மாணவர்களுக்கு புறநானூற்றுச் சிறுகதைகள்/“உறை மோர்த் துளி”

104. “உறை மோர்த் துளி”

ஒரு முது மகள் அவள் தோற்றம் எப்படி இருக்கிறது?

மணப் பொருள் மறந்த கூந்தல், நரைத்த தலை, பஞ்சடைந்த கண்கள், சுருக்கம் விழுந்த தோல். அவள் வற்றி உலர்ந்த கள்ளிபோல் தோன்றுகின்றாள். ஆனால் அவள் பெற்றெடுத்த மகன் யார் தெரியுமோ? அவன் ஒரு கொள்ளை நோய். குடப் பாலைக் கெடுக்கும் சிறு மோர்த் துளி அவன். அவ்வீரன் தனித்துச் செல்கின்றான்.

பகைவர்கள் பட்டாளம் பட்டாளமாய் அப்படி அப்படியே வீழ்ந்து மடிகின்றனர் அவன் வீரம் என்னே!