முக்கனி/பதிப்புரை

வணக்கம்

நாட்டை வளர்க்கும் வகையில் நாட்டு மக்களை முன்னேற்றும் முறையில் இன உணர்ச்சி ஊட்டும் இயல்பில் ஏடுகள் எழுதப்படுதல் வேண்டும்.

நாட்டின் நிலை, அந்நாட்டில் வாழும் மக்களின் நாகரீகம், பண்பாடு ஆகியவைகளை அறிய ஏடுகள் துணையாயிருத்தல் வேண்டும்.

இங்ஙனமில்லாத ஏடுகள் எத்துணை கலையழகு மிளிர்வனவாயினும் நாட்டிற்கு நலன் பயப்பவையன்று நாட்டிற்கும் ஏட்டிற்கும் தொடர்பு இருத்தல் வேண்டும் என்னும் உலக அறிஞர்கள் ஒப்பும் உயர்ந்த கருத்தை, திராவிட நாட்டு கலைச் சிகரமாய் விளங்கும், பேச்சுப் புலவர் திலகம்

'அறிஞர் அண்ணா'

அவர்கள், அவ்வப்போது ஆற்றிய சொற்பெருக்கினை, அன்று கேட்டவர்கள் மட்டுமன்றி பண்டிதர் முதல் பாமரர் ஈறாக அனைவருக்கும் பயன் தருதல் வேண்டும் என்னும் கருத்துடன் "முக்கனி" என்ற பெயரால், இந்நூல் வெளிவருகிறது. அனைவரும் படித்துப் பயன் பெறுவார்களாக.


அன்பன்
டி. எம். பார்த்தசாரதி

"https://ta.wikisource.org/w/index.php?title=முக்கனி/பதிப்புரை&oldid=1676672" இலிருந்து மீள்விக்கப்பட்டது