மலைபடுகடாம்-பிற்பகுதி

மலைபடுகடாம்செல்க. (வரி01-லிருந்து 470 வரை முற்பகுதி).

அதன்பின் மலைபடுகடாம் பிற்பகுதி.


மலைபடுகடாம்-மூலம்...தொடர்ச்சி தொகு

வெண்ணெ லரிநர் தண்ணுமை வெரீஇச் // 471 // வெள் நெல் அரிநர் தண்ணுமை வெரீஇ
செங்க ணெருமை யினம்பிரி யொருத்தல் // 472 // செ கண் எருமை இனம் பிரி ஒருத்தல்
கனைசெலன் முன்பொடு கதழ்ந்துவரல் போற்றி // 473 // கனை செலல் முன்பொடு கதழ்ந்து வரல் போற்றி
வனைகலத் திகிரியிற் குமிழி சுழலுந் // 474 // வனை கலம் >திகிரியின் குமிழி சுழலும்
துனைசெலற் றலைவா யோவிறந்து வரிக்குங் // 475 // துனை செலல் தலைவாய் ஓ இறந்து வரிக்கும்
காணுநர் வயாஅங் கட்கின் சேயாற்றின் // 476 // காணுநர் வயாஅம் கட்கு இன் சே யாற்றின்
யாண ரொருகரைக் கொண்டனிர் கழிமின் // 477 //யாணர் ஒரு கரை கொண்டனிர் கழிமின்
னிதியந் துஞ்சு நிவந்தோங்கு வரைப்பிற் // 478 //நிதியம் துஞ்சும் நிவந்து ஓங்கு வரைப்பின்
பதியெழ லறியாப் பழங்குடி கெழீஇ // 479 // பதி எழல் அறியா பழம் குடி கெழீஇ
வியலிடம் பெறாஅ விழுப்பெரு நியமத் // 480 // வியல் இடம் பெறா விழு பெரு நியமத்து
தியாறெனக் கிடந்த தெருவிற் சாறென // 481 // யாறு என கிடந்த தெருவின் சாறு என
விகழுநர் வெரூஉங் கவலை மறுகிற் // 482 // இகழுநர் வெரூஉம் கவலை மறுகின்
கடலெனக் காரென வொலிக்குஞ் சும்மையொடு // 483 // கடல்என கார்என ஒலிக்கும் சும்மையொடு
மலையென மழையென மாட மோங்கித் // 484 // மலைஎன மழைஎன மாடம் ஓங்கி
துனிதீர் காதலி னினிதமர்ந் துறையும் // 485 // துனி தீர் காதலின் இனிது அமர்ந்து உறையும்
பனிவார் காவிற் பல்வண் டிமிரு // 486 // பனி வார் காவின் பல் வண்டு இமிரும்
நனிசேய்த் தன்றவன் பழவிறன் மூதூர் // 487 // நனி சேய்த்து அன்று அவன் பழ விறல் மூதூர்
பொருந்தாத் தெவ்வ ரிருந்தலை துமியப் // 488 // பொருந்தா தெவ்வர் இரு தலை துமிய
பருந்துபடக் கடக்கு மொள்வாண் மறவர் // 489 // பருந்து பட கடக்கும் ஒள் வாள் மறவர்
கருங்கடை யெஃகஞ் சாத்திய புதவி //490 // கரு கடை எஃகம் சாத்திய புதவின்
னருங்கடி வாயி லயிராது புகுமின் // 491 // அரு கடி வாயில் அயிராது புகுமின்
மன்றில் வதியுநர் சேட்புலப் பரிசிலர் // 492 // மன்றில் வதியுநர் சேண் புலம் பரிசிலர்
வெல்போர்ச் சேஎய்ப் பெருவிற லுள்ளி // 493 // வெல் போர் சேஎய் பெரு விறல் உள்ளி
வந்தோர் மன்ற வளியர் தாமெனக் // 494 // வந்தோர் மன்ற அளியர் தாம் என
கண்டோ ரெல்லா மமர்ந்தினிதி னோக்கி // 495 // கண்டோர் எல்லாம் அமர்ந்து இனிதின் நோக்கி
விருந்திறை யவரவ ரெதிர்கொளக் குறுகிப் // 496 // விருந்து இறை அவர் அவர் எதிர்கொள குறுகிய
பரிபுலம் பலைத்தநும் வருத்தம் வீட // 497 // பரி புலம்பு அலைத்த நும் வருத்தம் வீட
வெரிகான் றன்ன பூஞ்சினை மராஅத்துத் // 498 // எரி கான்று அன்ன பூ சினை மராஅத்து
தொழுதி போக வலிந்தகப் பட்ட // 499 // தொழுதி போக வலிந்து அகப்பட்ட
மடநடை யாமான் கயமுனிக் குழவி // 500 // மட நடை ஆமான் கய முனி குழவி
யூமை யெண்கின் குடாவடிக் குருளை // 501 //ஊமை எண்கின் குடாவடி குருளை
மீமிசைக் கொண்ட கவர்பரிக் கொடுந்தாள் // 502 //மீ மிசை கொண்ட கவர் பரி கொடு தாள்
வரைவாழ் வருடை வன்றலை மாத்தக // 503 // வரை வாழ் வருடை வன் தலை மா தகர்
ரரவுக்குறும் பெறிந்த சிறுகட் டீர்வை // 504 // அரவு குறும்பு எறிந்த சிறு கண் தீர்வை
யளைச்செறி யுழுவை கோளுற வெறுத்த // 505 // அளை செறி உழுவை கோள் உற வெறுத்த
மடக்கண் மரையான் பெருஞ்செவிக் குழவி // 506 // மட கண்மரை ஆன் பெரு செவி குழவி
யரக்குவிரித் தன்ன செந்நில மருங்கிற் // 507 // அரக்கு விரித்தன்ன செ நில மருங்கில்
பரற்றவ ழுடும்பின் கொடுந்தா ளேற்றை // 508 // பரல் தவழ் உடும்பின் கொடு தாள் ஏற்றை
வரைப்பொலிந் தியலு மடக்கண் மஞ்ஞை // 509 // வரை பொலிந்து இயலும் மட கண் மஞ்ஞை
கானக் கோழிக் கவர்குரற் சேவல் // 510 // கானம் கோழி கவர் குரல் சேவல்
கானப் பலவின் முழவுமருள் பெரும்பழ // 511 // கானம் பலவின் முழவு மருள் பெரு பழம்
மிடிக்கலப் பன்ன நறுவடி மாவின் // 512 // இடி கலப்பு அன்ன நறு அடி மாவின்
வடிச்சேறு விளைந்த தீம்பழத் தாரந் // 513 // அடி சேறு விளைந்த தீ பழம் தாரம்
தூவற் கலித்த விவர்நனை வளர்கொடி // 514 //தூவல் கலித்த விவர்நனை? வளர் கொடி
காஅய்க் கொண்ட நுகமரு ணூறை // 515 // காஅய் கொண்ட நுகம் மருள் நூறை
பரூஉப்பளிங் குதிர்த்த பலவுறு திருமணி // 516 // பரூஉ பளிங்கு உதிர்த்த பல உறு திரு மணி
குரூஉப்புலி பொருத புண்கூர் யானை // 517 // குரூஉ புலி பொருத புண் கூர் யானை
முத்துடை மருப்பின் முழுவலி மிகுதிரள் // 518 // முத்து உடை மருப்பின் முழு வலி மிகு திரள்
வளையுடைந் தன்ன வள்ளிதழ்க் காந்த // 519 // வளை உடைந்துஅன்ன வள் இதழ் காந்தள்
ணாகந் திலக நறுங்கா ழாரங் //520 // நாகம் திலகம் நறு காழ் ஆரம்

தொகு

கருங்கொடி மிளகின் காய்த்துணர்ப் பசுங்கறி // 521 // கரு கொடி மிளகின் காய் துணர் பசு கறி
திருந்தமை விளைந்த தேக்கட் டேறல் // 522 // திருந்து அமை விளைந்த தே கண் தேறல்
கானிலை யெருமை கழைபெய் தீந்தயிர் // 523 // கால் நிலை எருமை கழை பெய் தீம் தயிர்
நீனிற வோரி பாய்ந்தென நெடுவரை // 524 // நீல் நிற ஓரி பாய்ந்து என நெடு வரை
நேமியிற் செல்லு நெய்க்க ணிறாஅ // 525 // நேமியின் செல்லும் நெய் கண் இறாஅல்
லுடம்புணர்பு தழீஇய வாசினி யனைத்துங் // 526 // உடம்புணர்பு தழீஇய ஆசினி அனைத்தும்
குடமலைப் பிறந்த தண்பெருங் காவிரி // 527 // குட மலை பிறந்த தண் பெரும் காவிரி
கடன்மண் டழுவத்துக் கயவாய் கடுப்ப // 528 // கடல் மண்டு அழுவத்து கய வாய் கடுப்ப
நோனாச் செருவி னெடுங்கடைத் துவன்றி // 529 // நோனா செருவின் நெடு கடை துவன்றி
வானத் தன்ன வளமலி யானைத் //530 // வானத்து அன்ன வள மலி யானை
தாதெருத் ததைந்த முற்ற முன்னி // 531 // தாது எரு ததைந்த முற்ற முன்னி
மழையெதிர் படுகண் முழவுக ணிகுப்பக் // 532 // மழை எதிர் படு கண் முழவு கண் இகுப்ப
கழைவளர் தூம்பின் கண்ணிட மிமிர // 533 // கழை வளர் தூம்பின் கண் இடம் இமிர
மருதம் பண்ணிய கருங்கோட்டுச் சீறியாழ் // 534 // மருதம் பண்ணிய கரும் கோட்டு சீறி யாழ்
நரம்புமீ திறவா துடன்புணர்ந் தொன்றிக் // 535 // நரம்பு மீ திறவாது உடன் புணர்ந்து ஒன்றி
கடவ தறிந்த வின்குரல் விறலியர் // 536 // கடவது அறிந்த இன் குரல் விறலியர்
தொன்றொழுகு மரபிற் றம்மியல்பு வழாஅ // 537 // தொன்று ஒழுகு மரபின் தம் இயல்பு வழாஅது
தருந்திறற் கடவுட் பழிச்சிய பின்றை // 538 // அரும் திறல் கடவுள் பழிச்சிய பின்றை
விருந்திற் பாணி கழிப்பி நீண்மொழிக் // 539 // விருந்தின் பாணி கழிப்பி நீள் மொழி
குன்றா நல்லிசைச் சென்றோ ரும்ப // 540 // குன்றா நல் நல் இசை சென்றோர் உம்பல்

தொகு

லின்றிவட் செல்லா துலகமொடு நிற்ப // 541 // இன்றி இவண் செல்லாது உலகமொடு நிற்ப
விடைத்தெரிந் துணரும் பெரியோர் மாய்ந்தெனக் // 542 // இடை தெரிந்து உணரும் பெரியோர் மாய்ந்து என
கொடைக்கட னிறுத்த செம்ம லோயென // 543 // கொடை கடன் இறுத்த செம்மலோய் என
வென்றிப் பல்புகழ் விறலோ டேத்திச் // 544 // வென்றி பல் புகழ் விறலோடு ஏத்தி
சென்றது நொடியவும் விடாஅ னசைதர // 545 // சென்றது நொடியவும் விடாஅன் அசைதர
வந்தது சாலும் வருத்தமும் பெரிதெனப் // 546 // வந்தது சாலும் வருத்தமும் பெரிது என
பொருமுர ணெதிரிய வயவரொடு பொலிந்து // 547 // பொரு முரண் எதிரிய வயவரொடு பொலிந்து
திருநகர் முற்ற மணுகல் வேண்டிக் // 548 // திரு நகர் முற்றம் அணுகல் வேண்டி
கல்லெ னொக்க னல்வலத் திரீஇ // 549 // கல் என் ஒக்கல் நல் வலத்து இரீஇ
யுயர்ந்த கட்டி லுரும்பில் சுற்றத் // 550 // உயர்ந்த கட்டில் உரும்பில் சுற்றத்து
தகன்ற தாயத் தஃகிய நுட்பத் // 551 // அகன்ற தாயத்து அஃகிய நுட்பத்து
திலமென மலர்ந்த கைய ராகித் // 552 // இலம் என மலர்ந்த கையர் ஆகி
தம்பெயர் தம்மொடு கொண்டனர் மாய்ந்தோர் // 553 // தம் பெயர் தம்மொடு கொண்டனர் மாய்ந்தோர்
நெடுவரை யிழிதரு நீத்தஞ்சா லருவிக் // 554 // நெடு வரை இழிதரு நீத்தம் சால் அருவி
கடுவரற் கலுழிக் கட்கின் சேயாற்று // 555 // கடுவரல் கலுழி கட்கு இன் சேய் யாற்று
வடுவா ழெக்கர் மணலினும் பலரே // 556 // வடு வாழ் எக்கர் மணலினும் பலரே
அதனால், புகழொடுங் கழிகநம் வரைந்த நாளெனப் /557/ அதனால்,புகழொடும் கழிக நம் வரைந்த நாள்என
பரந்திடங் கொடுக்கும் விசும்புதோ யுள்ளமொடு// 558 // பரந்து இடம் கொடுக்கும் விசும்புதோய் உள்ளமொடு
நயந்தனிர் சென்ற நும்மினுந் தான்பெரி // 559 // நயந்தனிர் சென்ற நும்மினும் தான் பெரிது
துவந்த வுள்ளமோ டமர்ந்தினிது நோக்கி // 560 // உவந்த உள்ளமொடு அமர்ந்து இனிது நோக்கி
யிழைமருங் கறியா நுழைநூற் கலிங்க // 561 // இழை மருங்கு அறியா நுழை நூல் கலிங்கம்
மெள்ளறு சிறப்பின் வெளளரைக் கொளீஇ // 562 //எள் அறு சிறப்பின் வெள் அரை கொளீஇ
முடுவ றந்த பைந்நிணத் தடியொடு // 563 // முடுவல் தந்த பை நிணம் தடியொடு
நெடுவெ ணெல்லி னரிசிமுட் டாது // 564 // நெடு வெண் நெல்லின் அரிசி முட்டாது
தலைநா ளன்ன புகலொடு வழிசிறந்து // 565 // தலை நாள் அன்ன புகலொடு வழி சிறந்து
பலநா ணிற்பினும் பெறுகுவிர் நில்லாது // 565 // பல நாள் நிற்பினும் பெறுகுவிர் நில்லாது
செல்வேந் தில்லவெந் தொல்பதிப் பெயர்ந்தென // 565 // செல்வேம் தில்ல எம் தொல் பதி பெயர்ந்து என
மெல்லெனக் கூறி விடுப்பி னும்முட் // 565 // மெல் என கூறி விடுப்பின் நும்முள்
டலைவன் றாமரை மலைய விறலியர் // 565 // தலைவன் தாமரை மலைய விறலியர்
சீர்கெழு சிறப்பின் விளங்கிழை யணிய // 570 // சீர் கெழு சிறப்பின் விளங்கு இழை அணிய

தொகு

நீரியக் கன்ன நிரைசெல னெடுந்தேர் // 571 // நீர் இயக்கு அன்ன நிரை செலல் நெடு தேர்
வாரிக் கொள்ளா வரைமருள் வேழங் // 572 // வாரி கொள்ளா வரை மருள் வேழம்
கறங்குமணி துவைக்கு மேறுடைப் பெருநிரை // 573 // கறங்கு மணி துவைக்கும் ஏறு உடை பெரு நிரை
பொலம்படைப் பொலிந்த கொய்சுவற் புரவி // 574 // பொலம் படை பொலிந்த கொய் சுவல் புரவி
நிலந்தினக் கிடந்த நிதியமோ டனைத்து // 575 // நிலம் தின கிடந்த நிதியமொடு அனைத்தும்
மிலம்படு புலவ ரேற்றகைந் நிறையக் // 576 // இலம்படு புலவர் ஏற்ற கை நிறைய
கலம்பெயக் கவிழ்ந்த கழறொடித் தடக்கையின் // 577 // கலம் பெய கவிழ்ந்த கழல் தொடி தட கையின்
வளம்பிழைப் பறியாது வாய்வளம் பழுநிக் // 578 // வளம் பிழைப்பு அறியாது வாய் வளம் பழுநி
கழைவளர் நவிரத்து மீமிசை ஞெரேரென // 579 // கழை வளர் நவிரத்து மீமிசை ஞெரேர் என
மழைசுரந் தன்ன வீகை நல்கித் // 580 // மழை சுரந்து அன்ன ஈகை நல்கி
தலைநாள் விடுவிக்கும் பரிசின் மலைநீர் // 581 // தலை நாள் விடுவிக்கும் பரிசில் மலை நீர்
வென்றெழு கொடியிற் றோன்றுங் // 582 // வென்று எழு கொடியின் தோன்றும்
குன்றுசூ ழிருக்கை நாடுகிழ வோனே. // 583 // குன்று சூழ் இருக்கை நாடு கிழவோனே.

இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் 'பெருங்கௌசிகனார்', பல்குன்றக் கோட்டத்துச்செங்கண்மாத்துவேள் நன்னன்சேய் 'நன்னனைப்' பாடிய 'மலைபடுகடாம்' முற்றிற்று தொகு

மொத்த வரிகள்: 583 (ஐநூற்று எண்பத்துமூன்று மட்டும்)
பாவகை: ஆசிரியப்பா (நேரிசையாசிரியம்)
வெண்பா:
தூஉத் தீம்புகை தொல்விசும்பு போர்த்ததுகொல்
பாஅஅய்ப் பகைல்செய்வான் பாம்பின்வாய்ப் பட்டான்கொல்
மாஅ மிசையான் னன்ன னறுநுதலார்
மாஅமை யெல்லாம் பசப்பு.

முக்கியக் குறிப்புக்கள் தொகு

மலைபடுகடாம் முற்பகுதி பார்க்க.

[[]] [[]]

வினைமுடிபு:
"https://ta.wikisource.org/w/index.php?title=மலைபடுகடாம்-பிற்பகுதி&oldid=5616" இலிருந்து மீள்விக்கப்பட்டது