மருத்துவ களஞ்சியப் பேரகராதி/C
cacosmia : அருவருப்பு வாடை : வெறுப்பூட்டும் நாற்றம்.
cacumen : காகுமென் : சிறு மூளையின் மேல்புறத்திலுள்ள புழுபோன்ற அமைப்பின் முன்புறப் பகுதி.
CAD : சி.ஏ.டி : நெஞ்சுப்பைத் தமனி நோய் (coronary artery disease) என்பதன் சுருக்கம்.
cadaver : பிணம் : மருத்துவத்தில் இச்சொல் ஒரு பிணத்தைக் குறிக்கும். மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்கள் அறுத்துச் சோதிக்கும், உடலையும், பிணவறையில் பிணப்பரிசோதனை செய்யப்படும் உடலையும் இது குறிக்கிறது.
cadaveric spasm : பிண விறைப்பு : சில திடீர் மரணங்களில் தசை விறைப்பு தொடர்ந்து நீடித்தல்.
Cadmium : காட்மியம் : தகரம் போன்ற வெண்ணீல உலோகம், இது துத்தநாகத் தாதுப் பொருள்களில் உள்ளது. பல்வேறு தொழில்களில் பயன்படுத்தப் படுகிறது. இதன் புகையைச் சுவாசித்தால் நாளடைவில் நுரையீரல் சேதம் அடையும். காட்மியம் கலந்த தொழிற்சாலைக் கழிவுகள் கலந்தால் உணவு நஞ்சாகும்.
caduceus : கைத்தண்டம் : புராணக் கதையின்படி கிரேக்க ஞாயிற்றுக் கடவுளான அப்போலோவின் கையிலுள்ள கைத்தண்டம். இதில் இரண்டு இறகுகளின் மேல் ஒரு தண்டத்தைச் சுற்றி இரு பாம்புகள் சுற்றிக் கொண்டிருக்கும்.
caecal : குடல் சார்ந்த : பெருங்குடல் முற்பகுதி தொடர்புடைய.
caeciform : குடல்வால் வடிவான.
Caecitis : குடல்வால் அழற்சி.
caecotomy : பெருங்குடல் வாய் பற்றுக்குழாய் அறுவை மருத்துவம் : பெருங்குடல் வாய்க்கும் அடி வயிற்றுச்சுவரின் முன் புறத்திற்குமிடையில் அறுவைச் சிகிச்சை மூலம் பொருத்தப்படும் பற்றுக்குழாய். பெருங்குடல் வாயினுள் ஒர் அகன்ற துளைக் குழாயினைச் செருகி இது ஏற்படுத்தப்படுகிறது. மலம் சீராகக் கழிவதற்கு இது உதவுகிறது.
Caecum : பெருங்குடல் வாய்; பெருங்குடல் முளை : பெருங்
Ca EDTA : கேயட்டா : கால்சியம் டைசோடியம் எடிட்டேட். இது ஈய நச்சு நீக்கியாகவும், சுண்ணாம்பு நீற்று புண்களை ஆற்றும் மருந்தாகவும் பயன் படுகிறது.
caesarian hy sterectomy : வயிற்று அறுவை மகப்பேறு : வயிற்றைக் கீறி கருவகத்தில் இருந்து குழந்தையை வெளியே எடுக்கும் அறுவைச் சிகிச்சை முறை.
caesarean section : கருப்பை அறுவை மருத்துவம் : வயிற்றைக் கீறிக் குழந்தையை வெளிப்படுத்தும் அறுவை மருத்துவ முறை. ரோமானிய முதல் பேரரசர் ஜூலியஸ் சீசர் இந்த முறையில் பிறந்ததாகக் கூறுவர். எனவே அவர் பெயரால் இது 'சீசேரியன் முறை' என்று அழைக்கப்படுகிறது.
caesium 137 (137Cs) : சீசியம் 137 : நீல ஒளி வரையுடைய கார இயல்புடைய வெள்ளி போன்ற கதிரியக்க உலோகம். 'கோபால்ட்' என்ற உலோகத்திற்குப் பதிலாக ஒளிக்கற்றை மருத்துவ முறையில் பயன்படுத்தப்படுகிறது. ஊகிகளாக அல்லது குழாய்களாக முத்திரை இடப்பட்டு, ரேடியத்திற்குப் பதிலாகப் பயன்படுத்தப்படுகிறது.
cafe coronary : அருந்தக முகடு : உணவுக் குளிகையினால் மேற் புறக் காற்று வழி முற்றிலுமாகத் தடைப்படுதல். உணவுக்குழாய், குரல்வளை இரண்டிலும் குழல் அடைப்பு உண்டாகும். இந்த அறிகுறிகள் நெஞ்சுத்தசை அழிவைத் தூண்டிவிடும்.
caffeine : காஃபின் : காப்பி, தேயிலை போன்ற குடிவகைகளில் உள்ள மைய நரம்பு மண்டலத்திற்குக் கிளர்ச்சியூட்டக் கூடிய மர உப்புச்சத்து. இது சிறுநீர் பெருக்கியாகக் கொடுக்கப்படுகிறது. எனினும், முக்கியமாக நோவகற்றும் மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது.
cain complex : கெயின் மனப்பான்மை : அழித்திடும் தன்மையுள்ள சகோதர விரோதம். இதில் உடன்பிறந்தவர்களில் ஒருவர், பெற்றோரின் ஆதரவைப் பெற்றமைக்காக மற்றொரு உடன்பிறப்பின் மீது விரோதம் காட்டுகிறார். விவிலியத்தில் ஆதாம், ஏவாளின் மகனான கெயின், தனது சகோதரன் அபெலை இந்த விரோதத்தினால் கொன்றுவிடுகிறான். அந்தக் கெயின் பெயரால் இது அழைக்கப்படுகிறது. caisson disease : காற்றழுத்த நோய் (கேய் சான் நோய்); அழுத்தக் காற்றறை நோய் : அழுத்தம் மிகுந்த காற்றின் ஊடாக உழைப்பவர் களுக்கு உண்டாகும். காற்றழுத்தம் திடீரெனக் குறைவதால் இந்த நோய் ஏற்படுகிறது. நீரில் முக்குளிப்போர் மேற்பரப்புக்கு வரும்போதும், விமானிகள் மிகுந்த உயரத்திலிருந்து கீழே குதிக்கும் போதும் இது நேரிடுகிறது. இரத்தத்திலுள்ள கரைசலிலிருந்து நைட்ரஜன் குமிழ்கள் வெளிவருவதால் இது உண்டாகிறது. காற்றழுத்தத்தைப் படிப்படியாகக் குறைப்பதன் மூலம் இதனைத் தடுக்கலாம்.
caladryl : காலாட்ரில் : காலைமன் டைஃபன்ஹைடிராமின் அடங் கியுள்ள கழுவு நீர்மம், களிம்பேடு ஆகியவற்றின் வணிகப் பெயர்.
calamine : காலமைன் : அய ஆக்சைடு கலந்த இளஞ்சிவப்பு நிறத் துத்தநாகக் கார்போனேட் தோலில் குருதியை உறையச் செய்யும் இதன் மென்மையான செயல்முறைக்காக இது கழிவு நீர்மங்களிலும், களிம்பேடு களிலும் பெருமளவில் பயன் படுத்தப்படுகிறது. கார்பாலிக் அமிலத்தின் மென்மையான கரைசலில் காலமைன் கரைந்துள்ள காலமைன் கழிவு நீர்மம், எரிச்சலை நீக்கி நோவகற்றும் தன்மை உடையது.
calamus scriptorius : பேனா வடிவ உறை : ஒரு பேனாவின் வடிவிலுள்ள மூளையின் நான்காவது குழிவுப் பள்ளத்தின் அடித்தளத்தின் தாழ்மட்ட பகுதி. இது திண்ணிய இழைப் பொருள்களிடையே காணப் படுகிறது.
Calbot's rings : கால்போட் வளையம் : கடுமையான குருதிச் சோகையில் காணப்படும் நீல வண்ண இழைபோன்ற துகள்கள். அமெரிக்க மருத்துவ அறிஞர் ரிச்சர்ட் கால்போட் பெயரால் அழைக்கப்படுகிறது.
calcareous : சுண்ண நீற்று சார்ந்த; சுண்ணம் சார்ந்த : சுண்ண நீற்றுச் சார்புள்ள; சுண்ண நீற்றலான.
calcaneal spur : பாத எலும்புக் குதிமுள் : பாத எலும்பின் முண்டிலிருந்து முன்புறம் துருத்திக் கொண்டிருக்கும் ஒரு கூர்மையான குதிமுள்.
calcaneoapophysitis : பாத எலும்பு வீக்கம் : குதிகால் தசை நாணின் இணைப்பிடத்தில் உள்ள பாத எலும்பின் பிற் பகுதியில் வலியும் வீக்கமும்.
calcaneocuboid : பாத இணைப்பு எலும்பு சார்ந்த : பாத எலும்பு மற்றும் இணைப்பு எலும்பு தொடர்புடைய. calcaneodynia : குதிகால் வலி : நிற்கும்போது அல்லது நடக் கும்போது குதிகாலில் ஏற்படும் வலி.
calcaneofibular : பாத மற்றும் சிம்பு எலும்பு சார்ந்த : பாத எலும்பு மற்றும் சிம்பு எலும்பு தொடர்புடைய.
calcaneonavicular : பாத மற்றும் கைகால் எலும்பு சார்ந்த : பாத எலும்பு மற்றும் கைகால் படகெலும்பு தொடர்புடைய.
calcaneoscaphoid : பாத மற்றும் அங்கைப் படகெலும்பு சார்ந்த : பாத எலும்பு மற்றும் அங்கைப் படகெலும்பு தொடர்புடைய.
calcaneus : பாத எலும்பு : இணைப்பு எலும்பு மற்றும் கணு எலும்புடன் மூட்டினால் இணைந்திருக்கும் குதிகால் எலும்பு.
catchinnation : வெடிச்சிரிப்பு : பொருத்தமில்லாமல் மட்டுமே உரக்கச் சிரித்தல், இது முரண் மூளை நோயுடன் தொடர்பு உடையது.
calciferol : கால்சிஃபெரால் : 'D2' என்ற வைட்டமின் -D என்னும் ஊட்டச் சத்து வகை. இதனைச் செயற்கை முறையிலும் தயாரிக் கலாம். வைட்டமின் -D குறைபாடு காரணமாகக் குழந்தைகளுக்கு உண்டாகும் 'குழந்தைக் கணை' என்ற எலும்பு மென்மையாகும் நோயைக் (ரிக்கெட்ஸ்) குணப்படுத்த இது கொடுக்கப் படுகிறது.
calcification : சுண்ணக மயமாக்குதல்; மென்திசு சுண்ணம் ஏற்றம்; மென்திசு கரையேற்றம்; மாற்றிடச் சுண்ணமயம் : ஒரு கரிமப்பொருளி லுள்ள கால்சியம் உப்புகள் அதில் படிவதால் அந்தப் பொருள் கடினமாகிச் சுண்ணக மயமாகும் மாறுதல். இது எலும்புகளில் இயல்பாகவும், தனிமங்களில் நோயியல் முறையிலும் உண்டாகலாம்.
calcination : உலர்தல் : ஒரு தூளைத் தயாரிப்பதற்காக வறுத்தல் மூலம் உலர்த்தல்.
calcined bone : புடமிட்ட எலும்பு : உலர் வெப்பமூட்டுதல் மூலமாகத் தயாரிக்கப்பட்ட, எளிதில் தகர்ந்துவிடக்கூடிய தூளாக மாற்றப்பட்ட எலும்பு.
calcinosis : மிகைச்சுண்ணப் படிவு : 1. திசுக்களில் கால்சியம் உப்புகள் அளவுக்கு மீறி படிவதால் உண்டாகும் நோய். 2. புறத்தாலடிச் சுண்ணமயமாக்கல்.
calcipaenia : சுண்ணக்குறைபாடு : உடல் திசுக்களிலும் திரவங் களிலும் கால்சியம் குறைவாக இருத்தல்.
calcitonin : கால்சிட்டோனின் : 'C' உயிரணுக்களில் சுரக்கும் இயக்கு நீர் (ஹார்மோன்). இது இரத்தத்தில் உள்ள கால்சியம் அளவை முறைப்படுத்துவதில் இது முக்கியப் பங்கு வகிக்கிறது.
calcitriol : கால்சிட்டிரியால் : வைட்டமின் டி என்ற வளர்சிதை வினை மாற்றப்பொருள். இது குடலில் கால்சியமும் ஃபாஸ்பேட்டும் உறிஞ்சப்படுவதையும் எலும்புத் திசுக்களில் அவை படிவதையும் ஊக்கு விக்கிறது.
calcium : கால்சியம் சுண்ணம் (Ca) : சுண்ணாம்பு, ஒர் உலோகத் தனிமம். அணு எண் 20, அணு எடை 20, சுண்ணாம்புக்கல்லின் முக்கியமான அமைப்பான்.
calcium channel blocker : கால்சியம் தடுப்புப் பொருள் : தசை உயிரணுக்களினுள் கால்சியம் அயனிகள் பாய்வதைத் தடுக்கிற மருந்துகளின் குழுமம் எதுவும். இந்த மருந்துகள், இதயக்குத்தல், மிகை அழுத்தம், இதய விரைவுத் துடிப்பு ஆகியவற்றைக் குணப்படுத்தப் பயன்படுகின்றன.
calcium chloride : கால்சியம் குளோரைடு : குருணை வடிவில் உள்ள கால்சியம் உப்புகளில் ஒன்று. நீரில் கரையக்கூடியது. கால்சியம் குறைபாட்டு நோய்க்கு உடலில் செலுத்தப்படுகிறது.
calcium gluconate : கால்சியம் குளுக்கோனேட் : பரவலாகப் பயன்படுத்தப்படும் கால்சியம் உப்புகளில் ஒன்று. கால்சியம் குறைபாட்டு நோய்கள் அனைத்திலும், ஈயநச்சு நிலையிலும் இது பயன்படுத்தப்படுகிறது.
calcium lactate : சுண்ண (கால்சியம்) லாக்டேட் : கரையும் தன்மையுள்ள கால்சியம் உப்புகளில் ஒன்று. இது கால்சியம் குளோரைடை விடக்குறைந்த எரிச்சலூட்டும் இயல்புடையது. கால்சியம் குறைபாட்டு நோய்கள் அனைத்திலும் கால்சியம் குளுக்கோனேட் போன்று வாய் வழியாகக் கொடுக்கப்படுகிறது.
calcium oxalate : சுண்ண (கால்சியம்) ஆக்சாலேட் : இது ஒருவகை உப்பு. இது சிறுநீரில் அதிகச் செறிவுடன் இருந்தால். சிறுநீர்க் கல்லடைப்பு உண்டாகும்.
calciuria : சிறுநீர்க் கால்சியம் : சிறுநீரில் கால்சியம் இருத்தல்.
calculus : கல்லடைப்பு; உடல் கல்காரை : உடலின் உள் உறுப்புகளில் உண்டாகும் கல் போன்ற தடிப்பு. இது முக்கியமாகத் தாதுப் பொருள்களினாலானது. இது சுரப்புப்பாதைகளில் அல்லது உட்குழிவுகளில் ஏற்படுகிறது.
calculus-biliary : பித்தக்கல். calefacient : உடல் வெப்பம் பரவுதல் : உடலின் ஒர் உறுப்பில் பயன்படுத்தப்படும் போது வெப்ப உணர்வு பரவுதல்.
calf : பின்கால் தசை : கெண்டைக் கால்காலின் பின்பகுதியிலுள்ள தசைப்பகுதி. இது கெண்டைக் கால் புடைப்புத்தசை, உள்ளங்கால் தசை ஆகியவற்றால் ஆனது.
calfess : காலுறைக் குறைவான : காலின் பின்புறச் சதைப்பகுதி.
calf muscle : ஆடு தசை.
calf-teeth : முதலில் முளைக்கும் பல்.
calibration : துல்லிய அளவீடு : அறியப்பட்டுள்ள தரநிலையுடன் அல்லது துல்லியமானது என அறியப்பட்டுள்ள ஒரு கருவியுடன் ஒப்பிட்டு ஒரு கருவியின்துல்லியத்தை அறுதியிடுதல்.
calibrator : துல்லியம் அளவீட்டுக் கருவி : குழாயின் உள் குறுக் களவுக் கூடுதல் குறைவுகளைக் கணக்கிடுவதற்கான கருவி.
calicivirus : குடல் அழற்சிக் கிருமி : கிருமியினால் கொள்ளை நோயாகப் பரவும் இரைப்பைகுடல் அழற்சியை உண்டாக்கும் கிருமி.
caliomania : தற்கவர்ச்சி : 1. ஒருவர் தனது சொந்த அழகில் நம்பிக்கை கொண்டிருத்தல். 2. அழகினால் மட்டுமே ஒரு பொருளில் இயல்புக்கு முரணாகக் கவர்ச்சிக் கொள்ளுதல்.
CALLA : கால்லா : வெள்ளைக் குருதியணுப் பெருக்கக் காப்பு மூலம். இது குழந்தைப் பருவத்தில் ஏற்படும் வெள்ளைக் குருதியணுப் பெருக்கம் "பி" உயிரணு நிணநீர்த்திசுக்கட்டி ஆகியவற்றின் குறியீடு.
callosity : தோல் தடிப்பு (தோல் காய்ப்பு); காய்ப்பு : அழுத்தம் அல்லது உராய்வு காரணமாகத் தோல் பரபரப்புடன் கடினமாகிவிடுதல். இது பெரும்பாலும் பாதங்களிலும் உள்ளங்கைகளிலும் ஏற்படுகிறது.
callosum : மூளைக்கோள இணைப்பு : மூளைக் கோளங்களில் இடையிலான பெரிய இணைப்பு.
callousness : காய்ப்பு; தடிப்பு :சொரணையின்மை.
callus : தோலின் மேல் தடிப்பு; தோல் காய்ப்பு; கல்முண்டு; இழை எலும்பு : எலும்பு முறிவு குணமாகும்போது எலும்பு முனைகளில் உண்டாகும் சுண்ணமயமாக்கிய திசு.
calmant, calmative : அமைதியூட்டும் பொருள் : நோவாற்றும் மருந்து. Calmette-Guerin bacillus : கால்மெட்-குவரின் கிருமி : காச நோய்ச் சிகிச்சைக்குப் பயன் படுத்தப்படும் ஒரு கிருமி. திரும்பத் திரும்ப வளர்ப்பதன் மூலம் இது தனது வீரியத்தை இழக்கிறது. காசநோயைக் குணப்படுத்துவதற்கு அம்மை மருந்து மூலம் செலுத்தப்படுகிறது. ஃபிரெஞ்சு பாக்டீரியாவில் அறிஞர்கள் ஆல்பெர்ட் கால் மெட்டு, காமில் குவரின் பெயரால் அழைக்கப்படுகிறது.
calmodulins : கால்மோடுலின் : நாளங்களுக்கிடையிலான புரதம். இது கால்சியத்துடன் இணைந்து, பல்வகை நாளச் செயல்முறைகளைத் தூண்டிவிடுகிறது.
calor : வீக்க வெப்பம்; உடல் வெப்பம்; தோல் வெப்பம்; வெப்பக் கூறு :வீக்கத்தின் போது ஏற்படும் நான்குவகை அறிகுறிகளில் ஒன்று வெப்பம்.
caloric test : கலோரிச் சோதனை; வெப்பச் சோதனை : புறக் காதுக் குழாயினுள் சூடான அல்லது குளிர்ந்த திரவத்தைப் பாய்ச்சிக் காது மையப்புழையில் நோய் இருக்கிறதா என்பதைக் கண்டு அறிவதற்கான சோதனை. காதில் நோயில்லாமல் இருந் தால், காதில் 'நிஸ்டாக்மஸ்' என்ற பொருள் இருக்கும். நோயுற்ற காதில் இந்தப் பொருள் உற்பத்தியாவதில்லை.
calorie : கலோரி; வெப்ப அலகு; கனலி : வெப்ப அளவை அலகு. நடைமுறையில், கலோரி மிகச்சிறிய அலகாக இருப்பதால் அது பயன்படுவதில்லை. வளர் சிதை மாற்றத்தில் கிலோ கலோரிதான் வெப்ப அளவை அலகாகப் பயன்படுகிறது. ஒரு கிலோ கலோரி என்பது, ஒரு கிலோகிராம் நீரின் வெப்பத்தை ஒரு பாகை சென்டி கிரேடுக்கு உயர்த்துவதற்குத் தேவைப்படும் வெப்பத்தின் அளவு ஆகும். அறிவியலில் பொதுவாக கலோரிக்குப் பதிலாக ஒர் அலகு ஆற்றல் பணி, வெப்பத்தை குறிக்க 'யூல்' என்ற அலகு பயன் படுத்தப்படுகிறது. ஒரு 'யூல்' என்பது ஏறத்தாழ 1/4 கலோரி.
calorific value : வெப்ப அளவு : உணவு அல்லது எரிபொருள் தரும் சூட்டின் அளவு.
calorigenic : வெப்பம் சார்ந்த : வெப்பம் அல்லது சக்தியின் உற்பத்தி தொடர்புடைய.
calorimeter : கனல்மானி : சூட்டின் அளவு காட்டும் கருவி.
calorimetry : கனலளவை.
caloris bursa : கலோரி சுரப்பி : பெருந்தமனிக்கும், மூச்சுக் குழாய்க்குமிடையில் காணப்படும் மசகுநீர்ச்சுரப்பி. இத்தாலிய உடல் உட்கூறியலறிஞர் லூகி கலோரி பெயரால் அழைக்கப் படுகிறது. Calot's triangle : காலோட் முக்கோணம் : திசுப்பைத் தமனியில் மேற்புறத்திலும், திசுப்பை நாளத்தில் கீழ்ப்புறத்திலும், கல்லீரல் நாளத்தில் நடுப்பகுதியிலும் உருவாகும் ஒரு முக்கோணம். இது பித்தப்பை அறுவை மருத்துவத்தில் ஒர் ஆபத்தான பகுதியாகும். ஃபிரெஞ்சு அறுவை மருத்துவ வல்லுநர் ஜீன்-ஃபிரான்ஸ் காலோட் பெயரால் அழைக்கப்படுகிறது.
calvaria : மண்டைத் தூபி : மண்டையோட்டின் மேற்பகுதியில் உள்ள தூபி போன்ற பகுதி. இதில், நெற்றி, உச்சி, பின்புற எலும்புகள் அடங்கி யுள்ளன. இதனைத் தலையுச்சி வட்டம் மூடியிருக்கும்.
calvarium : மண்டை ஓடு.
Calve-Perthes disease : கால்வே-பெர்த்தஸ் நோய் : துடை எலும்பின் தலைப் பகுதியின் எலும்பு முனையில் ஏற்படும் நச்சு நுண்மமில்லாத திசு நசிவு. ஃபிரெஞ்சு எலும்பு மருத்துவ அறிஞர் ஜார்ஜ் பெர்த்தெஸ், ஜெர்மன் அறுவை மருத்துவ அறிஞர் பெர்த்தஸ் பெயரால் அழைக்கப்படுகிறது.
calymmatobacterium : திசுக் கட்டி நோய்க் கிருமி : அரை சார்ந்த திசுக்கட்டியை உண்டாக்கும் கிராம-எதிர்படி நோய்க் கிருமி.
calyptrogen : வேர் முடியை உருவாக்கும் உயிர்மத் தொகுதி.
calyx : குவளைக்குழி : 1. குவளை போன்ற அமைப்புடைய உறுப்பு அல்லது குழிவு. 2. சிறுநீரகக் கூம்பின் காம்பு உறுப்பினை மூடியிருக்கும் சிறுநீரக இடுப்புக் கூட்டின் குவளைபோன்ற நீட்சி.
camcolit : காம்கோலிட் : லிதியம் கார்போனேட் என்ற மருந்தின் வணிகப் பெயர்.
camel back curve : ஒட்ட்க முதுகு வளைவு : மேகவெட்டை நோய், தட்டம்மை, உள்ளுறுப்பு நோய் ஆகியவற்றில் காணப்படும் இரட்டை நாள் முறைக் காய்ச்சல் கூர்முனை வளைவு.
CAMP : சி.ஏ.எம்.பி (CAMP) :' சுழற்சி அடினோசின் மானோ ஃபாஸ்பேட் (Cyclic Adenosine Mono-phosphat) என்பதன் சுருக்கம்.
Campbell de Morgan spots : கேம்பல்-டெ-மார்கன் புள்ளிகள் : தோல் விரிவடையும்போது வெளிறாதிருக்கிற 'ராஸ் பெரி' பழச்சிவப்பு நிறத்தைக் கொண்ட புள்ளிகள். ஆங்கில அறுவை மருத்துவ வல்லுநர் கேம்பல்-டி-மார்கன் பெயரால் அழைக்கப் படுகிறது.
camphor : கற்பூரம் (சூடம்) : வயிற்று உப்புசம் அகற்றும் மருந்தாகப் பயன்படுகிறது. இருமல் மருந்துகளில் கற்பூரம் கலந்த அபினிக் கரைசலாகச் சேர்க்கப்படுகிறது. கற்பூர எண்ணெய் நோவகற்றுவதற்கு வெளிப்பூச்சு மருந்தாகப் பயன்படுகிறது.
campimeter : பார்வைப் பரப்பு அளவுமானி : பார்வைப் பரப் பெல்லையை அளவிடும் ஒரு சாதனம.
campylobacter : காம்பிலோ பாக்டர் : கிராம் சாயம் எடுக்காத, நகரும் திறனுடைய நீண்ட பாக்டீரியம். இது பல நாட்கள் நீடிக்கக் கூடிய கடுமையான வயிற்றுப் போக்கினை உண்டாக்குகிறது.
canal-alimentary : உணவுப்பாதை.
canal birth : பிறப்புப் பாதை.
canal vaginal : யோனிக் குழாய்.
canaliculotomy : எலும்புக் குழாய் மாற்று மருத்துவர் : 'கானலி குலஸ்' என்ற உடலில் உள்ள சிறு கால்வாய் போன்ற அமைப்பின் பிற்பகுதிச் சுவரைத் துண்டித்து விட்டு, வடிகால் குழாயினை ஒர் எலும்புக் கால்வாயாக மாற்றுதல்.
canaliculus : கானலிகுலஸ்; மென்குழாய்; நுண்கால்வாய்; சிறு குழல் : உடலிலுள்ள சிறு கால்வாய் போன்ற அமைப்பு. புருவத்தின் விளிம்பிலிருந்து, கண்ணிர்ப்பை வரையுள்ள குழாய் இதற்கு எடுத்துக்காட்டு.
cancellous : கடற்பஞ்சுத் தன்மையுடைய; புரைத்தமென் எலும்பாகிய : எலும்புகளில் இழை யிதழ்க் குறுக்குப் பின்னல் அமைப்பு மூலம் கடற்பஞ்சு போன்ற தேன் கூடு போன்ற தன்மையுடைய.
cancellous bone : மெல்லெழும்பு.
canalisation : செல்வழியாக்கம் : திசுவில் செல்வழிகள் உண்டாகுதல்.
cancer : புற்றுநோய்; புற்று : உடலின் எந்தப் பகுதியிலுள்ள தாறுமாறான வளர்ச்சி எதனையும் இது குறிக்கிறது. இந்த வளர்ச்சி தேவையின்றி ஏற்படுகிறது, உடலிலுள்ள சத்துப் பொருள்களை ஒட்டுண்ணி போல் உண்டு வளர்கிறது. இது
cancerate : புற்றுவை.
cancerous : புற்றுநோய் போன்ற; புற்றுநோய் கொண்ட.
cancerocidal : புற்றுக்கொல்லி : புற்று நோய்க்கொல்லி மருந்து.
cancerophobia : புற்றுநோய் கிலி; புற்று நோயச்சம்; புற்று மருட்சி : புற்றுநோய் பற்றிய அளவுக்கு மீறிய அச்சம்.
cancerous : புற்று சார்ந்த : உக்கிரமான வளர்ச்சி தொடர் புடைய.
cancrum : வாய்ப்புண் : 1. மிக விரைவாகப் பரவும் நைவுப் புண். 2. ஊட்டச்சத்து குறைபாடு உடைய குழந்தைகளின் வாயில் ஏற்படும் தசையழுகல் போன்ற நைவுப்புண்கள். இது 'போரியாலிஸ் வின்சென்டி' என்ற கிருமியால் உண்டாகிறது.
cancrum oris : குழந்தை வாய்ப்புண்; வாயழுகல் : நரம்புத் தளர்ச்சி யுடைய குழந்தைகளின் உண்டாகும் தசையழுகலுடன் கூடிய வாய்ப்புண். ஆஃப்ரிக்காவில் ஊட்டச்சத்துக் குறைவுடைய குழந்தைகளுக்குத் தட்டம்மை ஏற்படும்போது இதுவும் உண்டாகிறது.
candida : இருதிரிபுக் காளான் : இரு திருபுருப் படிவங்களையுடைய காளானில் ஒரு வகை. நொதி (ஈஸ்ட்) போன்ற உயிரணுக்களையுடைய இது சில வகை இழைமங்களை உண்டாக்குகிறது. இயற்கையில் பரவலாகக் கிடைக்கிறது.
candidaris : சள்ளை நோய்.
candidemia : குருதிக்காளான் நோய் : குருதியில் இருதிரிபுக் காளான்கள் இருத்தல்.
candidiasis : இருதிரிபுக் காளான் நோய்; சள்ளைநோய் : இரு திரிபு காளான்களில் ஒருவகையினால் உண்டாகும் ஒருவகை தொற்று நோய்.
Canine : கோரைப் பல் : நாய்க்கு இருப்பது போன்ற கோரைப் பல். ஒவ்வொரு தாடையிலும் உளிப்பல் எனப்படும் முன் வாய்ப்பற்களுக்கும், முன்கடை வாய் பற்களுக்குமிடையில் இரு கோரைப்பற்கள் அமைந்து உள்ளன.
caninetooth : கோரைப்பல்; கோரப்பல் : நாய்க்கு இருப்பது போன்ற கோரைப்பல், ஒவ்வொரு தாடையிலும் உளிப்பல் எனப்படும் முன் வாய்ப் பற்களுக்கும் முன் கடைவாய்ப்பற்களுக்கு மிடையில் இரு கோரைப் பற்கள் அமைந்து உள்ளன. இவற்றைக் 'கோரப் பற்கள்' என்றும் கூறுவர். canister : சிமிழ்.
canities : முடிநரை / வாய்ப்புண் : 1. முடிநரை, 2. வாயில் ஏற்படும் வலி உண்டாகும் சிறிய எரிச்சலூட்டும் வாய்ப்புண்.
canker : வாய்ப் புண்.
canker-rash : அழற் காய்ச்சல்; தொண்டைப் புண் காய்ச்சல்.
cannabis indica : கானா வாழைப் பிசின் : கானா எனப்படும் இந்தியக் கல்வாழை என்ற சணல் இனச் செடியின் பிசின். ஒரு காலத்தில் நரம்புக் கோளாறுகளின்போது மூளைப்பகுதியைச் சமனப்படுத்தும் மருந்தாகப் பயன்படுத்தப்பட்டது. இந்த மயக்கமூட்டும் மருந்தினைப் பயன்படுத்துவது பல நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது.
cannibalism : மனித இறைச்சி உண்ணல் : மனித இறைச்சியை மனிதர் உண்ணுதல்.
cannon ball metastases : பீரங்கிக் குண்டு உறுப்படை மாற்றம் : நுரையீரலினுள் உள்ள உருண்டை வடிவமான ஒன்று அல்லது பல பெரிய உறுப்பிடை மாற்றக் கரணைகள். இவை சிறுநீரக உயிரணுப் புற்றுநோய்.
cannon sound : பீரங்கி ஒலி : இதயம் முழுமையாக அடைபடும் போது, முதல் இதய ஒலியின் தீவிரம், துடிப்புக்குத் துடிப்பு மாறுபடுகிறது. இந்த வெடிப்பு ஒலி, பீரங்கி அலைகளுடன் ஒத்திருப்பதில்லை.
cannula : குழாய்க்கருவி; உடல் வடிகுழாய்; கடின வடிகுழாய் : துளைக்கருவி உட்கொண்ட குழாய்க்கருவி, உடலில் திரவங்களைச் செலுத்தவும், உடலிலிருந்து திரவங்களை வெளியே எடுக்கவும் பயன்படுகிறது.
cannulate : குழாய்க்கருவி செருகுதல் : ஒர் இடைவெளி வாயிலாக ஒரு குழாய்க் கருவியைச் செருகுதல்.
cannulation : குழாய்க்கருவி செலுத்துதல் : துளைக்கருவி உட் கொண்ட குழாய்க்கருவியை உடலினுள் செலுத்துதல்.
cantharides : கொப்புள ஈ : கொப்புளம் உண்டாகப் பயன் படுத்தப்படும் ஈ வகை.
canthus : கடைக்கண் : கண் இமைகள் கூடுமிடத்திலுள்ள கோணம்.
capacitance : மினேற்றச் சேமிப்புத் திறன் : ஒரு மின் ஏற்றத்தைச் சேமிப்பதற்கான திறன்.
capacitation : திறனூட்டம் : பெண்ணின் இனப்பெருக்கக் குழாயில் நிகழும் செயல்முறை. இது விந்தணு முட்டைகள் கருவுறும்படி செய்வதற்கு இயல்விக்கிறது.
capeline bandage : தலைக்கட்டு.
capillary : தந்துகி : மயிரிழை போன்ற நுண்குழல்; நுண்புழை யுடைய.
capillarectasia : தந்துகி குழாய் விரிவாக்கம் : தந்துகிக் குழாயின் விரிவாக்கம்.
capitellum : எலும்புக்குமிழ் : விலா எலும்பு போன்ற ஒரு நீண்ட எலும்பின் முனையிலுள்ள குமிழ் போன்ற கொண்டை.
capitulum : எலும்புக்கொண்டை : ஒர் எலும்பின் முனையிலுள்ள எடுப்பான, சிறிய உருண்டைக் கொண்டை.
Caplan's syndrome : கேப்லான் நோய் : போலி கீல்வாத மூட்டு நோய் உடைய சுரங்கத் தொழிலாளர்கள், நுரையீரலில் போலிக் கீல்வாதக் கரணை நோய்க்கு ஆளாகிறார்கள். இந்தியாவில் கோலார் தங்க வயல் மருத்துவ மனையில் பணி ஆற்றிய பிரிட்டிஷ் மருத்துவ அறிஞர் அந்தோணி கேப்லான் பெயரால் அழைக்கப் படுகிறது.
Capnocytophage : குருதியோட்ட நோய்க்கிருமி : வாய் உட்குழியில் காணப்படும் சூழ்நிலைத் தகவுத்திறனுள்ள, ஆக்சிஜன் இல்லாத கிராம்-எதிர்படி நோய்க்கிருமி. இது மண்ணிரல் இல்லாத நோயாளிகளிடம் குருதியோட்ட நோய்த்தொற்றினை உண்டாக்குகிறது.
capnography : கார்பன்டையாக்சைடு அளவு கருவி : உள் இழுக்கப்பட்ட கார்பன்டையாக்சைடின் அளவைத் தொடர்ந்து பதிவுசெய்தல்.
capnophilic : கார்பன்டையாக்சைடு பாக்டீரியா : கார்பன்டையாக் சைடு அடங்கியுள்ள சூழலில் சிறப்பாக வளரும் பாக்டீரியா.
capotement : சிதறல் ஒலி : விரிவாக்கிய இரைப்பையில் காற்றும், திரவமும் அடங்கி இருக்கும் போது கேட்கப்படும் சிதறல் ஒலி.
capping : காப்புறை அமைத்தல் : 1. பல்லின் வெளியில் தெரியும் சதைப்பகுதியின் மீது ஒரு காப்புப் பொருளை வைத்தல். 2. ஒப்பனை நோக்கத்துக்காக பல்லின்மீது ஒரு செயற்கை முகடு அமைத்தல். 3. செவிலித் தொழிலில் ஒர் ஆளை ஈடு படுத்துதல்.
capreomycin : கேப்ரியோமைசின் : மருந்தினால் குணமாகாத காச நோயாளிகளுக்கு சிரை வழி செலுத்தப்படும் ஒரு வலுவற்ற காசநோய் எதிர்ப்பு மருந்து. இது கானாமைசின், வயோமைசின் ஆகியவற்றுடன் சேர்ந்து குறுக்குத் தடையாக அமையும்.
capsicum : செம்மிளகு : வெப்பு மிளகை உள்ளடக்கிய விதை உறையுடைய செடியில் விளையும் செம்மிளகு,
capsid : கேப்சிட் புரதம் : கேப்சோமர்ஸ் எனப்படும் புரத உட்பிரிவுகள் அடங்கிய நோய்க் கிருமியை முடியுள்ள புரதம்.
capsomer : கேப்சோமர் : ஒரு நோய்க் கிருமியின் கேம்சிட் புரதத்தின் ஒரு புரதமாக அமைந்துள்ள ஒரு குறுகிய நாடா போன்ற புரதம்.
capsula capsulae : கவச உறை : ஒர் உறுப்பினை அல்லது கட்ட மைப்பினை சுற்றியுள்ள பொதியுறை, ஒரு பொதி கூடு.
'capsule : பொதியுறை : 1. கவச உறை, 2. ஊன் பசையினாலான ஒரு தனிப்பொதியுறை, 3 சிறு நீரகங்களுக்கான உருண்டை வடிவப் பொதிகூடு. 4. இரட்டை முட்டில் இரு முனைகளையும் முடியுள்ள சட்டைக்கை போன்ற சவ்வு.
carapres : காராப்பிரஸ் : குளோனிடின் என்ற மருந்தின் வணிகப் பெயர்.
carbachol : கார்பக்கோல் : துணைப்பிரிவு நரம்பு மண்டலத்தைச் செயற்படத் தூண்டும் மருந்து. அசிட்டில்கோலிங் போன்றது. எனினும் வாய்வழி கொடுத்தால் செயலூக்கம் உடையது. ஊசி வழி செலுத்தினால் நிலையான செயற்பாடுடையது. அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு சிறுநீரை நிலைப்படுத்து வதற்கும் குடல் நலிவின் போதும், கண்விழி விறைப்பு நோயின்போது கண்சொட்டு மருந்தாகவும் பயன்படுத்தப் படுகிறது.
carbamazepine : கார்பாமா செப்பின் : வலிப்பு நீக்கும் மருந்து. நோவையும் அகற்றுகிறது. இயக்கம், உணர்ச்சி, சுவை மூன்றையும் தூண்டும் முத்திற மண்டை உணர்வு நரம்புக்கோளாறுக்கும் பயன்படுகிறது.
carbamino haemoglobin : கார்பாமினோ ஹேமோகுளோபின் : கார்பன்டையாக்சைடுக்கும், இரத்தத்திலுள்ள குருதி உருண்டைப் புரதத்திற்கும் (ஹேமோகுளோபின்) இடையிலுள்ள கூட்டுப் பொருள்.
carbaryl : கார்பாரில் : தலைப்பேனுக்குப் பயன்படும் மருந்து.
carbenoxolone : கார்பெனோக் சோலோன் : அடிவயிற்று நோய்களைக் குணப்படுத்தும் மருந்து. ஆனால், சிறுகுடல் புண்களை இது ஆற்றாது. carbidopa : கார்பிடோப்பா : பார்க்கின்சன் நோய் எனப்படும் அசையா நடுக்க நோய்க்குச் சிகிச்சையளிப்பதில் லவோடோப்பா என்ற மருந்துடன் சேர்த்துப் பயன் படுத்தப்படும் டிகார்போக்சிலேஸ் தடுப்பான்.
carbimazole : கார்பிமாசோல் : கேடயச்சுரப்பு எதிர்ப்பு மருந்து. அயோடினும், டைரோசினும் இணைவதைத் தடுக்கிறது. இது, மெதில் தயோரா சிலைவிட வீரியம் மிக்கது. குறைந்த நச்சுத் தன்மையுடையது. கேடயச் சுரப்புக் கோளாறுகளுக்கு மருந்தாகப் பயன்படுகிறது.
carbohydrate : கார்போஹைடிரேட் (கரிநீரகி); மாவுச்சத்து; மாவுப் பொருள் : மாச்சத்து வகை, சர்க்கரை, பழவெல்லம் முதலிய பொருள்களின் இனம், கார்பன், ஹைட்ரஜன், ஆக்சிஜன் அடங்கிய கரிமக்கூட்டுப்பொருள். தாவரங்களில் இயற்கையில் நடைபெறும் ஒளிச்சேர்க்கை முறையின்படி உருவாகிறது. கார்போ-ஹைட் ரேட்டுகள் வெப்பத்தை உண்டாக்கக் கூடியது.
carboluria : வண்ணச் சிறுநீர் : பசுமை நிறமான அல்லது அடர் வண்ணமுடைய சிறுநீர், கார்பாலிக் அமில நச்சின் போது கார்பாலிக் அமிலம் வெளியேறுவதால் இந்த நிறம் ஏற்படுகிறது.
carbon : கார்பன் (கரிமம்); கரியம்; கரி : உலோகத் தொடர்பற்ற தனிமம். உயிர்ப் பொருள்கள் அனைத்திலும் இது உள்ளது. கார்பன்டை யாக்சைடு என்னும் வாயுவாக உள்ளன. பல் உள்ளெரிதலிலும், வளர்ச்சிதை மாற்றத்திலும் இது ஒரு கழிவுப் பொருள். மூச்சு விடும்போது கார்பன்டையாக்சைடு வெளி ஏறுகிறது கார்பன்மானாக்சைடு ஒரு நச்சு வாயு.
carbon dioxide CO2 2 : கார்பன்டையாக்சைடு (CO2) : கார்பனின் இறுதியான வளர்சிதை மாற்றப் பொருள். இது நிறமற்ற, மணமற்ற வாயுக் கூட்டுப்பொருள். இது உணவில் அடங்கி உள்ளது. இது பெரும்பாலும் நுரையீரல்கள் வாயிலாகவும், சிறிதளவு சிறுநீர், வியர்வை வழியாகவும் வெளியேற்றப்படுகிறது. குருதி வடிநீரில் இருக்கும் CO2, அளவு, நீர்க் கலவைக் கரைசல் வடிவத்துடன் இணைந்து கார்போனிக் அமிலமாக உருவாகிறது. இது நோய் நீக்கக் குளிர்பதனத்தில் பயன்படுத்தப் படுகிறது.
carbonaemia : கார்போனிக் அமில மிகைக் குருதி : குருதியில் கார்போனிக் அமிலம் அளவுக்கு மிகுதியாக இருத்தல்.
carbonate : கார்போனேட் : கார்போனிக் அமிலத்தின் ஓர் உப்பு. carbonic anhydrase : கார்பானிக் நீர்நீக்கி : செரிமானப் பொருள் (என்சைம்) அடங்கிய ஒரு துத்தநாகம். இது திசுக்களிலிருந்து இரத்தத்திற்கு கார்பன்டையாக்சைடை மாற்றுவதற்கு உதவுகிறது. கார்பானிக் அமில மானது கார்பன்டையாக்சைடாவும், நீராகவும் பகுத்துச் சிதைவதை ஊக்குவிப்பதன் மூலம் பல்லடிக் காற்றுக்கும் கார்பன்டையாக்சைடை மாற்றுகிறது.
carbon monoxide CO : கார்பன் மானாக்சைடு (CO2) : நிலக்கரியைத் திறமையின்றியும் அரை குறையாகவும் எரியவிடுவதால் உண்டாகும் ஒரு நச்சுவாயு. இது நிறமற்றது மணமற்றது; சுவையற்றது. இதனைப் புலன்களால் கண்டறிய இயலாது. இந்த வாயுவினால், உணர் விழப்பு, மிகை நரம்பியக்கம், மயக்கம், நரம்புச் சேதம், நெஞ்சுப்பைக் குருதிப்பற்றாக் குறை, நெஞ்சுப்பைப் பிறழ்வு இதயத்துடிப்பு போன்றவை ஏற்படும். எந்திரமுறைக் காற்றோட்டத்துடன் 100% ஆக்சிஜன் செலுத்தி இதற்குச் சிகிச்சை யளிக்கப்படுகிறது.
carbon tetrachloride CCI : கார்பன் டெட்ராக் குளோரைடு (CCl) : ஈதர் போன்ற மணமுடைய தெளிவான நிறமற்ற திரவம். இது நச்சுத் தன்மை யுடையது. இதனால், ஈரலிலும், சிறுநீரகத்திலும் கடுமையான செயலிழப்பு ஏற்படுகிறது.
carbonyl : கார்போனில் : கார்பன் மானாக்சைடின் ஈரணுடைய முலஅனு.
carboplatin : கார்போபிளாட்டின் : உயிரணு நஞ்சேற்றப் பொருள் அடங்கிய ஒரு பிளாட்டினம். கரு அண்டப்புற்று நோயைக் குணப்படுத்துவதில் பயன்படுத்தப்படுகிறது.
carboxyhaemoglobin : கார்போக்சிஹேமோகுளோபின் : கார்பன்மானாக்சைடும் ஹேமோகுளோபினும் இணைவதால் உண்டாகும் ஒரு நிலையான கூட்டுப்பொருள். இதன் மூலம் இரத்தச் சிவப்பணுக்கள் தங்கள் சுவாசப் பணியை இழக்கின்றன.
carboxylase : கார்போக்சிலேஸ் : அமினோ அமிலங்களிலிருந்து கார்போக்சில் குழுமத்தை அகற்றுவதை ஊக்குவிக்கிற ஒரு செரிமானப் பொருள்.
carboxylation : கார்போக் சிலேற்றம் : ஹைடிரஜனுக்குப் பதிலாக ஒரு கார்போக்சில் மூலக் கூறினை ஏற்றுதல்.
carbrital : கார்பிரிட்டால் : கார்புரோமால், பென்டோபார் பிட்டோன் தயாரிப்புகளின் வணிகப் பெயர். carbromal : கார்புரோமால் : ஒரு வகைத் தூக்கமருந்து.
carbuncle : அரசபிளவை; பிளவைக்கட்டி; பிளவை : பல மயிர் மூட்டுப்பைகளிலும், சுற்றுப்புறத் தோலடித் திசுக்களிலும் ஏற்படும் கடுமையான கட்டி. இதில் சீழ் வெளி வருவதற்குப் பல வாய்கள் இருக்கும்.
carcholin : கார்கோலின் : கார்பக்கால் என்ற மருந்தின் வணிகப் பெயர்.
carcinogen : புற்றுத் தூண்டு பொருள்; (கார்சினோஜீன்), புற்று ஊக்கி; புற்றுச்சினை : புற்றுநோய் வளரத் தூண்டுகிற ஒருபொருள் அல்லது கிருமி.
carcinogenesis : புற்று நோயாக்கம் : புற்றுநோயை வரவழைத்தல்,
carcinogenic : புற்றுநோய் சார்ந்த : புற்றுநோய் உண்டாக்குகிற.
carcinoid syndrome : புற்றுப் போல் கட்டி; புற்றுருவான : குடல் வாலில் உண்டாகும் உயிர்த் தசைமங்களைப் பொறுத்து உக்கிர வேகமுடையதாகவும், மருத்துவத்தைப் பொறுத்துப் பெரும்பாலும் கடுமையின்றியும் இருக்கும் கட்டி. இதிலிருந்து செரோட்டோனின் எனப்படும் பொருள் சுரக்கிறது. இப்பொருள், மிருதுவான தசையைத் தூண்டி, வயிற்றுப் போக்கு (பேதி), ஈளை நோய் சார்ந்த இசிப்பு, முகத்தின் நரம்பு நாளங்களில் குருதிப் பாய்ச்சல் போன்ற கடுமையான நோய்களை உண்டாக்குகிறது.
carcinoma : எலும்புத் தசைப் புற்று; பிளவை; புற்றுநோய் : எலும்புத் தசை, உயிரணுக்கள், உள்ளுறுப்புகள் போன்ற புற அடர் படலத் திசுக்களிலும் சுரப்புகளிலும் புற்று நோய் போன்ற வளர்ச்சி உண்டாதல். இதில் நோய்க்குறிகள் புலனாவதில்லை. இதிலுள்ள உயிரணுக்கள், புற்றுநோய் உயிரணுக்களைப்
வற்றில் இது முக்கியமாக ஏற்படுகிறது.
carcinomatosis : புற்றுநோய் பரவல்; புற்று மையம் : உடல் எங்கும் புற்றுநோய் பரவு வதற்குரிய ஒரு நிலை.
carcinomatous : புற்றுநோய்க்குரிய.
carcinosarcoma : எலும்பு திசுப் புற்று : எலும்புத் தசைப்புற்று, சிகப்புற்று இரண்டின் தனிமங்களையும் உள்ளடக்கிய ஒர் உக்கிரமான கட்டி
cardia : உணவுக் குழாய் வாயில்; இரைப்பை வாய்; சுரப்பிலா இரைப்பை பகுதி; இதய முனை : இணைப்பையை நோக்கித் திறந்திருக்கும் உணவுக் குழாய் வாயில்.
cardiac : 1 .நெஞ்சுப்பைக்குரிய : இதயம் சார்ந்த 2. இரைப்பையின் மேற்புறத்துக்குரிய; உணவு அடைப்பு : தடங்கல் இல்லா இருந்தும் இரைப்பைக்குள் உணவு செல்ல முடியாதிருத்தல். பாதிக்கப்பட்ட உணவுக்குழாயின் சில பகுதிகளில் தசையடுக்குகளினுள் நரம்புக்கணு உயிரணுக்கள் அழிந்துபடுவதால் இது உண்டாகிறது.
மாரடைப்பு : மூளைப் பகுதிக்குப் போதிய இரத்த ஒட்டத்தைச் செலுத்தும் இதயத்தின் நடவடிக்கை நின்று போவதால் மாரடைப்பு உண்டாகிறது.
cardiac arrest : இதயம் நிற்றல்.
cardiac-cathetrization : இதய அழுத்த அளவீடு.
cardiac hypertrophy : இதய வீக்கம்.
cardiac muscle : இதயத் தசை.
cardialgia : நெஞ்சுப்பை எரிச்சல்; நெஞ்சுவலி : இரைப்பையின் மேற்புறத்தண்டை ஏற்படும் எரிச்சல்.
cardiectomy : நெஞ்சுப்பை முனை அறுவை : இரைப்பையின் நெஞ்சுப்பை முனையில் அறுவை செய்தல்.
cardioangiology : இதய-குருதி நாள ஆய்வியல் : இதயம் மற்று குருதி நாளங்கள் பற்றிய உயிரியல்.
cardiocal : நெஞ்சுக்குரிய.
cardiochalasia : சுருங்குதசைத் தளர்ச்சி :இரைப்பையின் நெஞ் சுப்பைச் சுருங்கு தசைகள் தளர் வடைதல். cardiodilator : இதய விரிவாக்கி : இரைப்பை உணவுக்குழாய் இணைப்பையை பிரிவாக்குவதில் பயன்படுத்தப்படும் ஒரு சாதனம்.
cardiogenic : நெஞ்சுப்பை நோய்; இதயம் சார்ந்த : குருதிநாளங் களில் குருதியுறைவு (குருதிக் கட்டு) ஏற்படுதல் போன்ற நெஞ்சுப்பை சார்ந்த நோய்.
cardiogram : நெஞ்சுத் துடிப்புப் பதிவு வரைவி; இதய மின்னலை வரைவி : நெஞ்சுத் துடிப்பளக்கும் கருவிபதிவு செய்த நெளிவரை.
cardiograph : நெஞ்சுத் துடிப்புப் பதிவு வரைவு மானி; இதயத் துடிப்பு வரைவி : நெஞ்சுத் துடிப்பைப் பதிவு செய்யும் கருவி.
cardioid : நெஞ்சுப்பை வடிவான; இதயவடிவம் : நெஞ்சுப்பை வடிவான வளைவு.
cardioinhibitory : இதய செயற்பாட்டுத்தடை : இதயத்தின் செயற் பாட்டைத் தடை செய்தல்.
cardiology : இதயவியல் : இதயத்தின் கட்டமைப்பு, செயற்பாடு, இதயத்தில் உண்டாகும் நோய்கள் அவற்றைக் குணப்படுத்தும் முறைகள் ஆகியவற்றை ஆராயும் மருத்துவ அறிவியல் துறை.
cardiolipin : நெஞ்சுப்பை கொழுப்பு : மேகநோய்க்கான குருதி வடிநீர்ச் சோதனைகள் பயன்படுத்தப்படும் இரத்தக் கிருமிபோன்ற காப்பு மூலத் தீர்வுப்பொருள்களுடன் கூடிய பாலூட்டி இதயத்தின் ஃபாஸ்போ கொழுப்புப் பொருள்.
cardiologist : இதயவியலறிஞர் : இதய நோய்களைக் குணப் படுத்துவதில் துறைபோகிய ஒரு மருத்துவ வல்லுநர்.
cardiolysis : இதயப் பகுப்பாய்வு : இதயத்தைச் சுருக்குகிற பசை களைப் பிரித்தெடுப்பதற்கான ஒர் அறுவைச் சிகிச்சை நடை முறை.
cardiomalacia : இதயத் தசை இளக்கம் : இதயத்தசையை மென்மையாக்குதல்.
cardiomegaly : இதய விரிவாக்கம்; பேரிதயம்; இதயவீக்கம் : இதயம் விரிவடைதல்.
cardiomyopathy : இதயத் தசைக் கோளாறு; இதயத் தசைநோய்; இதயத்தசைவழு : இதயத்தசையில் ஏற்படும் கடுமையான கோளாறு. இந்த நோய்க்கான காரணம் அறியப்படவில்லை. நெஞ்சுப் பையின் உள்வரி மென்தோலில் அல்லது சில சமயம் நெஞ்சுப் பையை முடிக் கொண்டிருக்கும் சவ்வில் பெரும்பாலும் இது உண்டாகிறது.
cardiomyopexy : இதயத் தசை இணைப்பு : தசையுறைக்கு இரத்தம் செல்வதை அதிகரிப்பதற்காக இதயத்தசைக்கு அல்லது இதய மேலுறைக்கு நெஞ்சுத்தசையைப் பொருத்துதல் போன்ற ஒரு தசைப் பகுதியை அறுவைச் சிகிச்சை மூலம் பொருத்துதல்.
cardiomyotomy : இதயத் தசை ஒட்டறுவை : உணவுக் குழாய் வாயிலுக்கான அறுவைச் சிகிச்சை இதய-உணவுக்குழாய் சந்திப்பு வெட்டுப்பட்டிருந்தால், அவற்றை இணைப்பதற்கு இந்த அறுவைச் சிகிச்சை செய்யப்படுகிறது.
cardiophone : இதய ஒலி வரைவி; இதய ஒலிக்கருவி; இதய ஒலி பேசி : இதய ஒலிகளைக் கேட்பதற்கு உதவும் ஒலிக்கருவி. இதயத்துடிப்பினை அளவிட்டுப் பதிவு செய்கிற மின்னணுவியல் சாதனத்தின் மூலம் நாடித் துடிப்பினை வரைபடமாக வரைய இது உதவுகிறது. கருப்பைச் சிசுவின் நாடித் துடிப்பை அறியவும் இதனைப் பயன்படுத்தலாம்.
cardioplegia : நெஞ்சுபையடைப்பு; இதயச் சுருக்கம் நிறுத்தல் : திறந்தநிலை இதய அறுவைச் சிகிச்சையின்போது, நெஞ்சுப்பையின் தசைப்பகுதியின் அசைவைக் குறைப்பதற்காக மின் எந்திரவியல் மூலம், மருந்து அல்லது வெப்பத்தணிப்பு (hypothermia) மூலம் செயலிழக்கச் செய்தல்.
cardiopulmonary : இதயம்-நுரையீரல் சார்ந்த ; இதயம், நுரையீ ரல்கள் இரண்டும் தொடர்பான திறந்தநிலை இதய அறுவைச் சிகிச்சையின்போது இதயநுரையீரல் பக்கவழி பயன் படுத்தப்படுகிறது. இரத்த ஒட்டத்திலிருந்து இதயமும், நுரையீரல்களும் நீக்கப்பட்டு, அவற் றுக்குப் பதிலாக ஒர் இறைப்பு ஆக்சிஜனேற்றி பயன்படுத்தப் படுகிறது. . . .
cardiopyloric : நெஞ்சுப்பை-சிரைப்பை தொடர்புடைய : நெஞ்சுப்பை மற்றும் இரைப்பை தொடர்புடைய.
cardiorator : இதயத்துடிப்பு பதிவுக்கருவி : இதயத்துடிப்பினைக் கண்ணால் பார்க்கும் படி பதிவுசெய்யும் கருவி.
cardiorenal : இதயம்-சிறுநீரகம் சார்ந்த; இதய நீரக : இதயம், சிறுநீரகங்கள் இரண்டும் தொடர்பான.
cardiorespiratory : இதயம் சுவாச மண்டலம் சார்ந்த; இதய மூச்சு : இதயம், சுவாச மண்டலம் இரண்டும் தொடர் புடைய.
cardiorraphy : இதயச்சுவர் தையல் : வழக்கமாக காயங்களுக்கு அறுவைச் சிகிச்சையில் பயன் படுத்துவதுபோல், இதயச் சுவருக்குத் தையலிடுதல். cardioscope : உள் இதயச் சோதனைக் கருவி : இதயத்தின் உட்பகுதியைப் பரிசோதனை செய்வதற்காக, ஆடிகளும், ஒளிச்சுடரும் பொருத்தப்பட்ட ஒரு கருவி.
cardiospasm : நெஞ்சுப்பைச் சுருக்கம் : உணவுக்குழாயின் முனைகோடியின் இயக்கக் கோளாறு, இரைப்பையின் உணவுக்குழாய் திறப்புக் குழாய் தளர்ச்சியடையத் தவறுதல்.
cardiothoracic : இதயம்-மார்புக் குழி சார்ந்த; இதய மார்பு : இதயம், மார்புக்குழி இரண்டும் தொடர்புடைய சிகிச்சையின் ஒரு தனிப்பிரிவு.
cardiothoracic ratio : இதய மார்புக்கூட்டு விகிதம் : விலா எலும்புகளுக்குள்ள மார்புக் கூட்டின் அகலத்தில் இதயத்தின் அகலத்தின் விழுக்காடு. இதயத்தின் குறுக்கு வெட்டு விட்டம், எலும்பு மார்புக் கூட்டின் அகலத்தில் 50% குறைவாக இருக்க வேண்டும். இதய விரிவாக்கத்தில் இந்த விகிதம் அதிகமாக இருக்கும்.
cardiotocography : சூல்சிசு இதயத்துடிப்பு அளவீடு : கருப்பையில் இருக்கும் குழந்தையின் இதயத்துடிப்பு வீதத்தை அளவிடுவதற்கான ஒரு நடைமுறை. இதனை ஒரு புற ஒலிக்கருவி மூலமாக அல்லது கருப்பையி லிருக்கும் குழந்தையின் கபாலச் சருமத்தில் ஒரு மின்முனையைப் பொருத்தி, இந்த இதயத் துடிப்பு வீதம் பதிவு செய்யப்படுகிறது. குழந்தை பிறப்பதற்கு முன்கருவை அடுத்துச் சுற்றியுள்ள சவ்வுக்குழியினுள் ஒர் அக இறங்கு குழலைச்செலுத்தி அல்லது தாயின் அடிவயிற்றில் ஒரு புற நுண்ணிடை இயக்க மானியை வைத்து தாயின் அடிவயிற்றுச் சுருக்கத்தையும் அளவிடலாம்.
cardiotomy syndrome : இதய அறுவைச் சிகிச்சை நோய்க் குறிகள் : இதய அறுவைச் சிகிச்சையினைத் தொடர்ந்து, காய்ச்சல் குலையுறை அழற்சி, நுலையீரல் உறைச்சொரிவு ஆகியவை ஏற்படுதல்.
cardiac arrest : இதயம் நிற்றல் : அறுவைச் சிகிச்சை நடந்த பல வாரங்களுக்கு அல்லது மாதங்களுக்குப் பிறகு இது ஏற்படலாம். இது ஒரு தன்னியக்க ஏமத்தடைவினை என்று கருதப்படுகிறது.
cardiotoxic : இதய நச்சுப்பொருள்; இதய நச்சு : இதயத்திற்குத் தீங்கு விளைக்கும் மருந்து எதனையும் இது குறிக்கும்.
cardiovalvulitis : இதயத் தடுக்கிதழ் அழற்சி : இதயத் தடுக்கிதழ்களின் வீக்கம். cardiovalvulotome : இதயத்தடுக்கிதழ் அறுவைக் கருவி : இதயத் தடுக்கிதழின் ஒரு பகுதியை வெட்டியெடுப்பதற்குப் பயன்படுத்தப்படும் கருவி.
cardiovascular : இதயம் குருதி நாளம் சார்ந்த; இதயக் குழலிய ;இதயம், குருதி நாளங்கள் இரண்டும் தொடர்புடைய.
cardioversion : இதயத்துடிப்பு மீட்பு; இதயத் திருப்பம் : இதயத் துடிப்பினை இயல்பான நிலைக்கு மீட்பதற்காக மின்னியல் சாதன அதிர்ச்சியைப் பயன்படுத்துதல்.
carditis : இதய வீக்கம்; இதய அழற்சி : நெஞ்சுப்பை அழற்சி.
cardophyllin : கார்டோஃபைலின் : அமினோஃபைலின் என்ற மருந்தின் வணிகப் பெயர்.
Cardtest : அட்டைச் சோதனை : எலும்புகளிடையிலான தசை களின் முழுமைத் திறனைச் சோதனை செய்வதற்காக, நோயாளிகள் விரல்களை முற்றிலும் நேராக நீட்டி வைத்துக் கொண்டு கையை காட்டும்படி கூறப்படுகிறார். விரல்களுக்கிடையிலான பிளவில் ஒரு விறைப்பான காகிதக்கற்றை செருகப்படுகிறது. விரல்களுக்கு இடையே அதனைப் பற்றிக் கொள்ளும்படி அவர் கேட்டுப்படுகிறார். இயல்பாக அவ்வாறு பற்றிக்கொள்கிற விரல்கள் எதிர்ப்பைக்காட்டும். எலும்புகளுக்கு இடையிலான தசைகள் பலவீனமாக இருந்தால் விரல்களின் பிடிப்பு பலுவீனமாக இருக்கும். காகிதம் பிளவு வழியாக நழுவி விழுந்து விடும்.
care : கவனிப்பு : கவலைக்கிடமாக உள்ள நோயாளிகளைத் தீவிரமாகக் கவனித்தல், முதலில் நோய் பீடித்த ஒருவரின் அடிப்படை மருத்துவக் கவனிப்பு: ஒரு மருத்துவ வல்லுநர் ஒரு மருத்துவரை இரண்டாம் நிலையில் கவனித்தல்; விரிவான மருத்துவக் கவனிப்புக்காக அலுவலர்களும், கருவிகளுடைய ஒரு பெரிய மருத்துவமனையில் ஒரு நோயாளியைக் கவனித்தல்.
caries : பல் சொத்தை; எலும்புத் திசு மரிப்பு; சொத்தை : பல் சொத்தையாதல், எலும்பு உள்ளழிவு.
carina : குரல்வளை அடிக்கட்டை; கவை : குரல்வளை இரு மூச்சுக் குழாய்களாகப் பிரியும் இடத்தில் உள்ள அடிக்கட்டை (கீல்) வடிவ குருத்தெலும்பு மூலம் முனைப்பாகக் காட்டப்படும் அடிக்கட்டை அமைப்பு.
cariogenic : பல் சொத்தை ஊக்கிக் கிருமி : பல் சொத்தையினை உண்டாக்கும் கிருமி எதுவும். carious : பல்சொத்தை சார்ந்த : 1. பல்சொத்தை தொடர்புடைய, (2) குழிகள் உள்ள பற்கள்.
carlen's tube : கார்லன் குழாய் : நுரையீரல்களின் மூச்சுப்பை யின் கொள்திறனை அளவிடுவதற்குப் பயன்படுத்தப்படும் இரட்டை ஒளிர்வு இதய உள்ளுறைச் செருகு குழல். ஸ்காண்டிநேவிய குரல்வளை நோய் வல்லுநர் இ. கார்லன் என்பாரின் பெயரால் அழைக் கப்படுகிறது.
carmitine : கேமிட்டின் : வளர் சிதை மாற்றம் செய்யக்கூடிய பால்மிட்டிக் மற்றும் கொழுப்பு அமிலங்கள் போன்ற வேதியியல் பொருள்.
carminative : வயிற்று உப்புச மருந்து; இரைப்பைக் குடல் வலி நீக்கி; பசியூட்டி : வயிற்று உப்புசத்தை நீக்குகிற மருந்து இல வங்கப்பட்டை, கிராம்பு,இஞ்சி, ஜாதிக்காய் போன்றவை இந்த வகையைச் சேர்ந்தவை.
carmustine : கார்மஸ்டின் : உடற்கட்டி எதிர்ப்பு நைட்லோ சூரியா எனப்படும் ஒரு கூட்டுப்பொருள். (BCNU).
carnal : பாலுணர்வு சார்ந்த : புலனுணர்வுக்குரிய, சதை வேட்கைகள் தொடர்பான.
carneous mole : தசைப்பிண்டம் : கருப்பையினுள் உள்ள ஒரு தசைக் கட்டி. இது இரத்தக் கட்டி, கருச்சிதைவினால் வெளி ஏறாமல் இருக்கும் இறந்து போன கருச்சிசு அல்லது அதன் பகுதி ஆகியவற்றினாலானது.
carnification : திசு மாற்றம் : எலும்பு-ஈரல் முதலிய உறுப்புக்கள் தசை அல்லது தசைநார் போன்ற பொருளாக மாற்ற மடைதல்,
carnity : திசு மாறுபாடு : எலும்பு -ஈரல் முதலியவற்றைத் தசை அல்லது தசைநார் போன்று மாற்று, தசை அல்லது தசை நார் போன்று மாறுபடு.
carnosity : மிகைதசை வளர்ச்சி : உடம்பில் மிகையாய்த் தோன்றும் தசை வளர்ச்சி.
carotenaemia : கரோட்டினேமியா : இரத்தத்தில் கரோட்டின் இருத்தல். இதனால், தோல் மஞ்சள் நிறமாக மாறுகிறது.
carotenes : கரோட்டீன்; மஞ்சளம் : இயற்கையாகக் கிடைக் கும் நிறமிகளின் தொகுதி. இது ஆல்ஃபா, பீட்டா, காமா என்ற மூன்று வடிவங்களில் உள்ளது. இதில் பீட்டாவடிவம், உடலில் வைட்டமின்-A ஊட்டச்சத்தாக மாற்றப்படுகிறது.
carotenoids : கரோட்டின் நிறமிக் குடும்பம் : இயற்கையில் கிடைக்கும், செம்மஞ்சள் வண்ணமுள்ள சுமார் 100 நிறமிகளின் தொகுதி. இவை பெரும்பாலும் செடிகளில் காணப்படுகிறது. இவற்றில் சில கரோட்டின்கள் ஆகும்.
carotid; கழுத்துத் தமனி; தலைத் தமனி : கழுத்தின் இருபுற முள்ள பெரும் குருதி நாளங்கள் இரண்டில் ஒன்று இது தலைக்குக் குருதியை கொண்டு செல்கிறது.
carphology : சன்னிச் சேட்டை : உணர்வு தன்வசமிழந்த நிலையில் படுக்கை, துணி முதலியவற்றை தாறுமாறாகப் பிடித்து இழுத்தல்.
carotidynia : கரோட்டிடைனியா : ஒருபக்கம் கழுத்தின் மத்தியில் உற்பத்தியாகி, அதே பக்கத்து முகம், காது, தாடை, பல் அல்லது கழுத்துக்குக் கீழே வரை ஒரேசமயத்தில் அவ்வப்போது பரவுகிற இலேசான வலி. இது கழுத்து தமனி மீதான தொட்டுணர்வு மென்மை, அதன் மேலுள்ள திசுக்களின் உணர்விழப்பு ஆகியவற்றுடன் ஏற்படுகிறது.
carpal : மணிக்கட்டு எலும்பு : மணிக்கட்டிலுள்ள எலும்பு எதுவும்.
carpal tunnel syndrome : மணிக்கட்டு எலும்புக்குழாய் நோய்க் குறித் தொகுப்பு : கையிலுள்ள நடுநரம்புப் பகிர்மானப் பகுதியில் ஏற்படும் இரவு நேர நோவு, மரமரப்பு. கூச்சம், ஆகியவை தசை நார்த்தளையின் கீழே நரம்பு செல்லும்போது ஏற்படும் அழுத்தம் காரணமாக இந்நோய் உண்டாகிறது. நடுத்தர வயதுப் பெண்களுக்கு இந்த நோய் பெரும்பாலும் உண்டாகும்.
carpometacarpal : மணிக்கட்டு; எலும்பு மண்டலம் தொடர்பான : மணிக்கட்டு, உள்ளங்கை எலும்புகள், அவற்றை இணைக்கும் தசைநார்கள் ஆகியவை தொடர்புடைய.
carpopedal : கைகால் இசிப்பு : கைகள், பாதங்கள் தொடர்பு டைய நோய் உறுப்புச் சுருக்கம் காரணமாக உண்டாகும் முறை நரப்பிசிவில் கைகள் பாதங்களின் இசிப்பு ஏற்படுகிறது.
carrier : நோய் கிடத்தி; நோய்ப் பரப்பி; தாங்கி : தான் நோய்க்குட்படாமல் நோய்க் கிருமியைப் பரப்பும் உயிரினம்.
carrion's disease : கேரியோன் நோய் : வேளாண்மைப் பணி களினால் உண்டாகும் ஒருவகை நோய், இந்த நோய்க்கிருமிகளைத் தன் உடலுக்குள் தானே ஊசியால் செலுத்திக்கொண்டு இறந்து போன டேனியல் கேரியோன் என்ற பெரு நாட்டு மாணவன் பெயரால் இது அழைக்கப்படுகிறது.
cartiage : குருத்தெலும்பு; குருத்து : அழுத்தத்தைத் தாங்க வல்ல அடர்த்தியான இணைப்புத் திசு. இது செயற்படும் முறை யைப் பொறுத்து இது பல வகைப்படும். ஒரு குழந்தையின் எலும்புக்கூட்டில் அதிகமான குருத்தெலும்புகள் உள்ளன, குழந்தை வளர்ந்து உரிய வயதடையும்போது இந்தக் குருத்தெலும்புகளில் பெரும் பாலானாவை எலும்புகளாக மாறி விடுகின்றன.
cartilaginoid : குருத்தெலும்பு போன்ற.
cartiloginous : குருத்தெலும்புக்குரிய; குருத்தெலும்பாலான.
caruncle : தசைத் திரளை; தசை மேடு : வான்கோழி முதலிய பறவைகளின் தலையில் அல்லது கழுத்தில் இருப்பதைப் போன்ற தசைத்திரளை முதிரா இளமைப் பருவத்தில் பெண் குறியின் புறவாயை முடியிருக்கும் தாள் போன்ற மைத் திரைச் சவ்வில் ஏற்படும் தசைத் திரளையானது கன்னிமைத் திரைச் சவ்வினைக் கிழித்து விட்டுக் கருப்பைக் குழாய் வாயைச் சூழ்ந்து கொள்கிறது. கண்ணீர் சார்ந்த தசைத் திரளானது, கண்ணின் உட் கோணத்தில் தசைத் திரளையாக முனைப்பாக வளர்கிறது.
carvallo's sign : கார்வாலோ ஒலிக்குறி : இரைப்பைக் காப்பு வாயில் மூவிதழ் சுருக்கமுடைய நோயாளிகள் மூச்சிழுக்கும் போது இதயச் சுருக்கத்துக்கு முன்பு ஏற்படும் முணுமுணுப்பு ஒலி அதிகமாக இருத்தல். இதனை உட்கார்ந்த நிலையில் நன்கு கேட்கலாம். ரிவெரோகார்வாலோ என்ற மெக்சிக்கோ மருத்துவரின் பெயரால் இது அழைக்கப்படுகிறது.
carver : செதுக்குக் கத்தி : பல் மருத்துவத்தில் உலோகப்பூச்சு அல்லது மெழுகு மாதிரியை செதுக்குருவாக்கம் செய்வது போல் ஒரு பொருளை வடிவம் அமைப்பதற்குப் பயன் படுத்தப்படும் ஒரு கத்தி அல்லது ஒரு கருவி.
cascade : தொடர்செயல்முறை : தானே பரப்பும் அல்லது விரிகாக்கம் செய்யும் ஒரு தொடர்ச்சியான செயல்முறை. இதில், இறுதிக் கட்டத்தை எட்டும் வரையில், ஒவ்வொரு செயல்முறையும் அடுத்த செயல் முறையைத் தொடங்கி வைக்கிற வகையில் அமைந்த தொடர் செயல்முறைகள் அமைந்திருக்கும்.
cascara : குடலிளக்கப்பட்டை : குடலிளக்கும் மருந்தாகப் பயன் படும் வட அமெரிக்காவின் கலிபோர்னியா மாநில மரப்பட்டை வகை. இப்பட்டையிலிருந்து மாத்திரைகளும், திரவமும், வடிநீரும் தயாரிக்கப்படுகின்றன.
case : நோய் நிகழ்வு : (1) நோய் நிகழ்தல் (2) ஒரு நோயாளி (3) உறை.
caseate : பாலுறைவு : உறைபாற் கட்டியாக மாறுதல்.
caseation : உறைச்சளிக் கட்டி; பாலாடைக் கூழ்மை : காச நோயில் ஏற்படுவது போன்று ஒரு மென்மையான பால் போன்ற சளிக்கட்டி உருவாதல்.
case-book : மருத்துவத் தொழில் முறைக்குறிப்பேடு.
case hardening : கரியகக் கடும்பதப்படுத்தல் :பரப்பில் கரியக மூட்டுவதன் மூலம் இருப்பைக் கட்டுப்படுத்துதல்.
casein : பால் புரதம் : உறைபால் கட்டியின் அடிப்படைக் கூறு. பால் இரைப்பையில் நுழைந்ததும் உண்டாகிற ஒருவகைப் புரதம். இது கால்சியத்துடன் இணைவதால் திட்பமாகிறது.
caseinogen : பால் புரதமூலம் : பாலிலுள்ள முக்கியமான புரதம். இது நீரில் கரைவ தில்லை. ஆனால் கரிமமில்லா உப்புகளினால் (அனங்க உப்புகள்) இது பாலில் கரைசலாக வைத்திருக்கப்படுகிறது. நீரில் கரையக் கூடியதும் கரைந்து வெப்பத்தால் கட்டியாகக்கூடியதுமான பால் கருப்புரதத்தின் வீத அளவு, தாய்ப்பாலை விடப் பசும்பாலில் அதிகம். பால் உறைவிக்கும் பொருள் (ரென்னின்) இருப்பதால் பால் கருப்புரதம் கரையாத பால் புரதமாக மாற்றப்படுகிறது.
caseous : உறைபாற்கட்டி சார்ந்த : (1) பாற்கட்டியை ஒத்த. (2) திசுக்கள் பாற்கட்டி போல் உருமாற்றமடைதல்.
caseous degeneration : உறை பால் திசுச்சிதைவு : உறைபால் கட்டி போன்ற அமைப்புடைய திசுக்கள் உருவாதல். மேகக்கட்டி காரணமாகத் திசுக்கள் சத்தின்றித் தேய்ந்து சிதைவதால் இது உண்டாகிறது.
Casilan : கேசிலான் : திரவ உணவுகளை மட்டுமே உண்ணக் கூடிய நிலையிலுள்ள நோயாளிகளுக்குப் போதிய புரதம் கிடைக்கும்படி செய்வதற்காகக் கொடுக்கப்படும் ஒருவகைத் தூள் மருந்தின் வணிகப் பெயர். இதில் 90% புரதம் அடங்கியுள்ளது.
Casoni test : நீர்க் கட்டிச் சோதனை : கிருமி நீக்கிய நோய் நீர்த் தேக்கத் திரவத்தை 0.2 மி.லி. அளவு ஊசி மூலம் செலுத்தி செய்யப்படும் சோதனை. வெண்னிறக் கொப்புளம் தோன்று மானால், அது நோய் நீர்த்தேக்கக் கட்டி இருக்கிறது என்பதைக் குறிக்கும்.
cassava : கூவைக்கிழங்கு : நார்ச்சத்து மிக அதிகமாக உள்ள கூவைக் கிழங்கின் வேர், மர வள்ளிக் கிழங்கு.
cassette : ஊடுகதிர்ச்சுருள் பேழை : ஊடுகதிர்ச்சுருளை வைத்திருப்பதற்காக, தீவிரமாக்கிய திரையினையுடைய ஒரு தட்டையான, ஒளி ஊடுருவாத பேழை. படக்சுருள் அல்லது காந்த நாடாவுக்கான ஒரு பேழை. உயிரணுக்கரு மையம் சூழ்ந்த டிஎன்ஏ-இன் ஒரு கூறு. இதற்குப் பதிலாக, இடைமாற்றம் மூலம் மற்றொரு டிஎன்ஏ வரிசையை அமைக்கலாம்.
cast : வார்ப்புரு : (1) பல் மற்றும் தாடையின் ஒரு நேர் படிவம். இதன் மீது பல்தொகுதி ஆதாரங்கள் செய்யப்படுகின்றன. (2) ஒரு பல் கருவியின் மெழுகுப் படிவத்தின் துல்லியமான உலோகப் படிவத்தை எடுத்தல். (3) ஒரு பொருள் எந்த உறுப்பின்மீது படிந்துள்ளதோ அந்த பொருளின் வடிவத்தில் உருவாக்கப்பட்ட பொருள். (4) எலும்புமுறிவு அல்லது இடப்பெயர்வு ஏற்பட்ட இடம் அசையாமல் இருப்பதற்காகப் போடப்படும் இறுக்கமான படைக்கட்டு.
castle's intrinsic factor : கேசில் உள்ளார்ந்த காரணி : இரைப்பையில் சுரக்கும் ஒரு பொருள். இது பி-12 வைட்டமினைச் சீரணிப்பதற்கு இன்றியமையாதது. இந்த வைட்டமின் இல்லை என்றால், கடுங்குருதிச் சோகை உண்டாகும். அமெரிக்க மருத்துவ அறிஞர் வில்லியம் கேசில் என்பவரின் பெயரால் அழைக்கப்படுகிறது.
castor oil : விளக்கெண்ணெய்; ஆமணக்கு நெய் : ஆமணக்கு விதையிலிருந்த எடுக்கப்படும் எண்ணெய். குடலிளக்க மருந் தாகவும், மசகு எண்ணெயாகவும் பயன்படுகிறது. வேனல் கட்டி, புண் ஆகியவற்றுக்கு துத்தநாகக் களிம்புடன் சேர்த்து மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.
castrated : விதையடிப்பு : விந்தகம் (அண்டம்) எனப்படும் விரைகளை அல்லது கரு அண்டத்தை நீக்கு வதன் மூலம் இனப்பெருக்க ஆற்றல் அழிக்கப்படுதல்.
castrate : விதையடி : விரைகளை அல்லது கரு அண்டத்தை நீக்குதல்.
castration : விரை நீக்கம்; ஆண்மை நீக்கம்; காயடித்தல் : ஆண்களின் விரையை அல்லது பெண்களின் கருப்பையை அறுவைச்சிகிச்சை மூலம் நீக்குதல். இயக்கு நீர் (ஹார்மோன்) சார்ந்துள்ள புற்றுநோய்க்கான சிகிச்சையின் ஒரு பகுதியாக இவ்வாறு செய்யப்படுகிறது.
casualty : விபத்து : (1) காயம் அல்லது மரணம் உண்டாகும் ஒரு விபத்து. (2) விபத்தில் காயமடைந்த கொல்லப்பட்ட ஒர் ஆள். (3) மருத்துவமனையில் விபத்து நோயாளிகளுக்கு அவசரச் சிகிச்சை அளிப்பதற்காக தனியாக அமைக்கப்பட்டுள்ள இடை விபத்து அரங்கம்.
casuistics : நோய் ஆய்வியல் : ஒரு நோயின் பொதுவான தன்மைகளை அறுதியிடுவதற்காக நோய் நிகழ்வுப் பதிவணங் களைப் பகுப்பாய்வு செய்தல்.
catabolism (or KATABOLISM) : உயிர்ப்பொருள் மாறுபாடு; வளர்ச் சிதை மாற்றம்; சிதைவியம்; உயிரியச் சிதைவு : உயிர்ப் பிராணியின் உடலில் ஏற்படும் தொடர்ச்சியான வேதியியல் வினைகள். இந்த வினைகளினால், உணவாக உட்கொள்ளப்படும் சிக்கலான பொருள்கள், எளிமையான பொருள்களாகப் பகுக்கப்படுகின்றன. அப்போது ஆற்றல் வெளிப்படுகிறது. இந்த ஆற்றல் உடலின் உயிர்ப் பொருள் கட்டமைப்புக்கும் பிற நடவடிக்கைகளுக்கும் இன்றியமையாதவை.
catabolite : வளர்சிதை மாற்றப் பொருள் : அழிவு உண்டாக்கும் உயிர்ப்பொருள் வேதியியல் மாறுபாட்டில் உண்டாகும் ஒரு பொருள். catacrotic : நாடித்துடிப்பு குறுக்கு வெட்டு : நாடித் துடிப்புப் படியெடுப்பின் கீழ் நோக்கிய கோட்டின் மீது மேல்நோக்கிய குறுக்கு வெட்டு.
catagen : கேட்டஜென் : முடி வளர்ச்சிச்சுழற்சியில் வளர்ச்சிக்கும், ஒய்வுநிலைக்கு மிடையிலான இடைநிலை.
catalase : ஊக்குபொருள் : மனிதர் உயிரணுக்களில் ஹைட் ரஜன் பெராக்சைடு முறிவினை ஊக்குவிப்பதற்காக உள்ள ஒரு செரிமானப் பொருள் (என்சைம்) நொதி.
catalepsy : விறைப்புநிலை : தன்னை மறந்த ஒரு மயக்க நிலை. இந்த நிலையில் முகம், உடம்பு, உறுப்புகள் ஆகியவற்றின் தசைகள் ஒரு விறைப்பான நிலையில் இருக்கும்.
catalysis : இயைபியக்க ஊக்கு விப்பு : தான் மாறாமல் மற்றப் பொருள்களில் வேதியியல் மாற்றம் உண்டாக்கத் துணை செய்தல்.
catalyst : இயைபியக்க ஊக்கி; வினையூக்கி, கிரியா வினையூக்கி; ஊக்கி : இயைபியக்கத்தை ஊக்குவிக்கும் ஒரு மருந்து. இது இந்த வினையின்போது தான் எந்தவித மாற்றமும் அடைவ தில்லை.
catalytic antibody : வினையூக்கத் தற்காப்பு மூலம் : உயிரியல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு செரிமானப் பொருள். இதில் ஒரு ஒற்றைப் பால்படு நோய் எதிர்ப்பொருளின் சேர்ந்து தெரிந்தெடுத்த பிணைப்புப் பகுதிக்குள் புகுத்தப்படும் வினை ஊக்கவினை நடைபெறுகிறது.
catamnesis : சிகிச்சைத் தொடர் வரலாறு : நோயாளியின் சிகிச்சைக்குப் பிந்திய தொடர் வரலாறு.
cataplasm : மாபசை; பற்று : வீக்கத்திற்குக் கட்டுகிற மாப்பசை.
cataplexy : அசைவற்ற நிலை; துயிற்சோர்வு : கடுமையான மன அதிர்ச்சி அல்லது அச்சம் போன்ற உணர்ச்சியினால் தசை விறைப்பு உண்டாகி ஏற்படும் அசைவற்ற நிலை. இந்த நிலையின் போது நோயாளி நினைவுடனேயே இருப்பார்.
cataract : கண்புரைநோய் (கண்படலம்); விழிப்புரை; புரை : முதுமை காரணமாகக் கண்ணின் விழி ஆடியில் வெண்படலம் ஏற்படுவதால் பார்வை மங்குதல். இது பிறவி நோயாகவோ, முதுமை, நோய், வளர்சிதை மாற்றக்கோளாறுகள், நீரிழிவு காரணமாகவோ ஏற்படலாம்.
catarrh : மூக்கடைப்பு; தடுமன்; சளிமூக்கு; கபக்கட்டு : தடுமன்; நீர்க்கோப்பு; சளிச்சவ்வு அழற்சி.
catarrhal : சளிச்சவ்வு அழற்சிக்குரிய.
catatonia : மாறாட்டக் கோளாறு : கரிமம் சாராத கோளாறுகளில் இயக்க முரண்பாடுகள். இதில், அதிகரித்த மனவலிமையும், நிலையான தோரணைகளும் உண்டாகும். இது நினைவு சொல் செயல்மாறாட்டக் கோளாறாகும். இது அடிக்கடி உணர்விழப்புடன் கூடிய பித்த நிலையில் உண்டாகும்.
catatropia : கண்கவிழ் நோய் : இரு கண்களும் கீழ் நோக்கியே பார்த்திருக்கும் ஒரு நிலை.
cat bite fever : பூனைக்கடிக் காய்ச்சல் : பூனைக்கடி காரண மாக பாஸ்டியூரிலா மல்ட்டே சிடோ என்ற கிருமியினால் உண்டாகும் நோய். இதனால் தடுப்பூசி போடும் இடத்தில் கீழ்க்கட்டும், மூட்டுவலியும் உண்டாகிறது.
catecholamine : கேட்டகோலமைன் : உயிரியல் முறையில் மிகுந்த வினையூக்கமுடைய இரண்டு அமீன்களில் ஒன்று. எபினெஃப்ரைன் (அட்ரின லைன்), நோர் எபினெஃப்ரலன் (நோர் அட்ரினலைன்) ஆகியவை அந்த இரு அமீன்கள். இவை நரம்பு மண்டலத்தின் மீது முக்கியமான விளைவைக் கொண்டிருக்கின்றன.
catgut : நரம் பிழை; தையல் நரம்பு : விலங்கின் குடல், தசை நாளங்களிலிருந்து இழைக்கப்படும் நரம்பிழை அல்லது நரம்புக் கம்பி.
cathartic : பேதிமருந்து : குடல் கசடுகளை நீக்குவதற்குக் குடல் இளக்கம் உண்டுபண்ணுகிற பேதியாகிற மருந்து. இது மலக்கட்டு அதிகமாவதைத் தடுக்கிறது.
cathepsin-D : கேத்தெப்சின்-D : கருப்பை இயக்குநீரால் தூண்டப்படும் லைசோசோமல் புரீசாட்னேஸ். மார்பக எலும்புப் புற்றின்போது இதன் அளவை அதிகரிக்கலாம்.
cathersils : கசடு நீக்கம்; தூய்மையாக்கி; (குடல்) கழுவல் : வயிற்றிளக்கம்; பேதி, குடல் கசடு நீக்கம், உளவியலில், மன நோயாளியின் உணர்ச்சியைத் தூய்மைப்படுத்துதல்.
catheter : ஊடு குழல்; வடிகுழாய்; வடிகுழல் : நீர்மம் அல்லது வாயுக்களை உடற் குழாய்களில் ஏற்றவோ வடிய விடவோ உதவும் குழல். இது ரப்பர், நெகிழ்வுக் கண்ணாடி, வெள்ளி போன்ற உலோகங்கள், குழைமப்பொருள்கள் ஆகியவற்றால் தயாரிக்கப் படுகின்றன. அண்மையில், இழைம ஒளியியல் இதய இறக்கும் குழல் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இதிலுள்ள ஒளித் துடிப்புகளைக் கொண்டு இரத்தத்தில் ஆக்சிஜனின் பூரித அளவைக் கணக்கிடலாம்.
catheterise : குழல் செருகல் : ஒர் உறுப்பினுள் இறங்கு குழலைச் செலுத்துதல். பொதுவாக, இது தேங்குபை,குழல் செருகலைக் குறிக்கிறது.
catheterization : இறங்குங்குழல் அளவீடு; குழல் செலுத்துகை : சிறு நீர்ப்பை, இதயக்குழாய், நரம்புகள் ஆகியவற்றை இறக் குங்குழலை இறக்கி அழுத்தத்தை அளவிடுதல்.
cathexis : மனஅவா ஆற்றல் : ஒரு பொருள் அல்லது கருத்து சார்ந்த மனஅவா ஆற்றலின் அளவு.
cathode : எதிர்மின்வாய் : 1. எலக்டிரான்கள் வெளிப்படும் எதிர்மின்வாய். 2. ஒரு வெற்றிடக் குழாயிலுள்ள எலக்டிரான் கற்றை ஆதாரம்.
catholicon : பல நோய் மருந்து : சஞ்சீவி.
cation : நேர்மின் அயனி : எதிர் துருவத்துக்கு நகர்கிற ஒரு நேர்மின்னேற்றத்துடன் கூடிய ஒர் அயனி.
cat-scratch fever : பூனைக்கீறல் காய்ச்சல் : பூனை பிறாண்டுவதால் உண்டாகும், கிருமியினால் பரவும் நோய். இந்நோய் கண்டவர்களுக்கு, பூனை பிறாண்டிய ஒரு வாரத்திற்குப் பிறகு காய்ச்சலும் சுரப்பி வீக்கமும் ஏற்படும்.
cat-scratch disease : பூனை பிறாண்டல் நோய் : பூனை பிறாண்டியதால் அல்லது கடித்ததால் உண்டாகும் நோய். இதில், கொப்புளம், அல்லது நிணநீர் கரணை உண்டாகும். இது ஒரு வகைப் பாக்டீரியத்தினால் உண்டாவதாகும். இது தானே வரம்புறுத்தும் நோய் என்றும் கருதப்படுகிறது.
cauda : வால் : ஒரு வால் அல்லது வால் போன்றதொரு துணையுறுப்பு.
caudal : வால் சார்ந்த : 1) வால் போன்ற கட்டமைப்புடைய. (2) வால் பக்கமாக உள்ள.
caudal anaesthetic : வால்வழி செலுத்தும் மயக்க மருந்து : இடுப்பு மூட்டு முக்கோண எலும்பிலுள்ள வால் குழாயின் வழியாகச் செலுத்தப்படும் மயக்க மருந்து. -
caudate : வாலுடைய : தலை, உடல் என பகுக்கக்கூடிய வளைவான நீண்ட பழுப்புநிறப் பொருள் திரட்சியுடைய.
caul : தலைக் கவச மென்தோல் : மகப்பேற்றின்போது குழந்தை தலையைக் கவிந்துள்ள மென் தோல். cauliflower ear : பூக்கோசுக் காது : குத்துச் சண்டையின் காயங்களினால் நிலையாகத் தடிப்புப் பெற்று விட்ட காது.
cauliflower growth : பூக்கோசு வளர்ச்சி : விரைந்து பரவக்கூடிய, தன்னியல்பாக வளரத்தக்க புற்று நோய் வகை. பாதிக்கப்பட்ட பரப்பில் இது திடீரென ஒரு வீண்தசைத் திரட்சியாக எழுகிறது. causalgia : தோல் நரம்பு வலி; எரிச்சல் வலி; எரிக்குத்து வலி :தோலைச் சார்ந்த நரம்பில் ஏற்படும் புற அதிர்ச்சிப் புண்ணில் இருந்து உண்டாகும் கடும் வேதனை தருகிற நரம்பு வலி, இதனைத் தன்னியல்புப் பிரிவு வலி என்றும் கூறுவர்.
caustic : கடுங்காரம்; எரிகாரம்; எரி : உயிர்ப்பொருளான இழை மங்களை உரித்து தின்னும் எரிச்சல் தரும் பொருள். ஆறி வரும் புண்மீது முதலில் உருவாகும் புதுவளர்ச்சி. திசுக்கள், பால் உண்ணிகள் போன்ற மிகை வளர்ச்சிகளை நீக்குவதற்கு இது பயன்படுகிறது. கார்போலிக் அமிலம். கார் பன்டையாக்சைடுக் குழம்பு, வெள்ளி நைட்ரேட்டு ஆகியவை இவ்வகையைச் சேர்ந்த, மிகுதியாகப் பயன்படுத்தப்படும் பொருள்களாகும்.
cauterisation : சூடுபோடுதல் : நோயுற்ற திசுக்களை அழிப்ப தற்காக அல்லது அவை குணமாவதைத் துரிதப்படுத்து வதற்காக, ஒரு கடுங்காரப் பொருளினால் மின்னோட்டத்தினால், சூட்டுக்கோலினால் சூடுபோடுதல் அல்லது உறையச் செய்தல்.
cauterise : சூடு இடுதல், தீய்த்தல்; மின் வழித் தீய்த்தல்; மின் எரிவு : ஒரு சூட்டுக்கோல் கொண்டு புண்ணைச் சுட்டுத் திசுக்களை அளித்தல்; காரப்பொருளினால் புண்ணைச் சுட்டுத் திசுக்களை அளித்தல்.
cautery : சூட்டுக்கோல் : மின் விசை, வெப்பம், உறையச் செய்தல், சில்வர் நைட்ரேட், பொட்டாசியம் ஹைடிராக் சைடு, நைட்ரிக் அமிலம் போன்ற கடுங்காரப் பொருள் மூலம் திசுக்களை அழிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு சாதனம்.
cavernous : குடைவான : ஆப்பு எலும்பின் இருபுறமும் உள்ள, உள்நாளக் குருதிக்குரிய குடைவான எலும்பு உட்புழை வழி. இது உதடுகள், முக்கு, கண் குழிகள் ஆகியவற்றிலிருந்து இரத்தத்தை வடிக்கிறது. இந்தப் பகுதிகளில் ஏற்படும் குருதி நச்சுப்பாட்டினால், குடைவு எலும்பு வழி அழற்சி உண்டாகிறது.
cavitation : திண்பொருள் குழிவுகள்; பொந்தாதல் : நுரையீரல் காசநோயில் ஏற்படுவது போல குழிவுகள் தோன்றுதல்.
cavitron : கேவிட்ரான் : செவிப்புலன் கடந்த ஒலியலை அறுவைச் சிகிச்சை உடல் நீர் வாங்கி என்ற கருவியின் வணிகப்பெயர்.
cavity : உட்குழிவு; புண் குழி; வளை; பொந்து குழிவு : ஒர் அடைப்புக்குள் உள்ள ஒர் உட்புழை அல்லது துளை அடி வயிற்று உட்குழிவு என்பது உதரவிதானத்திற்கும் கீழே உள்ளது. மண்டையோட்டு உட்குழிவு என்பது மூளை பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ள எலும்புக்கூண்டு ஆகும். மூக்கில் உள்ள உட்குழிவை மூக்கின் இரு முளைகளின் இடைப்பகுதி இரு பாதி களாகப் பிரிக்கிறது.
CCU : இதயக் கவனிப்புப் பிரிவு : இதயக் கோளாறுகளுக்குத் தீவிரச் சிகிச்சையளிக்கும் பிரிவு.
CDH : இடுப்புமூட்டுஇடப் பெயர்வு : பிறவியிலேயே இடுப்பு மூட்டு இடம் பெயர்ந்திருத்தல்.
cedilanid : செடிலானிட் : லானாட் டோசைட்-C என்ற மருந்தின் வணிகப் பெயர்.
cedocard : செடோகார்ட் : சோர் பிடெனிட்ரேட் என்ற மருந்தின் வணிகப் பெயர்.
ceffeinism (caffeism) : காஃபி நஞ்சேற்றம்; காஃபின் நோய் : காஃபி, தேயிலை போன்ற குடிவகைகளிலுள்ள மர உப்புப் பொருளினால் உண்டாகும் கோளாறு நிலை.
ceftriaxone : செஃப்டிரியாக்சோன் : மேகவெட்டை நோயைக் குணப்படுத்தப் பயன்படுத்தப்படும் செஃபாலோஸ்பெரின் என்னும் மருந்து.
cefuroxime : செஃபுரோக்சிம் : பெனிசிலினை எதிர்க்கும் நுண் உயிரிகளுக்கு எதிராகப் பயன் படுத்தக்கூடிய ஒருவகை மருந்து.
celbenin : செல்பெனின் : மெத்திசிலின் என்ற மருந்தின் வணிகப் பெயர்.
celevac : செலிவாக் : மெத்தில் செல்லுலோஸ் என்ற மருந்தின் வணிகப்பெயர்.
cell : ஒருயிரணு : ஒர் உட்கருவை கொண்டுள்ள ஒரு நுண்ணிய ஊன்மம். இரத்தச் சிவப்பு அணுக்கள் போன்ற சில உயிர் அணுக்களில் உட்கரு இருப்பது இல்லை. வேறு சில உயிர் அணுக்களில் பல உட்கருக்கள் உள்ளன.
cell bank : உயிரணு வங்கி : மிகவும் தாழ்ந்த வெப்ப நிலை யில் உயிரணுக்களை உறைய வைத்துப் பாதுகாத்தல்.
cell block : உயிரணுத்தொகுதி : நுரையீரல், இதய மேலுறை, இதயச்செவுள் ஆகியவற்றின் நீர்மங்களில் காணப்படும் சளி, உமிழல், சிதைபொருள் ஆகியவற்றிலிருந்த பெறப்படும் கன் மெழுகில் பதித்த மாதிரிப் பொருள்.
cell counter : உயிரணுக்கணிப்பான் : உயிரணுக்களைக் கணக்கு இடுவதற்காகப் பயன்படுத்தப் படும் ஒரு மின்னணுக் கருவி.
cell culture : உயிரணு வளர்ப்பு : ஆய்வுக்கூடத்தில் உயிரணுக்களை வளர்த்தல்.
cell-free : உயிரணுவற்றவை : உயிரணுக்கள் எவையும் இல்லாதிருக்கிற நீர்மங்கள், திசுக்கள்.
cell junction : உயிரணு சந்திப்பு : இரு உயிரணுக்களிடையிலான அவற்றினால் அளிக்கப்படுகிற ஒட்டுந்தன்மையுடைய உயிரணுக் கிடையிலான சந்திப்புப் பகுதி.
cell kinetics : உயிரணு இயக்கவியல் : உயிரணுக்கள் அவற்றின் வளர்ச்சி, பிளவு ஆகியவை பற்றி ஆய்வு செய்தல்.
cell mass : உயிரணுத் திரள் : ஒர் உறுப்பாக அல்லது உருவமைப்பாக உருவாகிற உயிரணுக்களின் ஒரு தொகுதி.
cellophane : பொதிபொருள் (செலோஃபேன் : மரப்பசைச் சத்தினின்றும் செய்யப்படும் பளிங்குநிறத் தாள் போன்ற பொதி பொருளின் வணிகப் பெயர்.
cellular : உயிரணுச்சவ்வு : உயிரணு தொடர்பான, உயிரணு விலான அல்லது உயிரணுவிலிருந்து பெறப்பட்ட சவ்வுப் பொருள். இது ஒவ்வொரு உயிரணுவையும் சூழ்ந்திருக்கும். இது உயிரணுவுக் குள்ளேயும், அதிலிருந்து வெளியேயும் பொருள்கள் செல்வதைக் கட்டுப்படுத்துகிறது.
cellulitis : இழைம அழற்சி; புரையோடுதல்; உயிரணு அழற்சி
- புறத்தோலுக்கு அடுத்துத் கீழுள்ள இழைமத்தின் அழற்சி அல்லது வீக்கம்.
cellulose : மரக் கூறு (செல்லுலோஸ்) : செடியினங்களின் மரக்கட்டைகளுக்கும் பருத்தி போன்ற இழைமங்களுக்கும் உயிர்மங் களின் புறத்தோட்டுக்கும் மூலமான பொருள்.
celsius : செல்சியஸ் : ஆண்டர்ஸ் செல்சியஸ் (1701-1744) கண்டு பிடித்த நூற்றளவையாகப் பகுக்கப் பட்ட நூற்றளவை வெப்பமானி.
cement : காரை : உரியமுறையில் தயாரிக்கப்படும்போது உறுதியான திரள்பொருளாக இறுகி விடக்கூடிய ஒருபொருள்.
cementitis : பல்காரை அழற்சி : பல்காரையில் ஏற்படும் வீக்கம்.
cementoblast : பல்காரையணு : வளரும் பல்லின் உள்படலத்தின் அல்லது பல் உள் பையின் ஒர் உயிரணு.
cementoclasia : பற்காரைச் சிதைவு : ஒரு பல்லின் வேர்ப் பகுதியின் காரை சிதைந்து போதல்.
cementogenesis : கற்கூழ் காரை வளர்ச்சி : ஒரு பல்லின் பற்கூழின் வேரிலுள்ள காரையின் வளர்ச்சி.
cementum : பற்காரை : பல்லின் வேர்ப்பபகுதியை முடியிருக்கும் சுண்ணமாக மாறிய திசுப் படுகை.
censor : உள்ளுணர்வு; பகுத் தடக்கி : அகமனத்திலுள்ள விரும்பத்தகாத உணர்ச்சிச் சிக்கல்கள் உணர்த் தளத்தில் தோன்றாதபடி தடுக்கும் உள்ளுணர்வு.
census : கணக்கெடுப்பு : மருத்துவ மனையிலுள்ள நோயாளிகளின் எண்ணிக்கையைக் கணக்கெடுத்தல்.
centigrade : சென்டிகிரேடு : 1, 100 பாகை கொண்ட, 2. 100* அளவாகப் பகுக்கப்பட்ட ஒரு வெப்பமானி.
centigram : சென்டிகிராம் : ஒரு கிராமின் நூற்றில் ஒரு பகுதி.
centilitre : சென்டிலிட்டர் : ஒரு லிட்டரில் நூற்றில் ஒரு பகுதி.
centimetre : சென்டிமீட்டர் : ஒரு மீட்டரின் நூற்றில் ஒரு பகுதி அங்குலத்தை 2.54 மூலம் பெருக்குவதன் மூலம் சென்டி மீட்டராக மாற்றலம்.
centiped : பூரான் : இது நூற்றுக் கால் பூச்சிவகையைச் சேர்ந்தது. இது பல பகுதிகளைக் கொண்ட தட்டையான நீண்ட உடலைக் கொண்டது.
central core myopathy : தசை நலிவு உள்மையம் : அது தன் இனக்கீற்று ஆதிக்கம்பெற்ற தசைநலிவுநோயின் உள் மையம். இது கைக்குழந்தைகளிடம் அரிதுயில் நிலையையும், மையம் நோக்கிய தசைநலிவையும் உண்டாக்குகிறது.
central venous pressure : மையச் சிரை அழுத்தம் : வலது துவாரத்திலுள்ள இரத்தத்தின் அழுத்த அளவு. இது ஒர் இறங்கு குழல், ஒரு காற்று அழுத்தமானி ஆகியவற்றின் உதவியுடன் அளவிடப்படுகிறது.
centrifugal : விரிமை வளர்ச்சி; நடு விலகிய : மையத்திலிருந்து புறம் நோக்கி விரிவடையும் போக்குடைய நோய். பெரிய அம்மை (வைசூரி) நோயின் கொப்புளம். இவ்வாறு விரி வடையும் தன்மையுடையது.
centrifuge : விரைவேகச்சுழற்சி எந்திரம்; மையவிலக்கி : வெவ்வேறு எடைச்செறிவுள்ள பொருள்களை விரைவேகச் சுழற்சியி னால் பிரிக்கும் எந்திரம். centrilobular : மைய நுண்ண : ஒரு நுண்ணறையின் மையம்.
centriole : மையக்கழியிழை : விந்தணுக்கசையணுக்கள், உயிர்மக் கதிர்கள் போன்ற ஒரு சில இழைமக் கட்டமைப்புகளில் உள்ள நுண் குழாய்க்ளின் மீச்சேர்ம இணைவுகளின் மையமாக அமைந்துள்ள, விலங்கு உயிர் அணுக்களிலுள்ள கழி போன்ற அமைப்பு. இது ஒர் உயிரணுவின் மையத்தில் காணப்படும். இது பிளவியக்கத்துக்கு முன்னதாக இரு குழவிக்கழியிழைகளாகப் பிளவுபட்டு, பிளவியக்கத்தின்போது எதிர் துருவங்களுக்குச் சென்றுவிடுகிறது.
centripetal : குவிமையப் போக்குடைய; மையநோக்கு அசைவு; மையம் நாடு; நடு ஒன்றிய : மையத்தை நோக்கிச் செல்லும் போக்குடைய நோய். சின்னம் மை (தட்டம்மை) நோய்க் கொப்புளம் இத்தகைய தன்மை உடையது.
centromere : மையப்புள்ளி : ஒரு இனக்கீற்றின் இடுக்குப்பகுதி. இது ஒரு இனக்கீற்றின் இரு கூறுகளை இணைக்கும் புள்ளி.
centrosome : மையக்கீற்று : ஓர் உயிரணுவின் திசுப்பாய்மத்தின் ஒரு பகுதி. இது, மையக்கழியிழைகளைக் கொண்ட கருமையத்தின் அருகே அமைந்துள்ளது.
centrosphere : மையமண்டலம் : மையக்கீற்றின் திகப் பாய்மம்.
centyl : சென்டில் : பெண்ட்ரோ ஃபுளுவாசைட் என்னும் மருந் தின் வணிகப் பெயர்.
cephalalgia : மண்டைக்குத்தல் : தலைவலி தலையில் ஏற்படும் வலி; மண்டையிடி.
cephalalgic : மண்டைக்குத்தலுக் குரிய.
cephalate : தலையையுடைய.
cephalexin : செஃபாலக்சின் : சிறுநீர்க் கோளாறுகளுக்கு வாய்வழி கொடுக்கப்படும் செஃபாலோரிடின் என்ற மருந்தின் வணிகப் பெயர்.
cephalhaematoma : மண்டைத்தோல் குருதிச் சேகரம்; மண்டைக் குருதிக் கட்டி : உச்சி வட்டக் குடுமித்தோலின் எலும்படிச் சவ்வுகளில் இரத்தம் சேகரமாதல்.
cephalic : தலைநோய் மருந்து; தலைப்பாகம்.
cephalic index : தலைத்தகவளவு : மண்டையோட்டின் நீளத்துக்கும் அகலத்துக்கும் இடையேயுள்ள விழுக்காட்டுத்தகவளவு.
cephalitis : மூளை அழற்சி.
cephalocele : மூளைப் புடைப்பு முறிவு : மூளையின் பகுதியில் ஏற்படும் மூளைப் புடைப்பினை மண்டையோடு வழியாக முறிவு செய்தல்.
cephalomeningitis : மூளை அழற்சி : மூளைச்சவ்வு வீக்கம்.
cephalometry : தலையளவுமானி : உயிருள்ள மனிதரின் தலையின் அளவினை அளவிடுதல்.
cephalopathy : மூளைநோய் : தலையை அல்லது மூளையைப் பாதிக்கும் ஒரு நோய்.
cephalopelvic : தலைக்குழி : முதிர்கருவின் தலையின் அளவுக்கும், தாயின் இடுப்புக் குழிக்கும் இடையிலான உறவு.
cephaloridine : சிஃபாலோபோரிடின் : சிஃபாலோபோரினிலிருந்து எடுக்கப்பட்ட ஒரளவு செயற்கையான உயிர் எதிர்ப்புப் பொருள்.
cephalosporin : சிஃபாலோஸ்போரின் : சார்டினியாவில் 1948இல் சாக்கடையிலிருந்து சேகரிக்கப் பட்ட ஒருவகைப் பசளை மண்ணில் இருந்த மண் கிருமிகளிலிருந்து தயாரிக்கப்பட்ட உயிர் எதிர்ப்புப் பொருள்களில் ஒரு பெருங் குழுமம். இதில் இருந்து தயாரிக்கப்பட்ட உயிர் எதிர்ப்பு மருந்துகள் பல நோய்களின் சிகிச்சைக்குப் பயன்படுகிறது.
cephalosporium : சிஃபோலோஸ்போரியம் : மண்ணில் காணப்படும் முக்கியமான காளான் வகை. இவற்றிலிருந்த சிஃபோலோஸ் போரின் உயிர் எதிர்ப்பொருள்கள் பெறப்படுகின்றன.
cephalothin : சிஃபாலோத்தின் : சிஃபாலோஸ்போரின் என்ற நோய் எதிர்ப்பொருளை ஒத்த செம்பாதிச் செயற்கைப் பொருள்.
cephalothoracopagus : தலைக்குழி முதிர்கரு : தலைக்கும் மார்புக் குழிக்கும் ஒத்த நிலையில் உள்ள ஒருங்கிணைந்த முதிர்கரு.
cephalotome : சிஃபாலோட்டோம் : குழந்தை பிறப்பதை எளிதாக்கு வதற்காக முதிர்கருவின் தலையைத் துண்டிப்பதற்கான கருவி.
cephalotomy : முதிர்கருத் தலை அறுவை : குழந்தைப் பிறப்பதை எளிதாக்குவதற்காக முதிர் கருவின் தலையை அறுவை செய்தல்.
cephradine : செஃப்ராடின் : சிறு நீர்க்குழாய்க் கோளாறுகளுக்கு முக்கியமாகப் பயன்படுத்தப் படும் ஒரு கலவை எதிர்ப்புப் பொருள். இது பொதுவாக வாய்வழி கொடுக்கப்படுகிறது. ஊசி வழியாக செலுத்தும் மருந்தும் உண்டு.
ceramodontia : செராமோடோன்ஷியா : பல் மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் வெண்களிமண் போன்ற பொருள். ceratitis : கண்மேற்சவ்வு அழற்சி.
ceratotome : செராட்டோட்டோம் : விழிவெண்படலத்தை பிளவுறுத்து வதற்கான ஒரு கத்தி.
cercaria : ஒட்டுண்ணிமுட்டைப் புழு : ஒட்டுண்ணிப்புழு வகையின் தொடக்க வளர்ச்சியைச் சேர்ந்த சுதந்திரமாக நீந்தும் முட்டைப் புழு நிலை.
cerea flexibilitas : மெழுகு நெகிழ் திறன் : மெழுகு போன்ற நெகிழ்திறன். ஓர் ஆளை ஒரு நிலையில் வடிவாக்கம் செய்து, அந்த நிலையிலேயே பேணிவர முடியும்.
cereal : தானியம் : கார்போஹைடிரேட்டுகள் (70%-80%), புரதம் (8%-15%), இழைமம் அடங்கியுள்ள கோதுமை , பார்லி, ஒட்ஸ் போன்ற உணவு தானியம்.
cerebellar,cerebellous : இறு மூளைக்குரிய : சிறுமூளை பற்றிய.
cerebellospinal : சிறுமூளை-தண்டுவடம் சார்ந்த : சிறு மூளை, தண்டு வடம் ஆகியவை தொடர்பான.
cerebellum : சிறுமூளை : தலையின் பின்பக்கத்திலுள்ள மூளையின் பகுதி. நுட்பமான தன்னியல்பு அசைவுகளை ஒருங்கிணைப்பதும் நிற்பதைக் கட்டுப்படுத்துவதும் இதன் முக்கிய பணிகள்.
cerebral : மூளைசார்ந்த : மூளை மண்டலம் சார்ந்த.
cerebral hemispheres : மூளைக்கோளங்கள் : மூளையின் இரு பெரும் பிரிவுள்.
cerebralism : மன-மூளைச் செயல் கோட்பாடு : மனத்தின் செயல்கள் எல்லாம் மூளையில்தான் தோன்றுகின்றன என்னும் கோட்பாடு.
cerebritis : மூளையழற்சி; பெரு மூளையழற்சி.
cerebrosidosis : கொழுப்புத் திசு : கொழுப்பு உயிரணுக்களில் கெராட்டினுடன் கூடிய கொழுப்பு திசு வடிவம்.
cerebrospinal : மூளை-முதுகந்தண்டுத் தொடர்பு : மூளைக்கும் முதுகந்தண்டு வடத்திற்கும் ஒருங்கேயுள்ள தொடர்பு.
cerebro-spinal fever : சன்னி : மூளைப்போர்வை அழற்சி.
cerebro-spinal fluid : மூளைத் தண்டுவட : மூளையைச் சுற்றியும் முதுகரு தண்டிற்குள்ளேயும் உள்ள திரவம்.
cerebrotomy : மூளை அறுவை; மூளை நாளம் சார்ந்த : சீழ்கட்டி யிலிருந்து சீழை வெளியேற்றுவதற்காக மூளைக்கட்டியை பிளத்தல்.
cerebrovascular : மூளைநாளம் சார்ந்த : மூளையின் இரத்த நாளங்கள் தொடர்புடைய, மூளைக்கு இரத்தம் கொண்டு செல்லும் தமனியைத் திடீரென தாக்கும் நோய் எதுவும்.
cerebrum : பெருமூளை : தலையின் முன்பக்கத்திலுள்ள பெருமூளை.
ceroplasty : மெழுகுஉருவமைப்புக் கலை : மெழுகினால் உடல் உட்கூறு உருமாதிரிகளையும் நோயியல் மாதிரிகளையும் உருவாக்குதல்.
certifiable : உறுதிச்சான்றளிக்கத்தக்க : 1. சுகாதார அதிகாரி களுக்கு அறிவிக்கப்பட வேண்டிய தொற்று நோய்கள் தொடர் பானது. 2. ஒரு காப்பாளரின் அல்லது நிறுவனத்தின் கவனிப்பு தேவைப்படுகிற மனக் கோளாறுடைய ஆள். certified patients : சான்றளிக்கப்பட்ட நோயாளிகள் : 1956 ஆம் ஆண்டு மனநலச்சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பு மனநோய் மருத்துவமனையில் இருந்து தானாகவே வெளிச் செல்ல முடியாதிருந்த நோயாளிக்கு 'சான்றளிக்கப்பட்ட நோயாளிகள்" எனக் குறிப்பிட்டனர். இப்போது இவர்களை "இருத்தி வைக்கப்பட்ட நோயாளிகள்"என்கின்றனர்.
certified milk : சான்றளிக்கப்பட்ட பால் : என்புருக்கி நோய் (காசநோய்) கிருமிகள் தொடர்பற்றதெனச் சான்றளிக்கப்பட்ட பால்.
cerumen : காது அழுக்கு; காது குரும்பை; காது மெழுகு; குரும்பை; குரும்பி: புறக்காதுக் குழாயிலுள்ள தனிவகைச் சுரப்பிகளிலிருந்து வெளிப்படும், பழுப்புநிற மெழுகு போன்ற அழுக்கு. இந்த அழுக்கினை எடுக்கப் பயன்படும் காதுக் குரும்பி.
ceruminolysis : காதுமெழுகுப் பகுப்பாய்வு : காதுமெழுகினைக் கரைத்தல்.
ceruminous gland : செவிப்புலன் சுரப்பி : புறச்செவிப்புலன் குழாயை இணைக்கிற தோலிலுள்ள திருத்தியமைத்த வியர்வைச் கரப்பி.
cervical : கழுத்துச்சார்ந்த; கருப்பைக் கழுத்துசார் : ஒர் உறுப்பின் கழுத்துப் பகுதி சார்ந்த
cervicectomy : கருப்பைக்கழுத்து அறுவை மருத்துவம்; கருப்பை அகற்றல்; கருப்பை நீக்கல் : கருப்பைக் கழுத்தினை அறுத்து எடுக்கும் அறுவை மருத்துவம்.
cervicitis : கருப்பைக் கழுத்து அழற்சி; கருப்பை வாய் அழற்சி; கருப்பை அகற்றல் : கருப்பையின் கழுத்தில் ஏற்படும் வீக்கம்.
cervix : கருப்பை வாய்; கருப்பைக் கழுத்து : ஒர் உறுப்பின் கழுத்துப் பகுதி. கருப்பையின் கழுத்து.
cesium : சீசியம் : ஒர் உலோகத் தனிமம். இதன் அணுஎண் 55. இதன் புற்றுநோய் திசுக்களை ஒளிவீசும்படி செய்வதற்காக இதன் ஓரகத் தனிமங்கள் பயன் படுத்தப்படுகின்றன.
cestoda : தட்டைப்புழு வகை : நாடாப்புழுக்கள், சவ்வுப்புழக்கள் உள்ளடங்கிய தட்டைப் புழுக்குடும்பத்தின் ஒர் உட் பிரிவு. இவை ஒரு நாடாப் புழுவின் தலையையும் ஒரு சங்கிலித் தொடர் கூறுகளையும் கொண்டிருக்கும். cestoidea : தட்டைப்புழு வகை சார்ந்த : நாடாப்புழுக்கள் உள்ளடங்கிய தட்டைப்புழு வகையைச் சேர்ந்த ஒரு பிரிவு.
cetavion : செட்டாவ்லோன் : செட்ரிமைடு என்ற மருந்தின் வணிகப் பெயர்.
cetiprin : செட்டிப்ரின் : எமிப்ரோனியம் புரோமைடு என்ற மருந்தின் வணிகப் பெயர்.
cetrihex : செட்ரிஹெக்ஸ் : செட்ரிமைடு என்ற கலவை மருந்தின் வணிகப் பெயர்.
cetrimide : செட்ரிமைடு : நுரைக்கும் இயல்புள்ள ஒரு வகை நோய் நுண்மத்தடை மருந்து. காயங்கள், தீச்சுட்ட புண்கள், தோலில் கிருமி நீக்கம் செய்தல் ஆகியவற்றுக்குப் பயன்படுகிறது.
chadwick's sign : சாட்விக் குறியீடு : கருவுற்ற நான்காவது வாரத்தில் காணப்படும் அதிகரித்த நாளப்பெருக்கத்தினால் கருவகத்திலும் யோனிக் குழாயிலும் உண்டாகும் கருநீலஊதா நிற மாற்றம். அமெரிக்கப் பண் நோயியல் மருத்துவ வல்லுநர் ஜேம்ஸ் சாட்விக் பெயரால் அழைக்கப்படுகிறது.
chafe : உரசல் காயம் : தேய்த்தல் அல்லது உராய்வு காரணமாக ஏற்படும் காயம்.
chafing : உரசுதல் : துணியால் அல்லது நெருக்கத்திலுள்ள தோலினால் ஏற்படும் உரசல் காரணம் தோலில் உண்டாகும் புறத்தோல்தடிப்பு நோய் (செந்தடிப்பு) மற்றும் தோல் மெலிவு நோய்.
chagas : சாகாஸ் நோய்/இதய வீக்கம் : டிரைப்பானோசோமா குரூசி (Trypanosoma cruzi) எனப்படும் ஒட்டுண்ணி நுண் உயிரியினால் பரப்பப்படும் ஒரு வெப்பமண்டல நோய். இந்த நோய் கண்டவர்களுக்கு அதிகக் காய்ச்சல் உண்டாகும்; இதயத் தசைகள், மண்ணிரல், ஈரல் முதலியவற்றில் வீக்கம் உண் டாகும். கார்லோஸ் சாகாஸ் (carlos chagas-1879-1934) என்ற பிரேசிலிய மருத்துவ மேதையின் பெயரால் இந்நோய் அழைக்கப்படுகிறது.
chalazion : கண் சுரப்பிக் கட்டி; இமைப்புருடு : கண்ணிலுள்ள மெய்போமியன் என்ற சுரப்பிகளில் ஏற்படும் கட்டி.
chalk : சீமைச்சுண்ணாம்பு : உள்ளுரில் கிடைக்கும் கால்சியம் கார்போனேட், உணவுப்பாதைப் புண்ணுக்குப் புளிப்பகற்றும் மருந்துகளிலும், வயிற்றுப் போக்குக்குச் செறிவிப்பு மருந்துகளிலும் பயன்படுத்தப்படுகிறது. challenge : எதிர்த்துண்டல் : ஒரு தொற்றுத்தடை முறையின் பயன்திறனைப் பரிசோதிப்பதற்காக, ஒவ்வாமை விளைவுகளை உண்டாக்கும் ஒரு பொருளை (காப்புமூலம்) தொற்றுத் தடை செய்யப்பட்ட மனிதருக்கு அல்லது விலங்குக்குச் செலுத்துதல்.
chalone : செயல் தடுப்புக் கசிவு : செயல் தடுக்கும் உட்கசிவு.
chancre : கிரந்திப்புண்; வன் கிரந்தி; மேகப்பிளவை : நிணநீர்ச் சுரப்பிகளின் வீக்கத்தால் உண்டாகிறது.
chancroid : கிரந்தி போன்ற புண்; தொற்றுக் கிரந்தி; பால் நோய்க் கட்டி; மென் கிரந்தி : தொற்று மூலமாக மட்டுமே வரும் கிரந்தி நோய். இதனால் ஆண் குறியிலும் பெண்களின் கரு வாயிலும் வலியுடன் புண்கள் உண்டாகின்றன. வன்கிரந்தியில் அவ்வளவாக வலியிருக்காது.
channel : செல்வழி : பல்வேறு பொருள்கள் பாய்வதற்கு இயல் விக்கும் ஒரு கடப்புக் குழாய், தடம் அல்லது வழி. chapless கீழ்த்தாடையற்ற.
character : பண்பு; நடத்தை; இயல்பு : ஒருவரின் ஒட்டு மொத்த மன இயல்புகள்; குறிப்பாக அவரது நடத்தைமுறை நோயாளியின் இயல்பான நடத்தையிலிருந்து மாறுபட்ட விசித்திர நடத்தை முறையாக இருக்கலாம். வழக்கமாக மரியாதைக்குரியவராக நடந்து வந்தவர் இழிவாக நடந்து கொள்ளுதல் மனநோய் மூளைநோயின் காரணமாக இருக்கலாம்.
Charcot-Bouchard anuerysm : சார்கொட்-பூஷார்ட் நோய்/நுண் தமனி விரிவாக்கம் : உயர் இரத்த அழுத்தம் காரணமாக மூளையின் ஒரு சிறிய தமனியில் உண்டாகும் ஒரு நுண்விரி வாக்கம். இது ஜீன் சார்கோட், சார்லஸ் பூஷார்ட் என்ற மருத்துவ அறிஞர்களின் பெயரால் அழைக்கப்படுகிறது.
Charcot-Leyden : சார்கோட்-லேடன் படிகம் : ஆஸ்துமாவிலுள்ள சளியில் அல்லது பெருங்குடல் சீழ்ப்புண்ணிலுள்ள நரகலில் காணப்படும் நிறமற்ற, கோணவடிவ, ஊசி போன்ற படிகம். ஜீன் சார்கோட், ஜெர்மன் மருத்துவ அறிஞர் எர்னெஸ்ட் லேடன் ஆகியோரின் பெயரால் அழைக் கப்படுகிறது.
Charcot-Marie-Tooth disease : சார்கோட்-மேரி-பல் நோய் : காலின் வெளிப்புறத்திலுள்ள சிம்பு எலும்புத்தசைத் தேய் மானம். ஃபிரெஞ்சு நரம்பியல் வல்லுநர்கள் ஜீன் சார்கோட், பியர்மேரி, பிரிட்டிஷ் மருத்துவ அறிஞர் ஹோவர் டூத் ஆகியோரின் பெயரால் இந்நோய் அழைக்கப்படுகிறது.
Charcot's triad : சார்கோட் மூவினை நோய் : 1. கண் விழிகள் ஒயாமல் ஊசலாடும் விழிநடுக்கம், மனநடுக்கம், தெற்றுவாய் ஆகிய மூன்றும் இணைந்த நோய். இது நுரையீரல் தடிப்பின்போது உண்டாகிறது. (2) விட்டுவிட்டு காய்ச்சல் வருதல், விட்டுவிட்டு வலி உண்டாதல், விட்டு விட்டு மஞ்சள் காமாலை ஏற்படுதல் ஆகிய மூன்றும் இணைந்த நோய். இது கடுமையான பித்தப்பை அழற்சியின்போது காணப்படும்.
charcots joint : சாக்கோட் மூட்டு : இயங்குகிற உடலுறுப்புகளில் ஒரு முட்டு ஒத்தியங்க முடியாமல் முற்றிலுமாகத் தாறுமாறாக இருத்தல். இந்த நிலையில் நோவு இருப்பதில்லை.
Charles law : சார்லஸ் விதி : ஒரு குறிப்பிட்ட அளவு வாயு, மாறாத வெப்பநிலையில் அதன் முழுவெப்ப நிலைக்கு நேர்விகிதத்தில் தனது கனஅளவை விரிவாக்கம் செய்கிறது. இந்த விதியை ஃபிரெஞ்சு இயற்பிய லறிஞர் ஜேக்ஸ் சார்லஸ் விளக்கிக் கூறினார்.
chart : வரைபடம் : 1. ஒரு நோயாளியினுடைய நோயின் போக்கை ஆவணப்படுத்திக் காட்டும் ஒரு வரைதாள். இதில், வெப்பநிலை, நாடித் துடிப்பு, சுவாச வேகவீதம், இரத்த அழுத்தம், உடல் எடை, உட்கொள்ளும் திரவத்தின் அளவு, வெளியேறும் திரவத்தின் அளவு ஆகியவை பதிவு செய்யப்பட்டிருக்கும். 2. பல் தொடர்பான ஊடுகதிர் பட முடிவுகள் பதிவு செய்யப்படும் மருத்துவ வரை படம்.
chaude-pisse : சிறுநீர்வாய் எரிச்சல் : மிகைச் சிறுநீர்க் கழி வின்போது ஏற்படும் எரிச்சல் உணர்வு.
check : தடுப்பு : 1. சரிபார்த்தல். 2. தடுத்து நிறுத்துதல். 3. பல்லின் பதிவை எடுப்பதற்காகப் பயன்படும் கடிப்பதற்குக் கடினமான மெழுகு.
checkup : பரிசோதனை : உடல் நிலையைக் கண்டறிவதற்காக ஒரு மருத்துவர் மருத்துவ முறையில் உடலைப் பரிசோதனை செய்தல்.
cheek : கன்னம் : 1. கண்ணுக்குக் கீழே வாயின் பக்கவாட்டச் சுவராக அமைந்துள்ள முகத்தின் பக்கம். 2. உடலின் பின்புறத்தில் புடைப்பாக உள்ள பிட்டப்பகுதி cheilitis : உதடு வீக்கம்; உதட்டழற்சி : உதடுகள் வீங்கி இருக்கும் நிலை.
cheiloplasty : உதட்டு அறுவை மருத்துவம் : உதட்டின் மீது செய்யப்படும் ஒட்டுறுப்பு அறுவை மருத்துவம்.
cheilosis : வாய் வெடிப்பு; கடை வாய்ப் புண்; கடைவாய் வெடிப்பு : வாயின் கோணங்கள் மெலிந்து நலிவுறுதல். பின்னர் வெடிப்புகள் ஏற்படலாம். ரிபோஃபிளேவின் குறைபாட்டினால் இது உண்டாகலாம்.
cheiro pompholyx : கைக்கொப்புளம் : கைகளின் தோலில் முக்கியமாக விரலில் ஒரே மாதிரியாகக் கொப்புளங்கள் தோன்றுதல். இதனால் நுண்ணிய குமிழ்கள் உண்டாகி, அவற்றில் எரிச்சலும் ஏற்படும். பாதங்களிலும் இது போன்ற கொப்புளங்கள் உண்டாகும்.
chelate : அயம்நீக்கப்பொருள் : ஒரு நச்சுப் பொருளைச் செயல் இழக்கச்செய்யும் ஒரு கூட்டப் பொருள். இது அயம் நீக்கப் பொருள்.
chelating agent : அயம் நீக்க வினையூக்கி : ஈயம், உள்ளியம் என்ற சவ்வீரம் (ஆர்செனிக்), பாதரசம் போன்ற உலோகங்களினால் ஏற்படும் நஞ்சூட்டத்தைக் குணப்படுத்துவதற்குப் பயன் படுத்தப்படும் ஒரு வேதியியல் பொருள்.
chelation : குறட்டித்தல் : சில உலோக அயனிகளை தங்கள் மூலக்கூற்றுக் கட்டமைப்பினுள் நிலைப்படுத்துகின்ற கரையக் கூடிய கரிமப்பொருள்கள். நக்கணவு நேர்வுகளில் இதனைக் கொடுக்கும்போது அவ்வாறு உருவாகும் புதிய கூட்டுப் பொருள், சிறுநீர் வழியாக வெளிவருகிறது.
chemabrasion : சிராய்ப்பு நீக்கி : தோலின் மேலுள்ள படலங்களை அழிப்பதற்கு ஒரு வேதியியல் பொருளைப் பயன் படுத்துதல்.
chemical : வேதியியல் பொருள் : 1. வேதியியல் தனிமங்கள் அடங்கிய ஒரு பொருள். 2. வேதியியல் சார்ந்த.
chemistry : வேதியியல் : தனிமங்களின் பல்வேறு கூட்டுப் பொருள்களையும் அவற்றின் கட்டமைப்பையும் ஆராய்ந்தறியும் அறிவியல்.
chemoattractant : வேதியல் கவர்பொருள் : ஒர் உயிரியை அல்லது உயிரணுவைத் தன்னை நோக்கிவரும்படி செய்கிற ஒரு வினையூக்கி.
chemocautery : கடுங்காரத்தீர்ப்பு : புண் நச்சறுப்பதற்கு ஒரு கடுங்காரப்பொருளைப் பயன்படுத்தி சூட்டுக்கோலினால் புண்ணைச் சுடுதல்.
chemodectoma : கழலை : வேதியியல் ஏற்பியின் கடுமை இல்லாத கட்டி கழுத்துக்குருதி நாளத்துக்கு அருகிலுள்ளகட்டி அல்லது கழுத்து நரம்புத் திரள் கழலை இதற்குச் சான்று.
chemokinesis : வேதியியல் வினையூக்கம் : வேதியியல் தூண்டுதல் காரணமாக ஓர் உயிரியின் அதிகரித்த நடவடிக்கை
chemonucleolysis : எலும்பு உராய்வுத் தடுப்பு ஊசி : சில வகைத் தண்டெலும்புகளில் இடையிலான மெல்லெலும்புத் தகட்டின் உராய்தலுக்கு கைமோபாப்பைன் என்ற மருந்தினை ஊசிமூலம் செலுத்துதல்.
chemonucleolysis : இயக்குநீர் செலுத்துதல் : ஒர் இயக்குநீரை (என்சைம்), அதனைக் கரையும்படி செய்வதற்காக, எலும்பற்ற வட்டினுள் ஊசி மூலம் செலுத்துதல்.
chemopallidectomy : வேதியியல் இழைம அழிப்பு : மூளையின் கோள இணைப்பு இழையின் ஒரு பகுதியை வேதியியல் முறையில் அழித்தல்.
chemoprevention : வேதியியல் தடுப்பு : புற்றுநோய் உண்டாவதைக் குறைப்பதற்கு சீருணவை அல்லது மருந்துகளைப் பயன்படுத்துதல்.
chemoprophylaxis : வேதியியல் முற்காப்பு; நோய் மருத்துவம் : வேதியியல் பொருள்களைக் கொடுத்து நோய் வராமல் (அல்லது நோய் மீண்டும் தாக்காமல்) தடுத்தல்.
chemopsychiatry : மருந்தியல் மன நோய்ச் சிகிச்சை : மருந்து மூலம் மனநோயைக் குணப்படுத்தம் முறை.
chemoradiotherapy : வேதியியல் கதிரியக்கச் சிகிச்சை : நோய்ச் சிகிச்சையில் வேதியியல் மருத்துவம், கதிரியக்க மருத்துவம் ஆகியவற்றைப் பயன்படுத்துதல்.
chemoreceptor : வேதியியல் இணைப்புப் பொருள்; வேதியியல் பொருளேற்பி, வேதியேற்பி : உயிருள்ள உயிரணுவிலுள்ள ஒரு வேதியியல் இணைப்புப் பொருள். இது வேறு சில வேதியியல் பொருள்களுடன் இணையும் நாட்டமும், திறனும் உடையது.
chemoreflex : வேதியியல் துலங்கல் : ஒரு வேதியியல் தூண்டு தலுக்கான தன் விருப்பம் இல்லாத துலங்கல்.
chemoresistance : வேதியில் எதிர்ப்பு : ஒரு மருந்தின் விளைவுக்கு உயிரணுக்களின் நுண்ணுயிரிகளின் எதிர்ப்பு. chemosensitive : வேதியியல் உணர்திறன் : வேதியியல் கல வையில் மாறுதல்களை உணரும் திறம்.
chemosensory : வேதியியல் உணர்வி : ஒரு வாசனையைக் கண்டறிவது போன்ற உணர்வுப் புலன் தொடர்புடைய.
chemosis : இமை வீக்கம்; தண்டு நரம்பிணைப்பு அழற்சி : புடைத்த தண்டு நரம்பின் மேல்முனை இணைப்பில் ஏற்படும் இழைம அழற்சி அல்லது வீக்கம்.
chemotaxis : உயிர்ணு இயக்கம்; வேதியீர்ப்பு : வேதியியல் தூண் டுதலுக்கிணங்க குறிப்பிட்ட திசையில் உயிரி முழுமையாகப் பெயர்ந்து செல்லும் இயக்கம்.
chemosterilant : வேதியியல் அழிப்பான் : நுண்ணுயிரிகளை அழிக்கின்ற ஒரு வேதியியல் கூட்டுப்பொருள்.
chemosurgery : வேதியியல் அறுவை மருத்துவம் : வேதியியல் கூட்டுப்பொருள்கள் மூலம் திசுக்களை அழித்தல்; உறுப்பெல்லைக்குள் மட்டும் பரவும் தொடக்கநிலைத் தோல் புற்றுகளை அறுத்தெடுப்பதற்குப் பயன்படுத்தப்படும் ஒர் உத்தி.
chemosynthesis : செயற்கைப் பொருளாக்கம் : பிற வேதியியல் வினையூக்கிகளிலிருந்து புதிய வேதியியல் கூட்டுப்பொருளை உருவாக்குதல்.
chemotaxin : வேதியியல் ஈர்ப்புப் பொருள் : குறியிடத்துக்கு இரத்த வெள்ளை உயிரணுக்களை ஈர்க்கும் ஒரு பொருள்.
chemothalamectomy : வேதியியல் நரம்பு அறுவை மருத்துவம் : வேதியியல் முறையில் மூளை நரம்பு முடிச்சின் ஒரு பகுதியை அழித்தல்.
chemotherapy : வேதியியல் பொருள் மருத்துவ முறை : நோய் உண்டாக்கும் கிருமிகளை அழிக்கும் திறனுள்ள வேதியியல் சேர்மத்தைக் கொண்டு நோய் குணப்படுத்தும் முறை.
chemzymes : வேதியியல் செரிமானப் பொருள்கள் ; உயிர்வேதியியல் வினைகளை ஊக்குவிக்கிற செரிமானப் பொருள்களைப் போன்றே வேதியியல் வினைகளை ஊக்குவிக்கின்ற சிறிய, கரையக்கூடிய, கரிம மூலக்கூறுகளின் ஒரு குழுமம்.
chendol : செண்டோல் : செனோடியாக்சிக்கோலிக் அமிலத்தின் வணிகப் பெயர்.
chenodeoxycholic acid : செனோடியாக்சிகோலிக் அமிலம் : பித்த நீரில் கலந்திருக்கும் ஒரு துப்புரவுப் பொருள். பித்தப்பையில் விளையும் கல்போன்ற கடும் பொருளைக் கரைப்பதற்கு வாய்வழி இது உட்கொள்ளப்படுகிறது.
cherry angioma : செங்குருதி நாளக் கட்டி : தளர்ந்த குருதி நாளக்கட்டி. இக் கெம்புக்கல் போன்ற செந்நிறக் கொப்புளமாக இருக்கும். இதனை வெளிறிய வளையம் சூழ்ந்து இருக்கும். முதியவர்களின் உடல்நடுப்பகுதியிலும், கை கால்பகுதிகளிலும் உண்டாகும். இதன் நடுப்பகுதியில் விரிவடைந்த மெல்லிய தந்துகிகள் அடங்கியிருக்கும்.
cherry red colour : கெம்புச் செந்நிறம் : கார்பன் மோனாக்சைடு நஞ்சூட்டத்தில் காணப்படும் சளி-சரும நிறமாற்றம்.
cherry red spots : கெம்புச் செமபுள்ளிகள் : B-D-N அசிட்டில் ஹெக்சோ சாம்டேஸ் என்ற செரிமானப்பொருள் குறை.பாட்டினால் GM2 என்ற குறிப்பிட்ட கொழுப்புப்பொருள் மிகுதியாகச் சேர்வதால் உண்டாகும் டேய்-சாக்ஸ் நோய், நியமான்-பிக் என்ற நோய் ஆகியவை பிடித்த நோயாளிகளின் பார்வை விழிமையத்திலுள்ள ஒளிர்வான செந்நிறப் புள்ளிகள்.
chest : நெஞ்சு; மார்பு; மார்புக் கூடு.
chest-trouble : மார்புக் கோளாறு.
cheyne-stokes respiration : சுவாசச் சுழற்சி : சுவாசம் ஏறியும் இறங்கியும் வரும் சுழற்சி. சில சமயம் மூச்சுவிடுதல் மிக வேகமாக நடைபெறும் வேறு சமயம், சுவாசம் மிக மெதுவாக நடைபெறும்.
chiasma : கண் நரம்புக் குறிக்கீடு பிணைப்பு குறுக்குக் கூட்டு : கண் நரம்புகள் 'x' வடிவில் குறுக்காக சந்தித்தல்.
chiba needle : ஷிபா ஊசி : தோலினுடே பித்துப்பை ஊடு கதிர்ப்படத்துக்குப் பயன் படுத்தப்படும் நெகிழ்திறன் உள்ள நீண்ட ஊசி. ஒரு ஜப்பானியப் பல்கலைக் கழகத்தின் பெயரால் அழைக்கப் படுகிறது. chicken-heart : கோழை நெஞ்சு.
chicken-pox : சின்னம்மை; தட்டம்மை; பயற்றம்மை; நீர்க்கொள்வான் :இது முதலில் இடுப்பில் தோன்றி சிறு சிறு கொப்புளங்களாக வெடிக்கும். இவை பொருக்காகி, தழும்பு இன்றி ஆறிவிடும்.
chikungunya : இரத்தப்போக்குக் காய்ச்சல் (சிக்குன்குன்யா) : வெப்ப மண்டலங்களில் கொசுவினால் உண்டாகும் ஒருவகை இரத்தப் போக்கு ஏற்படும் காய்ச்சல் வகையில் ஒன்று.
chilblain : குளிர்க் கொப்புளம்; பனி வெடிப்பு : கடுங்குளிரினால் ஏற்படும் சுன்றிய கைகால் கொப்புளம். இதனால் கடுமையான நமைச்சல் ஏற்படும்.
child : குழந்தை : கைக்குழந்தை நிலைக்கும் முதிர்வு நிலைக்கும் இடைப்பட்ட மனிதர். குழந்தைக்கு உடலாலும், உணர்வாலும், பாலிய லாலும் ஊறு விளைவித்தல். கருக்குழந்தையைப் பெற்றெடுத்தல். ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கும் செயல்முறை.
child bed : பேறுகால நிலை; பிள்ளைப் பேற்று நிலை.
child birth : பிள்ளைப்பேறு; குழந்தை பெறுதல்.
child mishandling : குழந்தை உருக்குலைவு நோய் : குழந்தையை உருக்குலையும்படி செய்யும் நோய்.
chilomastix : ஒட்டுண்ணி உயிரி : பெருங்குடல் வாயிலும், பெருங் குடலிலும் கூட்டுவாழ்வு உயிரிகளாகக் காணப்படும் ஒர் ஒட்டுண்ணி ஓரணுவுயிர்.
chimerism : மாற்று மரபணு உயிரணு : ஒர் ஆளின் உயிர் அணுக்களில் மரபணுமுறையில் மாறுபட்ட உயிரணுக்கள் இருத்தல். இந்த உயிரணுகள் இருவேறு சூல் முட்டைகளிலிருந்து வந்து இருப்பதே இதற்குக் காரணம். இதனால் நோய் எதுவும் உண்டாவ தில்லை.
chimney sweep's cancer : புகைபோக்கி ஒற்றடைப் புற்று நோய் : புகைபோக்கியில் படியும் ஒற்றடை போன்று விதைப்பையில் உண்டாகும் புற்றுநோய் வகை.
chin : முகவாய்க்கட்டை : கீழ் உதட்டுக்குக்கீழேயுள்ள கீழ்த் தாடையில் எடுப்பாகவுள்ள புறப்பகுதி.
chincough : கக்குவான் இருமல்.
Chine துண்டெலும்பு : முதுகெலும்புக் கணு. Chinese lantern site : சீன ஒளிப்புழை : பச்சிளங் குழந்தையின் மண்டையோட்டின் ஊடுறுப் பொளியூட்டம். இது மூளை நீர்க்கோர்ப்பும், மயிர்க்கண் துளை நீர்க்கோர்ப்பும் உடையது. மூளைக்கோளங்கள் இன்மை யால் ஒளி ஊடுருவும் தன்மை இல்லாது இருப்பதை இது காட்டுகிறது.
chinese restaurant syndrome: சீன உணவக நோய் : மானோ சோடியம் கிளட்டா மேட் எனப்படும் சீன உணவகங்களில் பயன்படுத்தப்படும் பதப்படுத் தும் பொருளினால் உண்டாகும் மிகு உணர்ச்சித்திறன் காரணமாக திடீரென விளையும் ஒவ்வாமை விளைவு. இதனால் கடும் தலைவலி, மரமரத்தல், நீர்வேட்கை, படபடப்பு, அடிவயிற்றிலும் நெஞ்சிலும் வலிகள், வியர்த்தல், குருதிப் பாய்வு ஆகியவை உண்டாகும்.
chink : திணறல்; மூச்சு வாங்க முடியா எய்ப்பு நிலை.
chiniofon : சினியோஃபான் : நோய்த்தடுப்பு மருத்தவத்திலும் கடுமையான வயிற்றுப்பூச்சி நோய்க்காகவும் பயன்படுத்தப் படும் வயிற்றுப்பூச்சிக் கொல்லி மருந்து.
chirality : பக்கவடிவம் : ஒரு பக்க மாகத் திரிபடைதல் போன்று மூலக்கூறுகளில் ஏற்படும் சமச் சீரின்மை. ஒரு மூலக்கூறின் முப்பரிமாண வடிவம். இது இடப்பக்க வடிவமாகவோ வலப்பக்க வடிவமாகவோ இருக்கலாம்.
chiropodist : கால்நோய் மருத்துவர்; கால் காய்ப்பு; விரல் உகிரர் : காலின் காய்ப்பு, விரல் கணு வீக்கம், மெய்க்குரு போன்ற நோய்களுக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்.
chiropody : கால்நோய் மருத்துவம் : காலின் காய்ப்பு, விரல் கணுவீக்கம், மெய்க்குரு முதலியவற்றுக்கான மருத்துவம்.
chiropractice : வர்ம மருத்துவம் : ஒரு மனிதனின் உடல் நிலைக்கு அவனது நரம்பு மண்டலம் மட்டுமே முழுமுதற் காரணம் என்ற கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்ட ஒர் உடல் நலக்காப்பு முறை.
chiropractice : வர்ம மருத்துவர்; கரப்பொருத்து : தண்டெலும்பில் தடவி நரம்புகளின் செயற் தடுப்பு நோவினைக் குணப்படுத்தும் முறை.
chiropractor : வர்ம மருத்துவம்; கரப்பொருத்தர் : தண்டெலும்பில் தடவி நரம்புகளின் செயல் தடுப்பு நோவினைக் குணப் படுத்தும் மருத்துவர். chlamydiae : திண்தோல் சிதல் நோய்க்கிருமி :' பறவைகளிடமும், மனிதரிடமும் திண்தோல் சிதல் நோய் உண்டாக்கும் நோய்க்கிருமி போன்ற நுண்ணுயிரிகள். இந்நோயில் சிலவகை, பறவைகள் மூலம் மனிதருக்குப் பரவுகிறது. பாலுறவு வழியாகவும் இந்நோய் பரவுகிறது. இந்நோய் கண்ட குழந்தைகள் அதிக அளவில் பிறக்கின்றன. இது கண்ணிமை அரிப்பு நோய்க்கும் காரணமாக இருக்கிறது.
chiamydiosis : திண்தோல் சிதை நோய் : திண்தோல் சிதல் நோய்க் கிருமியினால் உண்டாகும் ஒரு கோளாறு அல்லது நோய்.
chloral : குளோரல் : காரமான நெடியுடைய எண்ணெய் போன்ற திரவம்.
chlorambucil : குளோராம்புசில் : கடும் நிணநீர்ப்புற்று, நிணநீர்த் திசுக்கட்டி ஆகிய நோய்களில் பயன்படுத்தப்படும் காரச்சார்பு உயிரணு நஞ்சேற்ற வினையூக்கி.
chloramine T : குளோராமைன்-T : காயங்களில் தெளிப்பதற்கு பயன்படுத்தப்படும் நச்சு நீக்கி மருந்து.
chloraemia : மிகுகுளோரைடு நோய் : இரத்தத்தில் குளோரைடு அளவு மிகுதியாக இருக்கும் நோய்.
chloasma : தவிட்டுப்படை; மங்கு : தோலில், முக்கியமாக முகத்தில், பொன் தவிட்டு நிறத்தில் படரும் படை நோய். பெண்களுக்குக் கருவுற்றிருக்கும் போது இது உண்டாகிறது.
chloral hydrate : குளோரல் ஹைட்ரேட் : நரம்புத் தளர்ச்சியினால் உறக்கமின்மை ஏற்படும்போது கொடுக்கப்படும் விரைவாகச் செயற்படும் சமனப்படுத்தும் மருந்து.
chloralism : குளோரின் உலர் வெறியப் பழக்கம் : குளோரின் (பாசிக) உலர்வெறியம் தரும் மயக்கக் கோளாறு.
chlorambucil : குளோராம்புசில் : அறுவைச் சிகிச்சையின்போது நோய்க்கிருமித் தடை மருந்தாகப் பயன்படுத்தப்படும் மருந்து.
chloramphenical : குளோராம் ஃபெனிக்கோல் : அநேகமாக வாய்வழியாகக் கொடுக்கப்படும் உயிர்க்கொல்லி மருந்து நச்சுக் காய்ச்சல் (டைபாய்டு) போன்ற நோய்களுக்குப் பயன் படுத்தப்படுகிறது.
chiorcyclizine : குளோர்சைக்ளிசின் : புண்ணுண்டாகிய இடத்தில் இரத்தத்தில் விழுப்புப் பரவிச் செயலாற்றாமல் தடுக்கும் மருந்துகளில் ஒன்று. இதனை 'எதிர் விழுப்புப் பொருள்' என்றும் கூறுவர். பயண நோய்க்கும் இது பயன் படுகிறது.
chlordiazepoxide : குளோர்டையாசிப்பாக்சைடு : மன இறுக்கம் ஆகியவற்றைக் குணப்படுத்தும் மருந்து. தசையைத் தளர்ச்சியடையச் செய்யும் குணமும் உடையது. இதனை வாய்வழியாகவோ ஊசி மூலமாகவோ செலுத்தலாம்.
chloretic : குளோரெட்டிக் : பித்த நீரை அதிகரிக்கும் ஒரு வினை யூக்கி.
chlorexolone : குளோரெக்சோலோன் : சிறுநீர் கழிப்பதைத் துண்டும் மருந்து.
chlorhexidine : குளோர்ஹெக்சிடின் : பலவகைப் பாக்டீரியாக்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் நுண்ணுயிரிகளைக் கொல்லும் கரைசல் மருந்து.
chlorhydria : குளோர்ஹைடிரியா: வயிற்றில் ஹைடிரோகுளோரிக் அமிலம் மிகுதியாக இருத்தல்.
chlorinated : குளோரினேற்றிய : குளோரினேற்றிய பொருள். ஒருசலவைப் பொருளாகவும் ஒரு நச்சு நீக்கியாகவும் பயன் படுத்தப்படும் எலுமிச்சை கால்சியம் ஹைப்போ குளோரைட் மற்றும் கால்சியம் குளோரைடு.
chlorine : குளோரின் (பாசிகம்) : நிறநீக்க. நோய்க்கிருமித் தடைக் காப்பு, போருக்குரிய நச்சு வாயு ஆயுதங்கள் ஆகியவற்றில் நெஞ்சு திணற அடிக்கும், கார மணமுடைய வாயு வடிவத் தனிமங்களில் ஒன்று. இது பசுமஞ்சள் நிறம் உடையது.
chlorine water : குளோரின் கரைசல்.
chlormethiazole : குளோர் மெத்தியாசோல் : உறக்கமூட்டும் மருந்து. மருந்துறைகளாகவும், ஊசி மருந்தாகவும் கிடைக்கிறது. இது மன உளைச்சலைத் தணிக்கக் கூடியது.
chlorocresol : குளோராக்ரிசால் : பாக்டீரியாக்களைக் கொல்லும் மருந்து. ஊசி மருந்துக் குமிழ்களைப் பாதுகாப்பாக வைக்கப் பயன்படுகிறது.
chlorodyne : குளோரோடின் : அபினிச்சத்து, ஈதர், குளோரோஃபார்ம் ஆகியவை கலந்த ஒரு கரைசல். இது உறக்க மூட்டும் மருந்தாகப் பயன் படுகிறது.
chloroform : மயக்க மருந்து (குளோரோஃபார்ம் : எளிதில் ஆவியாகும், இனிமை கலந்த சுவையுடைய, நிறமற்ற உணர்ச்சியகற்றும் நீர்மம்.
chloroma : குளோரோமா; பசும்புத்து : முகத்திலும், மண்டை ஒட்டிலும், முள்ளெலும்புகளிலும் எலும்புகளை மூடியுள்ள சவ்வின்மீது உண்டாகும் பசு மஞ்சள் நிறமுடைய வளர்ச்சிகள்.
chloromycetin : நச்சுக்காய்ச்சல் : முதுகந்தண்டு நோய், மூளை அதிர்ச்சி ஆகியவற்றில் பயன்படுத்தப் படும் குளோரா ஃபெனிக்கோல் என்ற மருந்தின் வணிகப் பெயர்.
chlorophyll : பச்சையம்; பச்சை நிறமிகள் : தாவரங்களில் ஒளிச் சேர்க்கை நடைபெறுவதற்கு உதவுகிற பசியநிறப் பொருள். இப்போது இது செயற்கையாகத் தயாரிக்கப்பட்டு, மண மகற்றும் பொருளாகப் பயன் படுத்தப்படுகிறது.
chloroquine : முறைக்காய்ச்சல் மருந்து (குளோரோக்குவின்) : முறைக்காய்ச்சலில் (மலேரியா) பயன்படுத்தப்படும் மருந்து. கொள்ளை நோய் பரவும் பகுதிகளில் உப்புடன் இது கலக்கப்படுகிறது. வீக்கத்தைக் குறைக்கும் தன்மையும் கொண்டது.
chlorosis : பசலை நோய் : இளம் பெண்களிடம் பசுமை நிறம் படரும் சோகை என்ற பசலை தளர்ச்சி நோய்.
chloroxienol : குளோரோக்சைனால் : நோய்கிருமிக் கொல்லியாகப் பயன்படுத்தப்படும் ஒரு வகை மருந்து.
chloropromazine : குளோர்புரோமாசின் : மிகுந்த மருந்தியல் வினைபுரியக்கூடிய ஒரு மருந்து. இது தூக்க மருந்தாகவும், வாந்தித் தடுப்பு மருந்தாகவும், வலிப்புநோய் எதிர்ப்பு மருந்தாகவும் குருதியழுத்தம் குறைக்கும் மருந்தாகவும் பயன்படுகிறது. உளவியல் கோளாறுகளின்போது பயன்படுத்தத்தக்க சிறந்த மருந்து.
chloropropamide : குளோர்புரோப்மைட் : நீரிழிவு நோய்க்குக் கொடுக்கப்படும் மருந்து. டயா பினிஸ், மெலிட்டாஸ் போன்றவை இவ்வகையைக் சேர்ந்தவை.
chlorprothixene : குளோரோபுரோத்திக்சின் : ஒருவகை நோவகற்றும் மருந்து. முரண் மூளை நோய்களின்போது பயன்படுத் தப்படுகிறது. ஆனால் நீண்ட காலம் சிகிச்சையளிக்கும்போது இது அவ்வளவாகச் செயற்படு வதில்லை.
chlortetracycline : குளோர்டெட்ராசைக்ளின் : டெட்ராசைக்ளின் மருந்தின் ஒருவகை. chlorthalidone : குளோத்தாலிடோன் : சிறுநீர் கழிவதைத் தூண்டு வதற்கு வாய்வழி கொடுக்கப்படும் மருந்து. இது ஒரு நாள் விட்டு ஒருநாள் கொடுக்கப்படுகிறது. இது 48 மணிநேரம் செயற்படக் கூடியது.
chlorthiazide : குளோர்தையாசைடு : சிறுநீரகக்குழாய் மறு ஈர்ப்பைத் தடைசெய்யும் முதலாவது தையாசிட் என்ற சிறுநீர்ப் பெருக்கி.
chlorpheniramine : குளோடாஃபெனிராமின் : ஹிஸ்டாமின் எதிர்ப்புப் பொருள் தயாரிப்பிலிருந்து பெறப்படும் ஒரு பைரிடின்.
chloruresis : குளோர்யூரசிஸ் : சிறுநீரில் குளோரைடுகள் சுரத்தல்.
chloruria : குளோர்யூரியா : சிறு நீரில் மிகுதியான குளோரைடுகள் இருத்தல்.
chocolate cyst : சாக்கலேட் நீர்க்கட்டி; சாக்கலேட் பந்து : கருப்பையின் உட்புறச் சவ்வில் ஏற்படும் நீர்க்கட்டி. இது நிலை மாறிய இரத்தத்தைக் கொண்டிருக்கும். இது பெரும்பாலும் பெண் கருப்பையில் உண்டாகிறது.
choke : மூச்சுத்தடை; திணறல்; மூச்சமைப்புத் திணறல்.
cholaemia : பித்தசோகை : குருதியில் பித்தநீர் தேங்குவதால் உண்டாகும் நோய்.
cholagogic : பித்தபேதி; பேதியையுண்டாக்கும்.
cholagogue : பித்தபேதி மாருந்து; பித்தநீர் ஓட்ட ஊக்கி : குடலுக்குள் பித்தநீர் பாய்வதை அதிகரிக்கும் மருந்து.
cholangiocarcinoma : பித்தநீர்ச் சுரப்பிப் புற்று : உள்கல்லீரலில் பித்தநீர் நாளங்களின் மேல்திசுவிலிருந்து எழும் சுரப்பிப் புற்றுநோய்.
cholangiography : பித்தநீர் நாள ஊடுகதிர்ப்படம்; பித்தக்குழாய் வரைவி : கல்லீரல், பித்தநீர் நாளங்களைப் பரிசோதனை செய்த ஊடுகதிர் (எக்ஸ்ரே) படம். ஊடுகதிர் ஊடுருவாத பொருளினை வாய்வழியே கொடுத்தும், நேரடியாக ஊசி மூலம் செலுத்தியும் இந்தப் படம் எடுக்கப்படுகிறது.
cholangiole : பித்தநீர்நாளக் கிளை: பித்தநீர் நாள மண்டலத்தின் முனைக்கிளைகளில் ஒன்று.
cholangiohepatitis : பித்தநீர்நாள வீக்கம் : நுரையீரல், பித்த நீர் நாளங்களில் ஏற்படும் வீக்கம்.
cholecalciferol : பித்தநீர் கால்சிஃபெரால் : D-2 என்ற வைட்டமின். சீருணவிலிருந்து பெறப்படும் அல்லது 7-டிஹைடிரோ கொலஸ்டிராலை ஒளிர்வூட்டுதல்முலம் தோலில் செயற்கையாக உண்டாக்கும் பொருள்.
cholecyst : பித்தப்பை.
cholecystagogue : பித்தப்பை துப்புரவுப் பொருள் : பித்தநீர்ப் பையைக் காலி செய்வதற்குப் பயன்படும் ஒரு வினையூக்கி.
cholecystalgia : பித்தப்பை விரிவாக்கம் : பித்தநீர்ப்பை விரி வடைதல்.
cholecystectomy : பித்தப்பை அறுவை மருத்துவம்; பித்தப்பை நீக்கம் : பித்தநீர்ப்பையினையும், சிறு குடலினையும் அறுவை செய்து அப்புறப்படுத்துதல்.
cholecystitis : பித்தப்பை அழற்சி : பித்தநீர்ப்பையில் உண்டாகும் வீக்கம்.
cholecystoduodenostomy : பித்தப்பை-முன்சிறுகுடல் பிணைப்பு: பித்தநீர்ப்பைக்கும், முன் சிறு குடலுக்கும் இடையில் ஒரு பிணைப்பை ஏற்படுத்துதல். பொதுப்பித்தப்பை நாளத்தில் அழற்சி அல்லது அறுவைச் சிகிச்சை காரணமாக நெரிசல் கோளாறு ஏற்படும்போது இந்தப் பிணைப்பு ஏற்படுத்தப் படுகிறது.
cholecystography : பித்தப்பை ஊடு கதிர்ப்படம்; பித்தப்பை வரைவி : ஊடுகதிர் ஊடுருவாத பொருளை கொடுத்த பின்பு பித்த நீர்ப்பையினை ஊடு கதிர்ப்படம் மூலம் பரிசோதனை செய்தல்.
cholecystojejunostomy : பித்தப்பை-இடைச் சிறுகுடல் பிணைப்பு : பித்தநீர்ப்பைக்கும் இடைச்சிறு குடலுக்கும் (நடுச்சிறுகுடல்) இடையில் ஒரு பிணைப்பை ஏற்படுத்துதல். கணையத்தின் தலைப்பகுதியில் ஏற்படும் வளர்ச்சி காரணமாக உண்டாகும் மஞ்சட் காமாலை அடைப்பின்போது இது ஏற்படுத்தப்படுகிறது.
cholecystokinin : கோலசிஸ் டோக்கினின் : பித்தநீர்ப்பையை சுருங்கச் செய்கிற ஒர் இயக்கு நீர் (ஹார்மோன்). மேற்குடல் சவ்வில் இது சுரக்கிறது.
cholecystolithiasis : பித்தப்பைக்கல் : பித்தநீர்ப்பையில் கல் போன்ற பொருள் உண்டாதல்.
cholecystostomy : பித்தநீர் வடிகுழல் அறுவை மருத்துவம் : பித்த நீர்ப்பைக்கும் அடிவயிற்றுப் பரப்புக்குமிடையில் அறுவைச் சிகிச்சை மூலம் ஏற்படுத்தப்படும் குழல் உறுப்பு. பித்தநீர்ப் பையிவிருந்து கற்களை அகற்றிய பிறகு வடிகுழல் அமைப்பதற்காக இது ஏற்படுத்தப்படுகிறது. cholecystotomy : பித்தப்பை அறுவை; பித்தப்பை திறப்பு : பித்தநீர்ப்பையில் சிறுதுண்டு அறுத்தெடுத்தல்.
choleystogastrostomy : பித்தப்பை நாளநீக்கம் : பித்த நீர்ப்பைக்கும் இரைப்பைக்கும் இடையிலான குருநாளப் பிணைப்பினை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றுதல்.
cholecystogram : பித்தப்பை ஊடுகதிர்ப்படம் : பித்தநீர்ப்பை ஊடுகதிர்ச்சோதனை மூலம் பெறப்படும் பித்தநீர்ப்பை ஊடு கதிர்ப்படம்.
choledocholithotomy : பித்தக்கல் அறுவைச் சிகிச்சை : பொதுவான பித்தநீர் நாளத்திலுள்ள கல் போன்ற பொருளை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றுதல்.
choledochostomy : பித்தநீர் வடிப்பு : பொதுவான பித்தநீர் நாளத்திலிருந்து ஒரு 'T' குழாய் மூலம் பித்தநீரை வடித்தெடுத்தல். கல்போன்ற பொருள் இருக்கிறதா என்று பரிசோதனை செய்த பிறகு இவ்வாறு செய்யப்படுகிறது.
choledochotomy : பித்தநீர் நாள அறுவை : பொதுவான பித்தநீர் நாளத்தில் அறுவை செய்தல்.
choledyl : கோலடில் : கோலின்தியோஃபிலினேட்டு என்ற மருந்தின் வணிகப் பெயர்.
cholelithiasis : பித்த கற்கள் : பித்தநீர்ப்பையில் அல்லது பித்த நாளங்களில் கல்போன்ற பொருள்கள் இருத்தல்.
cholelithotomy : பித்தநீர்க் குழாய் பிளவுறுத்தம் : பித்தநீர்ப் பைகளில் கற்களை அகற்று வதற்காக பித்தநீர்க்குழாய் வழியே அறுவைச் சிகிச்சை மூலம் பிளவுறுத்தல்.
cholaemia : குருதிப்பித்தநீர் நோய் : குருதியில் பித்தநீர் அல்லது பித்த நீர்நிறமி இருத்தல்.
choler : பித்தநீர்.
cholera : வாந்திபேதி (காலரா : கொள்ளைநோயாகப் பரவும் ஒரு கொடிய தொற்று நோய், கிழக்கு நாடுகளில் மிகுதியாகக் காணப்படுகிறது. இந் நோய் கண்டவர்களுக்கு அபரிமிதமாக தண்ணீர் கலந்த மலங்கழியும்;
வாந்தியும் உண்டாகும். கைகால் நோவும் ஏற்படும். உடனடியாகச் சிகிச்சை செய்யாவிட்டால் மரணம் உண்டாகும். மாசுபட்ட நீர், அளவுக்கு அதிகமான மக்கள் நெரிசல், சுகாதாரமற்ற சூழ்நிலை காரணமாக நோய்க்கிருமி பரவி பெருமளவு உயிர்ப்பலி ஏற்படு கிறது.choleragen : காலரா நஞ்சு : காலராக்கிருமிகள் மூலம் உண்டாகும் அயல் நஞ்சு.
choleraic : வாந்திபேதிக்குரிய கொள்ளை நோய் சார்ந்த.
choleric : பித்தம் நிரம்பிய.
choleretic : பித்தநீர் ஊக்கி : 1. நுரை யீரல் பித்த நீரை உற்பத்தி செய்வதை ஊக்குவிக்கும் பொருள். 2) பித்தநீர் உற்பத்தியை ஊக்குவிக்கும் வினையூக்கி.
choleric temperament : சிடுசிடுப்பு; முன்கோபக் குணம் : எளிதில் சீற்றம் கொள்ளுகிற சிடுசிடுப்பான நடத்தைப் போக்கு. இது, நான்குவகை நடத்தைப் போக்குகளில் ஒன்று.
cholerine : வேனிற்கால வாந்தி பேதி : வேனிற்காலத்தில் உண் டாகும் வாந்திபேதிநோய்.
cholestasis : பித்தநீர் அடைப்பு; பித்த நீரோட்டத் தடை; பித்தத் தேக்கம் : பித்தநீர் பாய்வது குறைதல் அல்லது அடைக்கப்படுதல். உள் கல்லீரல் பித்தநீர் அடைப்பு என்பது, தடுப்பு வகையைச் சேர்ந்த மஞ்சள் காமாலையினால் உண்டாகிறது.
cholesteatoma : காது கழலை : கொலாஸ்டிரால் அடங்கிய, பையில் அடைபட்டுள்ள, கடுமையாக இராத கழலை. இது பெரும்பாலும் நடுக்காதில் ஏற்படுகிறது.
cholesterol : கொழுப்பினி; கொழுவியம்; கொலஸ்டிரால் : கொழுப்புத்தன்மை வாய்ந்த படிகம் போன்ற பொருள். மூளை நரம்புகள் நுரையீரல், இரத்தம், பித்தநீர் ஆகியவற்றில் இது காணப்படுகிறது. அது எளிதில் கரைவதில்லை. இது பித்த நீர்ப்பையில் தமனிச் கவர்களிலும் உறைந்துவிடும். ஒளிபடும் போது, இது 'வைட்டமின்-D' என்ற ஊட்டச் சத்து ஆகிறது.
cholesteroluria : குருதிக்கொழுப்பு : சிறுநீரில் கொழுப்பு (கொலஸ்டிரால்) இருத்தல்.
choplesterosis : கொலஸ்டிரால் மிகைப்படிவு : கொலஸ்டிரால் அளவுக்கு அதிகமாகப் படிதல்.
cholestery 1 : கொழுப்பு மூல அணு : ஹைடிராக்சில் குழுமத்தை அகற்றுவதன் மூலம் உண்டாகும் கொழுப்பு மூல அணு. choletherapy : பித்த உப்பு மருத்துவம் : பித்தநீர் உப்புப் பொருள்களைச் செலுத்திச் சிகிச்சையளித்தல்.
cholestyramine : கொலஸ்டிரால் பிசின் : குடலில் பித்தநீர் அமி லங்களுடன் இணைந்து கொள்கிற ஒர் அடிப்படையான அயனிப் பரிமாற்றப்பிசின். இவ்வாறு இணைத்து உண்டாகும் பொருள் ஈர்த்துக் கொள்ளப் படுவதில்லை. எனவே, இது இரத்தத்தில் கொலஸ்டிரால் அளவைக் குறைக்கிறது.
cholic : பித்த நீர; பித்த அமிலம் : அடிப்படைப் பித்த அமிலங்களில் ஒன்று. இது பெரும்பாலும் கிளைசினுடன் அல்லது டாரினுடன் இணைந்து காணப்படுகிறது. இது கொழுப்பை ஈர்க்கவும், மிகைக்கொழுப்பை வெளியேற்றவும் உதவுகிறது.
choline : கோலின் : லெசித்தின் அசிட்டில்கோலின் போன்றவையாக அமைந்துள்ள விலங்குத் திசுக்களில் காணப்படும் ஒரு வேதியியல் பொருள். இது வைட்டமின்-B தொகுதியின் ஒரு பகுதி எனக் கருதப்படுகிறது. இது உடல் வளர்ச்சிக்கு ஒரு காரணியாக அமைந்து உள்ளது. நுரையீரலில் கொழுப்புப் படிவதை இது தடுக்கிறது. பால் பொருள்களில் இது மிகுதியாகக் கிடைக்கிறது.
choline magnesium trisali cylate : கோலின் மக்னீசியம் டிரைசாலிசைலேட் : சாலிசிலிக் அமிலத்தின் ஒருவழிப் பொருள். இது வீக்கத்தைக் கட்டுப்படுத்தும் தன்மை வாய்ந்த மருந்து.
cholinergic : நரம்பு இழைசார்ந்த : நரம்புக் கடத்தியாக அசிட்டில் கோலினாய் பயன்படுத்தும் நரம்பு இழைமங்கள் தொடர்புடைய.
choline theophyllinate : கோலின் தியேஃபைலினேட் : இது ஒரு கூட்டுப் பொருள். இது பொதுவான விளைவுகளில், அமினோ ஃபைலின் போன்றது. எனினும், வினைபுரிவதில், ஒழுங்காக இயங்காதது.
cholinesterase : கோலினெஸ்டெராஸ் : நரம்பு முனைகளில், அசிட்டில் கோலினை நீரிடைச் சேர்மப் பிரிப்பு செய்து கோலினாகவும், அசிட்டிக் அமிலமாகவும் பிரிக்கும் ஒரு செரிமானப் பொருள் தொகுதி.
cholinolytic : நரம்புத்தடைப் பொருள் : 1. அசிட்டில் சோலினின் அல்லது நரம்பு இழையிவினை யூக்கிகளின் பிணையைத் தடை செய்தல். 2. பரிவு நரம்புகளால் பழங்கப்படும் உறுப்புகளிலும், தன்னியக்கத் தசைகளிலும் உள்ள அசிட்டில் சோலினின் வினையைத் தடை செய்கிற ஒரு வினையூக்கி. cholinomimetic : கோலின் ஒப்புப்பொருள் : அசிட்டில் கோலினை ஒத்த வினையுடைய பொருள்.
choluria : பித்தநீரில் சிறுநீர் : 1. பித்தநீரில் சிறுநீர் இருத்தல். 2. பித்தநீர் நிறமிகளினால் சிறு நீர் நிறம் மாற்றமடைதல்.
chondral : குருத்தெலும்பு சார்ந்த.
chondrectomy : குருத்தெலும்பு அறுவைச் சிகிச்சை : ஒரு குறுத்தெலும்பை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றுதல்.
chondrin : எலும்பு குருத்து மூலம்.
chondritis : குருத்தெலும்பு வீக்கம் : குருத்தெலும்பு அழற்சி.
chondrodynia : குருத்தெலும்பு நோவு.
Chondrolysis : குருத்தெலும்பு கரைதல்.
chondroma : குருத்தெலும்புக் கழலை; குருத்தெலும்புக் கட்டி : குருத்தெலும்பில் உண்டாகும் கடுமையாக இராத கழலை. இதனை அகற்றிய பின்பும் மீண்டும் ஏற்படலாம்.
chondroblast : முதிராக்குருத்தெலும்பு : உயிரணுவை உற்பத்தி செய்யும் முதிரா குருத்தெலும்பு.
chondroblastoma : எலும்பு முனைக்கட்டி : வயது வந்தவர்களின் நீண்ட எலும்புகளின் எலும்பு முனைகளில் உண்டாகும் ஒரு வலியற்ற கட்டி. இதில் கருப்பைக் குருத்தெலும்பு போன்ற இழையம் மிகுந்த திசுக்கள் அடங்கியிருக்கும்.
chondromalacia : குருத்தெலும்பு மென்மையாதல்.
chondrodysplasia : எலும்பு முனை வளர்ச்சித்தடை : நீண்ட எலும்புகளின் எலும்பு முனைகளின் வளர்ச்சியைச் சீர்குலைத்தல். இது நீண்ட எலும்புகளின் வளர்ச்சி, குறுக்கம் ஆகியவற்றைத் தடைசெய்கிறது.
chondroitin sulphate : கோண்டிராய்ட்டின் சல்ஃபேட் : இணைப்புத் திசுக்களில், குறிப்பாகக் குருத்தெலும்பு, எலும்பு, குருதி நாளங்கள், விழி வெண்படலம் ஆகியவற்றின் ஆதாரப் பொருளில் காணப்படும் ஒரு கிளைக் கோசாமினோகிளைக்கான்.
chondrophyte : கோண்ட்ரோஃபைட் : ஒரு எலும்பின் எடுப்பான பகுதியில் வளரும் இயல்பு மீறிய எலும்புத் திரட்சி.
chondrosarcoma : குருத்தெலும்பு ஊன்ம வளர்ச்சி : குருத்தெலும்பில் ஏற்படும் உக்கிரமான ஊன்ம வளர்ச்சி.
chondrosis : குருத்தெலும்பாக்கம் : குருத்தெலும்பு உருவாதல்.
chondrotomy : குருத்தெலும்புப் பிளவு : குருத்தெலும்பையும் அறுவைச் சிகிச்சை மூலம் பிளத்தல். chondrus : எலும்புக் குருத்து.
chordata : தண்டெலும்பு விலங்குகள் : தங்கள் வளர்ச்சிநிலையின் போது ஒரு தண்டெலும்பு அல்லது அதன் கரு மூலத் தடங்களுடைய உயிரினப் பெரும் பிரிவு சார்ந்த விலங்குகள்.
chorde : ஆண்குறி விறைப்பு : ஆண்குறி கடும் நோவுடன் விறைத்திருத்தல். இதனால் மூத்திரக்குழாய் அழற்சியும் ஏற்படுகிறது.
chordic : காக்காய் வலிப்புடைய.
chorditis : விந்து இழை வீக்கம்; விந்துக்குழல் அழற்சி : விந்து இழை வீக்கம்.
chordoma : தண்டெலும்புக் கட்டி : தண்டெலும்பிலுள்ள முதிரா எச்சங்களிலிருந்து உண்டாகும் உக்கிரமான கட்டி. இது, இடுப்படி முக்கோண முட்டெலும்பு சார்ந்த புனித குத எலும்புப் பகுதியிலுள்ள பத்து எலும்புத்தொகுதியில் ஐந்தாவது, ஆறாவது எலும்புகளில் பெரும்பாலும் உண்டாகிறது.
chordotomy (cordotomy) : தண்டுவடப்பிளவுறுத்தம் : தண்டு வடத்தில் (முதுகுத்தண்டு) ஏற்படும் குடுமையான இடை விடாத வலியைப் போக்குவதற் காகத் தண்டு வடத்திலுள்ள நரம்பு இழைமங்களின் கற்றையை அறுவைச் சிகிச்சை மூலம் பிளவுறுத்தல்.
chorea : சுயக் கட்டுப்பாடிலா வலிப்பு : இது வலிப்பு வகையில் ஒன்று. நோயாளியின் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டு ஏற்படும் நோய். இதனை நடனவலிப்பு என்றும் கூறுவர்.
choreoathetosis : வாதவலிப்பு : நடனவலிப்பு எனப்படும் சுயக் கட்டுப்பாடில்லாத வலிப்புகளிலும், மூளையில் நைவுப் புண் ஏற்படுவதன் காரணமாக கைகளும் பாதங்களும் காரணமின்றி நடுங்குகிற உறுப்பு நடுக்கம் எனப்படும் சுழல் வாதத்திலும் புலப்படும் ஒரு கோளாறு.
chorioallantosis : கருப்பைப் புறச்சவ்வு : பாலூட்டிகளில் கருக்கொடியின் கருவுயிர்ப் பகுதியாக அமைகிற கருப்பைப் புறத்தோலும், உயிரகப்பையும் இணைவதால் உண்டாகும் முதிரா நிலைப் புறச்சவ்வுப் படலம்.
choriocarcinoma : கருப்பை கட்டி : கருக்கொடியிலிருந்து கருப்பையினுள்ள மிக அரிதாக வளரும் உக்கிரமான கட்டி.
choriogenesis : கருப்பைப்புறத் தோல்வளர்ச்சி : கருப்பையில் புறத்தோல் வளருதல். chorioid : கருப்பை புறத்தோல் போன்ற.
choriomeningitis : கருப்பை அழற்சி : குளோராய்ட் நரம்பு வலையினுள் நிணநீர் ஊடுருவுவதால் உண்டாகும் முளை அழற்சி நோய்.
chorion : கருப்பைப் புறத்தோல்; கரு வெளியுறை; சவ்வுறை : கருப்பையைச் சுற்றியிருக்கும் புறச்சவ்வு.
chorionic villi : கருப்பை புறத்தோல் துய்யிழை : கருப்பையின் புறத்தோலிலுள்ள மயிர் போன்ற இழை. இதிலிருந்து நச்சுக் கொடியின் முதிர் கருப்பகுதி உருவாகிறது.
chorionic villus biopsy : கருப்பைத் துய்யிழை ஆய்வு : பேறுகாலத்திற்கு முந்திய பல் வேறு கோளாறுகளுக்காகக் கருப்பைப்புறத்தோல் துய்யிழையில் செய்யப்படும் உயிர்ப்பொருள் ஆய்வு.
chorionic villus sampling : கருப்பை உயிரணு மரபணுச் சோதனை : கருவுற்றபின் 9-11 வாரங்களில் புறஒலி வழிகாட்டு தலின் கீழ், பேறு காலத்துக்கு முந்தி நோயைக் கண்டறியும் ஒரு நடைமுறை. இதில் கருக் கொடியிலிருந்து எடுக்கப்படும் கருப்பை உயிரணுக்ளை மரபணு இயல்புபிறழ்ச்சி இருக் கிறதா என்பதை ஆராய்தறிதல்.
chorioretinal : கருப்பை-கண் விழிப்புறத்திரை : கருப்பைப் புறத்தோல் மற்றும் கண்விழிப் பின்புறத்திரை தொடர்புடைய.
chorioretinitis : கருப்பைப் புறத்தோல் கண் விழித்திரை அழற்சி : கருப்பைப் புறத் தோலிலும் கண்விழிப் பின்புறத் திரையிலும் ஏற்படும் வீக்கம்.
chorioretinopathy : கருப்பைப் புறத் தோல்-கண் விழித்திரை நோய் : கருப்பைப்புறத்தோல் கண் விழிப் பின்புறத் திரை இரண்டையும் பாதிக்கும் ஒரு நோய்.
choristoma : திசுத்திரட்சி : இயல்புமீறிய பகுதியில் அமைந்துள்ள இயல்பான திசுத்திரட்சி.
choroid : கண் கரும்படலம்; கரு விழிப்படல ஊடு சவ்வு : விழித் திரைப்படலத்தின் தொடர்ச்சியாக இருக்கும் கண் விழியின் பின்பக்கத்தின் நடுப்பகுதியில் ஆறில் ஐந்து பகுதியாக அமைந்துள்ள நிறமியான செல்குழாய்ப் படலம். இது வெளிப்புறம் வெண்விழிக் கோளத்தின் புறத் தோலுக்கும், உட்புறம் கண் விழியின் பின்புறத்திற்கும் இடையில் அமைந்துள்ளது. இது ஒளிக்கதிர்கள் ஊடுருவு வதைத் தடுக்கிறது. choroiditis : கண்விழி பின்படலஅழற்சி; கருவிழி பின்படல அழற்சி : விழித்திரைப்படலத்தைப் பாதிக்கும் ஒரு சிதைவு மாற்றம்.
choroidocyclitis : கண் வீக்கம் : கண் கரும படலத்திலும், கண் ணிமை இழை உறுப்பிலும் ஏற்படும்.
christmas disease : கிறிஸ்துமஸ் நோய் : குருதிக்கட்டு எனப்படும் மிக அரிதாக உண்டாகும் ஒரு நோய். இது சிறு காயத்திலிருந்து குருதிப் பெருக்கிடும் பரம்பரை நோயாகும். இதனை குருதிக் கட்டு-B நோய் (haemo philia-B disease) என்றும் அழைக்கப்படுகிறது. இது குழந்தைகளிடம் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டதால் இதனைக் 'குழந்தை நோய்' என்றும் கூறுவர். "Factor IX" எனப்படும் புரதம் இல்லாமையினால் இரத்தம் உறைவது நின்றுபோவதால் இந்நோய் உண்டாகிறது.
christian's triad : கிறிஸ்டியன் மும்மை நோய்க்குறிகள் : திசு உயிரணு அழிவில் காணப்படும் மூன்று நோய்க்குறிகள். இதில் உயிரணுச்சிதைவு எலும்பு நைவுப்புண், இயல்புக்கு மீறிய கண்விழிப்பிதுக்கம், இனிப்பு இல்லா நீரிழிவு மூன்று நோய் குறிகள் உண்டாகின்றன. ஹென்றி கிறிஸ்டியன் என்ற அமெரிக்க மருத்து அறிஞரின் பெயரால் இது அழைக்கப் படுகிறது.
christian syndrome : கிறிஸ்டியன் நோய் : அளவுக்கு மீறி அபினி உட்கொள்வதால் உண்டாகும் தன் இனக்கீற்று நோய். இதனால், கட்டைவிரல்களும் முனைகோடி விரல் எலும்புகளும் குட்டையாகி விடுகின்றன.
christian-weber disease : கிறிஸ்டியன்-வெபர் நோய் : சீழ்க் கட்டியில்லாத திசுப்படல அழற்சி நோய் மறுக்களித்தல். இதனால், தோல் சிவப்பாதல், அழற்சி புண்ணாதல், தோல் சுருக்கம் ஆகியவை தோன்றி தோலடியில் கடுமையான வலி உண்டாகும்.
chromaffin : குரோமிய நிற மாறுபாடு : அண்ணிரகச் சுரப்பிகளின் சில உயிரணுக்களைப் போன்று, குரோமியம் உப்புகளினால் வலுவாக நிறம் வேறுபடுதல்.
chromaffinoma : குரோமியக்கட்டி : குரோமிய நிற உயிரணுக்களில் அடங்கியுள்ள கட்டி.
chromatic : நிறம் சார்ந்த : 1. நிறம் தொடர்புடைய. 2. குரோ மாட்டின் தொடர்புடைய.
chromatid bodies : கருந்திரள் கட்டி : கருநிறமுடைய நீள் வட்டமான திரட்சி. இது அமீபாக்கட்டிகளில் 1-4 எண் னிக்கையில் காணப்படும். chromatin : குரோமாட்டின் : டி.என்.ஏ, புரதம் ஆகியவை அடங்கியுள்ள உயிரணுக்களினுள் உள்ள பொருள்.
chromatogram : நிற ஆய்வுப் பதிவு : நிற வரைவு நிறங்கள் பற்றிய ஆய்வின் முடிவுகளைப் பதிவு செய்தல்.
chromatography : மூலக்கூறு பகுப்பு : சிக்கலான மூலக் கூறுகளின் கலவைகளிலிருந்து மூலக்கூறுகளைத் தனித்தனியே பிரித்தெடுக்கும் ஆய்வுக்கூட உத்தி. இது இயலிர்ப்பாற்றல் மூலம் சேர்மாற்றங்களைப் பிரிக்கும் முறையைப் பயன் படுத்துகிறது.
chromatolysis : பச்சயப் பகுப்பாய்வு : பச்சையப் பொருள்களிலுள்ள குருணைகளை சிதைத்தெடுத்தல். ஒரு நியூரானிலுள்ள நிசால் பகுதிகள் இதற்கு எடுத்துக்காட்டு. இதன் வெளிப்புறச் செயல்முறை உயிரணு காலியாவதால் அல்லது சேதம் அடைவதால் உண்டாகிறது.
chromatophore : நிறவேதியியல் அணுக்கள் : 1. நிறமி உயிரணு எதுவும். 2. நிறத்தை உண்டாக்கும் உயிருள்ள உயிரணு, 3, ஒரு வேதியியல் கூட்டுப்பொருளிலுள்ள அதன் நிறத்துக்குக் காரணமான அணுக்களின் குழுமம்.
chromatopsia : வண்ணக்காமாலை : இது ஒரு வகைக் கண் நோய். இந்த நோய் உள்ளவர்களுக்கு நிறமற்ற பொருள்கள் கூட வண்ணச் சாயலுடன் தெரியும். மேலும் பொருள் நிறம் மாறிக் காட்சி தரும்.
chromatoptometry : நிறம் உணர் திறன் அளவீடு : வண்ணம் உணர்திறனை அளவிடுதல்.
chromaturia : சிறுநீர் நிறத்திரிபு : சிறுநீர் இயல்பு மீறி நிறத்திரி படைதல்.
chromblastomy cosis : ஒட்டுயிர்ப் பூசண நோய் : தோலிலும், தோலடியிலும் உள்ள திசுக்களில் ஒரு பகுதிக்குள் காணப்படும் கடுமையான ஒட்டுயிர்க் காளான் நோய். இதனால், காலிபிளவர் தோற்றத்துடன் கரடுமுரடான நசிவுப் புண்கள் உண்டாகும்.
chromic acid : குரோமிக் அமிலம் : குரோமியமாக்கிய நரம்பிழையில் உறை பொருளாகப் பயன்படுத்தப்படும் 5% கரைசல். அதிக அடர்த்தி வாய்ந்த கரைசல்கள் கடுங் காரத்தன்மை வாய்ந்தவை.
chromium : குரோமியம் : வேதியியல் தனிமம். அணுஎண் 24 உடையது. உணவுச்சிற்றளவு தனிமங்களில் இன்றியமையாத ஒன்று. chromoblast : கருமுளை உயிரணு : ஒரு நிறமி உயிரணுவாக வளர்கிற ஒரு கருமுளை உயிரணு.
chromocystoscopy : வண்ணச் சாயமுறை; சிறுநீர்ப்பை அறுவைச் சிகிச்சை : ஒரு சாயப்பொருளை வாய்வழியாகச் செலுத்தி மூத்திரக்கசிவு நாளத்துளையில் உள் அறுவைசெய்து சிறுநீர்ப்பையை அகற்றுதல்.
chromogenesis : வண்ண உற்பத்தி : வண்ணம் அல்லது நிறமி உற்பத்தியாதல்.
chromomere : குரோமாட்டின் குருணை : கருமுளை அணு இயக்கமாற்றத்தின் தொடக்க நிலைகளில் ஒரு நிறப்புரியின் மீது தோன்றும் செறிவான குரோமாட்டின் குருணைப் பண்புகளில் ஒன்று.
chromonema : நிறப்புரி மைய இழை : ஒரு நிறப்புரியின் நீள வாக்குப் பகுப்பின் காரணமாக அமைந்துள்ள இரண்டு இழைகள் போன்ற அமைப்பின் மைய இழை. இது குரோமாட்டின் குருணைகள் நெடுகே அமைந்திருக்கும்.
chromophil : வண்ண ஏற்பி; கறைபடும் உயிரணு : மிக எளிதாகக் கறைபடக்கூடிய உயிரணு அல்லது திசு. சில நுண்ணாய்வு உந்திகளில் இந்தக் கறை மிக அதிகமாகப்படும்.
chromophobe : கறைபடா உயிரணு : மிக எளிதாகக் கறைபடாத உயிரணு அல்லது திசு.
chromophobia : கறைபடா தன்மை : சாயங்களினால் மிக குறைவாகக் கறைபடும் தன்மை.
chromophore : வண்ண உயிரணு : தாவரங்களிலும் சிலவகை ஒற்றையணு உயிரிகளிலும் காணப்படும் உயிருள்ள ஒரு வண்ண உயிரணு,
chromoscopy : சிறுநீரக நோய் ஆய்வு : சாயப்பொருள்களை வாய்வழியாக உட்செலுத்தி சிறுநீரின் நிறத்தைக் கொண்டு சிறுநீரகக் கோளாறுகளைக் கண்டறிதல்.
chromosomal RNA : நிறப்புரி ஆர்.என்.ஏ : ரியோநூக்ளிக் அமிலத்தின் மீச்சேர்மக்கூறுகள். இவை, டிஎன்ஏ இருபடியாக்கம் செய்யப்பட்ட பின்பு, பின்கோடி சரத்தில் டி.என்.ஏ.இன் கவடு வளர்வதற்கு ஆதாரமாக இருக்கின்றன.
chromosome : இனக்கீற்று; பண்புக்காரணித்தொகுப்பு; அணு குருமி; நிறமி; நிறக்கோல் : உயிர்மப் பிளவுப் பருவத்தில் உயிரியலான பங்கு கொண்ட இனமரபுப் பண்புகளைக் கொண்டிருப்பதாகக் கருதப்படும் இனக்கூறின் கம்பியிழை போன்ற பகுதி. இது இரட்டித்துப் பெருகும் தன்மை யுடையதாகும்.
chronobiology : காலவரிசை உயிரியல் : உயிரியல் நிகழ்வு களை-குறிப்பாகத் திரும்பத்திரும்ப நடைபெறும் அல்லது சுழல் முறையில் நடைபெறும் நிகழ்வுகளை-காலவரிசையில் அறிவியல் முறையில் ஆராய்தல்,
chronic : நாட்பட்ட நோயாளி.
chronograph : காலவரிசைப் பதிவுக் கருவி : காலத்தின் சிறு சிறு இடைவெளிகளைப் பதிவு செய்யக்கூடிய ஒரு கருவி.
chronological age : காலவரிசை வயது; காலக்கிரம வயது : ஒரு மனிதரின் உண்மையான வயது (ஆண்டுகளில்).
chronotropism : காலமுறை மாற்றம் : இதயத் துடிப்பு கால முறைப்படியான அசைவுகளின் வேகவிதத்தைத் திருத்தியமைத்தல்.
chrysoderma : நிறமாற்ற நோய் : தோலிலும், கண்ணிலும் இணைப்புத் திசுக்களில் தங்க உப்புகள் படிவு செய்வதன் காரணமாக தோலும், விழி வெண்படலத்திலும் கரும் பழுப்பு நிறத்தில் ஏற்படும் நிற மாற்றம்.
chrysotile : கிரிசோட்டைல் : சுருள் சுருளான நீண்ட இழை மங்களுடன் கூடிய பாம்பு வடிவிலான வெள்ளைக் கல்நார்.
chubby puffer syndrome : கொழுக்மொழுக் நோய் : ஒரு மத்திய உறக்க மூச்சு நிறுத்தம். உடல்பருமனாகவும், மென்மையாகவும் உள்ள ஆண்களை இது பாதிக்கிறது. அடிப்படை உயிர்ப்புக் குறைபாடு காரணமாக இது உண்டாகிறது.
chyostek's sign : முகச்சுரிப்பு : முக நரம்பில் துளையிடுவதால் முகம் அளவுக்குமீறிச் சுரித்துப் போதல். இது, முறை நரம்பிசிவு நோயின் அறிகுறி.
chyle : உணவுப்பால்; குடல்கூழ்; குடற்பால்; குடற்சாறு : உடலில் உணவிலிருந்து ஊறும் கொழுப்பு கலந்த வெள்ளை குடல் நிணநீர்.
chyliferous : உணவுப்பால் சார்ந்த : 1. உடலில் உணவிலிருந்து ஊறும் கொழுப்பு கலந்த வெள்ளி நிணநீர் என்ற உணவுப்பால் உற்பத்தி யாதல். 2. உணவுப்பால் கொண்டு செல்லப்படுதல்.
chylomicron : கொழுப்புப்புரதம் : உணவு உண்டபிறகு திசுக்களுக்குப் புறவளர்ச்சிக் கொழுப்பின் (கொலஸ்டிரால்) முக்கிளி சரைகள், பல்வேறு அப்போலிப் புரதங்கள் ஆகியவற்றைக் கொண்டு செல்லும் ஒருவகைக் கொழுப்புப் புரதங்கள்.
chylomicronaemia : சைலோமைக்ரோன் மிகுநோய் : இரத்தத்தில் சைலோமைக்ரோன்கள் மிகுதியாக இருத்தல். இதில் முக்கிளிசரைடு அளவும் அதிகமாக இருக்கும்.
chylothorax : உணவுப்பால் கசிவு : மார்பியல் குடல் கூழ் நுரையீரல் உட்குழிவிற்குள் மார்பக நிணநீர் குழலிலிருந்த உணவுப்பால் கசிதல்.
chyluria : சிறுநீரில் உணவுப்பால்; குடற்பால் நீரிழிவு; கொழுநீர் : சிறுநீரில் உணவுப்பாற்கூறு காணும் உடற்கோளாறு.
chymar : கைமார் : கைமோட்ரிப்சின் என்ற மருந்தின் வணிகப் பெயர்.
chyme : உணவுச் சாறு : இறைப்பைக் குழம்பு குடலில் உண்டாகும் உணவின் குழம்பு. இது கனமான மஞ்சள் நிற அமிலம். இது இரைப்பையி லிருந்து, முன்சிறு குடலுக்குச் செல்கிறது. இதன் அமிலத் தன்மை, உணவுச்சாறு அடிக்கடி இடைவெளிகளில் வெளியேறும் வகையில் இரைப்பையின் வாயில்காப்பைக் கட்டுப் படுத்துகிறது.
chymification : உணவு குழம்புருவாதல் : உணவு குழம்பாக மாறும் மாறுபாடு.
chymoral : கைமோரால் : டிரிப்சின், கைமோட்ரிப்சின் போன்ற செரிமானப் பொருள் கலவையின் (என்சைம்கள்) வணிகப் பெயர்.
chymotrypsin : கைமோட்ரிப்சின் : புரதத்தைச் சீரணிக்கக் கூடிய ஒரு செரிமானப் பொருள் (என்சைம்). இது கணையத்தில் சுரக்கிறது.
chymotrypsinogen : கைமோடிரிப்சினோஜன் : கணையத்தில் உற்பத்தியாகும் கைமோடிரிப்சின் என்ற செரிமானப் பொருளின் முன்னோடி. டிரிப்சின் என்ற செரிமானப் பொருளின் வினையின் மூலம் கைமோடி ரிப்சினாக மாற்றப்படுகிறது.
cicatrin : சிக்காட்ரின் : நியோமைசின், பாசிட்ராசின் அடங்கிய ஒரு தயாரிப்பின் வணிகப் பெயர். இது அமினோ அமிலமாகக் கிடைக்கிறது. இது காயங்களைக் குணப்படுத்துகிறது.
cidex : சைடெக்ஸ் : நுட்பமான அறுவைச் சிகிச்சைக் கருவிகளிலும் ஆடிகளிலும் பயன் படுத்தப்படும் பாக்டீரியாக் கொல்லி மருந்தின் வணிகப் பெயர்.
cidomycin : சைடோமைசின் : ஜெண்டாமைசின் சல்ஃபேட் என்ற மருந்தின் வணிகப் பெயர்.
cigarette paper skin : சிகரட்தாள் தோல் : தவறான ஒருங் கிணைப்பு, I, III வகை எலும்புப் புரதச் செய்முறை காரணமாக பளபளப்பான மிக மெருதுவான மேற்பரப்புடன் தோலைக்குறிப்பாக நுண்ணுயிராக்கம் செய்தல். இது, எஹ்லர்ஸ்டான்லெஸ் நோய் வகையில் காணப்படுகிறது.
cilia : கண்ணிமை மயிர் : கண்ணிமைகளில் காணப்படும் இழை போன்ற உறுப்பு.
ciliary : இழைம உறுப்பு சார்ந்த : 1. கண்ணிமை மயிர் அல்லது மயிர்போன்ற உறுப்பு கொண்டு உள்ள. 2. இழைமயிர் அல்லது தசை போன்ற கண் உறுப்புகள் தொடர்புடைய.
ciliata : இழை உறுப்பு உயிர் : ஒற்றை அணு உயிரியின் ஒர் உட்பிரிவு. இது இடம் பெயர்வதற்குக் கால்போல் பயன்படும் இழை உறுப்பினைக் கொண்டிருக்கும். .
ciliectomy : இழையுறுப்பு அறுவை மருத்துவம் : 1. இழையுறுப்பின் பகுதியை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றுதல். 2. கண்ணிமையின் மயிர் வரிசை அடங்கிய கண்ணிமையின் ஒரு பகுதியை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றுதல்.
cimetidine : சிமெட்டிடின் : இரைப்பை அமிலம் சுரப்பதை தடுக்கக்கூடிய H2 ஏற்பிகளுக்கு எதிரானது. சீரணப்பாதைப் புண்ணைக் குணப்படுத்த இது பயன்படுத்தப்படுகிறது. Cimex : சிமெக்ஸ் : மூட்டுப் பூச்சி வகையைச் சேர்ந்த இரத்தம் உறிஞ்சும் பூச்சிக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வகை.
cinchocaine : சிங்கோக்கைன் : ஆற்றல் வாய்ந்த உறுப்பெல்லை உணர்வு நீக்கி. இது தோல் மேற்பரப்பு உணர்வு நீக்கியாகவும் (1%-2%), ஊடுருவு உணர்வு நீக்கியாகவும் (0.05%-0.2%), முதுகந்தண்ட உணர்வு நீக்கியாகவும் பயன்படுகிறது. இது களிம்பு வடிவிலும் கிடைக்கிறது.
cinchona : சிங்கோனா : இது ஒரு தென் அமெரிக்க மரம். இதன் பட்டையிலிருந்து காய்ச்சல் மருந்துப்பொடி தயாரிக்கப்படுகிறது. சிங்கோனைன், சிங்கோனிடின், கொயினா, கொயினிடின் ஆகிய மருந்துப் பொருள்களும் இதன் வேர், தண்டுப் பட்டையிலிருந்து தயாரிக்கப்படுகின்றன.
cinchonism : சிங்கோனிசம் : சிங்கோனா மரப்பட்டையிலுள்ள காரச்சத்தின் ஆற்றல் அளவு கடந்து செயற்படுவதால் ஏற்படும் கோளாறு. இதனால், தோல் சிவப்பாதல், காதிரைச்சல், பார்வை மங்குதல், தலைச் சுற்றல், குமட்டல், வாந்தி, பேதி உண்டாகின்றன. காரச்சத்து மிக அதிகமாக இருக்குமானால், தோல்படை, உறக்க மயக்கம், கண்குருடு, ஆழ்ந்த மன இறுக்கம் ஏற்படும்.
cincophen : சிங்கோஃபென் : கீல்வாதம், வாதக்காய்ச்சல் ஆகியவற்றுக்குப் பயன்படும் நோவகற்றும் மருந்து.
cineangiocardiography : ஊடகச் சலனப்படம் : இதய அறைகள், இரத்த நாளங்கள் வழியாக ஒரு மாறுபடு ஊடகம் செல்லும் பாதையைக் காட்டும் சலனப்படங்கள்.
cincangiography : இதய ஒளிப் படப் பதிவு : இதயம், இரத்த நாளங்கள் ஆகியவற்றின் உருக்காட்சிகளைத் திரைப்பட உத்தி மூலம் ஒளிப்படமாகப் பதிவு செய்தல்.
cingulectomy : வளைய அறுவைச் சிகிச்சை : முன்புற மூளை மடிப்புச் சுருளை மின் பகுப்பு முறையில் அழித்தல்.
cingulum : அரைக்கச்சை வளையம் : 1. சுற்றி வளைந்துள்ள அமைப்பு அல்லது வளையம். 2. மூளை மடிப்புச் சுருளில் நீளவாக்கில் செல்லும் ஒரு இழைக்கற்றை. cinnamon : இலவங்கப் பட்டை : இலவங்க மரப்பட்டை, வயிற்று உப்புச்சத்தை அகற்றும் தன்மை யுடையது. சிலசமயம் வயிற்றுப் போக்கு மருந்துடன் சேர்த்துப் பயன்படுத்தப்படுகிறது.
ciprofloxacin : சிப்ரோஃபிளாக்சாசின் : ஃபுளுரோகுவினோலோன் என்னும் செயற்கை நோய் முறியம். இது பல கிராம்-நேர் படிவ மற்றம் கிராம்-எதிர் படிவ உயிரிகளுக்கு எதிராகச் செயற்படக் கூடியது.
circinate : வளையக் கொப்புளம்; வட்ட உரு; வட்ட வட்டமான : கிரந்தி நோயில் படர்தாமரை போன்று தோலில் உண்டாகும் வளைய உருவக்கொப்புளங்கள்.
circulation : குருதிச்சுற்றோட்டம் : சாதாரணமாக உடலெங்கும் ஏற்படும் இரத்தச் சுழற்சியை இது குறிக்கும்.
circumcision : சுன்னத்து செய்தல்; முனைத்தோல் வெட்டல்; நுனித் தோல் நீக்கம் : தோல் நுனியிதழ் அகற்றுதல்.circumduction : சுற்று சுழற்சி : உறுப்பினை அல்லது கண்ணை சுற்றிச் சுழலச் செய்தல்.
circumoral : மைனாவாய்; வாயைச்சுற்றி; வாய்சூழ் : மைனாவின் வாயைச் சுற்றியுள்ளது போல் வாய்த்தோலைச் சுற்றி வெண்ணிறம் தோன்றுதல். செம்புள்ளி நச்சுக்காய்ச்சலின் ஒர் அறிகுறி.
circumscribed : சுற்றிவட்டமிடுதல் : ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் கட்டுப்படுத்துதல், சுற்று வரையறை செய்தல்.
circumstantiality : சிந்தனைச் சிதறல் : சிந்தனைச் செயல் முறை சிதறுதல். இதில் முக்கியத் துவமல்லாத அற்ப நுணுக்கங்களை ஒருவர் அவசியமின்றி மிக விரிவாகக் கற்பனை செய்வார்.
circumvallate : சூழ்வளையம்; வட்டப்பொட்டு : நாக்கின் அடிப் பகுதியிலுள்ள பெரிய சுற்று அடுக்குத்தசை போன்று சூழ்ந்து பரவியுள்ள வளையம்.
cirrhosis : உறுப்புத் தடிப்புக் கோளாறு; கரணை நோய்; ஈரல் இறுக்கி : உறுப்பின் இழைமம் இற்றுப் போய் இணைமங்கள் மட்டுமீறி வளர்ச்சியடையும் கோளாறு.
cirsectomy : சுருள்சிரை அறுவை : ஒரு சுருள் சிரையின் ஒரு பகுதியைத் துண்டித்து எடுத்தல்.
cirsoid : நரம்புக் காழ்ப்பு; சுருள் மலி : நரம்புப் புடைப்புக் கோளாறு.
cisplatin : பிளாட்டினக் கூட்டுப் பொருள் : உக்கிர வேகமுடைய நிலைகளில் சிகிச்சையளிப்பதற் குரிய ஒரு பிளாட்டினம் கூட்டுப் பொருள்.
cistern : தேக்கப்புழை : 1. உண வுப்பால், நிணநீர், மூளைத் தண்டுவடநீர் போன்ற திரவங்களைத் தேக்கிவைத்துக் கொள்ளப் பயன்படும் உட்குழிவு அல்லது உட்புழை. 2. ஊன்ம உள் கூழ்மச் சவ்வின் தட்டையான பைகளுக்கு அல்லது இருஅணு உறைச் சவ்வுகளுக்கு இடையிலுள்ள மிக நுண்ணிய இடம்.
cisternography : மூளைக் குழி ஆய்வுப் படம் : ஒளி ஊடுருவக் கூடிய ஊடகத்தை ஊசிமூலம் சவ்வு வழியாகச் செலுத்திய பிறகு பெருமூளையின் புழை யுறையினை ஊடுகதிர்ப்பட முறையில் ஆராய்தல்.
Cistron : மரபணு அலகு : மரபணுப்பொருளின் மிகச் சிறிய அலகு. இது மரபணுவை ஒத்தது எனக் கருதப்படுகிறது. Citanest : சிட்டானெஸ்ட்: பிரிலோக்கைன் என்ற மருந்தின் வணிகப்பெயர்.
citric acid : சிட்ரிக் அமிலம் : எலுமிச்சைப் பழங்களிலுள்ள அமிலம். வயிற்று உப்புசத்தை குணப்படுத்த பொட்டாசியம் சிட்ரேட்டாகக் கொடுக்கப் படுகிறது.
citrin : சிட்ரின் (வைட்டமின்-P) : இழைமக் குருதி நாளங்களின் முறிவெளிமைப் பண்பை இயக்குவதாகக் கருதப்பட்ட நீரில் எளிதாகக் கரையும் பண்புடைய எலுமிச்சைப்பழ ஊட்டச்சத்து. இது வைட்டமின்-C என்ற ஊட்டச்சத்தின் வினையை அதிகரிக்கிறது. எலுமிச்சை இனத்தைச் சேர்ந்த பழங்கள், கரு முந்திரிப்பழம் போன்றவற்றில் இது உள்ளது.
citrullinaemia : குருதியில் மிகை சிட்ருலின் : இரத்தத்தில் சிட்ருலின் என்ற அமினோ அமிலம் மிகுதியாக இருத்தல்.
citrullinuria : சிறுநீரில் மிகைச் சிட்ருலின் :சிறுநீரில் சிட்ருலின் என்ற அமினோ-அமிலத்தின் அளவு அதிகமாக இருத்தல்.
clairaudience : சேணோசை : புலன் கடந்தவற்றைக் கேட்கும் கேள்வியாற்றல்.
clamp : பற்றுக்கருவி : ஒர் உறுப்பினை அல்லது கட்டமைப்பை அழுத்துவதற்கான அறுவைச் சிகிச்சைச் சாதனம்.
clap : மேகநோய் (வெட்டை) : வெட்டை நோய்த்தொற்று படர்தல்.
clapotement : சிதறல் ஒலி : நீரைச் சிதறியடித்தல் போன்ற ஒலி.
clara cell : கிளாரா உயிரணு : மூச்சுக்குழாய் மேல் திசுவில் உள்ள இழை உறுப்புகளைக் கொண்ட புறத்தோல் உயிரணுக்களிடையே துருத்திக் கொண்டிருக்கும் வட்டவடிவமான புறத்தோல் இல்லாத உயிரணு. ஆஸ்திரிய உடல் உட்கூறியலறிஞர் மாக்ஸ் கிளாரா-வின் பெயரால் அழைக்கப்படுகிறது.
clarificant : தெளிவுப் பொருள் : ஒரு திரவத்தின் கலங்கல் நிலையை தெளியச்செய்யும் ஒரு பொருள்.
clarithromycin : கிளாரித்ரோமைசின் : நோய் நுண்மங்களைக் கொல்லும் இயல்புள்ள ஒரு மேக்ரோலைடு. இது ஏராளமான கிராம்-நேர்வு, கிராம்எதிர்வு உயிரிகளுக்கு எதிராக வேலை செய்கிறது.
classification : வகைபாடு : சில பொதுவான பண்பியல்புகளின் அடிப்படையில் வர்க்கங்களாக அல்லது குழுமங்களாக முறை பட வகைப்படுத்துதல். clastogenic : பிளவுறுத்தம் : இனக்கீற்றுகள் போன்றவற்றை பிளவுறுத்துதல்.
claudication : நொண்டுதல்; கால் ஊனம்; கால் தசைவலி : கால் களுக்கு இரத்தம் செல்வது தடைபடுவதால் காலை நொண்டி நடத்தல், நாளங்களில் இசிப்பு அல்லது நோய் காரணமாக இது உண்டாகலாம்.
claustrophibia : ஒதுக்கிட அச்சம் : ஒதுக்கிடம் என்றாலே அச்சம் உண்டாகும் கோளாறு.
claustrophilia : தனிமை வேட்கை : ஒர் அடைக்கப்பட்ட அறையில் அல்லது இடத்தில் தன்னந்தனியாக இருக்க வேண்டும் என்பதில் இயல்பு கடந்த நாட்டம்.
claustrum : மூளை மென்படலம் : மூளைக்கோளங்களில் உள்ள சாம்பல் நிறப்பொருளின் மென்படலம்.
clavicle : கழுத்துப்பட்டை எலும்பு. கழுத்துப்பட்டை எலும்பு.
clavulanate : கிளாவுலானேட் : ஒரு பீட்டா லேக்டாமேஸ்; கட்டமைப்பில் நோய் நுண்மத் தன்மையுடையது. பெனிசிலினை எதிர்க்கும் உயிரினங்களில் லேக்டாமேசைச் செயலிழக்கச் செய்யும் பெனிசிலின் களுடன் தொடர்புடையது.
clavulanic : கிளாவுலானிக் அமிலம் : பென்சிலினை எதிர்க்கும் பாக்டீரியா உற்பத்தி செய்யும் செரிமானப் பொருளைத் தடை செய்வதற்கு அமோக்சிலினுடன் சேர்த்துப் பயன்படுத்தப் படும் அமிலம்.
clavus : எலும்புத் தடிப்பு : எடுப்பான எலும்பின் மீது அழுத்தம் காரணமாக உண்டாகும் தடிப்பு.
clawfoot : வளை நகப் பாதம்; வளை அங்கால்; புலிப்பாதம்; முடங்கு கால் : பாதத்தின் நீள வளைவு உயரத்தில் அதிகமாகும் ஒர் உறுப்புத் திரிபு. கால் விரல் பகுதி வளைந்து விடுவதால் இது உண்டாகிறது. இது பிறவியிலோ அல்லது நோயாலோ ஏற்பட்டு இருக்கலாம்.
claw hand : வளை நகக்கை; மடங்குகை; வளைவு அங்கை; முடக்கை :கை வளைந்து, வளைந்த நகம்போல் தோற்றமளித்தல். காயத்தினால் அல்லது நோயினால் இது உண்டாகலாம். clearance : தடை ஒழிப்பு : 1. ஏதேனுமோரிடத்திலிருந்து எதையேனும் அகற்றும் செயல். 2. இரத்தத்திலிருந்து ஒரு பொருளை அகற்றுதல்.
cleft : பிளவு; வெடிப்பு : 1. முதிராக் கருநிலையில் ஏற்படும் ஒரு வெடிப்பு. 2. பிறவியிலேயே உதட்டில் ஏற்பட்டிருக்கும் ஒருபிளவு பொது மேலுதட்டில் மத்தியிலிருந்து சற்று விலகி இந்த பிளவு ஏற்பட்டிருக்கும். 3. மேல் வாய்ப்பகுதியான அண்ணத்தில் பிறவியிலேயே ஏற்பட்டிருக்கும் ஒர் இடைவெளி. பெரும்பாலும் பிளவு உதட்டுடன் இது சேர்ந்து இருக்கும்.
cleft palate : பிளவு அண்ணம்; அண்ணப் பிளவு : இடது, வலது அண்ணங்கள் பிறவியிலேயே இணையாமலிருத்தல், பிளவுபட்ட மேல் உதடு (ஒலு வாய்) என்ற கோளாறுடன் தொடர்புடையது.
cleidotomy : கருவாய் அறுவை : கடினமான மகப்பேற்றின் போது குழந்தைப் பேற்றினை எளிமை ஆக்குவதற்காக முதிர் கருவின் வாய்ப்பட்ட எலும்பினை அறுவைச் சிகிச்சை முறை பிளவுறுத்துதல்.
clifton assessment procedures for the Elderly : முதியோர்க்கான கிளிஃப்டோன் கணிப்பு நடைமுறை : முதியோரின் புலனுணர்வுச் செயற்பாடு. நடத்தை முறை ஆகியவற்றை அளவிடுவதற்கான பரிசோ தனைகளின் தொகுதி.
climacteric : வாழ்க்கைத் திருப்பு முனை : 1. வாழ்க்கையின் முக் கியத் திருப்புக்கட்டம். 2. உடல் மாறுதல் ஏற்படுவதாகக் கருதப்படும் நெருக்கடி கண்டம். 3. 45-60 வயதுகளுக்கு இடைப்பட்ட தளர்ச்சிமிக்க பருவத்தில் ஏற்படும் நெருக்கடியான நிலைமை. 4. ஒரு பெண் தன் வாழ் நாளில், தனது இனப்பெருக்க ஆண்டுகளில் இருந்து இனப்பெருக்கம் செய்யாத ஆண்டுகளுக்கு மாறும் காலக்கட்டம்.
climatotherapy : தட்பவெப்பச் சிகிச்சை : நோயாளியை அவர் குணமடைவதற்கு ஏற்புடைய தட்பவெப்ப நிலையுள்ள இடத்துக்குக் கொண்டு செல்வதன் மூலம் நோய்க்குச் சிகிச்சை யளித்தல்.
climax : முகட்டு நிலை : 1. ஒரு நோயின் மிகக்கடுமை வெளிப் படும் உயர்நிலை, 2. உணர்ச்சித் துடிப்பு.
clindamycin : கிளிண்டமைசின் : லிங்கோமைசினிலிருந்து கிடைக்கும் வழிப்பொருள். இது தாய்க் கலவையைவிட அதிகச் செயலூக்கம் வாய்ந்தது.
clinic : மருந்தகம்; பண்டுவமனை : 1. நோயாளிகள் படுக்கை அருகிலேயே மருத்துவத்துறை அல்லது அறுவைத் துறைக்குரிய பயிற்சி போதிக்கும் நிலையம். 2. ஊர்தி மருத்துவ நோயாளிகளைக் கவனிக்கும் நிலையம்.
clinical : மருத்துவப் பயிற்சி சார்ந்த; மருத்துவ : படுக்கை மருத்துவப் பயிற்சியைச் சார்ந்த, நோயாளிகளைப் பரிசோதனை செய்தல், அவர்க்குச் சிகிச்சை அளித்தல் குறித்து ஏட்டில் படித்ததை நடைமுறைப் பயிற்சி மூலம் கற்றல் சார்புடைய.
clinician : மருத்தகத் தொழிலாற்றுநர் : நோயாளிகளைக் கவனிப்பதில் ஈடுபட்டுள்ள ஒரு சுகாதாரத் தொழிலாற்றுநர்.
Clinimycin : கிளினிமைய்சின் : ஆக்சிடெட்ராசைக்ளின் என்ற மருந்தின் வணிகப் பெயர்.
clinicopathologic : மருந்தக வேதியியல் : ஆய்வுக் கூடத்தில் சடல ஆய்வு அல்லது உடல் திசு ஆய்வு மூலம் புலனாகும் கோளாறுகள் மூலமாக நோயாளியின் நோய் இயல்புகளை ஆராய்தல்.
clinistix : கிளினிஸ்டிக்ஸ் : சிறு நீரிலுள்ள குளுக்கோஸ் அளவை அளவிடுவதற்காகப் பயன்படுத்தப்படும் குளுக்கோஸ் ஆக்சிடேஸ் என்ற வினைஊக்கிப் பொருள்.
clinitest : கிளினிடெஸ்ட் : சிறு நீரில் சர்க்கரை போன்ற பொருள்களின் குறைவைப் பரிசோதிப்பதற்குப் பயன் படுத்தப்படும் தாமிர சல்பேட் விளையூக்கி மாத்திரைகள்.
clinocephaly : சேணமண்டை : மண்டையோட்டின் மேற்பரப்பில் சேணம் வடிவம் போல் தோற்றம் அளிக்கும் ஒரு உட்குழிவான பரப்பு. இது வளர்ச்சி நிலையில் ஏற்படும் ஒரு கோளாறு.
clinodactyly : விரல்கோட்டம் : ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட விரல்கள் நிரந்தரமாகக் கீழ்நோக்கி வளைந்திருத்தல் அல்லது திரிபடைந்திருத்தல்.
clip : பிடிப்பு ஊக்கு : கத்திரியில் வெட்டப்பட்ட காய விளிம்புகளைப் பிடித்துக் கொள்வதற்கான ஒர் உலோகச் சாதனம்.
cliseometer : கிளிஸ்யோமீட்டர் : உடலின் அச்சுக்கும் இடுப்பு எலும்புக்கும் இடையிலான கோணங்களை அளவிடுவதற்கான ஒரு சாதனம்.
clitoridectomy : பெண்கந்து அறுவை மருத்துவம் : பெண் கந்தினை (பெண்லிங்கம்) அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றுதல்.
clitoriditis : பெண்கந்து வீக்கம்; அல்குல் வீக்கம் : பெண்கந்தில் (பெண் லிங்கம்) ஏற்படும் வீக்கம்.
clitorimegaly : பெண்லிங்க விரிவாக்கம் : பெண்லிங்கம் விரிவடைந்திருத்தல். ஆண்மையூக்க இயக்குநீரனளவு அளவுக்கு அதிகமாக இருப்பதால் இது உண்டாகிறது.
clitoris : பெண்கந்து (பெண் லிங்கம்); அல்குல்; பெண்குறி : பிறப்பு வாயில் மேட்டுக்குச் சற்றுக் கீழே அமைந்துள்ள ஒரு சிறிய நிமிர்த்தக்கூடிய உறுப்பு.
clitorism : பெண்லிங்கப் பொருமல் : 1. மிகை ஊட்டத்தால் பெண் லிங்கம் பொருமுதல். 2. பெண் லிங்கம் இடைவிடாது எழுந்து நிற்றல்.
clivography : மண்டையோட்டுக் குழி; ஊடுகதிர்ப்படம் : பின்பக்க மண்டையோட்டுக் குழியை ஊடுகதிர்ப்படம் மூலம் பார்த்தல்.
clivus : சரிவுப் பரப்பு : 1. கீழ்நோக்கியச் சரிவான பரப்பு. 2. பின்பக்க மண்டையோட்டுக்குழியில் பின்புறசேணக்குழியில் இருந்து எலும்புப் பெரும்புழை வரையிலுள்ள சரிவான பரப்பு.
cloaca : நிணவெலும்புப் பிளவு : நிணவெலும்பு வீக்கத்தில், சீழ் வெளிப்படுத்தும் மேலுறை வழியாக ஏற்படும் பிளவு.
cloacogenic : நிணவெலும்பு பிளவு சார்ந்த : நிணவெலும்புப் பிளவிலிருந்து தோன்றுகிற.
cloberasol propionate : குளோபெராசோல் புரோப்பியோனேட் : தோல் தடிப்பு (படை) போன்ற நோய்களுக்குத் தோலில் பூசுவதற்குப் பயன்படும் மருந்து.
clofazimine : குளோஃபாசைமின் : தொழுநோய் அறிகுறிகளைக் கட்டுப்படுத்துவற்கு வாய்வழி கொடுக்கப்படும் சிவப்பு நிறச் சாயப்பொருள்.
clofibrate : குளோஃபிப்ரேட் : இரத்தத்தில் கொலஸ்டிராலைக் குறைக்கும் மருந்து. எலும்பு முறிவின்போது கொழுப்பு படியாமல் தடுக்கப் பயன்படுத் தப்படுகிறது.
clomid : குளோமிட் : குளோமிஃபீன் என்ற மருந்தின் வணிகப் பெயர்.
clomiphene : குளோமிஃபீன் : கருவுறாத பெண்களிடம் கரு அணுவைத் துண்டி, மாதவிடாய் வரவழைத்து, அவர்களின் கருவுறும் திறனை அதி கரிக்கக்கூடிய ஒரு செயற்கைக் கலவைப் பொருள். clomipramin : குளோமிப்பிராமின் : சுறுசுறுப்பைக் குறைப்பதைத் தடுக்கும் மருந்துகளில் ஒன்று. 3-15 நாட்கள் இம் மருந்தினை உட்கொண்டபின் இது செயற்படத் தொடங்கும். இதனை நரம்பு வழியாகச் செலுத்தலாம்.
ciomocycline : குளோமோசைக்ளின் : டெட்ராசைக்ளின் மருந்தின் ஒரு திருந்திய வடிவம். நீண்டகால முகப்பருவுக்கு ஏற்றது.
clonality : பதிப்புருவாக்கத் திறன் : பதிப்புருக்கள் செய்வதற்கான திறம்பாடு.
clone : பதிப்புருவாக்கம்/படியாக்கம் : துல்லியமான நேர்ப் படிவாக்கம். பெரும்பாலும் நேரொத்த மரபு அணுக்களின் ஒரு குழுமத்தை அல்லது மரபணு முறையில் நேரொத்த உயிரணுக்களின் அல்லது உயிரி களின் ஒரு குழுமத்தைக் குறிக்கிறது.
clonidine : குளோனிடின் : மெத்தில் டோப்பா என்ற மருந்தினைப் போன்றது தாழ்ந்த குருதியழுத்த நிலையைக் குறைக்கிறது. எனினும், சில நோயாளிகளுக்கு வாய்வறட்சியை உண்டாக்குகிறது. இதனைச் சிறிதளவில் கொடுத்து வந்தால், கடுமையான ஒற்றைத் தலைவலியைத் தடுக்கிறது.
clonism : தசை இசிவு : அடுத்து அடுத்து உண்டாகும் தசை இசிவின் ஒருநிலை.
clonogenic : பதிப்புருவாக்கம் சார்ந்த : ஒரு பதிப்புருவாக்கத்தில் இருந்து எழுகிற அல்லது அதில் அடங்கியிருக்கிற.
chlonorchiasis : ஈரல் வீக்கம் : பித்த நீர் வழிகளைப் பாதிக்கிற ஈரல் தட்டைப் புழுவினால் உண்டாகும் ஒருவகை நோய். இது பச்சையான அல்லது சரியாக வேகவைக்காத மீன் உண்பதால் உண்டாகிறது. இதனால், பித்தநீர் நாளங்கள் வீக்கமடையும், கடுமையாக நோய் தொற்றும்; கல்லீரல் வீக்கம், ஈரல் அரிப்பு ஏற்படும்.
clonus : தசைத் துடிப்பு; வலிப்பு : மாறிமாறிச் சுருக்கமும் தளர்வு மாக வரும் தசைத் துடிப்பு.
Clostridium : குளோஸ்டிரிடிய நுண்ணுயிர் : ஒரு வகைப் பாக்டீரியா குருதி சிவப்பு நுண்ணுயிர் வகை. இது நரம்பிசிவு நோய். தகரக்கல உணவு நச்சுப்பாடு போன்ற நோய்களை உண்டாக்குகிறது.
clot : உறைகட்டி; உறைகுருதி : 1. இரத்தம் போன்று உறைந்து கட்டியாதல். 2. இரத்தம் அல்லது நிணநீர் போன்று மென்மையான உறைந்துபோன ஒரு திரட்சி.
clotting factor : உறைவுக்காரணி : இரத்தம் உறைவதற்குத் தேவை யான, இரத்தத்திலுள்ள பல பொருள்களில் ஒன்று.
clotrimazole : கிளாட்ரிமாசோல் : பூஞ்சக்காளான் எதிர்ப்புவினை ஊக்கியாகப் பயன்படுத்தப்படும் இமிடாசோல் என்ற ஒரு வழிப் பொருள்.
clove oil : கிராம்பு என்ணெய் : கிராம்பிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய். இது, நோய்க் கிருமித் தடுப்பு, வயிற்று உப்புசத் தடுப்பு, நோயாற்றுதல் ஆகிய பண்புகளை உடையது. பல் வலியையும் போக்கக் கூடியது.
cloxacillin : குளோக்சாசிலின் : பென்சிலினை எதிர்க்கும் நோய்க் கிருமிக்கு எதிராகச் செயல்படும் ஒரு செயற்கைப் பென்சிலின். இதனை வாய் வழியாகக் கொடுக்கலாம்.
clubbed fingers : விரல் பருமன் நோய்; விரல் முனைத் திரள்; திரள் முனை விரல் : நகங்களுக்கு அடியில் விரல்கள் பருமனாகவும் அகலமாகவும் இருத்தல். இதற்கான காரணம் தெரிய வில்லை. எனினும் இதயநோய் அல்லது துரையீரல் நோய் உள்ளவர்களுக்கு இந்நோய் உண்டாகிறது.
clubbing : விரல் நுனி பருத்தல் : பூச்சிக்கடியினால் விரல் நுனி பருத்துப் போதல்.
clubfoot : கோணற்கால் (தொட்டிக் கால்); பிறவி வளைபாதம் : பிறவியிலேயே கால்கள் திருகு முறுகலாக அமைந்திருத்தல். இருகால்கள் அல்லது ஒருகால் கோணற்காலாக அமைந்து இருக்கலாம்.
clumping : குருதியணு ஒட்டித்திரள்; கொத்தாடுதல்.
cluster : குடல் கழுவு நீர்மம்.
cluster headache : ஒற்றைத் தலைவலி : முகமும், கழுத்தும் அடங்கிய தலையின் ஒரு பக்கத்தில் திடீரென ஏற்படும் கடும்வலி.
Clutton's joint : கிளட்டன் மூட்டு : பிறவியிலேயே உண்டாகும் கிரந்தி நோயில் முழங்கால் முட்டுகளில் ஏற்படும் ஒரு சீர்மை மூட்டிணைப்பு. பிரிட்டிஷ் அறுவைச் சிகிச்சை வல்லுநர் ஹென்றி கிளட்டன் பெயரால் அழைக்கப்படுகிறது.
clysodrast : கிளைசோடிராஸ்ட் : குடலை ஊடுகதிர்ப்படம் எடுப் பதற்கு ஆயத்தமாகக் குதவாய் வழியே குடல் கழுவுவதற்குப் பயன்படும் கருவியின் வணிகப் பெயர்.
CMV : சி.எம்.வி. : முழங்கால் தண்டு தொடர்பான 'சைட்டோ மெகாலோ வைரஸ் நீமெயில்' (சி.எம்.வி.) என்பதன் சுருக்கம்.
CNS : மைய நரம்பு மண்டலம் (சி.என்.எஸ். : மைய நரம்பு மண்டலம் (Central Nervous System) என்பதன் சுருக்கம்.
coaggulutination : ஒன்றுக்கு மேற்பட்ட தனிப் பிணியின் குருதியணுக்களுடன் ஒன்றிணைந்த ஆய்வு மூலங்களின் கூட்டுத் திரட்சி.
coagulant : உறைபொருள் : சிறுகி உறையச் செய்கின்ற ஒரு வினையூக்கி. இது முக்கியமாக இரத்தத்தை உறையச் செய்கிறது.
coagulase : உறை பொருள் : குருதிநீரை (பிளாஸ்மா) உறையச் செய்யும் ஒரு பாக்டீரியா உண்டாக்கும் ஒரு வகைச் செரிமானப் பொருள் (என்சைம்) நொதி.
coagulate : உறையச்செய் : 1. கட்டியாக உறையும்படி செய்தல். 2. உறை கட்டியாகச் செய்தல்.
coagulopathy : உறையா நோய் : இரத்தம் உறைவதைப் பாதிக்கிற ஒரு கோளாறு. குருதி நாளத்தினுள் இரத்தம் உறைவதை இது பாதிக்கிறது.
coagulum : உறைவித்த பொருள் : உறையச் செய்யப்பட்ட பொருள்.
coalesce : தோல் திரட்சி : நோய் பாதித்த தோல் பகுதியில் ஏற்படும் திரட்சி.
coalescence : உள்ளுறுப்பு ஒட்டல்.
coalition : கூட்டிணைவு : ஏற்கெனவே தனித்தனியாக இருக்கும் உறுப்புகளை ஒருங்கு இணைத்தல்.
coapt : இணக்கு : காயத்தின் விளிம்புகளை ஏறக்குறைய இணக்கமாகப் பொருந்தச் செய்தல்.
coarctation : நாள இறுக்கம் : குழாய் அல்லது நாளம் சுருங்கி, குறுகி இறுக்கமடைதல்.
coarse tremor : கடும் நடுக்கம்.
cobalamin : கோபாலமின் : வைட்டமின்-12 தொகுதியின் பொது இனப் பெயர்.
cobalt : கோபால்ட் : வெண்ணிற உலோகவகை. இது அணு எண் 27 உடைய தனிமம். இதனை மிகச் சிறிதளவு உணவில் சேர்த்தால் ஊட்டச்சத்தாக அமையும். வைட்டமின்-B (கோபாலமின்) என்ற ஊட்டச் சத்தில் இது ஒர் அமைப்பு ஆகும். இரத்த சோகையை இது தடுக்கிறது.
cobalt blue : கோபால்ட் நீலம் : கோபால்ட் என்னும் வெண்ணிற உலோக வகையிலிருந்து எடுக்கப்படும் நீலவண்ணப் பொருள்.
cocaine : கோக்கைன் : கோக்கோ என்ற தென் அமெரிக்கச் செடியின் இலைகளிலிருந்து உண்டு பண்ணப்பட்டு, உடற் பகுதியை உணர்ச்சி இழக்கச் செய்யும் மருந்துப் பொருள்.
cocainism : கோக்கைன் கோளாறு : மரத்துப்போகச் செய்யும் கோக்கைன் மருந்து வகை அளவுக்கு மீறிப் பயன்படுத்தப் படுவதால் உண்டாகும் கோளாறு.
cocarcinogen : கோகார்சினோஜன் : தானே புற்று நோயை உண்டாக்காமல், புற்று நோயை உண்டாக்குகிற ஒரு பொருளின் வினையை ஊக்குவிக்கிற ஒரு பொருள்.
coccidia : கோக்கிடியா : ஓரணுவின் ஒர் உட்பிரிவு. இதில் முதிர்ச்சி யடைந்த டிராஃபோசோயிட்டுகள் உள் உயிரணுவுடையவை. அதே மூல உயிரில் இனப் பெருக்கமும், சிதல்விதை உற்பத்தியும் நடைபெறுகிறது.
Coccidioides : கோக்கிடியோடிஸ் : ஒரளவு வறண்ட பகுதிகளிலுள்ள மண்ணில் காணப்படும் ஒரு பூஞ்சண வகை.
coccidioidin: கோக்கிடியோடின் : கோக்கிடியோடிஸ் இமிட்டிஸ் என்ற நோய்க்கிருமி வளர்ச்சியினால் உண்டாகும் துணைப் பொருள்களை உடைய ஒரு கிருமி நீக்கிய கரைசல். இது தோலடி நோயைக் கண்டறிவதற்கான சோதனையில் பயன் படுத்தப்படுகிறது.
coccidioidoma : கோக்கிடியோடோமா : நுரையீரலில் உள்ள குருணைக்கட்டிக் கரணை இது அடிப்படை நரம்புக் கரணையினைத் தொடர்ந்து ஊடுகதிர் மூலம் காணப்படுகிறது.
coccidioidomycosis : கோக்கிடியோமைக்கோசிஸ் : கோக்கி டியோடிஸ் இமிட்டிஸ் என்ற நோய்க் கிருமியினால் உண்டாகும் ஒரு நோய். இதில், நுரையீரல் கபம் போன்ற நசிவுப்புண் தென்மேற்கு அமெரிக்காவில் பாலை சார்ந்த பகுதிகளில் மட்டுமே காணப்படுகிறது.
coccidiosis : கோக்கிடியோசிஸ் : கோக்கிடியா எனப்படும் ஒற்றை உயிரணு ஒட்டுயிரினால் உண்டாகும் தொற்று நோய். இந்த நோயின் அறிகுறிகள் பெரும்பாலும் புலப்படாமல் இருக்கும். இது வயிற்றுப்போக்கின் போது நீர்த்த சீதத்தை உண் டாக்குகிறது.
coccidium : கோக்கிடியம் : இது ஒர் ஒற்றை உயிரணு ஒட்டுண்ணி. இது மேல்தோல் உயிரணுக்களில் இனப்பெருக்கத்தை உண்டாக்குகிறது.
coccobacillus : கோக்கே பாசில்லஸ் : இது குறுகிய, தடித்த பாக் டீரிய சலாகை. இது முட்டை வடிவில் அல்லது லேசான நீள் வட்டவடிவில் அமைந்திருக்கும்.
coccus : கோளக்கிருமி; வட்ட நுண்ணுயிர்; பரல் நுண்மி : கோள வடிவம் உள்ள நோய்க்கிருமி.
coccydynia : உள்வால் எலும்பு நோவு : உள்வால் எலும்புப் (குத எலும்பு) பகுதியில் ஏற்படும் நோவு.
coccygeal : குத எலும்பு சார்ந்த : உள்வால் எலும்புப் (குத எலும்பு) பகுதி தொடர்பான அல்லது அதில் அமைந்துள்ள.
coccyx : உள்வால் எலும்பு (குத எலும்பு வால் எலும்பு : தண்டு எலும்புக் கண்ணிகளின் கடைசி
cochlea : செவிச் சுருள் வளை; உட்காது சுருள் குழாய்; திரி
சுருளை : காதில் நத்தைக்கூடு போன்று சுருண்டு வளைந்து இருக்கும் கருள் வளை.cochlear implant : செவிச்சுருள் வளைச் சாதனம் : செவிட்டுத் தன்மையைக் குணப்படுத்துவதற்கான ஒரு சாதனம். இதில், செவியின் சுருள் வளையின் உள்ளே பொருத்துப்பட்ட மின்வாய்கள் அடங்கியிருக்கும். இது ஒலி உண்டாக்கு நரம்புத் துண்டல்களை மூளைக்கு அனுப்பிவைக்கிறது.
cochleosaccultomy : செவிச்சுருள்வளை அறுவைச் சிகிச்சை : செவியின் சுருள்வளை நாளத்துக்கும் நுண்மைக்குமிடையில் அறுவைச் சிகிச்சை மூலம் உண்டாக்கும் ஒரு இடை கடத்தி. செவிநிண நீர்த்துளி களை விடுவிப்பதற்கு வட்டச் சன்னல் வழியாக இந்தச் சிகிச்சை செய்யப்படுகிறது.
cocktail : கலவை மருந்து : பல்வகை ஆக்கக்கூறுகள் அல்லது மருந்துகள் அடங்கிய ஒரு கலவை.
cocoa : கோக்கோ : கெக்கேயோ மரத்தின் விதை, சாக்லேட் செய்யப் பயன்படும் கெக்கே யோ விதைத்தூள், கெக்கேயோ விதையிலிருந்து இறக்கப்படும் பானம். இதன் விதையிலிருந்து எடுக்கப்படும் வெண்ணெய், கட்டி, வீக்கம் முதலிய நோய்களுக்கு இடும் இளக்கு மருந்தாகப் பயன்படுகிறது.
coctostabile : மாறாநிலைப்பாடு : நீரின் கொதிநிலை வரையிலும் சூடாக்கினால் மாற்றமடையாத நிலைப்பாடு.
code : ஒழுக்க நெறி : 1. ஒழுக்க நெறியினை முறைப்படுத்தும் சாதி முறைகளின் அல்லது நெறிமுறைகளின் ஒரு தொகுப்பு. 2. செய்திகளை அனுப்புவதற்கான ஒரு குழுவுக் குறிமுறை.
codeine : கோடன் : உறங்க வைக்கும் மருந்தாகப் பயன் படுத்தப்படும் அபினியிலுள்ள உப்புச்சத்து இருமலை அடக்கும்.
codependency : சகச்சார்புநிலை: சார்ந்து வாழ்பவருடன் நெருங்க இணைந்து வாழும் நெருக்கடி நிலை.
cod fish vertebra : 'காட்' மீன் முள்ளெலும்பு : முள்ளெலும்பின் கனிம அடர்த்தி போகப் போகக் குறைதல். இதனால், முள் எலும்புகளுக்கிடையிலான வட்டு விரிவடைகிறது.
coding system : குறியீட்டுமுறை : நோய்களை வகைப்படுத்தும் முறை. இதில் பொதுவாள பண்பியல்புகளக்கேற்ப நோய்கள் குழுமமாகப் பகுக்கப் படுகின்றன. இதன் மூலம் நோய் நிகழ்வினை புள்ளி விவர அடிப் படையில் ஆய்வு செய்ய முடிகிறது. இதனை உலகச் சுகாதார அமைவனம், "பன்னாட்டு நோய்கள் வகைப்பாடு" என்னும் பெயரால் தயாரிக்கிறது. இது தேசிய மற்றும் பன்னாட்டுப் பயன்பாட்டுக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
codliver oil : மீன் எண்ணெய்;மீன் நெய் : நெய் மருந்தாகப் பயன்படும் மீன் ஈரல் எண்ணெய். இதில் வைட்டமின்-A வைட்டமின்-B அடங்கியுள்ளது. இந்த ஊட்டச் சத்துப் பொருள்கள் குறை பாட்டினை ஈடுசெய்ய இது கொடுக்கப்படுகிறது.
codominance : இனக் கீற்று நோய்நிலை : ஒரு மரபணுவின் ஒவ்வொரு இணை இனக்கீற்றும் ஒரு விளைவினை வெளிப்படுத்துகிற ஒரு நோய் நிலை.
coefficient : குணக்ம் : 1. 905 பொருளின் இயல்பு அளவின் அல்லது அளவு வீதத்தின் எண்ணுருக் கோவை. 2. இரு மாறுபட்ட அளவுகளுக்கிடை யிலான விகிதத்தின் அல்லது மாறுபட்ட சில காரணிகளினால் உண்டாகும் விளைவின் எண்ணுருக் கோவை.
coelenterata : ஒற்றை வயிற்றுக் குழி உயிரினம் : நீர்ப்பாம்பு, இழுது மீன், கடற்பஞ்சு போன்ற வயிற்றுக்குழி உயிரினங்கள்.
coeliac : வயிற்றுக்குரிய; உடற் குழி : அடிவயிற்றுக் குழிசார்ந்த, தமனிகள், சிரைகள், நரம்புகள் ஆகியவற்றையும் குறிக்கும்.
coeliac disease : வயிற்றுக்குழி நோய் : மாப்புரதத்தினால் உண்டாகும் குடல் நோய். இதனால் கடும் வயிற்றுப் போக்கு ஏற்படும்; வளர்ச்சி குன்றும், இரத்த சோகை உண்டாகும். பிற சத்துக் குறை பாடுகளும் ஏற்படும். கோதுமை அல்லது பிற மாப்புரதம் உள்ள தானிய உணவுகளைக் கொடுக்கும் போது தொடக்கத்தில் குழந்தைகளுக்கு இந்நோய் ஏற்படும். வயது வந்தவர்களுக்கும் உண்டாகும்.
coelom : வயிற்றுக்குழி : பவழம் போன்ற பல உயிர்மங்கள் கொண்ட உயிரினங்களுக்கு மேம்பட்ட உயிர்வகைகளின் வயிற்றுக்குழி. இது நுரையீரல், வயிற்றுள்ளுறை, குலையுறைக் குழிகளாக வளர்கிறது.
coenzyme : செரிமான ஊக்கி; துணை நொதிப்பி; இணை என்சைம் : ஒரு செரிமானப் பொருளைச் (என்சைம்) செயற்பட ஊக்குவிக்கும் பொருள்.
cofactor : சகக் காரணி : குருதிச் சிவப்பு, சகசெரிமானப் பொருள்கள், மக்னீசியம் அயனிகள் போன்ற செரிமானப் பொருள் வினைக்கு இன்றியமையாத ஒரு தனிமம். coffee ground vomit : இரத்த வாந்தி : இரத்தம் கலந்த வாந்தி, இது காப்பிக் கசட்டினை ஒத்திருக்கும்.
Cogan's syndrome : கோக்கான் நோய் : காதிரைச்சல், செவிட்டுத் தன்மை ஆகியவற்றுடனான காது அழற்சிநோய். அமெரிக்கக் கண் மருத்துவ அறிஞர் டேவிட் கோகான் பெயரால் அழைக்கப் படுகிறது.
cognition : புலனுணர்வு; அறிதல் நிலை; தெரிதல்; அறிகை; நினை வுறல் : இவை மூன்றும் ஒட்டு மொத்தமாகச் செயற்படுகின்றன. எனினும் எந்த ஒரு மன இயக்கத்திலும் ஏதேனும் ஒன்று ஓங்கியிருக்கலாம். உணர்தல், அடையாளம் தெரிதல், எடை போடுதல், ஆராய்தல், பகுத்து அறிவால் வகைப்படுத்துதல் ஆகிய அனைத்தும் சேர்த்து அறிதல் என்னும் ஒட்டுமொத்தமான செயல்பாட்டைக் குறிக்கும் சொல்லாக அமைந்து உள்ளது எனக் கூறலாம்.
cohort : பொதுப்பண்பு மக்கள் குழுமம் : 1. ஒரு குறிப்பிட்ட பிறப்புக் கால அளவுக்குள் ஒரு பொதுவான பண்பியல்பினையுடைய அல்லது அனுபவத்தையுடைய ஒரு மக்கள் குழுமம். 2. ஒரே நாளில் அல்லது ஒரே கால அளவுக்குள் பிறந்த மக்களின் ஒரு குழுமம். 3. ஐயுறப்படும் காரணத்துக்கும் நோய்க்குமிடையில் தொடர்பு இருப்பதை ஆதரிப்பதற்கு அல்லது மறுப்பதற்குச் சான்று பெறுவதற்கு நடத்தப்படும் நுண்ணாய்வு.
coin counting : நாணயக்கணிப்பு நோய் : கட்டைவிரல் நுனியும் சுட்டு விரல் நுனியும் ஒன்றன்மேல் ஒன்ற ஊர்ந்து செல்லும் வகையில் அமைந்திருத்தல். வாத வலிப்பின்போது இது காணப்படும்.
coin lesion : நாணய நசிவுப்புண் : நுரையீரல் சோற்றுத் திசுவில் சிறிய வட்டவடிவில் அல்லது முட்டைவடிவில் காணப்படும் ஒற்றை நைவுப்புண். இது, நோய்க்குறி காணப்படாத நோயாளிகளின் மார்பில் ஊடு கதிர்ச் சோதனை நடத்தும் போது இது புலனாகிறது.
coin test : நாணயச் சோதனை : ஒரு தனிவகை அசைவு-இயக்கத் துடிப்புக் குறி. இதில் மார்பின் பின்பக்கத்தில் அல்லது முன் பக்கத்தில் இரு நாணயங்களை வைத்து எதிர்ப்பக்கம் இயக்கப்படுகிறது. இரு பகுதிகளுக்கும் இடையில் காற்று இருந்தால், உலோக மணியோசை போன்று ஒலிகேட்கும்.
coinfection : சகநோய் : இரு வேறுபட்ட துண்ணுயிரிகளினால் ஒரே சமயத்தில் நோய் உண்டாதல். colchicum : இரணிய துத்தம் : கீல்வாதம், முடக்கு வாதம் முதலிய வாத நோய்களுக்குப் பயன்படும் மருந்துப் பூண்டு வகை.
cold : தடுமன்; நீர்க்கோள் ; சளி : இது தட்பவெப்ப நிலைகள் திடீரென மாறும்போது ஏற்படக் கூடும்.
cold sore : வாய்ப்புண் : கடுங் குளிர்ச்சியினால் வாயில் ஏற்படும் புண்.
colectomy : பெருங்குடல் அறுவை மருத்துவம்; பெருங்குடல் பகுதி நீக்கம் : பெருங் குடலின் ஒரு பகுதியை அல்லது அதை முழுவதுமாகத் துண்டித்து எடுத்தல்.
colic : கடும் வயிற்றுவலி; குடல் தசைச் சுருக்கு வலி : அடிவயிறு வீக்கத்துடன் கூடிய குடல் நோவு.
coliform : மலக்கிருமி : கடும் வயிற்று வலி உண்டாகும். கிருமியை ஒத்த ஒரு பாக்டீரியம். இது மலத்தில் பலுகக்கூடியது.
colipase : கோலிஸ்பேஸ் : கொழுப்புத் துளிகளினால் செயற்படும் புறச்சுரப்புக் கணையங்களில் சுரக்கும் டிரிப்சின் இயக்கு புரோஎன்சைம்.
coliplication : பெருங்குடல் அறுவை மருத்துவம் : விரிவாக்கம் அடைந்த பெருங்குடலைச் சீர்படுத்துவதற்கான அறுவைச் சிகிச்சை,
colistin : கோலிஸ்டின் : கிராம் சாயம் எடுக்காத உயிரிகளுக்கு எதிராகச் செயற்படக்கூடிய ஒரு வகை உயிர் எதிர்ப்புப் பொருள்.
colitis : குடல் அழற்சி; பெருங் குடல் அழற்சி : பெருங்குடல் வீக்கம். இதனால் குடற்புண் உண்டாகலாம்.
collagen : எலும்புப் புரதம்; சவ்வு (கொல்லாஜன்) : தோல், தசைத் தளை, எலும்பு, குருத்தெலும்பு போன்ற இணைப்புத் திசுக்களில் அமைந்துள்ள முக்கியமான புரதம். இது நோயுறுவதால் வீக்கத்துடன் கூடிய நைவுப் புண் உண்டாகிறது. இந்நோய்க் காரணம் பலவாக இருக்கலாம்.
collagenase : கொல்லானேஸ் (எலும்புப் புரதச் சிதைப்பான்) : எலும்புப் புரதம் சிதைவதற்காக அதன் மீது செயற்படுகிற ஒரு செரிமானப் பொருள்.
collagenoblast : எலும்புப் புரத உயிரணு : ஒர் எலும்புப் புரத உயிரணுவிலிருந்து உருவாகும் ஒர் உயிரணு. இது முதிர்ச்சி அடைந்ததும் எலும்புப் புரத உற்பத்திக்குத் துணைபுரிகிறது. collapse : தளர்ந்து வீழ்தல்; செயல் ஒடுக்கம்; செயல் சரிவு : ஒடுங்கல், தகர்வு உட்புழையுள்ள உறுப்பு அல்லது நாளம் தளர்ந்து உள்வீழ்தல். எடுத்துக்காட்டாக, துரையீரல், உள் காற்று அழுத்த மாற்றத்தினால் தகர்ந்து வீழ்தல். மனம் இடிந்து போவதாலும் தளர்ச்சி ஏற்படுவது உண்டு.
collapsing pulse : நாடித்துடிப்பு வீழ்ச்சி; குறையழுத்த நாடி; வீழ்நாடி : பெருந்தமனியின் உள் அழுத்தவிசைக் குறைவினால் நாடித்துடிப்பு வீழ்ச்சியடைதல்.
collapsotherapy : ஒடுங்கல் மருத்துவம் : செயற்கை நுரையீரல் காற்று நோய்ச் சிகிச்சை மற்றும் மார்புக்கூடு அறுவைச் சீரமைப்பு. காச நோயால் பாதிக்கப்பட்ட நுரையீரலுக்கு ஒய்வு கொடுப்பதற்காக காச நோய் எதிர்ப்பு மருந்துகள் கொடுப்பதற்கு முன்பு இது செய்யப்படுகிறது.
collar bone : காறையெலும்பு.
collateral : பக்கக்கிளை : ஒரு பிரதான உறுப்புக்குரிய இணை உறுப்பு அல்லது துணை உறுப்பு. 2. ஒரு நாளத்தின் அல்லது நரம்பின் அருகருகே செல்லும் பக்கக் கிளை.
collateral circulation : பக்கக் குருதியோட்டம்; மாற்றுவழிக் குருதியோட்டம்; ஒத்திசைவான குருதியோட்டம் : முதன்மை இரத்தக் குழாய்கள் அடைபட்டிருக்கும்போது, துணை இரத்தக் குழாய்கள் மூலம் இரத்தவோட்டம் நடைபெறு வதற்கு மாற்றுவழி அமைத்தல்.
collecting tubule : சேகரிப்பு நுண் குழல் : முனைகோடி சுருள் மடிப்பு நுண் குழல்களிலிருந்து சிறுநீரகக் குழிக்குள் சிறுநீரைக் கொண்டு வந்து சேர்க்கும் பெரிய சிறுநீரக நுண் குழல்கள். சிறுநீர்ப்பெருக்கத் தடுப்பு இயக்குநீர், இந்தச் சேகரிப்பு நுண் குழல்களில் நீர் ஊடுருவும் படிசெய்து, திரவச் சமநிலையைப் பேண உதவுகின்றன.
Colles's fracture : கோலஸ் முறிவு : ஆர எலும்பின் முனை கோடியில் ஊடுவெட்டு முறிவு. இதனால் கை பின்புறமாகவும் வெளிப்புறமாகவும் இடம் பெயர்ந்துவிடும். அயர்லாந்து அறுவைச் சிகிச்சை வல்லுநர் ஆபிரகாம் கோலஸ் பெயரால் அழைக்கப்படுகிறது.
collimation : நேர்வரிப்பாடு : 1. ஒளிக்கதிர்களை ஒரு போக்கு உடையதாகச் செய்தல். 2. ஊடுகதிர்க் கற்றையை ஒரு குறிப்பிட்ட பகுதிக்குள் செல்லுமாறு கட்டுப்படுத்துதல்.
colimator : வரிக்குழாய் : ஊடுகதிர் வண்ணப்பட்டையில் பட்டை மீது நேர் இணை வரிக் கதிர்களை வீசுகிற ஒளிக் குழாய்.
colliquation : நரிவுறத்தல் : 1. உடல் திரவம் அளவுக்கு அதிகமாக வெளியேறுதல். 2. திசுக்கள் மென்மையடைதல். 3. திசுக்கள் சிதைவடைதல்.
colliquative : நீர்மமாதல் : திரவம் அளவுக்கு அதிகமாக வெளி யேறுவதை அல்லது திசுக்கள் நீர்மமாவதைக் குறித்தல்.
collision tumour : மோதல் கட்டி : இரு உறுப்புகளில் காணப்படும் தனித்தனிக் கட்டிகள் மிக அரிதாக ஒன்றிணைதல். இரைப்பை- உணவுக்குழல் இணைப்பில் இது காணப்படும்.
collodion : கொல்லோடியன் : பிசினும், விளக்கெண்ணெயும் கலந்த பைராக்சிலின் கரைசல். இது தோலில் நெகிழ்திறன் கொண்ட படலமாகப் படிகிறது. இது பாதுகாப்புக் கட்டுப் போடுவதற்குப் பயன்படுகிறது.
colloid : இழுதுபொருள் (கரைத்தக்கை); கூழ்மம்; கூழ்மப் புரதம் : கரைந்த நிலையினும் சவ்வூடு செல்லுமளவு ஒன்றுபட்டுக் கலவாக் கூழ்நிலைப் பொருள்.
colloidal gold test : கரைதக்கைத் தங்கச் சோதனை; கூழான தங்கச் சோதனை : நரம்புக் கிரந்தி நோயைக் கண்டுபிடிப்பதற்கு மூளைத் தண்டுவட நீரைக்கொண்டு செய்யப்படும் பரிசோதனை.
colloidoclasia : இழுதுபொருள் கலப்பு : இரத்த ஒட்டத்தினுள் இழுதுபொருள்கள் நுழைதல், இதனால் அயற்பொருள் தாங்கா அதிர்ச்சி உண்டாகும்.
coloboma : கண்விழி வெடிப்பு; விழி உருக்குறை : கண்விழியில் அல்லது அதன் பகுதிகளில் ஒன்றில், பிறவியிலேயே ஏற்படும் வெடிப்பு அல்லது பிளவு.
colocecostomy : பிணைப்பு அறுவை மருத்துவம் : பெருங்குடலையும் பெருங்குடல் வாயையும் அறுவைச் சிகிச்சை மூலம் குருதிநாளப் பிணைப்பு செய்தல்.
colocentesis : பெருங்குடல் துளையிடல் : பெருங்குடல் விரிவாக்கத்தைத் தடுப்பதற்காக அறுவை மருத்துவம் மூலம் அதில் துளையிடுதல்.
colocolostomy : பெருங்குடல் வழி அறுவை : பெருங்குடலின் இரு பகுதிகளுக்கிடையில் அறுவைச் சிகிச்சை முறையில் ஒரு வழி உண்டாக்குதல்.
colocystopiasty : சிறுநீர்ப்பை அறுவை மருத்துவம் : பெருங்குடலின் ஒரு பகுதியைப் பயன்படுத்திச் சிறுநீரகப்பையின் கொள்ளளவை அதிகரிப்பதற் கான அறுவை மருத்துவம். Colomycin : கோலோமைசின் : கோலிஸ்டின் என்ற மருந்தின் வணிகப் பெயர்.
colon : பெருங்குடல் : குடல் வாலிலிருந்து மலக்குடல் வரை உள்ள பெருங்குடல் பகுதி.
colonization : உடனுண் வாழ்வு : மனித உடலில் கிருமிக்கூட்டம் ஒரே உணவை உண்டு ஒன்றுக்கொன்று உதவி, கூட்டு வாழ்வு நடத்துதல். பிறந்த உடனேயே இந்த உடனுண்ணிகள் பல உண்டாகிவிடுகின்றன. ஆனால் இவை நோய் உண்டாக்குவதில்லை. உடனுண்ணிகளுக்கும் தற்காப்பு அமைப்பு முறைக்குமிடையில் சமநிலையின்மை ஏற்படும் போதுதான் நோய் தொற்றுகிறது.
colonopexy : பெருங்குடல் பிணைப்பு : பெருங்குடலின் ஒரு பகுதியை அடிவயிற்றுச் சுவருடன் தையல் மூலம் பிணைத்தல்.
colony : கிருமிக் கூட்டம்; நுண்ணுயிர்க் குழுமம் : உடலில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உயிரிகளின் எண்ணிக்கை பெருகுவதால் உண்டாகும் நோய்க் கிருமிகளின் ஒரு கூட்டம். ஒரு கிருமிக் கூட்டத்தில் கோடிக்கணக்கான தனித்தனி உயிரிகள் அடங்கியிருக்கும்.
colopexostomy : செயற்கைக் குதவாய்த் திறப்பு : பெருங்குடலைச் சீவி நறுக்கி, ஒரு செயற்கை குதவாய் ஏற்படுத்துதல். பெருங்குடலை அடி வயிற்றுச் சுவருடன் பொருத்திய பிறகு பெருங்குடலில் இந்த வாய் திறக்கப்படுகிறது.
colopexy : பெருங்குடல் இணைப்பு : பெருங்குடலின் ஒரு பகுதியை அடிவயிற்றுச் சுவருடன் இணைத்தல்.
colorimeter : நிறமானி : ஒரு திரவத்தின் நிறச்செறிவை அளவிடும் ஒரு சாதனம். (எ-டு) இரத்தத்தில் உள்ள சிவப்பணு நிறமியின் அளவை இது காட்டுகிறது. colorimetry : நிறமானிச் செயல் முறை : ஒரு சோதனைக் கரை சலில் உருவாகும் வண்ணத்தின் மூலம் ஒளி ஈர்ப்புத் திறனை ஒரு தரநிலைக் கரைசலின் திறனுடன் ஒப்பிட்டுப்பார்க்கும் ஒர் ஒளிமானிச் செயல் முறை.
colostomy : பெருங்குடல் செயற்கை வாய் அறுவைச் சிகிச்சை : பெருங்குடல் இறுதியில் கீறிச் செயற்கைக்குதம் உண்டாக்குதல்.
colostration : குழந்தை நோய் வகை : பிறந்த குழந்தை அருந்தும் முதல் பாலால் ஏற்படும் ஒரு வகை நோய்.
colostrum : சீம்பால் : குழந்தை பிறந்த முதல் 3 நாட்களில் தாயின் மார்பகத்தில் சுரக்கும் பால். முறையான பால் சுரப்பதற்கு முன்பு இந்தப் பால் சுரக்கிறது.
colotomy : பெருங்குடல் அறுவை மருத்துவம்; பெருங்குடல் நீக்கல் : பெருங்குடல் இறுதிப்பகுதியில் கீறிச் செயற்கைக் குதம் உண்டாக்குதல்.
colour blindness : நிறக்குருடு; நிறப்பார்வையின்மை : சில நிறங்களைப் பிற நிறங்களிலிருந்து பிரித்தறிய இயலாத நிலைமை. சிலருக்குச் சில நிறங்களைக் காண இயலாது. சிவப்பு நிறத்தையும், பச்சை நிறத்தையும் பகுத்தறிய முடியாத நிலையை 'நிறமயக்கம்' (டால்டனிசம்) என்பர்.
colovaginal : பெருங்குடல்-யோனிக் குழாய் தொடர்பு : பெருங்குடல் மற்றும் யோனிக்குழாய் சார்ந்த அல்லது இரண்டுக்குமிடையிலான தொடர்பு.
colovesical : பெருங்குடல்-சிறுநீர்ப்பை தொடர்பு : பெருங்குடல் மற்றும் சிறுநீர்ப்பை சார்ந்த அல்லது இரண்டுக்கும் இடையிலான தொடர்பு.
colpitis : யோனிக்குழாய்; அல்குல் அழற்சி : பெண்ணின் கருப்பை வாய்க்குழாயில் ஏற்படும் வீக்கம்.
colpoceliotomy : அடிவயிற்று அறுவைச் சிகிச்சை : யோனிக் குழாய் வழியாக அடிவயிற்றில் வெட்டுப்பள்ளம் ஏற்படுத்துதல்.
colpocete : நெகிழ்வு நீட்சி : சிறு நீர்ப்பையின் அல்லது மலக் குடலின் நெகிழ்ச்சி முன்புறம் நீண்டு, யோனிக்குழாய்ச் சுவரை அழுத்துதல்.
colpocentesis : யோனித் திரவ வெளியேற்றம் : யோனிக்குழாயில் இருந்து திரவம் வெளியேறுதல்.
colphysterectomy : கருப்பை நீக்கம்; அல்குல் வழி கருப்பை நீக்கம் : யோனிக் குழாய் வழியாக கருப்பையை அகற்றும் அறுவை மருத்துவம். colpomicroscope : யோனிக்குழாய் நுண்ணோக்கோடி : யோனிக் குழாயிலும், கருப்பை வாயிலும் உள்ள உயிரணுக்களை நுண்ணாய்வு செய்வதற்கான ஒரு தனிவகை ஒளியியல் சாதனம்.
colpomyomotomy : கருப்பைக் கட்டி அறுவை : கருப்பைத் திசுக் கட்டியை அகற்றுவதற்காக யோனிக்குழாய் மூலமாகக் கருப்பையைக் கீறுதல்.
colpoperineorrhaphy : யோனிக் குழாய் மருத்துவம்; அல்குல் அடித்தளத் தைப்பு : காயமுற்ற யோனிக் குழாயையும், கருவாய்க்கும் பெண் உறுப்புக்கும் இடைப்பட்ட பகுதியையும் அறுவைச் சிகிச்சை மூலம் சீர்படுத்துதல்.
colpopexy : யோனிக் குழாய் இணைப்பு : பிதுங்கிய யோனிக் குழாயை அடிவயிற்றுச் சுவற்றுடன் தைத்து இணைத்தல்.
colposcope : யோனிக்குழாய் அகநோய்க் கருவி : யோனிக் குழாயிலும், கருப்பைவாயிலும் உள்ள திசுக்களை உருப்பெருக்காடிகள் மூலமாக கண்ணால் பார்வையிடுவதற்கான ஒர் அகநோவிக்குக் கருவி.
columella : சிதல்விதை மையம் : 1. ஒரு சிறிய நரம்பு நாள மையம். 2. சிதல்விதையுறையிலிருந்து உருவாகும் கருவணுவின் ஒரு பகுதி.
coma : முழு மயக்கநிலை; ஆழ் மயக்கம்; நிறை மயக்கம் : எல்லா உணர்ச்சிகளையும் இழந்து செயலற்றிருக்கும் முழு மயக்கநிலை.
combined oral contraceptive : ஒருங்கிணைந்த கருத்தடை மாத்திரை : வாய்வழி உட் கொள்ளப்படும் பலவகை கருத்தடை மருந்துகள். பொது வாக, இது மாத்திரையைக் குறிக்கிறது.
combustion : உள்ளெரிதல் : 1. எரிதல். 2. வெப்பம் உண்டாகி ஆக்சிகரணமாதல்.
comedo : தோலடிச் சுரப்பி : தோலுக்கடியில் காணப்படும் கரியமுகடு கொண்ட வெண் நிறமான சுரப்பி வகை.
comes : இணை நாளம் : ஒரு நரம்போடு அல்லது மற்றொரு இரத்த நாளத்தோடு இணைந்து செல்லும் ஒர் இரத்த நாளம்.
commensalism : கூட்டு வாழ்வுத் தொடர்பு : இது ஒரு கூட்டு வாழ்வுத் தொடர்பு. இதில் ஒர் உயிரி, நலனைப் பெறுகிறது; மற்ற உயிருக்குத் தீங்கு ஏற்படுவதில்லை.
commensals : உடனுண்ணிகள்; கூட்டுவாழ்வு உயிரிகள் : ஒன்றுக் கொன்று உதவிக் கொண்டு ஒரே உணவை உண்டு இணைந்து வாழும் உயிரிகள். commissurorraphy : நரம்பு இணைப்புச் சிகிச்சை : துளையின் அளவினைக் குறைப்பதற்காக, இருநரம்பு மையங்களை இணைக்கும் நரம்பிழைத் தொகுதி ஒன்றின் பகுதிகளைத் தைத்து இணைத்தல்.
commode : கோக்காலி : பயன் படுத்தும்போதும் ஒருவர் வசதியாக உட்கார்ந்து கொள்வதற்கு இயல்விக்கும் ஒரு கோக்காலி.
communicable : தொற்று நோய்; தொற்று; பரவக்கூடிய : ஒருவர் இடமிருந்து மற்றொருவருக்கு நேரடியாக அல்லது பிற சாதனங்கள் வழி பரவக்கூடிய நோய்.
compaction : உறுப்புப் பிணைப்பு : 1. இரட்டைக் குழந்தை கருப் பையிலிருந்து வெளிவரும்போது, அவ்வாறு வெளி வருவதைத் தடுக்கும் வகையில் வெளிவரும் உறுப்புகள் ஒன்றோடு ஒன்று ஒரே சமயத்தில் பிணைந்து கொள்ளுதல். 2. பற்குழியைத் தங்கத்தினால் நிரப்புதல்.
compatibility : ஒத்தியல்பு; பொருந்தும் பண்பு; ஒவ்வுமை : உடனியைபு. இரண்டு மருந்துகள், இரத்த உயிரியல் பொருள்கள், உயிரணுக்கள் போன்றவை பாதகமான விளைவுகள் ஏற்படாமல் ஒன்றோடொன்று ஒத்து இயங்கும் இயல்பு.
compensation : சரிஈடு செய்தல்; ஈடுசெய்தல்; இழப்பீடு : ஒருவர் தன்னிடமுள்ள சமூகத்தில் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு பண்பினை முனைப்பாக (எ.டு.) தன்னிடமுள்ள ஒரு பலவீனத்தை மூடிமறைக்கக் கையாளும் உளவியல் தந்திரம்.
competence : தகுதிறன் : 1. ஒரு காப்பு மூலத்துக்கான எதிர்த் தூண்டுதலை ஏற்றுகிற நோய்த் தடுப்புத்திறன். 2. போதிய முடி வெடுப்பதற்குத் தேவையான திறன்களின் தொகுதி. 3. ஒரு மருத்துவர் தமது தனித்திறமையைத் நடைமுறைப் படுத்துவதற்கு அவருக்குள்ள திறமை.
Complan : காம்ப்ளான் : உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதற்குரிய ஒரு தூள். உணவின் வணிகப் பெயர். இதில் 100 கிராம் தூளில், 31 கிராம் புரதம், 16 கிராம் கொழுப்பு, 44 கிராம் கார்போஹைட்ரேட்டு, போதியளவு கனிம உப்புகள், வைட்டமின்கள் அடங்கியுள்ளன. இதனை வாய் வழியாகவோ திரவமாகவோ உட்கொள்ளலாம்.
complemental air : குறைநிறப்புக் காற்று; நிரப்புக் காற்று : ஆழ்ந்த சுவாசத்தின் மூலம் நுரையீரல்களுக்குள் இழுக்கப்படும் கூடுதல் காற்று.
complementary feed : குறை நிரப்பு உணவு நிரப்புணவூட்டல்: குழந்தைகளுக்கு தாய்ப்பால் போதிய அளவு கிடைக்காத போது அந்தக் குறையை நிரப்பு வதற்குகாகக் கொடுக்கப்படும் புட்டி உணவு.
complement fixation : குறை நிரப்பு நிலைப்பாடு : குறைநிரப்பினைப் பயன்படுத்திக் காப்பு மூலம் தற்காப்பு மூலக்கோளாறு ஏற்படுவதைத் தீர்மானிப்பதற்கான ஒரு சோதனை.
complex : செறிதேக்க உணர்ச்சி; மனப்போங்கு; மனப்பான்மை; உளப்போக்கு : அடக்கி உணர்வு ஆழத்தின் மறதியில் செறிவிக்கப் பெற்றுக் குமுறும் உணர்ச்சித் தொகுதி. எதிர் பாலராகிய பெற்றோர் வகை யில், பிள்ளைகளுக்கு உட்செறிவாக இருப்பதாகக் கருதப்படும் உள்உணர்ச்சி இதற்கு எடுத்துக் காட்டு.
complex disorder : கலப்புக் கோளாறு : ஒன்றுக்கு மேற்பட்ட மரபணு அமைவிடம், சுற்றுச் சூழல் காரணிகள், மரபணு வகை இடைவினைகள் ஆகியவற்றின் பரப்பரையிலிருந்து ஏற்படும் ஒரு கோளாறு.
complexion : இயல்நிறம் : முகத்திலுள்ள தோலின் வண்ணம், இழை நயம் மற்றும் தோற்றம்.
compliance : இணக்கம் : 1. சீர் குலைவில்லாமல் வடிவளவும், வடிவும் மாறுகிற தன்மை. 2. குறித்துரைக்கப்பட்டுள்ள நடைமுறையை அல்லது அறிவுரையை நோயாளி கடைப்பிடித்து நடக்கும் அளவு.
complication : உடனியக்க நோய்கள்; சிக்கலான; சிக்கலுற்ற : ஒரே சமயத்தில் பல நோய்கள் உடனியலுதல். இவ்வாறு ஏற்படுவதால் மரணம் விளையலாம்.
composmentis : நலமார்ந்த மனநிலை; நேர் உளத்திய : அறிவுக் கோளாறற்ற, நல மார்ந்த உள்ளத்துடன் கூடிய மனநிலை.
compound : கூட்டுப்பொருள்; சேர்வை; சேர்மம்; சேர்வு : இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட தனிமங்கள் குறிப்பிட்ட வீதஅளவுகளில் வேதியியல் முறையில் ஒருங்கிணைந்து, புதுப்பண்புகளுடன் உருவாகிய புதிய கலவைப் பொருள்.
compounder: மருந்து கலப்பவர்.
comprehension : உணர்வாற்றல்; புரிகை : பொருள்களையும் உறவு நிலைகளையும் புரிந்து கொள்ளும் திறன்.
compress : கட்டுத்துணி; அழுத்து; அடுக்குக்கட்டு; அமுக்கு : வீக்கம் அடைவதற்கு நீர்த் தடையிட்டுப் பொதியப்பட்ட ஈரத்து உறுப்புகளுக்கு அழுத்தம் தருவதற்குப் பயன்படுத்தப்படும் பஞ்சு திணித்த கட்டுத்துணி. compression : அழுத்தம்; அழுத்துதல்; அழுத்தப்படும் நிலை; அமுக்கம்; நெருக்கம்; அழுத்தமேற்றல் : உறுப்பினைத் துண்டிக்கும் போது ஏற்படும் உறுப்படியினைச் சுருங்கச் செய்வதற்குக் கம்பளிப்பட்டை அல்லது கட்டுத்துணி கொண்டு இறுகக் கட்டுப்போட்டு அழுத்தம் கொடுத்தல்.
compressor : அழுத்தும் தசை நார்; அழுத்தி : அழுத்தி நெருக்கித் தட்டையாக்குகிற தசைநார்.
compromise : இணக்குவித்தல்; ஏற்பமை : மனத்தின் விழிப்பு நிலையில் அடக்கி வைத்த இயற்கை உணர்வுகளைத் தளரச் செய்து மனப்பூசல்களைத் தவிர்ப்பதற்குரிய உளவியல் செயல்முறை.
compulsion : வல்லந்தம்; வற்புறுத்தல்;விரும்பாச்செயல்;கட்டாயச் செயல்; உள் உந்துகை : அறிவுக்குப் பொருந்தாத ஒரு செயலைச் செய்யும் வலுக்கட்டாயமாகத் தூண்டும் உணர்வு. இந்த உணர்வினை அடக்குவதன் காரணமாக மனவுலைவு அதிகரிக்கும். அந்தச் செயலைச் செய்தாலொழிய இந்த மனவுலைவு நீங்குவ தில்லை.
computed tomography (CT) : கணிப்பொறி ஊடுகதிர் உள்தளப் படமுறை :உடலின் வழியே ஒரு மெல்லிய துணுக்கினை உருக்காட்சியாகப் படமெடுக்கும் கணிப்பொறிமுறை. இது ஒரு சுற்றோட்ட நுண்ணாய்வு இயக் கத்தின் போது சேகரிக்கப் பட்ட ஊடுகதிர் (எக்ஸ்ரே) ஈர்ப்புத் தகவல்களிலிருந்து கிடைக்கிறது.
conation : செயல் துணிவாற்றல்; முனைப்பு : விருப்பு வெறுப்பு உணர்ச்சிகளைச் செயற்படத் தூண்டும் மன ஆற்றல்.
concavity : உட்குழிவு : ஒரு பரப்பளவில் ஒரேசீரான வளைவு விளிம்புகளுடன் கூடிய ஒரு பள்ளம்.
conceive : கருவுறுதல் : 1. கருக் கொள்தல். 2. கருத்தில் உருவாக்கு தல். 3. ஒரு கருத்தினை உருவாக்கிக் கொள்தல்.
concept : கருத்துப் படிவம்; கருதுகோள் : ஒரினப் பொருள்களைச் சுட்டும் பொதுக்கருத்து. மரியாதை, அன்பு, ரோஜா மலர், வீடு முதலியன பற்றிய ஒரு தனிநபரின் பொதுக் கருத்து அவருடைய பண்பியல்புகளைப் பிரதிபலிக்கிறது.
conception : கருவுறுதல் (சூலு உறுதல்); கருத்தரிப்பு; சினையாதல்; கருத்தரிவு : கருப்பையினுள் விந்தணுக்கள் பாய்ந்து கருக்கொள்ளுதல். conchoscope : மூக்கு ஆய்வுக் கருவி : முக்கு உட்குழிவினை ஆராய்வதற்கான ஒரு சாதனம்.
conchotome : மூக்கெலும்பு அறுவைக் கருவி : நடுமூக்குச் சுருள் எலும்பினை வெட்டியெடுப்பதற்கான ஒரு சாதனம்.
concoction : மருந்துக்கலவை : வெப்பமூட்டித் தயாரித்த இரு மருந்துப் பொருள்களின் ஒரு கலவை.
concordin : காங்கார்டின் : புரோட்டிரிப்டிலின் என்ற மருந்தின் வணிகப் பெயர்.
concretion : உடற்கட்டி; இறுக்கம்; திரட்சி : சிறு துகள்கள் ஒன்று சேர்ந்து கடினமாகத் திரண்ட பிண்டம். உடலின் உள்ளுறுப்புகளில் ஏற்படும் "கல்லடைப்பு" என்ற கல்போன்ற தடிப்பையும் இது குறிக்கும்.
concussion : அதிர்வடி; பேரடி; உட்காயம்; வன்குலுக்கு; நிலை குலைவு : அதிர்ச்சியுறும்படியான பெருந்தாக்குதல். தலை மீதான பேரடியினால், நினைவிழப்பு, உடல் வெளிறுதல், உடல் குளிர்ச்சியடைதல், நாடித் துடிப்பு அதிகரித்தல் அதிகரிக்கக் கூடும். மலம், சிறுநீர் கழிவதைக் கட்டுப்படுத்த முடியாத நிலையும் ஏற்படலாம்.
condensation : செறிவாக்கம் : 1. பல்வேறு கோட்பாடுகளை ஒன்றாக ஒருங்கிணைத்தல். 2. அடர்த்தியாக்குவதற்காக அழுத்தம் கொடுத்தல். 3. ஒரு திரவம் ஒரு வாயுவாக அல்லது ஒருதிரவம் ஒரு தடப்பொருளாக மாறுதல். 4. பல்லில் உள்ள குழிவுக்குள் நிரப்புப் பொருளைச் செலுத்தி நிரப் பும் பொருள்.
condensation : உறைமானம்; சுருக்கம்; சுண்டுதல்; குவிதல்; திணிதல் :பொருள்கள் கருங்கிச் செறிவடைதல். (எ-டு) ஒரு வாயு சுருங்கி ஒரு திரவமாக மாறுதல்.
condenser : வடிவம் : 1. நீராவிப்பொறியில் ஆவியை நீர்ப் பொருளாக மாற்றுவதற்கான வாலை, 2. பற்குழியினுள் நிரப்புப்பொருளை நிரப்புவதற் கான ஒரு கருவி.
conditioned reflex : கட்டுப்பட்ட அனிச்சைச் செயல் : வழக்கமான நிகழ்ச்சித்தொடர்பு காரணமாக முன் அனுபவத்தை ஒட்டி உள் மனத்தில் இயல்பாக ஏற்படும் எதிர்த்துண்டுதல் குறிப்பு. தனக்கு மணியடித்ததும் உணவு கொடுக்கப்படுவதில் பழகிப் போன ஒரு நாய், உணவு கொடுக்கப்படா விட்டாலும் மணியடித்ததும் நாக்கில் எச்சில் ஊற வருவது இதற்கு எடுத்துக் காட்டு.
conditioning :தகவமைப்பு; கட்டுப்பாட்டுக்குட்பட்ட; விதிக்கிணங்க : தக்க சூழ்நிலையை அமைத்து புதிய நடத்தை முறையை உக்குவித்தல்.
condom : கருத்தடை உறை: அல்குல் உறை; பெண்குறி உறை : பாலுறவின்போது ஆணும் பெண்ணும் அணிந்து கொள்ளும் சவ்வு போன்ற ரப்பரிலான காப்பு உறை. இதை அணிந்து கொள்வதால் பாலுறவு நோய் பரவாமல் தடுக்கலாம்.
conduction : கடத்துதல்; கொண்டு செய்கை : பொருத்தமான ஊடகத்தின் மூலம் வெப்பம் ஒளி, ஒலி அலைகளைக் கடத்துதல். மின்னோட்டங்களைக் கடத்துவதையும், உடல் திசுக்களின் வழியாக நரம்புத் தூண்டல்களைச் செலுத்து வதையும் இது குறிக்கும்.
conductor : கடத்தி : வெப்பம், ஒளி, ஒலி, மின்னோட்டம் போன்றவற்றைக் கடத்துகிற ஒரு பொருள் அல்லது ஊடகம்.
condyle : எலும்புமுனை முண்டப் பொருத்து எலும்புப் புடைப்பு : எலும்பு முண்டு; எலும்பு வட்டப் புடைபபு.
condyloma : கரணை வளர்ச்சி; முண்டுப் புற்று : சளி வரும் வழி களுக்கருகில் கரணை போன்ற தோலின் புற வளர்ச்சி.
condy's fluid : நச்சுத்தடை மருந்து : நச்சுத்தடை மருந்தாகப் பயன்படும் சோடியம் பெர்மாங்கனேட்டுக் கரைசல். மாற்றாக, பொட்டாசியம் பர்மாங்கனேட்டும் பயன் படுத்தப்படுகிறது.
cone : கூம்பு : 1. வட்ட அடித்தளத்திலிருந்து கூர்மையாகிக் கொண்டுசெல்லும் ஒரு வடிவம் அல்லது உருவம். 2. விழியின் பின்புறத்திரையின் ஒளி ஏற்பிகளில் ஒன்று. 3. கதிர்வீச்சுக் கற்றையினை மையப்படுத்துவதற்கு உதவுகிற, நீள் உருளைக் கட்டமைப்புடைய இருபுறமும் திறந்த ஒரு கூம்பு.
confabulation : நினைவழிவு : அண்மை நிகழ்வுகள் பற்றிய நினைவு அழிந்துபட்டிருக்கும் போது ஏற்படும் குழப்பமான நிலை. இந்நோயாளி தமது நினைவில் ஏற்படும் குறைபாட்டினைத் தமது சொந்தப் புனைவுகளால் நிரப்பிக் கொள்கிறார். அந்தப் புனைவுகள் உண்மை எனவும் நம்பிவிடுகிறார்.
confection : இனிப்பான மருந்துக் கலவை; லேகியம்; திண்பொருள் : சர்க்கரை, பாகு, தேன் ஆகியவற்றுடன் மருந்துகளை கலத்தல்.
confidentiality : மந்தன உரிமை : ஒருவர் ஒரு தொழிலாற்றுநரின் (மருத்துவரின்) அறிவுரைகளையும் உதவியையும் இரகசியமாக நாடி இருக்கலாம். அவர் அந்தச் சூழ்நிலையில் எவ்வாறு நாடினார் என்ற தகவல்களை அத்தொழிலாற்றுநர் பகிரங்கமாக வெளியிடாமல் இருப்பதற்கு அவருக்குள்ள உரிமை.
configuration : வடிவமைதி : 1. உடல் மற்றும் அதன் உறுப்புகளின் பொதுவான வடிவ அமைப்பு. 2. ஒரு மூலக்கூறிலுள்ள அணுக்களின் அணு அமைதி.
conflict: மனப்போராட்டம்; உளப் போராட்டம்; சச்சரவு : ஒன்றுக் கொன்று மாறான அல்லது முரண்பட்ட இரு விருப்பங்கள் அல்லது உணர்ச்சி ஒருங்கே இருக்கும் மனநிலை. மனப் போராட்டம் கடுமையாகும் போது விருப்பங்களை அடக்குதல் நடைபெறுகிறது. மனப் போராட்டமும் விருப்பங்களை அடக்குதலும் பல்வேறு நரம்புக் கோளாறுகளுக்கு முக்கிய மாக மனக்குழப்ப நோய்க்குக் (ஹிஸ்டீரியா) காரணமாகும்.
confluence : திரடிசி; குவி திறன் கூடல் : அடுத்தடுத்துள்ள கொப் புளங்கள் அல்லது பருக்கள் ஒன்றாக இணைந்து திரட்சியடைதல்.
conformation : கட்டமைப்பு : 1. ஒர் உறுப்பின், உடலின் அல்லது பொருளின் வடிவம் அல்லது உருவமைப்பு. 2. நிரப்பிடத்தில் ஒரு மூலக்கூறின் முப்பரிமாண வடிவமைதி.
confusion : மனக்குழப்பம்; குழப்பம் : இயல்பு நிலைக்கு ஒவ்வாத ஒரு குழப்பமான மன நிலை. பல்வேறு உணர்ச்சிகள் ஒன்றுகலப்பதால் இது உண்டாகிறது. பல்வேறு நோய்களின்போது இது உண்டாகிறது.
congenital : பிறவி நோய்; பிறவிக்குறை; பிறப்பு நோய் : பிறவியிலேயே அமைந்த நோய்கள் பெரும்பாலும் மரபணுக் கோளாறுகளினால் உண்டாகிறது.
congestion : குருதித் தேக்கம்; குருதியோட்டத் தேக்கம் : குருதி மட்டுமீறிய அளவில் செறிவு கொண்டிருத்தல். நெஞ்சுப் பைக்குள் குருதியைக் கொண்டு செல்லும் நாளமாகிய சிரையில் தடை ஏற்படுவதால் இது உண்டாகிறது.
congestive heart failure : குருதித் திரட்சி இதயக்கோளாறு : இதயத்தின் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட இதயக் கீழறைகளிலிருந்து போதிய அளவு இரத்தம் வெளிப்படுவதைப் பராமரிக்க இதயத்தினால் இயலாதிருத்தல். இதனால் அளவுக்கு மீறிய குருதித் தேக்கம்-திரட்சி ஏற்படுகிறது.
conglutinant : ஒட்டுப்பசை : ஒரு காயத்தை ஒட்டி இணைத்துக் குணப்படுத்தும் பசைப்பொருள்.
conicotine : கானிக்கோட்டின் : நிக்கோட்டின் எனப்படும் புகையிலை நஞ்சின் ஒரு வளர்சிதை வினைமாற்றப் பொருள். இது கடைசியாகச் சிகரெட் பிடித்த ஒரு வாரம் வரை இரத்தவோட்டத்தில் கண்டறியக்கூடிய அளவுக்கு நிலைத்திருக்கும்.
coning : கானிங் : 1. மூளையின் பாகங்கள் அதன் பல்வேறு அறைகளுக்கிடையே இடம் பெயர்தல். இது கன்னப்பொட்டெலும்பு கட்டிப்புண் வீக்கம் காரணமாக உண்டாகிறது. 2. பெருமூளைக்கும் சிறு மூளைக்குமிடையில் நீண்டுள்ள புறச்சவ்வு வழியாகக் கன்னப் பொட்டெலும்பு மடல்கள் கீழ் நோக்கி இடம் பெயர்தல். 3. எலும்புப் பெரும் புழை வழியாகச் சிறுமூளை அடிச்சதை கீழ்நோக்கி நகர்தல்.
coniofibrosis : தூசுக் குலைக் காய்ச்சல் :தூசு காரணமாக உண்டாகும் குலைக்காய்ச்சல். இதனால் நுரையீரல் அழற்சி ஏற்படும்.
conjugate : இணைவு : 1. இணையாக்கப்பட்ட அல்லது பிணைக்கப் பட்ட 2. வேதியியல் இணைவு காரணமாக உண்டாகும் ஒரு விளைபொருள். 3. இடுப்பு எலும்பு வாயிலின் இணைப்பு விட்டம் இடுப்படி முட்டு முக்கோண எலும்பு (புனித எலும்பு) முதல் பொது எலும்புக் கூட்டுக்கணு வரையிலான தூரம்.
conjugation : இணைவாக்கம் : 1. ஓரணு உயிரிகள் இரண்டின் அல்லது ஆண்பால், பெண்பால் உயிரணுக்களின் இணைவு. 2. சில வேதியியல் பொருள்களின் உயிரியல் விளைவுகளை முடிவுறுத்துகிற இணைவாக்கம். conjunctiva : இமை இணைப்படலம்; கண் சவ்வு : புற இமை யையும் விழிக் கோணத்தையும் இணைக்கும் படலம்.
conjunctivitis : இமை இணைப் படல அழற்சி; கண் சவ்வழற்சி : இமை இணைப்படலத்தில் ஏற்படும் வீக்கம். சுகாதார வசதிகள் மிகக்குறைவாக உள்ள நாடுகளில் அதிகமாக உண்டாகிறது.
connation : இணையுறுப்பு ஒட்டம் : இணையொத்த உறுப்புகள் பிறப்பி லேயே ஒட்டிக் கொண்டிருத்தல்.
conn syndrome : குண்டிக்காய்க் கழலை : குண்டிக்காய்ப் புறப் பகுதியில் ஏற்படும் கழலைக் கட்டி. இதனால், மட்டுமீறிய குருதி அழுத்தம், தசை வலிமைக் குறைவு ஏற்படுகிறது.
conn's syndrome : 'கோன்' நோய் : அண்ணீரகக் குண்டிக்காய்க் கோளப்புற்று காரணமாக உண்டாகும் தொடக்க நிலை அல்டோஸ்டெரோன் மிகைப்பு நோய். இதனால் அல்டோஸ்டெரோன் மிகஅதிகமாகச் சுரந்து, சோடியம் நிலை பெற்று, பொட்டாசியமும் ஹைடிரஜனும் இழக்கப் படுகிறது. இதனால் தசைப் பலவீனம், உயர்இரத்த அழுத்தம், மிகைச்சிறு நீர்ப்போக்கு, பொட்டாசியம் குறைபாடு ஏற்படுகிறது. அமெரிக்க மருத்துவ அறிஞர் ஜே. கோன் என்பவர் பெயரால் இது அழைக்கப்படுகிறது.
conotrane : கோனோட்ரான் : சிலிக்கோன், பெனோட்ரோன் அடங்கிய களிம்பு மருந்தின் வணிகப் பெயர்.
consanguinity : மரபுவழி உறவு; தொடர் உறவு : குருதிக்கலப்பு; ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களிடையிலான உறவு. இது ஒரு தாய் மக்களுக்கும், தொலை உறவினர்களுக்குமிடையில் மாறுபட்டிருக்கும்.
conscience : மனசாட்சி : ஒருவர் தனது செயல்களும் உணர்வுகளும் சரி அல்லது தவறு என்று அறிந்து கொள்ளும் உணர்வு.
consciousness : உணர்வுநிலை : மனம் செயற்படும் நிலை; மனத் தின் விழிப்பு நிலை; மனம் அரைகுறையான தெளிவு நிலையில் இருத்தல் நனவு.
consent : இசைவளிப்பு : ஒரு நோய்ச் சிகிச்சைக்கு அல்லது நோய் கண்டறியும் நடை முறைக்கு உள்ளாவதற்கு நோயாளி இசைவளிக்கிற ஆவணம் அல்லது வாய்வழி ஒப்பளிப்பு.
conservative treatment : பராமரிப்பு மருத்துவ முறை : தீவிர முறைகளைக் கையாளாமல் ஒரு நோய் மோசமடையாமல் தடுக்கும் சிகிச்சை முறை இது பாரம்பரியமாக ஒப்புக் கொள்ளப்பட்ட முறை.
consolidation : திடமாக்கும் மருத்துவம்; திட்ட மருத்துவம்; இறுகுதல் : வலுப்படுத்தும் சிகிச்சை முறை. சீதசன்னியில் (நிமோனியா) கசிவு கூட்டிணைவு காரணமாக நுரையீரலுக்கு ஏற்படும் நிலையைச் சீர்படுத்து வதற்கான சிகிச்சை.
constellation : குழுமம் : பொருள்களின், தனிமனிதர்களின் அல்லது சூழ்நிலைகளின் ஒரு குழுமம், கூட்டம் அல்லது இணைவு.
'constipation : மலச்சிக்கல்; மலக்கட்டு; மல அடைப்பு : போதியளவு உணவு அல்லது திரவம் உட்கொள்ளாத காரணத்தால் அல்லது இரைப்பைத் தசைகள் சீராக இயங்காத காரணத்தால் உண்டாகும் நிலை.
constitution : உடல் அமைப்பு; உடல்வாகு; வாகு.
constrictor : இறுக்கும் பொருள் : 1. நெருக்கி இறுக்கும் பொருள். 2. நெருங்கி அழுத்தும் தசை.
consumption : நோய்நலிவு : அழிவு; தேய்வு; மெலிவு. ஒரு சமயம் உடலை நலிவடையச் செய்யும் எலும்புருக்கி நோயைக் (காசநோய்) குறிக்க இச்சொல் பயன்பட்டது.
consumptive : காசநோயாளி : நுரையீரல் காசநோயுடையவர்; எலும்புருக்கி நோயாளி; அழிவு உண்டாக்கும் நோயர், எலும்புருக்கி நோய் பீடித்தவர்.
contact : நோய்த் தொற்றிணைப்பு; தொடர்பு; தீண்டல்; தொடுகை; தொற்று : நோய் தொற்றக்கூடிய அளவுக்கு நெருக்கம்.
contactant : ஒவ்வாமை ஊக்கி : தோலுடன் அல்லது சளிச் சவ்வுடன் நேரடித்தொடர்பு காரணமாக மிகை உணர்வு உண்டாக்கக்கூடிய ஒவ்வாமை ஊக்கி.
contact-lens : விழியொட்டு வில்லை; ஒட்டுவில்லை : கண் பார்வைக்கோளாறுகளைத் திருத்தக் கண்விழியோடு ஒட்டி அணியப்படும் குழைமக் கண்ணாடிவில்லை.
contagion : தொற்று;ஒட்டு : ஒட்டுவாரொட்டி நோய் தொற்றுதல், தொற்று நச்சுக்கூறு.
contagionist : தொற்று நோய் வல்லார் : ஒரு நோய் தொற்றவல்லது என்ற கோட்பாட்டாளர்.
contagious : தொற்று பரப்புகிற; தொற்றுத் தன்மையுடைய; ஒற்று; தொற்று; ஒட்டு வாரொட்டி : தொடர்பினால் ஒட்டிக்கொள்ளக் கூடிய தொற்றுநோய் கொண்டு செல்கிற.
containment isolation : நோய்த் தடுப்பு ஒதுக்கிவைப்பு : ஒரு நோயாளியைப் பீடித்துள்ள நோய் மற்றவர்களுக்குப் பரவாமல் தடுப்பதற்காக நோயாளியைத் தனிமையில் ஒதுக்கி வைத்தல். contamination : தொற்றுப் பொருள் : உடல்பரப்பிலும், துணிகளிலும், படுக்கையிலும், சாதனங்களிலும் நீர், பால், உணவு உட்பட பிற பொருள்களிலும் தொற்று நோய் உண்டாக்கக் கூடிய ஒரு பொருள் இருத்தல்.
continence : நுகர்வடக்கம் : 1. இயற்கைத் துண்டல்களைக் கட்டுப்படுத்தும் திறன். 2. தற் கட்டுப்பாடு.
continent : கட்டப்பட்ட : 1. சிறு நீர் கழித்தல், மலங்கழித்தல், போன்ற உணர்வுகளை கட்டுப் படுத்திவைத்திருத்தல். 2. சிற்றின்ப நுகர்வுஅறவே நீக்கிய.
continuous ambulatory perito neal dialysis (CAPD) : இடையறா இயங்கு வபைப் பிரிவினை : நோயாளி வபைப் பிரிவினையில் இருக்கும்போது அவர் இடம் விட்டு இடம் இயங்கிக் கொண்டிருத்தல்.
continuous positive airways pressure (CPAP) : பற்குழித் தகர்வுத் தடுப்பு மருத்துவம் : பல் பொருந்து குழித் தகர்வினையுடைய குழந்தைகளை ஒளி ஊடுருவுச் சவ்வு நோயிலிருந்து பாதுகாப்பதற்கான சிகிச்சை முறை.
continuous subcutaneous in-sulin infusion : கணையச் சுரப்பு நீர் தொடர் செலுத்தம் : நீரிழிவு நோயை உள்உட்கூறியல் முறையில் கட்டுப்படுத்துவதற்காகக் கணையச் சுரப்பு நீரை அடித்தோல் வழியாகச் சிறிது சிறிதாகத் தொடர்ந்து செலுத்துவதற்கு இறைப்பானைப் பயன் படுத்துதல்.
contraception : கருத்தடை.
contraceptive : கருத்தடைச் சாதனம்; கருத்டை மருந்து : கருவு றாமலிருப்பதற்காக ஆண்பெண் அணிந்துகொள்ளும் சாதனம். வாய்வழி உட் கொள்ளப்படும் மாத்திரைகளையும் இது குறிக்கும்.
contract : நோய் பீடித்தல் : நோய்கள் எளிதில் பற்றுதல் அல்லது தொற்றுதல். நோயுடன் தொடர்பு.
contractile : தசைச்சுருக்கம;: சுருங்கு தசை : தசைத் திசுக்கள் எளிதில் சுருங்கக்கூடிய ஆற்றல் கொண்டிருத்தல்.
contractility : குருக்கம் : வளவைக் குறுக்குகிற அல்லது சுருக்குகிற திறன்.
contraction : தசையிழைச் சுருக்கம்; இறுக்கம்; சுருக்கம் : தசை இழைகள் இறுக்க மடைந்து சுருக்கமடைதல்.
contrafissura : எதிர்நிலை முறிவு : மண்டையோட்டில் உள்ளது போன்ற ஓர் எலும்பில் அடிபட்ட இடத்திற்கு நேர் எதிரான புள்ளியில் ஏற்படும் முறிவு. contraindication : சிகிச்சை நிறுத்த அறிகுறி; முரண்பட்ட; அறிகுறி; கூடாப்பயன்; பொருந்தாமை; கூடாமை : ஒரு நோய்க்குரிய ஒருவகைச் சிகிச்சை முறையை நிறுத்திவிடலாம் அல்லது தவிர்த்துவிடலாம் என்பதைக் காட்டும் அறிகுறி.
contrecoup : எதிரீட்டக் காயம்; எதிர்க்காயம் : தாக்கம் ஏற்பட்ட இடத்திற்கு நேர் எதிரான இடத்தில் தாக்குவிசை காரணமாக உண்டாகும் காயம் அல்லது சேதம். ஒரு திரவத்தை கொண்டிருக்கிற மண்டையோடு போன்ற உறுப்பில் இது ஏற்படும்.
contrusion : சேர்க்கைப் பல் : 1. பல் வளைவின் இயல்புமீறிய/ வரிசை. 2. பற்கள் ஒரே கூட்டமாகச் சேர்ந்திருத்தல்.
contusion : சிராய்ப்பு : தோலில் கிழிசல் ஏற்படாமல் ஏற்பட்டு உள்ள சிராய்ப்புக் காயம்.
conus : 1. ஒரு கூம்பு அல்லது கூம்பு வடிவக் கட்டமைப்பு. 2. ஒரு கிட்டப்பார்வைக் கண்ணின் பின்பக்கக் கருவிழிப் பிதுக்கம்.
convalescence : உடல்நலம் தேறும் காலம்; உடல்நல மீட்டாக்கம் : ஒரு நோய், அறுவைச் சிகிச்சை அல்லது காயம் குணமாகியபின் படிப்படியாக உடல்தேறி நலம் பெறும் நிலை.
convales cent : உடல்நலம் தேறுபவர் : 1. நோய் நீங்கி உடல் நலம் மீளப்பெற்று வருபவர். 2. நோய் நீங்கி நலம் பெறுகின்ற.
convection : உகைப்பியக்கம்; வாகித்தல்; சுற்றுமுறை : வெப்ப மின்னாற்றல்கள் தம்மால் இயக்கப்படும் அணுக்களின் இயக்கத்தினால் பரவுதல். காற்று அல்லது திரவத்தில் சூடான பகுதியிலிருந்து குளிர்ந்த பகுதிக்கு வெப்பம் பரவுதல்.
conversion : நிலைமாற்றம்; மாற்றம் : உளவியல் போராட்டம், உடலியல் அறிகுறிகளாக வெளிப்படுதல்.
convolutions : மூளை மடிப்புகள்; மடி-மடிப்பான; வளை சுற்று; சுருட்டை; சுருள் மடிப்பு : மூளை மேற்பரப்பிலுள்ள நெளிவு மடிப்புகள்.
convulsions : வலிப்பு; இசிவு : மட்டுமீறிய முளைத்துண்டுதல் காரணமாக ஏற்படும் தசைகள் தானாகவே சுருங்குதல்.
convulsion therapy : அதிர்ச்சி மருத்துவம் : மன நோயாளிகளுக்கு மருந்து அல்லது மின் விசை மூலம் திடீரென உணர்வற்ற நிலையை உண்டாக்கி மனநோய்களுக்குச் சிகிச்சையளிக்கும் மருத்துவமுறை. முக்கியமாகப் பித்துநிலைச் சோர்வு, முரண் மூளை நோய் போன்ற மகன் கோளாறுகளைக் குணப்படுத்த இந்த முறை பயன்படுகிறது.
convulsive therapy : அதிர்வு மருத்துவம்; வலிப்பு மருத்துவம் : மின்விசை மூலம் அதிர்ச்சியளித்துச் சிகிச்சையளிக்கும் மருத்துவ முறை.
cooley's anaemia : கூலே குருதிச் சோகை : இரத்தத்தில் ஏற்படும் 'தாலசேமியா மேஜர்’ எனப்படும் மரபணுக்கோளாறு. இது தாமஸ் கூலே என்ற குழந்தை மருத்துவ அறிஞரின் பெயரால் அழைக்கப்படுகிறது.
cooling : வெப்பநிலைக் குறைப்பு : உடல்வெப்பநிலையை பனிக் கட்டிப் பைகள் அல்லது குளிர் ஈரத்துணி மூலம் வெப்ப நிலையைக் குறைத்தல்.
coomb's test : சிவப்பணு எதிர்ப் பொருள்சோதனை : இரத்தச் சிவப்பணுக்களுக்கு எதிரான உயிர்ப்பொருள்களைக் கண்டறிவதற்கான மிகுந்த உணர் திறனுடைய சோதனை முறை.
cooper's ligament : கூப்பர் தசை நார் : மார்பகத்தில் காணப்படும் ஆதார இழைம அமைப்புகள். பிரிட்டிஷ் அறுவைச்சிகிச்சை வல்லுநர் சர் ஆஸ்ட்லி கூப்பரின் பெயரால் அழைக்கப் படுகிறது.
coordination : ஒருங்கியக்கம்; ஒருங்கிணைவு; ஒருங்கிசைவு : உடல், தசை ஒன்றோடொன்று ஒருங்கிசைந்து இயங்குதல். இதனால் உறுப்புகளின் அசைவுகள் முழுக்கட்டுப்பாட்டுடன் நடைபெறும்.
copper : செம்பு : தாமிரம் விலங்குத் திசுக்கள் அனைத்திலுமுள்ள இன்றியமையாத தனிமம். இது சிலவகைப் புரதங்களிலும், செரிமானப் பொருள்களிலும் (என்சைம்) ஒர் அமைப்பானாகும்.
coping : சமாளிப்பு முறை : 1. ஒருவர் மன அழுத்தத்தைச் சமாளித்து, சிக்கலுக்குத் தீர்வு கண்டு, ஒரு முடிவு எடுக்கும் ஒரு செய்முறை. 2. ஒரு பல்லின் முகட்டில் அல்லது அடிவேரில் பூசப்படும் மெல்லிய உலோகப் பூச்சு.
coproantibody : குடுல் தற்காப்பு மூலம் : குடலிலுள்ள பொருள்களில் உண்டாகும் ஒரு தற்காப்பு மூலம். இது குடல் சளிச் சவ்விலுள்ள குருதிநீர் உயிரணுக்களினால் உண்டாகிறது.
coprolalia : ஆபாசமொழி; இழி மொழி; ஆபாசப்பேச்சு : மூளையின் முன்புறப்பகுதி சீர் கெடுவதால் உண்டாகும் மூளைக் கோளாறின் அறிகுறியாக ஆபாசமாக அல்லது அசிங்கமாகப் பேசுதல். coprolagnia : இயல்முரணிய பாலுணர்ச்சி : இதில் மலஜலம் பற்றி எண்ணுவதும், அதனைப் பார்ப்பதும்கூட ஒர் இன்ப உணர்ச்சியை உண்டாக்குகிறது.
coprolax : கோப்ரோலாக்ஸ் : டையாக்டில் சோடியம் சல் ஃபோசசினேட் மருந்தின் வணிகப் பெயர்.
coproporphyria : மிகைப்போர்பைரின் போக்கு : ஒருவகை போர்ப்பைரின் வள்ர்சிதை மாற்றப் பிழை. இது ஒரு மரபுக் கோளாறு. இதில் மலஜலங்களில் போர்ப்பைரின் அதிக அளவில் வெளிப்படும்.
coproporphyrin : கோப்ரோ போர்ப்பைரின் : மலஜலத்தில் பொதுவாகக் காணப்படும் இரு போர்ப்பைரின் கூட்டுப் பொருள்களில் ஒன்று. இது பிலிரூபின் என்ற நிறமியின் சிதைவினால் உண்டாகிறது.
coproporphyrinuria : கோப்ரா போர்ப்பைரினுரியா : சிறுநீரில் மலஜல போர்ப்பைரின் மிகையாக இருத்தல்.
coprosterol : குடல் சேர்மானப் பொருள் : பித்தச்சுரப்பியின் நெருக்கத்தினால் குடலில் தோன்றும் சேர்மானப் பொருள்.
copula : இணைப்பு : 1. இரு கட் டமைப்புகளை இணைக்கும் ஒரு குறுகிய உறுப்பு. 2. நாக்கின் மேற்கூரையாக அமைந்துள்ள முதிரா நிலைத்தொண்டைத் தளத்தில் உண்டாகும் மிதமான புடைப்பு.
coracoid : முன்கை தோளிணை எலும்பு : முன்கை எலும்புடன் இணையும் தோள்பட்டை எலும்புடன் ஒன்றிணைந்த எலும்பு.
coramine : கோராமைன் : நிகெதமைடு என்ற மருந்தின் வணிகப் பெயர்.
cordectomy : நாள அறுவை சிகிச்சை : ஒரு நாளத்தை குறிப்பாகக் குரல்வளை அதிர்வு நாளத்தை அறுவைச் சிகிச்சை முறையில் துணித்தல், தொப்புள் கொடியறுப்பு.
cordilox : கோர்டிலோக்ஸ் : வெராப்பாமில் என்ற மருந்தின் வணிகப் பெயர்.
cordocentesis : தொப்புள்சிரைத் துளைப்பு : கருவுயிரின் இரத்த மாதிரியை எடுப்பதற்கு மீயொலி வரைவு வழிகாட்டுதலில் கீழ் தோல்வழித்தொப்புள் சிரைத் துளைப்புச் செய்தல்.
cordotomy : தண்டுவடக்குழாய்ப் பகுப்பு : தண்டு வடத்தின் கிடை மட்ட வடக்குழாயினை பகுத்தல்.
core : உள்மையம்; நடுப்பகுதி; முனை; உட்புறம் : ஒரு கொப் புளத்தின் மையத்திலுள்ள ஆணிப் பகுதி. corectopia : திரிபிடக்கண்மணி : கண்ணின்மணியின் அமைப்பு விழித்திரையின் மையத்தில் அமைந்திருப்பதற்குப் பதிலாக விசித்திரமான இடத்திலமைந்து இருத்தல்.
core dialysis : உள்மையப்பகுப்பு : இழை உறுப்பிலிருந்து விதித் திரைப்படலத்தின் வெளிவிளிம்பை அறுவைச் சிகிச்சை மூலம் பிரித்தல்.
corelysis : இணைப்புப் பிளப்பு : விரியாடியின் பொதியுறைக்கும் விழித்திரைப் படலத்துக்கு மிடையிலான இணைப்பினை பிளவுறுத்துதல்.
coremorphosis : கண்மணி உருவாக்கம் : ஒரு செயற்கைக் கண்மணியை அறுவைச் சிகிச்சை முறைப்படி உருவாக்குதல்.
coreoplasty : கண்மணி திரிபுநீக்கச் சிகிச்சை : திரிபடைந்த அல்லது புழை அடைப்புடைய கண்மணியை அறுவைச் சிகிச்சை மூலம் திருத்தி அமைத்தல்.
corlan : கார்லான் : கோர்ட்சால் என்ற மருந்தின் வணிகப் பெயர்.
corn : காய்ப்பு; தோல் காய்ப்பு; ஆணி விழுதல்; கால் ஆணி : காலடியிலோ கால் விரலிலோ மிகுந்த உராய்வு அல்லது மட்டு மீறிய அழுத்தத்தால் ஏற்படும் மேல்தோல் தடிப்பு.
cornea : விழி வெண்படலம்; கருவிழி; ஒளிப்படலம் : விழித்திரைப் படலத்திற்கும் கண்மணிக்கும் முன்பாகவுள்ள ஒளி ஊடுருவக் கூடிய சவ்வுப்படலம்.
corneal graft : கருவிழிப்படல மாற்று மருத்துவம்; கருவிழிச் சீரமைவு; கருவிழி ஒட்டு : ஒளி ஊடுருவாத விழிவெண் படலத்தை மாற்றிவிட்டு, வேறொருவரின் ஆரோக்கியமான விழிவெண்படலத்தைப் பொருத்துதல்.
corneoplasty : கருவிழிப்படல மாற்றுச் சிகிச்சை : விழிவெண் படலத்தை மாற்றிப் பொருத்துவதற்கான அறுவைச் சிகிச்சை.
corneosclera : கருவிழிப்புறப் படலம் : கண்விழியின் புறத் தோலாக விழிவெண்படலமும், வெள்விழியும் அமைந்திருத்தல்.
corny : கால் காய்ப்பு நோய் ; காலில் தோன்றும் காய்ப்பு தன்மை காலில் காய்ப்பு நோயுடைய coronary : நெஞ்சுப்பை சார்ந்த : 1. மகுடம் போன்ற அல்லது மகுடத்துக்குரிய. 2. நெஞ்சுப்பைச் சுவரின் தசைக்குக் குருதி வழங்கும் நாளங்களைக் குறிப்பிடும் சுற்று உறுப்பு.
coronary arteries : நெஞ்சுப்பை நாளம் ; இதயம் சார் : நெஞ்சுப்பைச் சுவரின் தசைக்கு இரத்தம் வழங்கும் நாளம் (தமனி) இது மகுடம் போல் சுற்றியிருக்கும்.
coronary circulation : நெஞ்சுப்பைக் குருதியோட்டம் : நெஞ்சுப் பையைச் சுற்றி இரத்த ஒட்டம்.
corona viruses : மகுடக்கிருமிகள் : புதிதாகக் கண்டு பிடிக்கப் பட்டுள்ள ஒரு நோய்க் கிருமிக் குழுமம். இது தடுமனை உண்டாக்குகிறது.
coroner : பிண ஆய்வாளர் : இங்கிலாந்தில் வன்முறை காரணமாக ஒரு மரணம் ஏற்பட்டிருக்கும் என ஐயுறப்படும்போது மரணத்திற்கான காரணத்தை அறிவதற்காகச் சடலத்தை ஆராயும் ஒர் அதிகாரி. இவர் பொதுவாக, நெஞ்சுப்பை நாளம் மெய்யம் ஒரு வழக்குரைஞராகவோ, மருத்துவராகவோ இருப்பார்.
coronoidectomy : கீழ்த்தாடை எலும்பு அறுவைச் சிகிச்சை : பாலூட்டி உயிரினங்களின் கீழ்த் தாடையிலுள்ள காக்கையின் அலகுபேர்ல் வளைந்த எலும்புப் பகுதிகளை அறுவைச் சிகிச்சை முறையில் அகற்றுதல்.
corporeity : பரு உடல் : பரு உடலியல்பு.
corpse : உயிரிலா மனிதஉடல் : சவம்.
corpulmonale : இதய கீழறை மிகு அழுத்தம் : நுரையீரல் நோயைத் தொடர்ந்து ஏற்படும் இதயநோய். இதனால், வலது இதயக் கீழறையில் அழுத்தம் அதிகமாகிறது.
corpus : உடலி; பிணம் (சடலம்); உடல் சிறப்புத் திசு உறுப்பு : உடம்பில் தனி இயல்பு வாய்ந்த கட்டமைப்பு.
corpuscle : சிற்றுடலி; குருதிக்கணம்; இரத்த அணு; சிறு மெய்யம்; குறுதியணு : குருதியில் உள்ள நுண் அணுவுடலி. இது பொதுவாக, இரத்தச் சிவப் பணுக்களையும், வெள்ளணுக் களையும் குறிக்கிறது.
corrective : தீங்கு தவிர்க்கும் பொருள்; செப்பமான : தீங்கினை எதிர்த்து இயங்கும் தன்மையுடைய பொருள். correlation : இடைத்தொடர்பு : ஒன்றற்கொன்று தொடர்புடைய எதிரிணையான பொருள்களை ஒன்றற்கொன்று தொடர்புடைய தாக்கும் ஒரு புள்ளி விவர அடடவணை.
corrigan's pulse : கோரிகான் நாடி : நீர்ச் சம்மட்டி நாடி. அயர்லாந்து மருத்துவ அறிஞர் சர் டொமினிக் கோரிகானின் பெயரால் அழைக்கப்படுகிறது.
corrolant : உடல் வலுவூட்டி : உடல் வலிமையூட்டும் மருந்து.
corrugator : நெளிவான : முகம் சுளிக்கும்போது புருவ சுருக்கு தசை
cortex : மூளை மேலுறை; புறணி; மூடி : மூளையின் மேலுள்ள சாம்பல் நிறப் பொருள்.
cortical : புறஉடல் சார்ந்த : 1, புறணி சார்ந்த 2 உள்ளுரி சார்ந்த மென்மையான எலும்புத் திசுவைச் சுற்றியுள்ள எலும்பு.
corticosterone : அண்ணிரகப் புறணி இயக்குநீர் : அண்ணிரகப் புறணியிலிருந்து சுரக்கும் இயற்கையான குண்டிக்காய் இயக்கு நீர். இது நுரையீரலில் கிளைக்கோஜன் படிவதையும், சோடியம் நிலைபெறுவதையும், பொட்டாசியம் வெளியேறுவதையும் தூண்டுகிறது.
corticosteroids : குண்டிக்காய் இயக்குநீர் : குண்டிக்காய்ச் சுரப்பி மேலுறையில் உண்டாகும் இயக்கு நீர்கள் (ஹார்மோன்).
corticotropin : புறக் கபச் சுரப்பு நீர் : புறக்கபச் சுரப்பியில் சுரக்கும் இயக்குநீர். இது குறிப்பாகக் குண்டிக்காய் மேலுறை இயக்கு நீரைச் சுரக்கத் துண்டுகிறது.
cortisol : கோர்ட்டிசால் : மனிதரிடமுள்ள முக்கியமான குளுக்கோ கார்ட்டிக்காய்ட் இதன் அளவு, காலையில் எழுந்தவுடன் மிக அதிகமாகவும், நள்ளிரவில் மிகக் குறைவாகவும் இருக்கும். மன அழுத்தத்தின் போதும், நோயின்போதும் இதன் அளவு அதிகரிக்கிறது. இதன் 95% புரதத்துடன் பிணைந்திருக்கும். சுதந்திர மாகவுள்ள சிறிதளவு, உயிரியல் முறையில் மிகவும் செயலூக்கமுடையதாக இருக்கும். இது குளுக்கோகார்ட்டிக்காய்ட் ஏற்பிகள் மூலமாகச் செயற்படுகிறது.
cortisone : கார்ட்டிசோன் : குண்டிக்காய்ச் சுரப்பியில் சுரக்கும் இயக்குநீர்களில் (ஹார்மோன்) ஒன்று. இதனை உடல் பயன் படுத்துவதற்கு முன்பு கார்டிசாலாக மாற்றிக் கொள்கிறது. -
corynebacterium : கோரினிபாக்டீரியம் : கோரினிபாக்டீரியேசியே என்ற பாக்டீரியக் குடும்பத்தைச் சேர்ந்த சலாகை வடிவிலான கிராம் நேர் படிவ வகை. இது தொண்டை அழற்சிநோயை உண்டாக்குகிறது. corynebacterium : கோர்ன்பாக்டீரியம் : பாக்டீரிய வகையைச் சேர்ந்த கிராம் சாயம் எடுக்கும் தன்மையுடைய பாக்டீரியம்.
coryza : மண்டைச்சளி (தடுமன்) சளி, நீர்க்கோள் : குறைந்த காலம் நீடிக்கக்கூடிய தடுமன் நோய். இது மிக விரைவாகத் தொற்றக்கூடியது.
cosalgesic : கோசால்ஜெசிக் : டெக்ஸ்டிரோப்புரோப் ஆக்சிஃபீன், பாராசிட்டமால் ஆகிய இரண்டும் கலந்த கலவை மருந்தின் வணிகப் பெயர்.
cosmesis : ஒப்பனை மருத்துவ முறை : நோயாளியின் தோற்றம் பற்றிய அறுவைச் சிகிச்சை நடைமுறைகள். இது ஒப்பனைக்காகச் செய்யப்படும் அறுவைச்சிகிச்சை அல்லது சிகிச்சைமுறை.
cosmetic : ஒப்பனைப் பொருள் : முகம், முடி ஆகியவற்றை அலங்கரிப்பதற்குப் பயன்படும் சிங்காரிப்புப் பொருள்.
costa : விலா எலும்பு : 1. விலா விலுள்ள நீண்ட வளைவான 24 எலும்புகளில் ஒன்று. 2. உடலின் பக்கத்திலுள்ள விலா எலும்பினைச் சார்ந்த.
costal : விலா எலும்பு : உடலின் பக்கத்திலுள்ள எலும்பு.
costate : விலா எலும்புள்ள.
costive : மலச்சிக்கலுள்ள.
costochondritis : விலாக் குருத்தெலும்பு அழற்சி : விலாக் குருத் தெலும்பு இணைப்புகளில் ஏற்படும் வீக்கம். இதில் விலாக் குருத்தெலும்பு இணைப்புகளின் மீது உறுப்பெல்லைக்குள் இலேசான வலியும் மென்மைத் தன்மையும் உண்டாகும்.
costochondritis : விலாக் குருத்தெலும்பு அழற்சி : விலாக் குருத் தெலும்பில் ஏற்படும் வீக்கம்.
costoclavicular : விலா-கழுத்துப் பட்டை எலும்பு நோய்.
costotransverse : விலா குறுக்கீட்டுத் தசை சார்ந்த : விலா எலும்புகள், முள்ளெலும்புகளின் குறுக்கீட்டுத் தசைகள் தொடர்புடைய.
costovertebral : விலா-முள்ளெலும்பு சார்ந்த : விலா எலும்புகள், மார்பக முள்ளெலும்புகள் சார்ந்த.
costoxiphoid : விலா மார்பு எலும்பு சார்ந்த : விலா எலும்புகள், மார்பெலும்பின் கீழ்க் கோடிக் குருத்துசார்ந்த.
cotazym : கோட்டாசைம் : கணையச் செரிமானப் பொருளின் (என்சைம்) வணிகப் பெயர்.
cot death : கட்டில் மரணம் : ஒரு குழந்தை இரவில் கட்டிலில் தூங்கும் போதே சிறிதும் எதிர்பாராமல் திடீரென ஏற்படும் மரணம். ஒரு மாதம் முதல் ஒரு வயது வரையுள்ள குழந்தைகளுக்கு இந்த மரணம் உண்டாகிறது. இதற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. பிறக்கும்போது குறைந்த எடையுடைய குழந்தைகளுக்கு 2 மாதங்களில், பின் பனிக்காலத்தில் பெரும்பாலும் இந்த மரணம் குளிர் பகுதிகளில் உண்டாகிறது.
cotyledon : கருப்பை உட்பிரிவு : நச்சுக் கொடியின் கருப்பைப் பரப்பிலுள்ள உட்பிரிவுகளில் ஒன்று.
cough : இருமல் : மூச்சுக்காற்று வழிகளில் புகும் அயல்பொருள் களை அல்லது திரளும் சுரப்புகளை அகற்றுவதற்காக அனிச்சைச்செயலாக அல்லது தன்னுணர்வுடன் துண்டப்படும் ஒரு பாதுகாப்புச் செயல்முறை.
cough-drop : இருமல் சொட்டு மருந்து.
coulomb : மின்னலகு கூலாம்ப் : ஒரு நொடியில் ஒரு ஆம்பியர் மின்னலகால் ஈர்க்கப்படும் மின் விசையின் அளவு. ஃபிரெஞ்சு இயற்பியலறிஞர் சி. கூலாம்ப் என்பவரின் பெயரால் அழைக்கப்படுகிறது.
coumarin : கூமாரின் : செடி கொடி வகைகளிலிருந்து கிடைக்கும் படிக உருவ மணப் பொருள் வகை. இது K வைட்டமின் சார்ந்த உறைவுக் காரணிகளின் கல்லீரலுக்குரிய கூட்டிணைப்புக் கூட்டுப்பொருள்.
count : கணிப்பு : கணக்கிடுதல். பொருள்களின் ஒரு கன அளவுக்கு எந்த அலகுகள் என்று எண்மான முறையில் கணக்கிடுதல். இதன்படி பாக்டீரியாக்கள், இரத்த உயிரணுக்கள், பல்வேறு வெள்ளி உயிரணுக்கள் போன்றவை கணக்கிடப்படுகின்றன. கதிர் வீச்சின் அளவு ஒருகால அலகு அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.
counteraction : எதிர்வினை : ஒரு வினையூக்கிக்கு எதிரான செயல்முறையை உடைய ஒரு மருந்தின் வினை.
counterincision : எதிர்வெட்டு : ஒரு சுத்தமான காயம் அடை யும்போது அதிலிருந்து சீழை வெளியேற்றுவதற்காக காயத்தின் விளிம்புகளில் இரண்டாம் முறைசெய்யப்படும் கீறல்.
counter-irritant : உடலெரிவு மருந்து; எரிவூட்டி : உடலெரிவு மூலம் நோய்த்தீர்வு நாடும் மருந்துவகை.
counter-poison : நச்சு மாற்று : நச்சுமுறிவு மருந்து.
countershock : எதிர் அதிர்ச்சி : இதயக்கீழறைத் தசைத் துடிப்பைத் தடுப்பதற்காகவும், சீரான மின்னியல் நடவடிக்கையை மீட்பதற்காகவும் இதயத்துக்குக் கொடுக்கப்படும் உயர்அழுத்த மின்னோட்ட அதிர்ச்சி.
counterstain : எதிர்கறை பொருள் : முந்தையக் கறையை எடுப்பாகக் காட்டுவதற்காகப் பயன்படுத்தப்படும் ஒரு கறை உண்டாக்கும் பொருள்.
countertraction : எதிர் இழுவை : எலும்பு முறிவைக் குறைப் பதற்காக, ஒரு இழுவைக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் இன்னொரு இழுவை.
couplet : இரட்டை : அடுத்தடுத்த முதிராக் கீழறைச் சுருக்கங்களின் இரட்டைகள்.
couvade : போலி நோய் : பழங்குடி மக்களிடையே மனைவியின் பேறுகாலத்தில் கணவன் மேற்கொள்ளும் போலி நோய்.
cowperitis : துவர்சுரப்பி அழற்சி : துவர் சுரப்பியில் ஏற்படும் வீக்கம், மலக்குடலுக்குள் சுட்டு விரலைவிட்டு, இவற்றில் ஒன்றின் மீது கட்டைவிரலை முதலில் வைத்து, பிறகு ஆசனவாயின் நடுமடிப்பிலும் வைத்து இது உணரப்படுகிறது.
cowper's glands : துவர் சுரப்பியில்.
coxa : இடுப்பு; சப்பை : இடுப்பு முட்டு.
cowpox : கோவசூரி/மாட்டம்மை : பசுக்களின் மடுக்காம்புகளைப் புண்ணாக்கும் நோய்வகை. இது பசுக்களிடமிருந்து மனிதருக்கும் பரவக்கூடும்.
coxalgia: இடுப்புவலி; சப்பைவலி : இடுப்பு மூட்டில் ஏற்படும் நோவு.
coxiella : காக்சியெல்லா : கணைச் சூட்டு நோயை உண்டாக்கும் ஒருவகைப்பாக்டீரியா, அமெரிக்கப் பாக்டீரியாவியலறிஞர் செஹரால்டு காக்ஸ் என்பவரின் பெயரால் அழைக்கப்படுகிறது. காக்சியெல்லா பர்னெட்டி என்ற பாக்டீரியா, ஆடுமாடுகளிடமிருந்து மனிதருக்குத் தொற்றும் கியூ- காய்ச்சல் என்ற நோயை உண்டாக்குகிறது.
coxitis : இடுப்பு வீக்கம்; இடுப்பு அழற்சி; சப்பை அழற்சி : இடுப்பு மூட்டில் ஏற்படும் வீக்கம்.
crackie : வெடிப்பொலி : மூச்சுச் சிற்றறைகளிலும் மையம் நோக்கிய முனைகோடி காற்று வழிகளிலும் சிலசமயம் உட்குழிகளிலும் விட்டுவிட்டு உண்டாகும் வெடிப்பொலிகள்.
cradle cap : குழந்தைக் குல்லாய்; தொட்டில் தொப்பி : குழந்தை களுக்கு உச்சி வட்டக்குடுமித் தோலில் உண்டாகும் செதிள்.
cramp : சுளுக்கு; பிடிப்பு; தசை நார்ச் சுரிப்பு' தசை மரத்தல்; சூரை பிடித்தல்; தசை இசிவு; பிடியிறுக்கம் : கடுங்குளிரினால் அல்லது மட்டு மீறிய தளர்ச்சியினால் உண்டாகும் தசைநார் இசிப்பு. இது, முறை நரம்பிசிவு, உணவு நச்சு, வாந்திபேதி (காலரா) போன்ற நோய்களின்போது உண்டாகலாம்.
crampy : சுளுக்கான : சுளுக்கால் பீடிக்கப்பட்ட சுளுக்குப் பிடிப்பு நோயை உருவாக்கத்தக்க. cranialis : கபாலம் சார்ந்த : மண்டை யோடு (கபாலம்) அல்லது உடம்பின் உச்சிப்பகுதி தொடர்புடைய.
cranial Index : மண்டையோட்டுக் குறியெண்; தலைசார் : நீளத்தின் நூறுவீதமாகக் கணிக்கப்படும் மண்டையோட்டின் வடிவளவு வரைக் குறியெண்.
cranial vault : மண்டையோட்டுக் கவிகை : முதிர் கருமண்டை யோட்டின் நகரக்கூடிய பகுதியாக முன்பக்க, உட்பக்க, பின்புற எலும்புகள் அமைந்துள்ளன. இவை குழந்தை பிறக்கும் போது வெளிவருவதற்கு பிறப்பு வழியை நெகிழச் செய்து வழி உண்டாக்கிக் கொடுக்கின்றன.
crani ofenestra : மண்டையோட்டுத் திரிபு : கருமுனை மண்டையோடு திரிபாக வளர்ந்திருத்தல். இதில் சில பகுதிகளில் எலும்பு உருவாகாமலிருக்கும்.
craniogromy : மண்டையோட்டியல் : மண்டையோடு சார்ந்த புற உடலமைப்பு ஆய்வியல்.
craniolacunia : மண்டையோட்டுப் பள்ளம் : கருமுனை மண்டையோடு திரிபாக வளர்ந்து இருத்தல். இதில் உட்புறப் பகுதிகள் பள்ளங்கள் இருக்கும்.
craniometer : மண்டையோட்டுமானி : மண்டையோட்டை அளக்கும் கருவி.
craniometry : மண்டையோட்டு அளவியல்; தலையளவு : மண்டை யோடுகளை அளவிடும் அறிவியல்.
craniopharyngioma : மண்டையோட்டுக் கட்டி : மூளைக்கும் கபச்சுரப்பிக்குமிடையில் உண்டாகும் கட்டி.
cranioplasty : மண்டையோட்டு அறுவைச் சிகிச்சை : மண்டை யோட்டில் ஏற்படும் குறைபாடுகளை அறுவைச் சிகிச்சை செய்து குணப்படுத்துதல்.
craniorhachischisis : முதுகெலும்புப் பிளவு : மண்டையோடும் முதுகெலும்பும் பிறவியிலேயே வெடித்துப் பிளவு பட்டிருத்தல்.
craniotomy : இளம் மண்டையோட்டு மருத்துவம்; மண்டைத் திறப்பு; தலைத்திறப்பு : இளஞ்சூலின் மண்டையோட்டைத் தகர்த்துக் கூறுபடுத்துதல்.
cranium : மண்டையோடு; மண் டைக்கூடு; கபாலம் : மூளையை முடியுள்ள எலும்புகளின் தொகுதி.
crasnitin : கிராஸ்னிட்டின் :' கொலாஸ்பாஸ் என்ற மருந்தின் வணிகப் பெயர்.
crassamentium : இரத்தவுறைவு : உறை குருதியின் அடர் பகுதி , உறைந்த இரத்தக் கட்டி.
cream : பாலேடு : 1. பாலின் மேற்பரப்பில் படலமாகப் படர்ந்திருக்கும் கொழுப்புச் சத்துடைய பாலேடு, 2. வெப்ப மண்டலத்தில் பயன் படுத்துவதற்கான எண்ணெயும் நீரும் கலந்த ஒரளவு திட வடிவிலான பசைக் குழம்பு. cream of tartar : இருபுளியகி : பொட்டாசியம் பைடார்ட்ரேட், மருந்துக்குப் பயன்படும் வகையில் புடமிட்டு மணியுருப்படுத்திய சாம்பர இரு புளியகி.
creatine : தசைச்சாற்று உயிர்ப் பொருள்; தசைப்புரதம் : தசையின் சாற்றில் காணப்படும் உயிர்ப் பொருள் மூலக்கூறு முதுகெலும் புள்ளவற்றுக்குரிய வரிநிலைத் தசையின் நிலையான தனிச் சிறப்புக்கூறு.
creatinuria : மிகைத்தசைப் புரதப் போக்கு : சிறுநீரில் கிரியோட்டின் என்ற தசைப்புரதம் அதிக அளவில் வெளியேறுதல்.
creatorrhoea : தசைஇழைமப் போக்கு : கடும் கணைய அழற்சி யின்போது மலத்துடன் தசை இழைமங்கள் வெளியேறுதல். இதனை நுண்ணோக்கி மூலம் காணலாம்.
creosote : நச்சரிபொருள் : மரக்கீலிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் வடிவிலான ஆற்றல் வாய்ந்த நச்சரிபொருள்.
crepitation : குறு குறு ஒலி; (எலும்பில்) நரநரப்பு; உராயொலி; உரம் ஒலி : உடைந்த எலும்பின் இரண்டு துண்டங்கள் உராய்வதைப் போன்று மருத்துவர் ஆய்வினால் நுரையீரல்களில் கேட்கப்படும் ஒலி.
cresol : கிரிசோல் : ஆற்றல் வாய்ந்த பூச்சிக் கொல்லி மருந்து. வேதியியல் முறையில் ஃபினாலுடன் தொடர்புடையது.
crest : எலும்பு முகடு : எலும்பின் மீதுள்ள ஒர் எடுப்பான வரை முகடு.
cretinism : அங்கக்கோணல் : கேடயச் சுரப்பி சுரப்பாற்றல் இழந்த போவதன் காரணமாக ஏற்படும் அங்கக்கோணல் அல்லது தடைபட்ட வளர்ச்சியுடன் அறிவுமந்தம் ஏற்படும் நிலை. குள்ள உருவம், பெரிய தலை, பருத்த கால்கள், உலர்ந்த தோல், குறைந்த தலை மயிர் வீங்கிய கண் இமைகள், குறுகிய கழுத்து போன்ற அங்கக் கோணல்கள் ஏற்படுதல்.
crevicular : வெடிப்புசார்ந்த : ஒரு வெடிப்பு-குறிப்பாக பல்லெயிறு வெடிப்பு-தொடர்பான.
cribriform : சல்லடைத்துளை எலும்பு; சல்லடைக்கண்; சல்லடை : சல்லடை போல் சிறுதுளைகளுள்ள முக்கடி எலும்பு. இது முகர்தல் நரம்புகள் செல்வதற்கு அனுமதிக்கிறது.
crick : கழுத்து சுழுக்கு : முதுகுப் பிடிப்பு.
cricothyroid : குருத்தெலும்புக் கீறல் : குரல்வளைக் குருத்தெலும்பு, கேடயக் குருத்தெலும்புக் குருத்துகளின் வழியாகக் கீறல்.
cricothyreotomy : குருத்தெலும்பு சவ்வுக்கீறல் : தோல் மற்றும் கேடயக் குருத்தெலும்புச் சவ்வு வழியாகக் கீறுதல். இது மூச்சடைப்பை நீக்குவதற்குச் செய்யப்படுகிறது. cricoid : குரல்வளைக் குருத்தெலும்பு : மோதிர வடிவமுள்ள குரல்வளைக் குருத்தெலும்பு.
crisis : நோய்த்திருப்புமுனை; அச்சநிலை; இடர்நிலை : ஒரு நோயில் ஏற்படும் திருப்புக் கட்டம். எடுத்துக்காட்டாக, காய்ச்சலின் அறிகுறிகள் தளர்வதற்கு வெப்பத் தணிவு ஏற்படுதல்.
crohn's disease : குரோஹன் நோய் : சிறு குடல் வீக்கம். பொதுவாகக் கடைச்சிறுகுடல், பெருங்குடலின் வலப்பக்கம், இரைப்பையின் சுவர் முழுவதும் வீக்கமடைந்து இது ஏற்படுகிறது. நீளமான வெடிப்புகளாக நைவுப் புண்கள் உண்டாகும். இரத்தத்துடனான மலப்போக்கில் இது காணப்படும். பி. குரோஹன் என்ற அமெரிக்க மருத்துவ அறிஞரின் பெயரால் இது அழைக்கப்படுகிறது.
crookback : கூன் : கூன் விழுந்த; கூனல் முதுகு.
crop-bound : உணவடைப்பு : தொண்டைப் பை இறுக்கத்தால் துன்பமடைகிற.
cross bite : பல் திரிபு : பற்கள் இயல்புமீறி விலகுவதால் அல்லது தாடை இயல்பு மீறி இடம் பிறழ்வதால் மேல், கீழ் பற்கள் இயல்புமீறி ஒன்றின் மேல் ஒன்று படிந்திருத்தல்.
cross breeding : இனக் கலப்பு : வெவ்வேறு இனங்களைச் சேர்ந்த விலங்குகளை அல்லது தாவரங்களைக் கலப்பு செய்தல்.
cross eye : ஓரக்கண் : கண்ணின் பார்வை அச்சு மற்ற கண்ணிலிருந்து விலகி ஏற்படும் இரட்டைப் பார்வைக்கோளாறு.
cross leg flap : சப்பணத் தோல் மடிப்பு : பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை செய்யும்போது மற்ற காலின் தோல்மடிப்பைப் பயன் படுத்துதல்
cross reactivity : குறுக்கு எதிர் விளைவு : பல்வேறு காப்பு மூலங்களுடனான தற்காப்பு மூலத்தின் எதிர்விளைவு.
cross resistance : குறுக்கு தடையாற்றல் : ஒரு மருந்துக்கான எதிர்ப்பாற்றலை வளர்க்கிற உயிரிகள். இது ஒரே மாதிரியான பிற மருந்துகளுக்குத் தானாகவே எதிர்ப்பாற்றல் பெறுகிறது.
crossing over : டிஎன்ஏ பைரிமாற்றம் : முதலாவது கரு முனைப் பகுப்பின் தொடக்க நிலையில் ஒவ்வொரு இனக்கீற்று உறுப்பினர் களிடையே டி.என்.ஏ. நீட்சிகளின் பரிமாற்றம் நடைபெறுதல்.
crotalidae : சங்கிலிக்கறுப்பன் பாம்பு : நச்சுப்பாம்புகளின் ஒரு குடும்பம், வாலில் கலகலவென்று ஒலிசெய்யும் முன்வளையங்களுடன் கூடிய நச்சுப் பாம்பு வகை.
crotamiton : குரோட்டாமிட்டோன் : சொறி சிரங்கினை குறிப்பாகக் குழந்தைகளின் சொறி சிரங்கினைக் குணப்படுத்துவதற்கான மருந்து. இது சொறி சிரங்கில் பூச்சிகளைக் கொன்று, எரிச்சலைத்தடுக்கிறது. croup : காற்றுக்குழல் அழற்சி : கொடிய இருமலோடு கூடிய குழந்தைகளின் காற்றுக் குழல் அழற்சி நோய். தொண்டையில் உண்டாகும் கரகரத்த ஒலி.
crouzon's disease : குரூசோன் நோய் : பிறவியில் உண்டாகும் ஒரு நோய். இதில் தாழ்ந்த நெற்றி, கூரிய உச்சித்தலை போன்ற மிகைமண்டைத் திரிபு, கண்விழிப்பிதுக்கம், பார்வை நரம்பு சூம்புதல் போன்ற கோளாறுகள் உண்டாகும். ஆக்டேவ் குரூசோன் என்ற ஃபிரெஞ்சு நரம்பியல் வல்லுநரின் பெயரால் அழைக்கப்படுகிறது.
cruels : கண்டமாலை நோய்.
crus : வேர் உறுப்பு : உடலின் பல்வேறு உறுப்புகளில் கால் போன்ற அல்லது வேர் போன்ற அமைப்பு. எடுத்துக்காட்டாக, உதாரவிதான வேர்.
crutch palsy : கவட்டு வாதம்; ஊன்றுகோல் : மணிக்கட்டு, விரல்கள், கட்டைவிரல்கள் ஆகியவற்றின் நீட்டுத் தசைகளில், அக்குளில் உள்ள ஆரை நரம்புகளில் அடிக்கடி அழுத்தம் ஏற்படுவதன் காரணமாக உண்டாகும் முடக்குவாதம்.
cryaesthesia : குளிர் உணர்வு : குறைந்த வெப்பநிலையில் மிகுந்த குளிர்ச்சியை உணர்தல்.
cryoablation : குளிர்நிலை திசு அகற்றல் : அபரிமிதமான குளிர்ச்சி மூலம் அழிப்பதன் வாயிலாக திசுவை அகற்றுதல்.
cryogenics : தாழ்வெப்பவியல்; உறைநிலையியல் : தாழ்ந்த வெப்பநிலை பற்றிய இயற்பியலின் கிளைத்துறை.
cryoglobulinaemia : மிகைக்கிரையோகுளோபுலின் : இரத்தத்தில் கிரையோகுளோபுலின் அளவு மட்டுமீறி இருத்தல்.
cryoglobulins : கிரையோ குளோபுலின் : சில நோய்களின் போது இரத்தத்தில் இயல்புக்கு மீறிய அளவில் புரதங்கள் அடங்கியிருத்தல். இவை தாழ்ந்த வெப்பநிலையில் கரைவதில்லை. இதனால் விரல்கள், பாதங்கள் போன்ற சிறிய இரத்த நாளங்களில் தடை ஏற்படுகிறது.
cryopexy : குளிர்முறைப் பாது காப்பு; குளிர்பொருத்தல் : தாழ்ந்த வெப்பநிலை உண்டு பண்ணும் முறைகள் பற்றிய ஆய்வு.
cryophake : உறைமுறைப் புரை நீக்கம் : உறையவைக்கும் முறை மூலம் கண்ணில் புரையை நீக்குதல்.
cryoprecipitate : குளிர்நிலை வீழ் படிவு : குருதி நீரிலிருந்து கிடைக்கும் கரையக்கூடிய ஒரு பொருள். இது குளிர்விக்கும் போது வீழ்படிவாகக் கிடைக்கிறது. இதில் காரணி-VIII மிகுதியாக இருக்கிறது.
cryopreservation : குளிர்நிலைப் பாதுகாப்பு : மிகவும் தாழ்ந்த வெப்பநிலையில் பெரும்பாலும் திரவ நைட்ரஜனில் உயிரணுக்களைப் பாதுகாத்தல்.
cryoprobe : உறை ஆய்வுக் கருவி; குளிரூட்டுக் கருவி : உயிர்ப்பொருள் ஆய்வுக்குப் (biopsy) பயன்படும் கருவி. இது, திரவ நைட்ரஜன் கருவியுடன் இணைக்கப்பட்ட நெகிழ்திறனுடைய உலோகக் குழாய் ஆகும். இதன் முனைகள் பல்வேறு அளவுகள் உள்ளன.இந்த முனையை -180°C வரைக் குளிர்விக்கலாம்.
cryoprotein : குளிர்நிலைப்புரதம் : ஒரு கரைசலைக் குளிர்விக்கும் போது வீழ்படிவாகப் படிந்து, சூடாக்கும்போது மீண்டும் கரைகிற ஒரு புரதம்.
cryostat : தாழ் குளிர்சாதனம் : உறைநிலைக்கும் குறைந்த வெப்பநிலையில் செயற்படக் கூடிய குளிர்சாதனம்.
cryosurgery : உறை அறுவை மருத்துவம்; குளிரூட்ட அறுவை முறை; குளிர் அறுவை : நோயுற்ற திசுக்களை அகற்றுவதற்குத் தாழ்ந்த வெப்ப நிலையில் நடத்தப்படும் அறுவை மருத்துவம். இதில் கத்திக்குப் பதிலாக உறை ஆய்வுக்கருவி பயன்படுத்தப்படுகிறது.
cryothalamectomy : குளிர் நிலை அறுவை மருத்துவம் : அபரிமிதக் குளிர்ச்சியை பயன்படுத்தி மூளை நரம்பு முடிச்சின் ஒரு பகுதியை அழித்தல்.
cryotherapy : குளிர் மருத்துவம் : குளிர்ச்சியைப் பயன்படுத்தி நோய்களைக் குணப்படுத்தும் முறை.
cryptogenic அறியாத நோய்க் காரணம்; கானல் கரு.
cryptorchism : அண்ட இறக்கமின்மை; இறங்கா விரை; மறை விரை :உயிரின விதைப்பையினுள் (அண்டகோசம்), விதை (அண்டம்) இறங்காமலிருக்கிற ஒரு வளர்ச்சிக் குறைபாடு. விதைகள் அடிவயிற்று அல்லது தொடை அடிவயிற்று இணைப்புக் குழாயிலே இருந்து விடுகின்றன.
cryptosporidiosis : கடும் வயிற்றுப்போக்கு : கடுமையான வயிற்றுக் கழிச்சலுடனும், அடி வயிற்றுத் தசைச் சுரிப்புடனும், காய்ச்சலுடனும் உண்டாகும் வயிற்றுப்போக்கு நோய். இது கிரிட்டோஸ் போரிடியம் என்னும் ஒரணுக் கிருமியினால் உண்டாகிறது.
cryptosporidium : கிரிப்டோஸ் போரிடியம் : மனிதர்களிடமும் வீட்டு விலங்குகளிடமும் குடலில் காணப்படும் கோளவடிவ ஒரணுக் கிருமி. இது காய்ச்சல், கடும் வயிற்று வலியுடனான வயிற்றுக் கழிச்சலை உண் டாக்குகிறது.
crystalline : பளிங்குப் பொருள் : 1. பளிங்கு போன்று தெளிவான ஒளி ஊடுருவக்கூடிய பொருள். 2. பளிங்குப் பொருள்கள் தொடர்புடைய. crystalluria : பளிங்கு பொருள் கழிவு : பளிங்கு போன்ற பொருள்கள் வெளியேறுதல்.
crystal violet : பளிங்கு ஊதா; படிக ஊதா : பிரகாசமான ஊதா நிறமுடைய, நச்சுத்தடை அணிலின் சாயம். புண்கள், தோல் நோய்கள் ஆகியவற்றுக்கு 0.5% கரைசலாகப் பயன்படுகிறது.
crystalline : பளிங்கு; படிகம் படிக : ஒளி எளிதில் ஊடுருவக் கூடிய, படிகம் போன்ற அமைப்புடைய அமைவுகள். விழித் திரைப்படலத்தின் முன்புறமுள்ள முட்டைவடிவமுள்ள குமிழ். ஒளி எளிதில் ஊடுருவக் கூடிய கண்முகப்புக் குமிழ் எனப்படும்.
cubital : முழங்கை சார்ந்த : முன் கை எலும்பு அல்லது முழங்கை தொடர்பான.
cubital tunnel syndrome : முழங்கை எலும்புப்புழை நோய் : முழங்கையில் முன்கை எலும்பில் ஏற்படும் புழை. இதனால் வலி, மரத்துப் போதல், பின்னர் தசை நலிவு ஏற்படும்.
cuirass : செயற்கைச் சுவாசக் கருவி; மார்புக்கவசம் : செயற் கையாகச் சுவாசிப்பதற்காக உடலில் கவசம் போல் பொருத்தப்படும் ஒர் எந்திரச் சாதனம்.
culdoscopy : உள்ளுறுப்புக் காட்சிக் கருவி; அல்குல் வழி இடுப்புக் குழி நோக்கல் : உடலின் உட்புறம் காண உதவும் கருவி. இது யோனிக் குழாய் வழியாகச் செலுத்தப்படுகிறது.
culture : நுண்ணுயிர் வளர்ப்பு; பண்ணை; வளர்மம் : நுண்ணு யிரிகளில் செயற்கையான ஊடகங்களில் பொருத்தமான சூழ்நிலைகளில் வளர்த்தல்.
cumulative action : திரள் வினை; குழுமிய செயல்; குவிந்த; தொடர் சேர்மை : மெதுவாக வெளியேறும் மருந்தின் வேளை அளவினை அடிக்கடிக் கொடுப்பதால், அதன்வினை அதிகரிக்கிறது. இதனால் உடலில் மருந்து திரள்கிறது: நச்சு அறிகுறிகள் திடீரெனத் தோன்றுகின்றன. இத்தகைய திரள் வினைபுரியும் மருந்துகளுக்கு பார்பிட்டுரேட், ஸ்டிரைக்னின், பாதரச உப்புகள் ஆகியவை எடுத்துக்காட்டுகள்.
cuneus : ஆப்பு எலும்பு : பின் உச்சிமண்டை எலும்பு, குதிமுள் போன்ற பிளவுகள் சூழ்ந்த மூளைக் கோளங்களின் இரு பக்கங்களிலுள்ள புறமடல்.
cuniculus : புறத்தோல்வளை : புறத்தோலிலுள்ள சிரங்குப் பூச்சியின் வலை.
cuprophane : செல்லுலோஸ் சவ்வு : இரத்தக் கலவைப் பிரிப்பில் பயன்படுத்தப்படும் ஒரு செல்லுலோஸ் சவ்வு.
cupping : குருதி வாங்குதல்; கிண்ணக்குழி : காற்று நீக்கப்பட்ட கண்ணாடிக் குமிழ் உதவியால் குருதி வாங்குதல். cupping-class : இரத்த உறிஞ்சு கருவி : காற்று நீக்கப்பட்ட கண்ணாடிக் குமிழ் மூலம் இரத்தம் உறிஞ்சும் கருவி.
cupula : கிண்ண அடைப்பு : அரை வட்ட மென்குழல்களின் கடைப் பகுதியை அடைத்துக்கொள்ளும் கிண்ண வடிவ அமைப்பு.
cupulometry : ஊடு தாய்க் குழாய்ச் சோதனை : ஊடு தாய்க் குழாய் செயற்படுவதைச் சோதனை செய்யும் முறை. இதில் நோயாளியை ஒரு சுழல் நாற்காலியில் உட்கார வைத்து வேகமாகச் சுழற்றப்படுகிறது. சுழற்சிக்குப் பிந்திய தலைச் சுற்றலும், விழி நடுக்கமும் வரைபடத்தில் பதிவு செய்யப்படுகின்றன.
curare : ஊக்க அழிவு நஞ்சு; தாவர நச்சுச்சாறு : அரளி போன்ற தென் அமெரிக்கச் செடியின் வேர் வகையிலிருந்து எடுக்கப்படும் கொடிய நஞ்சு வகை.
curarine : அயர்வு நீக்க மருந்து : வேர் வகையிலிருந்து எடுத்து அறுவை மருத்துவத்தில் தசைகளுக்கு அயர்வு அகற்றப் பயன் படுத்தப்படும் கொடிய நச்சு மருந்து.
cure : குணப்படுத்துதல் : 1. நோய் நீக்குதல்; குணமடையச்செய்தல். 2. மீண்டும் உடல் நலம் பெறச்செய்தல். 3. ஒரு நோயைக் குணப்படுத்துவதில் பயனுள்ள மருந்து.
curer : நோய் நீக்குநர் : குணமாக்குபவர் ; மருத்துவர்.
curettage : சுரண்டு மருத்துவம்; வழித்தெடுத்தல்; சுரண்டுதல்; திருகியம் : உட்குழிவிலுள்ள மிகையான அல்லது ஆரோக்கிய மற்ற திசுவினை சுரண்டு கருவியினால் சுரண்டி எடுத்தல்.
curette : சுரண்டு கருவி; கருப்பை வழிப்பி; சுரண்டி : உட்குழிவுகளி லுள்ள ஆரோக்கியமற்ற திசுக்களைச் சுரண்டி எடுப்பதற்கு அறுவை மருத்துவர் பயன் படுத்தும் சிறிய சுரண்டு கருவி.
curettings : சுரண்டு பொருள் : உட்குழிவுகளிலிருந்து சுரண்டி எடுக்கப்பட்ட பொருள். இது நோயினைக் கண்டறிவதற்காகப் பரிசோதனைக்கு அனுப்பப்படுகிறது.
curie : கியூரி : கதிர்வீச்சு அலகு. ஃபிரெஞ்சு விஞ்ஞானிகள் பியர் கியூரி, மேரி கியூரி ஆகியோரின் பெயரால் அழைக்கப்படுகிறது.
curling's ulcer : சிறுகுடல் புண் : பரவலான தீப்புண் அல்லது ஆவிப்பொக்குளங்கள் காரணமாக, இரைப்பையில், அல்லது முன் சிறுகுடலில் உண்டாகும் சீழ்ப்புண்.
curvicastate : வளைவு விலா எலும்பு : வளைந்த விலா எலும்புகளுள்ள.
curvidentate : வளை பல் : வளைவான பல். cushing's disease : பருமன் நோய் : கபச் சுரப்பியில் ஒரு கட்டி காரணமாக அளவுக்கு மீறிக் கார்ட்டிசோல் உற்பத்தியாவதன் விளைவாக அரிதாக ஏற்படும் மட்டுமீறிய உடல் பருமன். இது பெரும்பாலும் பெண்களுக்கு ஏற்படுகிறது.
cushing's reflex : நாடித்துடிப்பு வீழ்ச்சி : இரத்த அழுத்தம் அதி கமாகி, நாடித்துடிப்பு வீழ்ச்சியடைதல். இது மூளைப் பகுதியில் நைவுப்புண் காரணமாக இது உண்டாகிறது.
cushing's syndrome : குஷிங் நோய் : அண்ணீரக மிகையணு வளர்ச்சி சார்ந்த கபத்தினால் உண்டாகும் ஒரு நோய். இதில் வெளிர் முகம், பைத்தியம், முகப்பரு, குருதிமிகை, இடுப்பு பருமன், மிகை அழுத்தம், நிறமிக் கோடுகள், எலும்பு மெலிவு, வயிற்றுப்புண், மாத விடாய்கோளாறு, காயம் எளிதில் குணமாகாதிருத்தல், எளிதில் நோய் தொற்றுதல் போன்றவை உண்டாகும்.
cusp : பற்குவடு; குமிழ்; முனை; கதுப்பு இதழ் : பல்லின் நுனி போன்ற முனைப்பகுதி.
cutaneous : தோல்சார்ந்த; தோல் உணர்வு; சரும : உடல் தோல் சார்ந்த.
cutdown : சிரைப்பிளப்பு : நரம்பு வழியாகத் திரவங்களை அல்லது மருந்துகளைச் செலுத்துவதற்குக் குழாய் கருவியை அல்லது ஊசியைச் செருகுவதற்காக ஒரு சிரையைப் பிளத்தல்.
cuticle : மேல்தோல்; புறத்தோல்; சிறுசருமம்; மீந்தோல் : நகத்தைச் சுற்றியுள்ளது போன்ற தோலின் மேலீடான புறத்தோல்.
cutireaction : தோல் அழற்சி : தோலில் ஏற்படும் ஒரு வீக்கம் அல்லது எரிச்சல்.
cutis : மெய்த்தோல் : தோல்; மேல்தோல், உள்தோல் அடங்கிய உடலை முடியுள்ள காப்புக் கவசம்.
cyanhaemoglobin : சயான ஹேமோகுளோபின் : சயனைடு நஞ்சூட்டத்தில் நீலமெத்திலீன் உட்செலுத்திய பிறகு உண்டாகும் சயனைடு மற்றும் மெத்தோ குளோபின் கலந்த ஒரு கூட்டுப் பொருள்.
cyanobacteria : சயானோபாக்டீரியா : பாக்டீரியா அடங்கிய பச்சையம்.
cyanocobalamin : சயானோகோ பாலமின் : ஈரல், மீன், இறைச்சி, முட்டை ஆகியவற்றில் காணப்படும் வைட்டமின் B, இரத்தச் சிவப்பணுக்கள் முதிர்ச்சியடைவதற்கு இது தேவைப்படுகிறது.
cyanophil : சயானோபில் : கரைப்பட்டதும் நீலநிறமடையும் நீர் உயிரணு.
cyanopsia : சயானோப்சியா : எல்லாப் பொருள்களும் நீலநிற மாகத் தோன்றும் ஒரு கோளாறு. கண்புரை அகற்றிய பிறகு தற்காலிகமாக இது ஏற்படலாம்.
Cyanosis : தோல் நீலம்; நீல வேற்றம்; நீலத்தன்மை; நீலம் பூரித்தல்; நீலமை : ஆக்சிஜன் சரிவர ஊட்டம் பெறாத குருதி சுழல்வதனால் தோல் நீல நிறமாகக் காணப்படும் நோய்.
cybernetics : தண்ணாள்வியல் : 1. கணிகளையும் நரம்பு மண்ட லத்தையும் ஒப்பாய்வு செய்தல். 2. கட்டுப்பாட்டு மற்றும் செய்தித் தொடர்பு பற்றிய அறிவியல்.
cyclamates : சைக்ளாமேட்ஸ் : சைக்ளாமிக் அமிலத்தின் உப்பு. இது சர்க்கரையைப் போல் 30 மடங்கு இனிப்புடையது. வெப்பத்தில் உறுதியாக இருக்கக் கூடியது. இது புற்று நோய் உணடாக்கக் கூடியது என ஐயுறப்படுவதால் உணவுப் பொருள்களில் சேர்க்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
cyclandelate : சைக்ளாண்டிலேட்; குருதிநாள விரிவகற்சி மருந்து : குருதி நாள விரிவகற்சி செய்கிற மருந்து நரம்பு தளர்த்து மருந்து.
cyclical vomiting : காலமுறை வாந்தி; தொடர்வாந்தி; சுழல் வாந்தி :குழந்தைகளுக்குக் கால முறையில் ஏற்படும் நோய்.
cyclimorph 10 : சைக்ளிமார்ஃப் 10 : வாந்தி, குமட்டல் இல்லாமல் நோவு தீர்ப்பதற்காக ஊசிமூலம் செலுத்தப்படும் மருந்து. இதன் மி.லி கரைசலில் 10 மி.கி மார்ஃபின் டார்ட்ரேட்டும், 50மி.கி. சைக்ளிசிங் டார்ட் ரேட்டும் அடங்கியிருக்கும்.
cyclitis : கண்படல வீக்கம்; விழிக் கருத்திரை அழற்சி : பின்புற விழி வெண்படலத்திலுள்ள வெண் உயிரணுக்களின் சிறு சிறு தொகுதிகள் படிவதால் உண்டாகும் கண்படல வீக்கம். இது பெரும்பாலும், விழித்திரைப் படலத்தில் ஏற்படும் வீக்கத்துடன் சேர்ந்து உண்டாகிறது.
cyclizine : சைக்ளிசின் (எதிர் விழுப்புப் பொருள்) : ஹிஸ்டமின் எனும் விழிப்புப் பரவிச் செயலாற்றாது தடுக்கும் மருந்து. ஒவ்வாமைக்கு எதிர் மருந்து. வாந்தியை கட்டுப்படுத்தும்.
cyclobarbitone : சைக்ளோபார் பிட்டோன் : உறக்கம் வருவது தாமதமாகும்போது பயன்படுத் தப்படும், குறுகிய காலம் செயற்படும் பார்பிட்ரேட் மருந்து.
cyclochoroiditis : கண்கரும்படல அழற்சி : கண்ணிமையும், கண் கரும்படலமும் வீக்கமடைதல்.
cyclocryotherapy : வெள்விழி ஆய்வு : கண்விழி விறைப்பு நோயின்போது கண்ணிமைப் பகுதி அருகிலுள்ள புறச்சவ்வில் ஒர் உறை ஆய்வு கருவியைச் செலுத்துதல். cyclodialysis : கண்வாதச் சவ்வூடு பிரிப்பு : கண்விரி விறைப்பு நோயில் கண்கூட்டினுள் அழுத்தத்தைக் குறைப்பதற்குப் புற அறைக்கும் கண் கரும் படலத்துக்குமிடையில் ஒரு தொடர்பை ஏற்படுத்துதல்.
cyclodiathermy : அகமின் வெப்ப மருத்துவம் : கண்விழி விறைப்பு நோய்ச்சிகிச்சையில் கண்ணிமையில் அகமின் வெப்ப மூட்டு தலைப் பயன்படுத்துதல்.
cyclogy : சைக்ளோஜில் : சைக்ளோப்பெண்டோலேட் ஹைட்ரோ குளோரைடு என்ற மருந்தின் வணிகப் பெயர்.
cycloid : நெறிவட்டம் : 1. ஒரு வட்டத்தை ஒத்திருத்தல். 2. அணுக்களின் ஒரு வளையம். 3. மனப்போக்கில் குறிப்பிட்ட மாறுபாடு.
cyclopentolate hydrochloride : சைக்ளோபென்டோலேட் ஹைட்ரோ குளோரைடு : முறுகுதசை வேதனையைத் தணிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு மருந்து.
cyclophoria : கண்சுழற்சி : சாய்வான தசைகளின் பலவீனம் காரணமாக கண்கள் அவற்றின் முன்பின் அச்சினைச் சுற்றிச் சுழலும் போக்கு.
cyclopia : ஒற்றைக்கண் பார்வை நோய் : வளர்ச்சியின்போது இரு கண்களின் சுழற்சியும் ஒருங்கிணைந்து ஒற்றைக்கண் பார்வை உண்டாதல்.
cycloplegia : கண்வாதம் : கண் தசைகளில் ஏற்படும் வாதம்.
cycloplegics : கண் வாத மருந்து; சூழலி வாதம் சார்ந்த : கண் தசையில் வாதமுண்டாக்கும். ஆட்ரோப்பின் (ஹாம்ட்ரோப்பின்), ஸ்கோப்போலாமைன், லாக்செசின் போன்ற மருந்துகள். கருவிழி மையப் பாப்பா எனப்படும் பாவை துவாரத்தைக் குறுக்கவும் விரிவாக்கவும் செயல்படும் தசைகளை இயங்காமல் செய்யும் மருந்து.
cyclopropane : சைக்ளோப்ரோப்பேன் : மயக்க மருந்தாகப் பயன் படுத்தப்படும் வாயு. எளிதில் தீப்பற்றக்கூடியது. இதைப் பயன்படுத்துவது இன்று பெரும்பாலும் நிறுத்தப்பட்டுவிட்டது.
cyclops : நெற்றிக்கண் : 1. நெற்றியில் மட்டும் ஒற்றைக்கண்ணு டைய ஒர் அரக்கப் பிராணி. 2. கருவில் உண்டாகும் ஒற்றைக்கண் கோளாறு.
cycloserine : சைக்ளோசெரின் : பல நுண்ணுயிரிகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும். நோய் நுண்ணுயிரிகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும். நோய் நுண்மத் தடைமருந்து.
cyclosporin : சைக்ளோஸ் போரின் : நோய்த்தடைக் காப்பு மருந்து. இது நோய் எதிர்ப் பொருள்கள் உற்பத்தியாவதைத் தடைசெய்வதில், காசநோய்க் கூட்டு மருந்துகளுடன் சேர்த்துக் கொடுக்கப்படுகிறது.
cyclothymia : ஊசல் மனநிலை; சுழல் உள்ளம் : பெரும் உற்சாகத் திற்கும் சோர்வுக்கும் மாறி மாறி வரும் மனநிலை.
cyclotomy : கண்பாவை அறுவை மருத்துவம் : கண்விழி விறைப்பு நோயைக் குணப்படுத்துவதற்கான அறுவைச் சிகிச்சை, கண்ணிமையில் கீறல் ஏற்படுத்தி இது செய்யப்படுகிறது.
cyclotron : சைக்ளோட்ரான் : கதிரியக்க ஓரகத் தனிமங்களைத் (ஐசோடோப்) தயாரிப்பதற்கான ஒரு கருவி.
cyesis : கருப்பம் (சூல்); கருவுறல் சூல் : ஒரு பெண் கருவுற்றிருக்கிறாள் என்பதைக் காட்டும் அறிகுறிகள்.
cylindroma : குருதிக் குழாய் கட்டி; உருளைப்புற்று : வியர்வைச் சுரப்பி, உமிழ்நீர்ச் சுரப்பி போன்றவற்றின் குருதிக் குழாய் உள்வரிச் சவ்வில் ஏற்படும் கட்டி.
cylin : சைல்லின் : கறுப்புத்திரவ வகையைச் சேர்ந்த நோய்த் தொற்றுத் தடுப்பு மருந்தின் வணிகப் பெயர்.
cynomel : சைனோமெல் : லியோத்தை ரோமைன் என்ற மருந்தின் வாணிகப் பெயர்.
cyproterone : சைப்ரோட்டெரோன் : ஆண்பால் இயக்கு நீர்மத்தைக் குறைக்கும் மருந்து. இது மட்டுமீறிய பாலுணர்வினைக் குறைப்பதற்குப் பயன் படுத்தப்படுகிறது.
cyrtometer : வளைவு அளவு மானி : உடலின் வளை பரப்புகளை அளவிடுவதற்கான ஒரு கருவி.
cyst : நீர்க்கட்டி; நீர்ப்பைமுண்டு; பந்து; திசுப்பை : உடலிலுள்ள கழிவுநீர்களைக் கொண்ட பை போன்ற கட்டி.
cystadeno carcinoma : சுரப்பிக் கட்டி : சுரப்பி மேல் திசுவிலிருந்து உண்டாகும் உக்கிர வேகக் கட்டி
cystadenoma : சுரப்பி நீர்க்கட்டி; பந்துக் கோளப் புத்து : சுரப்பித் திசுக்களில் ஏற்படும் நீர்க்கட்டி போன்ற வளர்ச்சி. பெண்களின் மார்பகத்தில் இது ஏற்படக் கூடும்.
cystalgia : சிறுநீர்ப்பை நோவு; சிறுநீர்ப்பை வலி : சிறுநீர்ப்பையில் ஏற்படும் வலி.
cystathioninuria : தயோனின் மிகுதிக்கோளாறு : இது ஒரு பரம்பரை நோய். இது சுரப்பித் தயோனினை வளர்சிதை மாற்றம் செய்யும் திறனைக் குறைக்கிறது. இதனால் இரத்தத்திலும், திசுவிலும், சிறுநீரிலும் தயோனின் அளவை அதிகரிக்கிறது. இது மனக்கோளாறுடன் தொடர்பு உடையது.
cysteamine : சிஸ்டியாமின் : ஈரல் சேதத்தைக் குணப்படுத்த நரம்பு வழி ஊசிமூலம் செலுத்தப்படும் மருந்து.
cystectomy : சிறுநீர்ப்பை அறுவை மருத்துவம் : சிறுநீர்ப்பையின் ஒரு பகுதியை அல்லது அதை முழுவதுமாக அகற்றுவதற்குச் செய்யப்படும் அறுவை மருத்துவம்.
cysteine : சிஸ்டைன் : கந்தகம் அடங்கியுள்ள ஓர் அமினோ அமிலம். சீரணத்தின்போது புரதங்களைச் சிதைப்பதால் இது உற்பத்தியாகிறது.
cystic : சிறுநீர்ப்பைக்குரிய : பித்தப்பைக்குரிய.
cysticercosis : தோலடிக்கட்டி : எலும்புத்தசை, மூளை, தோலடித் திசு ஆகியவற்றில் நாடாப் புழுவின்-முட்டைப் புழுவின் உறையினால் உண்டாகும் நோய். இது தோலுக்கடியில் பட்டாணி போன்ற உருண்டைக் கட்டிகளை உண்டாக்கும். இழுப்பு நோயையும் ஏற்படுத்தும்.
cysticercus : முட்டைப்பருவ குடற்புழு : குடற்புழுவின் முட்டைப் புழுப்பருவம். இது மண்டையோட்டுத் தசைகளிலும் மூளையில் திரண்டு, காக்காய் வலிப்பு நோயை உண்டாக்குகிறது.
cystic fibrosis : மிகுவியர்வைச் சுரப்பு : ஐரோப்பாவிலுள்ள காக்கசஸ் மலைப்பகுதியிலுள்ள வெள்ளை இமைகளுக்குப் பொதுவாக ஏற்படும் ஒரு மரபு நோய். இந்நோய் கண்டவர்களுக்கு புறத்தோல் சுரப்பிகளில் அளவுக்குமீறி சுரப்பு நீர் சுரக்கும். கனமான சளி, உள் உறுப்புச் சுரப்பிகளில் தடை உண்டாக்கும். அளவுக்கு அதிகமாக வியர்வை சுரந்து வியர்வையிலுள்ள குளோரைடு அளவை அதிகரிக்கும்.
cystine : சிஸ்டைன் : சீரணம் நடைபெறும்போது புரதங்கள் சிதைவதனால் உண்டாகும் அமினோ அமிலம் அடங்கிய ஒரு கந்தகம். இது சிஸ்டோனின் இரு மூலக்கூறுகளாக எளிதாகப் பகுக்கப்படுகிறது.
cystionsis : சிஸ்டைன் படிவு நோய் : படிக சிஸ்டைன் உடலில் படிகிற ஒரு வளர்சிதை மாற்றக் கோளாறு. இது மரபாக வரும் நோய். இந்நோய் கண்டவர்களுக்குச் சிறுநீரில் சிஸ்டைனும், பிற அமினோ அமிலங்களும் சுரக்கும்.
cystinuria : சிறுநீர் சிஸ்டைன் : சிறுநீரில் சிஸ்டைனும், பிற அமினோ அமிலங்களும் சுரக்கும் ஒரு வளர்ச்சிதை மாற்ற நோய். இது சிறுநீரகக் கல் ஏற்படக் காரணமாகிறது.
cystitis : சிறுநீர்ப்பை அழற்சி; திசுப்பை அழற்சி : சிறுநீர்ப்பையில் வீக்கம் உண்டாதல். பொதுவாகப் பாக்டீரியாவினால் இது ஏற்படுகிறது. பெண்களின், முத்திர ஒழுக்குக் குழாய் குறுகலாக இருப்பதால், பெரும் பாலும் பெண்களுக்கே இது ஏற்படுகிறது. cystitomy : விழியுறைத் துளை : 1. ஒரு குழிவில் அறுவைச் சிகிச்சை மூலம் துளையிடுதல். 2. விழியாடி உறையினுள் துளையிடுதல்.
cystocele : சிறுநீர்ப்பைச் சரிவு; அல்குலில் சிறுநீர்ப்பை பிதுக்கம் : சிறுநீர்ப்பையின் பிற்பகுதிச் சுவர், யோனிக்குழாயின் முன்புறச் சுவர் மீது சாய்ந்திருத்தல்.
cystocoete : சிறுநீர்க் குழாய் இறக்கும் : சிறுநீர்ப்பையினை யோனிக்குழாயினுள் இறங்கி விடுதல்.
cystoelytroplasty : சிறுநீர்ப்பை-யோனிக் குழாய் புரை அறுவை : சிறுநீர்ப்பை-யோனிக்குழாய் புரையோட்டினை அறுவைச் சிகிச்சை மூலம் சீர்செய்தல்.
cystography : சிறுநீர்ப்பை ஊடு கதிர்ச்சோதனை; சிறுநீர்ப்பை வரைவியல் : சிறுநீர்ப்பையை ஊடுகதிர் படமெடுப்பு மூலம் பரிசோதனை செய்தல்.
cystojejunostomy : சிறுகுடல் நீர்க்கட்டி அறுவைச் சிகிச்சை : இடைச்சிறுகுடலுடன் இணைந்து இருக்கும் நீர்க்கட்டியை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றுதல்.
cystolithectomy : சிறுநீர்ப்பைக் கல் அறுவை : ஒரு சிறுநீர்ப்பையின் சுவரில் துளையிட்டு அதிலுள்ள கல்லை அகற்றுதல்.
cystolithiasis : சிறுநீர்ப்பைக்கல் : சிறுநீர்ப்பையில் கல் அல்லது கற்கள் இருத்தல்.
cystology :உயிர்மவியல் : உயிர்மங்களைப் பற்றி ஆயும் உயிரியல் பிரிவு.
cystolysis : உயிர்மக் கூறுபாடு.
cystometer : சிறுநீர்ப்பை ஆய்வுமானி : சிறுநீர்ப்பை செயற்படும் முறையை ஆராய்ந்தறிவதற்கான ஒரு சாதனம். இது சிறுநீர்ப்பையின் கொள்ளளவு, உள்அழுத்தம், எச்சச்சிறுநீர் ஆகியவற்றை அளவிடுகிறது.
cystometer : சிறுநீர்ப்ப்பை அழுத்தமானி; சிறுநீர்ப்பை அளவி : சிறு நீர்ப்பையில் பல்வேறு நிலைகளில் அழுத்தத்தை அளவிடுவதற்கான கருவி.
cystometry : சிறுநீர்ப்பை அழுத்தவியல்; சிறுநீர்ப்பை அளவு : சிறு நீர்ப்பையில் பல்வேறு நிலைகளில் அழுத்த மாறுபாடுகள் குறித்து ஆராய்தல்.
суstoреху : சிறுநீர்ப்பைப் பிணைப்பு : பித்தப்பையை அல்லது சிறுநீர்ப்பையை அடி வயிற்றுச்சுவற்றுடன் அல்லது பிற ஆதாரப் பகுதிகளுடன் அறுவைச் சிகிச்சை மூலம் இணைத்தல்.
cystoplasty : சிறுநீர்ப்பை அறுவை மருத்துவம்; சிறுநீர்ப்பை சீரமைப்பு; சிறுநீர்ப்பை அமைப்பு : சிறுநீர்ப்பைக் கோளாறினை அறுவைச் சிகிச்சை மூலம் சீர்படுத்துதல்.
cystopyelitis : சிறுநீர்ப்பை அழற்சி : சிறுநீர்ப்பையும் சிறுநீரக இடுப்புக் குழியும் வீக்க மடைதல்.
cystoscope : சிறுநீர்ப்பை உட்புற ஆய்வுக்கருவி; சிறுநீர்ப்பை நோக்கி; சிறுநீர்ப்பை உட்காட்டி : சிறுநீர்ப்பையின் உட்புறத்தை ஆராய்வதற்கான கருவி.
cystoscopy : சிறுநீர்ப்பை உட்புற ஆய்வு : சிறுநீர்ப்பையின் உட் புறத்தைச் சிறுநீர்ப்பை உட்புற ஆய்வுக்கருவிமூலம் ஆராய்தல்.
cystotomy : சிறுநீர்ப்பை உள் அறுவை; சிறுநீர்ப்பை அகற்றல்; சிறுநீர்ப்பைத் திறப்பு : சிறுநீர்ப் பைக்குள் செய்யப்படும் அறுவை மருத்துவம்.
cystourethritis : சிறுநீர் குழாய் அழற்சி : சிறுநீர்ப்பை, மூத்திர ஒழுக்குக் குழாய் ஆகியவற்றில் ஏற்படும் வீக்கம்.
cystourethrography : சிறுநீரக ஊடுகதிர்ப்படம் : கதிரியக்க ஒளி ஊடுருவுப் பொருள் மூலமாகச் சிறுநீர்ப்பையையும், சிறுநீர்க் குழாயையும் ஊடுகதிர்ப் படம் எடுத்தல்.
cytamen : சைட்டாமென் : சையானோகோபாலமின் என்ற மருந்தின் வணிகப் பெயர்.
cytrabine : சைட்டாராபின் : டி.என்.ஏ இணைப்பில் குறுக்கிடும் வளர்சிதை மாற்ற மருந்து. இது கடுமையான வெண்குட்டத்தைக் குணப்படுத்தப் பயன்படுத்தப் படுகிறது.
cytodiagnosis : உயிர் நுண்ம நோய் நாடல் : நுண்ணிய உயிர ணுக்களை ஆராய்ந்து நோய்க் காரணங்களைக் கண்டறிதல்.
cytochrome : 1. திசுப்பாய்மத்திலுள்ள குருதிப் புரதத்தின் ஒரு வகை. இது எலெக்டிரானையும் ஹைடிரஜனையும் எடுத்துச் செல்கிறது. 2. மிட்டோக் கோண்டிரியாவில் காணப்படும் சைட்டோக்குரோமும் தாமிர மும் அடங்கிய ஆக்சிடோஸ் என்னும் செரிமானப்பொருள் தொகுதி.
cytogenetics : உயிர் நுண்ம மரபணுவியல் : இயல்பான மற்றும் இயல்புக்கு மாறான இனக் கீற்றுகள் (குரோமோசோம்) பற்றியும், மனிதரிடமும் அவற்றின், நடத்தை முறை குறித்தும் ஆராய்ந்தறியும் அறிவியல்.
cytology : உயிர் நுண்மவியல்; உயிரணுவியல் : உயிர்மங்களைப் பற்றி ஆராயும் உயிரியல்.
cytolysis : உயிர்மக் கூறுபாடு உயிரணு முறிவு; உயிரணு அழிவு : உயிர் நுண்மங்களின் சீர்கேடு. அழிபாடு, சிதைவு, கரைவு முதலியன.
cytoplasm : சைட்டோபிளாசம்; திசுப்பாய்மம்; திசுஉள்பாய்மம் : உயிரணுவியல், கரு மையத்தின் உள்ளடக்கங்கள் நீங்கலாகப் பிற வாழும் பொருள்களின் முக்கிய பகுதியாக அமைந்துள்ள ஒரு சிக்கலான வேதியல் கூட்டுப் பொருள்.
cytosar : சைட்டோசார் : சைட்டாராபின் என்ற மருந்தின் வணிகப் பெயர்.
cytourethroscope : சிறுநீரக ஆய்வுக்கருவி : பின்பக்கச் சிறு நீர்க் குழாயையும் சிறுநீர்ப்பையையும் ஆராய்வதற்கான ஒரு கருவி.
cytochemistry : உயிரணு வேதியியல் : வேதியியல் கூட்டுப் பொருள்கள் உயிரணுவினுள் பகிர்ந்தளிக்கப்படுவதையும், அவற்றின் செயல் முறைகளையும் ஆராய்ந்தறிதல்.
cytodiagnosis : திசுப்பாய்ம நோய் நாடல் : நீர்மங்களிலுள்ள அல்லது கசிவுகளிலுள்ள உயிர் அணுக்களை ஆராய்வதன் மூலம் நோய்க்குண நிலைமைகளைக் கண்டறிதல்.
cytodifferentiation : திசுப்பாய்ம வேறுபாடு : கருமுனை உயிர் அணுக்களில் வெவ்வேறு வகைக் கட்டமைவுகள் உருவாதல்.
cytolysin : சைட்டோலிசின் : ஒரு துணைப்பொருளுடன் சேர்ந்த ஒர் உயிரணுவை அழிப்பதற்கான ஒரு தற்காப்பு மூலம்.
cytomegalic : திசுப்பாய்ம உயிரணு வீக்கம் : திசுப்பாய்ம உயிரணு வீக்கங்களில் காணப்படும் அணு உள்ளடக்கங்களுடன் எடுப்பாகப் பெருக்கமடைந்த உயிரணுக்கள் தொடர்பான.
cytometaplasia : திசுப்பாய்ம மாற்றம் : உயிரணுவின் வடிவமும் செயல்முறையும் மாற்றமடைதல்.
cytometer : திசுப்பாய்ம மானி : உயிரணுக்களை எண்ணி அள விடுவதற்கான ஒரு கருவி.
cytomorphology : உயிரணு ஆய்வியல் : உயிரணுக்களின் கட்டமைப்பினை ஆய்ந்தறிதல்.
cytopathogenic : உயிரணு நோய்க்குணமாற்றம் : உயிரணுக்களில் நோய்க் குணமாறுதல்களை உண்டாக்குவதறகான திறம்பாடு.
cytopathologist : உயிரணு ஆய்வறிஞர் : நோய்களின் உயிரணுக்களை ஆராய்ந்தறிவதில் துறைபோகிய மருத்துவ வல்லுநர்.
cytopathology :உயிரணு நோய் ஆய்வியல் : நோய்க்குண நிலை மைகளை உயிரணு மாதிரிகளை நுண்ணோக்காடி மூலம் ஆராய்வதன் மூலம் ஆராய்ந்து அறிதல் தொடர்பான் சிறப்பு மருத்துவ ஆய்வுத்துறை.
cytopaenia ; உயிரணுக் குறைவு நோய் : இரத்தத்தில் உயிரணுத் தனிமங்களின் எண்ணிக்கை குறைவாக இருத்தல். cytophagy : உயிரணு அழிப்பு : விழுங்கணுக்கள் மூலம் பிற உயிரணுக்களைச் செலுத்துதலும் அழித்தலும்.
cytoproximal : நரம்பணுப்பகுதி : உயிரணுக்கு அருகிலுள்ள நரம் பணுவின் ஒரு பகுதியை குறித்தல்.
cytosine : சைட்டோசின் : நியூக்ளிக் அமிலங்க்ளில் நியூக்ளி யோசைட்ஸ், சிஹ்டைடின், டாக்சிசிஸ்டைடின் ஆகியனவாக அமைகிற ரிபோஸ் அல்லது டிஆக்சிரைபோசுடன் செறிவாக்கம் செய்யப்பட்ட ஒரு பைரிமைடின் ஆதாரப்பொருள்.
cytoskeleton : உயிரணுக் கட்டமைப்பு : உயிரணுக்களின் வடி வத்தைப் பேணி வருகிற ஒர் உயிரணுவின் உள்முகக் கட்டமைப்பு. இது மூன்று வகை இழைமங்களைக் கொண்டது. நுண்இழைமங்கள், நுண்குழாய் இழைமங்கள், இடைநிலை இழைமங்கள்.
cytosol : சைட்டோசால் : மிட்டோக்கோண்டிரியா, ஊன்ம உள் கூழ்ம வலைச் சவ்வு இல்லாத திசு உள் பாய்மம்.
cytostasis : வெள்ளணு திரட்சி : வீக்கம் ஏற்பட்டுள்ள இடத்தில் இரத்த வெள்ளணுக்கள் திரண்டிருத்தல்.
cytostatic : உயிரணுப் பெருக்கத் தடை : உயிரணுக்கள் வளர்வதை யும், பெருக்கமடைவதையும் தடுத்தல்.
cytotoxin : உயிரணுநச்சுப் பொருள்: உயிரணுக்களின் செயற்பாடு களைத் தடுக்கிற அல்லது உயிரணுக்களின் அழிவை உண்டாக்குகிற அல்லது இரண்டையும் விளைவிக்கிற ஒரு தற்காப்பு மூலம் அல்லது நச்சுப்பொருள்.
cytotropism : உயிரணு நகர்வு : 1. ஒரு துண்டு பொருளை நோக்கி அல்லது அதிலிருந்து விலகிச் செல்கிற உயிரணுக்கள். 2. நோய்க்கிருமிகள், பாக்டீரியா அல்லது மருந்துகள் தங்களின் தாக்கத்தை உடலின் ஒரு சில உயிரணுக்களின் மீது செலுத்துகிற போக்கு.
cytozoic : உயிரணு ஒட்டுயிரி : ஒருசில ஒட்டுண்ணிகளைக் குறிக்கிற உயிரணுக்களினுள் வளர்கிற அல்லது அதனுடன் இணைந்துள்ள உயிரி.
cyturia : சிறுநீர் உயிரணு : சிறுநீரில் உயிரணுக்களின் ஏதேனும் ஒரு வகை அடங்கி இருத்தல்.