பொன் விலங்கு/ஏ ! பிராமணர்களே !
ஏ ! பிராமணர்களே !
"உங்கள் பரம்பரை வரலாறு குறித்து நான் என்ன நினைப்பது!
"ஏ ! பிராமணர்களே ! பரம்பரை உரிமை யென்ற காரணத்தால், 'பறையர்'களைவிட படிப்பதற்கு உங்களுக்கு அதிகத்திறமையிருந்தால், பிராமணர்களின் படிப்புக்காக அதிகப் பணத்தைச் செலவழிக்காதீர்கள். 'பறையர்களின் கல்விக்காக எல்லாவற்றையும் செலவு செய்யுங்கள்.
வளவற்றவர்களுக்குக் கொடுங்கள் ஏனெனில் அவர்களுக்கே உதவி தேவை. பிராமணர்கள், பிறவியிலேயே புத்திசாலியானால் பிறர் உதவியில்லாமல் தானாகவே கற்றுக்கொள்ள முடியும். "மற்றவரிகள் பிறவியிலேயே திறமை யற்றவர்களானால், அவர்களுக்குத் தேவையான படிப்பும், ஆசிரியர்களும் பள்ளிக்கூடங்களும் அவர்களுக்கே விட்டு விடுங்கள். நானறிந்த மட்டில், இதுதான் நியாயமும் பகுத்தறிவுமாகும்.
———சுவாமி விவேகானந்தா.