பாலைப்புறா/அத்தியாயம் 15

ந்தக் கம்பெனியில் இருந்து சுமார் இரண்டு லட்சம் ரூபாயோடு, மனோகர் வெளியேறினான்… கம்பெனியை சும்மா சொல்லக் கூடாது. அவனுக்கு சிரமம் இருக்கக் கூடாது என்பதற்காக, இருபத்தையாயிரம் ரூபாயை நோட்டுக்களாகவும், எஞ்சிய தொகையை செக்காகவும் கொடுத்தார்கள். இந்தப் பணத்தை கொடுக்கும் போது, அக்கௌண்டன்ட் பெண், கலங்கிய கண்களைத் துடைத்துக் கொண்டாலும், அந்தப் பணத்தை, கோவில் குருக்கள் பிரசாதத்தை தூக்கிப் போடுவது போலவே போட்டாள்.

அந்தப் பணத்தை பார்த்ததாலோ அல்லது ஒரு நாள் இடைவெளியாலோ, மனோகருக்கு, அத்தனைக் குழப்பத்திலும் ஒரு தெளிவு ஏற்பட்டது. நாட்டு வைத்தியரை நம்பி மோசம் போனதை, கலைவாணியிடம் சொன்னால், அவள், தன்னையும், தன் பேச்சையும் ஏற்றுக் கொள்வாள். இந்த இரண்டு லட்சம் ரூபாயையும், கலைவாணியின் பெயரிலேயே பேங்கில் டிபாசிட்டாக போட வேண்டும். வட்டி மட்டுமே வாழ்க்கைக்குப் போதும்… லாக்கரில் வைக்கப்பட்டிருக்கும் அவள் நகைகளை, அவள் இஷ்டப்பட்டால் விற்று, அந்தப் பணத்தோடு, தான் சேமித்த பணத்தையும் சேர்த்து, சொந்தமாக ஒரு வீடு வாங்க வேண்டும். அதுவும் கலைவாணி பெயரிலேயே… வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்… ஏதாவது ஒரு கம்பெனியில் சேர்ந்து விடலாம். தமிழ் பத்திரிகைகளை படிக்காதவர்கள் வேலை பார்க்கும் எந்தக் கம்பெனியிலாவது கம்ப்யூட்டர், இருக்கத்தான் செய்யும். ஆனாலும், ஆறப் போட்டு செய்ய வேண்டிய காரியம்; கலைவாணி… இப்போ எப்படி இருக்காளோ… கண் விழித்தாளோ இல்லையோ, நல்ல வேளையாய் மீனாட்சி கிடைத்தாள், அசல் மதுரை மீனாட்சிதான்.

பாலைப்புறா

144

சூரியநாராயணனின் பாசப்பரிவாய் பக்கத்தில் உராய்ந்து வந்த கம்பெனிக்காரை பார்த்த மனோகர், ஒரு ஆட்டோவை கைதட்டிக் கூப்பிட்டான். கம்பெனி டிரைவருடைய பார்வை சரியில்லை... அவனைப் பார்த்த மாத்திரத்திலேயே, அது வந்துவிட்டது... மாதிரியான பயப்பார்வை. இந்த ஆட்டோ, அடுக்குமாடி கட்டிடத்தின் முன்னால் வந்து நின்றபோது, மனோகர் மீட்டரைப் பார்க்காமலே, டிரைவர் கையில் மூன்று பத்து ரூபாய் நோட்டுக்களைத் திணித்துவிட்டு, லிப்ட் பக்கம் வந்தான். அந்த லிப்டிற்குள் கும்பலோடு நின்ற குடியிருப்போர் சங்கத் தலைவர் நாராயணசாமி அவர்களுக்கு, ஒரு வணக்கம் போட்டான். லிப்டுக்குள் ஏறப் போனான். உடனே, நாராயணசாமி வெளியே குதித்தார். உள்ளே நின்றவர்களைப் பார்த்து, கண்களைக் குதிக்க விட்டு, அவர்களையும் குதிக்க வைத்தார்.

‘நீங்க மொதல்ல போங்க மனோகர், நாங்க பின்னாலயே வாறோம் எப்பா... முதல்ல அவரை விட்டுட்டு வா... போங்கோ மனோகர்’.

மனோகர், அவர்களை ஏற இறங்கப் பார்த்தான். மேற்கொண்டும் பார்க்க முடியாமல் பாம்பு போல் சுற்றி வளைந்த மாடிப்படிகளில் ஏறினான். நிதானமாய் நடப்பதற்குப் பதிலாக ஒடினான். துரையீரல் வாய்க்கு வரப் போவது போல் தோன்றினாலும், இருதயம் உள்ளுக்குள்ளேயே ஊழிநடனம் போட்டாலும், அவன் மூச்சடக்கி ஓடினான். ஆங்காங்கே நின்ற பெண்கள் ஒங்களுக்கு விஷயம் தெரியாதா என்பது மாதிரி அவனைப் பார்த்தார்கள். எட்ட நின்று பார்த்தார்கள்.

அவன், இரண்டாவது மாடிதளத்திற்கு வந்ததும், காமாட்சி பாட்டிதான் எச்சரிக்கையான இடைவெளியில் நின்றபடி கேட்டாள்.

"என் பேத்தி ஆம்புடையான். ஏர் போர்ட்டுக்கு வந்தாரப்பா?” 'நான் யாரையும் பார்க்கல மாமி.’ காமாட்சி அம்மாவுக்குக் கொண்டாட்டம்; ஒருவேளை, பேத்தியும், அவள் வீட்டுக்காரனும் இவனை விமானநிலையத்தில் சந்தித்து, வீட்டுக்குக் கூட்டிப் போய், பார்சலை பிரித்து... காக்கா கடியாய் கடித்து... இவனுக்கு வந்தது அதுகளுக்கும் வந்து... நல்ல வேளை இவன் போகல... அவங்க வர்ல ‘காமாட்சிதாயே நீ தெய்வம்டி’ என்பிள்ளைகளை இவனோட சேரவிடல. இதுக்காக இப்பவே வந்து உனக்கு ஒரு சேலை சாத்துறேன்... தாயே... பவர் கட்டு... படியில் இறங்க முடியாது. அப்புறமாவாறேன் தாயே.

பாட்டி, மனோகரின் முதுகை மகிழ்ச்சியோடு பார்த்தபோது, திருமதி எட்வர்ட் சாமுவேல்... சத்தம் போட்டே அவனைத் திட்டினாள். ‘இவன் 145

சு. சமுத்திரம்

எத்தனைபேரை தீர்த்துக் கட்டப் போறானோ, இந்த வீட்ட விட்டு எப்போ ஒழியப் போறானோ...’

மிஸஸ். எட்வர்ட் சாமுவேலின் கோபத்திற்கும் ஒரு ‘நியாயம்' உண்டு. இவளிடம் இருந்து மகனைப் பறித்துக் கொண்ட பழிகாரி ரோஸ்லின், அண்ணாநகரில் குடித்தனம் செய்கிறாள். புருஷன் டூர் போகும்போது மட்டும் இங்கே டேரா போடுவாள். அப்போது, பிரம்மச்சாரியா இருந்த இந்த மனோகர் பயலோடு மணிக்கணக்கில் பேசுவாள். ஒட்டி நிக்கிற மாதிரி பேசுவாங்க. ராத்திரியிலே என்ன நடந்துதோ... எவ்வளவு நேரந்தான் கண் விழித்து காவல் காக்க முடியும்...? ஏசுவே... மருமகள் ரோஸ்லினுக்கு வந்திருந்தால் நியாயம்... அவள் மூலம், என் சன்னுக்கும் வந்து இருந்தால் என்ன நியாயம்?”

வீட்டுக்குள் வேக வேகமாக நுழைந்த மனோகர் திடுக்கிட்டான். கலைவாணியைக் காணவில்லை. ஒருவேளை பாத்ரூமுக்கு... அக்கம் பக்கமாய்... -

முட்டிக் காலிட்டுக் கிடந்த மீனாட்சி, அவனைப் பார்த்ததும், எழுந்திருக்கக் கூட திராணியற்று, இருந்தபடியே கேவிக் கேவிச்சொன்னாள். ‘அக்கா... மத்தியானமே ஒரு சூட்கேசோடு போயிட்டாங்க. நான் காலக்கட்டிக்கிட்டு அழுதேன். அப்புறம், அந்தச்சமயம் பார்த்து, பாலாமாமி வீட்ல போயி கெஞ்சுனேன். அவங்களும் கேட்கல... அக்காவும் இருக்கல... மாயமாய் மறைஞ்சிட்டாங்க. அழாதீங்க அண்ணா. அய்யய்யோ அழாதீங்கண்ணா...’

"https://ta.wikisource.org/w/index.php?title=பாலைப்புறா/அத்தியாயம்_15&oldid=1641701" இலிருந்து மீள்விக்கப்பட்டது