மாணவர்களுக்கு புறநானூற்றுச் சிறுகதைகள்/வேம்பும் அமுதம்
பெருந்திருமாவளவன் அவையில் அமர்ந்திருந்தான். மாடலன் மதுரைக் குமரனார் வந்தார்.
“போய் வருகிறேன் மன்னா”. என்றார்.
“புலவரே, பரிசில் பெறாமல் போகிறீர்” என்றான் வளவன்.
“புறப்பட்டு விட்டேன். பக்கத்து நாட்டிற்குச் செல்கிறேன். அவன் ஒரு சிற்றரசன்தான். வறுமையால் வாடுகிறான். வரகஞ் சோறுதான் கொடுப்பான் அதுவே அமுதம் மாவேந்தரேயாயினும், மதியாதாரை நாங்கள் மதிப்பதில்லை. அவர் செல்வத்தை மதிப்பதில்லை. அது வேம்பு” என்றார் புலவர்.
புலவரைத் தேற்றிப் பரிசளித்து அனுப்பினான் வளவன்.