'க, கா' என்றே காகம் கரையும்! 'கி, கீ' என்றே கிளிகள் சொல்லும்! 'கு, கூ' என்றே குயில்கள் கூவும்! 'கெ, கே' என்றே கோழிகள் கேவும்! 'கொ, கோ' என்றே சேவல் கூவும்! 'கை, கெளக்' என்னும் வானங் கோழி!