மாணவர்களுக்கு புறநானூற்றுச் சிறுகதைகள்/நெஞ்சம் திறப்பவர் நின்னைக் காண்பர்!
ஆதனுங்கன் வேங்கடமலைத் தலைவன். ஞாயிறு மண்டலத்தைப் போன்றவன். யாவரையும் காப்பதையே தன் கடமையாகக் கொண்டவன்.
அவனைத் தந்தையாகக் கொண்டு வாழ்ந்தார் ஆத்திரையன் என்னும் புலவர். அவனையே நினைத்தார். அவன் புகழையே பாடினார். அவர் நெஞ்சில் வேறு யாருக்கும் இடமில்லை. “ஆதனே, எந்தையே நீ வாழ்க! என் நெஞ்சைப் பிளப்பவர் அங்கே உன்னைத்தான் காண்பர். உன்னை நான் மறவேன். அப்படியே மறப்பதாயின் மறக்கும் நாள் நான் இறக்கும் நாளாக இருக்கும்”