மூன்றாம் குலோத்துங்க சோழன் மெய்க்கீர்த்தி
மூன்றாம் குலோத்துங்க சோழன் மெய்க்கீர்த்தி
தொகுமெய்க்கீர்த்தி 01
தொகு- புயல்பெருக வளம்பெருக பொய்யாத நான்மறையின்
- செயல்வாய்ப்பத் திருமகளும் சயமகளும் சிறந்துவாழ
- வெண்மதிபோற் குடைவிளங்க வேல்வேந்த ரடிவணங்க
- மண்மடந்தை மனமகிழ மனுவின்நெறி தழைத்தோங்க
- சக்கிரமுஞ் செங்கோலுந் திக்கனைத் துஞ்செல்லக்
- கற்பகாலம் புலிகாப்பப் பொற்பமைந்த முடிசூடி
- விக்ரம பாண்டியன் வேண்டவிட்ட தண்டால்
- வீரபாண் டியன்மகன் படஏழகம் படமறப்
- படைபடச் சிங்களப் படைமூக் கறுப்புண்டு
- அலைகடல்புக வீரபாண்டி யனைமுதுகிடும் படிதாக்கி
- மதுரையும் அரசுங்கொண்டு ஜயஸ்தம்ப நட்டு
- அம்மதுரையு மரசும்நாடு மடைந்தபாண் டியற்களித்தருளி
- மெய்ம்மலர்ந்த வீரக்கொடியுடன் தியாகக்கொடி எடுத்துச்
- செம்பொன் வீர சிங்கா தனத்துப்
- புவனமுழு துடையா ளொடும்வீற் றிருந்தருளிய
- கோப்பர கேசரி வன்மரான திரிபுவனச் சக்கரவர்த்திகள்
- ஸ்ரீகுலோத்துங்க சோழ தேவர்க்கு யாண்டு...
மெய்க்கீர்த்தி 02
தொகு- புயல்வாய்த்து மண்வளரப் புலியாணையும் சக்கரமும்
- செயல்வாய்த்த மனுநூலும் செங்கோலுந் திசைநடப்பக்
- கொற்றவையும் திருவும் வாழக்
- கொடுங்கலிகெடக் குளிர்வெண்குடைக்
- கற்பகாலம் படிகவிப்பக் கதிரவன்குல முடிசூடி
- எத்தரையுந் தொழுமிறைவற் கெதிரம்பலஞ் செம்பொன்வேய்ந்து
- சித்திரைவிழா அமைத்திறைவி திருக்கோபுரஞ் செம்பொன்வேய்ந்து
- அரிபிரமர் தொழுமிறைவற் ககிலமெல்லாந் தொழுதுபோற்றத்
- திரிபுவன வீரீச்சுரஞ் செய்துதிரு வைகாசியுஞ்
- சிறந்ததிரு வாவணியுந் திசைவிளகு... யூர்
- நிறைந்தசெல்வத் துடன்விளங்க நிலவுந்திரு நாள்கண்டு
- மன்னுயிர்க் கருளளிக்கும் வானவர்நா யகர்வாழ
- அருளமைந்த திருமலைபோல் கோயில் கண்டு
- தாரணிகொள் திருத்தாதைக்கும் இராசராசீச் சுரத்தார்க்கும்
- காரணச் சிறந்தகோயில் அணிதிகழ்பொன் வேய்ந்தருளித்
- தனியாணை விட்டாண்மை செய்து வடமன்னரைத் தறைப்படுத்தி
- முனிவாறிக் கச்சிபுக்கு முழுதரசையுந் திறைகவர்ந்து
- தாங்கரும்போர் வடுகைவென்று வேங்கைமண்டலந் தனதாக்கி
- பொன்மழைபெய் துறைந்தையென்னும் பொன்னகர் புக்கருளித்
- தண்டொன்றால் வழுதிமைந்தனை மூக்கரிந்து தமிழ்மதுரை
- கொண்டுவிக்கிரம பாண்டியற்குக் கொடுத்துமீண்டதற் பின்பரிபவத்தா
- லெடுத்துவந்து நெட்டூரில் எதிர்த்தவீர பாண்டியன்
- முடித்தலைகொண் டமர்முடித்தவன் மடக்கொடியை வேளமேற்றித்
- திருவிழந்த தென்னவனுஞ் சேரலனும் வந்திறைஞ்சி
- அரியணையின் கீழிருப்ப அவன்முடிமே லடிவைத்துப்
- படிவழங்கி முடிவழங்கிப் பாண்டியர்க்கு விடைகொடுத்துக்
- கொடிவழங்கும் வில்லவர்க்குக் கொற்றவர்பெறாத் திருவழங்கி
- வீரகேரளன் வெங்கண்டு விறல்தரித்து வந்திறைஞ்சப்
- பாரறிய வாழ்வருளிப் பரிகலத்தி லமுதளித்துப்
- பருதிகுல பதியேன்று திருநாமந்தரித்த பாண்டியற்கு
- இருநெதியும் பரிசட்டமும் இலங்குமணிக் கலனுநல்கி
- ஈழமண்டல மெறிந்தருளி ஆழிமண்டலத் தரசிறைஞ்சப்
- பூழியர்கெடக் கொங்கும் பாழ்படப் பொருதுபுக்குக்
- கருவூரிற் சோழகேர ளனென்று மன்னர்தொழ
- விசையமா முடிசூடி வீரமுடி புனைவதற்கு
- விட்டெழுந்து பன்னதான் வந்துடன் போர்மலையப்?
- படைவிட்ட .... மாயப் படையெல்லாம் படப்பொருது
- கட்டாண்க ளட்டுக்கொடி மலைக்குவடு இடித்து
- மட்டியுரும் கழிக்கோட்டையும் வளைந்தறுத்துக் களமாடி
- நெட்டலகைக் குலமாட நெடுங்களிற்றா லமர்ந்... குடியில்
- கடியரணப் போர்ப்படையைப் பொடியாக்கி அடியுண்ட
- படைத்தகை விறைவிருதா வளையுண்டு பிடியுண்டு
- புலமாட நெடுங்களிற்றாற் கட்டுண்டு பேதைகள்உடங் கேபோக
- எண்ணில்கோடிப் படைவீரர் புண்ணீரில் புக்கழிந்
- தாக்கியபோர் வலிவிருதர் மூக்கிழந்து முகமழிய
- மறப்படையுடன் ஏழகப்படை சிறைப்பட்டு விழத்தடிந்து
- தந்தைமறஞ் சாய்ந்துடையத் துரந்துசெநகா? அழிஞ்சநறுந்
- தென்மதுரைப் புறமதிளைத் தன்னெடும்படைக் கடல்வளையப்
- பெருவழுதியரும் தம்பியரும் பெற்றதாயாரும் பேருரிமையும்
- பொருவருதுயர் துணையாக வேறுவேறு சுரம்படரத்
- தென்மதுரைப்பதிபுக்கு வந்ததையெல்லாங் கொடுத்துப்
- பொடிபடுத்தி வழுதியர் தம்கூட மண்டபம்
- கழுதையேரிட உழுதுபுகழ்க் கதிர்வளியைக் கவடிவித்தி
- ...பேவ பதங்கண்டுகேட்டு
- மதகளி றோரெட்டு மேழுலகு மிடர்தீரச்
- சோழபாண் டியனென்று போ(ர்)வீரர்...கள் களிப்ப
- வீரமா முடிபுனைந்து திரிபுவன வீரரென்(று)
- இருநிலஞ்சொல முடிசூடி
- இகல்கழல் கட்டிப் புகழ்வீரக் கொடியெடுத்துத்
- தியாகக்கொடி திசையெட்டிலு மேகக்கலிப் பகைதுரக்க
- மாமதுரையை வலங்கொண்டு திருவால வாயுறையும்
- தேமலர்க் கொன்றைவார்சடைச் செழுஞ்சுடரைத் தொழுதிறைஞ்சி
- ஆங்கவர்க்குப் பூணாரம் அநேகவிதம் கொடுத்தருளி
- ஓங்கிய பேர்ஒலி கழலிறைஞ்ச இந்தி...நது.
- பொற்படியும் இளங்களிற்றின் கற்படியும் கொடுத்தருளி
- வண்டறைதார் வழுதியரைக் கொண்டபாண்டி மண்டலத்தைச்
- சோழபாண்டியன் மண்டலமென் றேழுபாருஞ் சொலநிறுத்தி
- மல்லல்வையை மதுரையையும் மதுரையென்ற பேரொழித்துத்
- தொல்லை முடித்தலைகொண்ட சோழபுர மென்றருளித்
- தார்வழுதி மண்டபத்தில் சேரபாண்டியர் தம்பிரானென்று
- பேரெழுதிப் பாண்டியனைப் பாண்டியனென்னும் பேர்மாறிவர
- நெடும்படைத் தென்னவன்கெட மதுரைகொண்ட தோள்வலிபாடிய
- பாணனைப் பாண்டியனென்று பருமணிப் பட்டஞ்சூட்டி
- வெஞ்சிலை வாங்கி வேட்டைநீர் படிந்தாடி
- ஓடைமதக் களிறேறி யாடல்வாம் பரிநடவித்
- தண்டளவ மலர்மாலையில் வண்டரற்றச் செண்டாடி
- அரன்திரு வாலவாயில் அமைந்தவர்க்குத் தன்பேரால்
- சிறந்தபெருந் திருவீதியும் திருநாளுங் கண்டருளிப்
- பொருப்புநெடுஞ் சிலையான்முப் புரமெரித்த சொக்கற்குத்
- திருப்பவனி கண்டருளித் திருவீதியிற் சேவித்துத்
- தென்மதுரைத் திருவாலவாய் பொன்மலையெனப் பொன்வேய்ந்து
- சிறைகொண்ட புனல்வையைச் சேரபாண்டியன் மண்டலத்து
- இறைகொண்ட பசும்பொன்னும் இறையிலியு மெயிற்புலியூர்
- ஆடுமம்பல வாணர்கூடி வாய்ந்ததிரு நடங்கண்டருளும்
- பாடகக்காற் பைங்கிளிக்கும் பைம்பொன்மதிள் திருவாரூர்
- வாவற்குந் திரிபுவன வீரீச்சுர வருந்தவற்கும்
- தேன்விரிசடைத் திருவாலவாய்ச் செழுஞ்சுடர்க்குங் கொடுத்தருளி
- மந்திரமறை முழுதுணர்ந்த அந்தணர்க் கறமேற்றி
- எழுதுவென்றிச் செயத்தம்பம் எத்திசையிலும் நடுவித்து
- வழுவில்செஞ் சொற்கவி குன்றுபீடங்களாக மதுரை -யடங்கவும் பொறிப்பித்தவன்
- அடிநீழற்கீ ழபயமினி யஞ்சலென
- ...வழுதிக்கும் பதிதடையும் சாமரையும் - கோசாலையும் வெம்பரியும்
- கொடித்தேருங் குஞ்சரமும் வைகை நாடும்
- பழம்ப... இவற்... தியன்
- திக்கெட்டும் எல்லைதொட...
- ...மசதகர் வெற்பின் புகழுலாவச்
- செம்பொன்வீர சிங்கா தனத்து வீற்றிருந்தருளிய
- கோப்பரகேசரி வன்மரான திரிபுவனச் சக்கரவர்த்திகள்
- ஸ்ரீமதுரையும் ஈழமுங் கருவூரும் பாண்டியன் முடித்தலை
- யுங்கொண்டு வீராபிஷேகமும் விசயாபிஷேகமும் பண்ணி
- யருளிய திரிபுவன வீரசோழ தேவற்கு யாண்டு....
- மெய்க்கீர்த்திகள் :[[]] :[[]] :[[]]