மாணவர்களுக்கு புறநானூற்றுச் சிறுகதைகள்/பல்லாண்டு வாழ்வது எப்படி?
பல்லாண்டுகளாக நரையின்றி வாழ்தல் எப்படி? என்று கேட்கின்றீர்கள் சொல்கிறேன், கேளுங்கள்:
மனைவி நற்பண்பு நிறைந்தவளாய் இருக்க வேண்டும். அவளுக்குப் பிறந்த பிள்ளைகளும் அப்படியே விளங்க வேண்டும். ஏவலாளரோ, தான் எண்ணுவது போன்றே எண்ணிப் பணிபுரிய வேண்டும். காவலாளனாகிய வேந்தனும், நாம் வீட்டைக் காப்பது போன்றே நாட்டைக் காக்கவேண்டும்.
அது மட்டுமா?
ஊரில் வாழும் சான்றோர், அடங்கிய கொள்கையுடைய ஆன்றோராய்த் திகழ வேண்டும்.
அப்புறம் நரை ஏன் வரும், திரை ஏன் வரும், குறை ஏன் வரும்?