பாரதி அறுபத்தாறு/அஸுரர்களின் பெயர்

அஸுரர்களின் பெயர்

அச்சத்தை வேட்கை தனை அழித்து விட்டால்
அப் போது சாவு மங்கே அழிந்து போகும்;
மிச்சத்தைப் பின்சொல்வேன், சினத்தை முன்னே
வென்றிடு வீர், மேதினியில் மரண மில்லை;
துச்ச மெனப் பிறர் பொருளைக் கருதலாலே,
சூழ்ந்த தெலாங் கடவுளெனச் சுருதி சொல்லும்
நிச்சய மா ஞானத்தை மறத்தலா லே,
நேர்வ தே மானுடர்க்குச் சினத் தீ நெஞ்சில். (7)