பாச்சோறு, குழந்தைப்பாடல்கள்/பாதையில் நடத்தல்
எப்பொழுதும் பாதையில்
இடது பக்கம் நடந்து போ!
தப்பில் லாமல் நடப்பதால்,
தடைகள் வாய்ப்ப தில்லையே!
நடந்து போகும் மேடையில்
நடந்து செல்லல் நல்லது!
கடந்து போக, இரு புறம்
கவனி; பின்பு விரைந்து போ!
படித்துக் கொண்டு நடப்பதும்,
பந்து தட்டிப் போவதும்,
இடித்துக் கொண்டு செல்வதும்,
என்றும் தீங்கு செய்யுமே!