பாரதியாரின் தேசிய கீதங்கள்/2. ஜய வந்தே மாதரம்
2. ஜய வந்தே மாதரம்
- ராகம் - ஹிந்துஸ்தானி பியாக் தாளம் - ஆதி
பல்லவி
- வந்தே மாதரம் - ஜய
- வந்தே மாதரம்.
சரணங்கள்
- ஜயஜய பாரத ஜயஜய பாரத
- ஜயஜய பாரத ஜயஜய ஜயஜய (வந்தே)
- ஆரிய பூமியில் நாரிய ரும் நர
- சூரிய ரும்சொலும் வீரிய வாசகம் (வந்தே)
- நொந்தே போயினும் வெந்தே மாயினும்
- நந்தே சத்தர்உ வந்தே சொல்வது (வந்தே)
- ஒன்றாய் நின்றினி வென்றா யினுமுயிர்
- சென்றா யினும்வலி குன்றா தோதுவம். (வந்தே)