மருத்துவ களஞ்சியப் பேரகராதி/J
ஜேக்சன் பெயரால் அழைக்கப்படுகிறது. இரு தரப்பானதசைத் துடிப்பு அசைவுகள் ஏற்படும். இந்த அசைவுகள் ஒரு தசைக் குழுமத்தில் தொடங்கி படிப்படியாக அடுத்துள்ள குழுமத்துக்குப் பரவுகிறது. இது காக்காய் வலிப்பு நடவடிக்கை, கட்டளை மூளை மேலுறை மூலமாக வாய், கட்டை விரல், பாதம் ஆகியவற்றுக்கு நகர்வதைக் குறிக்கிறது. இந்தப் பாதிப்பு, சில வினாடிகள் முதல் பல மணிநேரம் வரை மாறுபட்ட காலத்துக்கு நீடிக்கலாம்.
Jackson's membrane : ஜேக்சன் சவ்வு : மேல்நோக்கிய பெருங்குடல் முன்பகுதியிலிருந்து அடிவயிற்றுச் சுவரின் பின் பகுதியிலுள்ள கிடைமட்டப் பகுதிக்குச் செல்லும் மெல்லியபடலம். அமெரிக்க அறுவை மருத்துவ வல்லுநர் ஜேபஸ் ஜேக்சன் பெயரால் அழைக்கப் படுகிறது.
Jackson's rule : ஜேக்சன் விதி : "காக்காய் வலிப்பு ஏற்பட்ட பிறகு, எளிய நரம்புச் செயல் முறைகள், சிக்கலான செயல்முறைகள் விரைவாகப் பழைய நிலைக்கு மீண்டு விடுகின்றன" என்னும் ஜான் ஹங்ளிங்ஸ் ஜேக்சன் வகுத்த விதி.
Jackson's safety triangle sign : ஜேக்சன் பாதுகாப்பு முக்கோணக் குறியீடு : கேடயக் குருத்தெலும் பின் கீழ்முனை கீழேயும் பக்கங்களில் மார்பெலும்புக் கூம்பு முனைத் தசைகளும், உச்சியில் மார்பெலும்பும் மேல் வடுவும் சூழ்ந்த ஒரு முக்கோணப் பகுதி. இந்தப் பகுதியினுள் மூச்சுக் குழாயினைப் பத்திரமாக வைக்கலாம் என்று செவாலியர் ஜேக்சன் விளக்கிக் கூறினார்.
Jackson's syndrome : ஜேக்சன் நோய் : பின் மூளையில் குருதி நாளப்புண் காரணமாக மண்டையோட்டின் 10, 11, 12 ஆகிய நரம்புகள் செயலிழத்தல்.
Jackobaeus operation : ஜெக்கோபேயஸ் அறுவைச் சிகிச்சை : நுரையீரல் ஒட்டிணைவுகளை மார்பு உள்வரிச்சவ்வு ஆய்வுக் கருவி, பின்வழித் தீய்த்தல் மூலம் அகற்றுதல், ஹேன்ஸ் ஜேக்கோ பேயஸ் என்ற சுவீடன் அறுவைச் சிகிச்சை வல்லுநர் பெயரால் அழைக்கப்படுகிறது.
Jacobine : ஜேக்கோபைன் : செனிசியோ ஜேக்கோபியா என்னும் தாவரத்திலிருந்து எடுக்கப்படும் நச்சுக் காரம் இது ஈரலில் திசு நசிவினை உண்டாக்கும்.
Jacobson's nerve : ஜேக்கப்சன் நரம்பு : செவிப்பறை நரம்பு டேனிஷ் உடல் உட்கூறியல். அறிஞர் லட்விக் ஜேக்கப்சன் பெயரால் அழைக்கப்படுகிறது.
Jacobson's organ : ஜேக்கப்சன் உறுப்பு : பெரும்பாலான பாலூட்டிகளில் உள்ள, ஆனால் மனிதரிடம் தொடக்க நிலையில் உள்ள இடைநாசி உறுப்பு. இது நுகர்வுணர்வு ஏற்பிகளைப் போன்றே நெடிகளுக்குச் செயற்படுகிறது. டேனிஷ் உடல்உட் கூறியியல் அறிஞர் லட்விக் ஜேக்கப்சன் பெயரால் அழைக்கப் படுகிறது.
Jacob's membrane : ஜேக்கப் சவ்வு : விழித்திரையிலுள்ள கண் நுண்கம்பிகளும் கூம்புகளும் அயர்லாந்து கண் இயல் வல்லுநர் ஆர்தர் ஜேக்கப் இதனை விவரித்துக் கூறினார்.
Jacob's syndrome : ஜேக்கப் நோய் : ரிஃபோஃபிளேவின் பற்றாக்குறை காரணமாக ஏற்படும் கண் சவ்வு அழற்சி, வாய்வெடிப்பு, அண்டகோசத் தோல் அழற்சி. இதனை அமெரிக்க மருத்துவ அறிஞர் இ.சி. ஜேக்கப் விவரித்துக் கூறினார்.
Jacosta complex : ஜாக்கோஸ்டா மனப்பான்மை : ஒரு தாய் தன் மகன் பாலினக்கவர்ச்சி கொள்ளுதல். கிரேக்கப் புராணத்தில் வரும் ஈடிப்பஸ் கதாபத்திரத்தின் தாய் ஜேக்கோஸ்டா இத்தகைய மனப்பான்மையுடன் இருந்தாள். அவள் பெயரால் இது அழைக்கப்படுகிறது.
jacquemier's sign : யோனிக் குழாய் நீலம் : தொடக்க நிலைக் கருப்பத்தில் யோனிக் குழாய்ச் சவ்வில் காணப்படும் நீலநிறம்.
Jaffe's reaction : ஜாஃப் எதிர்வினை : குருதிநீர்த் தசைப்புரத வினை. இது, ஆக்கலைன் பிக்ரேட் கொண்ட தசைப்புரதத்தின் சிவப்பு வண்ணத்தை அடிப்படையாகக் கொண்டது. ஜெர்மன் வேதியியலறிஞர் மாக்ஸ் ஜாஃப் பெயரால் அழைக்கப் படுகிறது.
Jaggery : வெல்லம் : கரும்புச் சாறிலிருந்து தயரிக்கப்படும் பக் குவப்படுத்தப்படாத சர்க்கரை. இதன் 100 கிராமிலிருந்து 383 கிலோ கலோரி சக்தியும், 11:4 மில்லி கிராம் அயச்சத்தும் கிடைக்கிறது.
Jaipur foot : ஜெய்ப்பூர் பாதம் : மலிவான, குறை எடையுள்ள, நீர்புகாத, முழங்காலுக்குக் கீழே பொருந்தக்கூடிய இணைப்புச் சாதனம். இராஜஸ்தானிலுள்ள ஜெய்ப்பூரைச் சேர்ந்த பி.கே. சேத்தி என்பவர் இதனை வடிவமைத்தார். இது செயல் திறனுடையது. ஒப்பனைப்பொருளாகவும் ஏற்றுக்கொள்ளக் கூடியது. இதன் உதவியாளர் ஒருவர் சிரமமின்றி நடக்கலாம்; ஏறலாம்; உட்காரலாம். Jail bars sign : சிறைக்கம்பிக் குறியீடு : விலா எலும்புகளில் அடர்த்தியைக் காட்டும் மார்பு ஊடுகதிர்ப்படம். இதில் சிறைச் சாலைச் சன்னல் கம்பிகளைப் போன்று எலும்புகள் கிடை மட்டப்பட்டைகளாகத் தோன்றும் எலும்பு நலிவு நோய், அரிவாள் உயிரணுப் பற்றாக்குறை போன்ற நோய்களின்போது காணப்படுகிறது.
jakob-Creutzfeldt disease : ஜேக்கப்-குரூட்ஸ்ஃபெல்ட் நோய் : மனத் தளர்ச்சியினால் ஏற்படும் ஒருவகைப் பைத்தியம்.
Jamaican neuropathy : ஜமாய்க்கா நரம்பு நோய் : வெப்ப மண் டலத்தில் ஏற்படும் இசிப்புத் தசை வாத நோய் உணர்ச்சித் தள்ளாட்டம், பார்வை நரம்பு சூம்புதல், நரம்பு செவிடு ஆகியவை இதனுடன் சேர்ந்து உண்டாகும்.
Jamaican vomiting sickness : ஜமாய்க்கா வாந்தி நோய் : முற்றாத "ஆக்கி" மரப்பழத்திலிருந்து தயாரிக்கப்படும் சாராயத்தில் உள்ள "ஹைப்போகிளை சின்-ஏ" என்னும் பொருளால் உண்டாகும் கடுமையான வாந்தி: சோர்வு; வலிப்பு; குருதிக் குளுக்கோஸ் குறைபாடு.
James fibres : ஜேம்ஸ் இழைமம் : இதய மேலறையை ஏவி முடிச் சுடன் அல்லது "ஹிஸ்" தொகுதியுடன் இணைக்கும் துணைத் தொகுதி. இது நெஞ்சுப்பைத் துடிப்புகளைக் கடத்துவதற்கான வழி. இதனால், இவை மேலறைக் கீழறை முடிச்சினை தவிர்த்துச் செல்கின்றன. இது கீழறையின் தூண்டலுக்கு அனுமதிக்கிறது. இதனால், இதய விரைவுத்துடிப்பு ஏற்படுகிறது. இதனை அமெரிக்க மருத்துவ அறிஞர் டி.என். ஜேம்ஸ் விவரித்தார்.
Jamshed's needle : ஜாம்ஷெடி ஊசி : எலும்பு மச்சையில் துரப் பணத்திசு ஆய்வு நடத்துவதற்கான கருவி.
Jamsen's test : ஜேம்சன் சோதனை : கால்களைக் குறுக்காக வைப்பதற்கு இயலாமை. இதில் மாற்று முழங்கால் மீது கணுக்காலை வைக்க முடியாது போகும். எலும்பு மூட்டு வீக்கத் தின்போது அந்த நிலை உண்டாகிறது. டேனிஷ் அறுவைச் சிகிச்சை வல்லுநர் மர்க்ஜேன்சன் பெயரால் அழைக்கப்படுகிறது.
Janet's test : ஜேனட் சோதனை : கரிம உணர்ச்சியிழப்பை செயல் முறை உணர்ச்சியிழப்பிலிருந்து வேறுபடுத்திக்காட்டுவதற்கான ஒரு சோதனை. ஃபிரெஞ்சு மருத்துவ அறிஞர் பியர் ஜேனட் பெயரால் அழைக்கப் படுகிறது.
Jarotzky's treatment : ஜாசேரட்ஸ்கு மருத்துவம் : குடற்புண்ணுக்குச் சீருணவு மருத்துவ முறை. இதில் முட்டை, பால், ரொட்டி, வெண்ணெய் அடங்கும். இதனை மாஸ்கோ மருத்துவ அறிஞர் அலெக்சாண்டர் ஜாசோட்ஸ்கி வகுத்துரைத்தார். Jatane operation : ஜாட்டேன் அறுவை மருத்துவம் : நுரையீரல் தமனிகள், பெருந்தமனி ஆகியவற்றின் குருதி நாளப்பிணைப்பு.
jaundice : மஞ்சட்காமாலை; மஞ்சனம் : குருதியில் பிலிரூபின் அளவதிகமாவதால் உண்டாகும் நோய். இதனை வேதியியல் முறையில் மட்டுமே கண்டறிய முடியும். தோல் மஞ்சள் நிறமாதல், வெண்விழிப் படலம் மஞ்சள் நிறமாதல், சளிச்சவ்வு மஞ்சளடைதல் ஆகியவை இந்நோயின் அறிகுறிகள்.
Jaundice, infective : தொற்று மாலை.
Jaundice, harmolytic : குருதிச் சிதை மாலை.
Jaundice, hepatic : ஈரல் மாலை.
Jaundice, olestructive : தடை மாலை.
jaws : தாடை : பற்கள் உள்ளிட்ட வாய் எலும்புகள்.
jawbone : தாடை எலும்பு : கீழ்த் தாடை அல்லது மேல் தாடை எலும்பு.
JC virus : ஜே.சி, கிருமி : படிப்படியான வெள்ளையணு மூளை வீக்கம் உண்டாக்கும் கட்டிக் கிருமி.
jectofer : ஜெக்டோஃபர் : அயான் சோர்பிட்டால் கைட்ரிக் அமி லத்தின் வணிகப்பெயர். இது ஊசி வழியாகச் செலுத்தப்படுகிறது.
Jefferson's fracture : ஜெஃபர்சன் முறிவு : கழுத்து முள் எலும்பு வளையத்தில் ஏற்படும் எலும்பு முறி. முக்குளிப்பு விபத்துகளில் பெரும்பாலும் இது உண்டாகும்.
Jehovah's witness : ஜெகோவா சாட்சி : இரத்தத்தை அல்லது இரத்தப் பொருள்களை உட்செலுத்தத் தவறுவதால் எழும் பிரச்சினைகளிலிருந்து மருத்துவர்களை விடுவிக்கத் தனி இசைவு தெரிவித்து நோயாளிகளை கையொப்பமிட்டுக் கொடுத்தல்.
jejunal biopsy : சிறுகுடல் சவ்வு சோதனை : வயிற்று நோயை கண்டுபிடிப்பதற்குப் பயன்படுத்தப்படும் ஒருவகைச் சோதனை. இடைச்சிறுகுடல் சவ்வு சிறிதளவு வெட்டி எடுக்கப்பட்டு அதில் உயிர்ப்பொருள் ஆய்வு செய்யப்படுகிறது.
jejunostomy : இடைச்சிறுகுடல் அறுவை மருத்துவம் : இடைச் சிறு குடலுக்கும் முன் அடிவயிற்றுச் சுவருக்குமிடையில் உண்டாக்கப்பட்ட சூழல் உறுப்பு.
jejunum : இடைச்சிறுகுடல் நடுச் சிறு குடல்; இடைக் குடல் : இலியம் என்ற முற்பகுதிச் சிறு குடலுக்கும் சிறுகுடல் பின் பகுதிக்கும் இடையிலுள்ள சிறு குடலின் பகுதி இது 2.44 மி. நீளமுடையது.
Jello sign : ஜெல்லோ நோய்க் குறி : முதிர்கரு உறுப்பு அசைவு களுடன் உண்டாகும் அண்டகோச ஊசலாட்டம். இது மீயொலி வரைவு மூலம் குழந்தை ஆணா, பெண்ணா என்று அறிய உதவுகிறது.
jelly : கூழ்மம்; இழுது; பாகு; களிம்பு.
Jelly, contracoptive : கருத்தடைக் கூழ்மம்; கருத்தடைக் களிம்பு.
jelly test : பாகுச் சோதனை; கூழ்ம ஆய்வு; இழுதுச் சோதனை : பழைய எலும்புருக்கி நோய் மருந்தின் பாகு வடிவம். இது குழந்தைகளுக்குத் தோளெலும்பு களுக்கிடையில் செலுத்தப்படுகிறது. அந்த இடத்தில் வீக்கம் ஏற்படுமானால், நோய் இருக்கிறது என்று பொருள்.
Jelonet : ஜெலோனெட்; மெழுகுத் துணி : கன்மெழுகு மென் கட்டுத் துணியின் வணிகப் பெயர்.
Jerk : சுருக்கதிர்வு; வெட்டிழுப்பு.
jerky pulse : வெட்டியிழுப்புத் துடிப்பு : குறுகலான இடது கீழறை வெளியேற்றத்தில் காணப்படும் அலை போன்ற துடிப்பு. கடும் இரைப்பைப் பின்னொழுக்கு, உறுப்புப் பெருக்கத் தடை இதயத்தசைக் கோளாறு, மாரடைப்பு ஆகியவற்றில் இது உண்டாகும்.
jet nebulizer : தாரைத் தெளிப்பான் : இது ஒரு ஈரநயப்பூட்டும் சாதனம். இது திரவத்தை மிக நுண்மையான தூசிப்படலத் துகள்களாக மாற்றுகிறது.
jet phenomenon : தாரை நிகழ்வு : ஒரு குறுகலான பேரியம் பத்தி. இதில் ஒர் உணவுக் குழாய் வலை காரணமாக உண்டாகும் இரைப்பை வாயில் சுருக்கத்திலிருந்து தாரையாக வழியும்.
jet ventilation : தாரைக் காற்றூட்டம் : ஈரநயப்புடைய வாயுவை மூச்சுக் குழாயினுள் அடிக்கடி அதிவேகத்தில் இடைவிட்டுச் செலுத்துதல். இவ்விதம் முக்கில் காற்றுப்பட ஊதும்போது கூடுதலாகப் புதிய வாயுவை உட்செலுத்தப்படுகிறது.
jigger : தோல் நோய் ஈ : தோலைத் துளைத்து நோய் உண்டாக்கும் வெப்ப மண்டல ஈ வகை.
jigsaw puzzle cells : திருகு வெட்டுப்புதிர் உயிரணுக்கள் : பல்வேறு வடிவளவிலும் உருவிலும் உள்ள தாறுமாறான கோணல்மானலான உயிரணுக்களை உண்டாக்குகிறது. பரம்பரையாக உண்டாகும் கடுமையான கோளச்சிவப்பணு அழிவில் ஏற்படுவது போன்று செயல்முறைச் சேதம் காரணமாக இது உண்டாகிறது.
jigsaw puzzle turnour : திருகு வெட்டுக் கட்டி : தோலில் ஏற்படும் குருதிக் குழாய்க் கட்டி. இது திகவியல் முறையிலான திசுத் தீவுகளை வெளிப்படுத்தும். இந்தத் திகத் தீவுகளில் பெரிய கருமையமும், புறப் பகுதியில் சிறிய கருமையான கருமையம் உடைய உயிரணுக்களும் அமைந்திருக்கும்.
Job's syndrome : ஜாப் நோய் : நோய்க்காப்புக் குறைபாடு காரணமாகத் தோலில் அடிக்கடி ஏற்படும் நோய். அதிக அளவு குருதி நீர் வடிதல், குறைபாடுடைய பல முனைக் கருவெள்ளணு, ஒற்றைக்கரு உயிரணு, உயிரணு இயக்கம் ஆகியவற்றுடன் தொடர்பு உடையது. விவிலியத்தில் வரும் ஜாப் என்னும் கதாபாத்திரத்தின் பெயரால் அழைக்கப்படுகிறது.
Joffory's sign : ஜாஃப்ரே நோய்க்குறி : கண்கள் திடீரென மேல் நோக்கித் திருப்பி, தலையைக் கீழ்நோக்கிக் குனியும் போது நெற்றியில் சுருக்கம் விழாதிருத்தல். இது கேடயச் சுரப்பி நோயின்போது காணப் படுகிறது. இதனை ஃபிரெஞ்சு மருத்துவ அறிஞர் அலெக்சிஸ் ஜாஃப்ரே என்பவர் விவரித்தார்.
jogger's heel : குதியோட்டக்காரர் பாதம் : குதிகாலை முடி இருக்கும் தடித்த இழைமத் திசுவில் ஏற்படும் எரிச்சல், குதியோட்டக்காரர்களின் குதிகால் முதலில் மேற்பரப்பைத் தொடும் போது இந்த எரிச்சல் உண்டாகிறது.
Johne's disease : ஜான் நோய் : கால்நடை காசநோயினால் கால்நடைகளில் ஏற்படும் குடல் அழற்சி ஜெர்மன் நோய் அறிஞர் ஹென்ரிக் ஜான் பெயரால் அழைக்கப்படுகிறது.
Johnson's method : ஜான்சன் முறை : பல்மருத்துவத்தில் வேர்க் குழிகளை பிலாஸ்டிக் பொருளினால் அடைத்தல்.
John's test : ஜான்சன் சோதனை : சிறுநீர் மாதிரியில் புரதம் இருப்பதைக் கண்டுபிடிக்கும் ஒருமுறை. இதில், ஒருவலுவான டிரினிட்ரோஃபினால் கரைசலை ஊற்றம்போது ஒரு வெண்மையான உறை பொருள் உண்டாகிறது. ஆங்கில மருத்துவ அறிஞர் ஜார்ஜ் ஜான்சன் இதனை விவரிக்கிறார்.
joint : மூட்டு : எலும்புப் பிணைப்பு: முட்டிணைப்பு மூன்று எலும்பு களின் மூட்டு.
joint, amicle : கணுக்கால் மூட்டு .
joint, ball and socket : பந்து கிண்ண மூட்டு.
joint, hinge : கீழ் மூட்டு .
joint, immovable : நிலை மூட்டு .
joint, knee : முழங்கால் மூட்டு .
joint, shoulder : தோள் மூட்டு .
joint, movable : அசை மூட்டு.
jointbreaker fever : மூட்டு முறிவுக் காய்ச்சல் : "ஒ'நியாங் நியாங்" என்னும் காய்ச்சல். Jolle's test: ஜோலஸ் சோதனை : பித்தநீர் நிறமிகள் இருக்கும் போது சிறுநீரில் வண்ணங்கள் தோன்றுதல். இந்தச் சோதனை முறையை ஆஸ்திரேலிய வேதியியலறிஞர் அடால்ஃப் ஜோலஸ் வகுத்தார்.
Jolly's reaction : ஜாலி எதிர் வினை : ஒரு தசையில் மின் தூண்டலுக்குத் துலங்கல் ஏற்படாதிருத்தல். ஜெர்மன் நரம்பியலறிஞர் ஃபிரடரிக் ஜாலி பெயரால் அழைக்கப்படுகிறது.
Jone's nasal splint : ஜோன்ஸ் மூக்குச் சிம்பு : மூக்கெலும்புகளில் ஏற்படும் முறிவுக் கட்டப் பயன்படும் ஒருசிம்பு அமெரிக்க அறுவைச் சிகிச்சை வல்லுநர் ஜான் ஜோன்ஸ் பெயரால் அழைக்கப்படுகிறது.
Jone's test : ஜோன்ஸ் சோதனை : கண்ணிமைப்படலத்திலுள்ள செலுத்தப்படும் ஃபுளுரோசின். இது கண்ணிர் வடிதல் அதிகமாக இருக்கும்போது மூக்கடித் தொண்டையை அடைகிறது.
Joseph disease : ஜோசஃப் நோய் : முன்மூளையின் நரம்பு மண்டல மையம் சீரழிதல், சிறு மூளையின் பல்மையம் சீரழிதல். இந்நோய் பெர்க்கின்சோனிய நோயின் அம்சங்களை உடையது.
joule : யூல் : வேலை ஊக்க ஆற்றலின் அலகு, ஒரு யூல் என்பது, ஒரு கிலோ எடையை ஒரு மீட்டர் தூரத்திற்கு ஒரு நியூட்டன் விசையினால் நகர்த்தும் போது செலவழியும் ஆற்றல் அளவு.
Jourdain's disease : ஜோர்டான் நோய் : பல் ஈறுகளில் ஏற்படும் சீழ்க்கட்டு வீக்கம். ஃபிரெஞ்சு அறுவைச் சிகிச்சை வல்லுநர் ஆன்செல்மே ஜோர்டான் பெயரால் அழைக்கப்படுகிறது.
judgement : பகுத்துணர்கை.
Judkin's coronary arteriography : ஜட்கின் நெஞ்சுப்பைத் தமனி வரைவியல் : தொடைக் குருதிக் குழி வழியாகச் செருகு குழாய் செலுத்தி தமனியை அளவீடு செய்தல். அமெரிக்க ஊடுகதிர்- கதிரியக்க மருத்துவ அறிஞர் ஜட்கின் பெயரால் அழைக்கப்படுகிறது.
jugular : கழுத்துச் : சார்ந்த கழுத்து அல்லது தொண்டை சார்ந்த பெரிய நரம்புகள்.
jugular glomus : கழுத்து நரம்புத்திரள் : உள்கழுத்துச் சிரையின் மேல் குமிழின் குருதிக் குழாய் வெளிப்படலத்திலுள்ள 0.5 மி.மி. அளவுள்ள முட்டை வடிவக் கட்டமைப்பு. இது X ஆவது ix ஆவது மண்டையோட்டு நரம்பு தொடர்புடைய இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட திரள்களைக் கொண்டு இருக்கும்.jumper syndrome : குதிப்பவர் நோய் : உயரத்திலிருந்து குதிக் கும்போது அல்லது விழும்போது ஏற்படும் உணர்வு மழுங்கிய அதிர்ச்சிக் கோளாறு. இதனுடன் சேர்ந்து பன்முக எலும்பு முறிவுகளும் ஏற்படும்.
jumping : குதித்தல் : பல படிகள் துள்ளிக் குதித்தல்.
junction : சேரிடம்.
Jung's method : ஜங் முறை : பகுப்பாய்வு உளவியல். சுவிஸ் உளவியலறிஞர் கார்ல் ஜங் பெயரால் அழைக்கப்படுகிறது.
Jungling's disease : ஜங்கிளிங் நோய் : காச நோயின் தோற்றத்தைக் குறிக்கும் துகள் கழலை. ஜெர்மன் அறுவைச் சிகிச்சை வல்லுநர் ஆட்டோ ஜங்கிளிங் பெயரால் அழைக்கப்படுகிறது.
junk food : கொழுப்பு உணவு . நிறையக் கொழுப்பும் சர்க்கரையும் அடங்கிய உணவு. இதில் சக்கை எதுவும் இராது.
junkfood : அலம்பு உணவு : மானோ சோடியம் கிளட்டா மேட் போன்ற வேதியியல் பொருள்கள் சேர்க்கப்பட்ட அலம்பு உணவு.
junctional tubule : இணைப்பு; நுண்குழல்.
junket : தயிர்க்கட்டி : மேலே பாலேடு கவித்த இனிப்பூட்டிய தயிர்க்கட்டி.
Jurisprudence : சட்டவியல்.
Jurisprudence, medical : மருந்துச் சட்டவியல்.
juvanile : இளம்; இளம் பருவம்; சிறார் : இளமைப் பருவத்துச் சிறப்பியல்பான பருவம்.
juxtangina : தொண்டை வீக்கம்; தொண்டையழல்.
juxta-ephiphyseal vessels : முனைவளரி அணுக்கக் குழல்கள்.
juxtaposition : அணுக்க விருப்பு.
juxtaspinal : முதுகெலும்பு அருகில்.
juxtavasical : சிறுநீர்ப்பை அருகில்.