பாரதியாரின் தேசிய கீதங்கள்/31. சுதந்திரப் பள்ளு

31. சுதந்திரப் பள்ளு

(பள்ளர் களியாட்டம்)

ராகம் - வராளி தாளம் - ஆதி

பல்லவி

ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று ஆடுவோமே

1.பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே -வெள்ளைப்  பரங்கியத் துறையென்ற காலமும் போச்சே -பிச்சை  ஏற்பாரைப் பணிகின்ற காலமும் போச்சே - நம்மை  ஏய்ப்போருக்கு ஏவல் செய்யுங் காலமும்போச்சே.(ஆடுவோமே)  

எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு நாம் எல்லோரும் சமமென்பதுறுதியாச்சு எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு நாம் எல்லோரும் சமமென்பதுறுதியாச்சு சங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே சங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே

பூம்.. புபுபு பூம் புபுபு பூம் புபுபு பூம்

சங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே இதை தரணிக்கெல்லாமெடுத்து ஓதுவோமே சங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே இதை தரணிக்கெல்லாமெடுத்து ஓதுவோமே ஆடுவோமே

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் - வீணில் உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்வோம் உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் - வீணில் உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்வோம் விழலுக்கு நீர் பாய்ச்சி மாயமாட்டோம் வெறும் வீணருக்குழைத்துடலம் ஓயமாட்டோம் ஆடுவோமே

நாமிருக்கும் நாடு நமதென்பதறிந்தோம் நாமிருக்கும் நாடு நமதென்பதறிந்தோம் இது நமக்கே உரிமையாம் என்பதறிந்தோம் நாமிருக்கும் நாடு நமதென்பதறிந்தோம் இது நமக்கே உரிமையாம் என்பதறிந்தோம் பூமியில் எவர்க்கும் இனி அடிமை செய்யோம் பூமியில் எவர்க்கும் இனி அடிமை செய்யோம் பூமியில் எவர்க்கும் இனி அடிமை செய்யோம் பரி பூரணனுக்கே அடிமை செய்து வாழ்வோம் பரி பூரணனுக்கே அடிமை செய்து வாழ்வோம்

ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று ஆடுவோம் ஆடுவோம் ஆடுவோம் ஆடுவோம் ஆடுவோமே