பாலைப்புறா/அத்தியாயம் 35

ந்த விழிப்புணர்வு வளாகத்திற்குள், அங்கு சங்கர் வருவதைப் பார்த்த அசோகன் “வாங்க, சங்கர்… என் ஆஸ்பத்திரிக்கு போயிட்டுதானே வறீங்க? நான் இங்கே இருப்பதாய் சொல்ல சொன்னேன். சொன்னாங்களா?”

சங்கரன், மேலும் கீழுமாய்த் தலையாட்டினான். சந்திராவையும், கலைவாணியையும் செத்த பாம்பாய் பார்த்தான். கலைவாணியைப் பார்த்த போது, கட்டுப் போடாமல் வீங்கிப் போயிருந்த பெருவிரலை, தன்னையமறியாமலே தூக்கிப் பார்த்தான்.

சங்கரனின் தோற்றத்தைப் பார்த்து விட்டு, சந்திரா.ஆடிப் போனாள். கீழே விழுந்து விடலாம் என்று பயந்தவள் போல், நாற்காலிச் சட்டங்களைப் பிடித்துக் கொண்டாள். அவனைப் பார்த்து திகைத்துப் போன கலைவாணி, நாசூக்காக வெளியேறப் போனாள். சந்திராதான், அவள் கையைப் பிடித்து இழுத்து, உட்கார வைத்தாள். அசோகன் உபசரித்தான்.

“உட்காருங்க மிஸ்டர் சங்கர்”

சங்கரன் உட்கார்ந்தான். அதே சமயம், தவியாய்த் தவித்தான். ‘அது’ இல்லாமல் இருந்தால், இந்த அசோகன் இந்நேரம் சொல்லி இருக்கலாம்… இருப்பதால்தான், சொல்லவில்லை என்று பாசிட்டிவ் பயத்தோடு அசோகனைப் பார்த்தான். பிறகு, சோர்வாய் நாற்காலியில் சாய்ந்தான். முகம் வெளிறிப் போயிருந்தது. கன்னங்கள் சிறுத்துப் போயிருந்தன. முகத்தை மறைத்த தாடி… பழைய பேண்ட்… சட்டை தொளதொளப்பாய்க் கிடந்தன. அடிக்கடி வேறு இருமினான். உடலுக்குள் இருக்கும் அத்தனை உறுப்புக்களையும், வெளியே இழுத்துப் போடப் போவது மாதிரியான இருமல்…

31() பாலைப்புறா

சந்திராவால், சும்மா இருக்க முடியவில்லை. அவனே பேசட்டும் என்று இருந்தவள், இப்போது, தானாகவே பேசினாள்.

“எப்படித்தான் இருக்கீங்க... என்ன கோலம் இது... ஒரு லட்டராவது போடப்படாதா?”

சந்திராவுக்கு கண்ணிர் பொங்கியது. சங்கரனும் அவளிடம் பேசப் போனான். அதற்குள் இருமல்... ஈர இருமல்...

அசோகன், சங்கரனை கண்ணைச் சிமிட்டி பார்த்தான், பிறகு, அவன் கையைக் குலுக்கியபடியே, பேசினான்.

‘சமாச்சுட்டிங்க சங்கரன்... ஒங்க ரத்தத்தை ஹெச்.ஐ.வி.க்கு மட்டுமில்லாமல்... எல்லாவற்றுக்கும் சேர்த்து டெஸ்ட் செய்துட்டேன். கொஞ்சம் ஈஸ்னோ போலியா... அதுதான் இருக்குது... சாதாரண நோய்... நோயின்னு கூட சொல்ல முடியாது... மற்றபடி யுவர் பாடி இஸ் கிரேட்’

சங்கரனுக்கு ஒரு சந்தேகம். உடம்பு பிரமாதம் என்கிறானே... அப்போ மூளை இல்லை என்கிறானோ..? தட்டுத்தடுமாறிக் கேட்டான்.

‘அப்போ எய்ட்ஸ்?”

‘ரெண்டு தடவை டெஸ்ட் செய்தாச்சு. அது உங்களுக்கு கிடையவே கிடையாது. வீணாய் மனசைப் போட்டு அலட்டிக்காதீங்க...’

“அப்போ இந்த இருமல்”

‘இது ஈஸ்னோபோலியாவோட எபக்ட். மருந்து தாரேன். சரியாயிடும்...”

‘அப்போ இந்த ஜூரம் ஒரு மாதமாய் போகலியே”

‘லுக் மிஸ்டர் சங்கர்...! இதுக்குமேல் ஒங்களை நீங்கதான் காப்பாற்றிக்கணும். நாம்... என்ன நினைக்கமோ, அப்படி ஆகுறோம். சில பெண்கள், கர்ப்பம் தரிக்காமலே அப்படி ஆகி இருக்குமோ என்கிற பயத்திலேயே போலிக் கர்ப்பிணியாய் ஆகி இருக்காங்க. எங்கே எய்ட்ஸ் வந்திடுமோன்னு நினைச்சிங்கன்னா, ஹெச்.ஐ.வி. கிருமி இல்லாமலே, அதனோட விளைவுகள் உங்களுக்கு வரலாம்...’

சங்கரனுக்கு, லேசான தெளிவு... கூடவே பயம்... ஒரு வேளை இதுவரைக்கும் எய்ட்ஸ் இருப்பதாய் நினைத்ததால், அதன் விளைவுகள் சு.சமுத்திரம் 311

வந்திருக்குமோ இதனாலதான். இந்தப் பெருவிரல்...? கேட்டே விட்டான்...

‘அப்போ, ஏன் இந்த பெருவிரலோட வீக்கம் குறையல?”

‘காரணம் இருக்கு. கலைவாணிய, ஒரு ராட்சசியாய் நினைக்கிறீங்க... அதனால், அந்தக் கடிகாயமும் அரக்கத்தனமாய் தோணுது. இது ஒங்க மனம் சம்பந்தப்பட்டது. உடல் சம்பந்தப்பட்டது இல்ல... கலைவாணியை, நல்ல பெண்ணா மனசிலே நினைத்துப் பாருங்க. பெருவிரல் தானாய் ஆறிடும்... நிசமாவே, இது, பத்தரை மாற்று தங்கம்...’

சங்கரன், அசோகனை, மீண்டும் தடுமாற்றமாய்ப் பார்த்தான். ஒரு மாதமாய் இருக்கிற வயிற்றுப் போக்கு பற்றி கேட்கப் போனான். கேட்டால்... ‘என்னைப் பற்றியும் நல்லதா நினைன்னும் சொல்வான் ஆக, எய்ட்ஸைப் பற்றி நினைக்காட்டால்தான்... இந்த வயிற்றுப் போக்கு, முதுகிலே இருக்கிற ஒற்றைக் கொப்பளம் சுகமாகும். எப்படித்தான் நினைக்காமல் இருக்கப் போறேனோ..? மருந்தைக் குடிக்கும் போது குரங்கை நினைக்காதே என்கிற கதைதான்.

இதற்குள், சந்திராவும் அவனை உரிமைக் குரலில் சாடினாள்.

‘இத்தோட ஹெச்.ஐ.வி. சிந்தனையை விட்டுடுங்க... மெட்ராஸ்ல மாமா, அத்தை எப்படி இருக்காங்க? அவங்களாவது, ஒரு லட்டர் போட்டிருக்கலாம். சரி... சாப்பிட்டிங்களா? நம்ம வீட்டுக்குப் போனிங்களா... அம்மா ஏதும் தந்தாங்களா? இல்லாட்டால், இங்கேயே வாங்கிவரச்சொல்லலாம்’

சங்கரன், அவளைப் பார்த்து முதல் தடவையாகச் சிரித்தான். அவளே போதும் என்பதுபோல், சந்திராவை திருப்தியோடு பார்த்தான். அந்தச் சிரிப்பை, கலைவாணியின் பக்கமும் தாவவிட்டான். அந்தக் கிருமிகள் இல்லை என்பதில் ஒரு திருப்தி. ஆனாலும் அதை நினைத்தால், ரிசல்ட் ஒன்றுதானே என்பதில் இன்னொரு அதிருப்தி...

அசோகன், சந்திராவைப்பார்த்து விளக்கினான்;

‘எப்படி ஒங்க சங்கருக்கு... ஒங்களுக்குத் தெரியாமலே டெஸ்ட் செய்தேன்னு கேட்க மாட்டிங்களா டாக்டர்? போன வாரம் வந்திருந்தார். என்கிட்டயே வந்தார். எய்ட்ஸ் வார்ட்ல சேர்க்கச் சொன்னார். புனிதக் காதலனாய் ஒங்களைப் பார்த்துக்கிட்டேசாகனும் என்கிற ஆசை. நான்தான் அதை நிராசையாக்கி விட்டேன். இன்றைக்கு வாரதாய் நேற்றே லட்டர் வந்தது. நான்தான், ஒங்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி கொடுக்கிறதுக்காக 312 பாலைப்புறா

சொல்லலே... போகட்டும்... எனக்கும் கலைவாணிக்கும் இந்த அமைப்புக்காரர்களுக்கும் எப்போ கல்யாணச் சாப்பாடு போடப் போlங்க...?”

சந்திரா,கவைாணியைப் பார்த்தாள்.அவளோமுகத்தை வேறு பக்கமாகத் திருப்பிக் கொண்டாள். அசோகன் கல்யாணப் பள்ளுபாடினான்.

‘கல்யாணத்தை மெட்ராஸ்லே நடத்துனாலும், இந்தக் கோணச் சத்திரத்திலும் ரிசப்ஷன் வைக்கணும்... நம் சந்திரா ரொம்ப பாப்புலர். கூட்டம் பயங்கரமாய் இருக்கும். டாக்டர் சந்திராவை இந்த அமைப்பிலே இருந்து பிரிக்கிறீங்க... அதுதான் என் சங்கடம்... ஆனால் வாழ்க்கை பிரிவுகளையும் பிணைப்புக்களையும் கொண்டது. காதலும் ஒரு வகையான ஹெச்.ஐ.வி. கேஸ்தான். அது நிறைவேறலன்னா... உள்ளத்தை கரையான் அரிக்கிற மாதிரி அரிச்சிடுமுன்னு... சொல்றாங்க. அப்போ நான் உத்திரவு வாங்கிக்கவா. டாக்டர் சந்திரா இங்கயே இருந்தால் எப்படி...? மாப்பிள்ளையை வீட்டுக்குக் கூட்டிக்கிட்டுப் போங்க.”

அசோகன்... எழுந்தபடியே பேசினான்;

‘அப்புறம், மிஸ்டர்சங்கர் இந்த அமைப்போட ஒருதுண் ஒங்க சந்திரா. அதனால, இங்கே மாதத்துக்கு ஒரு தடவையாவது, அவங்களை அனுப்பி வைக்கணும். கொஞ்ச நாளைக்குத்தான். அப்புறம், இந்த அமைப்பு தானாகவே எழுந்து நிற்கும். சரி வாறேன்.”

அசோகன் போய்விட்டான்.

சந்திராவுக்கு, கோபங் கோபமாய் வந்தது. எப்படிக் கழித்துக் கட்டப் பார்க்கார். பழகுனதோசம் கூட இல்லையே... பழகுவதையே ஒரு தோசமாய் நினைக்கிறாரா? இந்த சங்கரை கல்யாணம் செய்யச் சொன்னதில் தப்பில்லைதான். ஆனால், எப்படியோ... நான் போனால் சரி என்பது மாதிரியா பேசறது? நான் எதுக்குப் போகணும்... இந்த அசோகன் யார்... எனக்கு உத்தரவு போட..? நீ, நான்னு பேசறவரு, இப்போநீங்க, நாங்கன்னு பேசுராறே. எப்படி பேசலாம்...

சந்திரா, தனக்குத்தானே பயந்தாள். தன்னைத் தானே புதிதாய் கண்டு பிடித்தது போல் மலைத்தாள். அசோகன் போன இந்த இரண்டு நிமிடமும், இந்த சங்கரன் பிரிந்திருந்த ஒராண்டுக்கும் மேலான பிரிவுத்துயராய்த் தோன்றுகிறது. இந்தக் கலைவாணி தன்னைத் திரும்பிப் பாராத நான்கு நிமிடம், நான்கு யுகங்களாகத் தோன்றுகிறது. சு.சமுத்திரம் 313

சங்கரன் அவசரப்படுத்தினான்...

‘வீட்டுக்குப் போகலாமா சந்திரா... அப்புறம் நீ சஸ்பெண்டாமே.. கவலைப்படாதே. மெட்ராஸ்லே மேலிடத்துல பேசிட்டேன். நீ. ஒரு மன்னிப்பு லெட்டர் எழுதிக் கொடுத்தால் போதுமாம். வேலையில் சேர்த்துக்குவாங்க. அப்புறம், மெட்ராஸ்க்கும் டிரான்ஸ்பர் செய்வாங்க. எல்லாம் பொலிடிக்கல் பிரஷ்ஷர்தான். கொஞ்சம் பணமும்தான்...”

சங்கரன் நெஞ்சை நிமிர்த்திக் காட்டிப் பேசியபோது, அதுவரைக்கும், எதையோ எழுதுவது போல் கீழே குனிந்து பாசாங்கு செய்த கலைவாணி, சந்திராவை நேருக்கு நேராய்ப் பார்த்தாள். அவளோ, விழிகளைக் கூட உருட்டாமல் சலனமற்றுக் கிடந்தாள். கடந்தகாலத்திற்கும், நிகழ் காலத்திற்கும் இடையே போய்க் கொண்டும், வந்து கொண்டும் இருந்தவள், இந்த காலக்கட்டங்களையும் உதறிவிட்டு, இன்னது என்று சொல்லமுடியாத எதிர்காலத்திற்குள் போய்விட்டாள்...

"https://ta.wikisource.org/w/index.php?title=பாலைப்புறா/அத்தியாயம்_35&oldid=1639255" இலிருந்து மீள்விக்கப்பட்டது