பாச்சோறு, குழந்தைப்பாடல்கள்/விளையாட்டு
பந்தைத் தூக்கிப் போடு!
பசிக்கப் பசிக்க ஆடு!
மூச்சைப் பிடித்துப் பழகு!
முகத்தில் தோன்றும் அழகு!
நீளம் உயரம் தாண்டு!
நீ வளர்வாய் நீண்டு
நாளும் நீரில் நீந்து!
நல்ல மார்பை ஏந்து!
முன்னும் பின்னும் வளை!
முகத்தில் மிளிரும் களை!
மாலை வெய்யில் குளி!
மடிமை என்றும் ஒழி!