மருத்துவ களஞ்சியப் பேரகராதி/S

லேக்டோஸ் சர்க்கரை மிக அதிகமாக சுரப்பது.

saccharoid : சர்க்கரை போன்ற பொருள் : சர்க்கரையை ஒத்த சிறு மணித் திரளான பொருள்.

saccharolytic : சர்க்கரைச் சிதைப்பான்; சர்க்கரை முறி : கார்போ ஹைட்ரேட்டுகளைச் (சர்க்கரை) சிதைக்கும் திறனுடைய பொருள்.

sacchromyces : சர்க்கரை நொதி : சர்க்கரையை நொதிக்கச் செய்யும் நொதிப் பொருள் (ஈஸ்ட்). ரொட்டி நொதி, சாராய நொதி ஆகியவையும் இதில் அடங்கும்.

sacchoropine : சேக்கரோபைன் : லைசினின் வளர்சிதை மாற்றத்தில் இடையில் உண்டாவது.

sacchorose : கரும்பு வெல்லம் : கரும்புச் சாற்றிலிருந்து தயாரிக் கப்படும் வெல்லம் (சுக்ரோஸ்).

saccharum : சேக்கரம் : சர்க்கரை.

sacculation : பைபோல் உப்புதல்; பையறை; நுண் பையாக்கம் : பல சிறு பைகள் தோன்றி உப்புதல்.

saccule : சிறுபை; நுண்பை; நுண்ணிய பை.

sacculocohlear : நுண்பைநத்தை எலும்பு சார் : காதின் நுண்பை மற்றும் நத்தை எலும்பு பற்றியது.

sacculotomy : நுண்பைத் துளைப்பு : உள்நிணநீர்வீக்கத்தை போக்க செவிநுண்பையில் துளையிடல்.

SACE : எஸ்ஏசிஈ : குருதி நீர ஆஞ்சியோடென்சின் மாற்றும் நொதிக்கு சுருக்கப்பெயர்.

sacrat : புனித எலும்பு சார்ந்த; திரிக : புனித எலும்பு எனப்படும் இடுப்புக்குழியின் இணைப்பெலும்பு தொடர்பான.

sacralgia : திரிகவலி : திரிக எலும்பில் வலி.

sacralisation : திரிகமாதல் : ஐந்தாவது கீழ்முதுகு முள்ளெலும்பு திரிக எலும்புடன் ஒட்டியிணைதல்.

sacral vertebra : புனித எலும்பு : இடுப்புக் குழி இணைப்பு

எலும்பாக செயல்படும் தண்டுவட எலும்பு.

sacrectomy : திரிக நீக்கம் : வசதியாக ஒரு அறுவை செய்வதற்கு திரிக எலும்பை வெட்டியெடுத்தல்.

sacrifice : பலியிடல் : உள்ளுறுப்புகளில் பரிசோதனைக்குத் தேவைப்படும் சோதனை பழி முறையின் பகுதியாக அல்லது பரிசோதனை முடிந்தவுடன், சோதனைச் சாலைப்பிராணிகளைக் கொல்லுதல்.

sacroanterior : திரிகமுன் (நீட்டல்) : முதிர்கருவின் திரிக எலும்பு முன் நோக்கியிருத்தல்.

sacrococcygeal : திரிகப்புச்ச என்புசார் : திரிக எலும்பு, புச்ச எலும்பு சார்ந்த.

sacrococcygeus : திரிகப்புச்சத் தசை : திரிக எலும்பிலிருந்து புச்ச எலும்பு வரை நீண்டுள்ள இரு சிறு தசைகளில் ஒன்று.

sacrocoxalgia : திரிக இடுப்பு வலி : திரிகப்புடை மூட்டில் வலி.

sacrocoxitis : திரிகக்கூபக அழற்சி : திரிகப்புடை முட்டு அழற்சி.

sacrodynia : திரிகபகுதி வலி : திரிக எலும்புப் பகுதியில் வலி.

sacroiliac : புனித எலும்பு-பின் இடுப்பெலும்பு சார்ந்த : புனித எலும்பு-பின் இடுப்பெலும்பு தொடர்புடைய.

sacroilitis : புனித எலும்பு மூட்டு அழற்சி : இடுப்புக்குழி இணைப்பு எலும்பு முட்டுகளில் உண்டாகும் வீக்கம்.

sacrolisthesis : திரிக நழுவல் : திரிக எலும்பு நழுவி, ஐந்தாவது கீழ் முதுகெலும்புக்கு முன்னால் உள்ள குறைபாடு.

sacrolumbar : புனித எலும்பு-இடுப்பு சார்ந்த : இடுப்புக்குழி இணைப்பு எலும்பும், இடுப்பும் தொடர்புடைய.

sacroposterior : திரிக பின்னிருப்பு : முதிர் கருவில் திரிக எலும்பு பின்னிருத்தல்.

sacrosciatic : திரிக இடுப்புசார் : திரிக எலும்பு மற்றும் இருக்கை என்பு சார்ந்த.

sacrospinal : திரிகமுள்ள : திரிக எலும்பு மற்றும் முதுகெலும்புத் தண்டு சார்ந்த.

sacrotomy : திரிகவெட்டு : திரிக எலும்பின் கீழ்ப்பகுதியை வெட்டியெடுத்தல்.

sacrouterine : திரிக கருப்பைசார் : திரிக எலும்பு மற்றும் கருப்பை சார்ந்த.

sacrum : புனித எலும்பு; திரிகம்; பிட்ட எலும்பு : இடுப்புக்குழி மூட்டு முக்கோண எலும்பு. வயிற்றுப் பக்க முதுகெலும்புக்கும். வால்பக்க முதுகெலும்புக்கும் இடையில் அமைந்து உள்ளது. இது ஒன்றாக இணைக்கப்பட்ட ஐந்து முள்ளெலும்புகளைக் கொண்டது. sacrosalpinx : கருப்பைக்குழல் வீக்கம் : சுரப்புகள் தேங்கியதால் கருப்பைக்குழாய் விரிவடைதல்.

saddle nose : வக்கை மூக்கு; அழுந்த நாசி; சேண மூக்கு : மூக்குமேல் விளிம்பில் இடையே பள்ளம் உடைய மூக்கு இது பிறவிக் கிரந்திப் புண்ணின் அறிகுறி.

sadist : கொடுமை விருப்பக் காமன் : பிறருக்குக் கொடுமை செய்வதில் அல்லது பிறர்படும் துன்பம் கண்டு இன்பம் கொள்பவர்.

sadism : கொடுமை விருப்பம்; கொடுமைப் பாலுறவு; கொடு மனம் : மற்றவருக்கு அல்லது பாலுறவுக் கூட்டாளிக்கு வலி, வன்முறை போன்ற கொடுமை விளைவித்து அதில் இன்பம் காணும் கொடு வெறிக் காமம்.

sadness : துன்பநிலை : இயல்பான, துன்பமான அல்லது சோர்வான உணர்வுநிலை.

sadomasochism : பாலினக் கொடுமை வேட்கை : தீவிரமான அல்லது மிதமான நிலையிலுள்ள கொடுமை செய்வதில் விருப்பம் கொண்ட ஒருவகை முரணியல் பாலுணர்வு நிலை.

Saemisch's ulcer : சீமிஸ்ச் புண் : ஜெர்மன் கண் மருத்துவமனை எட்வின் சீமிஸ்ச்சின் பெயர் கொண்ட பளிங்குப்படல படரழற்சிப் புண்.

Safapryn : சேஃபாப்பிரின் : பாதுகாப்பான ஆஸ்பிரின் மருந்தின் வணிகப்பெயர். இது இரைப்பையில் இரத்தக் கசிவு உண்டாக்குவதில்லை.

safe blood : பாதுகாப்பான குருதி : நோய் தரும் கிருமிகளால் பாதிக்கப்படும் ஆபத்து இல்லையென்று அறியப்பட்ட மனிதர்களிலிருந்து பெறப்பட்ட, நிறைந்த செவ்வணுக்கள் மற்றும் குருதிப் பொருட்கள்.

safe light : பாதுகாப்பான ஒளிக்கருவி : சரியாக உருவிளக்கப்படாத எக்ஸ்ரே படத்தில் புகை படாத அளவுக்கு ஒளியை வெளிப் படுத்தும் இருட்டறைக் கருவி.

safesex : பாதுகாப்பான உடலுறவு : ஆணுறைகளைப் பயன்படுதி உடலுறவு கொள்வதால் பால்வினை நோய்களிலிருந்து தன்னையும் தன் (உடலுறுவுத்) துணைவரையும் காப்பாற்றும் செயற்பழக்கம்.

safety pin bodies : காப்பூசி உடலலெய்மங்கள் : அரையாப்பு மணற்கழலை நோயில், பெரு விழுங்கணுக்களுக்குள் காணப்படும் டோனவன் மெய்மங்கள் வரிசைக்குப் பெயர்.

safflower oii : குசும்பப்பூ எண்ணை : குசும்பப்பூச்செடி விதை களிலிருந்து எடுக்கப்படும் எண்ணை. sagittal : அம்பு போன்ற; வகிட்டு : அம்பு வடிவுடைய மண்டை யோட்டின் உச்சிக்கும் பக்கங்களுக்கும் உரிய எலிம்பிணைகள். அம்பு வடிவ இணைப்பு சார்ந்த.

sago : சவ்வரிசி : பனையின வகை செடியிலிருந்து மருந்து தயாரிக்கப்படும் மாவுப்பொருள்.

Sahli's method : சாஹ்லி முறை : பெர்ன் மருத்துவர் ஹெர்மன் சாஹ்லியின் பெயராலமைந்த ஹீமோகுளோபின் அளவறியும் முறை. இரத்தத்தில் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தை சேர்த்து, ஹீமோகுளோபின் அமிலம் ஹெமேட்டினாக மாறுவதால் ஏற்படும் நிறமாற்றத்தை ஒரு, தரப்படுத்தப்பட்ட வண்ண அளவுகோலுடன் ஒப்பிடும் முறை.

Saint's triad : செயின்டின் முந்நோய் : துளைப்பிதுக்கம், பித்தக்கற்கள், சுவர்ப்பிதுக்க நோய் மூன்றும் சேர்ந்த நிலைக்கு தென்னாப்பிரிக்க அறுவை மருத்துவர் ஜே.செயின்டின் பெயர் தரப்பட்டுள்ளது.

salaam convulsion : சலாம் வலிப்பு : இளம் சிசுவின் தலையசைப்பு இசிவு. இரண்டு வயதில் மறையலாம் அல்லது மனவளர்ச்சிக் குறையுடன் தீவிர வலிப்பு நோயாக அதிகரிக்கலாம். மின்னல் வேகத் தலையசைப்புடன் உடல் பகுதியும் கைகளும் வளைவதும் நிமிர்வதும், அரேபியர்கள் வணக்கம் சொல்வது அல்லது பிரார்த்தனை செய்வது போல் உள்ளது.

salbutamol : சால்புட்டாமோல் : காற்றுக் குழாய் (குரல்வளை) விரிவகற்சி மருந்து ஐசோப்பிரி னாலினிலிருந்து எடுக்கப்படுகிறது.

salicin : மரப்பட்டை மருந்து : ஒருவகைக் கசப்பு மரப்பட்டையி லிருந்து எடுக்கப்படும் மருந்து.

salicyl : மரப்பட்டைச் சாறு : மரப்பட்டையிலிருந்து எடுக்கப்படும் மருந்துச் சாறு.

salicylamide : சாலிசிலமைடு : இலோசன நோவகற்றும் மருந்து, சாலிசைலேட் போன்று வினை புரியக்கூடியது. ஆனால், இரைப்பைக் கோளறை உண்டாக்காது.

salicylate : சாலிசைலேட் : மரப் பட்டையிலிருந்து எடுக்கப்படும் மருந்துக் காரம்.

salicylic acid : சாலிசிலிக் அமிலம் : பூஞ்சணங்களையும், பாக் டீரியாக்களையும் அழிக்கும் மருந்து. பல்வேறு தோல் நோய்களுக்குப் பயன்படுகிறது. புரை முறையாகவும், வாத முறியாகவும் பயன்படும் மரப்பட்டை வகை மருந்துச் சாற்று அமிலம்.

salicylism : மரப்பட்டை அமிலத் தன்மை : மரப்பட்டை வகை மருந்துச் சாற்றின் அமிலத் தன்மை. salicyluric acid : சேலிசிலூரிக் அமிலம் : சேலிசிலிக் அமிலம் அல்லது அதன் உப்புகளை உட்கொள்வதால் சிறுநீரில் தோன்றும் கிளைக்கால் மற்றும் சாலிசிலிக் அமில கூட்டுப் பொருள்.

saline : உப்புநீர்; உப்பேரி; உவர்நீர் : உப்பு அடங்கிய பொருள். பேதி மருந்து உப்பு, உப்பு சார்ந்த.

saiva : உமிழ்நீர்; எச்சில் : உமிழ்நீர் சுரப்பிகளிலிருந்து சுரக்கும் நீர், இதில் நீர், சளி, தியாலின் அடங்கியுள்ளன.

salivant : எச்சிலூக்கி : எச்சில் சுரப்பதைத் தூண்டும் பொருள்.

sallvary : எச்சில்சார் : எச்சில் சுரப்புத் தொடர்பான.

salivary calculus : உமிழ்நீர் கல்லடைப்பு; எச்சிற்கல் : உமிழ் நீர்ச் சுரப்பிகளில் ஏற்படும் கல் போன்ற தடிப்பு.

salivary glands : உமிழ்நீர்ச் சுரப்பிகள்; எச்சில் சுரப்பி : எச்சில் சுரக்கும் சுரப்பிகள்.

salivate : மிகை உமிழ்நீர் ஊறல் : வழக்கத்திற்கு மிகுதியாக வாயில் உமிழ்நீர் ஊறுதல்.

salivation : உமிழ்நீர் சுரத்தல் : 1. உமிழ்நீரைச் சுரக்கும் செயல். 2. உமிழ்நீர் மிகுதியாகச் சுரத்தல்.

salivation : மிகை எச்சில்; உமிழ் நீர் மிகைப்பு; உமிழ்நீர் ஊறல் : வாயில் அளவுக்குமீறி உமிழ்நீர் சுரத்தல்.

salk vaccine : சால்க் வாக்சின் : கொல்லப்பட்ட இளம்பிள்ளை வாதக் கிருமிகளிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு எதிர்ப்பொருள். இது இளம்பிள்ளை வாத காப்புக்கான ஒரு தீவிரச் செயற்கைக் காப்புப் பொருள் ஊக்கியாகப் பயன்படுகிறது. இது ஊசிமுலம் செலுத்தப்படுகிறது.

salmonella : சால்மோனெல்லா : கிராம் சாயம் எடுக்காத நுண்கம்பிப் பாக்டீரியா வகை. இது ஒட்டுண்ணியாகப் பல விலங்குகளிலும், மனிதரிடமும் உள்ளது. இதனால் நோய்கள் ஏற்படுகின்றன.

salmonellosis : சால்மோனெல்லா தொற்று : சால்மொனெல்லா இனத்தைச் சேர்ந்து நுண்ணுயிரிகளால் தொற்று. டைபாய்டு காய்ச்சலுண்டாக்கும் சால்மொனெல்லா டைஃபை தவிர்த்த மற்ற வகைகளால் உண்டாவது.

salpingectomy : சுருக்குக்குழாய் அறுவை; அண்டக் குழல் எடுப்பு : கருப்பையிலிருந்து கருமுட்டை கருப்பைக்கே கடத்தும் குழாயில் அறுவை மருத்துவம் செய்தல்.

salpingemphraxis : குழலடைப்பு : யூஸ்டேச்சியன் குழல் எனும் செவித் தொண்டைக் குழல் அடைப்பு. salpingian : குழல்சார் : யூஸ்டேச்சியன் குழல் அல்லது ஃபெல் லோப்பியன் குழல் தொடர்பான.

salpingion : சால்பிஞ்சியான் : பொட்டெலும்பின் பொறைப் பகுதியின் மேல்முனையின் கீழ்ப்பரப்பில் உள்ளது.

salpingitis : கருக்குழாய் அழற்சி : அண்டப்பையிலிருந்து கரு முட்டை கருப்பைக்குக் கடத்தப்படும் குழாயில் ஏற்படும் கடுமையான வீக்கம்.

salpingo : சால்பிங்கோ : குழல் சார்ந்த எனும் பொருள் கொண்ட இணைப்பு வார்த்தை (வழக்கமாக ஃபெல்லோப்பியன் குழல் அல்லது சில சமயம் யூஸ்டேச்சியன் குழல்குறித்தது).

salpingocatheterism : குழாய்க்குள் குழல் செருகல் : யூஸ்டேச்சியன் குழாய்க்குள், குழல் செலுத்துகை.

salpingocoele : குழல் வீக்கம் : ஃபெல்லோப்பியன் குழலின் பிதுக்கத் துருத்தம்.

salpingocyesis : குழல் கர்ப்பம் : கருப்பைக்குழாயில் கருவளர்தல்.

salpingography : கருப்பைக் குழல் வரைவு : ஒரு எக்ஸ்ரே கதிர் ஊடுருவ வண்ண ஊடகத்தை ஊசிமூலம் செலுத்தி, கருப்பைக் குழல்களை கதிர்ப்படப் பரிசோதனை செய்தல்.

salpinogolithiasis : குழற்கல் : ஃபெல்லோப்பியன் குழாயில் கண்ண நீற்றுப்பொருள் தோன்றல்.

salpingolysis : குழல் விடுவிப்பு : ஃபெல்லோப்பியன் குழாய்க்கும் சுற்றியுள்ள திசுக்களுக்கும் இடையேயுள்ள தழும்புத் திசுவை அறுத்தெடுத்தல்.

salipingo-oophorectomy : கருக்குழாய்-கருப்பை அறுவை; அண்டக் குழல் கருப்பை (அண்டாசய) எடுப்பு : கருப்பையிலிருந்து கரு வெளியேறும் சுறுக்குக் குழாயையும், கருப்பையையும் வெட்டியெடுத்தல்.

salpingo-oophoritis : சினைப்பை-கருக்குழலழற்சி : ஒரு ஃபெல்லோப்பிய குழாய் மற்றும் ஒரு சினைப்பையழற்சி.

salpingo-oophorocoele : குழல் சினைப்பை வீக்கம் : ஒரு ஃபெல் லோப்பியன் குழாய் மற்றும் சினைப்பை கொண்ட பிதுக்கம்.

salpingopexy : குழல்நிலைப்பு : ஃபெல்லோப்பியன் (கருப்பை) குழலை அறுவை மூலம் நிலை நிறுத்தல்.

salpingopharyngeal : குழல் தொண்டைசார் : யூஸ்டேச்சியன் குழல் மற்றும் தொண்டை தொடர்பான.

salpingoplasty : குழற்சீரறுவை : பெண்களில் மலட்டுத்தன்மைக் கான மருத்துவத்துக்காக மேற்கொள்ளப்படும் ஃபெல்லோப்பியன் (கருப்பைக்) குழலின் சீரமைப்பு அறுவை.

salpinogorrhaphy : குழல்தைப்பு : ஃபெல்லோப்பியன் (கருப்பைக்) குழலில் தையலிடல்.

salpingosalpingostomy : குழல்-குழல்துளை : ஒரு ஃபெல்லோப்பியன் (கருப்பைக்) குழலை மற்றொன்றுடன் இணைக்கும் அறுவைச் செயல்முறை.

salpingoscope : குழல் நோக்கி : தொண்டையின் மூக்குப் பகுதியையும், யூஸ்டேச்சியன் குழலையும் பரிசோதிக்கும் கருவி.

salpinogostenochoria : குழற் குறுக்கம் : யூஸ்டேச்சியன் குழலின் குறுக்கம் அல்லது ஒடுக்கம்.

salpinogostomy : குழற்துளைப்பு : ஃபெல்லோப்பியன் (கருப்பை) குழல் அடைபட்டுள்ள நிலையில் துளை செய்யும் அறுவைச் செயல்முறை.

salpinx : கருக்குழாய்; அண்டக் குழல் : முன் தொண்டையிலிருந்து நடுக்காதுக் குழிவரையில் செல்லும் குழாய் அல்லது கருப்பையிலிருந்து கருவெளியேறும் குழாய்.

saisalate : சால்சலேட் : வீக்கம் தணிக்கும் மருந்து. இது சாலிசிலிக் அமிலத்தின் ஒரு கூறு. இது இரைப்பை நீரில் கரையாதது. இதனால் இது இரைப்பை எரிச்சலையும், அரிமானத்தையும் உண்டாக்குவதில்லை.

saltation : குதிப்பு இசிப்பு : 1. கோரியாவில் குதித்தல் அல்லது நடனமாடுதல். 2. (மரபணு) மாற்றம், 3. ஒரு நோயின் வளர் நிலையில் திடீர் மாற்றம்.

saltatory conduction : குதிப்புக் கடத்தல் : கொழுப்புறைகொண்ட நரம்பிழையின் வழியாக கடத்தப்படும் நரம்புத் தூண்டல்.

salf free diet : உப்பில்லா உணவு : நாள் ஒன்றுக்கு 500 மில்லி கிராம் அல்லது அதற்குக் குறைவான அளவு மட்டும் கொண்டு குறைசோடிய உணவு.

salt wasting disease : உப்பு இழக்கும் நோய்; உப்பு வெளி யேற்றும் நோய் : சிறுநீரக நீர்க் கட்டி நோய், சிறுநீரடைப்பு நோய், நுண்குழலக்குடலநோய், அண்ணீரகப் புறணிக்குறை அல்லது இரைப்பைக் குடல நோய் உள்ளவர்களில் உடலிலிருந்து சோடியம் அளவுக்கு அதிகமாக வெளியேறுதல். நீரிழப்பையும், சிறுநீரக இயக்கம் மோசமடைவதையும் தடுக்க சோடியம் மற்றும் நீர் அதிகமாக இந்நோயாளிகளுக்கு தேவைப் படுகிறது. saltpeter : சால்ட்பீட்டர் : பொட்டாசியம் நைட்ரேட்டுக்கு வழங்கும் பெயர்.

saluresis : உப்பிழிவு : சோடியம் மற்றும் குளோரைடு அயனிகள் சிறுநீரில் வெளியாதல்.

saluretic : உப்புக்கழிப்பான் : சிறுநீரில் சோடியம் வெளியேறுவதற்கு உதவும் பொருள்.

salutary : சுகந்தரும் : உடல்நலம் விளைவிக்கும், குணப்படுத்தும்.

salvarsan : வெட்டை மருந்து : வெட்டை நோய் தீர்க்கும் ஒரு மருந்து.

salve : களிம்பு மருந்து : புண்ணை ஆற்றக்கூடிய ஒரு களிம்பு மருந்து.

salvolatile : அமோனியாக் கரைசல் : மயக்கம் நீக்கும் மருந்தாகப் பயன்படும் நவச்சார ஆவிக் (அமோனியா) கரைசல். இது இனிய சுவையும் மணமும் உடையது. இதனை வீடுகளில் நலிவகற்றி நலமுட்டும் மருந்தாகப் பயன்படுத்துகிறார்கள்.

samaritans : நல்லிரக்கத் தொண்டர்கள் : விரக்தியடைந்து தற்கொலை செய்து கொள்ள முனையும் மனநோயாளிகள், தொலைபேசியில் தொடர்பு கொண்டால், அவர்களுக்கு எல்லா நேரத்திலும் உதவி புரியும் தன்னார்வ நட்புத் தொலைபேசித் தொண்டர்கள்.

sample : மாதிரி : 1. ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் தொகையில் கண்டறிந்த செய்திகளின் துணைத்தொகுதி 2. முழுவதன் குணநலன் களையும் வெளிப்படுத்தும் ஒரு முழுப் பொருளின் பகுதி.

sampling : மாதிரியெடுத்தல் : முழுவதையும் பிரதிநிதிப் படுத்தும் ஒரு பகுதியைத் தேர்ந்தெடுக்கும் முறை. மாதிரியை வைத்து அளவெடுப்பதை வைத்து முழு மக்கள்தொகை பற்றிய எண்ணப் பதிவில் ஏற்படக்கூடிய தவறு.

sanatorium : உடல் நல நிலையம்; நலம் பேணும் மனை : நோயைக் குணப்படுத்தி உள நலம் பேணுகின்ற நிலையம்.

sanctuary : புகலிடம் : வளர்சிதை மாற்றச் சிதைவின்றி உடலில் ஒரு பகுதியிடத்தில் ஒரு மருந்து போய்க் குவிதல்.

sandfly : மணற்பூச்சி; மணல்ஈ; மணற்கொசு : மணற்பூச்சு காய்ச்சல் என்னும் நோயை உண்டு பண்ணுகிற சிறிய பூச்சி வகை.

sandpaper skin : உப்புக்காகிதத் தோல் : தைராயிடு குறைவில், தோல் தடித்தும் சொரசொரப் பாகவும் குளிர்ந்தும் வெளுத்தும் மயிர் குறைந்திருத்தல்.

sandwich vertebrae : இடையிட்ட முள்ளெலும்புகள் எலும்பு மெலிவு நோயிலுள்ளது போன்று, முள்ளெலும்பு முளைத்தகடுகள் தடிமன் மிகுந்தும், உடற்பகுதி இயல்பான நிலையிலும் முள்ளெலும்பிடை வெளிகள் பாதுகாக்கப்பட்டிருத்தல்.

sane : நல்லறிவு : தெளிந்த மன நிலை.

sanguicolous : குருதியுறை : ஒரு ஒட்டுண்ணி போன்று, இரத்தத்தில் உறையும்.

sanguifacient : இரத்த வளர்பொருள் : இரத்தச் சிவப்பணுக்கள் உருவாக்கத்தை மேம்படுத்தும் பொருள்.

sanguiferous : குருதிகொள் : இரத்தத்தைக் கொண்ட அல்லது கொண்டு செல்லும்.

sanguinariness : குருதிச்சோர்வு : இரத்தம் மிகுதியாகக் கசிந்து சிந்துவதால் உண்டாகும் சோர்வு.

sanguine : மிகைக் குருதி நோய் : இரத்தம் மிகையாக இருப்பதால் ஏற்படும் கோளாறு.

sanguineous : குருதி சார்ந்த; செந்நீரிய : இரத்தம் சார்ந்த, இரத்தம் உடைய குருதி மிகைக் கோளாறுடைய.

santonin : எட்டி எண்ணெய் : எட்டி மரத்திலிருந்து எடுக்கப்படும் எண்ணெய். ஒரு சமயம் உருண்டைப் புழுவுக்கு (நாக்குப்பூச்சி) எதிராகக் கொடுக்கப்பட்டது.

saponification : சவர்க்காரமாக்கல் : காரங்களுடன் சேர்த்துக் சூடாக்குவதன் மூலம் சவர்க்காரமாகவும் கிளிசெராலாகவும் மாற்றுதல்.

sanguinopurulent : குருசீழ்க் குருதியை : இரத்தமும் சீழும் கொண்ட.

sanguisuga : குருதியுறிஞ்சி; இரத்தம் உறிஞ்சி : ஒரு அட்டை அல்லது இரத்தம் உறிஞ்சி.

sanitarian : சூழல் தூய்மையாளர்; துப்புரவல்லுநர்; துப்புரவாளர் : நலவாழ்வுப் பயிற்சியாளர் துப்புரவு மற்றும் பொது சுகாதாரத்தில் பயிற்சி பெற்ற ஒருவர்.

sanitary : துப்புரவு; நலவாழ்வு சார் : 1. உடல் நலம் மேம்படுத்தும் அல்லது தொடர்பான 2. அழுக்கில்லா சுத்தமான உடல் நலத்துக்கு உகந்த.

sanitation : சுகாதாரம் : நலவாழ்வுக்கு குறிப்பாக பொது சுகா தாரத்துக்கு ஏற்பான சூழ்நிலைகளை ஏற்படுத்துதல்.

sanitiser : தூய்மையாக்கி : கிருமித்தாக்க எண்ணிக்கையை பாதுகாப்பான அளவுக்குக் குறைக்கும் ஊடகம்.

sanity : மனநலம் : மனம், உணர்வுகள் மற்றும் நடத்தை நல்ல நிலையிலிருத்தல். SA mode : புழைமேலறைக்கணு : இதயத்தின் புழைமேலறைக்கணு.

sap : உயிர்ச்சாறு : 1. உயிர்வாழ அவசியமான முக்கியமான சாறு, 2. கொஞ்சம் கொஞ்சமாக தளர்வடைதல் அல்லது வலிமையிழத்தல்.

saphena : தெளிவு பளிங்குச்சிரை : ஒரு பளிங்குச்சிரை வீக்கம், பெரும் பளிங்குச் சிரை துவங்குமிடத்தில் ஒரு சிரை வீக்கம்.

saphenectomy : பளிங்குச்சிரை நீக்கம் : பளிங்குச்சிரையை அறுவை செய்து நீக்குதல்.

saphenous : தெளிவு; பளிங்கு : பளிங்குச்சிரை அல்லது காலில் உள்ள பளிங்க நரம்பு பற்றிய.

sapid : சுவையுடைய : சுவையான, சுவையுணர்வால் கண்டுபிடிப்பது.

sapophore : சுவைக்கூறு : ஒரு பொருளுக்கு கவைதரும் மூலக் கூறுப் பகுதிப் பொருள்.

saporific : சுவைதரும் : சுவை அல்லது மணம் தரும்.

sapraemia : குருதி நச்சு : ஒரு நஞ்சு குருதியோடு சேர்ந்து உடலில் கற்றோட்டமாகச் செல்வதால் உடலில் பொதுவாக உண்டாகும் நச்சுத்தன்மை, அழுகிய கரிமப் பொருள்களில் வாழும் தாவர உயிர்கள் சிதை வதால் இது உண்டாகிறது.

saprobe : கெடுநீர்வாழ் உயிர்மம் : ஒளிச் சேர்க்கைப் பொருள் இல்லாத பூஞ்சைக் காளான் போன்ற செத்து அழுகிய பொருள்களை சார்ந்து வாழும் உயிரி.

saprophilous : அழுகல்சார் உயிர் : அழுகிய பொருள்களில் வாழும்.

saprophyte : அழுகல் பொருள் நுண்மம் : அழுகிய கரிமப் பொருள் வாழும் தாவர நுண்ணுயிரிகள்.

saralasin : சாராலேசின் : இரத்தக்கொதிப்பு சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் ஆஞ்சியோ டென்சின்-2 எதிர்ப்பொருள்.

sarcina : சார்சினா : மண்ணிலும் நீரிலும் வாழும் மைக்ரோகாக் காஸ்களின் குடும்பம் சேர்ந்த அழுகல் வாழ் உருள் நுண்ணுயிர் இனம்.

sarcitis : தசையழற்சி : தசைத் திசுவின் அழற்சி.

sarcoadenoma : சுரப்பு இணைப்பு திசுப் புற்று : ஒரு சுரப்பியின் சதைக்கட்டி.

sarcoblast : தசைமுன்னணு : தசையணுவாக வளரப்போகும் ஆதியணு.

sarcocarcinoma : இணைப்புத்திசு மேற்றொலிப்புற்று : இணைப் புத்திசுப் புற்று மற்றும் புறத் தோலியப் புற்றுத் திசுக்களும் கொண்ட கொடும் புற்றுநோய்.

sarcocyst : சார்கோசிஸ்ட் (சதை நீர்ப்பை) : 1. சார்கோ சிஸ்டிஸ் இனம் சேர்ந்த ஓரணுவுயிர் ஒட்டுண்ணி, 2. சார்கோசிஸ்டிஸ் தொற்றிய தசைகளில் காணப்படும் சிதல்கள் கொண்ட உருள் உடலம்.

sarcocystis : சார்கோசிஸ்டோசிஸ் : தசைகளில் காணப்படும் ஓரணுவுயிர் ஒட்டுண்ணி இனம்.

sarcocystosis : சார்கோசிஸ்டில் தொற்று : தசைநீர்க்கட்டிகளும் தசையழற்சியாகவும் வெளிப்படும் அல்லது அறிகுறிகளில்லாத சார்கோசிஸ்டிஸ் தொற்று.

sarcoid : நைவுப்புண்கள் : தோலிலும், நுரையீரலிலும், பிற உறுப்புகளிலும் உண்டாகும் நைவுப் புண்களின் ஒரு தொகுதி.

sarcoidosis : துகள் கழலை; காச நோய்த் தோற்றம் : துகள் கழலை நோய். இதன் நோய்க் காரணம் இன்னும் தெரியவில்லை. இதன் திகவியல் தோற்றம் காசநோய் போல் தோன்றுகிறது. இது உடலின் உறுப்புகளைப் பாதிக்கிறது. பெரும்பாலும் தோலின் நிணநீர்ச் சுரப்பிகள் கையெலும்புகள் பாதிக்கப்படுகின்றன.

sarcolemma : தசைசைநார்ப்படலம் : வரித்தசைநாரின் ஊநீர்ப்படலம்.

sarcolysis : தசையழிவு : மென் திசுக்கள்.

sarcoma : இணைப்புத்திசுப்புற்று : தோல், சீதச்சவ்வு, தவிர்த்து, தசை, கொழுப்பு, எலும்பு, இரத்தக் குழல்கள் உள்ளிட்ட ஒரு திசுவில் வளரும் புற்று.

sarcoma (sarcomata) : கழலை; இணைப்புத் திசுப்புற்று' இழைமைப் புற்று :இணைப்புத்திசு, தசை, எலும்பு ஆகியவற்றில் ஏற்படும் உக்கிரமான வளர்ச்சி அல்லது கட்டி.

sarcomatosis : உடற்கழலை : கழலை உடலெங்கும் பரவியிருக்கும் நிலை.

sarcomatous : இணைப்புத்திசு புற்றுசார் : இணைப்புத்திசுப் புற்றின் இயல்பு கொண்ட அல்லது அது பற்றிய.

sarcomere : தசை இழைப்பகுதி : இரு இசட் தகடுகளுக்கிடையே வரிசையாயமைந்த மையோசின் மற்றும் ஆக்டின் இழைகள். தசையிழையின் சுருங்கு பகுதி.

sarcomphalocoele : தொப்புள் சதைப் புற்று : தொப்புளின் சதைப்புற்று.

sarcoplasm : தசை நார்மம்; நிணச்சோறு : தசை நார்ப் பொருள். sarcoplast : தசைமுன் அணு : தசையிலுள்ள இடைத்திகவணு, தசையாக மாறக்கூடியது.

sarcoptes : சிரங்கு ஒட்டுண்ணி : சிரங்கு உண்டு பண்ணும் ஒரு வகை ஒட்டுண்ணி.

sarcosis : பிறழ்சதை : இயல்புக்கு மாறிய அளவில் சதை உருவாதல்.

sarcosporidiasis : சார்கோஸ்போரியா தொற்று : தசையில் சார்க்கோஸ்போரிடியா எனும் ஓரணுவுயிர்த் தொற்று.

sarcostosis : தசை என்பு ஆதல் : தசைத்திசு எலும்பாதல்.

sarcous : தசைசார் : தசைத்திக அல்லது சதைத் தொடர்பான.

sargramostin : சார்கிராமோஸ்டின் : இரத்த உற்பத்தி மண்டலம் இயல்பு நிலைக்கு மீள்வதை துரிதப்படுத்தும், நவீன தொழில் நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட, குருணையணு பெருவிழுங்கணுக் குழுவைத் துண்டும் காரணி.

sartorius : தையல் தசை : தொடையிலுள்ள தையல் தசை இது ஒரு காலை மற்றொன்றின் மீது வளையச் செய்கிறது.

satellite : துணைச் சார்புக்கோள் : 1. ஒரு பெரும் அமைப்பைச் சுற்றியுள்ள ஒரு சிறு அமைப்பு. 2. ஒரு நடுப்புள்ளியைச் சூழ்ந்துள்ள, கட்டிகள், நோய்ப் பகுதிகள், பாங்குகள் அல்லது எக்ஸ்ரே படத்தில் காணப் படும் திடப்பகுதிகள், 3. ஒரு நிறக்கீற்றுடன் இணைந்துள்ள ஒரு நுண்மெய்மம்.

satellitism : துணைக்கோளியம் : ஸ்டேஃபிலோகாக்கை கிருமிகளுக் கருகிலுள்ள சில ஹீமோஃபிலஸ் வகைகள் போன்று, மற்ற தொடர்பில்லாத வகைக் கிருமிகள் தொகுதிக்கருகில் நன்றாக சில கிருமி வகைகள் வளரும் நிகழ்ச்சி.

satellitosis : சார்புக்கோளமைப்பு : நரம்பணுக்களைச் சுற்றி, குறிப் பாக அவை சிதைவுறும்போது, நரம்பு தாங்கு திகவணுக்குவிப்பு.

satiety : மனநிறைவடைதல் : மனம் முழு நிறைவடைதல் குறிப்பாக வயிறு நிரம்பியதால்(உணவால்).

saturated : நிறைசெறிவடைந்த : 1. உள்ளுறிஞ்சப்படக்கூடிய அனைத்தையும் கொண்டிருக்கும். 2. ஒரு பொருளை இனியும் மேற்கொண்டு கரைக்க முடியாத அளவுள்ள கரைசல்.

saturnine :ஈயம் சார் : கரீயத்தால் உண்டாகும் அல்லது அது தொடர்பான.

Satyr ear : குதிரைக்காது : கிரேக்க புராணத்தில் கூறப் படும் சிறு தெய்வங்களில் போன்று, காதுமடல் வழக்கம் போல உருட்டப்பட்ட அமைப்பும், கணுவுமின்றி வழக்கத்தை விட பெரிதாகப் புடைத்துள்ள பிறவிக்கோளாறு. (குதிரைக் காலும் மனித வடிவும் உடைய வனதெய்வக் குழுவில் ஒரு தெய்வம் போன்று).

satyriasis : காமவெறியின் : ஆண்களில், அளவுக்கதிகமாகவும் அடிக்கடியும் ஏற்படும் கட்டுப்படுத்த முடியா பாலுறவு ஆசை.

saucerisation : ஏந்துதட்டாக்கல் : 1. வடிப்பினை எளிதாக்க உண் டாக்கப்படும் குறைவு ஆழ் பள்ளம். 2. நார்த்தசைப் புற்றில் எலும்பும் பாதிக்கப்படும்போது எக்ஸ்ரே படத்தில், நீள எலும்புத் தண்டு போன்ற தட்டுருக்குறை.

sauna : வெப்ப அறை : மிகுந்த ஈரப்பசை மற்றும் மிதம் முதல் உயர் வெப்ப நிலைக்கு ஒருவரை ஆட்படுத்தும், மூடப்பட்ட பகுதி.

sausage link pattern : பண்ட இணைப்பாங்கு : வால்டென்ஸ் ட்ராமின், பெரும் குளோபுலின் புரதக் குருதி, மிகுபசை நோயியம், வளரா நீரிழிவு விழித்திரை பாதிப்பு, இரத்தக் கொதிப்பு விழித்திரை பாதிப்பு இரண் டாம் நிலையில் விழி மையத்தில் தமனிச் சிரை சந்திக்கு மிடத்தில் முழுவதும் துண்டுகளாக உள்ள, மிகவும் விரிந்து வளைந்து நெளிந்த விழித் திரைச் சிரைகள்.

saventrine : சாவன்டிரின் : இதயத் துடிப்பு வேகத்தை அதிகரிப் பதற்காகக் கொடுக்கப்படும் மருந்து. இது நீண்ட நேரம் வேலை செய்யக்கூடியது.

savlon : சாவ்லான் : அறுவை மருத்துவத்துக்கு முன்பு கழுவு நீர்மமாகப் பயன்படுத்தப்படும் நோய் நுண்மத் தடைப் பொருள். இதில் 15% குளோர் ஹெக்சிடினும் 15% செட்ரி மைடும் அடங்கியுள்ளது.

sawfish pattern : இரம்ப மீன் பாங்கு : இதயத்தசை மிகை வளர்ச்சிக் கோளாறில், இரத்த நாள வரைவுப் படத்தில் இடது முன் இறங்கும் இதயத் தமனிக் கிளையின் ஒழுங்கற்ற (சுருங்கலின் போது) குறுகியுள்ள தோற்றம்.

saw-tooth pattern : இரம்ப பல் பாங்கு : 1. செம்பரத்தோல் நோயில் உயிர்திசுநுண்ணோக்கி ஆய்வில் அடித்தோல் மேந்தோல் சந்திப்பு ஒழுங்கற்றுத் தடித்துத் தோன்றுதல் 2. திசு வழிவு, குடல் பெருங்குடலழற்சி அல்லது குருதிக்குறை பெருங்குடலழற்சி ஆகியவற்றில் பேரியம் கொடுத்து. எடுக்கும் பெருங்குடலின் கதிர்ப் படத்தில், ஒழுங்கற்று சிதறிக் காணும் ஒளிப்பட உருகாட்டு ஊடகம்.

saxitoxin : சேக்ஸிடாக்ஸின் : டைனோஃப்ளாஜெல்லேட்களை உண்டு வாழும் கிளிஞ்சல்களில், குறியும் டைனோஃப்ளாஜெல் லேட்களால், கூட்டிணைத்து உருவாக்கப்படும், சக்திவாய்ந்த நரம்பு நஞ்சு.

Sayre's jacket : சேயரின் சட்டையுறை : அமெரிக்க அறுவை மருத்துவர் லெவிஸ் சேயரின் பெயர் கொண்ட, முதுகெலும் புத்தண்டை தாங்கிப்பிடிக்க அணியப்படும் பிளாஸ்டர் ஆஃப்பாரிஸ் உறை.

scabicide : சிரங்கு மருந்து : சொறி, சிரங்கு உண்டுபண்ணும் பூச்சிகளை கொல்லும் மருந்து.

scabbard : வாளுறை : மார்பெலும்புப்பின் கழலையின் வெளி அழுத்தத்தினால் தட்டையான மூச்சுக்குழாய்.

scabies : சொறி சிரங்கு : ஒட்டுண்ணிக் கிருமியினால் ஏற்படும் தோல் நோய். கடுமையாகத் தொற்றக்கூடியது.

sacbrities : பக்குத்தோல் : தோலின் செதிள்நிறை சொர சொரப்பு நிலை.

scaffold : தாங்குசாரம் : ஒரு செயல்படும் தொகுதிக்கு அமைப்பு வகையாக ஆதரவு தரும் கட்டுமான அமைப்பு.

scala : ஸ்கேலா : உட்செவியின் நத்தையெலும்பின் மூன்று சுருள்குழல்வழிகளில் ஒன்று.

scald : சுடுபுண் : ஆவியினால் உண்டான பொக்குளம்.

scalded skin syndrome : மேற்றோல் நலிதோல் : தோலின் மேல் தோல் படலம் அழுகல் அடியிலுள்ள அடித்தோல் அப்படியே உள்ளது. காய்ச்சலும் பொறிப்பும் மிகவும் மென்மையாக தோலும் உள்ளது. கொப்புளங்களில் தெளிந்த நீர்நிறைந்துள்ளது. ஸ்டேஃபி லோகாக்கையின் வெளிநஞ்சின் காரணமாக அது ஏற்படுகிறது.

scale : உரிதோல் : 1. தோலின் வெளிப்படங்களிலிருந்து சிறு காய்ந்த மெல்லிய பகுதி உரிந்து விழுவது. 2. பற்களைச் சூழ்ந்து உள்ள காறைப் படலம், 3. எடைபார்க்கும் கருவி. 4. அளவிடப்பட்ட அளக்கும் கருவி.

scalene : முக்கோணத்தசை : முதுகெலும்பையும் விலா எலும்புகளையும் இணைக்கும் தசை.

scalenectomy : முரணகத்தசை நீக்கம் : முரணகத் தசைகளில் ஒன்றை வெட்டியெடுத்தல்.

scalenotomy : முரணகத்தசை வெட்டு : முரணகத்தசைகளில் ஒன்று அல்லது அதிகமான வற்றை அறுத்து வெட்டுதல்.

scaler : பற்காரைநீக்கி : கறை களையும் பற்களில் ஒட்டிப் படிந்துள்ள காறையையும் நீக்கப் பயன்படும் கருவி.

scaling : பற்காரை நீக்கல் : பல்லின் தலை அல்லது வேர்ப் பரப்புகளிலிருந்து ஒட்டிப்படிந்துள்ள காறை, ஊத்தை சுண்ணப்பொருள் ஆகியவற்றை நீக்கல்.

scal : சொறி; தோல் தடிப்பு நோய் : சொறி நோய் வகை, வன்சொறி, சிரங்கு, மென்சொறி கரப்பான் புண் ஆகியவை இவ்வகையின.

scalp : தலைத்தோல் : கபாலத் தோல், உச்சி வட்டக் குடுமித்தோல்.

scalpel : அறுவைக்கத்தி.

scalpriform : முன்வாய்ப்பல் : உளிவடிவான முன் வாய்ப்பல்.

scalprum : பெருங்கத்தி : 1. GLIñu அறுவைக்கத்தி, 2. உள்ளழிந்த எலும்பை நீக்கும் பற்கருவி.

scammony : பேதிப்பிசின் : கடும்பேதி மருந்தாகப் பயன்படும் பிசின் வகை.

scan : நுண்ணாய்வு : ஒளி-நிழல் கருவிகள் மூலம் உடல் உறுப்பு களை நுண்ணாய்வு செய்தல்.

scanning : ஆய்ந்து நோக்கல்; துருவிப் பார்த்தல் : 1. கணினிப் பட வரைவு, கேளா ஒலிப்படம், காந்த மீளதிர்வுப் (எம்ஆர்ஐ) படப்பதிவுகளின் மூலம், உடற் கூறுப்பகுதி ஒன்றின் உருவைப் படமாகப் பெறும் முறை.

scanning speech : தெர்று வாய் : அணும உள்ளரிக் காழ்ப்பில் ஏற்படும் பேச்சுக் கோளாறு. இதில் பேச்சு தொடர்பின்றியும் மெதுவாகவும் இருக்கும்.

scapha : நாவாயுரு : செவி ஒரத்திற்கும் உள்ளுள்ள மேட் டுப்பகுதிக்கும் இடையிலுள்ள நீள்பள்ளம்.

scaphocephaly : நாவாயுருத்தலை : படகின் அடிக்கட்டையைப் போல் நீண்டுள்ள தலைக் கோளாறு. நீளவாக்கில் ஒட்டியிணைந்ததால், நடுக்கோட்டில் மேடுடன் நீண்டு ஒடுங்கிய மண்டையோடு.

scaphot : படகு எலும்பு; அங்கைப் படகெலும்பு : கணைக்கால் எலும்பு, மணிக்கட்டு எலும்பு போன்ற படகு வடிவ எலும்பு.

scaphoid abdomen : வடிவ அடி வயிறு.

scapula : தோள் பட்டை; தோள் எலும்பு; பட்டையெலும்பு : தோலிலுள்ள பெரிய முக்கோண வடிவப் பட்டை எலும்பு.

scapulectomy : முதுகுப்பட்டையென்பு நீக்கம் : முதுகுப்பட் டையெலும்பு அறுவை நீக்கம்.

scapuloclavicular : முதுகுப்பட்டை காறையெலும்பு சார் : முது குப்பட்டை எலும்பு மற்றும் காறை எலும்பு தொடர்பான.

scapulohumeral : தோள்பட்டை மேற்கை இணைப்பு சார்ந்த.

scapulopexy : முதுகுப்பட்டை என்பு இடநிலைப்பு : முதுகுப் பட்டையெலும்பை அறுவை முறையில் இட நிலைத்தல்.

scapulo-radial : தோள்பட்டை முன்கை கட்டெலும்பு இணைப்புச் சார்ந்த.

scapulo-ulnar : தோள்பட்டை முன்கை உள்ளெலும்பு இணைப்புச் சார்ந்த.

scar : தழும்பு; வடு : தோலில் ஏற்பட்ட காயம் அல்லது புண் ஆறிய பின்பு உண்டாகும் தழும்பு.

scarification : பல்சிறுகீரல் : ஒரு கூர்முனை கொண்டு தோலில் பல சிறுகீறல் செய்தல்.

scarifier : கீரல் கருவி : பல் சிறுகீரல் செய்யப் பயன்படும் பல கூர்முனை கொண்ட கருவி.

scarlatina : செம்புள்ளி நச்சுக் காய்ச்சல்; செஞ்சிவப்பு : குழந்தைகளுக்கு முக்கியமாக உண்டாகும் காய்ச்சல், முதலில் தொண்டை நோய் ஏற்பட்டு பின்னர் காய்ச்சல் உண்டாகும். பின்னல் தோலில் செம்புள்ளிப் புண்கள் எழும்.

sacrlet fever : செங்காய்ச்சல் : செம்புள்ளி நச்சுக் காய்ச்சல்.

scarlat rash : செம்புள்ளி அம்மை : செம்புள்ளி அம்மை நோய் வகை scarlet red : செஞ்சாயம் : புண்கள், காயங்கள், சிராய்ப்புகள் ஆகியவற்றைச் சுத்தப்படுத்துவதற்கு ஒரு சமயம் பயன்படுத்தப்பட்ட சிவப்புச் சாயம்.

Scarpa's triangle : ஸ்கார்ப்பா முக்கோணம் : இத்தாலிய அறுவை மருத்துவரின் பெயர் கொண்ட தொடைமுக்கோணம்.

SCAT : ஸ்கேட் (எஸ்.சி.ஏ.டீ.) : ஆட்டணுத்திரள் சோதனை.

scathe : புண்.

scatole : மலநாற்றப் பொருள் : மலத்தின் நாற்றத்திற்குக் காரண மான டிரிப்டோஃபேனின் ஆக்ஸிஜனிணைப்புப் பொருள்.

scatology : மல ஆய்வியல் : மலத்தைப் பற்றிய பகுத்தாய்வுப் படிப்பு.

scatoscopy : மல ஆய்வு : மலத்தைப் பரிசோதித்தல்.

scattergram : பரவு வரைபடம் : எக்ஸ் மற்றும் ஒய் அச்சுகளில் குறிக்கப்படும் இரு மாறியல் மதிப்புருக்களுக் கிடேயேயுள்ள உறவு நிலையைக் குறித்துக் காட்டும் வரைபடம்.

SCBU : குழந்தைகள் சிறப்புக் கவனிப்புப் பகுதி.

SCC : எஸ்சிசி : செதிளணுப் புற்று நோய்.

S cell : எஸ் உயிரணு : மேல் சிறு குடலின் சீதச்சவ்விலுள்ள செக்ரீட்டின் தயாரிக்கும் நாள மில்லா சுரப்பியணு.

schema : திட்டம் : 1. பெருட் சுருக்கம். 2. வகுப்பின் முக்கியப் பகுதிகள். 3. முன் கூட்டிய கோடிட்டுக் காட்டல், 4. ஒரு திட்டம் அல்லது வரைவுரு.

schick test : தொண்டையடைப்பான் சோதனை : ஒருவருக்குத் தொண்டையடைப்பான் (டிஃப்தீரியா) நோய் இருக்கிறதா என்பதைக் கண்டறிவதற்கான ஒரு சோதனை. இதில் புதிதாகத் தயாரிக்கப்பட்ட நோய் நஞ்சின் 2 அல்லது 3 மினிம் அளவு ஊசி மூலம் இடது புயத்தோலுக்கு அடி யில் செலுத்தப்படுகிறது. இதே போன்று வலது புயத்திலும் செலுத்தப்படுகிறது. ஆனால் இதில் புரதத்தை அழிக்காமல் நோய் நஞ்சை அழிப்பதற்காக குருதி வடிநீர் 75 சென்டிகிரேடு வரை அல்லது 10 நிமிட நேரம் சூடாக்கப்படுகிறது. இடது புயத்தில் 25-48 மணி நேரத்தில் சிவப்பு வளையம் தோன்றும். நான்காம் நாள் இவ்வளையம் மிக உச்சநிலையை அடையும்; பிறகு இது படிப்படியாக மறைந்துவிடும். இந்த வினை நோய்த் தடைக்காப்பு இல்லா மையைக் குறிக்கும். இவ்வாறு சிவப்புவளையம் எதுவும் தோன்றாவிட்டால் அவருக்குத் தொண்டை அடைப்பானுக்கு எதிராகத் தடைக்காப்பு உள்ளது என்று அறியலாம்.

schildar's disease : நசிவு நோய்; சிதைவு நோய் : மரபுவழித் தோன்றும் இனச்சிதைவு நோய். இது மனவளர்ச்சிக் குறைபாட்டுடன் தொடர்புடையது (ஷில்டர் நோய்).

schilling test : ஷில்லிங் சோதனை : மரணம் விளைவிக்கக் கூடிய குருதிச் சோகை இருப்பதை உறுதிப் படுத்துவதற்காக, கதிரியக்க வைட்டமின்-பி12 சத்துப்பொருள் ஈர்ப்புத்திறனை மதிப்பிடுவதற்கான சோதனை.

Schimmelbusch mask : ஸ்கிம்மெல்புஷ்ச் முகஅணி : ஜெர்மன் அறுவை மருத்துவர் கர்ட்ஸ் கிம் மெல்புஷ்ச் பெயரிடப்பட்ட ஆவி வடிவ உணர்வு நீக்கி மருந்துகளை உட்செலுத்துவதற்காக வலைத்து துணி தாங்கும் கம்பிச் சட்டம்.

Schiotz tonometer : ஸ்கியோட்ஸ்(ஜ்) அழுத்த தமனி : நார்வே நாட்டு கண் மருத்துவர் ஹெச்.ஸ்கியோட்ஸ் பெயர் கொண்ட கருவி, வழக்கமான எடை பளிங்குப் படலத்தை அழுத்தும் போது ஏற்படும் கண் உள் அழுத்தத்தை அளக்கும் கருவி.

schindylesis : பிளவு மூட்டு : ஒரு எலும்பு மற்றொரு எலும்பின் பிளவுக்குள் பொருந்தும் மூட்டிணைப்பு.

schistocoelia : பிளந்த வயிறு : பிறவி வயிற்றுப் பிளவு.

schistocyte : பிளவணு : குருதியழவுரத்தசோகை, காயம், செயற்கை இதயவால்வுகள், பரவலான உள்நாள குருதியுறைவு, பேரணுச்சோகை போன்ற நோய்களில், உள்நாள மடிப்புகளில் காயம் அல்லது உயிரணு வலிவிழப்பு அதிகரிப்பால், இரத்தச் சிகப்பு அணுக்கள் துண்டுபடுதல்.


schistocytosis : பிளவணுப் பெருக்கம் : இரத்தத்தில் பிளவணுக்கள் அதிக எண்ணிக்கையில் காணப்படுதல்.

schistomelus : பிளவுறுப்புக்கரு : பிளந்த உறுப்புடைய முதிர்கரு.

schistosoma : நத்தைக் கிருமி : இரத்தத்திலுள்ள ஒட்டுண்ணிப் புழுக்களில் ஒருவகை. இது நன்னீரிலுள்ள நத்தைகள் மூலமாக மனிதரைப் பிடிக்கிறது.

schistosomiasis : நத்தைக் கிருமி நோய் : நன்னீரிலுள்ள நத்தைகள் வாயிலாக மனித உடலுக்குள் படையெடுக்கும் நோய் ஒட்டுண்ணிகளால் உண்டாகும் நோய். இது தோல் அல்லது சிலேட்டுமப் படலம் வழியாக உடலுக்குள் நுழைகிறது. தனியொரு கிருமி உடலின் ஒரு பகுதியில் வாழ்ந்து, பல ஆண்டுகள் வரை முட்டை யிடுகிறது. கீழ்த்திசை நாடுகளில் இது பெருஞ்சிக்கலாக எழுந்துள்ளது. குடிநீரில் குளோரின் சேர்த்தல், மனிதக் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்துதல், நன்னீரில் நந்தைகளை ஒழித்தல் ஆகியவற்றின் மூலம் இந்தச் சிக்கலுக்குத் தீர்வு காணலாம்.

schizamnion : பிளவுச்சவ்வுரை : உள் உயிரணுத்திரளில் குழிவறை உருவாவதால் உண்டாகும் பனிக்குட உறை.

schizogony : பிளவுப்பிறப்பு : ஊன்மம் துண்டுகளாகி, உட்கரு பல பிளவுகளாகி பிளவுப் பிறப்பினங்களை உருவாக்கும் வகையில் பாலின வகையல்லாத கருவணுவுயிர் ஒட்டுண்ணி உருவாக்கம்.

schizophrenia : முரண் மூளை நோய்; மூளைச் சிதைவு; உளச்சிதைவு; புத்தி பேதம் : எண்ணம், உணர்வு, செயல் ஆகியவற்றில் தொடர்பு இல்லாமல் இருக்கும் ஒரு மூளைக் கோளாறு. இது அழிவுறுத்தும் கொடிய நோய். இதன் அறிகுறிகள் 20 வயதுகளில் தோன்றும். எனினும், இதற்கான வித்து கரு வளர்ச்சியின்போதே இடப்பட்டுவிடுகிறது. அப்போது தான் நரம்பு உயிரணுக்கள் வளர்ந்து, கிளை விட்டு, ஒன்றோடொன்று இணைகின்றன. மூளை முதலில் உருப்பெறும்போது, சில நரம்பணுக்கள், தவறான இடங் களில் குடியேறி, மூளையில் நிரந்தரமான அல்லது தவறான இணைப்புகளுடைய சிறுசிறு பகுதிகளை உண்டாக்குகின்றன. கருவுற்றிருக்கும்போது தாயை ஒரு நோய்க்கிருமி பீடித்தால், இந்தத் தவறான இணைப்புகள் முதிர்ச்சியடைந்து விடுகின்றன. உணர்ச்சியின்மை, அறிவு மழுங்கல், மருட்சிகள், அகக்குரல்கள் கேட்டல் போன்ற நோய்க்குறி கள் முக்கியமாகத் தோன்றுகின்றன. இந்த நோய்க்குறிகள் அவை நோயாளியின் வாழ்நாள் முழுவதும் கூடுவதும் குறைவதுமாக இருக்கும். கருவளர்ச்சியின் இரண்டாம் மும்மாதப் பருவத்தின்போது, நரம்பு உள் தகட்டின் மூலமாக மூளை உயிரணுக்கள் இடம்பெயர்வது முழுமையாக நடைபெறுகிறது. இது ஒரளவுக்கு மரபுவழி நோயாகும்.

schixophrenic : முரண் மூளை நோயாளி; புத்தி பேதித்த : முரண் மூளை நோய் கொண்டவர். இந்த நோயைக் குழந்தைப் பருவத்தில் கண்டறியலாம். இந்த நோய்க்கான 9 காரணங்களை 1961 ஒரு வல்லுநர் குழுவினர் வகுத்துரைத்துள்ளனர்.

schizoid : பிளவுநிலை : 1. பிளவு மனம் போன்ற இயல்பு 2. பிளவுநிலை ஆளுமையை குண நலனாகக்கொண்ட பண்பியல்பு.

schilatter's disease : ஷிலாட்டர் நோய் : எலும்புக்கும் கருமூல மான வெண்ணில நிறமுடைய கெட்டியான மணிப்பசைப் பொருளில் ஏற்படும் அழற்சி.

schlemm's canal : கருவிழி நிணநீர்க்குழாய் : விழி வெண்படலத்திற்கு அருகே, சூழ்ந்திருக்கும் கருவிழியின் சந்திப்பின் உட்பகுதியில் உள்ள நிணநீர்க் குழாய்த் தொகுதி.

scholz's disease : ஸ்கோல் நோய் : மரபு வழித் தோன்றும் இனச் சிதைவு நோய். இது மனவளர்ச்சிக் குறைபாட்டுடன் தொடர்புடையது.

shuffner's dots : ஷீஃப்னரின் புள்ளிகள் : ஜெர்மானிய ஒட்டுண் னியியலாளர் வில்ஹெல்ம் ஷீஃப்னரின் பெயர் கொண்டவை வாக்ஸ் மலேரியா காய்ச்சலில் காணப்படும் புள்ளிகள் கொண்ட இரத்தச் சிவப்பணுக்கள்.

Schwann cell : ஸ்ஷ்ச்வான் அணு : ஜெர்மன் உடற்கூறியலார் தியோடார் ஸ்ஷ்ச்வான் பெயர் கொண்ட வெளிப்பரப்பு நரம்பு மண்டல அணுக்களில் ஒன்று, புறப்பரப்பு நரம்பிழைகளுக்கு மற்றும் நரம்புறையும் உண்டாக்குவது.

Schwartze mastoidectomy : ஸ்ஷ்ச்வார்ட்ஸ் முகைய என்பு நீக்கம் : ஜெர்மன் செவியியலார் ஹெச் ஸ்ஷ்ச்வார்ட்ஸ் பெயராலழைக்கப்படும் நடுச்செவியைத் தொடாமல் கிடைக்கக் கூடிய எல்லா அணுக்களையும் முகையக் குழிவறையையும் அறுத்து நீக்கல்.

Schwartze sign : ஸ்ச்ஷ்வார்ட்ஸ் குறி : செவி இறுக்கத்தில் செவிப் பறையின் ஊடாகக் காணப்படும் ஒளிர் இளஞ் சிவப்பு நிறம்.

sciatic இடுப்புசார் : இருக்கை யென்பு அல்லது இடுப்பு சார்.

sciatica : இடுப்புச் சந்து வாதம்; இடுப்பு வலி : பிட்டம், பின் தொடை, பின் கால் தசை, பாதம் ஆகியவை சார்ந்த இடுப்புச் சார்ந்த நரம்புகளில் ஏற்படும் வலி.

scieropia : நிழற்காட்சி : பொருள்கள் அவற்றின் நிழலாகத் தெரியும் பார்வைக் கோளாறு.

scimitar syndrome : கொடுவாள் நோயியம் : அபூர்வமான நாளக் கோளாறில் நுரையீரல் சிரை கள் வடிப்பதால் கீழ்ப்பெருஞ் சிரை, ஒரு வளைந்த (கொடுவாள் வடிவ) ஒளிப்பட உருவமாக, வலது இதய ஒரத்துக் கருகில் தோன்றுவது.

scintigraphy : கதிரொளி வீச்சு வரைவு : கதிர்ப்பட மருந்து கொண்டு உருவம் காணும் ஊடகத்தை உட்செலுத்தி கதிரியக்கப் பரவலின் இருபரி மான உருக்கள் தோன்றுவது.

scintillation : ஒளிவீச்சு : 1. ஒளிவீச்சு அல்லது ஒளிப்பொறியை ஒருவர் உணர்தல், 2. ஒரு படிக அல்லது நீர்ம கதிர்வீச்சு கண்டறி கருவியால் உள்ளேற்கப்படும் எக்ஸ் அல்லது காம்மா கதிர் வெளியிடும் ஒளி.

scintiscan : ஒளிவீச்சு பதிவுருள் : உட்செலுத்தப்படும் கதிர்வீச்சு மருந்துப்பொருள் பரவியிருப்பதை ஒளிப்படமாகக் காட்டும் துருவுபடப் பதிவு.

scintiscanner : ஒளிவீச்சு துருவு படக்கருவி : ஒளிவீச்சு பதிவு காட்டப் பயன்படும் கருவி.

scirrhus : நார்தசை கடினப்பட்ட; மகோதரம் : மார்பகத்தின் கடின மான புற்றுநோயின் திண்மையான இணைப்புத் திசுவில் கணிசமாக ஏற்படும் புற்று வளர்ச்சி.

scissor leg deformity : கத்தரி கால்; முட்டிக்கால்; கத்தரி நடைமுடம் :நடக்கும்போது கால்கள் கத்திரிபோல் குறுக்கே செல்லும் உருத்திரிபுக் கோளாறு இது இரட்டை இடுப்பு முட்டு நோயினால் உண்டாகிறது.

sclera : விழி வெண்படலம்; வெள்விழி : வெண்விழிக் கோணத்தின் புறத்தோல். இது கருவிழிப்படலத்தின் முன்புறம் இணைகிறது.

sclerectomy : விழி வெண்படல நீக்கம் : விழிவெண்படலத்தின் ஒரு பகுதியை அறுத்து நீக்குதல்.

scleredema : இறுக்க நீக்கம் : ஒரு தீடீர்தொற்றினால் தோன்றும் வீக்கமும் தடிப்பையும் காட்டும் நிலை.

sclerema : விழி வெண்படலக் காழ்ப்பு : விழி வெண்படலத்தின் தோல், சவ்வுப் பொருள் படிவதால் கடினமடைதல்.

scieroblastema : உள்ளரிக் காழ்ப்பு அணு : கருத்திசுவிலிருந்து எலும்பு உண்டாதல்.

scleromalacia : விழிவெண்படல நலிவு : விழிவெண்படலம், திசுவழிந்து மென்மையாதல்.

scleriasis : காழ்ப்பு நோய் : இழைமக் காழ்ப்புக் கோளாறு.

scleritis : விழிவெண்படல அழற்சி : விழி வெண்படலத்தில் ஏற்படும் வீக்கம். sclerocorneal : விழி வெண்படலம் கருவிழி சார்ந்த : விழி வெண்படலம், கருவிழி ஆகிய தொடர்புடைய.

scleroderma : கெட்டிமேல்தோல்; இணைப்புத் திசுக் கடினமாதல் : கடினமான மேல் தோல் நோய். இதனால், தசை இயக்கம் குறையும், விரல்கள் சுருங்கிவிடும்.

scleroma : இழைமக் காழ்ப்பு : இழைமக் காழ்ப்புக் கோளாறு.

scleromeninx : மூளையுறை : மூளை, தண்டுவடம் ஆகியவற்றை முடியிருக்கும் சவ்வுறை.

scleromere : இறுக்க என்பு :எலும்புக்கூட்டின் முள்ளெலும்புத் துண்டு போன்ற ஒரே மாதிரியான துண்டுப்பகுதி.

scleromyxedema : தடிசீதச்சவ்வு வீக்கம் : கொப்புளங்களின் அடியில் தோல் தடித்து சீதச்சவ்வு வீக்கம்.

scleronyxis : நகக்காழ்ப்பு : நகங்கள் தடித்து இறுகியிருத்தல்.

sclerophthalmia : விழிவெணபடலநோய் : விழிவெண்படல ஒளிபுகாநிலை பளிங்குப் படலத்துக்கும் பரவி, அதில் சிறு நடுப்பரப்பு மட்டும் ஒளிபுகும், பிறவிக் கோளாறு.

scleroprotein : காழ்மப்புரதம் : கரையா உள்ளமைப்புப் பொருட்களை உற்பத்தி செய்யும் திறன் படைத்த புரதம்.

sclerosant : காழ்ப்பூட்டுபொருள் : சிரை நாளச் வீக்க சிகிச்சையில் பயன்படுத்தப்படும் வேதிப்பொருள். இதை சிரைக்குள் ஊசிவழியாக செலுத்தும் போது, அழற்சியுண்டாக்க இறுதியில் நார் மிகுந்து உள்ளிடத்தை முடிவிடுகிறது.

sclerosis : அணும உள்ளரிக் காழ்ப்பு; நுரையீரல் கடினமான : ஒரு திக அளவுக்குமீறிக் கெட்டிப்படுதல் அல்லது வீக்கமடைதல்.

'scleroskeleton : தசையெலும்பாக்கம் : தசை நார்கள் எலும்பு போல் காழ்ப்புடையதாகுதல்.

scierostenosis : காழ்மக்குருக்கம் : குறிப்பாக ஒரு துளையைச் சுற்றியுள்ள திசுக்கள் இறுகிக் குறுக்குதல், சுருக்குதல்.

sclerostomy : விழிவெண்படல துளைப்பு : கண்மிகை அழுத்த நோய்க்கு மருத்துவம் செய்ய விழி வெண்படலத்தில் அறுவை மூலம் துளை செய்தல்.

sclerotherapy : இழைம நாளக் காழ்ப்பு மருத்துவம் : மூலநோய் அல்லது விரிநாளச் சிரைகளுக்கு மருத்துவம் செய்ய காழ்ப்பூட்டு பொருளை ஊசிவழி செலுத்தல். sclerotic : 1. கண்ணின் வெண் சவ்வு : வெண்விழிக் கோளத்தின் மேல்தோல், 2. இழைமக் காழ்ப்பு சார்ந்த இழைமக் காழ்ப்புக் கோளாறு தொடர்பு உடைய.

Sclerotome : விழிவெண்படல வெட்டுக் கத்தி : 1. விழிவெண் படலத்தை அறுப்பதற்கு பயன் படுத்தப்படும் கத்தி. 2. வளர்கருவின் முதுகுத் தண்டை நோக்கி நடுப்படைப் பகுதியிலிருந்து நகர்ந்து செல்லும் நடுப்பட்டை அணுக்களின் தொகுதி முதுகெலும்புகளாகவும் விலா எலும்புகளாகவும் வளரும்.

sclerotomy : விழிவெண்படல அறுவை : கடுமையான கண் விழிவிறைப்பு நோயைக் குணப்படுத்துவதற்காக வெள்விழிக் கோளத்தின் புறத்தோலைக் கீறிவிடுதல்.

scolex : நாடாப் புழுத்தலை; புழுத்தலை தலைப்பகுதி : குடல் சுவரில் ஒட்டிக் கொண்டிருக்கும் நாடாப்புழுவின் தலை.

scoliosis : முதுகெலும்புப் பக்க வளைவு; பக்க வளைவு; வளை முதுகு : முதுகெலும்பு பக்கவாட்டில் வளைந்திருத்தல். இது பிறவியிலோ அல்லது பின்னரோ ஏற்பட்டதாக இருக்கலாம். முள்ளெலும்பு, முதுகெலும்புப் பக்க வளைவு தசைகள், நரம்புகள் ஆகியவை திரிபடைவதால் இது உண்டாகிறது.

scopalamine : ஸ்கோப்பாலமின் : பல்வேறு தோட்டச் செடி யினங்களிலிருந்து பெறப்படும் அசிட்டைல் கோலினுக்கெதிரான காரகம் ஹையோஸ்சின்.

scorbutic : சொறி நோயாளி : வைட்டமின்-சி உயிர்ச் சத்துப் பற்றாக்குறையினால் உண்டாகும் வயிறு வீக்கம் சொறிகரப்பான் போன்ற நோய்களினால் பீடிக்கப்பட்டவர்.

scordinema : கொட்டாவி : தலை கனத்துடன் கொட்டாவி விடு தலும் நெளித்துக் கொள்ளுதலும்.

scotomisation : திரைநோய் தோற்றம் : திரைநோய் வளர்ச்சி குறிப்பாக மனத்திரை நோயில், தன் முனைப்புணர்வால் மாறான எந்த ஒரு பொருளையும் கருத்தையும் மறுத்தல்.

scotodinia : தலைச்சுற்று; மயக்கம்.

scotoma : பார்வைப் பரப்பில் குறிப்பிட்ட குறைவு; திரை நோய்; இருட்புள்ளி : பார்வை பரப்பெல்லையில் ஒரு குறிப்பிட்ட பகுதி மறைப்பு.

scotophilia : இருள்வேட்கை : இரவை, இருளை விரும்புதல் முன்னுரிமையாக ஏற்றல்.

scotophobia : இருள்வெறுப்பு : பகுத்தறிவுக் கொவ்வாமல் இருள் கண்டு பயப்படுதல்.

Scott's dressing : ஸ்காட் கட்டு மருந்து : கற்பூரம், ஒலிவ எண் ணெய், பாதரசம் தேனிமெழுகு ஆகியவை அடங்கிய ஒரு களிம்பு மருந்து. இதனைக் கட்டித் துணிகளில் பூசி வீங்கிய மூட்டுகளில் கட்டுகிறார்கள்.

scour : குடல் கழுவுதல் : குடலை நன்றாகக் கழுவுதல்.

scourge : கொள்ளை நோய்.

scout films : முன்னோட்டப்படம் : ஒருமுறையான உருப்பதிவுப் பட ஆய்வுக்கு முன் அதன் அடிப்படையாக எடுக்கப்படும், ஒரு உடற்பகுதியின் முன்னோட்ட எக்ஸ்ரே படம்.

scratch : கீறல்; கீறல்காயம் : சிராய்ப்புக் காயம்.

scratching : சொரிதல் : நகத்தால் பிறாண்டுதல்.

scrapie : ஆட்டு நோய்க்கிருமி : வெள்ளாடுகள், செம்மறியாடுகள் ஆகியவற்றிலிருந்து மனிதருக்குத் தொற்றும் நோய்க் கிருமி.

screen : திரை தேர்வுச் சோதனை : 1. சில நோய்கள் அல்லது சில குணநலன்களைக் காண்பதற்காக செய்யப்படும் சோதனை. 2. திரைப்படங்கள் அல்லது குறுந்தட்டுகளைக் காட்டப் பயன்படுத்தப்படும் தட்டைப் பரப்பு. 3, எக்ஸ் கதிர்கள் மற்றும் சூரியக் கதிர்களின் தாக்க பாதிப்பிலிருந்து காத்துக் கொள்ளப் பயன்படும் அமைப்பு.

screening : பார்வை மறைப்பு; திரையிடல்; பொதுச் சோதனை : படலததால கண்பாாவை மறைதல.

scrofula : கண்டமாலை : எலும்பில் அல்லது நிணநீர்ச் சுரப்பியில் உண்டாகும் காசநோய். scrofuloderma : கண்ட மாலைப் புண் : எலும்பு அல்லது நிண நீர்ச் சுரப்பிகளின் கீழ், காச நோய்ப் புண்கள் காரணமாகத் தோலில் ஏற்படும் நைவுப்புண்.

scrotoplasty : விரைப்பை சீரறுவை : விரைப்பையை மறு சீரமைக்கும் அறுவை.

scrotum : அண்டகோசம் : விரைப்பை ஆண்களின் விரைப்பை.

scrub nurse : அறுவை உதவி செவிலியர் : தொற்று நீக்கிய அறுவை மருத்துவத்தில் கலந்து கொள்ளும் செவிலியர்.

scuf : பிடரி கழுத்தின் பின்புறம்.

scurt : பொடுகு : தோல் பொருக்கு உதிர்தொலி, கழி தோல், வங்கு மேற்புறச்செதிள்.

scurvy : எதிர் வீக்கம் : வைட்ட மின்-சி உயிர்ச்சத்துப் பற்றாக் குறை காரணமாக ஏற்படும் சொறிகரப்பான், பல் எகிர்வீக்க நோய். இதனால் சோர்வும் பல்லில் குருதிக்கசிவும் உண்டாகும்.

scurvy-grass : எதிர்வீக்க மருந்துச்செடி : வைட்டமின்-சி உயிர்ச்சத்துக் குறைபாட்டி னால் உண்டாகும் எகிர்வீக்கக் கோளாறைக் குணப்படுத்தும் கடுகுக் குடும்பச் செடி.

scutiform : கேடயவுரு : கேடயத்தைப் போன்ற வடிவம் கொண்ட.

scutum : முட்டுச் சில்லு : ஒட்டுண்ணிகளின் மேல்புறக் கவசத்தோடு.

searcher : தேடுகருவி : சிறு நீர்ப்பையில் கல் உள்ளதா எனக் கண்டறியும் ஒரு (உலோகக்) கருவி.

sebaceous : கொழுப்பு சார்ந்த; சர்ம மெழுகு.

sebaceous cyst : எண்ணெய் சுரப்பி அடைப்பு : தோலிலுள்ள எண்ணெய் சுரக்கும் சுரப்பி அடைபடுதல்.

sebaceous duct : மயிர்ப்பை எண்ணெய்க்குழாய்.

sebaceous follicle : மயிர் மூட்டுப்பை.

sebaceous gland : மயிர்ப்பை எண்ணெய்ச் சுரப்பி; சர்ம மெழுகு சுரப்பி.

sebaceous humour : மயிர்ப்பை நெய்மம்.

seborrhoea : உச்சித் தோல் நெய்ப்பசை; மயிரடிச் சுரப்பு மிகைப்பு; மெழுகு ஊறல் : மயிர்க்கால் எண்ணெய்ச் சுரப்பிகள் அளவுக்கு அதிகமாகச் சுரப்பதால் உச்சிவட்டக் குடுமித் தோலில் உண்டாகும் நெய்ப்பசை.

sebum : மயிர்க்கால் எண்ணெய்; நெய்யம்; சர்ம மெழுகு : மயிர்க் கால் எண்ணெய்ச் சுரப்பிகளில் இயற்கையாகச் சுருக்கும் எண்ணெய். இதில் கொழுப்பு அமிலங்கள், கொழுப்பு, இறந்த உயிரணுக்கள் அடங்கியிருக்கும்.

secobarbital : சீக்கோபார்பிட்டல் : தூக்க மூட்டியாகவும் அமைதிப் படுத்தியாகவும் பயன்படுத்தப்படும் குறுங்காலத்துக்கு செயல்படும் பார்பிட்டுரேட்.

second opinion : மறு அறிவுரை : நோய்காணல் சரியாக அறிவுறுத்தப் பட்ட மருத்துவ முறை ஏற்றதுதானா என மற்றொரு நலவாழ்வு ஆலோசகரிடம் பெறும் (டாக்டரின்) அறிவுரை.

secondary sypphilis : இரண்டாம் நிலைக் கிரந்தி.

secondary immunisation : மறு முறை நோய்த் தடுப்பு.

secretagogue : சுரப்பூக்கி : 1. சுரப்பை ஊக்குதல் 2. சுரப்பை ஊக்குவிக்கும் பொருள்.

secretin : முன் சிறுகுடல் சுருப்பு நீர் : முன் சிறுகுடல் சவ்வுப்பட லத்தில் சுரக்கும் ஒர் இயக்கு நீர் (ஹார்மோன்). இது கணையநீர் பெருமளவு சுரக்கத் துண்டுகிறது.

secretion : சுரப்புநீர் சுரத்தல் : உடலிலுள்ள ஒரு சுரப்பியில் சுரந்து, உணவுக்குழாய்க்கு அல்லது இரத்தத்திற்கு அல்லது புறத்தே செல்லும் நீர்மப் பொருள்.

secretogogue : சுரப்பூக்கி : மின்பகுப்புப் பொருளையும் நீர்மத்தையும் இரைப்பைக் குடல் சுரக்க ஊக்கும் பொருள்.

secretomotor : சுரப்பியக்க : சுரப்பைத் தூண்டும் (நரம்புகளை குறிக்கும்).

secretor : சுரப்பி : 1. உமிழ்நீர், இரைப்பைப் பாகு அல்லது விந்து நீரில், ஏபிஓ இரத்த வகைக்கான, விளைவியங்களை சுரக்கும் ஒருவர். 2. கரப்பிகள் குறிப்பிட்ட பொருள்களை உற்பத்தி செய்யும் முறை.

secretory : சுரப்பித்தல் : ஒரு சுரப்பி, சுரப்பு நீரை சுரப்பிக்கும் செயல்.

sedation : சமனப்படுத்துதல்; அமைதியூட்டல் : உணர்ச்சியைச் சமனப்படுத்துதல்.

sedative : சமன மருந்து; அமைதியூட்டி : உணர்ச்சியைச் சமனப்படுத்தும் மருந்து நோவகற்றும் மருந்து.

sedentary : உடலியக்கமில்லா : 1. அதிகம் உட்கார்ந்த நிலை, 2. உட்கார்ந்து பொழுதை கழிக்கிற, 3. குறைவான உடற்பயிற்சியோடு வாழும் முறை.

sediment : படிவு; மண்டி; வண்டல்.

sedimentation rate : படிவு வேகம் : இரத்தச் சிவப்பணுக்கள் படிவுறும் வேகம். seed : விதை : 1. ஆண் இனப் பெருக்க நீர், விந்தணு, 2. புதிய தாவரங்கள் அல்லது பிராணிகள் உற்பத்தியாவதற்காக, தாவரங்கள் மற்றும் பிராணிகள் உண்டாக்கும் பொருள். 3. ரேடான் அல்லது ரேடியம் கொண்டகேப்சூல்) மருந்துறை.

segmentation : உடற்கூறு துண்டம்; துண்டுபடுதல் : 1. ஒரே மாதிரியான பகுதிகளாக பிளவுறுதல், 2. பெருங்குடல் பிளவு பெருங்குடலில் சுருக்க வளையங்கள் மெதுவாக உருவாவதும் விரிவடைவதும்.

segregation : தனிமைபடுத்துதல்; பிரித்தல்; ஒதுக்கம் : மர பணுவியலின், இணை இனக்கீற்றுகளை ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரித்து வைத்தல். கருமுனை அணுக்களின் அணு இயக்க மாற்றத்தின்போது இவ் வாறு செய்யப்படுகிறது.

seizure : திடீர்நோய்ப்பிடிப்பு : 1. ஒரு நோய் திடீரென்று தாக்குவதும் மீண்டும் வருவதும். 2. மூளையிலிருந்து ஒரு மின் தூண்டல் உண்டாக்கும் நிகழ்ச்சி.

Seldinger needle : செல்டிங்கர் ஊசி : தமனிக்குள் குழலைச் செருகுவதற்குப் பயன்படும் ஊசி. ஊசியின் வழியாக ஒரு வழிகாட்டும் கம்பியைச்செலுத்தி பிறகு வழிகாட்டும் கம்பி வழியாக குழலைச் செலுத்து தல், ஸ்வீடன் நாட்டு மருத்துவர் ஸ்பென் செல்டிங்கர் பெயர் கொண்டது.

selenomethionine : செலனோ மெத்தியோனைகள் : அமினோ அமில மெத்தியோனைனில் இருக்கும் கந்தக அணுவுக்குப் பதிலாகக் கதிரியக்கச் செலினியத்தை மாற்றி வைக்கும் ஒரு ஊசி மருந்து. இது கணைய நோய்களைக் கண்டறியப் பயன் படுகிறது.

self-infection : தன்னோய் இழைப்பு; தன்னோய் தொற்றல் : உடலின் ஒரு பகுதயிலிருந்து இன்னொரு பகுதிக்கு நுண்ணுயிரிகளைத் தன்னையறியாமல் மாற்றுதல். இதனால் மற்ற பகுதியில் நோய் உண்டாகும்.

sella turcica : கபச் சுரப்பிக்குழி.

semantics : சொற்பொருள் ஆய்வியல் : சொற்களுக்கு பொருள் உருவானதைப் பற்றியும் அவற்றின் முக்கியத்துவம் குறித்த பாடம்.

semeiography : நோய்க்குறி விளக்கம் : ஒரு நோயின் உடல் தன்மைகளையும் அறிகுறிகளையும் உணர்குறிகளையும் பற்றிய விளக்கம்.

semeiotic : நோய்க்குறிதொடர்பான : 1. அறிகுறிகள் மற்றும் உணர்குறிகள் தொடர்பான. 2. நோய் இன்னதென்று குறிப் பிட்டுக் காட்டுகிற.

semen : விந்து (ஆண் கரு); விந்துநீர் : விந்துப்பைகளிலிருந்து சுரக்கும் விந்து நீர். இதில் பெண்கருமுட்டைக்குப் பொலி ஆட்டும் விந்தணு உள்ளது.

semicircular canals : அரைவட்டக் குழல்கள் : உட்செவி வளையுறுப்புகள்.

semicoma : அரைகுறைச் சன்னி மயக்கம்; அரை நினைவு.

semicomatose : அரைகுறைச் சன்னி மயக்குமுள்ள; மயக்குறும் நிலை :அரை மயக்கம் அல்லது அரை நினைவு மயக்கத்திலிருக்கும் நிலை.

semiflexion : பாதிமடக்கம் : மடக்கலுக்கும் நீட்டலுக்கும் இடைப்பட்ட உறுப்பின் நிலை.

seminuria : விந்துச்சிறுநீர் : சிறுநீரில் விந்து வெளியாதல்.

semina : விந்து சார்ந்த : விந்து தொடர்புடைய விதை போன்ற.

seminiferous : விந்து கொண்டு செல்கிற; விந்து நுண் குழல்கள்; விந்தேந்தி : விந்தினை உண்டாக்குகிற ஆணின் கருவைக் கொண்டு செல்லுகிற.

seminoma : விரைக்கட்டி; விரைப் புற்றுக்கட்டி : விரையில் ஏற்படும் உக்கிரமான கட்டி.

semiology (semiotics) : நோய்க் குறியியல் : நோய்க் குறிகளை ஆராயும் அறிவியல்.

semipermeable : நீர்புகும் சவ்வு; நீர் ஊடுருவும் சவ்வு : கரைசலில் கரைபொருள் புகவிடாமல் கரை நீர்மம் மட்டும் புகவிடுகிற சவ்வு.

semiquantitative : அளவுக்குக் குறைவான : அளவினடிப்படையான முடிவுக்கு கொஞ்சம் குறைந்த ஒரு பொருளினளவு.

semisulcus : சிறுகுழிவு : ஒரு அமைப்பு அல்லது ஒரு எலும்பின் ஒரத்திலுள்ள ஒரளவான கோட்டுக் குழிவு.

semisupination : ஓரளவு முன் திருப்பல் : மல்லாந்து படுத்தலுக்கும் குப்புறப்படுத்தலுக்கும் இடையில் உள்ள நிலை.

semisynthetic : ஓரளவு கூட்டிணைந்த : ஒரு இயற்கைப் பொருளுக்கு விரும்பத்தக்க குணங்களை ஏற்படுத்த ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கூட்டிணைப்புப் படிநிலைகளால் உருவான ஒரு வேதியக் கூட்டுப்பொருள்.

Semon's law : சீமன் விதி : பிரிட்டன் நாட்டு தொண்டையியலார் ஃபெலிக்ஸ் சீமன் பெயரிட்டவிதிப்படி மீள்குரல் வளை செயலிழப்பு அதிகமாவ தால் குரண்நாண் நடுநெருங்கு முன் நடுவிலகலை இழப்பது.

Semple vaccine : செம்பிள் தடுப்பூசி : பிரிட்டன் நுண்ணுயிரியலாளர் டேவிட் செம்பிள் பெயர் கொண்ட முயல்மூளைத் தொற்றை ஃபீனால் கொண்டு, செயலிழக்கச் செய்ய தயாரிக்கப்பட்ட வெறி நாய்க்கடி நோய் தடுப்பூசி.

senescence : மூப்படைதல்; முதுமைக்கூர்வு; முதுகை : வயது முதிரும்போது உடலிலும் உள்ளத்திலும் இயல்பாக ஏற்படும் மாறுதல்கள். கிழத் தன்மையுறுதல்.

senile : முதுமைத்தளர்ச்சி; மூப்பு : வயது சென்றதன் காரணமாக ஏற்படும் முதுமைத் தளர்ச்சி.

senility : முதுமை : முதுமைத் தளர்வு. கிழத்தன்மை.

senna : நிலவாவிரை (சென்னா) : மலமிளக்கி (பேதி) மருந்தாகப் பயன்படுத்தப்படும் நிலவா விரை என்னும் செடி இனம். இதன் இலைகளும் நெற்றுகளும் பேதி மருந்தாக இந்தியாவிலும், எகிப்திலும் பயன்படுத் தப்பட்டன.

Senokot : செனோக்கோட் : தரப்படுத்திய நிலவா விரை (சென்னா) மருந்தின் வணிகப் பெயர்.

senopia : முதுமைப்பார்வை : விழிவில்லை உட்கருகாழ்ப்பு அதிகரிப்பதால் முதியவர்களில் கிட்டப்பார்வையில் முன்னேற்றம் தெரிதல். இறுதியில் அது உட்கருப்புரை உண்டாக்குகிறது.

sensation : உணர்வறிவு : உடலுக்குள்ளிருந்து வெளி மூலங் களிலிருந்தும் பெறப்பட்ட உணர்வுகளை உணர்ந்தறிதல்.

sense : உணர்வு : 1. உணர்வு, பொருட்களை அறியும் ஆற்றல். 2. நிறம் பொறுத்து நிற வேறுபாடுகளை அறியும் திறன். 3. மூட்டுணர்வு, தசையுணர்வு, இயக்க உணர்வு, செயப்பாட்டு இயக்கம், பாகுபடுத்தியுணர்தல்.

sensibility : உணர்திறன் : உணர்ச்சித் தூண்டல்களை உணரக்கூடிய திறமை.

sensible : புலனுணர்வு; புலனறி; புலனாகு : புலன்களால் உணரக் கூடிய தன்மை, உணர்வுள்ள.

sensitive : உணர்வுத் திறன் கொண்ட : 1. உணர்வுகளை உணரும் திறன். 2. தூண்டலுக்கு ஏற்பச் செயல்படுதல். 3. முன் பட்டறிவால் பாதிக்கப்பட்ட ஒருவர்.

sensitivity : உணர்ச்சித்திறன்; கூருணர்வு : மிகு உணர்வு, உணர்ச்சித் தன்மை, துச்ச உணர்வு. sensitization : கூருணர்ச்சிப்பாடு : உணவு, பாக்டீரியா, தாவரங்கள், வேதியியல் பொருள்கள், மருந்துகள், ஊனீர் முதலியவற்றுக்கு ஒருவர் கூருணர்வுடையவராக இருக்கும்படி செய்தல்.

sensorineural : உணர்ச்சி நரபணு : உணர்ச்சி நரம்பணுக்கள் தொடர்புடையது. உணர்ச்சி நரம்பணுச் செவிடு என்பது நரம்புச் செவிடு எனப்படும்.

sensorium : உணர்வு மையம் : 1. உணர்ச்சி உறுப்பு. 2. உள்ள நினைவுநிலை.

sensory : உணர்ச்சி சார்ந்த நரம்பு : மூளைக்கும் முதுகந்தண்டுக்கும் தூண்டல்களைக் கொண்டு செல்லும் நரம்புகள்.

sensory (sensorial) : உணர்ச்சி மண்டலம் சார்ந்த; புலன் சார்; உணர் : உணர்வு மண்டலம் தொடர்புடைய முளை பற்றிய, புலன்கள் சார்ந்த.

sensory nerve : உணர்ச்சி நரம்பு; உணர் நரம்பு; புலன்சார் நரம்பு.

sensual : புலன்சார் : புலன் சார்ந்த இன்ப உணர்வு கொண்ட அல்லது தொடர் புடைய.

sentiment : உணர்ச்சி ஆர்வம்; பாச உணர்வு : சில ஆட்கள் அல்லது பொருள்களின் மீது உள்ள உணர்ச்சி பூர்வமான பற்றார்வம். இது சுற்றுச்சூழல் அனுபவத்தால் அதிகமாகிறது.

sentineal clot : காவல் உறைக் கட்டி : ஒட்டியுள்ள குருதியுறை கட்டி அல்லது இரைப்பை சிறுகுடல் மேற்பகுதி உள்நோக் கயில் காணப்படும் வயிற்றுப் புண் பகுதியில் நன்கு தெரியும் குருதி நாளம்.

sentinel loop : காவல் வளையம் : திடீர் கணைய அழற்சியில், இரைப்பைக்குடல் மேற்பகுதி கதிர்ப்பட வரிசையில் காணப்படும், இடைச்சிறு குடலின் விரிந்த பகுதி.

sentinel node : வாயில் காவல் கணு : 1. இரைப்பைப்புற்று நோயில் சேய்மத் தாக்கத்தால், ஒரு தனியான பெரிதான இடது காறையெலும்பின் மேல் நிணக் கணு இருப்பது, கட்டி-அறுத்து நீக்க முடியாத நிலையை காட்டுகிறது. 2. பித்தப்பை பொதுபித்த நாள சந்திப்பில் உள்ள பித்தப்பை நிணநீரை வடிக்கும் நிணக்கணு.

sentinel pile : வாயில் மூலம் : நாட்பட்ட குதப்பிளவின் கீழ் முனையிலுள்ள தோல்துண்டு.

sepsis : சீழ்த்தொற்று; குருதியில் நுண்ணுயிர் நஞ்சேறுதல்; சீழ்ப்பிடிப்பு; சீழ்மை : காயத்தில் சீழ் உண்டாக்கும் உயிரிகளினால் ஏற்படும் சீழ் நச்சு.

septal abcess : பிரிப்புச் சுவர்க்கட்டி; இடைச் சுவர்க்கட்டி.

septan : வார (காய்ச்சல்) : ஏழு நாட்களுக்கு ஒருமுறை (வருகிற காய்ச்சல்).

septic : நச்சூட்டுப்பொருள்; நுண்ணுயிர் மடிவு : அழுகச் செய்யும் ஊறு நச்சு.

septic tank : நச்சுத்தடை மலக் குழி; அழுகு தொட்டி.

septicemia : குருதி நச்சூட்டு : குருதியோட்டத்தில் உயிர் வாழும் நோய்க் கிருமிகள் பெருக்கமடைதல்.

septoplasty : பிரிசுவர் சீரறுவை : மூக்குப் பிரிசுவர் மறுசீரமைப்பு அறுவை.

septostomy : பிரிசுவர்துளைப்பு : பிரிசுவரில் ஒரு துளையை அறுவை சிகிச்சையில் உண்டாக்குதல்.

septum : பிரிப்புச்சுவர்; இடைத் தடுப்பு; பிரிதிசை; இடைச்சுவர்; தடுப்பு : உறுப்பிடைத் தடுக்கு, எடு: மூக்கின் இருதுளைகளின் இடைப்பகுதி.

sequela : நோய்ப்பின்தளர்ச்சி; நோய்த் தாக்கம் பின் விளைவு : நோயின் பின் விளைவாக உண்டாகும் தளர்ச்சி நிலை. எடு: அம்மை நோயினால் ஏற்படும் தழும்பு.

sequestrant : ஒதுக்கற்பொருள் : சிறுகுடலில் பித்த அமிலங்கள் உள்ளுறிஞ்சலைத் தடுத்துக் கட்டும், கோலிஸ்டிரமின் போன்ற ஒதுக்கப்பொருள்.

sequestration : பிரித்து ஒதுக்கல் : 1. சூழ்ந்துள்ள நல்ல திசுக்களி லிருந்து பிரிக்கப்பட்ட பகுதி. 2. சுழலோட்டத்தில் கலந்து கொள்ளாத இரத்த அல்லது அதன் நீரஇழப்பு.

sequestrectomy : இற்ற எலும்பு அறுவை; ஒதுக்கெடுப்பு : எலும்புக்கூட்டுத் தொடர்பற்று இற்றுப்போன எலும்பினை வெட்டியெடுத்தல்.

sequestrum : இற்ற எலும்பு; மடிந்த எலும்புத் துண்டு; ஒதுக்க எலும்பு; துண்டெலும்பு : எலும்புக் கூட்டுடன் தொடர்பற்று இற்றுப்போன எலும்பு.

sequoiosis : செக்குவோவின் நிலை : செம்மரத்தூள் போன்ற வெளிப்பொருள் ஒவ்வாமையால் ஏற்படும் (துரையீரல்) நுண்ணறையழற்சி.

serial passage : வரிசையாய் செலுத்துகை : ஏமக்காப்பு திறன் இருக்க வைத்து, உயிரியின் தீவிரத்தை மட்டுப்படுத்த, நோயுண்டாக்கும் உயிரியின் துணைக்கு குழுக்களை பிராணிகள், திசுவளர்ம அணுக்கள் அல்லது வளர்ச்சி ஊடகங்களின் வழியாக திரும்பத் திரும்ப செலுத்துகை.

sero-diagnosis : குருதி வடிநீர் நோய் ஆய்வு : குருதி வடி நீரைக் கொண்டு நோயைக் கண்டறிதல்.

seroenteritis : குடல் ஊநீர் உறையழற்சி : குடலின் ஊநீர் உறை அழற்சி.

serofibrinous : ஊநீர் இழைய : ஊநீரும், இழைமமும் சேர்ந்த ஊநீர் இழைம வெளிப்பாடு.

serogroup : ஊநீர்தொகுதி : பொதுவான விளைவியம் கொண்ட, கிருமித் தொகுதி.

serology : குருதி வடிநீரியல் ஊநீரியல் : குருதி வடிநீர்களை ஆராயும் அறிவியல்.

seromuscular : ஊநீர்த்தசைய : குடலின் ஊநீர் மற்றும் தசையுறைகள் தொடர்பான.

seronegative : ஊநீர்மாறான : ஊநீர்ச் சோதனைகளில் சில வற்றில் நேர் எதிரான விளைவு தரும்.

seropositive : ஊநீர் நேரான : சில ஊநீர்ச் சோதனைகளில் நேரான விளைவைத் தருகின்ற.

seropurulent : ஊநீர் சீழ் சார்ந்த : ஊனிரும் சீழும் உடைய.

seroreaction : ஊநீர் விளைவு : ஊநீரில் அல்லது ஊநீர் தொடர்பான விளைவு.

serosa : ஊனீர்ச் சவ்வு : அடி வயிற்று உள்ளுறுப்புகளை முடியிருக்கும் வபைச் சவ்வு.

serosanguinous : ஊநீர்க்குருதிய : ஊநீரும் இரத்தமும் கொண்ட.

seroserous : ஊநீர் ஊநீர : இரண்டு அல்லது மேற்பட்ட சீரச் சவ்வு தொடர்பான.

serositis : ஊனீர்ச் சவ்வு அழற்சி; சவ்வுப்படல அழற்சி : ஊனிர்ச் சவ்வில் ஏற்படும் வீக்கம்.

serosurvey : ஊநீர் ஆய்வு : ஒரு குறிப்பிட்ட நோய் தாக்கப் படக்கூடிய ஆபத்து உள்ளதா என தீர்மானிக்க ஆட்களில் செய்யப்படும் ஊநீர் சார்பான ஆய்ந்தறி சோதனை.

serotherapy : ஊநீர் மருத்துவம் : ஏமக்காப்பு ஊநீர் அல்லது நச் செதிரியை ஊசி மூலம் செலுத்தி தொற்றுக்கு மருத்துவம் அளித்தல்.

scrotum : விந்துச் சுரப்பி தாங்கி.

serotype : ஊநீர் வகை : ஒரு நுண்ணுயிரியின் வகையை அதனுள்ளிருக்கும் விளைவியங்களைக் கொண்டு தீர்மானித்தல். serous : ஊனீர் சார்ந்த; சவ்வுப் படலம்.

serous membrane : ஊனீர்ச் சவ்வு : உள்ளுறுப்புகளின் உள்வரியாகப் பொதிந்துள்ள ஊனீர் தோய்ந்த மெல்லிய சவ்வு.

serovaccination : ஊனீர்தடுப்பூசி : ஒரு மாற்றப்பட்ட அல்லது கொல்லப்பட்ட உயிரியை தடுப்பூசி மூலம் செலுத்தி பின்னர் செயலூக்க ஏமக்காப்பும், ஊநீரை ஊசி மூலம் செலுத்தி செயப்பாட்டு ஏமக்காப்பும் என கலப்பு ஏமக்காப்பு உண்டாக்கும் செய் முறை.

serpiginous : பாம்புப் படை : பாம்புபோல் சுருள்சுருளாகப் படரும் படைச்சுற்று நோய்.

serpigo : படை : படர்நோய்.

serratia : செராஷியா : மனிதர்களுக்கு நோய் உண்டாக்கக் கூடிய கிராம் சாயம் எடுக்காத ஒருவகை நோய் நுண்மம். இது மருத்துவ மனைகளில் மிகுதியாக இருக்கும்.

serratus muscle : பற்தசை : விலா எலும்புகளிலிருந்து அல்லது முள்ளெலும்புகளிலிருந்து, தனித்தனி துண்டுளாக கிளம்பும் பலதசைகளில் ஒன்று.

sertoli cells : செர்ட்டோலி அணுக்கள் : இத்தாலிய மருத்துவர் என்ரிஸ் செர்ட்டோலியின் பெயர் கொண்ட, விரையின் செனிப்படுக்குகளை தாங்கும் அணுக்கள்.

sertoli tumour : செர்ட்டோலிக் கட்டி : பெண்ணிய இயக்குநீர்களை சுரக்கும், தீங்கற்ற விரைக் கட்டி.

serum : குருதி வடிநீர்; ஊனீர்; வடிநீர்; குருதிநீர் : உடலில் உணவிலிருந்து ஊறும் கொழுப்பு கலந்த வெள்ளை நோயைக் குணப்படுத்தும் பொருளாகப் பயன்படுத்தப் படும் விலங்கின் குருதி நிணநீர்.

serumlipids : குருதிக்கொழுப்புகள்.

serum sickness : கொப்புளக் காய்ச்சல்: நிணநீர் ஊசியால் ஏற்படும் கொப்புளக் காய்ச்சல்.

setpoint : நிலைப்புள்ளி : உடலின் கட்டுப்பாட்டு இயக்கங்களால் நிலைநிறுத்தப்படும் கட்டுப்படுத்தப்பட்ட மாறியல் மதிப்புருக்களின் குறியெண்.

sex : பாலினம்; பால் வேறுபாடு : ஆண்பெண் வேறுபாடு.

sex antagonism : பால் வேறுபாட்டு முரண்.

sex appeal : இனக்கவர்ச்சி : பால் வேறுபாட்டுக் கவர்ச்சி; பெண் பாலாரின் கவர்ச்சி. sexduction : பாலினக்கடத்தல் : ஒரு உயிரணுவிலிருந்து மற் றொன்றுக்கு பாலினக் காரணகளால் நுண்ணுயிர் மரபணு மாற்றச் செயல்முறை.

sex instinct : பாலுணர்வு : பால் இயல்யூகம்.

sexology : பாலியல் : பால் மற்றும் பாலினம் பற்றிய அறிவியல் படம்.

sexuality : பாலினத்தன்மை: பாலின வளர்ம வெளியிடு இயக்குநீரின் விளைவாக, இனப்பெருக்க ஆற்றல் மற்றும் மனிதப் பாலின வினைச் செயல் திறன்.

sezary cell : செஜாரி உயிரணு : பிரெஞ்சு தோல் மருத்துவர் ஏ.செசாரியின் பெயர் கொண்ட, ம்யூக்கோபாலி சேக்கரைடுகள் நிறைந்த பல நீரறைகள் கொண்ட டீ நினவணு.

sezary tumour : செசாரிக்கட்டி : டீ தோலின் நின அணுக்கட்டி.

sex urge : பாலுணர்ச்சி வேகம் : இணை விழைச்சு எழுச்சி.

sex linked : பாலின மரபணுக்கள் : பாலின இனக்கீற்றுகளில் அல்லது குறிப்பாக எக்ஸ் இனக்கீற்றுகளில் (குரோமோசோம்) காணப்படும் மரபணுக் களைக் குறிக்கிறது. இவை இப்போது எக்ஸ் இனக்கீற்றுகள் எனப்படுகின்றன.

sexual reproduction : கலவி இனப்பெருக்கம்; பால் சார் இனப்பெருக்கம் :ஆண் பெண் கலவி மூலம் உண்டாகும் இனப்பெருக்கம்.

sexually transmitted disease : பாலுறவு நோய்கள் : பாலுறவு மூலம் பரவும் நோய்கள். முன்பு இவை மேக நோய்கள் என அழைக்கப்பட்டன.

shaft : தண்டு : நீள எலும்பிலுள்ள இருகுருத்து முனை களுக்கிடையேயுள்ள ஒரு நீண்டகம்பு போன்ற அமைப்பு.

shagreen patch : மெருகுத்தோல் பத்து : குதிரைகளின் தோலிலிருந்து தயாரிக்கப்படும் பதனிடப்படாத தோலுக்கு ஒப்பிடப்படும், சதை நிறம் பெற்ற தடிமனான, முதுகிலும், கீழ்முதுகுத் திரிகப் பகுதியிலும் கொப்புளங்கள் நிறைந்துள்ள டியூபெரஸ் ஸ்கிளிரோசிஸ் நோய்.

Shahade-Shah technique : ஷா மற்றும் ஷா நுட்ப முறை : இந்திய அறுவை மருத்துவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட முறையில், பூப்பு மேற்பகுதிக்குள் சிறுவிரலைச் செலுத்தி அதனையொட்டி ஒரு உலோ கக்குழலை, கிழிந்த சிறுநீர்த் தாரைக்குள் (குழல்) செருகும் முறை. sham feeding : புறப்பாலூட்டம்.

shape : வடிவம் : 1. உருவரை, வெளிஉருவம். 2 ஒரு குறிப்பிட்ட வடிவத்திற்கேற்ப அமைத்தல்.

shaping : மாற்றியமைத்தல் : புது நடத்தையை உருவாக்க செய்யப் படும் நடத்தை மாற்ற மருத்துவ முறை.

shear : கத்தரி : ஒரு பொருளின் தளங்களுக்கு இணையாக ஆனால் எதிர்த் திசையில் செலுத்தப்படும் அழுத்தம்.

shearing force : உராய்வு சக்தி : தாங்கப்படும் உடலின் பகுதி எதுவும், சாய்வாக இருக்குமானால், எலும்பின் அருகிலுள்ள ஆழமான திசுக்கள் தாழ்ந்த சரிவை நோக்கி நகர்கின்றன. அதே சமயம், உராய்வு காரணமாகத் தாங்கப்படும் பரப்புடன் தோல் தொடர்ந்து இருக்கும். இந்த உராய்வு ஈரம் காரணமாக அதிகரிக்கிறது. இரத்த நாளங்கள் நீட்டப்பட்டு கோணவடிவ மாகின்றன. இதனால், ஆழமான திசுக்கள் நலிந்து, இழைம அழுகல் ஏற்படுகிறது.

sheath : உறை : குழலுறை, ஒடு அல்லது காப்புறை.

sheepskin : மயிர்க் கம்பளி : அழுத்தப் புண்கள் ஏற்படாமல் தடுப்பதற்காக இயற்கையான அல்லது செயற்கையான மயிர்க் கம்பளிகள் பயன்படுத்தப்படுகின்றன. நோயாளி படுத்த படுக்கையாக அல்லது நாற் காலியில் சாய்ந்து இருக்கும் போது இந்தக் கம்பளிகள் அழுத்தந்தாங்கும் பகுதிகளில் பரப்பி வைக்கப்படுகின்றன.

shelf life : காப்பு வாழ்நாள் : கழிப்பதற்குமுன், பொருத்தமான சூழ்நிலைகளில் ஒரு சிகிச்சைப் பொருள் அல்லது இரத்தப் பொருள் பாதுகாத்து வைக்கப்படும் காலநேரம்.

shelf operation : பந்துக்கிண்ண மூட்டு அறுவை : பிறவியில் உண்டாகும் இடுப்பு மூட்டுப் பெயர்வில் தொடை எலும்பின் பந்துக்கிண்ண மூட்டு பொருந்துகிற குழிவில் செய்யப்படும் அறுவை மருத்துவம். 7-8 ஆண்டுக்காலச் சிகிச்சை பலனளிக்காதபோது, இது செய்யப்படுகிறது.

shiatsu : ஷியாட்சு : மனிதத் தோலில் உட்புறமாக ஏற்படும் தவறான இயக்கத்தைச் சீர்படுத்துவதற்காகவும், குறிப்பிட்ட திசுக்களின் ஆரோக்கியத்தைப் பேணிக் குணப்படுத்துவதற்காகவும், கருவிகள் ஏதுமின்றி, பெருவிரல்கள், விரல்கள், உள்ளங்கை மூலம் செய்யும் கைவினை மருத்துவம். shifting dullness : இடமாறும் மந்த ஒலி : ஒரு நோயாளி பக்கங்களில் திரும்பும்போது ஈர்ப்பு விசை காரணமாக வயிற்றுள்ளுறைக் குழிவறை, நுரையீரலுறைக் குழிவறையிலுள்ள நீர்மம் இடம்மாறும் நிலை.

shigella : ஷிகெல்லா : சீதபேதி விளைவிக்கும் சில நுண்ணுயிரிகள் அடங்கிய பாக்டீரியா வகை. கிராம் சாயம் எடுக்காத உருண்டைக் கிருமி சீதபேதியைக் கொள்ளை நோயாகப் பரப்பும் கிருமிகளில் முக்கியமானது. இது உணவு, நீர்மூலம் பரவுகிறது.

Shigeliosis : ஷிகெல்லாதொற்று : விகெல்லா கிருமிகளால் ஏற் படும் தொற்று, கிருமி இரத்த சீதபேதி.

shin bone : முழங்கால் எலும்பு; கணைக்கால் எலும்பு : முன்கால் எலும்பின் மைய எலும்பு.

shingles : அரையாப்பு : இடுப்பைச் சுற்றிலும், உடம்பிலும் பயற்றம் பருப்பு அளவில் மென் குருக்களை அள்ளி இறைக்கும் நோய், நோய்க்கிருமி உணர்ச்சி நரம்புகளைத் தாக்குவதால் கடும்வலியுடன் இது உண்டாகிறது.

shin-splints : காலெலும்புக் கட்டு : மிகவும் கடுமையான உடற் பயிற்சியால் கால் எலும்புப்பகுதியில் வலி.

shivering : நடுக்கம் : வெப்பம் வெளிப்படுத்தும் தசைகளின் தானியங்கிச் சுருக்கம்.

shock : அதிர்ச்சி : கடுமையான காயம் அல்லது நோய் காரணமாக உண்டாகும் இரத்த வோட்டச் சீர்குலைவினால் ஏற்படும் நிலை. இரத்தத்தின் அளவு திடீரெனக் குறைவதால் இது உண்டாகிறது. இரத்த அழுத்தம் வீழ்ச்சியடைதல், நாடித் துடிப்பு அதிகரித்தல், பதற்றமடைதல், தாகமெடுத்தல், தோல் குளிர்ச்சியடைதல் இதன் அறிகுறிகள்.

short bowel syndrome : சிறு குடல் நோயியம் : சிறுகுடலின் பெரும்பகுதியை வெட்டியெடுத்ததைத் தொடர்ந்து பல் வேறு ஊட்டக் குறைபாடுகள் ஏற்படுதல்.

short's syndrome : ஷார்ட் நோயியம் : பிரிட்டிஷ் இதய மருத்துவரின் பெயர் கொண்ட வியாதிப்புழை நோயியம்.

shoulder, frozne : அசையாத் தோள் : மேற்கை உடம்புடன் சேருமிடத்தில் காரை எலும்பும் முதுகுப்பட்டை எலும்பும் சேருமிடத்தில் மூட்டுறையுடன் ஒட்டியிருத்தல். shoulder girdle : தோல்பட்டை தோல் வளையம் : ஒருபுறம் கழுத்துப்பட்டைக்கும் இன்னொரு புறம் தோள்பட்டை மேற்கை இணைப்புக்கும் இடைப்பட்ட பகுதி.

show : நன்னிக்குடம் உடைதல் : பிள்ளைப் பேறுக்கு முன்பு ஏற்படும் நீர்மக் கசிவு.

shredded appearance : கந்தைக் கீற்றுத்தோற்றம் : மிக அதிக வெப்பம் அல்லது குளிரால் பாதிக்கப்பட்ட (இயக்கு) என்புத் தசையில் திடப் பொருளாலான குறுக்குப்பட்டை களுக்கிடையே வெளிப்பரப்புகள்.

shrinking lungs : குறுகும் நுரையீரல்கள் : சிஸ்டமிக் லூப்பாஸ் எரித்திமட்டோசிஸ் நோயில் இடைத்திரை உயர்ந்து, நுரையீரலுறை அடுக்குகள் ஒட்டியிணைந்து, நுரையீரல் திசு தட்டுப்போல் சுருங்கி, இடைத் திசு விளைவால் நுரையீரல்கள் அளவில் சிறுத்தல்.

shunt : தடமாற்றம் : இரத்தம் வழக்கமான பாதையில் செல்லாமல் தடம் மாறிச் செல்தல்.

sialagogue : உமிழ்நீர் பெருக்கி; உமிழ்நீர் ஊக்கி : உமிழ்நீர் சுரப்பதை அதிகரிக்கும் மருந்து.

sialitis : உமிழ்நீர் சுரப்பழற்சி : உமிழ்நீர் சுரப்பி, அல்லது உமிழ்நீர் நாள அழற்சி.

sialoadenectomy : உமிழ்நீர் சுரப்பி நீக்கம் : ஒரு உமிழ்நீர் சுரப்பியை வெட்டியெடுத்தல்.

sialoadenotomy : உமிழ்நீர்சுரப்பி வெட்டு : உமிழ்நீர் சுரப்பியைக் கீறிவடித்தல்.

sialogram : உமிழ்நீர்ச் சுரப்பிப் படம் : உமிழ்நீர்ச் சுரப்பிகள், நாளங்கள் ஆகியவற்றின் ஊடு கதிர்ப்படம்.

sialolith : உமிழ்நீர்ச் சுரப்பிக்கல்; உமிழ்நீர்க் குழாய்க்கல் : உமிழ் நீர்ச் சுரப்பிகளில் அல்து நாளங்களில் ஏற்படும் கல்.

sialometaplasia : உமிழ்சுரப்பு மாற்று வளர்ச்சி : உமிழ்நீர் சுரப்பிகளின் மாறான வளர்ச்சி.

sialoschesis : உமிழ்நீர்சுரப்புத் தடை : உமிழ்நீர் சுரப்பு தடைபடுதல்.

sialosis : உமிழ்நீர் சுரப்பி வீக்கம் : உமிழ்நீர் சுரப்பிகள் வீங்கியி ருத்தல்.

SIB : தற்காய நடத்தை : தனக்குத் தானே காயம் உண்டாக்கிக் கொள்ளும் நடத்தை முறை.

sibling : ஒரு தாய் மக்கள்; உடன் பிறப்பு : ஒரே தாய் தந்தையருக்குப் பிறந்தவர்களில் ஒருவர்.

sickle-cell : அரிவாள் உயிரணு.

sick building syndrome : கட்டிட வியாதி நோயியம் : பெரிய, (மின்) ஆற்றல் மிகுந்த கட்டிடங்களில் வேலை செய்பவர்களுக்கு ஏற்படும் உணர்குறிகளின் தொகுதி. தலைவலிகளும், சோம்பலும், உலர் தோலும், ஒவ்வாமை நுண்வளியறை அழற்சியும் அடிக்கடி உண்டாதல்.

sick : நோயுற்ற : 1. நலமில்லா, வியாதி, வியாதியால் துன்பப் படுகிற, 2. வாந்தி உணர்ச்சி உள்ள.

sick cell syndrome :நோயணு நோயியம் : உயிரணுக்களில் சோடியம் அளவு மிகுந்து, பொட்டாசியம் அளவு குறையும் தன்மை கொண்ட, நாட்பட்ட சோர்வுறச் செய்யும் வியாதிகளில் சோடியம் எக்கி இயங்காநிலை.

sicklaernia : அரிவாளணுச்சோகை : அரிவாளனுச்சோகை, மற்றும் அரிவாளனுவில் காணப்படும், புறநாள இரத்தத்தில் அரிவாளுரு சிவப்பணுக்கள் காணப்படுதல்.

sickness : நோய்நிலை : உடல் நலம் கெட்டநிலை.

sick sinus syndrome : நோய்ப்புழை நோயியம் : படபடப்பு, தலைசுற்றலகள், உணர்விழப்பு ஆகியவை உண்டாக்கும் பல வகை இதயத் துடிப்புலயக் கோளாறுகள் ஏற்படுத்தும் புழை இதய மேலறை வியாதி.

side effect : பக்க விளைவு : மருந்து கொடுப்பதால் விரும்பிய மாறுதலுக்கு மாறாக வேறு உடலியல் மாறுதல் ஏற்படுதல் எடுத்துக்காட்டாகத் தசைச் கரிப்புக் கோளாறுக்கு எதிரான புரோப்பெந்தலின் என்ற மருந்தினால், சில நோயாளிகளுக்கு வாய் உலர்தல் என்ற பக்க விளைவு உண்டாகிறது. மருந்துகளினால் ஏற்படும் விரும்பத்தகாத விளைவுகளையும் இது குறிக்கும். சில மருந்துகளின் பக்க விளைவுகள் ஊகித்தறியக்கூடியவை. எடு: மெப்பாக்ரின் என்ற மருந்தினால், தோலும் கண்களும் மஞ்சளாகும், சைக்ளோபாஸ் ஃபாமைடினால் தலைமுடி கொட்டும்.

sideroblast : சிடெரின் முன்னணு : திகப்பாய்மத்தில் ஹீமோசி டெரின் குருணைகள்கொண்ட செவ்வணு முன்னணு.

sideroblastic anaemia : சிடெரின் அரும்பணுச் சோகை : இரும்புச் சத்துப் பயன்பாட்டுக் குறைவால் ஏற்படும் வளைய சிடெரின் முன்னணுக்களும், நிறக்குறை நுண்ணுச் சோகையும் உள்ள சிகிச்சையால் குணமடையா சோகை.

siderocyte : சிடெரின் குருணையணு : இரும்புச் சத்துக் குருணைகள் கொண்ட இரத்தச் சிவப்பணு.

sideromycin : சிடெரோமைசின் : இரும்புச்சத்து ஏற்பைத் தடை செய்து, நுண்ணணு வளர்ச்சியைதடுக்கும் (நோய்) உயிரி எதிர்ப்பி.

siderophore : சிடெரின் விழுங்கணு : ஹீமோசிடெரின் கொண்ட ஒர் உட்கரு விழுங்கணு.

siderosis : மிகைக்குருதி அயம்; இரும்பேற்றம் : இரத்தத்தில் அல்லது திசுக்களில் அயச்சத்து (இரும்பு) அளவுக்கு அதிகமாக இருத்தல், அயஆக்சைடு நுரையீரலுக்குள் செல்வதால் நுரையீரல் அழற்சி உண்டாகிறது.

siemens : சீமென்ஸ் : ஒரு ஒம் தடையுடைய உடலில் ஒரு வோல்ட்டுக்கு ஒரு ஆம்பியர் கடத்து திறன் குறிக்கும் அளவு.

Sievert : சீவெர்ட் : உள் ஏற்கப்பட்ட கதிர்வீச்சு ஆற்றலின் அளவுக் கணிப்பு.

sigmoid : 'எஸ்' எழுத்து வளவுை; 'S' உரு; இரட்டை வளைவுரு :

நெளிகுடல் : 'S' என்ற ஆங்கில எழுத்துப்போல் வளைந்துள்ள வடிவம்.

sigmoidectomy : வளைகுடல் நீக்கம் : வளை பெருங்குடலை முழுவதும் அல்லது ஒரு பகுதியை அறுத்து நீக்குதல்.

sigmoidoproctostomy : வளைகுடல் நேர்க்குடலிணைப்பு : வளை குடலையும் நேர்க்குடலையும் அறுவை முறையில் இணைத்தல்.

sigmoidoscope : வளைகுடல் நோக்கி : குதத்துளைக்குள் ஒரு கடினமான குழல் வடிவ விரிப்புக் கருவி செலுத்தி வளை குடலை (ஆய்ந்து) நோக்கல். sigmoidoscope : வளைவுப்பார்வைக் கருவி; வளைகுடல் நோக்கி; நெளி உட்காட்டி : மலக்குடலையும் பெருங்குடலின் 'S' வளைவுப் பகுதியையும் கண்ணால் பார்ப்பதற்கு உதவும் கருவி.

sigmoidostomy : குத அறுவை; வளைகுடல் திறப்பு; குதவாயமைப்பு : பெருங்குடலின் 'S' வளைவுப் பகுதியின் இறுதியில் கீறிச்செயற்கைக் குதம் உண்டாக்குதல்.

sign : நோய்க்குறி; தடையம்; அறிகுறி : ஒரு நோய் பீடித்திருப்பதை குறிக்கும் வெளிப்படையான அறிகுறி.

signa : மருந்துச் சிக்னா குறிப்பு : மருந்தளவு, எத்தனை முறை, கொடுக்கும் வழி ஆகியவற்றைக் குறித்தெழுதித் தரும் மருந்துக் குறிப்புச் சீட்டில் பயன்படுத்தும் சொல்.

signet ring cells : முத்திரை மோதிர அணுக்கள் : இரைப்பையின் நாராக்கப் புற்றுநோயிலுள்ள உட்கரு ஒரு பக்கம் தள்ளப்பட்ட சீதம் நிறைந்த கொடும் புற்றணுக்கள்.

significant : குறிப்பிடத்தக்க : 1. முக்கியமான, 2. புள்ளி விபர இயலில், தற்செயலாக நிகழ்ந்த முடிவுகள் எனும் வாய்ப்பு சிறிதுமில்லாத, ஒரு வேறுபாடு, புள்ளிவிவர இயல்படி குறிப்பிடத்தக்கதென கருதப்படுவது.

silentgap : ஒசையில் இடைவெளி : உயர் இரத்த அழுத்தம் கொண்ட சில நோயாளிகளில் கேட்பொலியின்போது ஏற்படும் இடைவெளி. இந்த தவறை தவிர்க்க கேட்பு முறையில் இல்லாமல் தொட்டு உணர் முறையில் இரத்த அழுத்தம் அளக்க வேண்டும். அழுத்தப் பட்டை காற்றிறக்கும்போது ஒலிகள் திடீரென்று மறைந்து, இரத்த அழுத்தம் மிகவும் குறைவான அளவுள்ளபோது மீண்டும் தோன்றுவது.

silicone : சிலிக்கோன் : நீர்மீது ஒட்டும் தன்மையில்லா ஒரு கரிமக் கூட்டுப்பொருள்.

silicosis : நுரையீரல் தூசு அழற்சி : உலோக அரைவை, கல்லு டைப்பு போன்ற தொழில்களில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்களுக்கு தூசி காரணமாக உண்டாகும் நுரையீரல் அழற்சி.

silicotuberculosis : சிலிக்கோ டீபி : நுரையீரல் காசநோயுடன் சிலிக்கான் நோயும் சேர்ந்து இருப்பது.

silo-filler's disease : சிலோ-நிரப்புவோர் நோய் : சிலோ வேலை செய்பவர்கள், நைட் ரஜன் டையாக்ஸைடுக்கு ஆட்படும்போது ஏற்படும் நுரையீரல் பாதிப்பு. சிலோ (பசுந்தீவன பதனக்குழி).

silver nitrate : வெள்ளி நைட்ரேட் (சில்வர் நைட்ரேட்) : பாலுண்ணிகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் சிறிய குச்ச வடிவ மருந்து. சில சமயம், கண்சொட்டு மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது. காயங் களில் பாக்டீரியா புண்கள் ஏற்படாமல் தடுக்க 0.5% கரைசலாகவும் பயன்படுகிறது.

sims position : சிம் இருக்கை நிலை : நோயாளி இடதுபக்கமாகப் படுத்து வலது முழங்காலும் தொடையும் மேலிழுத்து, இடது கை முதுகுப் பக்கமாக வைத்து மார்பு முன் நோக்கியுள்ள பாதி குப்புறப்படுத்துள்ள நிலை, பேதி மருந்து (எனிமா) கொடுப்பதற்காகவும், நேர்க்குடல் பரிசோ தனைக்காகவும், கருப்பை உள் வரியைச் சுரண்டி நீக்கவும் பயன்படுத்தும் இருக்கை நிலை. அமெரிக்க மகளிர் நோயிய லாளர் ஜேம்ஸ் மேரியான் சிம்ஸ் பெயரால் அழைக்கப்படுகிறது.

Simmond's disease : சிம்மாண்ட் வியாதி : செனிப்புறுப்புகள் அண்ணீரகம் மற்றும் தைராயிடு சுரப்பி செயல் இழப்பால், உடல்நலம் சீர்கெட்டு, முதிரா முதுமை பாதித்த, பிட்யூட்டரி சுரப்பி வளர்ச்சிக் கோளாறு நிலை.

simulation : போலிருத்தல்; போல் செய்தல் : ஒரு வியாதி அல்லது ஒரு அறிகுறி, மற்றொன்றைப் போலிருக்கும் நிலை.

simulator : போலக்காட்டி : எதிர்கொள்ளும் ஒரு சூழ்நிலை அல்லது நிலையைப் போன்று உருவாகும் ஒரு சூழ்நிலை அல்லது அமைப்பு.

sinew : தசைநாண்; தசைக்கட்டு : தசைநார்களை எலும்புடன் இணைக்கும். இழைமம்.

singer's nodes : சிங்கர் கணுக்கள் : குரலை அதிகம் பயன் படுத்துவதால் ஏற்படும் குரல் நாண்களில் நாரியக்கட்டி அல்லது காழ்ப்புக் கட்டியில் உள்ள சில நுண்கணுக்கள்.

sinisterocerebral : இடது பெரு மூளைய : இடது பெருமூளை அரைக்கோளத்தில் அமைந்து உள்ள அல்லது அது தொடர்பான.

sinography : புழைவரைவு : நிறப்பொருளை உட்செலுத்தி பைக்குழியை எக்ஸ்ரே பட மெடுத்துப் பார்த்தல்.

sinoatrial : புழைஇதய மேலறைய : சிரைப்புழை மற்றும் இதய வலது மேலறை தொடர்பான. sinus : எலும்பு உட்புழை; குழிப்பை; குழிவுபுழை : மூக்கின் குறுகிய உட்புழை முகஎலும்புகளின் உள்ளறை.

sinusitis : காற்றறை அழற்சி; நெற்றி எலும்புப்புழை அழற்சி; எலும்புக் காற்றறை அழற்சி : மூளையின் மூக்கிணை எலும்புப்புழையழற்சி கோளாறு.

siphon : உறிஞ்சுகுழல் ; ஒரு நீர்மத்தை உயர்மட்டத்திலிருந்து தாழ்மட்டத்திற்கு செலுத்தப் பயன்படுத்தப்படும், சமமற்ற நீளமுடைய இருகைகள் கொண்ட வளைகுழல், 2. உள் கழுத்துத் தமனி முடியும் 'எ' வடிவப்பகுதி.

sitophobia : உணவு வெறுப்புக் கோளாறு : மருந்துப் பொருள் மருத்துவத்தால் உண்டான பசியின்மையால் உண்டாகும் விரும்பத்தகாத அறிகுறிகளால் உண்ணுவதற்குப் பயம்.

sitz-bath : இடுப்புக் குளியல்.

sjogren syndrome : சுரப்புநீர்க் குறைபாடு : கண்ணிர்ச் சுரப்பிகள் உமிழ்நீர்ச் சுரப்பிகள் போன்ற சுரப்பிகளில் சுரப்புநீர் குறைவாக சுரத்தல், பெண்களுக்கு மாதவிடாய் நின்றபின் இது ஏற்படுகிறது. இதனால், இமையிணைப்படல அழற்சி, நாக்கு உலர்தல், குரல் கரகரத்தல் போன்றவை இதன் அறிகுறிகள்.

skeleton : எலும்புக்கூடு : இறந்த உடலின் தோல், தசை நீங்கிய எலும்பு உருவம்.

skatole : ஸ்கேட்டோல் : குடலில், புரதங்கள் டிரிப்டோஃபேன் சிதை வால் உண்டாகும் மீத்தைல் இன்டோல்.

skene's glands : மூத்திரக்குழாய் சுரப்பிகள் : பெண்ணின் மூத்திர ஒழுக்குக் குழாயின் வாயில் உள்ள இரு சிறிய சுரப்பிகள்.

skinfold measurement : தோல் மடிப்பு அளவிடல் : ஊட்ட அளவை அறிய வயிறு அல்லது மேற்கையின் பிடித்த தோல் மடிப்புத் தடிமன் அளவு.

skull : மண்டையோடு; கபாலம்; மண்டைக் கூடு : தலையின் எலும் புக் கட்டமைப்பு; தலையோடு.

skin : தோல்; சருமம் : உடலைப் போர்த்தி உள்ள மெல்லிய தோல் படலம். இது முக்கியமாக இரு படுகைகளை உடையது (1) மேற் படுகையாக அமைந்து உள்ள மேல்தோல் (எப்பிடெர்மிஸ்). 2 அடித்தோல் (டெர்மிஸ்). இது தோலின் அடிப்பகுதி இது மெய்த்தோல் எனப்படும்.

slant culture : சாய்வு வளர்மம் : ஒரு சாய்வுக் கோணத்தில் திடப்பொருளாக அனுமதிக்கப்படும் சோதனைக்குழாயில் ஊற்றப்பட்ட கடற்கோரைக் கூழ் கொண்ட வளர் ஊடகத்தில் வளர்க்கப்பட்ட நுண்ணுயிர் வளர்மம்.

sleep : உறக்கம்; தூக்கம்; துயில் : மனிதருக்கு 24 மணி நேரச் சுழற்சியில் ஏற்படும் துயில் நிலை. ஒர் உறக்கச் சுழற்சியில், நடப்புமுறை உறக்கமும், முரண்

துயிலும் அடங்கும். இவை ஒவ்வொன்றும் ஏறத்தாழ 60-90 நிமிடம் நீடிக்கும். ஒருவன் முழு ஒய்வு பெற்று நலன் பெறுவதற்கு இந்த இருவகை உறக்க நிலைகளும் முழுமை பெற வேண்டும்.

sleeplessness (insomnia) : உறக்கமின்மை.

sleepiness : உறக்கக் கலக்கம்.

sleeping draught : உறக்க மருந்து : தூக்கத்தைத் தூண்டும் குடி நீர்மம்.

sleeping sickness : உறக்க நோய் : ஆஃப்ரிக்காவில் பரவலாக நிலவும் ஒரு கொடிய நோய். ஒரு வகைக் ஈ கடியினால் ஏற்படும் நச்சு மூளை யைப் பாதிப்பதால் இந்நோய் உண்டாகிறது.

sleep walking : உறக்கத்தில் நடத்தல்; துயில்நடை : உறக்கத்தில் நடக்கும் கோளாறு.

slim disease : தேய்வு நோய் : எய்ட்ஸ் நோயில் மிகத் தீவிரமான எடையிழப்பு.

slipped disc : வட்டச் சில்லு சரிவு : இடைத் தண்டெலும்பு வட்டச் சில்லு சரிந்திருத்தல்.

slough : தோல் பொருக்கு; அசுறு; அழுகல் படலம்; அழுகு தோல் : சட்டைபோன்று கழன்று உதிர்ந்து விழும் மேலுரிப் போக்கு.

slow release drugs : தாமத மருந்துகள் : இரைப்பையில் கரையாமல், சிறுகுடலில் சிறிதுசிறிதாக விடுவிக்கப்பட்டு ஈர்த்துக் கொள்ளப்படும் மருந் துவகை சில மருந்துகள் இப்போது அடித்தோல் வழியில் இணைக்கப் படுகின்றன. அங்கு அவை மெல்ல மெல்ல விடு விக்கப்படும்.

slow.virus : தாமத வைரஸ் கிருமி : நீண்ட நாட்களுக்குப் பிறகு நோய்க் குறிகளைத் தோற்று விக்கும் நோய்க் கிருமி. இவை வெளிப்படையாக நோய்க் குறிகளைக் காட்டாவிட்டாலும், உள்ளுக்குள் நோய்த் தொற்றுக்கு வேலைசெய்து கொண்டிருக்கும்.

sludge : குழைப்பொருள் : ஒரு நீர்மத்தில் திட அல்லது பாதித் திடப் பொருள்கள் தொங்கியிருத்தல்.

small intestine : சிறுகுடல் : இரைப்பையின் வாயிற் குறுக்குத் தசையில் துவங்கி, வயிற்றுக் குழிவறையின் நடு மற்றும் கீழ்ப் பகுதியில் கருண்டு சென்று பெருங்குடலில் முடியும் உணவுப் பாதையிலுள்ள ஒரு நீண்ட குழல்பகுதி. இது முன் சிறுகுடல், இடைச்சிறுகுடல், கடைச்சிறுகுடல் என மூன்று பகுதிகள் கொண்டது.

smallpox : பெரியம்மை; வைசூரி : ஒருவித வைரஸ் நோய் கிருமி யினால் ஏற்படும் நோய். ஓர் உலகளாவிய இயக்கத்தின் மூலம் இது ஒழிக்கப்பட்டது.

small stomach syndrome : சிறு இரைப்பை நோயியம் : இரைப்பை அறுவைக்குப் பிறகு சிறுஅளவு உணவைத் தவிர எதையும் ஏற்க இயலாநிலை; சிறு கொள்ளளவு நோயியம்.

SMBG : குருதிச் சர்க்கரைத் தற்கணிப்பு : இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவைத்தானே கணக்கிட்டறிதல்.

smear : தடவுகை : ஒரு கண்ணாடிச் சில்லில் பொருளைத் தடவித் தயார் செய்து, நுண்ணோக்கி மூலம் ஆயப்படும் ஒரு மாதிரிப் பொருள்.

smegma : மாணி நுதிக் கசிவு; மாணித் தோல் சுரப்பு; ஆண்குறி மெழுகு :மாணி துதித் தோல் மடிப்பிடைக் களிக் கசிவு.

smelling salts : முகர்வு உப்புகள் : நவச்சாரம் (அமோனியா) கலந்த முகர்வு உப்பு மருந்து.

smokers blindness : புகைபிடிப்போர் குருட்டுத்தன்மை : புகை பிடிப்போர் புகை நிக்கோட்டினிலுள்ள சயனைடு நஞ்சினை உட்கொள்வதால் உண்டாகும் பார்வை இழப்பு. சயனைடு வைட்டமின்-பி12 உயிர்ச் சத் தினை ஈர்ப்பதைத் தடுத்து நிறப் பார்வையை மங்கச் செய்கிறது.

smudge cell : உருவழி அணு : குரோமேட்டின் குவிந்த, உருண்ட உட்கருப்பகுதி எச்சங்கள் கொண்டு செம்பழுப்பு நிற உட்கருக்சிதைவுகளாக தோன்றும், உட்கரு கொண்ட இரத் தச்சிவப்பணுக்களும் சிதைந்த நினவனுக்களும்.

smooth muscle : மென்தசை : குழிந்த உள்ளுறுப்புச் சுவர்களில் அமைந்துள்ள மென்தசையிழைகள் கொண்ட சுருங்குதல் சிறப்புத் திறன் பெற்ற உறுப்பு.

snare : கழலைக் கண்ணி; பொறி : கழலை அறுவை மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் கண்ணியிட்டு பிடித்துக் கொள்ளக் கூடிய கண்ணில் பொறி.

snore : குறட்டை : தளர்ந்த மெல்லண்ணத்தின் அதிர்வுகளால் தூங்கும் ஒருவர் வெளிப்படுத்தும் கொடுமையான இரைச்சலோசை,

snow : பனி திட கார்பன்டையாக்சைடு : சிறிய அறுவை மருத்துவத்தில் திசுக்களை உறுப்பெல்லைக்குள் உறையச் செய்வதற்குப் பயன்படுத்தப் படும் திடநிலை கார்பன்டை யாக்சைடு.

snow blindness : பனிக்குருடு : கடுமையான இமை நடுக்கமும் மீஊதா உளியால் பளிங்குப் படல அழற்சி.

snuffles : மூக்குறிஞ்சல்; மூக் கொழுக்கு : மூக்குச் சளிச் சவ்வு அடைப்பினால் ஏற்படும் மூக்குறிஞ்சும் உணர்வு. அப்போது மூக்கிலிருந்து வடியும் சளியில் சீழ் அல்லது இரத்தம் கலந்திருக்குமானால் அது பிறவிக் கிரந்தி நோயின் அறிகுறியாக இருக்கலாம்.

socialisation : சமுதாயச் சார்பாதல் : ஒருவர் மற்றவர்களோடு அனுசரித்துப் பழகுவதற்கு ஏற்றபடி மாறுதல்.

social medicine : சமூக மருத்துவம் : நோயுண்டாக்கும் சமூக நிறுவனங்களின் தன்மைகளை கண்டறிந்து மாற்றியமைப்பது தொடர்பான மருத்துவ இயல்.

sociology : சமூகவியல் : மனித சமுதாயத்தின் வளர்ச்சி, இயல்பு, சட்டங்கள் ஆகியவை பற்றி ஆராயும் அறிவியல்.

sociomedical : சமூக மருத்துவவியல்; சமுதாய மருத்துவம் : மருத்துவத்தினால் ஏற்படும் சமூகப் பாதிப்புகள் பற்றிய சிக்கல்களை ஆராய்தல்.

sociometry : சமூக நடத்தையளவு : மனிதர்களின் சமுதாய நடத்தையை அளப்பது பற்றிக் கூறும் சமூக அறிவியல் பிரிவு.

sociopathy : சமூக விரோதக் கோளாறு : சமூக விரோத ஆள்மைக் கோளாறு.

sociotherapy : சமூக மருத்துவம் : மனிதர்களுக்கிடையேயான உறவுநிலை மேம்படுத்தவும், சூழ்நிலை மாற்றியமைக்கவும் ஆலோசனை கூறும் மருத்துவ முறை.

socket : பொருத்துகுழி : 1. ஒரு பள்ளம் அல்லது குழிப்பகுதியில் அதற்கு தொடர்பான பகுதி ஒன்று பொருந்துவது. 2. மேல், கீழ் தாடைகளிலுள்ள குழிகளில் பற்கள் பொருந்தியிருத்தல்.

sodium acid phosphate : சோடியம் அமில பாஸ்ஃபேட் : உப்புப்பேதி மருந்து சிறுநீர்க் கழிவினைத் தூண்டக்கூடியது.

sodium benzoate : சோடியம் பென்சோயேட் : அமிலமாக்கக் கூடிய சிறுநீர்க்கழிவினை ஊக்குவிக்கக்கூடிய மருந்து.

sodium bicarbonate : சோடியம் பைக்கார்பனேட் வயிற்றுப்புளிப்பு அகற்ற வீட்டில் சாதார ணமாகப் பயன்படுத்தப்படும் மருந்து. நெஞ்செரிச்சலுக்கும் இது பயன்படுகிறது.

sodium chloride : சோடியம் குளோரைடு (சாதாரண உப்பு) : உடல் திசுவில் கலந்திருக்கும் உப்பு அதிர்ச்சியின்போதும், நீர்ம இழப்பின்போதும், இரத்த அழுத்த குறைவுக் காரணமாக நரம்பு வழியாகச் செலுத்தப்படுகிறது. உப்பு இழப்பு அதிகமாக ஏற்படும் அடிசன் நோயின் போதுவாய்வழி கொடுக்கப்படும்.

sodium citrate : சோடியம் சிட்ரேட் : காரத் தன்மையுடைய சிறுநீர்க் கழிவைத் தூண்டக்கூடிய மருந்து சேமித்து வைக்கப்படும் இரத்தம் உறையா மலிப்பதற்கும் இது பயன்படுத்தப்படுகிறது. பாலுணவுகள் கெட்டியாகாமல் தடுப்பதற்கு இது பயன்படுகிறது.

sodium cromoglycate : சோடியம் குரோமோகிளைகேட் : ஈளை நோய்க்கு (ஆஸ்துமா) எதிராகப் பயன்படுத்தப்படும் உறிஞ்சு மருந்து.

sodium iodide : சோடியம் அயோடின் : இருமல் மருந்தாக அரிதாகப் பயன்படுத்தப்படும் மருந்து.

sodium perborate : சோடியம் பெர்போரேட் : நோய் நுண்மத்தடைப் பண்புகள் கொண்ட நீர்க்கரைசல் மருந்து, வாய் கழுவு மருந்தாகப் பயன்படுத் தப்படுகிறது.

sodium picosulphate : சோடியம் பிக்கோசல்ஃபேட் : ஒரு பேதி மருந்து.

sodium propionate : சோடியம் புரோப்பியோனேட் : பூஞ்சண நோய்களில் காளான் கொல்லியாகப் பயன்படும் மருந்து. இது களிம்பாகவும், கூழாகவும், கழுவுநீர்மமாகவும், கரையும் மருந்தாகவும் கிடைக்கிறது.

sodium suiphate : சோடியம் சல்ஃபேட் : வீடுகளில் பெருமளவில் பயன்படுத்தப்படும் பேதி மருந்து. இதன் 25% கரைசல் காயங்களைக் கழுவப் பயன் படுகிறது. சிறுநீர்ச் சுரப்பின்மை யின்போது இதன் 43% கரைசல் நரம்புவழி செலுத்தப்படுகிறது.

sodium tetradecyl sulpahte : சோடியம் டெட்ராடெசில் சல்ஃபேட் : இழைமக் காழ்ப்புக் கோளாறின் போது ஊசி மருந்தாகக் கொடுக்கப்படும் திரவ மருந்து.

sodium valproate : சோடியம் வால்புரோயேட் : வலிப்பு நீக்கும் மருந்து.

soft palate : மெல்லண்ணம் : அண்ண எலும்புகளிலிருந்து பின்பக்கம் உள் நாக்குவரை உள்ள வாயின் மேற்கூரையின் பின்பக்க தசைப்பகுதி.

soft sore : கிரந்திச் சீழ்ப்புண்; மேகப்புண்; மென்கிரந்தி : தொற்று மூலம் உண்டாகும் கிரந்தி நோயின்போது பிறப்புறுப்புகளில் ஏற்படும் தொடக்க நிலைச் சீழ்ப்புண்.

soft x-rays : மென்கதிர்கள் : நீள அலைவரிசையும் குறைவான ஊடுருவு திறன் கொண்ட.

solar : சூரிய : 1, சூரியன் தொடர்பான, 2. பெரும் பரிவு நரம்புப் பின்னலும், அதன் நரம்பு முடிச்சுகளும் அதிலிருந்து செல்லும் நரம்புகளும்.

solar plexus : உந்தி நரம்பு முடிச்சுவலை; மேல் வயிற்று வலை : அடிவயிற்று உறுப்புகளில் ஒரு குண்டிக்காய்ச் சுரப்பியிலிருந்து இன்னொன்றுக்குச் செல்லும் பரிவு நரம்புகள். இழைமங்கள் ஆகியவற்றின் வலைப்பின்னல் அமைபபு.

solpadeine : சோல்பாடைன் : கோடைன், காரஃபீன் ஆகியவற்றுடன் கூடிய கரையக் கூடிய பாராசிட்டாமால் என்ற மாத்திரைகளின் வணிகப் பெயர்.

soluble : கரையத்தக்க : கரையும் தன்மையுடைய.

solute : கரைவம், கரைபொருள் : ஒரு கரைசலில் கரைந்துள்ள பொருள்.

solution : கரைசல் : ஒரு கரை பொருளைக் கொண்டுள்ள ஒரு திரவம். பூரிதக் கரைசல் என்பது, ஒரு திரவத்தில் ஒரு பொருள் எவ்வளவு அதிகமாகக் கரையக்கூடுமோ அவ்வளவு கரைந்துள்ள திரவமாகும். ஒரு கரைசல் பூரித மடைந்தபின் அதில் கரை பொருள் அதற்கு மேல் கரையாது.

solvent : கரைமம் (கரைப்பி); கரைப்பான் : மற்ற பொருள்களை (கரைவம்) கரைக்கும் ஆற்றலுள்ள நீர்மம்.

soma : உடல் : 1. மனதிலிருந்த வேறுபட்ட உடல், 2. உடல் திசுக்கள். 3. அணு உடலம்.

somasthenia : உடல்சோர்வு : நாள்பட்ட வலுவின்மையும், களைப்படையும் தன்மையும்.

somatesthesia : உடலுணர்வு : உடலொன்று இருப்பதை உணரும் நிலை.

somatic : உடல் சார்ந்த : உடற்கூறு தொடர்புடைய.

somatic death : உடம்பழிவு.

somatochrome : உடலணு :உட்கருவைச் சுற்றி நன்கமைந்த அணுஉடலம் கொண்ட நரம்பணு. somatogenic : உடுலில் தோன்றுகிற : உடம்பில் பிறக்கும் இயல்புடைய உடலால் உதிக்கும்.

somatognosis : உடலறிவு : வருடைய உடலும் செயல்படும் உறுப்புகளும் உள்ளதை உணரும் பொது உணர்வு.

somatology : உடலுயிரியல் :உயிருள்ள உடலைப் பற்றி ஆராயும் அறிவியல்; உடல் உள்ளுறுப்பியல்.

somatomedin : சொமட்டோமெடின் : திசுக்களுக்கும், வளர்ச்சி இயக்கு நீருக்கும் இடைப்பொருளாக செயல்படும் பெப்டைடு. மனித வளர்ச்சி இயக்குநீரின் தூண்டலின் விளைவாக கல்லீரலால் தயாரிக்கப்படுவது.

somatometry : உடலளவு :உடலிணை அளப்பது.

somatoplasm : உடற்கணியம் : உடலணுக்களிலுள்ள முன் கணியம் (பாய்மம்).

somatosensory : உடலுணர்வுசார் : தோல் மற்றும் அடித் திசுக்கள் பெறும் உணர்வுகள் தொடர்பான.

somatosexual : உடல்;பாலின : உடல் தன்மைகள் மற்றும் பாலினத் தன்மைகள் இரண்டுக்கும் தொடர்பான.

somatostatin : சொமட்டோ ஸ்டேட்டின் : இன்சுலின், கேஸ்ட்ரின் ஆகியவற்றை சுரக்கத் தூண்டும், சொமட்டோடி ரோப்பின் வெளி விடத்துண்டும் இயக்குநீர் கீழ்த் தலைமம் மற்றும் கணைய டெல்டா அணுக்களால் தயாரிக்கப்படுகிறது.

somatostinoma : உடலணுப்புற்று : நீரிழிவு, பித்தக்கல் நோய், மலக்கழிச்சல் நோய்களில் முன் சிறுகுடல் சுவரில் காணப்படும் செயல்படா டெல்ட்டா அணுப்புற்று.

somatotherapy : உடல் மருத்துவம் : உடல் கோளாறுகளுக்குத் தரப்படும் உயிரியல் மருத்துவம்.

somesthesis : உடலுணர்வு நிலை : உடலிருப்பதை உணரும் நிலை.

somite : உடற்கண்டம் : (இயக்கு) என்புத்தசைகள் (தசைத்துண்டம்) இணைப்புத்திசு தோல் துண்டம், மற்றும் முள்ளெலும்புகள் (என்பு இறுக்கத் துண்டம்) ஆகியவையாக வளரும் கருவிலுள்ள நடுப்பட்டை அணுக்களின் தொகுதி.

somnambulance : உறக்க நடைநோய்; துயில் நடைநோய் : தூக்கத்தில் நடக்கும் மூளைக் கோளாறு.

somnambulant : உறக்க நடையர் : உறக்கத்தில் நடக்கும் கோளாறு உடையவர்.

somnambulism : உறக்கத்தில் நடத்தல். somnambulist : உறக்க நடை; துயில் இயக்கம்; தூக்க நடையர் : உறக்கத்தில் நடக்கும் இயல்பு; உறக்கத்தில் இயங்கத் தூண்டும் மூளைநிலை.

somniloquence (somnilo qu ism) : உறக்கப்பேச்சு : உறக்கத்தில் பேசும் பழக்கம்.

somnipathist : துயில் வசியமானவர் : துயில் வசியத்திற்கு உள்ளானவர்.

somnolence (somnolency) : உறக்க மயக்கம் : தூக்க மயக்க நிலை, உறக்கச் சடைவு.

somnolent : அரிதுயில் நிலையான : விழிப்பு நிலைக்கும் உறக்க நிலைக்கும் இடைப்பட்ட நிலையிலுள்ள.

somnolescend : அரைத்துயில் நிலையான.

somnolism : வசியத்துயில்நிலை.

soneryl : சோனரில் : பூட்டே பார்பிட்டோன் என்ற மருந்தின் வணிகப்பெயர்.

sonication : ஒலிச்சிதறல் : திடப் பொருள் கேளா ஒலிய்லைகளால் பாய்மத்தில் சிதறுநிலை.

Sonne dysentery : சோன்(னெ) சீதபேதி : டேனிஷ் நாட்டு துண் ணுயிரியலாளர் சி.சோன்(னெ) பெயராலழைக்கப்படும் விகெல்லா சோன்ன கிருமிகளால் ஏற்படும் மிதவகை சீதபேதி.

sonitus : காதொலி : காதுகளில் கேட்கும் சப்தம் அல்லது கணகண ஒலி.

sonograph : ஒலியலை வரைபடம்; ஒலி வரைபடம் : ஒலி யலைகளை வரைபடமாகப்பதிவு செய்தல்.

sonometer : ஒலிமானி : செவிப்புல உணர்வுமானி.

soporific : ஆழ் உறக்க மருந்து : ஆழ்நிலைத் தூக்க ஊக்கி, உறக்க மூட்டி : ஆழ்ந்த உறக்கத்தைத் தூண்டுகிற ஒரு மருந்து.

sorbide nitrate : சோர்பைடு நைட்ரேட் : தொண்டை வீக்கத்தில் தாங்கும் திறனை அதிகரிக்கும் மருந்து.

sorbitol : சோர்பிட்டோல் : குழந்தைகளுக்கு ஊட்ட இயற்கையில் பழங்களிலிருந்து தயாரிக்கப்படும் சர்க்கரைப் பொருள்.

sordes : வாய்ப் பொருக்கு : நோயின்போது வாயில், முக்கியமாக உதடுகளில் ஏற்படும் உலர்ந்த பழுப்பு நிறப் பெருக்கு.

sore throat : தொண்டையழற்சி : அடினோ வைரஸ் அல்லது குருதியழிவு ஸ்ட்ரெப்டோகாக்கஸ் கிருமிகளால் உண்டாகும். தொண்டை, குரல்வளை மற்றும் தொண்டைச் சதைகளின் அழற்சி.

sotalol : சோட்டாலோல் : மட்டு மீறிய இரத்த அழுத்தத்திற்கு எதிரான மருந்து.

sotaloi : சோட்டலால் : இரத்த அழுத்த சிகிச்சைக்குப் பயன்படும் பீட்டா (பிளாக்கர்) தடுப்பான்.

soufle : நாடியொலி : நாடி அதிர்வொலி, நாடி மொரு மொருப்பு. கருக்குழந்தையின் முணுமுணுப்பினால் இது உண்டாகலாம். கருவுற்ற நான் காம் மாதத்திலிருந்து இது ஏற்படலாம்.

sound : புண் ஆய்வுக் கருவி : ஒலியுண்டாக்கும் கருவியில் ஏற்படும் அதிர்வுகள் குழிப்புண்ணை ஆய்வதற்கான ஒரு சாதனம்.

source isolation : மூலத்தனிமையாக்கம் : நோய்களை மற்றவர் களுக்குப் பரப்பக்கூடிய நுண்ணுயிரிகளின் ஊற்றுக் கண்கள் எனக் கருதப்படும் நோயாளிகளை, அவர்கள் மூலம் அபாயகரமான நோய்கள் பரவாமல் தடுப்பதற்காகத் தனிமைப் படுத்தி வைத்தல்.

soya beam : சோயா மொச்சை; சோய அவரை : ஆசிய நாடுகளில் இறைச்சிக்குப் பதிலாகப் பயன்படுத்தப்படும் மிகவும் ஊட்டச்சத்து வாய்ந்த பயற்றங்காய். இதில் மிக உயர்தரமான புரதம் அடங்கியுள்ளது. இதில் மாச்சத்து மிகக்குறைவு. நீரிழிவு நோயாளிகளுக்கான தயாரிப்புகளுக்கு மிகவும் ஏற்றது. தீவிர சைவர்களும், பசும்பால் ஒவ்வாமை உடையவர்களும் பசும் பாலுக்குப் பதிலாகப் பயன் படுத்தும் சோயாப் பாலில் சோயாப்புரதம் அடங்கியுள்ளது.

span : இடைநீளம் : வெளிவாங்கிய, நீட்டிய கையுறுப்புகளில் நடுவிரல்களின் முனைகளுக் கிடையேயுள்ள தூரம் இயல்பாக அது உடலின் மொத்த உயரத்துக்கு சமமாகும்.

sparganosis : முதிரா தட்டையணுப்பற்று : முதிரா தட்டைப் புழு மனிதரில், வழக்கமாக தோலடியில் வளரும் நிலை.

spasm : இசிவு; திடீர்ச் சுருக்கம்; விரைப்பு; பிடிப்பு : திடீர் வலியுடன் கூடிய கடுந்தசைச் கரிப்புக் கோளாறு தானியங்கி தசைச்சுரிப்பு.

spasmodic : சுரிப்புத்தன்மைய : (தசைச்) சுரிப்புத் தன்மை கொண்ட.

spasmolytic : இசிப்பு மருந்து : தசைச் சுரிப்புக் கோளாறுக்கு எதிரான மருந்துகள்.

spastic : தசையிறுக்கம்; விரைத்த; இசிப்பு நோயாளி : மூளை இசிப்பு வாதத்துக்கு ஆட்பட்ட நோயாளி.

spastic paralysis : விரைப்பு வாதம்; திமிர் வாதம்; தசையிறுக்க வாதம் :தசைச் சுரிப்பினால் ஏற்படும் வாதம்.

spasticity : இசிப்புநிலை; விரைப்பு நிலை; பிடிப்பு நிலை : இசிப்பு நோய்க்கு ஆட்படும் நிலை.

spatula : தட்டைக் கரண்டி : களிம்பு மருந்துகளைப் பரவலாகப் பூசுவதற்குப் பயன்படும் அகன்று கத்தி போன்ற தட்டலகுக் கரண்டி.

spatulate : தட்டைக் கரண்டி தடவல் : 1. தட்டையான மொன் னையான முனை கொண்ட, 2. தட்டைக்கரண்டி கொண்டு கலத்தல் அல்லது செய்முறை செய்தல்.

spavin : ஸ்பேவின் : குதிரைகளில் கணுக்கால் எலும்பு மூட்டுகளின் நோய்.

special care baby unit (SCBU) : குழவித் தனிக்கவனிப்புப் பிரிவு : 700-2000 கிராம் எடையுள்ள பிறக்கும் குழந்தைகளைக் கவனிப்பதற்குத் தனித் தொழில் நுட்ப வசதிகள் அமைந்த தீவிர மருத்துவப் பிரிவு.

specialist : சிறப்பு மருத்துவர் : அறியப்பட்ட மருத்துவப் பிரிவு ஒன்றில் திறமை வாய்ந்த ஒருவர்.

special senses : சிறப்பு உணர்வு மண்டலம்.

special ward : தனிக்கூடம்.

species : உயிரின வகை; சிறப் பினம்; இனம் : உயிரினங்களின் வகைப் பிரிவுகள், உயிரின வகை வேறுபாடுகள். "The species", "Our species" என்பது மனித இனத்தைக் குறிக்கும்.

specific : தனி நோய் மருந்து; தனி மருத்துவமுறை; குறிப்பிட்ட; தகு மருந்து குறித்த : குறிப்பிட்ட நோய்க்குரிய தனிப் பண்புகள், அவற்றுக்கான தனி மருந்து வகைகள், அவற்றைக் குணப் படுத்துவற்தகானத் தனி மருத்துவமுறை.

specific anti-body : தனி எதிர்ப்புப் பொருள்; தகு எதிர்ப் பொருள் : குறிப்பிட்ட எதிர்ப்புப்பொருள்.

specificity : சிறப்புத்தன்மை : 1. வினைப்படு பொருளை ஒரு நொதியின் தெரிந்தெடுக்கும் அளவு, 2. ஒரு விளைவியத்தை எதிர்மியம் நாடும் தன்மை.

specific medicine : தனிப்பிணி மருந்து : குறிப்பிட்ட நோய்க்குரிய பயனுறுதிவாய்ந்த மருந்து.

specimen : மாதிரிப்பொருள்; ஆய்வுப்பொருள் : சோதனைக் காக பெறப்பட்ட பொருள் அல்லது ஏதாவதொன்றின் சிறு பகுதி அல்லது மாதிரி.

spectinomycin : ஸ்பெடிக்னோமைசின் : எதிர்ப்பாற்றல் வாய்ந்த நுண்ணுயிரிகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் உயிரி எதிர்ப்பொருள். மேகவெட்டை நோயைக் குணப்படுத்தப் பயன் படுகிறது.

spectrometry : வண்ணப்பட்டையளத்தல் : ஒரு வண்ணப்பட்டை மானி கொண்டு ஒளிக்கதிர்களின் அலை நீளத்தைக் கண்டறியும் செய்முறை.

spectrophotometer : வண்ணப்பட்டை ஒளிஅளவி : ஒரு பொருள் அல்லது கரைசலால் கடத்தப்படும் குறிப்பிட்ட அலை நீளம் கொண்ட ஒளித் திறனை அளக்கும் கருவி.

spectroscope : வண்ணப்பட்டைக்கருவி; ஒளி முறிவு நோக்கி : ஒளி நிழற்பட்டை ஒளியை ஆராய்வதற்கான ஒரு ஆய்வு கருவி.

spectrum : வண்ணக் கற்றை; வண்ணப்பட்டை; நிறமாலை : 1. வெண்மை ஒளி பல வண்ணப் பட்டைகளாகச் சிதறல், 2. மருந்துப் பொருள்களின் திறனளவு.

speculation : ஊகம்.

speculum : உடற்குழி நோக்கி; அகற்சிக் கருவி; உட்காட்டி : உடல் குழிவுகளை விரிவுபடுத்திக் காட்டும் கருவி, கண்ணகற்சிக் கருவி.

speech : பேச்சு; பேச்சாற்றல் : வாய்வழி உரையாடல்.

speech mechanism : பேச்சுச் செயல்முறை : மூச்சு விடுதல். குரலொலி எழுப்புதல், ஒலித் தெளிவு, ஒலியலை எதிர்வு, சொல்லுருவாக்கம் ஆகிய செய்முறைகள் அடங்கிய பேச்சுச் செயல்முறை.

speech-reading : செவிடர் பேச்சறி முறை : பேசுபவரின் உதட்டு அசைவுகளைக் கவனித்துச் செவிடர்கள் பேச்சைப் புரிந்து கொள்ளும் முறை.

speech therapy : பேச்சு மருத்துவம்; பேச்சுத் திருத்த முறை; பேச்சுப் பயிற்சி மருத்துவம் : உளவியல் அல்லது உடலியல் குறைபாடுகள் அல்லது நோய் காரணமாகப் பேச்சுத்திறன் இழந்தவர்கள் மீண்டும் பேசுந் திறன் பெறுவதற்கு அளிக்கப்படும் மொழித்திறன் பயிற்சி.

sperm(spermatozoa) : விந்தணு; ஆண்கருவுயிர் நீர்மம் : பெண் கரு முட்டைக்குப் பொலிவூட்டும் ஆண் கருச்சத்து; ஆண்கரு உயிர்மம். ஒருமுறை வெளியேறும் விந்துநீர்மத்தில் விந்தணுக்கள் 6 கோடிக்கும் குறைவாக இருக்குமானால் அந்த விந்தணு கருஊட்டம் ஆற்றல் இல்லாத தாகும் 30-50 கோடி விந்து அணுக்கள் இருந்தால் அது இயல்பு நிலை.

spermary : ஆண் கரு மூலச்சுரப்பி : ஆண் விதைக் கழலை.

spermatheca : விந்து வாங்கி.

spermatic : விந்து சார்ந்த; விரை : ஆண் கருவுயிர் நீர்மத்துக்குரிய.

spermatic cord : விந்துக்குழாய் விரை நாண்.

spermaticidal : விந்தணுக் கொல்லி; விந்தணு அழிப்பி : ஆண் விந்தணுக்களைக் கொல்லக்கூடிய.

spermatid : விந்தணு மூலம் : விந்தணு மூல அணுவிலிருந்து வந்த ஓரணு விந்தணுவாக வளர்கிறது.

spematoblast : விந்து மூலம்; ஆண் கருவுயிர்மக் கருமூலம்.

spermatoçoele : விந்து வீக்கம்; விந்துக்கட்டி : விந்தணுக்கள் கொண்ட விரைமேவி அல்லது நீர்க்கட்டி.

spermatocyst : விந்துநீர்ப்பை : 1. விந்துப்பை, 2 விந்தணு வீக்கம்.

வி ந து ஆ ற் ற ல் விந்துக்கட்டி : விந்தனுக்கள் இல் லா த 3 0 – 5 0

spermatocystotomy : விந்துப்பை அறுவை : விந்துப்பைகளைக் கீறிவடித்தல்.

spermatocyte : விந்தணு முன் அணு : விந்தணு மூலத்திலிருந்து ஒரணு வளர்ந்து விந்தணுவாகிறது.

spermatogenesis (spermatog) : விந்தணுவாக்கம், விந்தாக்கமுறை : ஆண் கருவுயிர்மத் தோற்றம்.

spermatogenous : விந்தாக்கம் சார்ந்த.

spermatologist : விந்தாக்க ஆய்வியலார்; விந்தாக்கவியலார்.

spermatology (spermology) : விந்தணுவியல், விந்தியல் : ஆண் கருவுயிர்மம் பற்றி ஆராயும் அறிவியல்.

spermatophore : விந்துறை : ஆண் கருவுயிர்மம் அடங்கிய சிதலுறை. spermatorrhoea : மேக நோய்; விந்து ஒழுக்கு : ஆண் கருமக் கசிவுக் கோளாறு.

spermatozoa : விந்தணு.

spermatozon : விந்து உயிரணு; வளர்ச்சியுற்ற விந்தணு; விந்து : இனப்பெருக்கத்திற்கு முதிர்ச்சியுடைய ஆண் கருவுயிர் உயிரணு.

sperm duct : விந்து நாளம்.

spermicidal cream : விந்தணு பசை.

spermicide : விந்து கொல்லி; விந்தணுக் கொல்லி மருந்து; விந்தணுக் கொல்லி : ஆண் விந்தணுவைக் கொல்லக்கூடிய ஒரு மருந்து.

spermicide cream : விந்தணு அழிப்புப்பசை.

spermoblast (spermatoblast) : விந்து மூலம் : ஆண் கருவுயிர்மக்கரு மூலம்.

spermology : விந்தாக்க் ஆய்வியல் : ஆண் கருவுயிர்ப்பைப் பற்றிய ஆய்வுத்துறை.

sphacelation : தசையழுகல் : தசையெலும்பு அழிந்து சிதைதல்.

sphenion : ஆப்புப்புள்ளி : மண்டையுச்சிப் பக்க எலும்பின் ஆப்பெலும்புக் கோணத்தில் ஒரு புள்ளி.

sphenoid : ஆப்பு அலும்பு : மண்டையோட்டு அடிப்புறக் கூட்டெலும்பு.

sphenoid bone : ஆப்பு அலும்பு.

sphenoidal sinus : ஆப்பெலும்புக் காற்றறை.

spherocyte : கோளச் சிவப்பணு; உருண்டை உயிரணு : கோளவடிவ இரத்தச் சிவப்பணு. இது இருபக்க உட்குழிவான சிவப்பணுக்களிலிருந்து மாறுபட்டது.

spherocytosis : கோணச் சிவப்பணு அழிவு : மரபுவழி வரும் ஒரு மரபணுக்கோளாறு. இது பிறவியிலேயே இருக்கலாம். ஆனால், இதன் அறிகுறிகள் ஆயுள் முழுவதும் வெளிப்படாமல் இருக்கலாம். சில சமயம், தற்செயலாக இரத்த சோதனை செய்யும்போது இது கண்டறியப்படுகிறது.

spheroid : கோளஉரு; கோளகம் : ஓரிட நரம்பணுவேரிழை, உரு வழிந்த நுண்ணுறுப்புகள் நிறைந்து விரிதல்.

sphincter muscle : சுருங்கு தசை; சுருக : புழைவாய்ச் கரிப்புத் தசை.

sphincterolysis : பட்டைப்பிரிப்பு : முன்திக ஒட்டு நிலையில், பளிங்குப் படலத்திலிருந்து விழிக்கரும் படலத்தை அறுவை செய்து பிரிக்கும் முறை. sphincteroplasty : சுருக்குதசை சீரறுவை : ஒய் வடிவக்கீறலை 'வி' வடிவாக மாற்றுவதன் மூலம் சுருக்குதசையை அறுவை முறையில் சீரமைப்பு செய்தல்.

sphinterotomy : சுருங்கு தசை அறுவை : சுருங்கு தசையை அறுவை மருத்துவம் மூலம் பிளத்தல்.

sphingomyelinase : ஸ்பிங்கோமைலினேஸ் : கொழுப்பு வளர் சிதை மாற்றத்திலும், சேமிப்பிலும் இன்றியமையாத ஒரு செரிமானப் பொருள் (என்சைம்).

sphingmogram : நாடி அதிர்வுப் பதிவு.

sphygmogram : நாடிப்பதிவு : நாடிப் பதிவுமானி கொண்டு தமனித்துடிப்பை பதிதல்வளைவுப்பதிவில் திடீரென மேலெழுந்து திடீரெனக் கீழிறங்கு அதன்பின் மெதுவாக இறங்கும்போது சிறு ஏற்றங்கள் காணப்படுதல்.

sphygmograph : நாடிப்பதிவு மானி; நாடி வரைவி : நாடித் துடிப்பினைப் பதிவு செய்வதற்கு மணிக்கட்டில், நாடித் தமனி மீது பொருத்தப்படும் ஒரு கருவி.

sphingmology : நாடி அதிர்வியல் : நாடி துடிப்பினை ஆராயும் அறிவியல்.

sphygmotometer : குருதி அழுத்தமானி; குருதிக் குழாய் அழுத்தமானி; குருதி அழுத்த வியல்; நாடி அழுத்தமானி : இரத்த அழுத்தத்தை அளவிடுவதற்கான கருவி.

sphygmophone : நாடி ஒலிக்கருவி : நாடி அதிர்வொலியைக் காட்டும் கருவி.

sphygmoscope : நாடி நோக்கி : நாடித்துடிப்பை காணச் செய்யும் கருவி.

sphygmotometer : தமனிநெகிழ் மானி : தமனிச் சுவர்களின் நெகிழ் தன்மையை அளக்கும் கருவி. sphygmus : நாடி; நாடித்துடிப்பு.

spica : வரிக்கட்டு; பட்டைத் திசுப் பின்னல்; உறை : புண்பட்ட இடத்தின் மீது திருகு சுற்றாகவும் எதிராகவும் வரிந்து கட்டும் துணிக்கட்டு.

spicule : எலும்புமுன் சிலாம்பு : ஊசி முன் வடிவுடைய சிறிய எலும்பு.

spider naevi : சிலந்தியுரு நுண் நாளங்கள் : ஒரு நடு நுண்தமனியும் பிரியும் கிளைகளும் கொண்ட சிறு சிவப்புப் புள்ளிகள். கல்லீரல் செயலிழப்பு, கர்ப்பம், பட்டினி, வாய்வழி கருத்தடை மாத்திரை எடுக்கும் போதும் முகத்திலும் கையுறுப்புகளிலும் உடம்பின் மேல்பகுதியிலும் காணப்படும் அவற்றை அழுத்தினால் வெளிர்கின்றன.

spina bifida : நரம்புப் புழை அடைப்பின்மை; பிளந்த முள்; முதுகெலும்புப் பிளவு : நரம்புப் புழையில் குறிப்பாக இடுப்படி முக்கோண முட்டெலும்புப் பகுதியில் முழுமையாக அடைப்பு ஏற்படாமல் இருக்கும் பிறவிக் கோளாறு.

spinal : முதுகந்தண்டு சார்ந்த : முதுகந்தண்டு தொடர்புடைய, முதுகந்தண்டுப் பகுதியில் மட்டும் உணர்வை நீக்கக் கொடுக்கப்படும் மருந்து ஓர் உறுப்பெல்லை உணர்வு நீக்கக்கரைசல் மருந்தாகும்.

spinal canal : முதுகந்தண்டுப் புழை; தண்டு வடக்குழாய்.

spinal column : முதுகந்தண்டு.

spinal chord : தண்டுவடம் : முதுகந்தண்டுவடம்; தண்டக நாடி.

spinal fluid : தண்டுவட நீர்மம்.

spinalganglia : தண்டு வட முடிச்சுகள்.

spinal roots : தண்டுவட வேர்கள்.

spindle : ஒடுங்கியகம்பி : 1. நீண்டு ஒடுங்கிய அணு அல்லது அமைப்பு. 2. அணுப்பிளவின் போது, நிறக்கீற்றுகள் ஒழுங்கமைவுக்கும் இயக்கத்துக்கும் உதவும் நுண்குழல்கள் கொண்ட அமைப்பு. spine : முதுகெலும்பு : முள்ளத் தண்டு தண்டெலும்பு முதுகந் தண்டு.

spinicerebrate : மூளை-தண்டு வடமுள்ள : மூளையும் தண்டு வடமும் உடைய.

spiramycin : ஸ்பைராமைசின் : கருத்தரிப்பின் டாக்ஸோபிளாஸ்மா தொற்றில், பயன்படுத்தப்படும் மேக்நோலைடு உயிரி எதிர்ப்பி.

spiration : மூச்சு விடல்.

spireme : சுருளியம் : நிறக் கீற்றுப் பொருளிலிருந்து (பிள வுப்பெருக்க) முதல்நிலையில் நூல் போன்றஉருவம் தோன்றல்.

spirilosis : ஸ்பைரில்லாதொற்று : இரத்தத்தில் ஸ்பைரில்லா கிருமிகள் இருப்பதால் உண்டாகும் நோய்.

spirillum : சுருள் நுண்ணுயிரி : திருகு சுருள் வடிவ நுண்ணுயிரி களின் தொகுதி. இவை நீரில், கரிமப் பொருள்களில் காணப்படும். எலி போன்ற கொறிக்கும் பிராணிகளைப் பீடிக்கும். அவை மனிதரைக் கடிக்கும் போது எலிக்கடிக் காய்ச்சல் உண்டாகிறது.

spirit : சாராயம் : 1. ஆவியாகக் கூடிய அல்லது வடித்திறக்கிய ஒரு நீர்மம் 2 ஆவியாகக்கூடிய பொருள் ஆல்கஹாலில் கரைந்திருத்தல்.

spironolactone : ஸ்பைரோனோலேக்டோன் : சிறுநீரகத்தில் சோடியம் பொட்டாசியம் போக்குவரத்தில் ஆல்டோஸ் டீரானின் இயக்கத்தை எதிர்க் கும் ஆற்றல் கொண்ட கூட்டுப் பொருள்களின் தொகுதி.

spirochaeta : திருகு நுண்ணுயிர்; திருகு கிருமிகள்; சுருள் உயிரி : திருகு சுருள் வடிவுடைய நுண் கிருமிகள்.

spirochaetaemia : குருதி திருகுக் கிருமி : இரத்த ஒட்டத்தில் திருகு கிருமிகள் இருத்தல். இரண்டாம் நிலைக் கிரந்தி நோயின்போது இந்த வகை நோய்க்கிருமிகள் உண்டாகின்றன.

spirogram : மூச்சியக்க வரைவு.

spirograph : மூச்சியக்க மானி; மூச்சியக்க வரைவி : நுரையீரல் களின் இயக்கத்தைப் பதிவு செய்யும் கருவி.

spirometer : மூச்சுப்பைப்கோள்மானி; மூச்சளவி; மூச்சுமானி : மூச்சுப்பையில் கொள்திறனைக் காட்டும் கருவி.

spirophere : செயற்கை மூச்சுக் கருவி : உயிர்த்துடிப்புத் தேங்கி யிருக்கும்போது செயற்கையாக உயிர்ப்பூட்டுவதற்கான கருவி.

spirophore : செயற்கை மூச்சுப் பொறி. spiroscope : மூச்சுளுவுமானி; நுரையீரல் காட்சிக் கருவி : நுரை யீரல்களைக் கண்ணால் பார்ப்பதற்கு உதவும் கருவி.

spit : துப்புகை; உமிழ்.

spittle : நுரையீரல்கபம்; உமிழ் சளி; கோழை : நுரையீரலிலிருந்து கிருமியாக வெளிக் கொணரப்படும் பொருள், உமிழ்நீரையும்(எச்சில்) குறிக்கும்.

Spitz Holter valve : ஸ்பிட்ஸ் ஹோல்ட்டர் தடுக்கிதழ் : நீர் கொண்ட கபாலத்திலிருந்து நீரை வெளியேற்றுவதற்குப் பயன்படுத்தப்படும் தனிவகை தடுக்கிதழ்.

splanchnic : குடல் சார்ந்த; உள்ளுறுப்பு சார்ந்த; வயிறு சார்ந்த : குடல் தொடர்புடைய.

splachnicectomy : குடல் நரம்பு அறுவை; உள்ளுறுப்பு எடுப்பு : குடல் நரம்புகளை அறுவை மருத்துவம் முலம் அகற்றுதல். இதனால் உள்ளுறுப்புகளுக்குப் பரிவுத் துண்டுதல்கள் கிடைப்பதில்லை. இது மிக இரத்த அழுத்தத்தின்போது அரிதாகச் செய்யப்படுகிறது.

splanchnography : உள்ளுறுப்பு விளக்கம் : உள்ளுறுப்புகளைப் பற்றிய உடற்கூறு விளக்கம்.

splanchnology : குடலியல்; உள்ளுறுப்பியல் : மூளை, குடற்கொடி, இதயம், நுரையீரல் போன்ற உள்ளுறுப்புகளின் கட்டமைப்பு, செயல்முறை பற்றி ஆராயும் அறிவியல்.

splanchnoskeleton : உள்ளுறுப்புக்கூடு : உள்ளுறுப்புகளுடன் தொடர்புடைய உடலமைப்பு.

splanchnotomy : குடல் அறுவை : குடல் போன்ற உள்ளுறுப்புகளில் அறுவை மருத்துவம் செய்தல்.

splashback : துருத்து திசு : துப்பாக்கிக் குண்டு நுழைந்த காயத்திலிருந்து துருத்தும் திசு.

spleen : மண்ணீரல் : இரைப்பைக்குப் பின்புறம், கணையத்

தின் வால் பகுதியில், உதர விதானத்திற்குக் கீழேயுள்ள நிண அணுச்செல்குழாய் உறுப்பு.

spleen abscess : மண்ணீரச் சீழ்க்கட்டி.

spleenic vein : மண்ணீரல் சிரை.

splenalgia : மண்ணீரல் நோவு; மண்ணீரல் வலி : மண்ணீரல் பகுதியில் ஏற்படும் வலி.

splenolgic : மண்ணீரல் நோவு சார்ந்த.

splenectomy : மண்ணீரல் அறுவை; மண்ணிரல் நீக்கம் : மண்ணீரலை அறுவை மருத்துவம் மூலம் அகற்றுதல்.

splenectopia : வேற்றிட மண்ணீரல் : மண்ணீரல் இடம் மாறி யிருத்தல், மிதக்கும் மண்ணிரல்.

splenic : மண்ணீரல் சார்ந்த.

splenic pulp : மண்ணீரல் கூழ்.

splenetic : மண்ணீரல் மருந்து : மண்னீரல் நோய்க்கான மருந்து மண்ணீரல் நோயாளி.

splenic fever : மண்ணீரல் காய்ச்சல்.

splenitis : மண்ணிரல் அழற்சி.

splenitic : மண்ணீரல் வேக்கம்; மண்ணிரலில் ஏற்படும் வீக்கம்.

splenius : திமில்தசை : தலையை இயக்க உதவும் கழுத்தின் பக்கத் திலும் பின்புறத்திலும் உள்ள தசை.

splenization : மண்ணீரலாக்கம் : மண்ணீரல் போன்ற பொருளாக உயிர்ப்புப்பையை மாற்றல்.

splenography : மண்ணீரல் வரைவு : நிற ஊடகம் ஒன்றை உடலுக்குள் செலுத்தி மண்ணீரலின் கதிர்ப்படமெடுப்பு.

splenoid : மண்ணீரல் சார்ந்த.

splenological : மண்ணிரல் ஆய்வியல் சார்ந்த.

splenology : மண்ணீரலியல் : மண்ணீரல் பற்றிய ஆராயும் அறிவியல்.

splenomegaly : மண்ணீரல் விரிவு; மண்ணிரல் பெருக்கம்; மண்ணிரல் உருப்பெருக்கம்; மண்ணீரல் வீக்கம்; பெரும் பிளவை : மண்ணீரல் விரிவடைதல்.

splenoportal : மண்ணீரல்-கல்லீரல் சிரை சார்ந்த : மண்ணீரல் மற்றும் கல்லீரல் சிரை தொடர்புடைய.

splenoportogram : மண்ணீரல்-கல்லீரல்சிரை ஊடுகதிர்ப்படம் : மண்ணீரல் மற்றும் கல்லீரல் சிரையின் ஊடுகதிர் வரைபடம் ஒளிபுகா ஊடகம் செலுத்தி இது எடுக்கப்படுகிறது.

splenorenal : மண்ணீரல்-சிறுநீரகச் சிரைப்பின்னல் : மண்ணீ ரல் சிரையும் சிறுநீரகச் சிரை யும் பின்னிப் பிணைந்திருக்கும் நிலை.

splenotomy : மண்ணிரல் அறுவை : மண்ணீரலைத்துண்டித்து எடுத்தல், மண்ணிரல் உள்ளறுவை.

splicing : புரியிணைவு : டிஎன்ஏ ஆர்என்ஏ அல்லது புரதம் போன்ற நீண்ட மூலக்கூறின் புரிகள் வெட்டி மீண்டும் ஒன்றிணைதல்.

splint : முழந்தாளெலும்பு; சப்பை; சிம்பு.

splinter-bone : முழந்தாள் எலும்பு : மனிதரின் முழந்தாள் எலும்பு.

splinter haemorrhage : சிம்பு குருதியொழுக்கு : காயம், செதிள்நோய், குறைதிடீர் இதய உள்வரித்தொற்று, ஊசிப்புழு தொற்று மற்றும் மூட்டுவாத அழற்சியில் நகங்களுக்கடியில் சிறுகோட்டு இரத்த ஒழுக்கு.

splinting : சிம்புக்கட்டு : 1. சிம்பு வைத்தல், 2. சிம்புவைப் பயன் படுத்தி மருத்துவம், 3. இரண்டு மூன்று பற்களை சேர்த்து ஒரு உறுதியான அமைப்பை ஏற்படுத்த ஒரு நிலைத்த அமைப்பைப் பயன்படுத்தல், 4. ஒரு தசையின் இறுக்கம்.

splitting : பிரித்தல்; பிளத்தல் : 1. ஒரு பொருள் இரண்டு அல்லது அதிகப்பகுதிகளாகப் பிளத்தல். 2. மூலக்கூறைத் துண்டாக்கும் ஒரு கோவேலன்ட் பட்டையின் பிளவு. 3. ஒரு நன்கு தெரியப்பட்ட பாதிப்பை சிறு துணை வகைகளாகப் பிரித்தல்.

SPOD : ஊனமுற்றோர் உதவித் துறை : உடல் ஊன முற்றோருக்கு ஏற்படும் பாலுறவுச் சிக்கல்களில் உதவி புரியும் ஒரு துறை. இது ஊனமுற்றோர் மறு வாழ்வுச் சங்கத்தின் ஒர் அங்கம்.

spoke-bone : முன்கை எலும்பு.

spondyl (spondyle) : முதுகெலும்புக் கண்ணி : முதுகெலும்பின் தனிக்கண்ணி. spondylitis : தண்டுவட எலும்பு அழற்சி; முதுகெலும்பு அழற்சி : தண்டெலும்பின் (முள்ளெலும்பு) ஒன்று அதற்கு மேற்பட்ட கண்ணிகளில் வீக்கம் உண்டாதல்.

spondy lizema : முதுகெலும்பு இறக்கம் : கீழுள்ள எலும்பு தேய்ந்த ழிந்து விட்டதால் கீழ்நோக்கி இடம் விலகிய முதுகெலும்பு.

spondylolisthesis : முதுகெலும்பு முன் சாய்வு; முதுகெலும்பு முன் பிறழ்வு; முள்ளெலும்பு நழுவல் : வயிற்றுப் பக்க முதுகெலும்பு முன் புறமாக இடம் பெயர்ந்திருத்தல்.

spondylolysis : முதுகெலும்புக் குறை : முதுகெலும்பின் மூட்டிடைப் பகுதிக் குறைபாடு.

spondylopyosis : சீழ்முதுகெலும்பு : ஒன்று அல்லது அதிக முதுகெலும்பு உடலங்கள் சீழ்பிடித்தல்.

spondyloschisis : முதுகெலும்புப் பிளவு : ஒன்று அல்லது மேற்பட்ட முதுகெலும்பு வளைவுகளில் பிறவிப் பிளவு.

spondydosis : முதுகெலும்புப் பிடிப்பு : 1. முதுகெலும்பு முட்டுப்பிடிப்பு 2 முதுகெலும்பின், ஒரு திசு அழிவு பாதிப்பு.

spondylosis deformans : தண்டுவட எலும்பு வீக்கம் : முதுகெலும்பு இடைத்தகடு நலிவுற்று, அத்தகட்டின் சுற்று விளிம்பில் புதிய எலும்பு உருவாதல், இது பொதுவாக தண்டுவட எலும்பு வீக்கம் எனப்படும்.

spondylotomy : முதுகெலும்பு முறித்தல்.

sponge : உறிஞ்சு பொருள் : 1. நுண்கண் கொண்ட உறிஞ்சு பொருள். 2.சில நீர் வாழ் பிராணிகளின் உயிரணு உள்கூடு.

spondioblastoma multiforme : உக்கிர மூளைக்கட்டி : மிகவும் உக்கிரமுடைய விரைவாக வளரக்கூடிய மூளைக்கட்டி.

spondioplasm : பஞ்சுப்பாய்மம் : உயிரணுப் பொருளில் நுண்ணிழைகளின் வலையமைப்பு.

spongiosaplasty : உறிஞ்சிச் சீரமைப்பு : உறிஞ்சித் திசுவின் தன் சீரமைப்பால் புது எலும்பு உருவாகத் துணை செய்தல்.

spongiositis : உறிஞ்சித் திசுவழற்சி : ஆண் குறியின் உறிஞ் சிப்பிழம்பு அல்லது குடைவுப் பிழம்பு அழற்சி.

spore : கருவணு; சிதல் : கரு மூலம் விதை மூலம், விதை புது உயிராக வளரத்தக்க உயிர்ம நுண்மம்.

sporicidal : கருவணுக் கொல்லி : கருவணுவைக் கொல்லக்கூடிய sporogenesis : கருவணு உருவாக்கம் : கருவியல் நுண்மம் உருவாதல்.

sporoblast : கருவணு மூலம் : கருவணுவாக மாறுவதற்கு முன் கருவணுநீர்ப்பையாக ஆரம்ப நிலையில் வளர்தல்.

sporocyst : கருவணு நீர்ப்பை : 1. இனப்பெருக்க அணுக்களை கருவணுக்கள் கொண்ட நீர்ப்பை. 2. ஒட்டுயிர்புழுவின் வாழ்வுச்சுழலின் முதல் இடை ஏற்புயிரில் கருமுலை அணுக்கள் கொண்ட கரு மூல அணுப்பை. 3. முட்டை நீர்ப்பைக்குள்ள ஓரணு உயிர்களின் சிலவற்றின் வாழ்க்கைச் சுழலில் ஒரு நிலை.

sporogony : கருமூல அணுவாக்கம் : கருமூல ஒருயிரணுவில் கரு மூலவணு உருவாதல். கருவணுவுக்குள் பாலினமல்லாப் பிளவு.

sporoplasm : கருமூலக்கணியம் : கருமூல அணுக்களின் முன் கணியம்.

Sporothrix : ஸ்போரோதிரிக்ஸ் : பூஞ்சானப் புண்ணுண்டாக்கும் ஸ்போரோரைக்கம் சென்ஸ்கி உள்ளிட்ட பூஞ்சைக்காளானினம்.

sporotrichosis : பூஞ்சணப்புண் : ஒரு காயத்தில் பூஞ்சணம் படையெடுத்தல்.

sporule : சிறுகருவணு : சிறிய கருவியலணு.

sporulation : கருவணுநோய் நுண்மம் : கருவணுநோய் பாக்டீரியாக்கள் உருவாதல்.

spotted fever : மூளை அழற்சி சன்னி; புள்ளிக்காய்ச்சல் : மூளை அழற்சிச்சன்னி நோய். இது கொள்ளை நோயாகப் பரவக் கூடியது.

spue : கக்கல்.

sprain : சுளுக்கு சுளுக்குவீக்கம்); தசைப்பிறழ்ச்சி; பிசகு : ஒரு மூட் டினைச் சுற்றியுள்ள மென்மையான திசுக்களில் ஏற்படும் காயத்தினால் உண்டாகும் வீக்கம். இதனால், நிறமாற்றம், வீக்கம், வலி உண்டாகும்.

sprengel's shoulder deformity : ஸ்பிரெங்கல் தோள் திரிபு : பிறவியிலேயே தோள் திரிபடைந்து, தோள்பட்டை திரிபடைந்து, தோள்பட்டை நிரந்தரமாக அளவுக்கு மீறி உயர்ந்திருத்தல். இது பிறவி உறுப்புச் சீர்கேடுகளுடன் தொடர்பு உடையது. எ-டு: கழுத்துப் பக்க விலா எலும்பு இருத்தல் அல்லது முள்ளெலும்பு இல்லாதிருத்தல்.

sprue : தொண்டை நோய்; செரியா சீதபேதி : வெப்ப மண்டலத் தொண்டை நோய். நாக்கு அழற்சி, செரியாமை, உடல் நலிவு, குருதிச்சோகை, கொழுப்பு மலப்போக்கு ஆகியவற்றுடன் தொடர்புடையது.

spurious diarrhoea : போலி வயிற்றுப் போக்கு : திண்மமான மலத்துடன் சேர்ந்த திரவமலம் வெளியேறுதல். பெரும்பாலும் குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கும் இது ஏற்படுகிறது.

squamocolumnar junction : செதிள்மேலணுசந்திப்பு : தொண்டையின் மூக்குப் பகுதி, உணவுக் குழலிரைப்பைச் சந்தி, கருப்பைக் கழுத்து மற்றும் குதம் ஆகியவற்றில் ஏற்படும் செதிள்மேலணு அடுக்குசுரப்பு, சுரப்பி மேல் அணு அடுக்காக மாறும் பகுதி.

squamoparietal : செதிள் சுவர் பற்றிய : பொட்டெலும்பின் செதிள் பகுதி மற்றும் மண்டைப் பக்க எலும்பு தொடர் பகுதி.

squatting : சம்மணமிடல் : நீலம் பாரிக்கும் இதய நோயுள்ள குழந்தை குறிப்பாக, ஃபேல்லோதால் நோய் நிலையில் திடீர் குருதி ஆக்ஸிஜன் குறைவில், மேற்கொள்ளும் நிலை. வல இட குருதிப் பாய்வைக் குறைத்து, உடல் நாளத் தடையை அதிகரித்து, துரையீரல் குருதி ஒட்டம் அதிகரித்து மூச்சுத் திணறலைக் குறைக்கிறது.

squeezing technique : அழுத்தும் செய்முறை : ஆண்குறை முகைக்குக் கீழே அழுத்துவதன் மூலம் விந்து முந்துதலைத்தடுத்தல்.

squma : செதிள்(சிம்பு) : செதிள் போன்ற எலும்புப் பகுதி.

squamasal : செப்பை எலும்பு : செதிள் போன்ற செப்பை எலும்புப் பகுதி.

squamous : செதிள் படலம் : உடலின் புறப் பரப்புகளை மூடியிருக்கும் சுரப்பிகளற்ற செதிள் போன்ற புறப்படலம்.

squills : அல்லிப்பூண்டு : சிறுநீர் தூண்டும் மருந்தாகவும், பேதி மருந்தாகவும் பயன்படும் அல்லியினப் பூண்டு.

squint : மாறுகண் : ஒருக்கணிப்புக் கண் : பக்கவாட்டுப் பார்வை. கண்விழித் தசைகள் ஒருங்கிணைந்து இயங்காத காரணத்தால், இரு கண்களின் பார்வை அச்சுகளும் பொருள் புள்ளியில் சந்திக்காமல் இருத்தல்.

stability : நிலைப்பு; திடநிலை : மாற்றத்தைத் தடுக்கும் அல்லது நிலையாயிருக்கும் நிலை.

staccato speech : திக்குவாய் : சொற்களிடையே இடைவெளி விட்டுப்பேசுதல் அனும உள்ளரிக் காழ்ப்பு, மூளை நோய் போன்றவற்றின்போது இது உண்டாகிறது.

stadium : நோயின் பருவம் : நோய் வளர்ச்சியில் ஒரு காலம் அல்லது படிநிலை.

stage : நோய்நிலை; படிநிலை : 1. நோயின் வளர்நிலையில் ஒரு பருவம். 2. கொடும் புற்றுப் பரவலின் பரவு மற்று விரிவு நிலை, 3. நுண்ணோக்கியில் பரிசோதனை செய்வதற்கான சில்தகடு வைக்கும் பகுதி.

staggers : தள்ளாட்டம் : அழுத்தத் தளர்வு நோயில் உண்டாகும் தலைகற்றல் மற்றும் மனக் குழப்பம்.

staghorn calculus : மான்கொம்புக் கல் : சிறுநீரக வட்டில் புல் லிப்பகுதியை நிறைக்கும் விரிந்த மரக்கிளை போன்ற மக்னீசியம் அம்மோனியம் ஃபாஸ்ஃபேட்டாலான சிறுநீரகக்கல்.

stagnant loop syndrome : குடல் வளைவுத் தேக்க நோய் : அறுவை மருத்துவத்தினால் ஏற்படுத்தப்பட்ட குடல் வளைவில் உட்பொருட்கள் தேக்கமடைதல், இதனால், பாக்டீரியாக்களின் பெருக்கமும், உணவை ஈர்ப் பதில் இடையூறும் உண்டாகும்.

stain : நிறமி சாயப்பொருள் : 1. திசு ஆய்வு மற்றும் நுண்ணு யிராய்வில் பயன்படும் சாயப் பொருள். 2. உயிரணுக்கள் மற்றும் திசு உட்பொருள்களை நிறமேற்ற சாயப்பொருளையும் மற்ற வினைப் பொருள்களையும் பயன்படுத்தும் செய்முறை.

stalagmometer : சொட்டு அளவி : ஒரு கொடுக்கப்பட்ட அளவு நீர்மத்தில் உள்ள சொட்டுகளின் எண்ணிக்கை அறியப் பயன் படுத்தும் கருவி.

stalk : காம்பு : ஒரு உறுப்பு அல்லது அமைப்புடன் இணைக்கும் ஒரு ஒடுங்கிய பகுதி.

stammer : திக்குவாய்; கொன்னல்.

stammerer : திக்குவாயர்.

stammering : திக்கிப்பேசுதல் : தயக்கத்துடன், ஒலிகளை திரும் பத்திரும்பக்கூறும் பேச்சுக் கோளாறு.

standardisation : தர அளவுபாடு; செந்தரம் : 1. ஒரு குறிப்பிட்ட திறனுடைய கரைசலை ஒப்பீட்டுக்காக பயன்படுத்தல். 2. ஒரு மருந்துப் பொருளின் தரத்தை உறுதி செய்தல்.

standstill : இயங்காநிலை; செயலற்ற நிலை : இயக்க நிறுத்தம்.

St. Anthony's fire : புனித அந்தோணிக் கனல் : எரிச்சல் உணர் வும், பின்னர் கைகால் பகுதிகள் மரத்துப் போதலும், உடல் நடுக்கமும் ஏற்படும் ஒரு நோய். ஒட்டுயிர் நச்சுகளின் கலவையினால் இது உண்டாகிறது.

standstill : செயலிலா; இயக்கமிலா.

staoedectomy : அங்கவடி செவிச் சிற்றெலும்பு அறுவை : செவி நோய்களின்போது அங்கவடி செவிச்சிற்றெலும்புகளை அறுவை மருத்துவம் முலம் அகற்றுதல் உடலில் செயற்கை உறுப்பு இணைத்தல் மூலம் இந்தச் சிற்றெலும்புகளுக்குப் பதிலாக வேறு செயற்கை எலும்புகளைப் பொருத்தி இயல்பான கேட்புத் திறனை மீட்கலாம்.

stapedial mobilization stapedio lysis : அங்கவடி செவிச் சிற்றெலும்பு விடுவிப்பு : செவி நோய்களினால் செயலிழந்த அங்கவடி செவிச் சிற்றெலும்புகளை விடுவித்தல்.

stapedotomy : அங்கவடித் துளைப்பு : அங்கவடி எலும்பின் அடித்தட்டில் ஒரு சிறு துளை அறுவை மூலம் செய்தல்.

stapes : அங்கவடி செவிச் சிற்றெலும்பு : நடுக்காதிலுள்ள அங்கவடிவச் செவிசிற்றெலும்பு.

Staphylococus : வட்ட பாக்டீரியா : காயங்களிலும் கழலைகளிலும் நோய்த் தொற்று உண்டாக்கும் வட்டவடிவ பாக்டீரியாக்கு குழுமங்கள்.

staphyloderma : ஸ்டேபிலோகாக்கஸ் தோல் தொற்று : தோலின் ஸ்டேபிலோகாக்கல் கிருமித் தொற்று.

staphylolysin : ஸ்டேபிலோலைசின் : ஸ்டேஃபிலோகாக்கஸ் கிருமி உண்டாக்கும் குருதியழிவுப் பொருள்.

staphyloma : கருவிழிப் பிதுக்கம் : கண்ணின் வெண்விழிக் கோணத் தின் புறத்தோல் வெண்விழி பிதுங்கியிருத்தல். staphylotomy : உள்நாவறுவை : 1. உள்நாக்கு அறுவை, 2. கண் துருத்தம் பகுதியை வெட்டி யெடுத்தல்.

stapler : தைப்புக் கருவி : தையல் போடாமல், குடல் பகுதியை இணைக்கும் ஒரளவு தானியங்கு கருவி.

starch : மாச்சத்து : உருளைக் கிழங்கு, அரிசி, சோளம் ஆகிய வற்றில் இருக்கும் கார்போ ஹைட்ரேட் கஞ்சிப் பசையிடுவதற்குப் பயன்படுத்தப்படுகிறது.

starvation : பட்டினி கிடத்தல் : உணவுண்ணாமல் நீண்ட நாட் களுக்கு இருப்பதால் உண்டாகும் ஊட்டக் குறைபாடும், எடையிழப்பும்.

stasis : 1. குருதியோட்ட நிறுத்தம்; தேக்கநிலை : இரத்தவோட்டம் தேக்கமடைதல். 2. மலத்தேக்கம்: இரைப்பை சரியாகச் சுருங்கி விரியாததால் ஏற்படும் மலச்சிக்கல்.

static : அசைவிலா.

statics : நிலையியல்.

statoacoustic : சமநிலை கேட்பு பற்றிய : சமநிலை மற்றும் கேட்டல் தொடர்பான.

statoconia : செவிக்கல் : செவிச் சிறுபை மற்றும் நுண்மையில் ஒட்டிக் கொண்டுள்ள கால்சியம் கார்பனேட் மற்றும் புரதத் துகள்கள்.

STD : பாலுறவு நோய்கள் : பாலுறவு மூலம் பரவும் நோய்கள்.

statometer : கண்துருத்தமானி : கண்துருத்தமானி இயல்புக்கு மாறான கண்துருத்தத்தின் அளவை அறியும் கருவி.

status asthmaticus : நீடித்த ஈளை நோய்; தொடரும் இழுப்பு நோய்.

statu sepileptius : இடையறா வலிப்பு நோய்.

steal : தடமாறி குருதியோட்டம்.

steatorrhoea : கொழுப்பு மலப்போக்கு; கொழுப்பு மல பேதி : பல்வேறு ஈர்ப்புக் கோளாறினால், வெளிறிய, பெருத்த, பசையுடைய கெட்ட நாற்றமுடைய மலம் கழிதல்.

steatocele. : அண்டவாயு : விரைப்பை வீக்கம்.

steatoma : விதை வீக்கம் : பையிலுள்ள விதை வீக்கம்.

steatopygia : பிட்டக்கொழுப்புப் புடைப்பு.

steatorrhoea : மஞ்சள் பேதி.

stocomyia : முறைக்காய்ச்சல் கொசு : முறைக் காய்ச்சலை (மலேரியா) பரப்பும் ஒருவகைக் கொசு இனம், இந்த ஒட்டுயிர் பெரும்பாலான வெப்ப மண்டல நாடுகளிலும், வெப்பமண்டலம் சார்ந்த நாடுகளிலும் காணப்படுகிறது.

stein-Leventhal syndrome : துணைமை மாதவிடாய் தோன்றாமை : வாழ்க்கையின் இருபது அல்லது முப்பது வயதுகளில் உண்டாகும் மலட்டுத்தன்மை. இருபுறமும் அண்டப்பையில் பல நீர்க்கட்டி கருவகங்கள் மயிரடர்த்தி ஆகியவை தோன்றுதல். இது சில சமயம் ஆப்பு அறுவை மூலம் குணப்படுத்தப் படுகிறது.

stellate : விண்மீன்வடிவ : நட்சத்திர வடிவ, ரோசாவடிவ வரிசை யமைவு, குப்ஃபெர் அணுக்கள் மற்றும் தாரகையனுக்கள் போன்ற விண்மீன் வடிவ உயிரணு,

Stellwag's sign : இமையாமை நோய் : இயல்புக்குமீறிக் கண் விழிபிதுங்கியிருக்கும்போது, நோயாளி இயல்பான அளவு கண்ணிமைக்காமலும், கண்ணிமைகளை முழுமையாக மூடாமலும் இருக்கும் நிலை.

stem cells : மூல உயிரணுக்கள் : உடலிலுள்ள மற்ற உயிரணுக்கள் அனைத்திற்கும் தோற்றுவாயாக அமைந்துள்ள உயிரணுக்கள், எலும்பு, குருத்தெலும்பு, ஈரல் குலை, நரம்பு, குடல்நாளம், துரையீரல், மயில் உயிரணுக்கள் ஆகிய அனைத்தும் இந்த ஆதார உயிரணுக்களிலிருந்தே தோன்றுகின்றன. மனித மூல உயிரணுக்களைத் தனிமைப் படுத்தி, குறிப்பிட்ட உயிரணுக்களை ஆய்வுக்கூடத்தில் வளர்க்கலாம்; இவற்றை நோயுற்ற இரத்த, தசை, நரம்பு உயிரணுக்களுக்குப் பதிலாக மாற்று அறுவை மருத்துவம் மூலம் பொருத்தலாம்.

stemocardia : இடது பக்க மார்புவலி.

stenosis : குறுக்கம்; இரைப்பை காப்பு; வாயில் சுருக்கம் : முன் சிறு குடல் புண்ணைக் குணப்படுத்தும் போது வடுத்திசு உருவாகி இரைப்பை வாயில் காப்பு சுருங்குதல்.

stenothermal : வெப்பந்தாங்கு : உடல்வெப்பநிலையில் சிறிதளவு மாற்றங்களை மட்டும் தாங்கமுடிகிற.

stenothorax : குறுகிய மார்பு : ஒரு ஒடுங்கிய குறுகிய மார்புக் கூடு.

stepsin : ஸ்டெப்சின் : கொழுப்பை கொழுப்பு அமிலங்களாகவும், கிளிசரைனாகவும் பகுக்கக் கூடிய ஒரு பொருள். இது கணைய நீரில் உள்ளது.

stercobilin : ஸ்டெர்கோபிலின் : மலத்தின் பழுப்பு வண்ண நிறமி. இது பித்தநீர் நிறமி களிலிருந்து தோன்றுகிறது.

stercobilinogen : ஸ்டெர்க்கோபிலினோஜென் : மலத்தில் வெளிப் படும் பொருள். நுண்ணுயிரிக் குழுமத்தால் ஒன்றிணைந்த பிலிரூபினின் வளர்சிதை மாற்றத்தால் உண்டாகிறது.

stercoraceous (stercoral) : மலம் சார்ந்த : மலத்தைப் போன்ற.

stercoroma : மலக்கட்டி : இறுகிய மலம் பெருங்குடலில் நேர்க் குடலில் குவிந்து, வயிற்றுக் கட்டி போன்ற தோற்றம்.

stereoauscultation : திட்பக்கேட்பு : மார்பில் பல பகுதிகளில் வைத்து (ஸ்டெதாஸ் கோப்பின்) கேட்புக் கருவியின் இரு மார்புப் பகுதிகளைக் கொண்டு கேட்டல்.

stereoscope : திட்பக் காட்சிக் கருவி : ஒரு பொருளின் ஒன்று போன்ற இரு உருவங்களை இணைத்து. பொருட்களின் திடத்தின் மைய பரிமாணத்தை வெளிப்படுத்திக் காட்டும் ஒரு கருவி.

stereotactic : துல்லியமாய் இடமறியும் : 1. மூளைத் திசுவிழப்பு அறுவை தொடர்பான 2. வெளியில் துல்லியமான இடமறியும் தன்மையுடைய.

stereotactic surgery : மூளைத் திசுவிழப்பு அறுவை : வாதம், பன்முக அனும உள்ளரிக் காழ்ப்பு. காக்கை வலிப்பு போன்ற நோய்களில் திசுக்களைக் கண்காணிப்பதற்கு அல்லது அழிப்பதற்கு மூளையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மின் முனைகளையும், துளைக்கருவி கொண்ட குழாய் கருவிகளையும், செலுத்துதல், இதனால் வலியைக் குறைக்கலாம்.

sterets : ஸ்டெரட்ஸ் : நோய் நுண்ம ஆய்வெடுப்புக் கசிவு நீர்மத்தின் வணிகப் பெயர். இதில் 70% ஐசோப்புரோப்பில் ஆல்ககால் அடங்கியுள்ளது. ஊசிகுத்துவதற்கு முன்பு இதனைத் தோலில் தடவி காயவிடப்படுகிறது.

sterical : ஸ்டெரிக்கால் : மேற்பரப்பைச் சுத்தம் செய்வதற்கு மட்டும் பயன்படுத்தப்படும் கரையக் கூடிய கரியக்காடிக் கூட்டுப் பொருளின் வணிகப் பெயர்.

sterile : நுண்ணுயிரற்ற; மலடான : நோய் நுண்மங்கள் ஒழிக்கப் பட்ட இனப்பெருக்கத்திறனற்ற.

sterility : மலட்டுத் தன்மை; நுண்ணுயிரற்ற : இனப்பெருக்கத் திறன் இன்மை.

sterilization : நுண்ணுயிர் அகற்றல்; கிருமி நீக்கம்; கருத்தடை அறுவை; மலடாக்கல் : நோய்க் கிருமிகளை அழித்தல், கருத்தரிப்பதைத் தடுப்பதற்கான அறுவை மருத்துவம்.

sterilizer : கிருமி அழிப்புக் கருவி; கிருமி நீக்கி; தூய்மையாக்கி : நோய் நுண்மங்களை ஒழிக்கும் பொருள்.

sterimalgia : மார்புவலி.

sternodymus : மார்பொட்டு : முன்மார்புச் சுவரில் ஒட்டியிணைந்துள்ள ஒட்டிய இரட்டையர்.

sternomastoid : மார்பெலும்பு கூம்பு முனைத் தசை.

sternoclavicular : மார்பு-கழுத்தெலும்பு சார்ந்த : மார்பெலும்பு, கழுத்துப்பட்டை எலும்பு தொடர்புடைய.

sterno cleidomastoid muscle : கழுத்து வார்த்தசை : மார்பெலும்பு கழுத்துப்பட்டை எலும்பு இவற்றிலிருந்து எழுந்து, பொட்டெலும்பின் கூம்பு முனைப்புக்குள் செருகிக்கொள்ளும் ஒரு வார் போன்ற கழுத்துத் தசை.

sterno costal : மார்பு-விலா எலும்பு சார்ந்த : மார்பெலும்பும், விலா எலும்புகளும் தொடர்புடைய.

sternopericardial : மார்பெலும்பு இதயஉறை : மார்பெலும்பு மற்றும் இதயச் சுற்றுறை தொடர்பான.

sternothyroid : மார்பு தைராயிடு பற்றிய : மார்பெலும்பு மற்றும் தைராயிடு குருத்தெலும்பு அல்லது சுரப்பி தொடர்பான.

sternotomy : மார்பெலும்பு அறுவை : மார்பெலும்பை அறுவை மருத்துவம் மூலம் பிளத்தல்.

sternum : மார்பெலும்பு மார்புநடு வெலும்பு : விலா எலும்புகளை இணைக்கும் மார்பு நடுவரை எலும்பு.

sternutation : தும்மல்.

sternutative (sternutatory) : தும்மல் பொருள் : தும்மல் தூண்டும் பொருள். steroids : இயக்க ஊக்குநீர்; இயற்கை இயக்குநீர்கள் : கொழுப்புப் பொருளுடன் (கொலஸ்டிரால்) தொடர்புடைய இயற்கையாக ஊறும் வேதியியல் பொருட்களின் தொகுதி. இதில் பாலுறவு இயக்குநீர்கள் (ஹார்மோன்), அண்ணீரகப் புற உறுப்பு இயக்குநீர்கள், பித்தநீர் அமிலங்கள் போன்றவை அடங்கும்.

'stertor : குறட்டை; ஓசை மூச்சு : உறங்கும்போது மூச்சு விடு கையில் குறட்டை விடுதல்.

stertorous : குறட்டைவிடும்.

stethoscope : மார்பளவி; இதய துடிப்புமானி; மார்பொலிமானி; நாடிக்குழல்; மார்பு ஆய்வி : இதயத் துடிப்பினை ஆராய்வதற்கான கருவி.

stethogonimeter : மார்பு வளைவு மானி :மார்புக்கூட்டின் வளைவினை அளக்கும் கருவி.

stethograph : மார்பொலி வரைவி; மார்பியக்க வரைவி.

stethometer : மார்பு விரிவுமானி : மார்புக் கூட்டின் சுற்றளவு அல்லது விரிவளவை அளக்கும் கருவி.

stethoscopic : இதயதுடிப்பு சார்ந்த.

stethoscopist : இதயதுடிப்பு ஆய்வர்.

stethopolyscope : பல்முனை மலிபொலிமானி.

sthenic : இதய இரத்தக் குழாய் மிகு துடிப்பு.

stibocaptate : ஸ்டிபோகாப்டேட் : குடலில் நத்தைக் கிருமி நோயைக் குணப்படுத்துவதற்குப் பயன்படும் மருந்து.

stibophen : ஸ்டிபோஃபென் : குடலில் நத்தைக் கிருமி நோயைக் குணப்படுத்துவற்கான கருமிளை (ஆன்டிமனி) கூட்டுப் பொருள்.

stethoscope : நாடிக்குழல்; இதயத்துடிப்பு மானி; மார்பு ஒலி. மானி; மார்பு ஆய்வி : இதயத் துடிப்பினை ஆராய்வதற்கான கருவி.

stethoscopy : இதயத்துடிப்பு ஆய்வியல் : இதயத்துடிப்பினை ஆராயும் அறிவியல்.

stethograph : மார்பு இயக்க வரைவி.

stiff : விரைப்பான.

stiftneck : விரைப்பான கழுத்து.

stigma : கறை : 1. ஒரு நோயிருப்பதற்கான வெளித்தெரியும் சான்று. 2. தோலில் ஒரு புள்ளி அல்லது கறை.

stigmata : நோய்த் தழும்பு : நோயினால் உண்டாகும் தழும்புகள் அல்லது வடுக்கள், பிறவியிலேயே ஏற்படும் உருத்திருபுகள், குறிகள்.

stilboestrol : ஸ்டில்போடஸ்டிரால் : செயற்கைக் கருப்பை இயக்குநீர் (ஊஸ்டிரோஜன்) முன்வாயில் சுரப்பிப் புற்றுக்குக் கொடுக்கப்படுகிறது.

stiliborn : இறந்து பிறந்த; செத்துப் பிறந்த.

still's disease : ஸ்டில்நோய் : பிரிட்டிஷ் மருத்துவர் சர் ஜார்ஜ்ஸ்டில் பெயர் கொண்ட இளம் பருவ மூட்டுவாத அழற்சி.

stimulant : கிளர்ச்சி மருந்து ஊக்கி; கிளரி; உந்தி : கிளர்ச்சியூட்டும் மருந்து; தூண்டி யெழுப்பும் உணவு எழுச்சியூட்டும் குடிவகை போன்றவை.

stimulate : செயலூக்கு தூண்டு : ஒரு உறுப்பு அல்லது அமைப்பின் இயக்கச் செயலை அதிகரித்தல்.

stimulation : தூண்டுவித்தல் : 1. உடல் அல்லது அதன் பகுதிகளை இயக்கச் செயலை அதிகரிக்க எழுப்புதல் 2 தூண்டப்படும் நிலை.

stimulus : தூண்டுபொருள் உந்து : உயிர்த்தசை இயக்கத்தைத் தூண்டுகிற பொருள்.

sting : கொட்டு : 1. தோல் துளைப்பால் ஏற்படும் திடீர் கூர்வலி. 2. கொட்டும் உயிரியின் நச்சமைப்பு. 3. ஒரு காயத்தை ஏற்படுத்தும் உறுப்பு.

stitch1 : 1. விலரக் குத்தல் நோய் : உணவு உண்டவுடன் ஒடுவதால் உண்டாகும் பக்கவாட்டுக் குத்துவலி. 2. தையல் : தைத்து இணைத்தல்.

stoichiology : அடிப்படையியல் தனிமவியல் : திசுக்களின் அனுப்பொருள்களின் இயக்கவியல்.

Stokes-Adams syndrome : குருதிமயக்கம் : குருதியழுத்தக் குறைபாட்டினால் உண்டாகும் உணர்விழப்பு, இதய நாடி அடைப்புள்ள நோயாளிகளுக்கு இது ஏற்படுகிறது. இது கடுமையானால் நோயாளிக்கு வலிப்பு உண்டாகி உணர்விழந்து விடுவார்.

stoma : வாய்புழை : ஒரு புழை; திறப்பு.

stomach : இரைப்பை; அகடு; வயிறு : சீரணக் குழாயில் மிகவும் விரிவடைந்த பகுதி, உணவுக் குழாய்க்கும் சிறுகுடலுக்கும் இடையில் அமைந்துள்ளது. இதன் சுவர், ஊனீர் மென்சவ்வு, தசை, சளிச்சவ்வு, அடிச்சளிச்சவ்வு ஆகிய நான்கு படலங்களின் உள்வரிப்பூச்சுகளைக் கொண்டது.

stomach-ache : வயிற்றுவலி.

stomach-cough : சிறுகுடல் அழற்சி இருமல்.

stomachalgia : வயிற்றுவலி : வயிற்றில் வலியுண்டாதல்.

stomach gastricring : இரைப்பை நரம்பு வளையம்.

stomachics : செரிமான மருந்துகள்; பசியூக்கி; பசி தூண்டி : செரி மானத்திற்கு உதவுகிற மருந்துகள்.

stomach-tube : இரைப்பை தூய்மைக் குழாய்.

stomalities : வாய்புண்; வாய்அழிற்சி.

stomatology : வாய் நோய் மருத்துவவியல்.

stomal ulcer : புழைவாய்ப்புண் : இரைப்பை நடு சிறுகுடலி ணைப்பிடத்தில் புண்.

stomatalgia : வாய்வலி : வாயில் உண்டாகும் வலி.

stomatitis : வாய்புண்; வாய்அழிற்சி : ரைபோஃபிளேவின் பற்றாக் குறையினால் வாயில் வெடிப்பு ஏற்பட்டு புண் அல்லது வீக்கம் உண்டாதல்.

stomatodeum : வாய் மூலம் : வாயும் மூக்குக்குழிவறையும் உண்டாகவிருக்கும் பொதுவமைப்பு. stomatodynia : வாய்நோவு : வாயில் வலியுண்டாதல்.

stomatognathic : வாய்த்தாடைசார் : வாயையும் தாடையையும் சேர்த்துக் குறிக்கும்.

stomatology : வாய்நோயியல் : வாய் மற்றும் அதன் நோய்கள் தொடர்பான மருத்துவப் பிரிவு.

stomatomenia : வாய்க்குருதியொழுக்கு : வேற்றிட மாதப்போக்குபோல் தோன்றும் ஈறுகளில் இரத்தம் வடிதல்.

stomatomycosis : வாய்ப்பூஞ்சனத்தொற்று : வாய்க்குழிவறையின் பூஞ்சன நோய்.

stomocephalus : வாய்த்தலை : வாயும் தாடையும் அரைகுறையாக வளர்ந்துள்ள முதிர்கரு.

stomodeum : வாய்முதல் : வாயின் முன்பகுதியாக உருவாகயிருக்கும் கருவின் தலைமுனையிலுள்ள வெளி அனுப்படலக் குழிவு.

storm : புயல்நிலை : 1. அறிகுறிகள் மிகைப்படுத்தல், 2. ஒரு நோய் வளர் நிலையில் தீவிர திருப்பம்.

stomy ; ஸ்டோமி : ஒரு திறப்பை உருவாக்கும் அல்லது ஒரு இடைத்தொடர்பு குறிக்கும் கூட்டுச் சொல்.

stone : கல் : உடலின் உள் உறுப்புகளில் ஏற்படும் கற்கள். இது கனிமப் பொருளின் சேர்க்கையால் திசுக்களுக்குள் உண்டாகலாம். கற்கள் நாளங்களில் நகரும்போது வலியும் அடைப்பும் நிகழும்.

stool : கழிமலம்; நரகல்; மலம்.

stove-in chest : விலா எலும்பு முறிவு; புதை குத்து மார்பு : மார்புக்கூட்டெலும்புகளில், முன்புறம் அல்லது பின்புறம் பல முறிவுகள் ஏற்படுதல் அல்லது அத்தகைய முறிவுகளின் கலவை.

strabismometer : மாறுகண் அளவி : மாறுகண் நிலையை அளக்கும் கருவி.

strabismus : மாறுகண் : கண்களால் ஒரிடத்தில் நிலைத்து நிற்க முடியாமை ஒருக்கணிப்புப் பார்வை.

strabotomy : மாறுகண் அறுவை : ஒருக்கணிப்புப் பார்வையை சரி செய்ய, ஒன்று அல்லது மேற்பட்ட கண்தசைகள் அல்லது அவற்றின் தசை நாண்களை வெட்டுதல்.

straight leg raising test : காலை நேரே மேல்துக்கும் சோதனை : இடுப்பு நரம்பு பாதிப்பில் நோயாளி நீட்டிய காலை மேலே தூக்குவதைத் தடுக்கும் வலி நிலை பரிசோதிப்பவரின் கை கொண்டு நீட்டிய காலை. மேல் தூக்க முடியாததற்குக் காரணம் தண்டுவட நரம்பு வேர்கள் சிக்கிக்கொள்வதாகும்.

straight tubule : நேர் நுண்குழல் : விரைவில் வளைவிந்தணுக் குழலிருந்து விரைவலைச் செல்லும் ஒரு நாளம்.

strain : தசை நலிவு; திணறல்; மிகை முயற்சி : அளவுக்குமீறிய உடல் முயற்சி காரணமாகத் தசைகளில் ஏற்படும் நலிவு.

stramonium : ஊமத்தை : ஊமத்தைச் செடி, ஊமத்தை இலையிலிருந்து எடுக்கப்படும் கபநோய் மருந்து.

strangulate hernia : நெரிப்புப் பிதுக்கம் : பிதுக்கத்தில் ஏற்படும் நோய்.

strangulated : நெரிக்கப்பட்ட : மூச்சுக்குழாய் குறுக்கப் போதுமான காற்று செல்வதைத் தடுக்கும் நிலை அல்லது ஒரு பிதுக்கத்தில் சிரை வடிப்பை அடைக்கும் நிலை.

strangulation : நெரிப்புத் தடை முறுக்கம் : அழுத்தத்தின் மூலம் குருதியோட்டத்தைத் தடுத்தல்.

strangury : நீர்க்கடுப்பு; சொட்டுச் சிறுநீர் : சூடு பிடிப்பதனால் வலி யுடன் சிறிதுசிறிதாக சிறுநீர் கழியும்நோய்.

stratified : அடுக்கமைவு : பல அடுக்குகளாக அமைக்கப்பட்ட

stratum : படலம்; தோலடுக்கு : தோலின் புற அடல் படலம். எ-டு: சொரசொரப்புப் படுகை; வழவழப்புப் படுகை.

strawberry-mark : செம்மறு : மென் சிவப்பு நிறமான உடலின் நிலை மச்சம்.

strawberry tongue : செந்நாக்கு : நாக்கில் தசைப்பற்றுகள் செந்நிறச் சிறு முகிழ்கள் நீட்டிக் கொண்டிருத்தல். இந்தச் செம்படலம் நீங்கியதும் நாக்கு முற்றிய ஸ்டிராபரி என்ற சிவப்புப் பழம் போன்று சிவந்திருக்கும். இது செம்புள்ளி நச்சுக் காய்ச்சலின் அறிகுறி.

strephosymbolia : திருப்பிய தோற்றம் : கண்ணாடியில் தெரிவது போல் பொருட்கள் மறு தலையாகத் தோற்றம் தெரிவது.

Streptobacillus : சங்கிலி வரிசை கோல்வடிவக் கிருமி : ஸ்ட்ரெப் டோபேசில்லஸ் உருவை வெருவாக மாற்றக்கூடிய கிராம். சாயம் ஏற்காத நுண்ணுயிரி வகை.

Streptococcaceae : சங்கிலி வரிசை நுண்ணுயிரி : சங்கிலி வரிசையாக அல்லது இணையாகத் தோன்றும், கிராம் சாயம் ஏற்கும் கோளவடிவ நுண்ணுயிரிக் குடும்பம்.

streptococcaemia : சங்கிலிக் கிருமிக் குருதி : இரத்தத்தில் ஸ்ட்ரெப்டோகாக்கை இருப்பது. streptococcus : சங்கிலிக்கிருமி : கிருமிப் பிளப்புக்குப் பின்னரும் ஒட்டிக்கொண்டிருக்கும் நோய்க் கிருமி வகை. இது கிராம் சாயம் எடுக்கும் தன்மையுடையது. இது பல்வேறு நீளமுடைய சங்கிலித் தொடர்களாக அமைந்து இருக்கும். இவற்றில் லியூக்கோசிடின் என்ற வகை இரத்தத்தில் உள்ள வெள்ளணுக்களைக் கொல்லும், ஹேமேலிசின் என்ற வகை சிவப்பணுக்களைக் கொல்லும்.

stretch receptors : நெகிழ்வுணர்விகள்.

street virus : தெரு வைரஸ் : இயல்பான அல்லது மரபணு முறையில் மாற்றமடையாத வடிவில் உள்ள வைரஸ்.

strength : வலிமை.

streptodornase : ஸ்ட்ரெப்டோடார்னேஸ் : சங்கிலி நுண்மநொதி ஏவகை ஸ்ட்ரெப்டோ காக்கஸ் உண்டாக்கும் டிஎன்ஏ பிளக்கும் நொதி.

streptokinase : சங்கிலிக்கிருமி நொதி : சில வகைக் குருதிச் சங்கிலிக் கிருமிகளின் வளர்ச்சியிலிருந்து கிடைக்கும் ஒரு செரிமானப் பொருள். தசைகளுக்கிடையிலான கசிவு ஊனிரை விரைவாக அகற்று வதற்குப் பயன்படுகிறது.

streptolysin : ஸ்ட்ரெப்டோலைசிஸ் : குருதியழிவு ஸ்ட்ரெப்டோகாக்கை உண்டாக்கும் ஹீமோலைசின்.

streptomyces : சங்கிலிப்பூஞ்சனம் : பல (நோய்) உயிரி எதிர்ப்பிகளுக்கு மூலமாக உள்ள ஆக்டினோமைசஸ் என்னும் வகை சார்ந்த மண்வார் நுண்ணுயிரி வகை.

streptomycin : ஸ்டிரெப்டோமைசின் : ஒரு வகை கிருமிகளிலிருந்து கிடைக்கும் கிருமி எதிர்ப்புப் பொருள். காச நோயைக் குணப்படுத்தப் பயன் படுகிறது.

stereognosis : திட்ப உணர்வு அறிவு : கண்கள் முடியநிலையில் கையில் வைக்கப்பட்ட பொதுவான பொருள்களின் அளவு, உருவம், எடை, வடிவம். அவற்றை உணர்ந்துபொருளை அடையாளம் காணும் திறமை. அது தொடு, இருக்கை, இயக்க உணர்வைச் சார்ந்தது.

stress : அழுத்தம்; அதிர்ச்சி; நெருக்கடி : மனநெருக்கடி அல்லது உளைச்சல் காரணமாக உடலில் ஏற்படும் தளர்ச்சி அல்லது தேய்மானம். இது உடலியல் அல்லது உளவியல் காரணமாக உண்டாகலாம்.

stretcher : தூக்குபடுக்கை : இறந்த, காயம்பட்ட நோய் வாய்பட்டவர்களை தூக்கிச் செல்ல உதவும் கருவி பொருள்.

striae : படுவரி; நிறமிக் கோடுகள் : அடிவயிற்றின் மேற்பரப்பில் ஏற்படும் படுகைக் கோட்டு வரி அடையாளம் கருவுற்றிருக்கும் போது அடிவயிற்றுத் தோல் நீட்சியடைவதால் இது உண்டாகிறது. முதலில் இது சிவப்பு நிறமாக இருக்கும்; பின்னர் வெள்ளி போல் வெண்மையாக மாறும்.

straited membrane : வரிச் சவ்வுப் படலம்.

striater muscle : வரித் தசை.

striatonigral : கரும்வரிக்கோடு : கரும்பொருளுடன் வரிக்கோ டமைப்புகளின் தொடர்பைக் குறிக்கும்.

strictition : குறைகொள்ளளவு : கரைபொருள் கரைப்பான் கலக்கும்போது இடைவினையால் மொத்தக் கொள்ளளவு குறைதல்.

stricture : குறுக்கம்; வழியடைப்பு; ஒடுக்கம் : நாடி நரம்பு நாளங் களில் திசுத் தழும்பு அல்லது கட்டி காரணமாக குழாய் வழி குறுகுவதால் உண்டாகும் நெரிசல் கோளாறு.

stricture rectam : மலக்குடல் சுருக்கம்.

stricture urethra : சிறுநீர்ப்புறவழி சிறுத்தல்.

stricturisation : உள் அளவு குருக்கல் : உள்ளளவைக் குறுக்கும் செய்முறை.

strictureplasty : குறுக்கச் சீரறுவை : குடல் குறுக்கத்தை நெடுக்கில் கீறி குறுக்காகத் தைத்து, விரிவடையச் செய்யும் அறுவை.

stridor : கரகரப்பு மூச்சோட்டம்; மிகை மூக்கொலி; மூச்சிரைப்பு : இடுங்கிய வழியில் காற்று செல்வதால் உண்டாகும் கரகரப்பான ஒலியுடன் மூச்சுவிடுதல்.

string sign : கயிற்றுக்குறி : க்ரான் நோயில் எக்ஸ்ரே படத்தில் தெரியும்படியான நிறப் பொருளின் மெல்லிய கோடு. striocerebellar : வரிவுடல சிறு மூளைய : சிறுமூளை மற்றும் வரிஉடலம் தொடர்பான.

strip : உரி : 1. ஒரு குழல் அல்லது கால்வாய் மேலாக வில்லை ஒட்டி உட்பொருட்களை வெளியேற்றல், 2. ஒரு சிரையை அதன் நெடுக்கு அச்சில் தோலடியில் வெட்டியெடுத்தல்.

stroke : மூளை வலிப்பு; மூளை வாதம்; தாக்கம் : மூளையில் இரத்த நாளத்தில் உண்டாகும் அடைப்பால் ஏற்படும் திடீர் வலிப்பு நோய். இதனால், ஒரு புறமாகச் செயலற்ற தன்மையூட்டும் வாத நோய் உண்டாகலாம்.

stroma : உயிரணுத்தாங்கி : உயிர்ம உட்பிழம்புக் கட்டமைப்புக்கூறு.

stromatosis : உட்பிழம்பு பற்றுகை : கர்ப்பப்பைத் தசையில் உள்வரிப்பிழம்பு தீங்கில்லா முறையில் உட்செறித்தல்.

stromuhar : குருதியோட்ட அளவி : குருதியோட்டத்தை அளக்கும் கருவி.

strongyloides : குடற்புழு : மனிதரைப் பீடிக்கும் குடல் புழுக்களில் ஒரு வகை.

strongyloidiasis : ஸ்ட்ராங்கிலாய்டிஸ் பற்றுகை : ஸ்ட்ராங்கி லாயடிஸ், ஸ்டெர்கோராலின் எனப்படும் உருளைப் புழுப்பற்றுகை, அரிப்புத் தடிப்பு. வயிற்றுவலி, மலக்கழிவு, எடை யிழப்புடன் தோன்றுதல்.

strontium : ஸ்டிரான்ஷியம் : ஒரு மஞ்சள்நிற அருகிய உலோகம். வேதியியல் பண்புகளில் கால்சியத்தை ஒத்தது. எலும்பில் உள்ளது. இதன் ஒரகத் தனிமங்கள் (ஐசோடோப்) உருத் திரிபுகளைக் கண்டறிய எலும்பை நுண்ணாய்வு செய்யப் பயன்படுகிறது.

strontium-90 : ஸ்டிரான்ஷியம்-90 : ஒரு கதிரியக்க ஓரகத் தனிமம் (ஐசோடோப்), ஒரளவு நீண்ட அரை ஆயுள் (28 ஆண்டுகள்) உடைய எலும்புத் திசு உற்பத்தி குறைவாக இருக்கும் இடங்களில் இது எலும்புக்குள் இணைக்கப்படுகிறது. இது அணுக்கதிர் வீச்சின் மிக அபாயகரமான அமைப்பானாகும்.

strophanthine : ஸ்டிரோஃபாம்தைன் : இருதய தசை வலிமையூட்டும் தாவர நச்சுப்பசை மருந்து. இது டிஜிட்டாலிஸ் என்ற செடி மருந்து போன்றது. ஆனால், அதைவிட விரைவாகச் செயற்படக்கூடியது. சில சமயம் நரம்பு ஊசி மூலம் கொடுக்கப்படுகிறது.

struma : கழலை; கழுத்துக்கட்டி : பல்கேரியாவிலுள்ள ஸ்ட்ரூ மாந்திப் பகுதியில் இந்நோய் மிகுந்திருப்பதால் இப்பெயர்.

Strumpell-Marie disease : ஸ்ட்ரும்பெல்-மேரி வியாதி : அடால்ஃப்ஸ்ட்ரும்(ப்)பெல் எனும் ஜெர்மன் மருத்துவர் மற்றும் ஃபிரெஞ்சு மருத்துவர் பியர் மேரியின் பெயர் கொண்ட முதுகெலும்பு மூட்டுப் பிடிப்பு அழற்சி.

strurite : ஸ்ட்ரூரைட் : மக்னீசியம், அமோனியம் ஃபாஸ்ஃ பேட்டாலான சிறுநீர்ப் பாதைத் தொற்றுக் கல்.

stump : துண்டித்த உறுப்படி : வெட்டியெடுக்கப்பட்ட பிறகு மீதியுள்ள ஒரு உறுப்பின் அடிப்பகுதி.

stunting : வளர்ச்சிக் குறைதல் : நாட்பட்ட வியாதி அல்லது நெடுநாள் ஊட்டக் குறைபாட்டால் எடை அதிகமாகாமல் இயல்பான வளர்ச்சி இல்லா நிலை.

strychnine : எட்டிச் சத்து; எட்டிக்காய் : நரம்பு மருந்தாகப் பயன்படுத்தப்படும் நச்சு மருந்து. இது எட்டிக்காயிலிருந்து எடுக்கப்படுகிறது.

student's elbow : மாணவர் முழங்கை : பசை நீர்ச் சுரப்பி வீக்கம்.

stupe : ஒற்றடம்; நீர் ஒற்றடம் : மருத்துவமுறைப்படி ஒற்றடம் கொடுத்தல், வலி நீக்குவதற்காக இவ்வாறு செய்யப்படுகிறது. எரிச்சலைத் தடுக்கக் கர்ப்பூரத் தைலம் சேர்க்கப்படுகிறது.

stupefacient : உணர்வுமயக்கமூட்டி : 1. உணர்வு மயக்கம் தூண்டுதல், 2. உணர்வு மயக்கம் உண்டாக்கும் பொருள்.

stupor : உன்மத்த நிலை; அரை மயக்கம் : செயலற்ற திகைப்பு நிலை மதிமயக்க நிலை உணர்விழந்த தன்மை மந்த நிலை.

Sturge-Weber sindrome : தோல் புறப்படல அழற்சி : பிறவியில் உண்டாகும் தோல் புறப்படல அழற்சி நோய். இது மண்டையோட்டின் உள்ளேயிருக்கும் நாளங்களில் தந்துகி மாற்றங்களினால் ஏற்படுகிறது. இத னால், காக்கை வலிப்பு போன்ற மூளைநோய்கள் உண்டாகின்றன.

stutter : திக்குப் பேச்சு; திக்குதல்.

stuttering : தெற்றிப் பேசுதல் : சொல்லப்பட்ட வார்த்தையின் முதல் எழுத்தை திரும்பத் திரும்பத் திக்கிப் பேசும் பேச்சுக் குறைப்பாங்கு. 2. வியாதி இடையிடையே தீவிரமாதல்.

stye : கண் மயிர்க்கால் கட்டி; இமை வீக்கம்; கண்ணிமைக்கட்டி : கண்ணிமையில் உண்டாகும் சிறுகட்டி இமை வீக்கம்; கண் கட்டி இமைக் குரு. stylet : துருவுகம்பி : 1. ஒரு புழைக்குழல் அல்லது குழல் கருவிக்குள் உள்ளிட்டு விறைப்பாக்கும் அல்லது உள்வழியை சுத்தம் செய்யும் கம்பி, 2. மெல்லிய சலாகை.

stylo : மென்கம்பி; முனை : பொட்டெலும்பின் முள் எலும்புத் துருத்தம்.

stylohyoid : நாவடி முள்ளெலும்பு சார்ந்த.

styloid (styloid process) : பொட்டு முள்ளெலும்பு : பொட்டெலும்பின் புறநீளமான முள்ளெலும்பு.

styloiditis : முள்ளென்பழற்சி : முள்ளென்புத் துருத்த அழற்சி.

stylomastoid : முள்முகையென்புசார் : பொட்டெலும்பின் முள்ளெலும்புத் துருத்தம் மற்றும் முகையுருத்துருத்தம் தொடர்பான,

stylomaxillary : தாடை முள்ளெலும்பு சார்ந்த.

stylus : எழுத்தாணி; வரைவி : 1. கூர்கருவி, 2. துருவு கம்பி அல் லது மெல்லிய கம்பி அல்லது ஊசி கொண்டு விறைப்படையச்செய்தல், கால்வாயை சுத்தப்படுத்தல், 3. ஒரு குச்சி வடிவான முனை கொண்ட மருந்துப் பொருள்.

styptic : குருதி உறைவி; குருதி தடுப்பி; குருதி உறைப்பி : குருதி வடிவதை நிறுத்தும் மருந்து. குருதி ஒழுக்கு தடுப்பான்.

subacute : இடைநிலை; முனைப்புக் குறைவான : முனைப்பு நிலைக்கும் நாட்பட்ட சீர்கேட்டிற்கும் இடைப்பட்ட நிலை குறைத் தீவிரம்.

subanal : மலவாய் அடுத்த : மல வாய்க்கு அடுத்துக் கீழுள்ள.

subarachnoid space : சிலந்திச் சவ்வு இடைவெளி : சிலந்திச் சவ்வுக்குக் கீழே, அதற்கும் மூளையின் அடிச்சவ்வுப் படலத்திற்குமிடையில் உள்ள இடைவெளி. இதில் மூளைத் தண்டுவட நீர்மம் அடங்கி உள்ளது.

subcapsular: உறையடி : உறைக்கடியில், பெருமூளை உறையை குறிக்கும்.

subclass : துணைவகை : குழுமத்துக்கு மேலான, ஒரு துணை வகையான, வகுப்புத் தொகுப்பு முறை.

subclavian : கழுத்துப் பட்டை அடியில்; காரையடி : கழுத்துப் பட்டை எலும்புக்கு அடியில் உள்ள.

subclinical : போதிய மருத்துவக் காரணம் இன்மை; நோய்க்குறி தோன்றா : அடையாங்காணத் தக்க நோயை உண்டாக்குவதற்குப் போதிய மருத்துவக் காரணம் இல்லாதிருக்கிறது.

subclone : துணைமுளைவாக : முளை வகையில் உருவாகும் மாற்றமடைந்த செல்லின் வழித் தோன்றல்.

subconscious : அரையுணர்வுத்தளம்; உள்மனம்; அடிமனம்; அகமனம் : அரையுணர்வுநிலை; உள்ளத்தின் அடியுணர்வுத் தளம்.

subconsciousness : அடியுணர்வுத்தன்மை : ஒருவர் உணர்ந்தறியாமல் மனம் செயல்படும் நிலை.

subcortex : புறணியடி : பெருமூளைப் புறணிக்கு அடியில் உள்ள மூளையின் ஒரு பகுதி.

subcosta! : விலா எலும்பின் அடியில்.

sub costal vein : கீழ்விலாச் சிகை.

sub-culture : கிருமி மறுவளர்ப்பு.

sab-cutaneous : தோலுக்கு அடியில்; தோலடி.

subdural : மூளை நடு உரைகீழ்.

suberosis : தக்கை நோய் : தக்கைத்தூள் மற்றும் பெனிசிலியம் போன்ற பூஞ்சைக் காளானின் பாதிப்பில் ஏற்பட்ட, வெளிநிலை ஒவ்வாமை நுண்ணறையழற்சி.

subfamily : துணைக்குடும்பம் : ஒரு குடும்பம் மற்றும் ஒரு குழுவினத்துக்கு இடையே உள்ள வகுப்பு தொகுப்பு முறைப்பிரிவு.

subfebrile : சிறிது காய்ச்சலான : உடலின் வெப்ப நிலை சற்று கூடுதலாக இருக்கும்போது ஏற்படும் காய்ச்சல் உணர்வு.

subfrontal : நெற்றி மடலடி : நெற்றி மடலுக்கு அடியில் அமைந்துள்ள.

subglottic stenosis : குரல்வளையடிக் குறுக்கம் : தொடர்ந்து மூச்சுக் குழாயுள் குழல் செலுத்தலால், குரல் வளையின் கீழ்ப் பகுதி அல்லது மூச்சுக்குழலின் மேல்பகுதி ஒடுங்கியிருத்தல்.

subgrondation : எலும்படியிறக்கம் : மண்டையோட்டு எலும்பு முறிந்து ஒரு பகுதி மற்றொன்றுக்குக் கீழமைந்த நிலையிலுள்ள எலும்பு முறிவு.

subhyoid : உவையென்படி : உவையென்புக்குக்கீழ்.

sub-involution : கருப்பை சுருங்காமை : குழந்தை பிறந்தபின் குறிப்பிட்ட காலத்திற்குள் கருப்பை குறிப்பிட்ட அளவுக்குச் சுருங்காதிருத்தல். subjective : தன்னுணர்வு : மற்றவர்களுக்குப் புலனாகாமல், தன் உள்ளுணர்வால் உணர்ந்து அறிதல்.

subjective global assessment : சான்றுசார்முடிவு : கிடைக்கும் எல்லா சான்றுகளினடிப்படையில் மருத்துவர் முடிவு செய்து, அறுவை சிகிச்சைக்கு முன் தகுதிச் சான்றிதழ் தருதல்.

sublimate : பதங்கம்; ஆவி உறை படிவு; வளிமமாதல் : சூடேற்றி பின்னர் கெட்டியாக ஆறவிடப்பட்ட பொருள்.

sublimation : பதங்கமாதல் : 1. ஒரு திடப்பொருள் நேரடியாக வளியமாதல் 2 முதல் நிலைத் தூண்டல், ஏற்கப்படக்கூடிய செயலாக மாறியமைதல்.

sublime : வளியமாக்கு : 1. சுட வைத்து ஆவிநிலைக்கு கொண்டு வந்து பின் குளிரவைத்து கெட்டியாக்கு. 2. உணர்வுகளை விழித்தெழச் செய்தல்.

sublingual : நாக்கடியில்; நாவடி :

sublinguitis : நாவடியழற்சி : நாவடிச் சுரப்பியின் அழற்சி.

subluxation : அரை குறை மூட்டுப் பெயர்வு; மூட்டு நழுவல்; மூட்டுப் பிசகுதல் : ஒரு மூட்டு அரைகுறையாக இடம் பெயர்ந்திருத்தல்.

submammary : முலையடி : மார்புச் சுரப்பிக்குக் கீழே.

submandibular : தாடையடி; தாடையின்கீழ்; கீழ் தாடையடி : கீழ்த் தாடைக்குக் கீழே.

submandibularitis : கீழ்த்தாடையடி அழற்சி : புட்டாலம்மையில் போல் கீழ் தாடையடி சுரப்பியை பாதிக்கும் அழற்சி.

submaxillary : கீழ்த்தாடை சார்ந்த; கன்ன எலும்படி : கீழ்த் தாடைக்கு அடியிலுள்ள.

submentovertical : தாடை நெடுக்கு அளவு : குழந்தை பிறப்பில் இமை முதலில் தோன்றும் போதுள்ள குழந்தைத் தலையின் நீட்டளவு.

submersion syndrome : மூழ்கல் நோயியம் : மூச்சிழப்பு, நீலம் பாரித்து, காய்ச்சலும் உள்ள நீரில் மூழ்கியது போன்ற நிலை.

submicron : நுணங்கணு : சிறப்பு நுண்ணோக்காடியில்லாமல் பார்க்க முடியா நுண்ணணு.

submucous : சளிச்சவ்வின் கீழ் : சளிச் சவ்வின் கீழிருக்கிற.

subnarcotic : அரைத்தூக்கமூட்டுகிற : ஏறத்தாழ தூக்க மயக்கம் ஊட்டுகிற இளமறமறப்பூட்டுகிற.

subnasal : மூக்கடி : மூக்கின்கீழ் அமைந்துள்ள. subnasale : நாசியடி : மூக்குப் பிரிகவர், நடுக்கோட்டுத் தளத்தில் மேலுதட்டுடன் இணையுமிடம்.

subneural : நரம்புக்கணுவடி : நரம்புக் கணுவுக்கு அடுத்துக் கீழுள்ள நரம்படி.

subnormality : இயல்பு நிலைக்குக்கீழ் : இயல்பு நிலைக்குக் குறைந்த தன்மை, மன வளர்ச்சி முழுமை பெறாதிருக்கும் நிலை. இது மருத்துவச் சிகிச்சையினால் குணமாகி விடக்கூடியது.

suboccipital : பிடரியெலும்படி; பிடரியடி; பின் உச்சியடி : பிடரி எலும்பின் கீழுள்ள.

subocular : கண்ணடி : கண்ணின் கீழுள்ள கண்கோளத்தின் அடியில்.

suboesophogeal : உணவுக் குழாயடி : உணவுக் குழாய்க்கு அடியிலுள்ள.

suborbital : கட்குழியடி : கடகுழியின் கீழுள்ள.

suborder : துணைவகுப்பு : வகுப்புக்கும் தொகுப்புக்கும் இடையிலுள்ள வகுப்பு தொகுப்பு வகை.

subperiosteal : எலும்புச் சவ்வடி; எலும்புப் புறவடி : எலும்புகளை முடியுள்ள சவ்வுக்கு அடியிலுள்ள.

subpharyngeal : தொண்டையடி : தொண்டையின் அடியிலுள்ள.

subphrenic : உதரவிதானம் கீழ்; விதானவடி : உதர விதானத்திற்கு அடியிலுள்ள.

subphylum : துணையினம் : இனத்துக்கும், வகுப்புக்கும் இடைப்பட்ட வகுப்பு தொகுப்பு முறைவகை.

subpilose : சிறிது மயிர் மூடிய.

subpleural : நுரையீரல் உறையடி : நுரையீரல் உறைக்கு அடியில் உள்ள.

subretinal : கண்விழித்திசைகீழ்.

subsacral : குத எலும்பு முன் : மனிதரின் முக்கோணக் குத எலும்பின் முன்னுள்ள.

subscapular : தோள்பட்டை எலும்பு முன்.

subserous : நிணநீர்ச் சவ்வடி : நிணநீர்ச் சவ்வின் கீழுள்ள.

subspecies : துணைவகை : ஒரு வகைப் பிரிவுக்கும் கீழான வகுப்பு தொகுப்பு முறைப்பிரிவு.

subspinale : முள்ளடி : மூக்கெலும்பு முன் மற்றும் மேல் தாடை முகட்டுக்கும் இடைப் பட்ட மிகவும் பின்னமைந்த நடுக்கோட்டிடம்.

substance : பொருள்; பண்டம் : பருப்பொருள் அல்லது மூலக் கூறு அல்லது பிராணி அல்லது தாவர மூலக்கூறுகள் தொகுதி. வடிவற்ற பொருளில் அமைப்புக்கூறுகள் பொதிந்திருத்தல்.

substantia alba : வெண்பொருள் : பெரும்பாலும் நரம்புகளாலான, மூளை மற்றும் தண்டுவடத்திலுள்ள வெண்பொருள்.

substernal : மார்பெலும்படி : மார்பெலும்புக்குக் கீழுள்ள.

substitution : மாற்று; பதிலீடு; பகரம் : ஒரு கூட்டுப்பொருளில், ஒரு அணு அல்லது குழுவுக்கு பதிலாக வேறொன்றினையிடுதல், 2. ஏற்றுக் கொள்ளப்பட முடியாத ஒன்றுக்கு பதிலாக ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய ஒன்றைக் கொள்ளும் அடிமன பாதுகாப்பு முறை.

substrate : நொதியுணவு வினைப்படு பொருள் : ஒரு நொதியில் வினைப்படுத்தப் படும் ஒரு குறிப்பிட்டபொருள்.

substructure : அடியமைப்பு : வெளிப்பரப்புக்கு அடியிலுள்ள ஒரு திசு அல்லது அமைப்பு.

subsultus : தசை நடுக்கம்; நடுக்கியக்கம் : நச்சுக் காய்ச்சல் (டைஃபாய்டு) போன்ற கடுங்காய்ச்சலின்போது, மணிக்கட்டின் தசைகளும் தசை நாண்களும் நடுக்கமுறுதல்.

subthalamus : தாலச்சு அடி; தாலமஸ் : பெருமூளைக் காம்பு, தலைம அடி, நடுமூளை இவற்றுக்கிடையேயுள்ள இடை மூளை.

subthoracic : மார்புக்கூட்டடியில்.

subtribe : மரபுக்குழுவடி : மரபுக்குழுவுக்கும் இனத்துக்கும் இடைப்பட்ட வகுப்பு தொகுப்பு முறை வகை.

sub-vertebral : தண்டெலும்பின் கீழுள்ள.

subvolution : அடிதிருப்பல் : திசுக்கள் ஒட்டிக் கொள்ளாமலிருக்க, சீதச்சவ்வு மடிப்பு ஒன்றைமேல் திருப்பல்.

succimer : நச்சு மருந்து : குழந்தைகளில் காரீயத்தால் நஞ்சு நிலையுள்ளபோது, சிகிச்சைக்குக் கொடுக்கப்படும் வாய்வழி மருந்து.

succinate : சக்சினேட் : சக்சினிக் அமிலத்தின் உப்பு.

succinic acid : சக்சினிக் அமிலம் : டிரைகார்பாக்சிலிக் அமில வகையில் இடையிலுள்ளது.

succus (succulence) : உடல் திசு நீர்மம்; சாற்றுச் செறிவு; சாறு : சாறு தசைக் கண்ணிறுக்கத் தன்மை.

suck : உறிஞ்சு : 1. வாய் கொண்டு உள்ளிழுத்தல், 2. மார்பு உள் ளிழுத்தல். sucking wound : உள்ளடங்கிய காயம் : மார்புச் சுவர்க் காயம், நுரையீரலுறையை பாதித்து.

sucralfate : சுக்ரால்பேட் : சுக்ரோஸ் ஆக்டா சல்ஃபேட்டின் ஒரு உப்புமூல அலுமினிய உப்பு, வயிற்றுப் புண்ணில் அது அமில சுரப்பை பாதிக்காது. ஆனால் நார்மூல அணுவை வளர்ச்சிக் காரணி மற்றும் புண்ணின் அடிப்பகுதியுடன் இணைந்து பெப்சின் மற்றும் அமிலம் தொடர்பைக் குறைக்கிறது.

sucrase : சுக்ரேஸ் : இரு சேக்கரைடுகளை ஒரு சேக்கரைடாகப் பிரிக்கச் செயலூக்கியான ஹைட்ரோலேஸ்.

sucrose : சுக்ரோஸ்; சர்க்கரை : கரும்பு வெல்லம், கரும்பு சர்க்கரை, வள்ளி சர்க்கரை, மாப்பாகு ஆகியவற்றிலிருந்து எடுக்கப்படுகிறது. இது உடலில் நீரால் பகுத்தல் மூலம் டெக்ஸ்டிரோஸ் ஃபிரக்டோஸ் ஆகப் பகுக்கப்படுகிறது.

sucrosemia : சுக்ரோஸ்குருதி : இரத்தத்தில் சுக்ரோஸ்இருத்தல்.

sucrosuria : சிறுநீர்ச் சுக்ரோஸ்; சிறுநீர்ச் சர்க்கரை : சிறுநீரில் சுக்ரோஸ் இருத்தல்.

sudamina : வியர்க்குரு; வியர்வைக்கட்டி.

sudan blindness : சூடால்குருடு.

sudatory : புழுக்க மருந்து : வியர்வையூட்டும் மருந்து.

sudden death : திடீர் மரணம் : முன்பு பார்க்க உடல் நலத் துடனிருந்தவர், சில நிமிடம் அல்லது சிலமணி நேரத்துக்குள் நோய் வாய்ப்பட்டு இறத்தல்.

sudomotor : எச்சில் தூண்டு : உமிழ்நீர் சுரப்பிகளை தூண்டும்.

sudoriferous : வியர்வைசுரப்பி : வியர்வையை வெளிப்படுத்துகிற சுரப்பி.

sudorific : வியர்வை மருந்து : வியர்வையைத் தூண்டும் மருந்து.

suffocation : மூச்சுத் திணறல்; மூச்சடைப்பு.

suffusion : நைப்பு; மேற்படர்வு : 1. வெளியேறிவடிதல், 2. வெளிப்பரப்பு சிவத்தல். 3. ஒரு நீர்மத்தால் ஈரமடையும் நிலை.

sugar : சர்க்கரை : மருந்தின் சர்க்கரைப் பூச்சு; வெல்லச் சத்து, சர்க்கரைச் சத்துப் பொருள்.

sugar reaction : சர்க்கரை வேதியியல் மாற்றம்.

suggestibility : வசிய நிலை : வசியத்திற்கு ஆட்பட்ட நிலை; கருத்துத் தூண்டுதலுக்கு உட் பட்ட தன்மை. இது குழந்தைகளிடம் மனவளர்ச்சிக் குறைபாட்டையும், வயது வந்தவர்களிடம் இசிவு நோயையும் உண்டாக்கும்.

suggestion : உளத்தூண்டுதல் : ஒருவர் தருக்கமுறைக் காரணமின்றி ஒரு கருத்தை முழுமையாக ஏற்றுக் கொள்ளும்படி செய்தல், ஒரு நோயிலிருந்து மீள முடியாதென நம்பிக்கையிழந்திருக்கும் நோயாளியிடம் அவரது நோய் குணமாகிவிடும் என்ற நம்பிக்கையை ஊட்டுதல், சூசிப்பித்தல்.

suicide : தற்கொலை : ஒருவர் தன் உயிரை தானே போக்கிக் கொள்ளும் செயல்.

suicidology : தற்கொலையியல் : தற்கொலைகளின் காரணங்கள், முன்னறிதல் மற்றும் தடுத்தல் பற்றிய பாடம்.

sulbactum : சல்பேக்டம் : பெனிசிலினை பாதுகாக்கும் பீட்டா லாக்டமேனஸ் தடுப்பி.

sulcus : கோட்டுக்குழிவு; வரிப் பள்ளம்; ஆழ் வடு : பிளவு குறிப்பாக மூளையில் உள்ளது அல்லது சிறுபள்ளம்.

sulfametopyrazine : சல்ஃபாமெட்டொப்பைராசின் : சிறுநீர்க் கோளாறுகளுக்குப் பயன்படுத்தப்படும் சல்ஃபோனாமைடு என்ற மருந்து. இது நீண்ட காலம் வேலை செய்யக் கூடியது.

sulphacetamide : கல்ஃப்சிட்டாமைடு : கண் சொட்டு மருந்தாக வும் சிறுநீர்க் குழாய்க் கோளாறுகளுக்காகவும் பயன்படுத்தப்படும் ஒரு சல்ஃபோனாமைடு மருந்து.

sulphadiazine : சல்ஃபாடையாசின் : பல்வேறு நோய்களைக் குணப்படுத்தப்படும் ஒர் ஆற்றல் வாய்ந்த சல்ஃபோனாமைடுக் கூட்டுப்பொருள்.

sulphadimethoxine : சல்ஃபாடிமெத்தாக்சின் : சிறுநீர் நோயைத் தடுக்கப் பயன்படும் ஒரு சல்ஃபோனாமைடு மருந்து.

sulphadimidine : சல்ஃபாடைமிடின் : சல்ஃபோனாமைடு மருந்துகளில் ஆற்றல் மிகுந்ததும், நச்சுத் தன்மை குறைந்ததுமான மருந்து. இதன் பக்க விளைவுகள் மிகக்குறைவு, குழந்தை மருத்துவத்தில் மிகவும் பயன் உடையது.

sulphaemoglobinaemia : சல்ஃபேமோ குளோபினேமியா : இரத்தத்தில் சல்ஃபாமெத்தியா குளோபின் சுற்றோட்டமாக ஒடும் நிலை.

sulphafurazole : சல்ஃபாஃபரசோல் : மூச்சுக்குழாய், சிறுநீர்க் குழாய் நோய்களில் முக்கிய மாகப் பயன்படுத்தப்படும் ஒரு சல்ஃபோனாமைடு.

sulphamethazine : சல்ஃபாமெத்தாசின் : குழந்தை மருத்துவத்தில் மிகுதியாகப் பயன்படுத்தப் படும் சல்ஃபாடிமிடின் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

sulphamethizole : சல்ஃமா மெத்திசோல் : சிறுநீர்க்குழாய் கோளாறுகளில் பெரிதும் பயன்படும் சல்ஃபோனாமைடு.

sulphaemoglobin : சல்ஃப்ஹீமோகுளோபின் : ஹைட்ரேஜன் சல்ஃபைடு மற்றும் ஃபெர்ரிக் நிலை இரும்பும் சேர்வதால் உண்டாகும் பல்கூட்டுப் பொரு ளான சல்ஃப்மெட்ஹீமோ குளோபின்.

sulphamethoxazole : டிரைமெதாப்ரினுடன் : டிரைமெதாப்ரினுடன் சேர்த்து பயன்படுத்தப்படும் சல்ஃபானமைடு தயாரிப்பு.

sulphasalazine : சல்ஃபாசாலசின் : குடல் அழற்சியைக் குணப்படுத்தப் பயன்படும் ஒரு சல்ஃபோனா மைடு மருந்து.

sulphobrom opthalein : சல்ஃபோபுரோமோஃப்தவீன் : கல்லீரல் இயக்கச் சோதனைக்குப் பயன்படும், கந்தகம் மற்றும் ரோமின் சேர்ந்த கூட்டுப் பொருள்.

sulphonamides : சல்ஃபோனாமைடுகள் : நோய்க் கிருமிகளைக் கொல்லும் வேதியியல் பொருள்களின் தொகுதி. இது வாய்வழி உட்கொள்ளப்படுகிறது. இவை இரத்தத்தில் குறிப்பிட்ட அளவு செறிந்திருக்க வேண்டும். இவை வளர்சிதை மாற்றத்தை எதிர்க்கக் கூடியவை. ஃபோலிக் அமிலம் உருவாவதை இவை தடுக்கின்றன.

sulphones : சல்ஃபோன்கள் : டாப்சோன் போன்ற செயற்கை மருந்துகளின் ஒரு தொகுதி, தொழு நோய்க்கு இவை பயன்படுகின்றன.

sulphonylureas : சல்ஃபோனிலூரியாக்கள் : சல்ஃபோனாமைடு வழிப்பொருள்கள் கணையத்திலிருந்து கணையநீர் (இன்சுலின்) சுரப்பதை அதிகரிக்கிறது. நீரிழிவு நோயில் கணையநீர் ஊசி போடுவதைத் தேவையற்ற தாக்குகிறது.

sulphur : கந்தகம் : கரையாத மஞ்சள் நிறத் தூள். ஒரு காலத்தில் சொறி சிரங்குக்குக் கந்தகச் சிரங்குக்குக் கந்தகக் களிம்பு மருந்தாகப் பயன் பட்டது. இன்றும் முகப்பரு போன்ற தோல் நோய்களுக்குக் கழுவுநீர்மங் களில் பயன்படுத் தப்படுகிறது. sulphurated : கந்தகமூட்டப்பட்ட : கந்தகத்துடன் சேர்ந்த அல்லது கந்தகம் பொதியப்பட்ட.

sulphuric acid : கந்தக அமிலம் : தொழில் துறையில் பெருமளவில் பயன்படுத்தப்படும், மிகுந்த அரிமானத் தன்மை கொண்ட செறிவு மிக்க அமிலம். இதன் 10% கரைசல் குருதி உறைவுக்கு மிக அரிதாகப் பயன்படுத்தப் படுகிறது.

sulthiame : சுல்தியாம் : காக்கை வலிப்பு நோயில் வலிப்பை நீக்கு வதற்குப் பயன்படுத்தப்படும் மருந்து.

sunburn : வேனிற்கட்டி; வெங்குரு : வெயிலினால் முகங்கன்றிச் சிவந்திருத்தல்.

sunray spiculation : சூரியக்கதிர் போன்ற முட்கதிர் தோற்றம் : என்புருவாக்கு திசுப்புற்றில் எக்ஸ்ரே படத்தோற்றம் என்பு சுற்றுரைக்கு செங்குத்தாக அமைந்த தடித்த இழை போன்ற முட் கதிர்போல் காட்சியளிக்கும் எலும்புச் சுற்றுறையின் மறிவினை.

sunscreen : சூரியகாப்பு : புற ஊதா கதிர் வீச்சிலிருந்து தோலை காக்கும் பொருள்.

sunstroke : கதிரவன் வெப்பத் தாக்கம்; வெயில் அதிர்ச்சி; வெப்பத்தாக்கு : வெயில் கடுமையினால் தாக்குண்டு மயக்கமடையும் தோய்.

superacute : திடீர்மிகை : மிகவும் திடீரென, மிகவும் தீவிரமான வெளிப்பாடுகளும், வேகமான முன்னேற்றமுடைய.

superalimentation : மிகைஉணவூட்டம் : பசிக்குத் தேவையான தைவிட அதிகமாக ஊட்டுதல்.

supercilium : கண்புருவம்.

super ego : மேல்மனம் : கீழ்மனத்தின் செயலை இடித்துரைத்தல் கட்டுப்படுத்தும் தன்மை வாய்ந்த மேல்மனம்.

superfamily : மிகைவகுப்பு : வகுப்புக்கும் தொகுப்புக்கும் இடைப்பட்டதொகை வகைப்பிரிவு.

superfecundation (superfetation/superimpregnation) : மிகைச்சூலுறவு; தொடர் பாலுறவுக் கருவுறுதல் : முன்பே சூல் கொண்டுள்ள நிலையில் மேலும் கருக்கொள்ளும் நிலை.

superfetation : மறுகருபதிப்பு : முதல்முட்டை ஏற்கனவே கருப்பைக்குள் பதிந்த பின்னால் இரண்டாவது முட்டை கருவுற்றுபின் வளர்தல்.

superficial : வெளிப்பரப்பு; மேற்பரப்பு : மேலெழுந்த உடலின் வெளிப்பரப்புக்கு அருகில், மேலோட்டமான, ஆழமில்லாத.

superinduce : மிகுதூண்டல் : ஏற்கெனவே உள்ள ஒரு பொரு ளுடன்கூட ஒன்றைக்கொண்டு வருதல் அல்லது தூண்டுதல்.

superinfection : மிகைத்தொற்று : உடலின் இயல்பான நுண்ணு யிர்க்குழுமம், பெரும்பாலும் உயிரி எதிர்ப்புகளால் வெகுவாகக் குறைந்தபின், சந்தர்ப்பவாத நுண்ணுயிர்களின் படையெடுப்பால் ஏற்படும் தொற்று.

superinvolution : மிகுஉள்ளடங்கல் : குழந்தை பிறப்பிற்குப் பிறகு கர்ப்பப்பையின் அளவு மிகவும் குறைந்துவிடுதல்.

supernatant : மேல்மிதக்கும் : 1. வெளிப்பரப்பில் மிதக்கும். 2. மண்டிப்படிவுக்கு மேல் எஞ்சி உள்ள தெளிவான நீர்மம்.

superior : மேலான; மேலுடல் : உடல் உட்கூறியலில் மேல் இரு பகுதிகள்.

superiormeatus : மூக்குமேலிடுக்கு.

superior venacava : மேல்பெரும் சிரை.

supernatent fluid : மேல்தெளி திரவம்.

supernumerary : மேற்பொருள் எண்ணிக்கை மிகைப்பு; அளவிலா : குறிப்பிட்ட, வழக்கமான, வேண்டிய எண்ணிக்கைக்கு மேற்பட்ட.

supernumerancy tooth : மிகை பற்கள்.

superovulate : மிகுமுட்டைய : வழக்கமான எண்ணிக்கையை விட அதிகமான அளவில் முட்டைகள் உற்பத்தியாதல்.

superovulation : கருவணுப் பெருக்கம்.

superoxide : சூப்பர் ஆக்ஸைடு : அடர்அமில மூலக்கூறு (HO2 (H+O-2) இதில் O2சூப்பர் ஆக்ஸைடு மூலக்கூறாகும். இது மிகவும் மறிவினை செயல் வடிவ ஆக்ஸிஜன் ஆகும்.

superparasite : ஒட்டொட்டு : ஒட்டுயிரின் ஒட்டுயிர்.

supersaturate : மிகுசெறிவு : இயல்பு நிலைக்கும் அதிகமான செறிவடைவு.

superscription : மருந்தெடு : மருந்துச் சீட்டில் முதலில் எழுதப்படும் குறியெழுத்து. எடுத்துக்கொள் அல்லது முறைப்பட்டியல்.

superstructure : மேல்கட்டமைப்பு : மேற்பரப்புக்கு மேல் உள்ள அமைப்பு.

supervascularisation : மிகை நாளப்பெருக்கம் : கதிரிக்க சிகிச்சையால் புற்று செல்கள் அழிவதைத் தொடர்ந்து இரத்த நாளம் (ஒட்டம்) அதிகரிப்பு.

supinate : அங்கை மலர்வி; மல்லாந்து : உள்ளங்கை மேலிருந்து மாறு திருப்பு. supination : கை மலர்விப்பு; வெளிப்புரட்டல்; மல்லாத்துதல் : உள்ளங்கை மேற்புறம் இருக்குமாறு கைவிரித்தல்.

supinator : படுக்கை நிலை; கைக்கீல்தசை : உள்ளங்கையை விரிக்க உதவும் தசை.

supine : மல்லாந்த; படுக்கை நிலை : உள்ளங்கை மேற்புறம் திரும் பியிருக்குமாறு செயலற்றுப்படுத்திருத்தல்.

supportine bandage : ஏந்துகட்டு; தாங்கு கட்டு.

suppository : உள்வைப்பு; உட்கரை குளிகை; செருகு மருந்து; குதச்செருகு; மல விளக்கி : மலக் குடல், சிறுநீர்த்துளையுள்ளே நுழைந்து அங்கேயே கரைய விட்டு விடப்படும் கூருருளை அல்லது நீளுருளை வடிவக் குளிகை.

suppressant: மட்டுப்பகுதி : 1.மட்டுப்படுத்தலைத் தூண்டுதல். 2. சுரப்பு அல்லது கழிப்பை தடுக்கும் பொருள்.

suppression : அமுக்கம்; அடக்கல்; அமிழ்த்தம் : நோய் வகையில் நோயின் போக்கினைத் தடுத்தல்; குருதிப் போக்கினை நிறுத்துதல்; உணர்ச்சி வகையில் உணர்ச்சியை அமுக்கி வைத்தல்.

suppressor cells : மட்டுப்படுத்தும் அணுக்கள் : டீ உதவும் அணுக்களின் செயலை குறைப்பதன் மூலம், விளைவிய விளைவுகளை தடுக்கும் டீ (சிடி8) நிண அணுக்கள்.

suppuration : சீழ்கட்டு; )சீழாதல்; சீழ்ப்பிடித்தல்; சீழ்மயம் : சீழ் வைத்தல்.

suprabulge : மிகை துருத்தம் : பல்லின் மூடும் பரப்பு நோக்கி குவியும் பல்லின் தலைப்பகுதி.

supracerebellar : சிறுமூளைமேல் : சிறுமூளையின் மேற்பரப்புக்கு மேலாக.

suprachoroid : குருதிப்படல மேல் : கண்களிக் கருநீல குருதிப் படல வெளிப்பக்கம்.

supraclavicular : கழுத்துப் பட்டை எலும்புமேல்; காரை எலும்பின்மேல் : கழுத்துப்பட்டை எலும்புக்கு மேல்நிலையிலுள்ள.

supraclavicular fossa : காரை எலும்பு மேற்குழி.

supracondylar : எலும்பு முனைமேல்; முண்டுமேல் : எலும்பு முனைப் முண்டுப்பொருத்துக்கு மேலேயுள்ள.

supracostal : விலா எலும்புமேல் : விலா எலும்புக்கு மேலேயுள்ள.

supramaxillary : மேல்தாடை : மேல்தாடைக்கு மேற்பட்ட பகுதி. supranuclear : உட்கருமேல் : 1. மண்டை நரம்புகள் அல்லது தண்டுவட நரம்புகளின் இயக்க நரம்பணுக்களின் தலைப்பக்க. 2. ஒரு உயிரணுவின் உட்கருவுக்கும் சேய்ம ஒரத்துக்கும் இடைப் பகுதி.

supraocclusion : பற்பொருத்துமேல்; பல்வரிசை : பொருத்து தளத்தையும் தாண்டி ஒரு பல்லின் நீண்டிருக்கும் நிலை.

supraorbital : கண் குழிமேல்; விழிக்குழிக்குமேல் : கண் குழிகளுக்கு மேலேயுள்ள.

suprarenal : சிறுநீர்ப்பைமேல்; அண்ணிரகம்; சிறுநீரகமேவி : சிறுநீர்ப்பைக்கு மேலுள்ள.

suprasternal : மார்பெலும்புமேல் : விலா எலும்புகளை இணைக்கும் மார்பு நடுவரை எலும்புக்கு மேலுள்ள.

supraversion : மேல்திருப்பம் : 1. மேல்பக்கம் திருப்புதல், 2. பல்வரிசை பொருத்துக்கோட் டுக்கு வெளியேயுள்ள பல், 3. இருகண்காட்சி மேலே இணைப் பியக்கம்.

supression : அடக்கல்.

supressor : செயலொடுக்கி; வினை அடக்கி.

sura : கெண்டைக்கால்.

suraditos : பிறவிச் செவிடு.

suradity : கேட்புத்திறனில்லா.

sural : கெண்டைச் சதை : பின் காலின் கெண்டைச் சதைப் பகுதி.

suramin : சுரமின் : உறக்கசோய், யானைக்கால் நோய் ஆகியவற்றில் நரம்புவழிச் செலுத்தப்படும் மருந்து.

surge : மிகுபாய்தல் : ஒரளவு நிலையான அடிப்படை அளவுக்கு மேல் அதிகமாக ஒரு பொருள் பாய்தல்.

surgeon : அறுவை மருத்துவர் : அறுவை சிகிச்சையில் சிறப்புப் பயிற்சி பெற்ற மருத்துவம் பயில்பவர். நோய், காயம், அங்கக் குறை ஆகியவற்றை அறுவை மூலம் அல்லது கைகள் கொண்டு சிகிச்சை செய்பவர்.

surgery : அறுவை மருத்துவம்; அறுவை; அறுவையியல் : உறுப்புத் திரிபுகள், காயங்கள் ஆகியவற்றை அறுவை மருத்துவம் மூலம் குணப்படுத்தும் மருத்துவம்.

surgical : அறுவை மருத்துவம் சார் : அறுவை மருத்துவம் தொடர்பான.

surgical catgut : அறுவைக் குடலியல்.

surgical emphysema : அறுவைக் காற்றடைவு; அறுவைக் காற்றுத் திணிவு : அறுவை மருத்துவ மயக்கம் அல்லது காயத்தினைத் தொடர்ந்து தோலடித் திசுக்களில் காற்று நிரம்புதல்.

surgical ligature : அறுவை முடிச்சு.

surgical operation : அறுவை மருத்துவம்.

surgical suture : அறுவைத் தையல்.

sutra : குருதிக்குறை நோய் : வெப்பமண்டலக் குருதிக் குறை நோய்.

susceptible : மசிவியல்புடைய : 1. எளிதில் பாதிக்கப்படக்கூடிய அல்லது ஆட்படுகிற, 2. தடை குறைவான.

susceptibility : மசிவியல்பு : நோயினால் எளிதில் பாதிக்கப்படும் தன்மை, நோயை எதிர்க்க முடியாத நிலை.

suspended heart : தொங்கு இதயம் : இதயமும் மார்பும் பிரிந்து எக்ஸ்ரே படத்தில் நடு மார்பில் இதயம் தொங்குவது போல் தோற்றம். இதனால் உடல்நிலை எந்த குறிப்பிட்டத் தகுந்த பிரச்சினையில்லை.

suspension : இடைநிறுத்தம் : 1. எந்த ஒரு உயிர்ப்பியக்க தற் காலிக இடைநிறுத்தம் 2. ஒரு உடல் பகுதியை தொங்கும் நிலையில் அசையாமலிருக்கும் ஒரு தொங்கும் ஆதரவைக் கொண்டு மருத்துவம் அளித்தல். 3. ஒரு திடப் பொருளின் துகள்கள் ஒரு நீரில் அல்லது மற்றொரு திடப் பொருளுடன் கலந்திருத்தல் கரைந்திருக்க வில்லை. அந்நிலையிலுள்ள ஒரு திடப்பொருள்.

suspensoid : கூழ்மத்தொங்கல் : கலந்துள்ள திடப்பொருள்கள் தொங்கியுள்ள நீர்மத்திலிருந்து தெளிவாக பிரித்தறிய முடிதல்.

suspensory : தொங்கு : 1. 62(5 பிணையம், தசை, எலும்பு போன்ற தாங்குப் பகுதி, 2. ஒரு பகுதியை துக்கி நிறுத்தச் செய்யும் கட்டு அல்லது தொங்கல் கயிறு.

suspiraton : பெருமூச்சு; நெடு மூச்சு.

sustentacular cells : தாங்கணுக்கள் : மற்ற சிறப்பு நிலை அணுக் களைத் தாங்கும் வெளி அணு அடுக்குள்ள அணுக்கள்.

sustentaculum : தாங்கமைப்பு : மற்றொன்றைத் தாங்கும் அமைப்பு.

sutura : தையல்; மூட்டு : இரண்டு படல எலும்புகள் ஒரு நார் முட்டில் இணையும் வகை.

suture : அறுவைத்தையல்; தையல் மூட்டு; இணைவு : அறுவை மருத்துவத்துக்குப்பின் தையலிடுதல், மண்டையோட்டுப் பொருத்துவாய், எலும்புப் பொருத்துவாய்.

suturing technique : தையல் நுட்பம்.

suxamethonium : சக்ஸாமெத்தோனியம் : சிறிது காலமே செயல்படும் முனைப்படு நீக்கி தசைத் தளர்த்தி.

svedberg : ஸ்வெட்பெர்க் அளவு : ஸ்வீடன் நாட்டு வேதியியலாரும் நோபல் பரிசு பெற்ற வருமான தியோடார் ஸ்வெட்பெர் பெயராலமைந்து படிவுத் திறனளவு. இது மையவிலகல் கொண்டு தீர்மானிக்கப்படுகிறது.

swab : பஞ்சுத் துடைப்பான்; ஒற்றி; சுருணை; துடைப்பி : அறுவை மருத்துவத்தில் பயன் படுத்தப்படும் உறிஞ்சு பஞ்சுத் துடைப்புத் துண்டு.

swage : 1. ஒரு பகுதியில் குறிப்பாக உள்ள உலோகத்தை வடிவமைத்து அழுந்தப் பொருத்துகிற, 2. ஒரு தையல் பொருளை ஊசிக்குள் பொருத்தல்.

swallow : விழுங்கு : ஒரு பொருளை வாயிலிருந்து வாய் பின்புழை தொண்டை, உணவுக் குழல் வழியாக வயிற்றுக்குள் அனுப்புதல்.

swallowing : விழுங்குதல் : உணவுப் பொருள் வாயிலிருந்து தொண்டை, உணவுக்குழல் வழியாக இரைப்பைக்குச் செல்லும் இயக்கத்தை செயல்படுத்தும் முதலில் விருப்பச் செயலாகத் துவங்கி அனிச்சைச் செயலாக முடியும் பலபடி நிலைகள் கொண்ட இயக்கம்.

swan-neck : வாத்துக் கழுத்து : தசைத் தொனியழிவு நோயில், தசையழிவின் காரணமாக விளைவான் மெல்லிய வளைந்த கழுத்து.

Swarning : மொய்த்தல் : ஒரு வளர்ம ஊடகத்தில் நுண்ணுயிர்கள் பரவியிருக்கும் நிலை.

sweat : வியர்வை : வியர்வைச் சுரப்பிகளிலிருந்து வெளிப்படும் சுரப்பு நீர்.

sweat duct : வியர்வை நாளம்.

sweat gland : வியர்வைச் சுரப்பி.

sweating : வியர்த்தல்.

sweating leath : வியர்வைக் குளியல் : வியர்வை ஏற்படுவதற்காக மேற்கொள்ளும் குளியல்.

sweating-room : வியர்பறை : வியர்வையை ஏற்படுத்தக்கூடிய அறை.

sweat test : வியர்வைச்சோதனை.

sweet's syndrome : ஸ்வீட்(நோயியம்) நோய்க் குறித் தொகுதி : காய்ச்சல், முகம், கழுத்து, காலுறுப்புகளில் வலியுடன் தடிப்புப் பத்துகள், வெள்ளணுப் பெருக்கத்துடன் தோன்றும் கோளாறு, கார்ட்டிக்கோஸ்டீராய்டு சிகிச்சை யில் சரியாகிறது. பிரிட்டிஷ் மருத்துவர் ஆர்.டி.ஸ்வீட் பெயராலமைந்தது.

swelling : வீக்கம் : 1. உயிரணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்காமல், உடலின் ஒரு பகுதி வழக்கத்தை விடப் பெரிதாதல். 2. ஒரு மேடு.

swimmer's itch : நீந்துபவோர் அரிப்பு : சில ஸ்கிஸ்டோசோம் புழுக்களின் முட்டைப் புழுக்கள் நிறைந்த நீரில் நீந்துபவர்களின் தோலில் கொப்புளங்கள் ஏற்படுதல்.

swimming pool granuloma : நீச்சல் குள குருணைக்கட்டி : கடற்கரைச் சூழலில் வேலை செய்பவர்களில் எம்.மேரினம் உண்டாக்கும் தோலில் உள்ள குருணைக்கட்டி.

sycosis : கத்திப்பரு; நாவிதன் தோற்படை; முகச்சொறி : தாடைத் தோல் நோய்.

sycosis barbae : மயிக்கால் நோய்.

sycosis nuchae : பிடரித் தடிப்பு : கழுத்துப் பிடரியில் தோலில் ஏற்படும் தோல் தடிப்பு நோய்.

sylvatic plaque : காட்டுயிர்கொப்புளம் : காட்டெலி அல்லது அணில்களில் பரவியுள்ள, நெறிக்கட்டிய வீக்கத்தழும்பு.

sylvian aqueduct : சில்வியன் நீர்நாளம் : டச்சு நாட்டு உடற்கூறி யலாளர் ஃப்ரான்காய்ஸ் சில்வியல் பெயர் கொண்ட மூளையிலுள்ள மூன்றாவது நீரறையிலிருந்து நான்காவது நீரறைக்குச் செல்லும் ஒரு ஒடுக்கக் கால்வாய்.

symballophone : ஒலிகளின் பக்கமறியப் பயன்படும் இரு மார்புக் கோட்புப் பகுதிகளைக் கொண்ட ஒரு ஸ்டெதாஸ் கோப்.

symbiont : ஒருங்கொத்துவாழுயிர் : மற்றொரு உயிருடன் ஒருங்கொத்து வாழும் உயிரி.

symbiosis : இணைவாழ்வு; கூட்டு வாழ்க்கை : உடலில் இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட உயிரிகள் ஒன்றுக் கொன்று உதவிக் கொண்டும், நன்மை செய்து கொண்டும் இணைந்து வாழ்தல்.

symblepharon : இமை விழி ஒட்டல்; விழி இமை ஒட்டு நோய்; இணைவிமை : கண் விழியுடன் இமை ஒட்டிக் கொள்ளுதல்,

symbolia : தொடு அறிவுத்திறன்: தொடு உணர்வு கொண்டு பொருள்களை கண்டு அறியும் திறன். symbolism : குறியீட்டமர்வு : 1. நடைபெறும் ஒவ்வொன்றையும் தனது நினைவுகளின் குறியீடாகக் கருதும் இயல்பல்லாத மனநிலை. 2. உணர்வறியா நிகழ்ச்சிகளை உணர்நிலையில் மாற்று வடிவ பிரதியுருவாகத் தோன்றும் முறை.

symbolisation : உருவக வடிவமாதல் : இரண்டு பொருட்களுக் கிடையேயான தொடர்பு அல்லது ஒற்றுமை காரணமாக, ஒரு கருத்து அல்லது ஒரு பொருள் மற்றொன்றாகத் தோன்றும் உணர்வில்லா செயல்முறை.

Syme's amputation : மேல் கணுக்கால் துண்டிப்பு : கணுக்கால் மூட்டுக்கு மேலே துண்டித்தல். செயற்கைகால் உறுப்பு பொருத்துவதற்கு இவ்வாறு செய்யப்படுகிறது.

Syme's operation : சைமின் அறுவை : ஸ்காட்லாந்து அறுவை மருத்துவப் பெயர் கொண்ட அறுவை முறை. 1. கணுக்காலுடன் சேர்த்து கணுவெலும்புகளையும் வெட்டியெடுத்தல், 3. சிறுநீர்த்தாரை வெளி அறுவை.

symmelus : உறுப்புகளிணைந்தகரு : காலடிகளுடன் அல்லது இல்லாமல் உறுப்புகள் இணைந்த முதிர்கரு.

symmetry : இருபக்க இயைபு; சம அமைவு; சமச்சீர் : உடலின் இரு பக்கங்களிலும் உள்ள ஒத்த பகுதிகள் வடிவம், அளவு, இருக்கைநிலை ஒத்திருத்தல்.

sympathectomy : பரிவு நரம்பு அறுவை; பரிவு நரம்பு எடுப்பு : பரிவு நரம்பு மண்டலத்தின் ஒரு பகுதியை அறுவை மருத்துவம் மூலம் துண்டித்து எடுத்தல்.

sympathetic : பரிவு : 1. பரிவு நரம்பு மண்டலம் தொடர்பான, 2. பரிவால் உண்டாகும், பரிவு தொடர்பான.

sympathetic ganglion : பரிவு நரம்பு முடிச்சு.

sympathetic nerve : பரிவு நரம்பு.

sympathetic nervous system : பரிவு நரம்பு மண்டலம் : முது கந்தண்டெலும்பின் மேல், கீழ்ப்பகுதிகளுக்கு முன்புறத்தில் உட்புறமாக நெருக்கமான நரம்புகளின் ஒரு தொகுதியினால் இணைக்கப்பட்டு பரவலாக அமைந்திருக்கும் நரம்புகளின் தொகுதி. இது தானியங்கும் நரம்பு மண்டலத்தின் ஒரு பகுதி, சூழ்நிலையின் தேவைகளுக்கேற்ப உடல் உடனடியாக வலுவான நடவடிக்கை எடுக்க உதவுவது. இம்மண்டலத்தின் முக்கிய பணி, எ-டு: அபாயம் நேரிடும் போதும், மனக்கிளர்ச்சி ஏற்படும்போதும் செயற்பட தூண்டுவது இந்நரம்பு மண்டலமேயாகும். தானியங்கும் நரம்பு மண்டலத்தின் இன்னொரு பகுதி துணைப்பரிவு நரம்பு மண்டலமாகும். உடலினைப் பேணி வருவதற்கும், நிறைவு செய்வதற்கும் இது உதவுகிறது.

sympathetic pain : பரிவு நோவு : தொடர்புணர்ச்சியால் ஏற்படும் வலி.

sympathetic opthalmia : பரிவுக் கண் நோய்.

sympathicotonia : பரிவு நரம்பு தொனி : தைராய்டு மிகை நிலையில் பரிவு நரம்பு மண்டலத் தொகுதியின் மிகை தொனி காரணமாக, நாளச்சுருக்கம், மிகை இரத்த அழுத்தம், கைகளில் நடுக்கம் தோன்றும் இயல்பு மிகுந்திருத்தல்.

sympathicotropic : பரிவாளர் : 1. பரிவு நரம்பு மண்டலத்துக்கு விருப்புணர்வை வெளிப்படுத்தும். 2. பரிவு நரம்பு மண்டலம் விரும்பும் ஒரு அமைப்பு அல்லது அதன் மேல் செயல்படும்.

sympathoadrenal : பரிவு அண்ணீரக : பரிவு நரம்பு மண்டலம் மற்றும் அண்ணீரக அகணி தொடர்பான.

sympathoblast : பரிவு அணு மூலம் : அண்ணீரக அகணியை உருவாக்கும் நரம்பு முகடுத்திசுவிலிருந்து தோன்றும் உயிரணு முலம்.

sympathogonia : பரிவு நரம்பு முதிராஅணு : பரிவு நரம்பு மண்டலத்தின் முழுமையாக முதிரா அணு.

sympathogonioma : பரிவு மண்டல முதிரா அணுக்கட்டி : பரிவு நரம்பு மண்டலம் வேறு படுத்தப்படாத உயிரணுக்கள் கொண்ட கட்டி.

sympatholytic : பரிவு நரம்பு மாற்று : நரம்பு முடிச்சுப் பின்னிழைகளிலிருந்து தூண்டல்களை விளைவு உறுப்புகளுக்கு கடத்தப்படுவதை தடுக்கும் அல்லது எதிர்ப்பால், மென்தசைச் சுருக்கத்தையும் சுரப்பிகளின் இயக்கத்தையும் குறைக்கும்.

sympatholytic : பரிவு நரம்பு எதிர்ப்பு மருந்து : பரிவு நரம்பு மண்டலத்தின் விளைவுகளை எதிர்க்கும் ஒரு மருந்து.

sympathomimetic : பரிவு நரம்பு போன்ற : 1. பரிவு நரம்பு மண்டலம் ஏற்படுத்தும் விளைவுகள் போல் தோன்றும் விளைவுண்டாக்கும். 2. அது மாதிரி விளைவுண்டாக்கும் இயக்கி.

sympathy : பரிவுணர்வு : 1. உடலிலுள்ள இணையான உறுப்புகளில் ஒன்றின் பாதிப்பு மற்றொன்றில் விளைவை ஏற்படுத் துதல் 2 மற்றொருவரின் மனம் மற்றும் உணர்வு நிலையைப் பகிர்ந்து கொள்ளுதலும் உணர்வளவில் கவலைப்படுவதும்.

symphsiotomy : இடுப்புக்குழி அறுவை : இடுப்புக்குழியின் முன்பகுதியை வெட்டியெடுத்தல்.

symphysis : கூட்டுக்கணு; ஒருங்கிணைவு : எலும்புகளின் ஒருங் கிணைவு.

symport : ஒரு திசை இயக்கம் : 1. ஒரு உயிரணுப்படலம் ஊடாக இருபொருட்கள் ஒரே திசையில் செல்லும் முறை. 2. உடன்போக்கு.

symptom : நோய்க்குறி; அறிகுறி; உணர்குறி : நோயினை உணர்த்தும் அறிகுறிகள். நோயாளி தானே உணர்ந்து கொள்ளும் நோய்க்குறி தலைவலி, உடல் வெப்பநிலை, நாடித் துடிப்பு போன்றவை மருத்துவர் கண்டறியும் நோய்க் கிருமிகள்.

symptomatic : நோய்க்குறி ஆய்வியல்; நோய்க் குறியியல் : 1. உடலினுள் உள்ள நிலை இருப்பைக் குறிக்கும் காட்டும். 2. குணப்படுத் தாமல் ஒரளவு செளகரியத்துக்காக செய்யப்படும் மருத்துவம்.

symptomatology (symptomatics) : நோய்க் குறியியல் : நோய்க் குறிகள் பற்றி ஆராயும் அறிவியல்.

symptosis : தேய்வு; உடல் மெலிவு : குறிப்பிட்ட பகுதியோ முழு உடலுமோ தேய்தல்.

synapse, synapsis : நரபணுத் தொடர்பு முனை : அடுத்தடுத்துள்ள இரு நரபணுக்களிடையிலான தொடர்புமுனை.

synarthrosis : மூட்டுப்பிணைப்பு : அசையாமூட்டு, உயவுக்குழி வறையில்லா மூட்டு.

syncanthus : ஒட்டிய வழி : கண் குழி அமைப்புகளோடு விழிக்கோளம் ஒட்டியிருத்தல்.

syncephalus : ஒரு தலை இரட்டையர் : ஒரு தலை, ஒரு முகம், நான்கு காதுகள் கொண்ட ஒட்டிப் பிறந்த இரட்டையர்.

synchiria : இரு பக்கத் தூண்டல் : உடலின் ஒரு பக்கத் தூண்டல் இரு பக்கங்களுக்கும் அனுப்பப் படும் உணர்வு நிலைக்கோளாறு. synchondrosis : குருத்தெலும்பு இணைப்பு : ஒரு குருத்தெலும்பு மூட்டில், ஒரு படிகக் குருத்து அல்லது நார்க் குருத்தெலும்பு இணைப்புப் பொருளாயிருத்தல்.

synchronism : இணை நிகழ்வியல் : இரண்டு அல்லது அதிக நிகழ்வுகள் ஒரே நேரத்தில் ஏற்படுதல்.

synchrony : இணை நிகழ்வு : ஒரே நேரத்தில் இரு நிகழ்ச்சிகள் நடைபெறுதல் அல்லது இரு நிகழ்வுக்கிடையே குறிப்பிட்ட இடைவெளி இருத்தல்.

synchysis : தீப்பொறிக் கண்ணோய்; பளிங்கு நீர்மை : கண் விழிக் குழியிலுள்ள பளிங்கு போன்ற திண்ம நீர்மம் சிதைவுற்றுத் திரவமாதல்.

syncitium : இணப்பணு : உயிரணுக்கள் இணைவதால் உண்டாகும் பல உட்கரு கொண்ட உயிர்க்கூழ்மத் திரள்.

syncliticism : 1. முதிர் கருத்தலை மற்றும் இடுப்புத் தளங்களுக் கிடையேயுள்ள இணைநிலை. 2. இரத்த அணுக்களின் உயிர்க்கருவும் உயிர்க்கூழ்மமும் இயலபாக ஒரே நேரம் முதிர்ச்சியடைதல் .

synclonus : இணைச்சுரிவு : பல தசைகளின் நடுக்கம் அல்லது துடிப்பிசிப்பு.

syncope : குருதி மயக்கம்; உணர் விழப்பு; மயக்க நிலை; மூர்ச்சை : இரத்த அழுத்தக் குறைவினால் ஏற்படும் உணர்விழப்பு.

syncytium : பல கருவுள் உயிர்ம அணு : கருவுயிர்கள் பலப்பல அடங்கியிருந்தும் ஒரே உயிர்மமாக அமைந்து செயலாற்றும் ஊன்மத்திரள்.

syndactyly, syndactylism, syndactylia : வாத்து விரல்; இணைவிரல் : வாத்தின் கால் விரல்கள் போன்று விரல்கள் இடைத்தோலால் ஒன்றுபட்டு இணைந்திருத்தல்.

syndectomy : துண்டுவெட்டல் : பளிங்குப் படலத்தைச் சுற்றிலும் ஒரு வட்டத் துண்டாக இமையிணைப் படலத்தை வெட்டியெடுத்தல்.

syndesmography : மூட்டு இயல்விவரவுரை : எலும்பு இணைப் புத்தசை நாண் பற்றிய ஆய்வியல் விவரவுரை.

syndesmology (arthrology) : முட்டுஇயல் : எலும்பு இணைப்புத் தசை நாண் பற்றி ஆராயும் அறிவியல்.

syndesmosis : எலும்புத்தசை இணைப்பு : எலும்புத் தசை நாண் இணைப்பு.

syndesmotomy : பிணைய வெட்டு : பிணையத்தை அறுத்துப் பார்த்தல். syndrome : நோய்க் முரித் தொகுதி; நோயியம்; இணைப் போக்கு : ஒரு நோயைக்காட்டும் குறிகள், அடையாளங்கள், உணர்வுகள் ஆகியவற்றின் தொகுதி. இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து உடலிலுள்ள ஒரு குறிப்பிட்ட கோளாறைக் காட்டுகின்றன. எ-டு: மிகுந்த உடல் வெப்பம், தொண்டை வீக்கம், மெதுவான நாடித் துடிப்பு, அடிக்கடி ஏற்படும் மயக்கம் ஆகியவை இதயத்தின் மேலறைக்கும் கீழறைக்கும் இடையிலான தடுக்கிதழ் அடை பட்டிருப்பதைக் குறிக்கிறது.

syndromology : பிறவிக்குறையியல் : பிறவிக் கோளாறுகளின் வகை தொகை காரணம், பாங்கு பற்றிய பிரிவு.

synechia : உறுப்பிணைப்பு; ஒட்டி ணைப்பு : உறுப்புகள் இயல்பு மீறி இணைந்திருத்தல். எ-டு: விழிவெண் படலத்துடன் விழித் திரைப்படலம் இணைந்திருத்தல்.

synechotomy : ஒட்டுதிசுவறுவை : ஒட்டிய திசுக்களின் அல்லது ஒட்டுதிசு வெட்டுதல்.

syneresis : நீரெடுப்பு : ஒரு கூழ்ப் பொருளில் நீர்மப் பகுதி வெளியெடுப்பு.

synergism : ஒத்திசைவியம் : ஒரு தொகுதியில் இரண்டு அல்லது மேற்பட்ட கூட்டுப் பொருள்களுக்கிடையே கூட்டுறவு நிலை இடைச்செயல். தனி உட்பொருள்களின் கூட்டு விளைவைவிட அதிகமான விளைவு.

synergism, synergy : ஒருங்கி யக்கம் : மருந்துகள், நுண்ணுயிரிகள், தசைகள் போன்ற இரண்டு இயக்கிகள் ஒருங்கிணைந்து ஒன்றாக இயங்குதல்.

synergist : ஒருங்கியக்கி; கூட்டுச் செயல்; இணை விளைவி; இணை வுறவு : ஒருங்கியக்கத்தில் மற்றொரு கூட்டாளியுடன் ஒத்துழைக்கும் ஒர் இயக்கி.

synergy : ஒத்திசைவு : நொதிகள், மருந்துப் பொருட்கள் இணைந்து செயல்படும்போது கூட்டிய விளைவைவிட அதிக விளைவு.

syngeneic : இனமிலா வகை : 1. இனம் ஒன்றாயில்லாத அதே வகைப்பிரிவு. 2 ஒன்றின் ஒட்டு திசு மற்றொறு ஒன்றுக்கும் பொருந்தும்.

syngraft : இணைஒட்டு : மரபணு வகையில் ஒரே மாதிரி இரு வருக்கிடையே, ஒட்டு அறுவை மாதிரி. எ-டு: ஒரே மாதிரி இரட்டையர்.

synkinesis : துல்லிய இயக்கத்திறன் : துல்லியமான இயக்கங்களை நடத்தக்கூடிய திறன். synecrosis : ஒற்றியழிவு : ஒரு குழுவிலுள்ளவர்களில் ஒரு வருக்கொருவர் உள்ள தொடர்பு அவர்களுக்கிடையே கேடு விளைவிக்கும் தன்மையது.

synizesis : அடைப்பு : 1. அடைப்பு அல்லது மூடுதல் 2. பிளவுப் பெருக்கத்தின் முதல் படிநிலையின்போது உட் கருவின் ஒரு பக்கத்தில் நிறமியன் குவிப்பு.

synonym : ஒரு பொருட்பிற சொல் : ஒரு பெயர் அல்லது சொல் வேறொன்றின் பொருளைக் கொண்டிருப்பது. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வார்த்தைகள் ஒன்றின் அதே பொருள் கொண்டிருப்பது.

synophthalmus : ஒன்றிணைகண் குழி : இரண்டு கண் எலும்புக் குழிகள் ஒன்றிணைந்து ஒரு கண் மட்டுமே கொண்ட ஒரே குழிவறையாக உள்ள ஒரு பிறவிக் கோளாறு.

synorchism : ஒன்றிணைவிரை : இரண்டு விரைகள் ஒரு திரளாக பிறவியிலேயே இணைந்திருப்பது.

synosteology : உடல் மூட்டி இணைப்பியல்.

synosteosis (sy nostosia) : எலும்புக் கூட்டொருமை.

synotosis : எலும்பிணைப்பு மூட்டு : அடுத்துள்ள இரண்டு எலும்புகள் திரண்ட நாரிணைப்புத் திசுவால் இணைக்கப்பட வேண்டிய மூட்டில் தையலிணைப்பு எலும்பாகி, இணைப்பூடே ஒரு முழு ஒட்டிணைப்பு உருவாவது.

synotia : ஒன்றிய காது மடல் : காதுமடல்கள் ஒட்டியிணைந்து, கீழ்த் தாடை எலும்புக் குறை வளர்ச்சியாகி அல்லது இல்லாமலிருப்பது.

synovectomy : மூட்டு உறைச் சவ்வு அறுவை; உயவுச் சவ்வு அறுவை நீக்கம்; மூட்டுப் பை எடுப்பு : மூட்டு உறைச் சவ்வுப் படலத்தை வெட்டியெடுத்தல்.

synovia : உயவு நீர் : எலும்பு முட்டிற்குள் கசிந்து வரும் உயவு நீர்.

synovial fluid (synovia) : உயவு நீர்மம் : எலும்பு மூட்டிணைப் பிலுள்ள கசியும் உயவு நீர்மம்.

synovial membrane : மூட்டு உறைச் சவ்வுப் படலம்; மூட்டுறை; நாண் உறை; பசைச் சவ்வு.

synovioma : மூட்டு உறைச் சவ்வுக் கட்டி; மூட்டுப்பை உருவாக்கம் : மூட்டு உறைச் சவ்வுப் படலத்தில் உண்டாகும் கட்டி இது உக்கிரமானதாகவோ உக்கிரமற்றதாகவோ இருக்கலாம்.

synovitis : மூட்டு உறைச் சவ்வழற்சி; மூட்டுப்பை அழற்சி : மூட்டு உறைச்சவ்வுப் படலத்தில் ஏற்படும் வீக்கம்.

synteny : ஒன்றியமரபணு : ஒரே நிறக்கீற்றில் இரண்டு அல்லது மேற்பட்ட மரபணுக்கள் அமைந்திருப்பது.

synthesis : மீட்டிணைப்பு; செயற்கைத் தயாரிப்பு : அறுத்துப் பிரிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்த்தல்.

syntrophoblast : ஒன்றிய ஊட்ட அணு : ஊட்ட அணுவின் ஒன்றிய குழிய வெளியுறை.

syntropic : ஒன்றிணை வளர்ச்சி : 1. ஒரே திசையை காட்டும் நோக்கிய, 2. நோயின் வளர்ச்சியில் பல காரணிகளுக்கிடையே உள்ள உறவு நிலைய சுட்டிக்காட்டும்.

syntrophy : ஒன்றிணை நோய் : இரண்டு வியாதிகள் ஒன்றுடனொன்று இணையும் போக்கு.

syphilid : கிரந்திப் புண் : கிரந்தியினால் உண்டாகும் தோல் புண்.

syphilis : கிரந்தி; மேகப்புண்; மேக நோய் : திருகு சுருள் வடிவான நுண்ணுயிர் மூலம் உண்டாகும் ஒரு நோய். இது உடலுறவு மூலம் ஆணிடமிருந்து பெண்ணுக்கும் பெண்ணிடமிருந்து ஆணுக்கும் பரவுகிறது. தொடக்கத்தில் இதனால் உடலின் மேற் பகுதியில் வீக்கமும், புண்களும் ஏற்படும். ஆனால் பின்னர் குருதி நாளங்கள் இதயம், மூளை, முதுகந்தண்டு ஆகியவற்றையும் தாக்குகிறது. இது கருவில் உள்ள குழந்தைகளை பீடிக்கிறது.

syringe : பீற்று மருந்துசி; பீச்சு குழாய்; உட்செலுத்தி; பீச்சி; சிரிஞ்சு :உடலில் விசைப்பீற்று மருந்து குத்திச் செலுத்துவதற்கான குழல் ஊசி.

syringeal : காது உட்குழாய் சார்ந்த.

syringitis : காதுத் தொண்டை தொடர்புக் குழலற்சி : காது உட்குழல் அழற்சி நோய்.

syringobulbia : முகுளப் புழை நோய் பேச்சுக் குழறல் : அண்ணச் செயலிழப்பு ஹர்னெர் நோயியம், விழியாட்டம், முக உணர்விழப்பு ஆகிய குறிகள் தோன்றுவது முகுளத்தில் நீர்மக் குழிவறை வளர்வதால்.

syringocoele : புழைவீக்கம் : 1. தண்டுவடமைக் கால்வாய். 2. வேற்றிடத் தண்டுவடத்தில் குழிவறை கொண்ட தண்டுவட உறைமச்சை வீக்கம்.

syringoma : புழைக்கட்டி : பருவ மடைந்த பெண்களில் பல சதை நிற மஞ்சள் கொப்புளக் கட்டிகளாகத் தோன்றும், விழியிமைகள், கழுத்து மேல் முன் மார்பு, பெண்புழை ஆகியவற்றின் வேர்வை சுரப்பிக்கட்டி syringomyelia : தண்டுவடப்புழை : தண்டுவட மையப்பகுதியில் நீர் நிறைந்த குழிவறை உருவாகிப் பெரிதாவதால் தண்டுவட தலைமத் தடத்தை குலைத்து முன் கொம்பணுக்களை பாதித்து, நீள்இழைத்தடங்களை அழுத்துகிறது. இதனால் தாறுமாறான உணர்விழப்பு (வலி, தொடுவுணர்வு மட்டும் இழந்து பிற பின் வரிசை உணர்வுகள் இருப்பது) வளர்ச்சிப் புண்கள், கையின் சிறு தசைகள் நலிவு, கால் உறுப்பில் மேல் இயக்க நரம்பணு பாதிப்பு அறிகுறிகள் தோன்றுகின்றன.

syringotomy : காதுக்குழல் அறுவை : காது உட்குழலில் செய்யப்படும் அறுவை, புழை அறுவை.

syrinx : காது உட்குழாய் : தொண்டையிலிருந்து காதுக்குக் காற்றுக் கொண்டு செல்லும் நுண்குழல்.

syrup : நீர்மக் கரைசல்; இனிப்புப் பாகு : 1. சர்க்கரை பதப்படுத்திய பிறகு உள் சர்க்கரைக் கரைசல். 2. சர்க்கரையின் செறிவுக் கரைசல், 3. சர்க்கரையின் செறிவுக் கரைசலில் மருந்துப் பொருள்களான நீர்மத் தயாரிப்பு.

syssarcosis : எலும்பிடைத் தசைத் தொடர்பு.

system : மண்டலம் : இயக்கப் பகுதிகளின் தொகுதி. எ-டு: நரம்பு மண்டலம், தசை மண்டலம் சீரண மண்டலம்.

System for Indentifying Motivated Abilities (SIMA) : தூண்டு திறன் கண்டறியும் முறை : தூண்டப்படும் திறன்களை அடையாளங் காணபதற்கான முறை மனச்சீர்கேட்டின் அளவைக் கணக்கிடுவதற்கான சோதனை.

systemic : உடல்சார் : 1. முழு உடலை பாதிக்கும் பொதுவான, 2. ஒரு தொகுதி தொடர்பான.

systemic circulation : முழு உடல் குருதியோட்டம்; மண்டலச் சுற் றோட்டம் : உடலின் ஒர் உறுப்பு மட்டும் சாராமல், உடல் அமைப்பு முழுவதும் சார்ந்து இரத்தவோட்டம் நடைபெறுதல். ஆக்சிஜனேற்றப்பட்ட இரத்தம் இதயத்தின் இடது மேலறையிலிருந்து புறப்பட்டு உடல் முழுவதும் பாய்ந்து ஆக்சிஜன் நீக்கமடைந்து மீண்டும் வலது மேலறைக்கு வருதல்.

systole : இதயச் சுருக்கம் : நெஞ்கப்பைச் சுருங்கி இயங்குதல்; குருதி நாளச் சுருங்கியக்கம்.

systole pressure : இதயச் சுருக்க அழுத்தம்.

systolic murmur : இதய முறுமுறுப்பு; சுருங்கல் முணுமுணுப்பு : சிற்றொலி : நெஞ்சுப்பை சுருங்கியங்குவதால் உண்டாகும் முறு முறுப்பு ஒலி.

systolic pressure : இதய சுருக்க அழுத்தம்.

systremma : திருகல் : காலின் கெண்டைத்தசை வலிப்பு.

sytron : சைட்ரோன் : சோடிய அய எடிட்டேட் என்ற மருந்தின் வணிகப் பெயர். அயச் சத்துக் குறைபாட்டினால் உண்டாகும் சோகை நோய்க்கு மருந் தாகப் பயன்படுகிறது.

syzygy : உறுப்பினைப்பு : உயிரணுக்கள் அல்லது உட்கருக்கள் இணையாமல், பாலணுக்கள் ஒன்றாகக் கட்டியிருத்தல் உறுப்புகள் இணைந்தாலும் தனியாகத் தெரிதல்.