பாரதியாரின் தெய்வப்பாடல்கள்/8. இறைவா! இறைவா!

8.இறைவா!இறைவா!
ராகம்-தன்யாசி
பல்லவி

எத்தனை கோடி இன்பம் வைத்தாய்?-எங்கள்
இறைவா!இறைவா!இறைவா! (ஓ-எத்தனை)

சரணங்கள்

சித்தினை அசித்தடன் இணைத்தாய்-அங்கு
சேரும் ஐம் பூதத்து வியனுல கமைத்தாய்.
அத்தனை யுலகமும் வர்ணக் களஞ்சிய
மாகப் பலபலநல் லழகுகள் சமைத்தாய்.
(ஓ-எத்தனை)

முக்தியென் றொருநிலை சமைத்தாய்-அங்கு
முழுதினையு முணரும் உணர் வ்மைத்தாய்
பக்தியென் றொருநிலை வகுத்தாய்-எங்கள்
பரமா!பரமா!பரமா!
(ஓ-எத்தனை)