பாரதியாரின் தேசிய கீதங்கள்/46. திலகர் முனிவர் கோன்
46. திலகர் முனிவர் கோன்
- நாம கட்குப் பெருந்தொண் டியற்றிப்பல்
- நாட்டி னோர்தம் கலையிலும் அவ்வவர்
- தாம கத்து வியப்பப் பயின்றொரு
- சாத்தி ரக்கடலென விளங்குவோன்,
- மாம கட்குப் பிறப்பிட மாகமுன்
- வாழ்ந்திந் நாளில் வறண்டயர் பாரதப்
- பூம கட்கு மனந்துடித் தேயிவள்
- புன்மை போக்குவல் என்ற விரதமே.
- நெஞ்ச கத்தோர் கணத்திலும் நீங்கிலான்
- நீத மேயோர் உருவெனத் தோன்றினோன்,
- வஞ்ச கத்தைப் பகையெனக் கொண்டதை
- மாய்க்கு மாறு மனத்திற் கொதிக்கின்றோன்,
- துஞ்சு மட்டுமிப் பாரத நாட்டிற்கே
- தொண்டிழைக்கத் துணிந்தவர் யாவரும்
- அஞ்செ ழுத்தினைச் சைவர் மொழிதல்போல்
- அன்பொ டோ தும் பெயருடை யாவரின்.
- வீர மிக்க மராட்டியர் ஆதரம்
- மேவிப் பாரத தேவி திருநுதல்
- ஆர வைத்த திலகமெனத் திகழ்
- ஐயன் நல்லிசைப் பாலகங் காதரன்,
- சேர லர்க்கு நினைக்கவுந் தீயென
- நின்ற எங்கள் திலக முனிவர்கோன்
- சீர டிக்கம லத்தினை வாழ்த்துவேன்
- சிந்தை தூய்மை பெறுகெனச் சிந்தித்தே.