புறப்பொருள் வெண்பாமாலை/பாயிரம்

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக

கடவுள் வாழ்த்து

தொகு
நடையூறு சொன்மடந்தை நல்குவது நம்மேல்
இடையூறு நீங்குவதும் எல்லாம் – புடையூறும்
சேனைமுகத் தாளிரியச் சீறுமுகத் தூறுமுகத் தூறுமதத்
தானைமுகத் தானைநினைத் தால்.
நூல் நடையில் ஊறுபவள் சொல்மடந்தை
அவள் நல்குவதால் நமக்கு வரும் இடையூறு நீங்கும்
அதற்கு ஆனைமுகனை நினைக்க வேண்டும்
கண்ணவனைக் காணகவிரு காதவனைக் கேட்கவாய்ப்
பண்ணவனைப் பாட பதஞ்சூழ்க – எண்ணிறைந்த
நெய்யொத்து நின்றானை நீலமிடற் றானையென்
கையொத்து நேர்கூப்பு க.
நெற்றிக்கண் கொண்டவனைக் காண உதவும்படி
இரு காது உடைய பிள்ளையாரைக் கேட்ட வாய்
பண்ணவனாகிய சிவனைப் பாட,
பதங்கள் வர
எண்ணத்தில் நிறைந்து
வாயில் நெய் போல் நின்றானை
நில மிடறு கொண்ட சிவனை
இரண்டு கைகளும் ஒற்றுமையாகக் கூப்புக.

சிறப்புப் பாயிரம்

தொகு
மன்னிய சிறப்பின் வானோர் வேண்டத்
தென்மலை யிருந்த சீர்சான் முனிவரன்
தன்பாற் றண்டமிழ் தாவின் றுணர்ந்த
துன்னருஞ் சீர்த்தித் தொல்காப் பியன்முதற்
பன்னிரு புலவரும் பாங்குறப் பகர்ந்த
பன்னிரு படலமும் பழிப்பின் றுணர்ந்தோன்
ஓங்கிய சிறப்பி னுலகமுழு தாண்ட
வாங்குவிற் றடக்கை வானவர் மருமான்.
ஐய னாரித னகலிடத் தவர்க்கு
மையறு புறப்பொருள் வழாலின்று விளங்க
வெண்பா மாலை யெனப்பெயர் நிறீஇப்
பண்புற மொழிந்தனன் பான்மையிற் றெரிந்தே.
வானோர் வேண்டுகோளின்படி
பொதியம் என்னும் தென்மலையில் அகத்திய முனிவன் வீற்றிருந்தான்.
அவனிடம் அகத்தியன் முதல் 12 பேர் தமிழ் கற்றனர்.
அவர்கள் பாடியது பன்னிரு படலம் என்னும் நூல்.
இதனை உணர்ந்தவனும்
உலகாண்டவனும்
கையில் வில்லை உடையவனுமான வானவர் பெருமான்
ஐயனாரிதன்
உலகத்தவர்க்குப் புறப்பொருள் விளங்குமாறு
வெண்பாமாலை என்னும் பெயரில்
பண்போடும் பான்மையோடும் மொழிந்தான்