பாரதியாரின் தேசிய கீதங்கள்/25. வாழிய செந்தமிழ்
25. வாழிய செந்தமிழ்!
(ஆசிரியப் பா)
- வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
- வாழிய பாரத மணித்திரு நாடு!
- இன்றெமை வருத்தும் இன்னல்கள் மாய்க!
- நன்மைவந் தெய்துக! தீதெலாம் நலிக
- அறம்வளர்ந் திடுக! மறம்மடி வுறுக!
- ஆரிய நாட்டினர் ஆண்மையோ டியற்றும்
- சீரிய முயற்சிகள் சிறந்துமிக் கோங்குக!
- நந்தே யத்தினர் நாடொறும் உயர்க!
- வந்தே மாதரம்! வந்தே மாதரம்!