மூன்றாம் இராசராச சோழன் மெய்க்கீர்த்தி
- எண்களுடன் கூடிய வரிசை உறுப்பினர்
மூன்றாம் இராசராச சோழன் மெய்க்கீர்த்தி
தொகுமெய்க்கீர்த்தி: 01
தொகு- சீர்மன்னி இருநான்கு திசைவிளங்கு திருமடந்தையும்
- போர்மன்னு சயமடந்தையும் புவிமடந்தையு மணம்புணர
- அருமறைகள் நெறிவாழ அருந்தமிழோர் கிளைவாழப்
- பொருவில்மனு நெறிவாழப் பொன்மகுடம் கவித்தருளி
- வெங்கோ பக்கருங் கலிப்பகை விடநாகம்
- செங்கோலுங் கொடிப்புலியுத் திகிரிவரை வரம்பளக்க
- எண்டிசைமுகத் தெண்கரிக்கு மெடுத்ததனிக் கூடமென
- அண்டகூட முறநிமிர்ந்து முழுமதிக் குடைநின் றழகெறிப்ப
- நடுவுநின்று குடிகாத்து நன்றாற்றுந் திறம்பொறாது
- கடிதிழைத்த உட்பகையும் புறப்பகையு மறக்கடிந்து
- பொலந்திகிரி பதினான்கு புவனங்களு மடிப்படுத்தி
- இலங்குகதிர் வடமேருவி லிருந்தவயப் புலியேறென்னச்
- செம்பொன்வீர சிங்காசனத்துப் புவனமுழுதுடை யாளொடும்
- வீற்றிருந் தருளிய கோவிராச கேசரி வர்மரான
- திரிபுவனச் சக்கரவர்த்திகள் ஸ்ரீஇராஜராஜ தேவர்க்கு யாண்டு...
மெய்க்கீர்த்தி 02
தொகு- சீர்மன்னு மலர்மகளும் சிறந்தனி நிலைச்செல்வியும்
- பார்மன்னு பசுந்துளவச்சயமடந்தையு மனங்களிப்ப
- புகழ்மடந்தை புகழ்பாடப் புலமகளும் பூசுரரு
- முகமலர்ந்து கண்களிப்ப முனிவர்கணந் துதியெடுப்பத்
- தனித்துலக முழுதாளத் தடங்கரைப்பாற் கடல்பிரிந்த
- பனித்துளவ நறுந்தாமப் பரந்தாம னெனவந்து
- கடிமுரச மொருமூன்றுங் கடனான்கு மெனமுழங்கப்
- படிமுழுது மிருணீங்கப் பருதிதனிக் குலம்விளங்கக்
- கொடியேந்து புலியிமையக் குலவரைமேல் வீற்றிருப்ப
- முடிவேந்த ரடிசூட முறைமையினால் முடிசூடி
- வடவரையின் படவரவின் மணிமுடியும் பொடியாகத்
- தடவரையின் நெடுந்தோளின் வாரணிகலன் தரித்தருளிப்
- பாரேழும் பொழிலேழும் படிபரிக்கும் கிரியேழும்
- நீரேழுந் தனிகவித்து நிறைமதிவெண் குடைநிழற்றப்
- புறவாழியும் வரையாழியும் பூதலமும் பொதுநீக்கி
- அறவாழியுஞ் செங்கோலு மனந்தகற்பகா லம்புரக்க
- ஒப்பரிய மறைநாலும் உரைதிறம்பா மனுநூலுஞ்
- செப்பரிய வடகலையும் தென்கலையுந் தலையெடுப்ப
- நீதிதரு குலநான்கும் நிலைநான்கு நிலைநிற்ப
- ஆதியுகங் குடிபுகுத அறுசமையந் தழைத்தோங்க
- பொருதுறையுஞ் சினவேங்கையு மடமானும் புகுந்துடனே
- யொருதுறைநீ ரினிதுண்டு பகையின்றி யுறவாடப்
- புயல்வாரி பொழிவிக்கும் பொற்றொடியவர் கற்புயர
- வயல்வாரி வளம்பெருகி மறையவர்முத் தமிழ்வளர்க்கும்
- நெறிமுறைமை யினிதீண்டித் தனதாணை திசைநடப்ப
- நிருபர்குலம் பெலம்படர நிலங்காவற் றொழில்பூண்டு
- செருவலியில் முருகனென்றுந் திருவடியில் மதனனென்றும்
- பெருகொளியில் பருதியென்றும் பெருந்தகைமையிற் றருமனென்றும்
- தண்ணளியில் மதியென்றுந் தனந்தருதலிற் றாயென்றும்
- மண்ணுலகத் திகல்வேந்தரு மறைவாணரும் போற்றெடுப்ப
- மீனவருஞ் சிங்களரும் விக்கலரும் கற்கடரும்
- வானவரும் குந்தளரும் வங்களரும் பார்மருங்கு
- பல்லவரும் மாகதரும் பாஞ்சாலரும் காம்போசரும்
- கொங்கணரும் திரிகத்தரும் கூபகருஞ் சாவகரும்
- பண்டையரும் திருவடிக்கீழ்ப் பரிந்துதிறை சொரிந்திறைஞ்ச
- எண்டிசையும் புரந்தளிக்கும் இராஜராஜதுங்கன் இராஜராஜன்
- மலைபேரிலும் வான்பேரிலும் மாதிரங்கால்
- நிலைபேரிலும் பேராத நெஞ்சுடைய செஞ்சேவகன்
- அலகில்பெரும் புகழாகரம் மங்கையருக் கரசாகி
- உலகுடைய பெருமாளுடன் ஒக்கமணி முடிகவித்தாள்
- உறந்தைவள நகரம்போல உலகமொரு பதினான்கும்
- பிறந்துடையாள் இராஜராஜன் பிரியா வேளைக்காரி
- இயல்வாழவும் இசைவாழவும் இமையமலை மகளறத்தின்
- செயல்வாழவும் ராஜராஜன் திருத்தாலி பெற்றுடையார்
- அரசிறைஞ் சழக னருணிறைந்த வுலகதனில்
- உரைசிறந்த தனியாணை உடனாணை பெற்றுடையாள்
- தவளவயப் பரிகண்டன் காத்தளிக்குங் கற்பகாலம்
- புவனியெழத் தனதாணையிற் புரக்குமந்தப் புரப்பெருமாள்
- பொய்யாநெடு நிலநான்கும் பொருகுடையி னிருநான்கு
- மாதிரமும் விளங்கவந்த வாணர்குல நிலைவிளக்கு
- குலகரியெட் டும்பரித்த குலவட்ட மலர்கவிகைச்
- சக்கரவர்த் திதனந்தப் புரச்சக்கர வர்த்தி
- காசெறியகோ டெயில்வானவர் சசிகுலதீ பதராபதி
- மாதேவியார் தொழுதிறைஞ்சும் மடந்தைமங் கையர்தம்பெருமாள்
- அவ்வுலகத் தருந்ததியும் அதிசயிக்கும் பெரும்கற்பால்
- இவ்வுலகத் தருந்ததியென விசைதந்த திசைவிளங்கத்
- திருந்தியவேல் இராஜராஜன் ராஜேந்திரன் திருவருளென்னும்
- பெருந்தனிப்பாற் கடல்படிந்து விளையாடும் பெடையன்னம்
- ஆணையெங்குந் தனதாக்கிய ஆதிராஜன் மாதேவி
- வளர்வங்க சூளாமணி மறையவர்தொழுஞ் சிந்தாமணி
- சோணாடன் இராஜராஜன் சுரிமலர்ப்பூந் துழாய்மார்பி்ல்
- பூணார மெனவிளங்கிய புவனமுழு துடையாளும்
- அனந்தகற்ப நாள்பிரியாது மனங்களித்து மணம்புணரச்
- செம்பொன் வீரஸிம்ஹா சனத்துப் புவனமுழுதுடை
- யாளொடும் வீற்றிருந் தருளியகோ ராஜகேசரி
- வந்மரான திரிபுவனச் சக்கர வர்த்திகள்
- ஸ்ரீராஜராஜ தேவற்கு யாண்டு நாலாவது...
- மெய்க்கீர்த்திகள் :[[]] :[[]] :[[]]