பொன் விலங்கு/பொய்க் கூக்குரலை விளக்கும் புள்ளி விவரம்

பொய்க் கூக்குரலை விளக்கும்
புள்ளி விவரம்

தோழர் டி. எஸ். சொக்கலிங்கம் அவர்களை ஆசிரியராகக் கொண்டுள்ள 'தினசரி' இதழ் 31-7-50-ல் எழுதியுள்ளதின் சுருக்கம்

பிராமணர்கள் என்பதற்காக சென்னை சர்க்கார் அச்சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு மேல் படிப்புக்கான வசதியைக்கூட அளிக்க மறுக்கிறது என்பது கூக்குரல். இதுபற்றி ஓயாது பிரச்சாரம் நடந்து கொண்டிருக்கிறது. இதே காரணத்தைக் காட்டி சர்க்காரின் வகுப்புவாரி வீதாசார உத்தரவை ஆட்சேபித்து சமீபத்தில் வழக்கும் தொடரப்பட்டது. ஹைகோர்ட்டும், ஜாதிமத, இன அடிப்படையில் காலேஜ்களில் அட்மிஷன் செய்வது இந்திய குடியரசு அரசியல் 15(1), 29(2) ஆகிய ஷரத்துகளுக்கு பொருத்தமல்ல என்று தீர்ப்பளித்தது.

வகுப்புவாரி வீதாசார உத்தரவு அரசியல் ஷரத்துக்கு பொருந்தாததாக இருக்கலாம். ஆனால் வகுப்பு வீதாசார உத்தரவு பிராமணருக்கு காலேஜ்களில் கதவடைத்து விட்டதா? பிராமண வாலிபர்களுக்குப் படிப்பு வசதி மறுக்கப் படுகிறது என்பது உண்மையா ? மாகாணஜனத்தொகையில் 2.7 சதவிகிதத்தினராகவுள்ள பிராமணர் 40 சதவிகித அட்மிஷன்களை கலேஜ்களில் பெறுகின்றனர். அதோடு சென்ற இரு வருஷங்களில் அட்மிஷன் பெறும் மாணவர் தொகையும் அதிகரித்து வருகிறது. இந்த உண்மையை இக்கட்டுரையில் கண்டபுள்ளி விவரங்கள் வெட்ட வெளிச்ச மாக்குகின்றன.

சென்னை ராஜ்யத்தின் ஜனத்தொகை
(1941-ஆண்டு கணக்குப்படி)

ஆண் பெண் மொத்தம் சதவிகிதம்
இந்துக்கள் 172,68,774 17,442,556 3,4781,330 70.4
பார்ப்பனர் 644,358 6,63,642 13,08,000 2.7
பார்ப்பனரல்லாதார் 1,66,44,416 1,67,78,914 3,84,23,380 67.7
தாழ்த்தப்பட்டோர் 40,23,018 40,15,394 80,08,492 16.3
முஸ்லிம்கள் 19,24,408 19,72,648 38,96,446 7.8
இந்திய கிறிஸ்தவர் 9,03,511 10,04,571 1911082 3.7
ஆங்கிலேயர்
ஆங்கிலோ இந்தியர்
19,074 19.553 38,737 7
புத்தர்கள் 642 400 1,072 1.1
பார்ஸிகள் 211 158 359
மற்றவர்கள் 3,04,428 2,99,819 6,01,277
மொத்த ஜனத்தொகை 2,44,93,048 2,48,11,903 493,06951

இந்துக்களின் மொத்த தொகையில் பார்ப்பனர் 3.8 சதவிகிதம்

1948-49-ல் இன்ட்டர் மீடியட்டில் சேர்க்கப்பட்டோர்

பிராமணர் பிராமண ரல்லாதார் ஹரிஜன் முஸ்லீம் கிருஸ்தவர் மொத்தம்
சர்க்கார் காலேஜ்கள் வந்த மனுக்கள் 1806 2485 70 363 214
சேர்க்கப்பட்டோர் 814 1368 66 245 128
உதவி பெறும் காலேஜ்கள் வந்த மனுக்கள் 5599 8509 280 574 2586
சேர்க்கப்பட்டோர் 3219 4383 280 389 1291
மொத்தம் சேர்ந்தவர்கள் 4033 5751 346 634 1419 12183
மொத்தம் சேர்ந்தவர்களில் ஒவ்வொரு சமூகத்தினரின் சதவிகித விவரம் 33.2 47.2 2.8 5.2 11.6

1949-50 இன்ட்டர் மீடியட்

பிராமணர் பிராமண அல்லாதார் ஹரிஜன் முஸ்லிம் கிருஸ்தவர் மொத்தம்
சர்க்கார் காலேஜ்கள் வந்த மனுக்கள் 1581 2132 44 247 193
சேர்க்கப்பட்டோர் 661 1250 39 152 105
பிராமணர் பிராமண ரல்லாதார் ஹரிஜன் முஸ்லீம் கிருஸ்தவர் மொத்தம்
உதவி பெறும் காலேஜ்கள்
வந்த மனுக்கள் 5821 7849 240 518 2252
சேர்க்கப்பட்டோர் 3761 5292 238 378 1241
மொத்தம் சேர்க்கப்பட்டோர் 4422 6542 277 580 1346 13117
சதவிகிதம் 33.8 49.7 2.1 4.1 10.8

1948-49-ல் பி. ஏ; பி. காமில் சேர்ந்தோர்

பிராமணர் பிராமண ரல்லாதார் ஹரிஜன் முஸ்லீம் கிருஸ்தவர் மொத்தம்
சர்க்கார் காலேஜ்கள்
வந்த மனுக்கள் 351 420 3 50 71
சேர்க்கப்பட்டோர் 199 295 2 41 36
உதவி பெறும் காலேஜ்கள்
வந்த மனுக்கள் 1676 1936 55 97 687
சேர்க்கப்பட்டோர் 912 932 55 65 406
மொத்தம் சேர்க்கப்பட்டோர் 1111 1227 57 106 412 2943
சதவிகிதம் 27.8 41.6 1.9 3.6 15.1

1949—50-ல் பி. ஏ; பி. காமில்

பிராமணர் பிராமண ரல்லாதார் ஹரிஜன் முஸ்லீம் கிருஸ்தவர் மொத்தம்
சர்க்கார் காலேஜ்கள்
வந்த மனுக்கள் 284 452 9 39 50
சேர்க்கப்பட்டோர் 204 337 8 31 45
உதவி பெறும் காலேஜ்கள்
வந்த மனுக்கள் 1734 1663 78 171 502
சேர்க்கப்பட்டோர் 1190 1663 40 117 365
மொத்தம் சேர்க்கப்பட்டோர் 1394 1610 48 148 410 3610
சதவிகிதம் 38.6 44.6 1.3 4.1 11.4

1948-49-ல் ஜூனியர் பி. எஸ். ஸி.

பிராமணர் பிராமண ரல்லாதார் ஹரிஜன் முஸ்லீம் கிருஸ்தவர் மொத்தம்
சர்க்கார் காலேஜ்கள்
வந்த மனுக்கள் 658 623 7 83 72
சேர்க்கப்பட்டோர் 242 213 1 83 37
உதவி பெறும் காலேஜ்கள்
வந்த மனுக்கள் 1158 929 9 33 366
சேர்க்கப்பட்டோர் 502 309 9 6 119
மொத்தம் சேர்க்கப்பட்டோர் 752 522 10 41 196 1523
சதவிகிதம் 49.5 34.2 7 2.7 12.9

1949—50-ல் ஜூனியர் பி. எஸ். ஸி.

பிராமணர் பிராமண ரல்லாதார் ஹரிஜன் முஸ்லீம் கிருஸ்தவர் மொத்தம்
சர்க்கார் காலேஜ்கள்
வந்த மனுக்கள் 715 616 10 89 101
சேர்க்கப்பட்டோர் 278 289 2 39 32
உதவி பெறும் காலேஜ்கள்
வந்த மனுக்கள் 1166 374 8 50 411
சேர்க்கப்பட்டோர் 559 447 3 50 145
மொத்தம் சேர்க்கப்பட்டோர் 837 686 5 89 177 1794
சதவிகிதம் 46.6 38.3 0.3 4.96 9.84

1948—49-ல் பி. ஏ. (ஆனர்ஸ்)

பிராமணர் பிராமண ரல்லாதார் ஹரிஜன் முஸ்லீம் கிருஸ்தவர் மொத்தம்
சர்க்கார் காலேஜ்கள்
வந்த மனுக்கள் 78 77 4 9 13
சேர்க்கப்பட்டோர் 49 36 3 3 7
உதவி பெறும் காலேஜ்கள்
வந்த மனுக்கள் 481 4.8 2 27 168
சேர்க்கப்பட்டோர் 144 101 2 7 64

1949—50-ல் பி. ஏ; பி காமில்

பிராமணர் பிராமண ரல்லாதார் ஹரிஜன் முஸ்லீம் கிருஸ்தவர் மொத்தம்
மொத்தம் சேர்க்கப்பட்டோர் 193 137 5 10 71 416
சதவிகிதம் 46.5 32.9 1.2 2.4 17.0

1948-49-ல் பி. எஸ்ஸி; (ஆனர்ஸ்)

பிராமணர் பிராமண ரல்லாதார் ஹரிஜன் முஸ்லீம் கிருஸ்தவர் மொத்தம்
சர்க்கார் காலேஜ்கள்
வந்த மனுக்கள் 280 138 ... 9 28
சேர்க்கப்பட்டோர் 17 17 ... 4 6
உதவி பெறும் காலேஜ்கள்
வந்த மனுக்கள் 360 236 ... 7 65
சேர்க்கப்பட்டோர் 42 9 ... ... 12
மொத்தம் சேர்க்கப்பட்டோர் 59 26 ... 4 18 107
சதவிகிதம் 55 24.3 ... 3.8 16.9

1949—50-ல் பி. ஏ; (ஆனர்ஸ்) பி. எஸ். ஸீ. (ஆனர்ஸ்)

பிராமணர் பிராமண ரல்லாதார் ஹரிஜன் முஸ்லீம் கிருஸ்தவர் மொத்தம்
சர்க்கார் காலேஜ்கள்
வந்த மனுக்கள் 484 344 8 32 51
சேர்க்கப்பட்டோர் 62 61 3 11 11
உதவி பெறும் காலேஜ்கள்
வந்த மனுக்கள் 1188 763 6 38 295
சேர்க்கப்பட்டோர் 256 145 2 6 99
மொத்தம் சேர்க்கப்பட்டோர் 318 206 5 17 110 656
சதவிகிதம் 48.5 31.4 .7 2.6 16.8

சென்னை நகர காலேஜ்களில் நிலைமை

சென்னை நகரிலுள்ள சில முக்கியமான காலேஜ்களில் மாணவர்கள் வகுப்புவாரியாக எவ்விதம் இடம் பெற்றிருக்கின்றனர் என்ற விவரத்தை கீழே காணும் புள்ளி விவரங்கள் தெளிவாக்குகின்றன. இந்த புள்ளி விவரங்களை அறிய, வெவ்வேறு விதமான, நிர்வாகத்திற்குட்பட்ட சில காலேஜ்களே எடுத்துக்கொள்ளப் பட்டிருக்கின்றன. பல சமூகங்களிலும் எந்தெந்த சமூகத்திற்கு எந்தெந்த நிர்வாகம் அதிக சலுகை அளித்திருக்கிறது. என்பதை கீழ்வரும் புள்ளி விவரங்கள் வெட்ட வெளிச்சமாக்கும்.

1949-50-ல் சேர்க்கப்பட்டோர் விவரம்

சென்னை கிறிஸ்டியன் காலேஜ் (பிராட்ஸ்டன்ட் கிறிஸ்தவ ஸ்தாபனம்)

இன்டர் பி.ஏ; பி.காம் பி.எஸ்.ஸி. பி.எ.(ஆனர்ஸ்) பி.எஸ்.ஸி.(ஆனர்ஸ்)
பிராமணர் 88 15 45 29 8
பிராமணரல்லாதார் 87 38 48 25 5
ஹரிஜன் 7 3
முஸ்லிம் 9 1 1 2
இந்திய கிறிஸ்தவர் 65 17 31 15 3

பச்சையப்பன் காலேஜ் (பெரும்பாலான பிராமணரல்லாத நிர்வாகம்)

இன்டர் பி.ஏ; பி.காம் பி.எஸ்.ஸி. பி.எ.(ஆனர்ஸ்) பி.எஸ்.ஸி.(ஆனர்ஸ்)
பிராமணர் 172 41 69 28
பிராமணரல்லாதார் 828 192 190 42
ஹரிஜன் 19 2 ... 1

லயோலா காலேஜ் (ஜெஸூட் மிஷன் நிர்வாகம்)

இன்டர் பி.ஏ; பி.காம் பி.எஸ்.ஸி. பி.எ.(ஆனர்ஸ்) பி.எஸ்.ஸி.(ஆனர்ஸ்)
பிராமணர் 201 105 71 38 5
பிராமணரல்லாதார் 174 74 28 14 2
ஹரிஜன் 11 2 1 ... ...
முஸ்லிம் 15 11 ... 3 ...
இந்திய கிறிஸ்தவர் 114 25 24 16 5

விவேகானந்தா காலேஜ் (பெரும்பாலும் பிராமண நிர்வாகம்)

இன்டர் பி.ஏ; பி.காம் பி.எஸ்.ஸி. பி.எ.(ஆனர்ஸ்) பி.எஸ்.ஸி.(ஆனர்ஸ்)
பிராமணர் 263 111 ... 48 3
பிராமணரல்லாதார் 30 8 ... 1 ...
ஹரிஜன் 1 ... ... ... ...
முஸ்லிம் 1 ... ... ... ...
இந்திய கிறிஸ்தவர் 1 ... ... ... ...
1940-50-ல் இண்டர் எடுபட்டது பி. ஏ. பி. எஸ். ஸி
பிரஸிடென்ஸி காலேஜ் (சர்க்கார் நிர்வாகம்)
பிராமணர் ... 16 108
பிராமணரல்லாதார் ... 38 112
ஹரிஜன் ... 1 ...
முஸ்லிம் ... 4 12
இந்திய கிறிஸ்தவர் ... 10 17

மெடிக்கல் இன்ஜினீயரிங் காலேஜ்கள்

தொழில் படிப்பு சம்பந்தமான கல்வி ஸ்தாபனங்களில் அதிகம் பேர் சேர ஆவல் கொள்ளும் காலேஜ்களில் இரண்டு மெடிக்கல் காலேஜ்ம் இன்ஜினீயரிங் காலேஜ்ம் தான். சர்க்கார் நிர்வாகத்தில் இம்மாகாணத்தில் 4 மெடிக்கல் காலேஜ்களும் 4 இன்ஜினீயரிங் காலேஜ்களும் இருக்கின்றன. இந்த காலேஜ்களில் 1947-ல் எந்தெந்த சமூக மாணவர்கள் எத்தனை பேர் இருந்தார்கள் என்ற விவரம் கீழே கொடுக்கப்படுகிறது.

மெடிக்கல் காலேஜ்

பிராமணர் பிராமண ரல்லாதார் ஹரிஜன் முஸ்லீம் கிருஸ்தவர் ஆங்இந்தி மற்றோர் மொத்தம்
ஆந்திரர் 105 181 3 17 43 2 ... 351
குண்டூர் 128 25 ... 4 9 ... ... 50
சென்னை 183 386 8 69 148 43 5 842
ஸ்டான்லி 12 224 8 2 97 19 2 515
மதுரை 14 11 8 8 7 2 ... 50
மொத்தம் 442 827 27 140 299 66 7 1808
சதவிகிதம் 24.4 45.8 1.5 2.7 16.8 8.8 4

இன்ஜீனியரி

கிண்டி 122 206 13 50 61 11 12 475
கோயம்புத்தூர் 36 95 2 11 14 2 2 162
காகினாடா 28 63 3 7 4 ... ... 105
அனந்தபூர் 12 25 1 7 3 ... ... 50
மொத்தம் 198 389 19 75 82 13 14 792
சதவிகிதம் 2.5 49.4 2.4 9.5 10.4 1.6 1.7

1949-50-ல் இன்ஜினியரிங் காலேஜில் சேர்க்கப்பட்டோர் தொகை

பிராமணர் பிராமண ரல்லாதார் ஹரிஜன் முஸ்லீம் கிருஸ்தவர் ஆங்இந்தி மற்றோர் மொத்தம்
72 124 82 27 25 25 21 351
சதவிகிதம் 20.5 35.4 23.4 7.7 7.1 .5

இதில் எது அநியாயம்?

இப்பக்கத்தில் கொடுக்கப்பட்டிக்கும் புள்ளி விவரங்களிலிருந்து, சென்னை ராஜ்யத்தில் பல காலேஜ்களிலும் ஒவ்வொரு சமூகத்தையும் சேர்ந்த மாணவர்கள் எவ்வளவு பேருக்கு அட்மிஷன் கிடைத்திருக்கிறது என்பது நன்கு விளங்கும்.

1949-50 இண்டர் மீடியட் வகுப்புகளில் சேர்ந்த மொத்த மாணவர்கள் 13,117 பேரில் 4,432 பேர் பிராமண மாணவர்கள்.

பி. ஏ, பி. காம். வகுப்புகளில் சேர்க்கப்பட்ட மொத்த மாணவர்கள் 3610 பேரில் 1394 பேர் பிராமணர்.

காலேஜ்களில் பி. எஸ் ஸி, ஆனர்ஸ் வகுப்புகளில் படிக்கத்தான் அநேகம் மாணவர்கள் ஆவலுடன் வருகிறார்கள். ஆனால், இதில் எந்த சமூகத்திற்கு அதிகசலுகை கிடைத்திருக்கிறது? 1949-50-ல் பி. எஸ்,ஸி வகுப்பில் சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கும் மொத்த மாணவர்கள் 1794 பேரில் 837 பேர் பிராமணர். பி. ஏ. ஆனர்ஸ் பி. எஸ்,ஸி ஆனர்ஸ் வகுப்புகளில் சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கும் மொத்த மாணவர்கள் 656 போரில் 318 பேர் பிராமணர்.

வர வர அதிகம்

போன இரண்டு வருஷங்களில் காலேஜ்களில் அட்மிஷன் செய்யப்பட்டிருப்போரின் தொகையை கவனித்தால் பிராமண மாணவர்களின் தொகை அதிகரித்தே வந்திருக்கிறது என்பதும் நன்கு விளங்கும்.

கீழே கண்ட புள்ளி விவரத்தைப் பார்த்தால் நன்றாகப் புரியும்,

1948-49 1949-50
இன்டர்மீடியட் 4033 4422
பி.ஏ.பி.காம்  1111 1394
பி.எஸ்.ஸி.  754 837
ஆனர்ஸ்  252 318

3 சத விகிதத்திற்கு எத்தனை சத விகிதம்?

இம்மாகாணத்தின் மொத்த ஜனத் தொகையில் இரண்டே முக்கால் சத விகிதத்தினருக்கும் குறைவாகவே பிராமணர்களிருக்கிறார்கள். ஆனால் காலேஜ்களில் சேர்க்கப்படும் மொத்த பிராமணரில் இந்த 2.7 சதவிகித சமூகத்தினருக்கு எத்தனை சதவிகித ஸ்தாபனங்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன என்பதைக் காட்டுவதே கீழே இருக்கும் புள்ளி விவரம்.

1949-50ல்
இன்டர்மீடியட் 33.8
பி. ஏ, பி. காம் 38.6
பி. எஸ் ஸி 46.6
ஆனர்ஸ் 48.5

பிராமணர் என்பதற்காக பிராமண இளைஞர்களுக்கு படிக்கக்கூட வசதி மறுக்கப்படுகிறது என்று கூக்குரல் போடுகிறார்கள் அல்லவா ? இக்கூக்குரல் நியாயம் என்பதற்கு ஏதாவது உண்மை உண்டா? இதுவரையில் கொடுக்கப்பட்டிருக்கும் புள்ளி விவரங்களைப் பார்க்கிறவர்கள் யாராவது பிராமணருக்கு வசதி மறுக்கப்படுகிறது என்று யோக்கியமாக சொல்ல முடியுமா ?

மெடிகல் காலேஜ், இன்ஜினீரியங் காலேஜ்களில் பிராமணருக்கு இடம் மறுக்கப்படுகிறது என்று தான் ரொம்ப ரொம்ப பலமாக கூக்குரல் போடுகிறார்கள். அந்த காலேஜ்களைப் பற்றிய புள்ளி விவரங்களை கவனித்தால் அவற்றிலுள்ள மொத்த இடங்களில் 25 சதவிகிதம் பிராமணருக்கு கொடுக்கப்படுகிறது என்பது நன்கு விளங்கும். இவ்விதம் பிராமணருக்கு ஒதுக்கியளிக்கப் பட்டிருக்கும் இவ்வளவு ஸ்தானங்களில் பாதி கூட வேறு எந்த சமூகத்திற்கும் இல்லை என்பதும் கவனிக்கவேண்டியதாகும்.

கல்வித்துறையில் இந்திய கிறிஸ்தவர் சமூகம் முன்னேற்றமுள்ள சமூகம் என்பது எல்லோரும் அறிந்த விஷயம். இம்மாகாணத்தின் மொத்த ஜனத்தொகையில் 3.7. சத விகிதத்தினர் இந்திய கிறிஸ்தவர். ஆனால் பிராமணர் 2.7 சத விகிதத்தினரே, எனினும் காலேஜ்களில் பிராமணருக்கு அளிக்கப்பட்டிருக்கும் ஸ்தானங்களில் மிகக் குறைவான ஸ்தானங்களையே இந்திய கிறிஸ்தவர் பெற்றிருக்கிறார்கள். மெடிகல் காலேஜ்களில் படிக்கும் மாணவர்களில் 16.6 சத விகிதத்தினரே கிறிஸ்தவர்கள். ஆனால் 24.4 சத விகித மாணவர்கள் பிராமணர்கள். இன்ஜினீயரிங் காலேஜ்களில் கிறிஸ்தவ மாணவர்கள் 10.4 சத விகிதத்தினரென்றால் பிராமணர் 25 சத விகிதத்தினர்.

காலேஜ்களில் மாணவர்களை சேர்க்கும் விஷயத்தில் வாஸ்தவத்தில் இப்பொழுது இருந்து வரும் நிலைமை என்ன என்பது மாத்திரமே இக்கட்டுரையில் புள்ளி விவரங்களுடன் எடுத்துக் கூறப்பட்டிருக்கிறது. தங்களுடைய ஜனத்தொகைக்கு அதிகமாக அதுவும் மிதமிஞ்சிபார் அனுபவிக்கிறார்கள் என்பதை வாசகர்களே யூகித்துக்கொள்ளலாம். இந்த உண்மை விவரங்களையெல்லாம் அறிந்த பிறகும்கூட, குறிப்பிட்ட ஒரு சமூகத்தினருக்கு படிக்கக்கூட உரிமை மறுக்கப்படுகிறது என்று யாராவது கூச்சல் போடுவார்களானால் அப்படிப் பட்டவர்களை ஒரே ஒரு கேள்வி கேட்க வேண்டும் என்று தான் தோன்றும். "இந்த ராஜ்யத்தில் 97.3 சதவிகிதத்தினராக இருக்கும் மக்களுக்கு, அவர்களுடைய மேல் படிப்புக்கு இன்னும் எவ்வளவு குறைந்த இடம் அளித்தால் போதுமென்று நினைக்கிறீர்கள்? பிராமணர்களுக்கு மேல் படிப்பு வசதி மறுக்கப்படுகிறதென்று கூப்பாடு போடுபவர்களை இந்த ஏடுதான் இனிக் கேட்கவேண்டும்.


நன்றி

'வந்தது விபத்து'—இதில், நாட்டில் இதுகாறும் இருந்து வந்த சமூக நீதி சரிந்த விதம். அது காப்பாற்றப்பட வேண்டிய அவசியங்கள் ஆகியவை குறித்து அறிஞர் சி. என். அண்ணாதுரை, எம். ஏ., அவர்கள் விளக்கிக் கூறியுள்ளார்கள்.

பழங் கதை ?—சமூக நீதி ஏற்படுவதற்கு முன் நாட்டில் நீதி இருந்த நிலைமை. அதனால் பார்ப்பனரல்லாதார் அடைந்த இன்னல்கள். அரசியல், கல்வி ஆகிய துறைகளில் ஆரியம் ஆட்சி செலுத்திய தன்மை, சமூக நீதி பிறந்த வரலாறு. அதன் பயனாக நாடு அடைந்த நற்பயன், உல மாற்றம், ஆகியவைகளை இனிய எளிய, தமக்கே உரித்தான உணர்ச்சி மிக்க நடையில், தோழர் காஞ்சி கல்யாணசுந்தரன் அவர் தன் விளக்கியுள்ளார்கள்.

'வந்தது விபத்து !' என்ற கட்டுரையை வெளியிட அனுமதி தந்த அறிஞர் அண்ணாதுரை அவர்கட்கு எமது நன்றி.

தங்களுக்குச் சரி எனப்பட்ட கருத்தின்படி கோட்பாடுகளில் மாற்றங் கொண்டிருந்த போதிலும் தமிழர்க்கு திராவிடர்க்கு இடுக்கண் நேர்ந்த காலத்துத் துளியும் சுணக்கங்காட்டாமல் ஏற்பட்ட இன்னல்களைக் களைய முன்வந்த தோழர்கள் 'தினசரி' ஆசிரியர் டி. எஸ். சொக்கலிங்கம், 'காண்டீபம்' ஆசிரியர் எஸ். எஸ். மாரிசாமி ஆகியோர்க்கும் தமிழகம் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறது.

பதிப்பகத்தார்.