பாச்சோறு, குழந்தைப்பாடல்கள்/அன்னை

அன்னை

உன்னைக் கொண்டு வந்தே, இவ்
உலகில் விட்டது யார் சொல்?
அன்னை! அன்னை! அன்னை - என்
அன்னை! அன்னை! அன்னை!

கண்ணைப் போல உன்னையே
காத்து வருவது யார் சொல்?
அன்னை! அன்னை! அன்னை - என்
அன்னை! அன்னை! அன்னை!

எண்ணெய் இட்ட விளக்குப் போல்
இரவில் காத்தது யார் சொல்?
அன்னை! அன்னை! அன்னை - என்
அன்னை! அன்னை! அன்னை!

உண்ண உண்ணப் பாலையே
ஊட்டிக் கொடுத்தது யார் சொல்?
அன்னை! அன்னை! அன்னை - என்
அன்னை! அன்னை! அன்னை!


கண்ணே! மணியே! என்றுன்னைக்
கட்டிக் கொண்டது யார் சொல்?
அன்னை! அன்னை! அன்னை - என்
அன்னை! அன்னை! அன்னை!

பொன்னே! பூவே! என்றுன்னைப்
போற்றிப் புகழ்ந்தது யார் சொல்?
அன்னை! அன்னை! அன்னை - என்
அன்னை! அன்னை! அன்னை!

உன்னைக் காக்க மருந்துண்டே
உணவை வெறுத்தது யார் சொல்?
அன்னை! அன்னை! அன்னை - என்
அன்னை! அன்னை! அன்னை!

மண்ணில் இன்றும் என்றும் நீ
மறவா திருப்பது யார் சொல்?
அன்னை! அன்னை! அன்னை - என்
அன்னை! அன்னை! அன்னை!