இணையத்தில் கட்டற்ற உரிமத்தில் உள்ள தமிழ் நூல்களை ஆய்ந்து, எதிர்காலத்தில் பிறருக்கும் கிடைக்கும்படி செய்யும் பணியில், கனடா நற்கீரனுடனும், கணியம் அறக்கட்டளை சீனிவாசன் அணியினருடனும் இணைந்து செயற்பட தொடங்கியுள்ளேன்.
இதுவரை முடிந்த நூல்களை அணியப்படுத்தி epub போன்ற வடிவங்களுக்காக, 2000 பக்கங்களை ஒருங்கிணைப்பு செய்ய தொடங்கியுள்ளேன்,
கலைக்களஞ்சியங்கள் 40 க்கும் மேற்பட்டு ஏறத்தாழ 40, 000 ஆயிரம் பக்கங்கள் உள்ளன. அவற்றில் 800 பக்கங்கள் கொண்ட நூலான அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf பணியை, விக்கியருடன் இணைந்து ஒருங்கிணைக்கிறேன். அவற்றினை குறித்த முழு விவரங்கள் இப்பக்கத்தில் அறியலாம். இதனால் அடுத்து வரும் கலைக்களஞ்சிய பணிகள் விரைவாக நடக்கும்.
ஏற்காடு இளங்கோவுடன் இணைந்து அவருக்கானவற்றையும், அவரின் ஆற்றல் கொண்டு விக்கிமீடிய வளங்களை அதிக படுத்துதல் குறித்து மீண்டும் செயற்பட தொங்குகிறேன்.
தமிழ் விக்கிமீடியத்திட்டங்களில் பைத்தான்3 நிரலாக்க பயன்பாடுகள் குறித்து விக்கிநூல்கள் திட்டத்தில் மீண்டும் எழுதத் தொடங்க உள்ளேன்.