பாரதியாரின் தேசிய கீதங்கள்/37. பாரத தேவியின் அடிமை
37. பாரத தேவியின் அடிமை
(நந்தன் சரித்திரத்திலுள்ள ஆண்டைக் கடிமைக்காரன் அல்லவே என்ற பாட்டின் வர்ணமெட்டையும் கருத்தையும் பின்பற்றி எழுதியது)
பல்லவி
- அன்னியர் தமக்கடிமை யல்லவே - நான்
- அன்னியர் தமக்கடிமை யல்லவே.
சரணங்கள்
- மன்னிய புகழ் பாரத தேவி
- தன்னிரு தாளிணைக் கடிமைக் காரன். (அன்னியர்)
- இலகு பெருங்குணம் யாவைக்கும் எல்லையாம்
- திலக முனிக் கொத்த அடிமைக்காரன். (அன்னியர்)
- வெய்ய சிறைக்குள்ளே புன்னகை யோடுபோம்
- ஐயன் பூபேந்தரனுக் கடிமைக் காரன். (அன்னியர்)
- காவலர் முன்னிற்பினும் மெய் தவறா எங்கள்
- பாலர் தமக்கொத்த அடிமைக் காரன். (அன்னியர்)
- காந்தன லிட்டாலும் தர்மம் விடாப்ரமம்
- பாந்தவன் தாளிணைக் கடிமைக் காரன். (அன்னியர்)