பக்கம் பேச்சு:Humorous Essays.pdf/53

காடாத்து தொகு

காடாத்து = காடாற்று (காடு - ஆற்று) காடாற்று என்பது பூதவுடல் எரித்ததினால் சுடு சாம்பலை ஆற்றுதல் எனப் பொருள் படும்.

எடுத்துக்காட்டு:

(1) இந்துக்களின் வழக்கப்படி இறந்தவரின் பூதவுடல் தகனம் செய்த மறுநாள் அல்லது மூன்றாம் நாள் 'காடாத்து' (காடு - ஆற்று) என்னும் கிரியை நடக்கிறது. காடாற்று என்பது பூதவுடல் எரித்ததினால் சுடு சாம்பலை ஆற்றுதல் எனப் பொருள் படும். அனேகமாக சுடுகாடு, கடல், ஆறு, குளம் போன்றவற்றை அன்மித்தே இருக்கும். எரித்த இடத்தில் உள்ள எலும்புகள் சாம்பல்கள் என்பவற்றை நிர் நிலைகளில் சங்கமிக்கச் செய்வதற்கு எரித்த இடம் ஆற்றுப் பெறுதல் அவசியம். - 'மரணித்தவர்களை தகனம் செய்தல்' - பிரபல மதங்களின் நிலைப்பாடு என்ன.. ~ Jaffna Muslim

(2) காடாத்து என்பது சுடுகாட்டில் எலும்புக்கு செய்யும் சடங்கு முறை ஆகும் .காடு ஆத்து = சுடுகாட்டை ஆறவைத்தல் என்ற பொருளில் காடாத்து என்கிறோம். - காடாத்து - 5

(3) காடாற்றுதல் (காடாத்து)

ஊரில் இறந்தவரின் பூதவுடல் தகனம் செய்த மறுநாள் அல்லது மூன்றாம் நாள் “காடாத்து” (காடு ஆற்று) என்னும் கிரியை நடைபெறுகின்றது, இதற்கு குருமார் அழைக்கப்படுவதில்லை. ஊரில் உள்ள பெரியவரே தலைமை தாங்கி செய்விப்பார்.

காடாற்று என்பது பூதவுடல் எரித்ததினால் சூடாக இருக்கும் ”சுடுகாட்டை” ஆறச்செய்தல் என பொருள் பெறும். அனேகமாக சுடுகாடு கடல், ஆறு, குளம் , கேணி போன்றவற்றை அண்மித்தே இருக்கும். எரித்த இடத்தில் உள்ள எலும்புகள், சாம்பல்கள் என்பவற்றை நீர் நிலைகளில் சங்கமிக்கச் செய்வதற்கு, எரித்த இடம் நீர் உற்றி ஆற்றப் பெறுதல் அவசியம். (சுடுகாடு என்பது பூதவுடலை எரிக்கும் இடமெனவும், இடுகாடு என்பது பூதவுடலை அடக்கம் செய்யும் இடம் எனவும் பொருள் பெறும்) - ஈமச் சடங்கும் சமய அனுட்டானங்களும்

- மு. தாஹா இப்ராஹிம் புஹாரி (பேச்சு). 06:30, 17 ஆகத்து 2021 (UTC)Reply

பிரேரேபித்தல் தொகு

பிரேரேபித்தல் = முன் மொழிதல்

எடுத்துக் காட்டு:

(1) இந்து சமூகத்தில் பிராமணர், பிராமணல்லாதார், தீண்டாதார் ஆகிய இந்த மூன்று சமூகத்தாருக்கும் அவரவர் ஜனத் தொகையை அனுசரித்து பிரதிநிதிஸ்தானம் கிடைக்கும்படி ஏற்பாடு செய்ய வேண்டுமாய் மாகாண மாநாட்டைக் கேட்டுக் கொள்வதோடு, இத்தீர்மானத்தை மாகாண மாநாடு மூலமாய் காங்கிரசையும் வலியுறுத்தும்படி தீர்மானிக்கிறது என்னும் தீர்மானத்தைப் பிரேரேபித்துப் பேசியதாவது:- - குடி அரசு 06-12-1925

(2) கவர்ன்மெண்டார்‌ பிரேரேபித்த மசோதாவில்‌, இந்திய ௪ட்டசபைகளின்‌ மெம்பர்கள்‌ ரிசர்வ்‌ பாங்கின்‌ நிர்‌வாக சபையின்‌ ௮ங்கத்தினர்களாயிருக்கக் கூடாதெனக்‌ கண்டிருந்தது. - பொருளாதார நூல்‌


- மு. தாஹா இப்ராஹிம் புஹாரி (பேச்சு). 07:10, 17 ஆகத்து 2021 (UTC)Reply

அக்கிராசனதிபதி தொகு

அக்கிராசனதிபதி, அக்கிராசனதிபர், அக்ராசனர் = தலைவர், கூட்டத்தைத் தலைமை தாங்கி நடத்துபவர்

எடுத்துக் காட்டு  :

(1) மறுபடியும் அது மேடையின் மீது வரும் பொழுது 25 நபர்கள் கையொப்பமிட்டால் அங்கீகரிப்பதாக அக்ராசனர் தெரிவித்தது உண்மையானால், அம்மாதிரி சொல்வதற்கு அக்ராசனருக்கு விதிகளில் அதிகாரம் கிடையாது. - குடி அரசு 06-12-1925

(2) இலங்கையின் ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் கன்னி அமர்வில், அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தை வெளியிட்டு ஆற்றிய அக்கிராசன உரையில் ஜனாதிபதி இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். - “ஜனாதிபதியின் அக்கிராசன உரை“ முக்கிய அம்சங்கள் எவை?

(3) கனம் பொருந்திய ஸர் முகம்மத் உஸ்மான் அக்கிராசன பீடத்தை அலங்கரித்தார். திருவாளர் சிவராம சேதுப்பிள்ளை, ஒலைச்சுவடியில் எழுதிய உபசாரப் பத்திரத்தைப் படித்துக் கொடுத்தார் - நாம் அறிந்த கி-வா-ஜ

(4) அதன்பின் மதுரை மாணவர் செந்தமிழ்ச்சங்கத்தின் அக்கிராசனரும், திருச்சி நேஷனல் காலேஜ், தலைமைப் பண்டிதருமாகிய ஸ்ரீமத் M. கோபாலகிருஷ்ணைய்யரவர்கள் ஒரு வாழ்த்துச் செய்யுளைச் சொல்லிப் பொருளுரைத்தார்கள் - செந்தமிழ் 18 அக்டோபர், 1920

- மு. தாஹா இப்ராஹிம் புஹாரி (பேச்சு). 07:48, 17 ஆகத்து 2021 (UTC)Reply

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்_பேச்சு:Humorous_Essays.pdf/53&oldid=1360806" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "Humorous Essays.pdf/53" page.