பாரதியாரின் தேசிய கீதங்கள்/44. பூபேந்திர விஜயம்
44. பூபேந்திர விஜயம்
- பாபேந்திரியஞ் செறுத்த எங்கள்
- விவேகானந்தப் பரமன் ஞானY
- ருபேந்திரன் தனக்குப் பின்வந்தோன்
- விண்ணவர்த முலகை யாள்ப்ர-
- தாபேந்திரன் கோப முறினுமதற்கு
- அஞ்சியறந் தவிர்க்கி லாதான்
- பூபேந்திரப் பெயரோன் பாரதநாட்
- டிற்கடிமை பூண்டு வாழ்வோன்
- வீழ்த்தல்பெறத் தருமமெலாம் மறமனைத்துங்
- கிளைத்துவர மேலோர் தம்மைத்
- தாழ்த்ததமர் முன்னோங்க நிலைபுரண்டு
- பாதகமே ததும்பி நிற்கும்
- பாழ்த்த கலியுகஞ்சென்று மற்றொருகம்
- அருகில்வரும் பான்மை தோன்றக்
- காழ்fத்தமன வீரமுடன் யுகாந்திரத்தின்
- நிலையினிது காட்டி நின்றான்
- மண்ணாளு மன்ன ரவன் றனைச் சிறைசெய்
- திட்டாலும் மாந்த ரெல்லாம்
- கண்ணாகக் கருதியவன் புகழோதி
- வாழ்த்திமனங் களிக்கின் றாரால்
- எண்ணாது நற்பொருளைத் தீதென்பார்
- சிலருலகில் இருப்ப ரன்றே?
- விண்ணாரும் பரிதியொளி வெறுத்தொருபுள்
- இருளினது விரும்பல் போன்றே!
- இன்னாத பிறர்க்கெண்ணான் பாரதநாட்
- டிற்கிரங்கி இதயம் நைவான்
- ஒன்னாரென் றெவருமிலான் உலகனைத்தும்
- ஓருயிரென் றுணர்ந்த ஞானி.
- அன்னானைச் சிறைப்படுத்தார் மேலோர்தம்
- பெருமையெதும் அறிகி லாதார்,
- முன்னாளில் துன்பின்றி இன்பம்வரா
- தெனப் பெரியோர் மொழிந்தா ரன்றே?