கள் சாட்சியாகப் பதிவு செய்யப்படும், மற்றபடி அவர்கள் நீதிமன்ற அறைக்கு வெளியே என்ன சொன்னாலும் அவர்களை ஒரு சாட்சியாகக் கருதி அவர்களின் நம்பகத்தன்மையில் ஒரு கேள்வியை எழுப்ப முடியாது.
- நிர்பயாவின் நண்பர் வாக்குமூலத்தில் சந்தேகம்:

இவர்கள், முதலில் ஒன்றைச் சொல்லிவிட்டு, பிறகு பின்வாங்கவோ, மழுப்பவோ அவசியம் இல்லை. கோர்ட்டில், குற்றவாளிகள் சாட்சி சொல்லும்போது, சத்தியப் பிரமாணம் செய்துவிட்டு தானே சொல்கின்றனர்!
- இது உங்கள் இடம்

அந்தப் பிரிவு, 'நீதிமன்றத்தில் கடவுள் மீது பிரமாணம் செய்து சாட்சியம் சொல்ல வந்தவன் பொய் சொன்னால், அது தண்டிக்கப்பட வேண்டிய குற்றம்' என்கிறது.
- ராண்டர் கை கேஸ் புக்

- மு. தாஹா இப்ராஹிம் புஹாரி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்_பேச்சு:Humorous_Essays.pdf/40&oldid=1352527" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "Humorous Essays.pdf/40" page.