பெருந்தலைவர் காமராசர் பிள்ளைத்தமிழ்
சத்தியமூர்த்திப் பஞ்சகம் (அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)
தொகு(1) சிங்கத்தின் குகைக்குள் சென்று
- பிடரியைப் பிடித்தல் போன்று
பங்கத்தின் கிடங்காய் நின்ற
- பாழ்வெள்ளை நகரம் சென்று
வங்கத்தின் சிங்கம் சொன்ன
- வந்தே மாதரத்தைச் சொன்னான்!
தங்கத்தின் உயர்ந்த வீரன் !
- தமிழ்தந்த சத்ய மூர்த்தி !
(2) வில்லம்பு தொடுத்தி டாமல்
- வெள்ளையர் தீமை யெல்லாம்
சொல்லம்பு தொடுத்தே ஈங்குத்
- தொலைத்திட்ட உண்மை வீரன் !
இல்லம்பு ரந்தி டாமல்
- இந்தியத் தாயைக் காக்க
வெல்லம்பும் இங்கி லாந்தில்
- விடுத்திட்ட வெற்றி வீரன்!
(3) காமத்தைப் பெயரில் கொண்டும்
- காமத்தை வென்ற ராசன்
நாமத்தை பரப்பு மாறு
- நன்னெறி உபதே சித்தே
ஏமத்தில் குருவாய் நின்றான் !
- இன்தமிழ் சத்ய மூர்த்தி
தோமற்றோன் தோன்றி நூறாம்
- ஆண்டது நிறையும் நாளில்!
நூற் காப்பு
தொகுஇறை வணக்கம்
தொகு(பதினாறு சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)
அன்பே! அருளே! அறிவே! திருவே!
- அகமே! புறமே! அளியே! வளியே!
- அனலே! புனலே! மணியே! மணியே!
- அலையே! அலையே! அழகே! குழகே!
- அலையே! அலையே! அழகே! குழகே!
- அனலே! புனலே! மணியே! மணியே!
இன்பே! எழிலே! இறையே! மறையே!
- இதமே! பதமே! சதமே! விதமே!
- இரவே! பகலே! இருளே! ஒளியே!
- இறப்பே! பிறப்பே! இருப்பே! மறைப்பே!
- இறப்பே! பிறப்பே! இருப்பே! மறைப்பே!
- இரவே! பகலே! இருளே! ஒளியே!
முன்பே! முடிவே! நடுவே! தொடர்பே!
- முன்பே! கனிவே! துணிவே! பணிவே!
- மொழியே! விழியே! வழியே! கிழியே!
- முழவே! உழவே! மழவே! விழவே!
- முழவே! உழவே! மழவே! விழவே!
- மொழியே! விழியே! வழியே! கிழியே!
என்பே! உயிரே! உளமே! வளமே!
- எளிதே! அரிதே! சிறிதே! பெரிதே!
- எண்ணே! எழுத்தே! எவணும் நிறையும்
- இறையே சரணம்! சரணம்! சரணம்!
- இறையே சரணம்! சரணம்! சரணம்!
- எண்ணே! எழுத்தே! எவணும் நிறையும்