பரிபாடல் செய்திகள்

பரிபாடல் செய்திகள்

தொகு
எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று; இது, ஐந்தாவதாக வைத்து எண்ணப்படும் சங்கத்தொகை நூல்.
ஓங்கு பரிபாடல் எனச் சிறப்பித்துக் கூறப்படும் பெருமையுடையது
மதுரை, வையை யாறு, திருமருதந்துறை, திருப்பரங்குன்றம், திருமாலிருஞ்சோலை என்பவற்றின் பழங்காலச்செய்திகளைக் கூறுவது.
பரிபாடல் என்னும் பாவகையால் அமைந்த பாடல் தொகுப்பு.(குறள்பாவால் அமைந்த 'திருக்குறள்' போல)
பரிந்து வருவது, பரிபாடல் 'பரிந்து வருவது' என்பது, 'ஏற்றுவருவது' என்று பொருள்படும். 'பல பா வடிவங்களை' ஏற்றுவருவது என்பதாம். இனித், தெய்வவாழ்த்து என்பதையும், காமப்பொருளையும் ஏற்று வருவது என்பதால் 'பரிபாட்டு' எனப்பட்டது எனவும் கூறலாம். அதாவது, தெய்வம், காமம் எனும் பொருள்களை ஏற்றுவரும் பாடல் என்று பொருள்.
இந்நூல் இசைப்பாட்டு, பழங்காலத்தில் பாடப்பெற்றது கலித்தொகை, பதிற்றுப்பத்து முதலிய தொகைநூல் பாடல்களைப்போல.
பண்கள் வகுக்கப்பெற்றது, தேவாரம் போல.
தமிழ்மக்கள் வணங்கிவந்த கடவுளரைப்பற்றிய பாடல்கள் கொண்ட சங்கநூல். எழுபது பாடல்களில், 40 பாடல்கள் 'கடவுள் வாழ்த்து' எனும் தலைப்பில் அமைந்த தெய்வ வாழ்த்துப் பாடல்களாகும்.
இந்நூல் எழுபது பரிபாடல்களால் ஆனது என்பது, இறையனார் களவியல் உரையால் அறியப்படுகின்றது.
இவற்றுள் திருமாலுக்கு உரியவை 08 பாடல்கள்
முருகனுக்கு (செவ்வேள்) உரியவை 31
காடுகிழாள் எனும் கொற்றவைக்கு 01
வையைக்கு 26
மதுரைக்கு 04
ஆகமொத்தம் 70 (08+31+01+26++04= 70) பாடல்கள்.
இந்நூலைத் தொகுத்தோர், தொகுப்பித்தோர் பற்றிய குறிப்புக்கள் கிடைக்கவில்லை.
இந்நூல் 1918 ஆம் ஆண்டு முதன்முறையாக உ.வே.சாமிநாதர் அவர்களால் பதிப்பிக்கப் பெற்றது. இரண்டாம் பதிப்பை அவரே 1935 இல் வெளியிட்டார். அற்புதமான பதிப்பு.
திருக்குறளுக்கு உரை எழுதிய பரிமேலழகர் இந்நூலுக்கும் உரை எழுதியுள்ளார்.
இந்நூலிலுள்ள பாடல்களைப் பாடியோர்கள்
(கிடைத்த 22 பாடல்கள்)
ஆசிரியன் நல்லந்துவனார்
இளம்பெருவழுதியார்
கடுவன் இளவெயினனார்
கரும்பிள்ளைப் பூதனார்
கீரந்தையார்
குன்றம் பூதனார்
கேசவனார்
நப்பண்ணனார்
நல்லச்சுதனார்
நல்லழிசியார்
நல்லெழுனியார்
நல்வழுதியார்
மையோடக்கோவனார்


இசைவகுத்தோர் (பண்வகுத்தோர்)

கண்ணகனார்

கண்ணனாகனார்

கேசவனார்

நந்நாகனார்

நல்லச்சுதனார்

நன்னாகனார்

நாகனார்

பித்தாமத்தர்

பெட்டனாகனார்

மருத்துவனல்லச்சுதனார்


இந்த நூலைப் பழைய உரையாசிரியர்கள் மேற்கோளாக எடுத்தாண்டுள்ளனர்
அவர்களுள் சிலர்
இளம்பூரணர்
சங்கரநமச்சிவாயர்
சேனாவரையர்
தக்கயாகப்பரணி உரையாசிரியர்
தெய்வச்சிலையார்
நச்சினார்க்கினியர்
நம்பியகப்பொருளுரையாசிரியர்
பரிமேலழகர்
பேராசிரியர்
மயிலைநாதர்
மாறனலங்கார உரையாசிரியர் முதலிய பலர்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பரிபாடல்_செய்திகள்&oldid=12039" இலிருந்து மீள்விக்கப்பட்டது