மாணவர்களுக்கு புறநானூற்றுச் சிறுகதைகள்/எது உடைமை
மலையமான் திருமுடிக்காரி வரையாது கொடுக்கும் வள்ளல். அவனைக் காணச் சென்றார் கபிலர். நெஞ்சம் நெகிழ்ந்து வாழ்த்தினார்:
“திருமுடிக்காரியே! நாட்டில் உனக்கு உடைமையானது எது?
பண்டு தொட்டு நின் நாட்டைக் கடல் கவர்ந்து கொள்ளவுமில்லை.... பகைவர் கைப்பற்றவுமில்லை... ஆனால், பாடி வரும் பரிசிலர் உன் நாட்டைக் கைப்பற்றினார்கள்...
உனக்கு உடைமை எது?
உன் மனைவியின் மெல்லிய தோள்...
உன் நாடு?-அது பொதுவுடமை!