செந்தமிழுக்கொரு
சிங்கக் கவியென
வந்தான்! வந்தான்! - பாடல்
சந்தத் தமிழினில்
சிந்தை குளிரவே
தந்தான்! தந்தான்!
பாட்டுப்பெருங்கவி
பாரதி யின்புகழ்
கண்டோம்! கண்டோம்! - அவன்
பாத மலர்களை
நாம் தலைமீது
கொண்டோம்! கொண்டோம்!


மகாகவி பாரதியின் வரலாற்றை முதன்முதலில் அறிஞர் வ.ரா. எழுதினார். அதற்குப் பிறகு உரைநடையிலும் கவிதையிலும் பலரும் எழுதியுள்ளனர்.

குழந்தைகளுக்கு ஏற்ற விதத்தில், எளிய நடையில் , இனிய கவிதை நடையில் பாரதி வரலாற்றைக் கவிஞர் முருகுசுந்தரம் படைத்தளித்துள்ளார்.


"https://ta.wikisource.org/w/index.php?title=பாரதி_பிறந்தார்/9&oldid=1016579" இலிருந்து மீள்விக்கப்பட்டது