மதுரைக்காஞ்சி/பிற்பகுதி

மதுரைக்காஞ்சி தொகு

வரிகள்:407 முதல் பாட்டு முடிய

{வரிகள்:01 முதல் 406 முடிய உள்ள பகுதிக்கு) பார்க்க: மதுரைக்காஞ்சி}

நூல் தொகு

விருங்கடல் வான்கோடு புரைய வாருற்றுப் // 407 // இரும் கடல் வான் கோடு புரைய வார் உற்று
பெரும்பின் னிட்ட வானரைக் கூந்தலர் // 408 // பெரும் பின்னிட்ட வால் நநரை கூந்தலர்
நன்னர் நலத்தர் தொன்முது பெண்டிர் // 409 // நன்னர் நலத்தர் தொல் முது பெண்டிர்
செந்நீர்ப் பசும்பொன் புனைந்த பாவை // 410 // செந்நீர் பசும் பொன் புனைந்த பாவை
செல்சுடர்ப் பசுவெயிற் றோன்றி யன்ன // 411 // செல் சுடர் பசு வெயில் தோன்றி அன்ன
செய்யர் செயிர்த்த நோக்கினர் மடக்க // 412 // செய்யர் செயிர்த்து நோக்கினர் மட கண்
ணைஇய கலுழு மாமையர் வையெயிற்று // 413 // ஐஇய? கலுழும் மாமையர் வை எயிற்று
வார்ந்த வாயர் வணங்கிறைப் பணைத்தோட் // 414 // வார்ந்த வாயர் வணங்கு இறை பணை தோள்
சோர்ந்துகு வன்ன வயக்குறு வந்திகைத் // 415 // சோர்ந்து உகு அன்ன வயக்கு உறு வந்திகை
தொய்யில் பொறித்த சுணங்கெதி ரிளமுலை // 416 // தொய்யில் பொறித்த சுணங்கு எதிர் இளமுலை
மையுக் கன்ன மொய்யிருங் கூந்தன் // 417 // மை உக்கு அன்ன மொய் இரும் கூந்தல்
மயிலிய லோரு மடமொழி யோருங் // 418 // மயில் இயலோரும் மட மொழியோரும்
கைஇ மெல்லிதி னொதுங்கிக் கையெறிந்து // 419 // கைஇ மெல்லிதின் ஒதுங்கி கை எறிந்து
கல்லா மாந்தரொடு நகுவனர் திளைப்பப் // 420 //கல்லா மாந்தரொடு நகுவனர் திளைப்ப
புடையமை பொலிந்த வகையமை செப்பிற் // 421 // புடை அமை பொலிந்த வகை அமை செப்பில்
காம ருருவிற் றாம்வேண்டு பண்ணியங் // 422 // காமர் உருவில் தாம் வேண்டு பண்ணியம்
கமழ்நறும் பூவொடு மனைமனை மறுக // 423 // கமழ் நறும் பூவொடு மனை மனை மறுக
மழைகொளக் குறையாது புனல்புக மிகாது // 424 // மழை கொள குறையாது புனல் புக மிகாது
கரைபொரு திரங்கு முந்நீர் போலக் // 425 // கரை பொருது இரங்கும் முந்நீர் போல
கொளக்கொளக் குறையாது தரத்தர மிகாது // 426 // கொள கொள குறையாது தர தர மிகாது
கழுநீர் கொண்ட வெழுநா ளந்தி // 427 // கழு நீர் கொண்ட எழுநாள் அந்தி
யாடுதுவன்று விழவி னாடார்த் தன்றே // 428 // ஆடு துவன்று விழவின் ஆடு ஆர்த்து அன்றே
மாடம் பிறங்கிய மலிபுகழ்க் கூட // 429 // மாடம் பிறங்கிய மலி புகழ் கூடல்
னாளங் காடி நனந்தலைக் கம்பலை // 430 // நாள் அங்காடி நனம் தலை கம்பலை

தொகு

வெயிற்கதிர் மழுங்கிய படர்கூர் ஞாயிற்றுச் // 431 // வெயில் கதிர் மழுங்கிய படர்கூர் ஞாயிறு
செக்க ரன்ன சிவந்துநுணங் குருவிற் // 432 // செக்கர் அன்ன சிவந்து நுணங்கு உருவின்
கண்பொரு புகூஉ மொண்பூங் கலிங்கம் // 433 // கண் பொரு புகூஉம் ஒள் பூ கலிங்கம்
பொன்புனை வாளொடு பொலியக் கட்டித் // 434 // பொன் புனை வாளொடு பொலிய கட்டி
திண்டேர்ப் பிரம்பிற் புரளுந் தானைக் // 435 // திண்தேர் பிரம்பில் புரளும் தானை
கச்சந் தின்ற கழறயங்கு திருந்தடி // 436 // கச்சம் தின்ற கழல் தயங்கு திருந்துஅடி
மொய்ம்பிறந்து திரிதரு மொருபெருந் தெரியன் // 437 // மொய்ம்பு இறந்து திரிதரும் ஒரு பெரு தெரியல்
மணிதொடர்ந் தன்ன வொண்பூங் கோதை // 438 // மணி தொடர்ந்து அன்ன ஒள் பூ கோதை
யணிகிளர் மார்பி னாரமொ டளைஇக் // 439 // அணி கிளர் மார்பின் ஆரமொடு அளைஇ
காலியக் கன்ன கதழ்பரி கடைஇக் // 440 // கால் இயக்கு அன்ன கதழ் பரி கடைஇ
காலோர் காப்பக் காலெனக் கழியும் // 441 // காலோர் காப்ப கால் என் கழியும்
வான வண்கை வலங்கெழு செல்வர் // 442 // வான வண் கை வலம் கெழு செல்வர்
நாண்மகி ழிருக்கை காண்மார் பூணொடு // 443 // நாள் மகிழ் இருக்கை காண்மார் பூணொடு
தெள்ளரிப் பொற்சிலம் பொலிப்ப வொள்ளழற் // 444 // தெள் அரி பொன் சிலம்பு ஒலிப்ப ஒள்அழல்
றாவற விளங்கிய வாய்பொ னவிரிழை // 445 // தாவற விளங்கிய வாய் பொன் அவிர் இழை
யணங்குவீழ் வன்ன பூந்தொடி மகளிர் // 446 // அணங்கு வீழ்வு அன்ன பூ தொடி மகளிர்
மணங்கமழ் நாற்றந் தெருவுடன் கமழ // 447 // மணம் கமழ் நாற்றம் தெருவுடன் கமழ
வொண்குழை திகழு மொளிகெழு திருமுகந் // 448 // ஒள் குழை திகழும் ஒளி கெழு திருமுகம்
திண்கா ழேற்ற வியலிரு விலோதந் // 449 // திண் காழ் ஏற்ற வியல் இரு விலோதம்
தெண்கடற் றிரையி னசைவளி புடைப்ப // 450 // தெள் கடல் திரையின் அசைவளி புடைப்ப
நிரைநிலை மாடத் தரமியந் தோறு // 451 // நிரை நிலை மாடத்து அரமியம் தோறும்
மழைமாய் மதியிற் றோன்றுபு மறைய // 452 // மழை மாய் மதியின் தோன்றுபு மறைய
நீரு நிலனுந் தீயும் வளியு // 453 // நீரு நிலனும் தீயும் வளியும்
மாக விசும்போ டைந்துட னியற்றிய // 454 // மாக விசும்போடு ஐந்து உடன் இயற்றிய
மழுவா ணெடியோன் றலைவ னாக // 455 // மழு வாள் நெடியோன் தலைவன் ஆக
மாசற விளங்கிய யாக்கையர் சூழ்சுடர் // 456 // மாசு அற விளங்கிய யாக்கையர் சூழ்சுடர்
வாடாப் பூவி னிமையா நாட்டத்து // 457 // வாடா பூவின் இமையா நாட்டத்து
நாற்ற வுணவி னுருகெழு பெரியோர்க்கு // 458 // நாற்ற உணவின் உரு கெழு பெரியோர்க்கு
மாற்றரு மரபி னுயர்பலி கொடுமா // 459 // மாற்று அரு மரபின் உயர் பலி கொடுமார்
ரந்தி விழவிற் றூரியங் கறங்கத் // 460 // அந்தி விழவில் தூரியம் கறங்க

தொகு

திண்கதிர் மதாணி யொண்குறு மாக்களை // 461 // திண் கதிர் மதாணி ஒள் குறு மாக்களை
யோம்பினர்த் தழீஇத் தாம்புணர்ந்து முயங்கித் // 462 // ஓம்பினர் தழீஇ தாம் புணர்ந்து முயங்கி
தாதணி தாமரைப் போதுபிடித் தாங்குத் // 463 // தாது அணி தாமரை போது பிடித்தாங்கு
தாமு மவரு மோராங்கு விளங்கக் // 464 //தாமும் அவரும் ஓராங்கு விளங்க
காமர் கவினிய பேரிளம் பெண்டிர் // 465 // காமர் கவினிய பேர் இளம் பெண்டிர்
பூவினர் புகையினர் தொழுவனர் பழிச்சிச் // 466 // பூவினர் புகையினர் தொழுவனர் பழிச்சி
சிறந்து புறங் காக்குங் கடவுட்பள்ளியுஞ் // 467 // சிறந்து புறம் காக்கும் கடவுள் பள்ளியும்
சிறந்த வேதம் விளங்கப் பாடி // 468 // சிறந்த வேதம் விளங்க பாடி
விழுச்சீ ரெய்திய வொழுக்கமொடு புணர்ந்து // 469 // விழுசீர் எய்திய ஒழுக்கமொடு புணர்ந்து
நிலமமர் வையத் தொருதா மாகி //470 // நிலம் அமர் வையத்து ஒரு தாம் ஆகி
யுயர்நிலை யுலக மிவணின் றெய்து // 471 // உயர் நிலை உலகம் இவண் ?நின்று எய்தும்
மறநெறி பிழையா வன்புடை நெஞ்சிற் // 472 // அற நெறி பிழையா அன்பு உடை நெஞ்சின்
பெரியோர் மேஎ யினிதி னுறையுங் // 473 // பெரியோர் மேஎய் இனிதின் உறையும்
குன்றுகுயின் றன்ன வந்தணர் பள்ளியும் // 474 // குன்று குயி்ன்று அன்ன அந்தணர் பள்ளியும்
வண்டுபடப் பழுநிய தேனார் தோற்றத்துப் // 475 // வண்டு பட பழுநிய தேன் ஆர் தோற்றத்து
பூவும் புகையுஞ் சாவகர் பழிச்சச் // 476 // பூவும் புகையும் சாவகர் பழிச்ச
சென்ற காலமும் வரூஉ மமயமு // 477 // சென்ற காலமும் வரூஉம் அமயமும்
மின்றிவட் டோன்றிய வொழுக்கமொடு நன்குணர்ந்து // 478 // இன்று இவண் தோன்றிய ஒழுக்கமொடு நன்கு உணர்ந்து
வானமு நிலனுந் தாமுழு துணருஞ் // 479 // வானமும் நிலனும் தாம் முழுது உணரும்
சான்ற கொள்கைச் சாயா யாக்கை // 480 // சான்ற கொள்கை சாயா யாக்கை
யான்றடங் கறிஞர் செறிந்தனர் நோன்மார் // 481 // ஆன்று அடங்கு அறிஞர் செறிந்தனர் நோன்மார்
கல்பொளிந் தன்ன விட்டுவாய்க் கரண்டைப் // 482 // கல் பொளிந்து அன்ன விட்டு வாய் கரண்டை
பல்புரிச் சிமிலி நாற்றி நல்குவரக் // 483 // பல் புரி சிமிலி நாற்றி நல்குவர
கயங்கண் டன்ன வயங்குடை நகரத்துச் // 484 // கயம் கண்டு அன்ன வயங்கு உடை நகரத்து
செம்பியன் றன்ன செஞ்சுவர் புனைந்து // 485 // செம்பு இயன்று அன்ன செ சுவர் புனைந்து
நோக்குவிசை தவிர்ப்ப மேக்குயர்ந் தோங்கி // 486 //நோக்குவிசை தவிர்ப்ப மேக்கு உயர்ந்து ஓங்கி
யிறும்பூது சான்ற நறும்பூஞ் சேக்கையுங் // 487 // இறும்பூது சான்ற நறு பூ சேக்கையும்
குன்றுபல குழீஇப் பொலிவன தோன்ற // 488 // குன்று பல குழீஇ பொலிவன தோன்ற
வச்சமு மவலுமு மார்வமு நீக்கிச் // 489 // அச்சமும் அவலமும் ஆர்வமும் நீக்கி
செற்றமு முவகையுஞ் செய்யாது காத்து // 490 // செற்றமும் உவகையும் செய்யாது காத்து
ஞெமன்கோ லன்ன செம்மைத் தாகிச் // 491 //ஞெமன் கோல் அன்ன செம்மைத்து ஆகி
சிறந்த கொள்கை யறங்கூ றவையமு // 492 //சிறந்த கொள்கை அறம் கூறு அவையமும்
நறுஞ்சாந்து நீவிய கேழ்கிள ரகலத் // 493 // நறும் சாந்து நீவிய கேழ் கிளர் அகலத்து
தாவுதி மண்ணி யவிர்துகின் முடித்து // 494 // ஆவுதி மண்ணி அவிர் துகில் முடித்து
மாவிசும்பு வழங்கும் பெரியோர் போல // 495 // மா விசும்பு வழங்கும் பெரியோர் போல

தொகு

நன்றுந் தீதுங் கண்டாய்ந் தடக்கி // 496 // நன்றும் தீதும் கண்டு ஆய்ந்து அடக்கி
யன்பு மறனு மொழியாது காத்துப் // 497 // அன்பும் அறனும் ஒழியாது காத்து
பழியோரீஇ யுயர்ந்து பாய்புகழ் நிறைந்த // 498 // பழி ஒரீஇ உயர்ந்து பாய் புகழ் நிறைந்த
செம்மை சான்ற காவிதி மாக்களு // 499 // செம்மை சான்ற காவிதி மாக்களும்
மறநெறி பிழையா தாற்றி னொழுகிக் // 500 // அறநெறி பிழையாது ஆற்றின் ஒழுகி
குறும்பல் குழுவிற் குன்றுகண் டன்ன // 501 // குறு பல் குழுவின் குன்று கண்டன்ன
பருந்திருந் துகக்கும் பன்மா ணல்லிற் // 502 // பருந்து இருந்து உகக்கும் பல் மாண் நல் இல்
பலவேறு பண்டமோ டூண்மலிந்து கவினி // 503 // பல வேறு பண்டமோடு ஊண் மலிந்து கவினி
மலையவு நிலத்தவு நீரவும் பிறவும் // 504 // மலையவும் நிலத்தவும் நீரவும் பிறவும்
பல்வேறு திருமணி முத்தமொடு பொன்கொண்டு // 505 // பல்வேறு திரு மணி முத்தமொடு பொன் கொண்டு
சிறந்த தேஎத்துப் பண்ணியம் பகர்நரு // 506 // சிறந்த தேஎத்து பண்ணியம் பகர்நரும்
மழையொழுக் கறாஅப் பிழையா விளையுட் // 507 // மழை ஒழுக்கு அறா பிழையா விளையுள்
பழையன் மோகூ ரவையகம் விளங்க // 508 // பழையன் மோகூர் அவையகம் விளங்க
நான்மொழிக் கோசர் தோன்றி யன்ன // 509 // நால் மொழி கோசர் தோன்றி அன்ன
தாமேஎந் தோன்றிய நாற்பெருங் குழுவுங் // 510 // தாம் மேஎ தோன்றிய நால் பெரு குழுவும்
கோடுபோழ் கடைநருந் திருமணி குயினருஞ் // 511 // கோடு போழ் கடைநரும் திரு மணி குயினரும்
சூடுறு நன்பொன் சுடரிழை புனைநரும் // 512 // சூடு உறு நல் பொன் சுடர் இழை புனைநரும்
பொன்னுரை காண்மருங் கலிங்கம் பகர்நருஞ் // 513 // பொன்உரை காண்மரும் கலிங்கம் பகர்நரும்
செம்புநிறை கொண்மரும் வம்புநிறை முடிநரும் // 514 //செம்பு நிறை கொண்மரும் வம்பு நிரை முடிநரும்
பூவும் புகையு மாயு மாக்களு // 515 // பூவும் புகையும் ஆயும்? மாக்களும்
மெவ்வகைச் செய்தியு முவமங் காட்டி // 516 // எவ்வகை செய்தியும் உவமம் காட்டி
நுண்ணிதி னுணர்ந்த நுழைந்த நோக்கிற் // 517 // நுண்ணிதின் உணர்ந்த நுழைந்த நோக்கின்
கண்ணுள் வினைஞரும் பிறருங் கூடித் // 518 // கண்ணுள் வினைஞரும் பிறரும் கூடி
தெண்டிரை யவிரறல் கடுப்ப வொண்பல் // 519 // தெள் திரை அவிர் அறல் கடுப்ப ஒள் பல்
குறியவு நெடியவு மடிதரூஉ விரித்துச் // 525 // குறியவும் நெடியவும் மடி தரூஉ விரித்து
சிறியரும் பெரியருங் கம்மியர் குழீஇ // 526 //சிறியரும் பெரியரும் கம்மியர் குழீஇ
நால்வேறு தெருவினுங் காலுற நிற்றரக் // 527 // நால் வேறு தெருவினும் கால் உற நின் தர
கொடும்பறைக் கோடியர் கடும்புடன் வாழ்த்துந் // 528 // கொடும் பறை கோடியர் கடும்பு உடன் வாழ்த்தும்
தண்கட னாட னொண்பூங் கோதை // 529 // தண் கடல் நாடன் ஒள் பூ கோதை
பெருநா ளிருக்கை விழுமியோர் குழீஇ // 525 // பெரு நாள் இருக்கை விழுமியோர் குழீஇ
விழைவுகொள் கம்பலை கடுப்பப் பலவுடன் // 526 // விழைவு கொள் கம்பலை கடுப்ப பலவுடன்
சேறு நாற்றமும் பலவின் சுளையும் // 527 // சேறு நாற்றமும் பலவின் சுளையும்
வேறுபடக் கவினிய தேமாங் கனியும் // 528 // வேறு பட கவினிய தே மா கனியும்
பல்வே றுருவிற் காயும் பழனுங் // 529 //பல் வேறு உருவின் காயும் பழனும்
கொண்டல் வளர்ப்பக் கொடிவிடுபு கவினி // 530 // கொண்டல் வளர்ப்ப கொடி விடுப கவினி
மென்பிணி யவிழ்ந்த குறுமுறி யடகு // 531 // மென் பிணி அவிழ்ந்த குறு முறி அடகு
மமிர்தியன் றன்ன தீஞ்சேற்றுக் கடிகையும் // 532 //அமிர்து இயன்றன்ன தீ சேறு கடிகையும்
புகழ்படப் பண்ணிய பேரூன் சோறுங் // 533 // புகழ்படபண்ணிய பேர் ஊன் சோறும்
கீழ்செல வீழ்ந்த கிழங்கொடு பிறவு // 534 // கீழ் செலவீழ்ந்த கிழங்கொடு பிறவும்
மின்சோறு தருநர் பல்வயி னுகர // 535 // இன் சோறு தருநர் பல் வயின் நுகர

தொகு

வாலிதை யெடுத்த வளிதரு வங்கம் // 536 // வாலிதை எடுத்த வளிதரு வங்கம்
பல்வேறு பண்ட மிழிதரும் பட்டினத் // 537 // பல் வேறு பண்டம் இழிதரு பட்டினத்து
தொல்லெ னிமிழிசை மானக் கல்லென // 538 // ஒல் என் இமிழ் இசை மான கல் என
நனந்தலை வினைஞர் கலங்கொண்டு மறுகப் // 539 // நன தலை வினைஞர் கலம் கொண்டு மறுக
பெருங்கடற் குட்டத்துப் புலவுத்திரை யோத // 540 // பெரும் கடல் குட்டத்து புலவு திரை ஓதம்
மிருங்கழி மருவிப் பாயப் பெரிதெழுந் // 541 // இருகழி மருவி பாய பெரிது எழுந்து
துருகெழு பானாள் வருவன பெயர்தலிற் // 542 // உருகெழு பால் நாள் வருவன பெயர்தலின்
பல்வேறு புள்ளி னிசையெழுந் தற்றே // 543 // பல் வேறு புள்ளின் இசை எழுந்தற்றே
யல்லங் காடி யழிதரு கம்பலை // 544 // அல் அங்காடி அழிதரு கம்பலை
யொண்சுட ருருப்பொளி மழுங்கச் சினந்தணிந்து // 545 // ஒள் சுடர் உருப்பு ஒளி மழுங்க சினம் தணிந்து
சென்ற ஞாயிறு நன்பகற் கொண்டு // 546 // சென்ற ஞாயிறு நன் பகல் கொண்டு
குடமுதற் குன்றஞ் சேரக் குணமுத // 547 // குட முதல் குன்றம் சேர குண முதல்
னாண்முதிர் மதியந் தோன்றி நிலாவிரிபு // 548 // நாள் முதிர் மதியம் தோன்றி நிலா விரிபு
பகலுரு வுற்ற விரவுவர நயந்தோர் // 549 // பகல் உரு உற்ற விரவு வர நயந்தோர்
காத லின்றுணை புணர்மா ராயிதழ்த் // 550 // காதல் இன் துணை புணர்மார் ஆயிதழ்
தண்ணறுங் கழுநீர் துணைப்ப விழைபுனையூஉ // 551 // தண்நறும் கழுநீர் துணைப்ப இழை புனையூஉ
நன்னெடுங் கூந்த னறுவிரை குடைய // 552 // நல் நெடும் கூந்தல் நறு விரை குடைய
நரந்த மரைப்ப நறுஞ்சாந்து மறுக // 553 // நரந்தம் அரைப்ப நறும் சாந்து மறுக
மென்னூற் கலிங்கங் கமழ்புகை மடுப்பப் // 554 //மென் நூல் கலிங்கம் கமழ் புகை மடுப்ப
பெண்மகிழ் வுற்ற பிணைநோக்கு மகளிர் // 555 // பெண் மகிழ்வு உற்ற பிணைநோக்கு மகளிர்
நெடுஞ்சுடர் விளக்கங் கொளீஇ நெடுநக // 556 // நெடும் சுடர் விளக்கம் கொளீஇ நெடு நகர்
ரெல்லை யல்லா நோயொடு புகுந்து // 557 // எல்லை அல்லா நோயொடு புகுந்து
கல்லென் மாலை நீங்க நாணுக்கொள // 558 //கல் என் மாலை நீங்க நாண் கொள
வேழ்புணர் சிறப்பி னின்றொடைச் சீறியாழ் // 559 // ஏழ் புணர் சிறப்பின் இன் தொடை சீறியாழ்
தாழ்பயற் கனைகுரல் கடுப்பப் பண்ணுப்பெயர்த்து // 560 // தாழ் பயல் கனை குரல் கடுப்ப பண்ணு பெயர்த்து
வீழ்துணை தழீஇ வியல்விசும்பு கமழ // 561 // வீழ்துணை தழீஇ வியல் விசும்பு கமழ
நீர்திரண் டன்ன கோதை பிறக்கிட் // 562 //நீர் திரண்டு அன்ன கோதை பிறக்கிட்டு
டாய்கோ லவிர்தொடி விளங்க வீசிப் // 563 //ஆய் கோல் அவிர் தொடி விளங்க வீசி
போதவிழ் புதுமலர் தெருவுடன் கமழ // 564 // போது அவிழ் புது மலர் தெருவுடன் கமழ
மேதகு தகைய மிகுநல மெய்திப் // 565 // மேதகு தகைய மிகு நலம் எய்தி

தொகு

பெரும்பல் குவளைச் சுரும்புபடு பன்மலர் // 565 // பெரு பல் குவளை சுரும்பு படு பன் மலர்
திறந்துமோந் தன்ன சிறந்துகமழ் நாற்றத்துக் // 566 //திறந்து மோந்தன்ன சிறந்து கமழ் நாற்றத்து
கொண்டன் மலர்ப்புதன் மானப்பூ வேய்ந்து // 567 // கொண்டல்மலர் புதல் மான பூ வேய்ந்து
நுண்பூ ணாகம் வடுக்கொள முயங்கி // 568 // நுண் பூண் ஆகம் வடு கொள முயங்கி
மாயப் பொய்பல கூட்டிக் கவவுக்கரந்து // 570 // மாய பொய்பல கூட்டி கவவு கரந்து
சேயரு நணியரு நலனயந்து வந்த // 571 // சேய் அரு நணி அரு நலன் நயந்து வந்த
விளம்பல் செல்வர் வளந்தப வாங்கி // 572 // இள பல் செல்வர் வளம் தப வாங்கி
நுண்டா துண்டு வறும்பூத் துறக்கு // 573 // நுண் தாது உண்டு வறு பூ துறக்கும்
மென்சிறை வண்டின மானப் புணர்ந்தோர் // 574 // மென் சிறை வண்டு இனம் மான புணர்ந்தோர்
நெஞ்சே மாப்ப வின்றுயி றுறந்து // 575 // நெஞ்சு ஏமாப்ப இன்துயில் துறந்து
பழந்தேர் வாழ்க்கைப் பறவை போலக் // 576 //பழம் தேர் வாழ்க்கை பறவை போல
கொழுங்குடிச் செல்வரும் பிறரு மேஎய // 577 // கொழும் கொடி செல்வரும் பிறரும் மேஎய
மணம்புணர்ந் தோங்கிய வணங்குடை நல்லி // 578 //மணம் புணர்ந்து ஓங்கிய அணங்கு உடைநல்இல்
லாய்பொன் னவிர்தொடிப் பாசிழை மகளி // 579 // ஆய் பொன் அவிர் தொடி பாசிழை மகளிர்
ரொண்சுடர் விளக்கத்துப் பலருடன் றுவன்றி // 580 // ஒள்சுடர் விளக்கத்து பலர் உடன் துவன்றி
நீனிற விசும்பி லமர்ந்தன ராடும் // 581 // நீல் நிற விசும்பில் அமர்ந்தனர் ஆடும்
வானவ மகளிர் மானக் கண்டோர் // 582 // வானவர் மகளிர் மான கண்டோர்
நெஞ்சுநடுக் குறூஉக் கொண்டி மகளிர் // 583 //நெஞ்சு நடுக்குறூஉ கொண்டி மகளிர்
யாம நல்யாழ் நாப்ப ணின்ற // 584 // யாம நல்யாழ் நாப்பண் நின்ற
முழவின் மகிழ்ந்தன ராடிக் குண்டுநீர்ப் // 585 // முழவின் மகிழ்ந்தனர் ஆடி குண்டு நீர்
பனித்துறைக் குவவுமணன் முனைஇ மென்றளிர்க் // 586 // பனி துறை குவவு மணல் முனைஇ மெல் ?தளிர்
கொழுங்கொம்பு கொழுதி நீர்நனை மேவர // 587 // கொழு கொம்பு கொழுதி நீர் நனை மேவர
நெடுந்தொடர்க் குவளை வடிம்புற வடைச்சி // 588 // நெடுதொடர் குவளை வடிம்பு உற அடைச்சி
மணங்கமழ் மனைதொறும் பொய்த லயரக் // 589 // மணம் கமழ் மனைதொறும் பொய்தல் அயர
கணங்கொ ளவுணர்க் கடந்த பொலந்தார் // 590 // கணம் கொள் அவுணர் கடந்த பொலம் தார்
மாயோன் மேய வோண நன்னாட் // 591 //மாயோன் மேய ஓண நல் நாள்
கோணந் தின்ற வடுவாழ் முகத்த // 592 // கோணம் தின்ற வடு வாழ் முகத்த
சாணந் தின்ற சமந்தாங்கு தடக்கை // 593 //சாணம் தின்ற சமம் தாங்கு தட கை
மறங்கொள் சேரி மாறுபொரு செருவின் // 594 //மறம் கொள் சேரி மாறு பொரு செருவின்
மாறா துற்ற வடுப்படு நெற்றிச் // 595 // மாறாது உற்ற வடு படு நெற்றி
சுரும்பார் கண்ணிப் பெரும்புகன் மறவர் // 596 //சுரும்பு ஆர் கண்ணி பெரும் புகல் மறவர்
கடுங்களி றோட்டலிற் காணுந ரிட்ட // 597 // கடு களிறு ஓட்டலின் காணுநர் இட்ட
நெடுங்கரைக் காழக நிலம்பர லுறுப்பக் // 598 // நெடு கரை காழகம் நிலம் பரல் உறுப்ப
கடுங்கட் டேறன் மகிழ்சிறந்து திரிதரக் // 599 // கடு கள் தேறல் மகிழ் சிறந்து திரிதர

தொகு

கணவ ருவப்பப் புதல்வர்ப் பயந்து // 600 // கணவர் உவப்ப புதல்வர் பயந்து
பணைத்தேந் திளமுலை யமுத மூறப் // 601 // பணைத்து ஏந்து இள முலை அமுதம் ஊற
புலவுப்புனிறு தீர்ந்து பொலிந்த சுற்றமொடு // 602 // புலவு புனிறுதீர்நது பொலிந்த சுற்றமொடு
வளமனை மகளிர் குளநீ ரயரத் // 603 // வள மனை மகளிர் குளம் நீர் அயர
திவவுமெய்ந் நிறுத்துச் செவ்வழி பண்ணிக் // 604 //திவவு மெய் நிறுத்து செவ்வழி பண்ணி
குரல்புணர் நல்யாழ் முழவோ டொன்றி // 605 // குரல் புணர் நல் யாழ் முழவோடு ஒன்றி
நுண்ணீ ராகுளி யிரட்டப் பலவுட // 606 // நுண் நீர் ஆகுளி இரட்ட பலவுடன்
னொண்சுடர் விளக்க முந்துற மடையொடு // 607 // ஒண் சுடர் விளக்கம் முந்து உற மடையொடு
நன்மா மயிலின் மென்மெல வியலிக் // 608 //நல் மா மயிலின் மென் மெல இயலி
கடுஞ்சூன் மகளிர் பேணிக் கைதொழுது // 609 // கடும் சூல் மகளிர் பேணி கை தொழுது
பெருந்தோட் சாலினி மடுப்ப வொருசா // 610 // பெரு தோள் சாலினி மடுப்ப ஒருசார்
ரருங்கடி வேலன் முருகொடு வளைஇ // 611 //அரும் கடி வேலன் முருகொடு வளைஇ
யரிக்கூ டின்னியங் கறங்கநேர் நிறுத்துக்// 612 // அரி கூடு இன்னியம் கறங்க நேர் நிறுத்து
கார்மலர்க் குறிஞ்சி சூடிக் கடம்பின் // 613 // கார் மலர் குறிஞ்சி சூடி கடம்பின்
சீர்மிகு நெடுவேட் பேணித் தழூஉப்பிணையூஉ // 614 // சீர் மிகு நெடுவேள் பேணி தழூஉ பிணையூஉ
மன்றுதொறு நின்ற குரவை சேரிதொறு // 615 // மன்றுதொறு நின்ற குரவை சேரிதொறும்
முரையும் பாட்டு மாட்டும் விரைஇ // 616 // உரையும் பாட்டும் மாட்டும் விரைஇ
வேறுவேறு கம்பலை வெறிகொள்பு மயங்கிப் // 617 // வேறு வேறு கம்பலை வெறி கொள்பு மயங்கி
பேரிசை நன்னன் பெறும்பெயர் நன்னாட் // 618 // பேர் இசை நன்னன் பெறும் பெயர் நல் நாள்
சேரி விழவி னார்ப்பெழுந் தாங்கு // 619 // சேரி விழவின் ஆர்ப்பு எழுந்து ஆங்கு
முந்தை யாமஞ் சென்ற பின்றைப் // 620 // முந்தை யாமம் சென்ற பின்றை
பணிலங் கலியவிந் தடங்கக் காழ்சாய்த்து // 621 // பணிலம் கலி அவிந்து அடங்க காழ் சாய்த்து
நொடைநவி னெடுங்கடை யடைத்து மடமத // 622 // நொடை நவில் நெடும் கடை அடைத்து மட மதர்?
ரொள்ளிழை மகளிர் பள்ளி யயர // 623 // ஒள் இழை மகளிர் பள்ளி அயர
நல்வரி யிறாஅல் புரையு மெல்லடை // 624 // நல் வரி இறாஅல் புரையும் மெல் அடை
யயிருருப் புற்ற வாடமை விசயங் // 625 // அயிர் உருப்பு உற்ற ஆடு அமை விசயம்
கவவொடு பிடித்த வகையமை மோதகந் // 626 // கவவொடு பிடித்த வகை அமை மோதகம்
தீஞ்சேற்றுக் கூவியர் தூங்குவன ருறங்க // 627 // தீ சேறு கூவியர் தூங்குவனர் உறங்க
விழவி னாடும் வயிரியர் மடியப் // 628 // விழவின் ஆடும் வயிரியர் மடிய
பாடான் றவிந்த பனிக்கடல் புரையப் // 629 // பாடு ஆன்று அவிந்த பனி கடல் புரைய
பாயல் வளர்வோர் கண்ணினிது மடுப்பப் // 630 // பாயல் வளர்வோர் கண் இனிது மடுப்ப
பானாட் கொண்ட கங்கு லிடையது // 631 // பால் நாள் கொண்ட கங்குல் இடையது
பேயு மணங்கு மிருவுகொண் டாய்கோற் // 632 // பேயும் அணங்கும் இருவு?கொண்டு ஆய் கோல்
கூற்றக் கொஃறேர் கழுதொடு கொட்ப // 633 // கூற்றம் கொல் தேர் கழுதொடு கொட்ப
விரும்பிடி மேஎந்தோ லன்ன விருள்சேர்பு // 634 // இரும்பிடி மேஎ தோல் அன்ன இருள் சேர்பு
கல்லும் மரனுந் துணிக்குங் கூர்மைத் // 635 // கல்லும் மரனும் துணிக்கும் கூர்மை
தொடலை வாளர் தொடுதோ லடியர் // 636 // தொடலை வாளர் தொடு தோல் அடியர்
குறங்கிடைப் பதித்த கூர்நுனைக் குறும்பிடிச் // 637 // குறங்கு இடை பதித்த கூர் நுனை குறும் பிடி
சிறந்த கருமை நுண்வினை நுணங்கற // 638 // சிறந்த கருமை நுண் வினை நுணங்கறல்
னிறங்கவர்பு புனைந்த நீலக் கச்சினர் // 639 // நிறம் கவர்பு புனைந்த நீலம் கச்சினர்
மென்னூ லேணிப் பன்மாண் சுற்றினர் // 640 // மென் நூல் ஏணி பல் மாண் சுற்றினர்
நிலனக ழுளியர் கலனசைஇக் கொட்குங் // 641 // நிலன் அகழ் உளியர் கலன் நசைஇ கொட்கும்
கண்மா றாடவ ரொடு்க்க மொற்றி // 642 // கண் மாறு ஆடவர் ஒடுக்கம் ஒற்றி
வயக்களிறு பார்க்கும் வயப்புலி போலத் // 643 //வய களிறு பார்க்கும் வய புலி போல
துஞ்சாக் கண்ண ரஞ்சாக் கொள்கைய // 644 // துஞ்சா கண்ணர் அஞ்சா கொள்கையர்
ரறிந்தோர் புகழ்ந்த வாண்மையர் செறிந்த // 645 // அறிந்தோர் புகழ்ந்த ஆண்மையர் செறிந்த
நூல்வழிப் பிழையா நுணங்குநுண் டேர்ச்சி // 646 // நூல் வழி பிழையா நுணங்கு நுண் தேர்ச்சி
யூர்காப் பாள ரூக்கருங் கணையினர் // 647 // ஊர் காப்பாளர் ஊக்கரும் கணையினர்

தொகு

தேர்வழங்கு தெருவி னீர்திரண் டொழுக // 648 // தேர் வழங்கு தெருவின் நீர் திரண்டு ஒழுக
மழையமைந் துற்ற வரைநா ளமயமு // 649 // மழை அமைந்து உற்ற வரை நாள் அமயமும்
மசைவில ரெழுந்து நயம்வந்து வழங்கலிற் // 650 // அசைவிலர் எழுந்து நயம் வந்து வழங்கலின்
கடவுள் வழங்குங் கையறு கங்குலு // 651 // கடவுள் வழங்கும் கையறு கங்குலும்
மச்ச மறியா தேம மாகிய // 652 // அச்சம் அறியாது ஏமம் ஆகிய
மற்றை யாமம் பகலுறக் கழிப்பிப் // 653 // மற்றை யாமம் பகல் உற கழிப்பி
போதுபிணி விட்ட கமழ்நறும் பொய்கைத் // 654 // போது பிணி விட்ட கமழ் நறும் பொய்கை
தாதுண் டும்பி போது முரன்றாங் // 655 // தாது உண் தும்பி போது முரன்று ஆங்கு
கோத லந்தணர் வேதம் பாடச் // 656 // ஓதல் அந்தணர் வேதம் பாட
சீரினிது கொண்டு நரம்பினி தியக்கி // 657 // சீர் இனிது கொண்டு நரம்பு இனிது இயக்கி
யாழோர் மருதம் பண்ணக் காழோர் // 658 // யாழோர் மருதம் பண்ண காழோர்
கடுங்களிறு கவளங் கைப்ப நெடுந்தேர்ப் // 659 // கடும் களிறு கவளம் கைப்ப நெடும் தேர்
பணைநிலைப் புரவி புல்லுணாத் தெவிட்டப் // 660 // பணை நிலை புரவி புல் உணா தெவிட்ட
பல்வேறு பண்ணியக் கடைமெழுக் குறுப்பக் // 661 // பல்வேறு பண்ணியம் கடை மெழுகு உறுப்ப
கள்ளோர் களிநொடை நுவல வில்லோர் // 662 // கள்ளோர் களி நொடை நுவல இல்லோர்
நயந்த காதலர் கவவுப்பிணித் துஞ்சிப் // 663 // நயந்த காதலர் கவவு பிணி துஞ்சி
புலர்நதுவிரி விடிய லெய்த விரும்பிக் // 664 // புலர்ந்து விரி விடியல் எய்த விரும்பி
கண்பொரா வெறிக்கு மின்னுக்கொடி புரைய // 665 // கண் பொரா எறிக்கும் மின்னு கொடி புரைய
வொண்பொ னவிரிழை தெழிப்ப வியலித் // 666 // ஒள் பொன் அவிர் இழை தெழிப்ப இயலி
திண்சுவர் நல்லிற் கதவங் கரைய // 667 // திண் சுவர் நல் இல் கதவம் கரைய
வுண்டுமகிழ் தட்ட மழலை நாவிற் // 668 // உண்டு மகிழ் தட்ட மழலை நாவின்
பழஞ்செருக் காளர் தழங்குகுர றோன்றச் // 669 // பழம் செருக்காளர் தழங்கு குரல் தோன்ற
சூதர் வாழ்த்த மாகதர் நுவல // 670 // சூதர் வாழ்த்த மாகதர் நுவல
வேதா ளிகரொடு நாழிகை யிசைப்ப // 671 // வேதாளிகரொடு நாழிகை இசைப்ப
விமிழ்முர சிரங்க வேறுமாறு சிலைப்பப் // 672 // இமிழ் முரசு இரங்க ஏறு? மாறு சிலைப்ப
பொறிமயிர் வாரணம் வைகறை யியம்ப // 673 // பொறிமயிர் வாரணம் வைகறை இயம்ப
யானையங் குருகின் சேவலொடு காம // 674 // யானையம் குருகின் சேவலொடு காமர்
ரன்னங் கரைய வணிமயி லகவப் // 675 // அன்னம் கரைய அணி மயில் அகவ

தொகு

பிடிபுணர் பெருங்களிறு முழங்க முழுவலிக் // 676 // பிடி புணர் பெரு களிறு முழங்க முழுவலி
கூட்டுறை வயமாப் புலியொடு குழும // 677 // கூடு உறை வய மா புலியொடு குழும
வான நீங்கிய நீனிற விசும்பின் // 678 // வான நீங்கிய நீல் நிற விசும்பின்
மின்னுநிமிர்ந் தனைய ராகி நறவுமகிழ்ந்து // 679 // மின்னு நிமிர்ந்து அனையர் ஆகி நறவு மகிழ்ந்து
மாணிழை மகளிர் புலந்தனர் பரிந்த // 680 // மாண் இழை மகளிர் புலந்தனர் பரிந்த
பரூஉக்கா ழாரஞ் சொரிந்த முத்தமொடு //681 // பரூஉ காழ் ஆரம் சொரிந்த முத்தமொடு
பொன்சுடு நெருப்பி னிலமுக் கென்ன // 682 // பொன் சுடு நெருப்பில் நிலம் உக்கு என்ன?
வம்மென் குரும்பைக் காய்படுபு பிறவுந் // 683 // வம்மென்? குரும்பை காய்படுபு பிறவும்
தருமணன் முற்றத் தரிஞிமி றார்ப்ப // 684 // தரு மணல் முற்றத்து அரி ஞிமிறு ஆர்ப்ப
மென்பூஞ் செம்மலொடு நன்கலஞ் சீப்ப // 685 // மென் பூ செம்மலொடு நன் கலம் சீப்ப
விரவுத்தலைப் பெயரு மேம வைகறை // 686 // விரவு தலைப்பெயரும் ஏம வைகறை
மைபடு பெருந்தோண் மழவ ரோட்டி // 687 // மை படு பெரும் தோள் மழவர் ஓட்டி
யிடைப்புலத் தொழிந்த வேந்துகோட் டியானை // 688 // இடை புலத்து ஒழிந்த ஏந்து கோட்டு யானை
பகைப்புலங் கவர்ந்த பாய்பரிப் புரவி // 689 // பகை புலம் கவர்ந்த பாய் பரி புரவி
வேல்கோ லாக வாள்செல நூறிக் // 690 // வேல் கோல் ஆக வாள் செல நூறி
காய்சின முன்பிற் கடுங்கட் கூளிய // 691 // காய்சின முன்பின் கடும் கண் கூளியர்
ரூர்சுடு விளக்கிற் றந்த வாயமு // 692 // ஊர் சுடு விளக்கின் தந்த ஆயமும்
நாடுடை நல்லெயி லணங்குடைத் தோட்டி // 693 // நாடு உடை நல் எயில் அணங்கு உடை தோட்டி
நாடொறும் விளங்கக் கைதொழூஉப் பழிச்சி //694 // நாள்தொறும் விளங்க கைதொழூஉ பழிச்சி
நாடர வந்த விழுக்கல மனைத்துங் // 695 // நாள் தர வந்த விழு கலம் அனைத்தும்

தொகு

கங்கையம் பேரியாறு கடற்படர்ந் தாஅங் // 696 // கங்கைஅம்பேரியாறு கடல் படர்ந்துஆங்கு
களந்துகடை யறியா வளங்கெழு தாரமொடு // 697 // அளந்து கடை அறியா வளம் கெழு தாரமொடு
புத்தே ளுலகங் கவினிக் காண்வர // 698 // புத்தேள் உலகம் கவினி காண் வர
மிக்குப்புக ழெய்திய பெரும்பெயர் மதுரைச் // 699 // மிக்கு புகழ் எய்திய பெரும் பெயர் மதுரை
சினைதலை மணந்த சுரும்புபடு செந்தீ // 700 // சினை தலை மணந்த சுரும்பு படு செ தீ
யொண்பூம் பிண்டி யவிழ்ந்த காவிற் // 701 // ஒள் பூ பிண்டி அவிழ்ந்த காவின்
சுடர்பொழிந் தேறிய விளங்குகதிர் ஞாயிற் //702 // சுடர் பொழிந்து ஏறிய விளங்கு கதிர் ஞாயிறு
றிலங்குகதி ரிளவெயிற் றோன்றி யன்ன // 703 / இலங்கு கதிர் இளவெயில் தோன்றி அன்ன
தமனியம் வளைஇய தாவில் விளங்கிழை // 704 // தமனியம் வளைஇய தா இல் விளங்கு இழை
நிலம்விளக் குறுப்ப மேதகப் பொலிந்து // 705 // நிலம் விளக்கு உறுப்ப மேதக பொலிந்து
மயிலோ ரன்ன சாயன் மாவின் // 706 // மயிலோர் அன்ன சாயல் மாவின்
தளிரே ரன்ன மேனித் தளிர்ப்புறத் // 707 // தளிர் ஏர்அன்ன மேனி தளிர் புறத்து
தீர்க்கி னரும்பிய திதலையர் கூரெயிற் // 708 // ஈர்க்கின் அரும்பிய திதலையர் கூர் எயிறு
றொண்குழை புணரிய வண்டாழ் காதிற் // 709 // ஒண்குழை புணரிய வள் தாழ் காதின்
கடவுட்கயத் தமன்ற சுடரிதழ்த் தாமரைத் // 710 //கடவுள் கயத்து அமன்ற சுடர் இதழ் தாமரை
தாதுபடு பெரும்போது புரையும் வாண்முகத் // 711 // தாது படு பெரும் போது புரையும் வாள் முகத்து
தாய்தொடி மகளிர் நறுந்தோள் புணர்ந்து // 712 // ஆய் தொடி மகளிர் நறு தோள் புணர்ந்து
கோதையிற் பொலிந்த சேக்கைத் துஞ்சித் // 713 // கோதையின் பொலிந்த சேக்கை துஞ்சி
திருந்துதுயி லெடுப்ப வினிதி னெழுந்து // 714 // திருந்து துயில் எடுப்ப இனிதின் எழுந்து
திண்கா ழார நீவிக் கதிர்விடு // 715 // திண் காழ் ஆரம் நீவி கதிர் விடும்
மொண்கா ழாரங் கவைஇய மார்பின் // 716 // ஒள் காழ் ஆரம் கவைஇய மார்பின்
வரிக்கடைப் பிரச மூசுவன மொய்ப்ப // 717 // வரி கடை பிரசம் மூசுவன மொய்ப்ப
வெருத்தந் தாழ்ந்த விரவுப்பூந் தெரியற் // 718 // எருத்தம் தாழ்ந்த விரவு பூ தெரியல்
பொலஞ்செயப் பொலிந்த நலம்பெறு விளக்கம் // 719 // பொலம் செய் பொலிந்த நலம் பெறு விளக்கம்
வலிகெழு தடக்கைத் தொடியொடு சுடர்வரச் // 720 // வலி கெழு தட கை தொடியொடு சுடர் வர
சோறமை வுற்ற நீருடைக் கலிங்க // 721 // சோறு அமைவு உற்ற நீர் உடை கலிஙகம்
முடையணி பொலியக் குறைவின்று கவைஇ // 722 // உடை அணி பொலிய குறைவு இன்று கவைஇ
வல்லோன் றைஇய வரிப்புனை பாவை // 723 // வல்லோன் தைஇய வரி புனை பாவை
முருகியன் றன்ன வுருவினை யாகி // 724 // முருகு இயன்று அன்ன உருவினை ஆகி
வருபுனற் கற்சிறை கடுப்ப விடையறுத் // 725 // வரு புனல் கல் சிறை கடுப்ப இடை அறுத்து
தொன்னா ரோட்டிய செருப்புகன் மறவர் // 726 // ஒன்னார் ஓட்டிய செரு புகல் மறவர்

தொகு

வாள்வலம் புணர்ந்தநின் றாள்வலம் வாழ்த்த // 727 // வாள் வலம் புணர்ந்த நின் தாள் வலம் வாழ்த்த
வில்லைக் கவைஇக் கணைதாங்கு மார்பின் // 728 // வில்லை கவைஇ கணை தாங்கு மார்பின்
மாதாங் கெறுழ்த்தோண் மறவர்த் தம்மின் // 729 // மா தாங்கு எறுழ் தோள் மறவர் தம்மின்
கல்லிடித் தியற்றிய விட்டுவாய்க் கிடங்கி // 730 // கல் இடித்து இயற்றிய விட்டு வாய் கிடங்கின்
னல்லெயி லுழந்த செல்வர்த் தம்மின் // 731 // நல்? எயில் உழந்த செல்வர் தம்மின்
கொல்லேற்றுப் பைந்தோல் சீவாது போர்த்த // 732 // கொல் ஏற்று பைந்தோல் சீவாது போர்த்த
மாக்கண் முரச மோவில கறங்க // 733 // மா கண் முரசம் ஓவில கறங்க
வெரிநிமிர்ந் தன்ன தானை நாப்பட் // 734 // எரி நிமிர்ந்து அன்னதானை நாப்பண்
பெருநல் யானை போர்க்களத் தொழிய // 735 // பெரு நல் யானை போர் களத்து ஒழிய
விழுமிய வீழ்ந்த குரிசிலர்த் தம்மின் // 736 // விழுமிய வீழ்ந்த குரிசிலர் தம்மின்
புரையோர்க்குத் தொடுத்த பொலம்பூந் தும்பை // 737 // புரையோர்க்கு தொடுத்த பொலம் பூ தும்பை
நீர்யா ரென்னாது முறைகருதுபு சூட்டிக் // 738 / நீர் யார் என்னாது முறை கருதுபு சூட்டி
காழ்மண் டெஃகமொடு கணையலைக் கலங்கிப் // 739 // காழ் மண்டு எஃகமொடு கணை அலை கலங்கி
பிரிபிணை யரிந்த நிறஞ்சிதை கவயத்து // 740 // பிரி பிணை அரிந்த நிறம் சிதை கவயத்து
வானத் தன்ன வளநகர் பொற்ப // 741 // வானத்து அன்ன வள நகர் பொற்ப
நோன்குறட் டன்ன வூன்சாய் மார்பி // 742 // நோன் குறட்டு அன்ன ஊன் சாய் மார்பின்
னுயர்ந்த வுதவி யூக்கலர்த் தம்மி // 743 // உயர்ந்த உதவி ஊக்கலர் தம்மின்
னிவந்த யானைக் கணநிறை கவர்ந்த // 744 // நிவந்த யானை கணம்நிறை கவர்ந்த
புலர்ந்த சாந்தின் விரவுப்பூந் தெரியற் // 745 // புலர்ந்த சாந்தின் விரவு பூ தெரியல்
பெருஞ்செ யாடவர்த் தம்மின் பிறரும் // 746 // பெரு செய் ஆடவர் தம்மின் பிறரும்
யாவரும் வருக வேனோருந் தம்மென // 747 // யாவரும் வருக ஏனோரும் தம்மென
வரையா வாயிற் செறாஅ திருந்து // 748 // வரையா வாயில் செறாஅது இருந்து
பாணர் வருக பாட்டியர் வருக // 749 // பாணர் வருக பாட்டியர் வருக
யாணர்ப் புலவரொடு வயிரியர் வருகென // 750 // யாணர் புலவரொடு வயிரியர் வருக என

தொகு

விருங்கிளை புரக்கு மிரவலர்க் கெல்லாங் // 751 // இரும் கிளை புரக்கும் இரவலர்க்கு எல்லாம்
கொடுஞ்சி நெடுந்தேர் களிற்றொடும் வீசிக் // 752 // கொடுசஞ்சி நெடும்தேர் களிற்றொடும் வீசி
களந்தோறுங் கள்ளரிப்ப // 753 // களம்தொறும் கள்அரிப்ப
மரந்தோறு மைவீழ்ப்ப // 754 // மரம் தொறும் மை வீழ்ப்ப
நிணவூன்சுட் டுருக்கமைய // 755 // நிணவு ?ஊண் சுட்டு உருக்குஅமைய
நெய்கனிந்து வறையார்ப்பக் // 756 // நெய் கனிந்துவறை ஆர்ப்ப
குரூஉக்குய்ப்புகை மழைமங்குலிற் // 757 // குரூஉ குய் புகை மழை மங்குலின்
பரந்துதோன்றா வியனகராற் // 758 // பரந்து தோன்றா வியல் நகரான்
பல்சாலை முதுகுடுமியி // 759 // பல் சாலை முது குடுமியின்
னல்வேள்வித் துறைபோகிய // 760 // நல் வேள்வி துறை போகிய
தொல்லாணை நல்லாசிரியர் // 761 // தொல் ஆணை நல் ஆசிரியர்
புணர்கூட் டுண்ட புகழ்சால் சிறப்பி // 762 // புணர் கூட்டு உண்ட புகழ் சால் சிறப்பின்
னிலந்தரு திருவி னெடியோன் போல // 763 // நிலம் தரு திருவின் நெடியோன் போல
வியப்புஞ் சால்புஞ் செம்மை சான்றோர் // 764 // வியப்பும் சால்பும் செம்மை சான்றோர்
பலர்வாய்ப் புகரறு சிறப்பிற் றோன்றி // 765 // பலர் வாய் புகர் அறு சிறப்பின் தோன்றி
யரியதந்து குடியகற்றிப் // 766 // அரிய தந்து குடி அகற்றி
பெரியகற் றிசைவிளக்கி // 767 // பெரிய கற்று இசை விளக்கி
முந்நீர் நாப்பண் ஞாயிறு போலவும் // 768 // முந்நீர் நாப்பண் ஞாயிறு போலவும்
பன்மீ னடுவட் டிங்கள் போலவும் // 769 // பல் மீன் நடுவண் திங்கள் போலவும்
பூத்த சுற்றமொடு பொலிந்தினிது விளங்கிப் // 770 // பூத்த சுற்றமொடு பொலிந்து இனிது விளங்கி

தொகு

பொய்யா நல்லிசை நிறுத்த புனைதார்ப் // 771 // பொய்யா நல் இசை நிறுத்த புனை தார்
பெரும்பெயர் மாறன் றலைவ னாகக் // 772 // பெரும் பெயர் மாறன் தலைவன் ஆக
கடந்தடு வாய்வா ளிளம்பல் கோச // 773 // கடந்துஅடு வாய் வாள் இளம் பல் கோசர்
ரியனெறி மரபினின் வாய்மொழி கேட்பப் // 774 // இயல் நெறி மரபின் நின்? வாய் மொழிகேட்ப
பொலம்பூ ணைவ ருட்படப் புகழ்ந்த // 775 // பொலம் பூண் ஐவர் உள்பட புகழ்ந்த
மறமிகு சிறப்பிற் குறுநில மன்ன // 776 // மறம் மிகு சிறப்பின் குறு நில மன்னர்
ரவரும் பிறருந் துவன்றிப் // 777 // அவரும் பிறரும் துவன்றி
பொற்புவிளங்கு புகழவை நிற்புகழ்ந் தேத்த // 778 // பொற்பு விளங்கு புகழ் அவை நின் புகழ்ந்து ஏத்த
விலங்கிழை மகளிர் பொலங்கலத் தேந்திய // 779 // இலங்கு இழை மகளிர் பொலம் கலத்து ஏந்திய
மணங்கமழ் தேறன் மடுப்ப நாளு // 780 // மணம் கமழ் தேறல் மடுப்ப நாளும்
மகிழ்ந்தினி துறைமதி பெரும // 781 // மகிழ்ந்து இனிது உறைமதி பெரும
வரைந்துநீ பெற்ற நல்லூ ழியையே. // 782 // வரைந்து நீ பெற்ற நல் ஊழியையே.

தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடிய மதுரைக்காஞ்சி முற்றும்

வெண்பா தொகு

பைங்க ணிளம்பகட்டின் மேலானைப் பான்மதிபோல்
திங்க ணெடுங்குடையின் கீழானை- அங்கிரந்து
நாம்வேண்ட நன்னெஞ்சே நாடுதிபோய் நானிலத்தோர்
தாம்வேண்டுங் கூடற் றமிழ்.
சொல்லென்னும் பூம்போது தோற்றிப் பொருளென்னும்
நல்லிருந் தீந்தாது நாறுதலால்- மல்லிகையின்
வண்டார் கமழ்தாம மன்றே மலையாத
தண்டாரான் கூடற் றமிழ்.
பாடல் மொத்த வரிகள்: 782 (எழுநூற்றெண்பத்திரண்டு மட்டும்)
பாவகை: வஞ்சியடிகள் இடையிடை வந்த ஆசிரியப்பா.