பாரதியாரின் தேசிய கீதங்கள்/47. லாஜபதி
47. லாஜபதி
- விண்ணகத்தே இரவிதனை வைத்தாலும்
- அதன்கதிர்கள் விரைந்து வந்து
- கண்ணகத்தே ஒளிதருதல் காண்கிலமோ?
- நினையவர் கனன்றிந் நாட்டு
- மண்ணகத்தே வாழாது புறஞ்செய்தும்
- யாங்களெலாம் மறக்கொ ணாதெம்
- எண்ணகத்தே, லாஜபதி! இடையின்றி
- நீவளர்தற் கென்செய் வாரே
- ஒருமனிதன் தனைப்பற்றிப் பலநாடு
- கடத்தியவர்க்கு ஊறு செய்தல்
- அருமையில்லை; எளிதினவர் புரிந்திட்டா
- ரென்றிடினும் அந்த மேலோன்
- பெருமையைநன் கறிந்தவனைத் தெய்வமென
- நெஞ்சினுளே பெட்பிற் பேணி
- வருமனிதர் எண்ணற்றார் இவரையெலாம்
- ஓட்டியெவர் வாழ்வ திங்கே?
- பேரன்பு செய்தாரில் யாவரே
- பெருந்துயரர்ம் பிழைத்து நின்றார்?
- ஆரன்பு நாரணன்பால் இரணியன்சேய்
- செய்ததனால் அவனுக் குற்ற
- கோரங்கள் சொலத் தகுமோ? பாரதநாட்
- டிற்பக்தி குலவி வாழும்
- வீரங்கொள் மனமுடையார் கொடுந்துயரம்
- பலவடைதல் வியத்தற் கொன்றோ?